இந்த வருடம் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் ரஜினி,கமல் ஆகியோரின் படங்கள் எதுவும் வெளி வராமலேயே கழியப் போகிறது .கடந்த பத்து வருடங்களில் இந்த இருவரின் யாரவது ஒருவரின் படமாவது வந்திருக்கும் இந்த வருடம் தான் அதிசயமாக இருவரின் படங்கள் எதுவுமே இல்லாமல் கழியப் போகிறது .ரஜினி,கமல் ரசிகர்களை பொறுத்த வரை கவலையான விடயம் தான் .ரஜினி ரா ஒன்னில் தலை காட்டினாலும் அது அவரின் படம் இல்லை .
ஆனால் இவர்களுக்கு அடுத்த முக்கிய நடிகர்கள் அனைவரினதும் படங்கள் வெளியாகி, வெளியாகவுள்ளன .அபூர்வமாக நீண்ட இடைவேளையின் பின் அஜித்,விஜய்,விக்ரம்,சூர்யா இவர்களை விட சிம்பு,தனுஷ் என அனைவரினதும் படங்கள் 2011 இல் வெளியாகின்றன .
இவர்களின் படங்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகின்றது .இவற்றில் டாப் படமாக அமையப் போவது எது ?. சிலரின் படங்கள் வெளியாகி விட்டன.வெற்றியும் பெற்று விட்டன . சிலரின் படங்கள் வெளியாக உள்ளன
.
.
இங்கு முக்கியமாக நீங்கள் தெரிவு செய்ய வேண்டியது இந்த வருடத்தில் அதிக வசூலை பெற்ற ,பெறப் போகும் படங்களை அல்ல .உங்களை கவர்ந்த இந்த வருட டாப் படமாக உங்களால் கருதக் கூடிய படமாக இருக்க வேண்டும் .
.எனது தளத்தில் ஒரு வாக்கு நிரலை இணைக்கிறேன் .இந்த வாக்கு நிரலில் நீங்கள் வாக்கு அளிப்பதற்கான இறுதி திகதி டிசம்பர் 31 .ஏனெனில் இப்போது நீங்கள் தெரிவு செய்யும் படத்தை விட சிறந்த படம் இனிமேல் வரலாம் .அப்போ டிசம்பர் 31 க்கு பின்னர் இந்த கேள்வியை கேட்கலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது .

அதை அநேக இணைய தளங்களும் தொலைக்காட்சி ,வானொலி ஊடகங்களும் செய்யப் போகின்றன .என்னுடைய நோக்கம் என்னவெனில் இனிவரும் நாட்களில் எந்த படம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிவதே ஆகும் .என்னுடைய அடுத்த பதிவுகளில் அவ்வப் போது பட நிலைவரங்களை குறிப்பிடுவேன் .
உதாரணத்துக்கு இது ஒரு முக்கிய தருணம் இந்த வருடத்தின் டாப் படமாய் அமைய கூடிய சில படங்கள் இன்னும் சில வாரங்களில் வரவுள்ளன .எனவே அவை வரும் போது ஏலவே உள்ள படங்களின் நிலையை அறிவதோடு படம் வெளி வந்த பின் அந்த படம் டாப் இடத்தை நெருங்கியதா இல்லை ஏற்கனவே உள்ள படம் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டதா என்பதை அறிவதே ஆகும் .இங்கு முக்கிய விடயம் இப்போது நீங்கள் உங்கள் டாப் படம் எது என்பதற்கு வாக்கு அளிக்கலாம் .இனிவரும் நாட்களில் நீங்கள் தெரிந்த படத்தை விட டாப் படம் ஏதாவது வெளிவந்தால் அதை தேர்வு செய்யலாம் அல்லது நீங்கள் இதுதான் டாப் படம் என்று கணிக்கும் இன்னமும் வெளி வராத ஒரு படம் வெளி வந்த பின் உங்கள் கணிப்பை பொய்யாக்கினால் நீங்கள் வேறு படத்தை தெரிவு செய்யலாம் .
நான் தேர்வு செய்த படங்கள்
கோ- கே.வி.ஆனந்த்-ஜீவாநான் தேர்வு செய்த படங்கள்
மங்காத்தா-அஜித்-அர்ஜுன் -வெங்கட்பிரபு
வேலாயுதம் -விஜய்-ராஜா
ஏழாம் அறிவு-A.R. முருகதாஸ்-சூர்யா
மயக்கம் என்ன-செல்வராகவன் -தனுஷ்
ஒஸ்தி-சிம்பு -தரணி ராஜபாட்டை-விக்ரம் -சுசீந்திரன்
இவற்றை விட தெய்வதிருமகள் இதுவரை வெளி வந்த படங்களில் என்னுடைய டாப் படம் ஆனால் அதை இணைக்க வில்லை .காபி படம் என்பதால் அதை இணைக்க என் மனம் இடம் தரவில்லை .காவலன்,சிறுத்தை ,வானம் ,காஞ்சனா, ஆடுகளம் என்பனவும் முக்கியமானவை .
நான் தேர்வு செய்த படங்களில் இனிவரும் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து உள்ளேன் .இதுவரை வந்த படங்களில் கோ, மங்காத்தா என்பதில் எது டாப் என என்னால் அனுமானிக்க முடியாமையால் இரண்டையும் இணைத்து உள்ளேன் .இனி வரும் படங்களில் அவற்றின் எதிர் பார்ப்புக்கமைய என்னால் அனுமானிக்க கூடியவற்றை இணைத்து உள்ளேன் .
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உங்களின் கருத்துக்காக விடப் படுகின்றன உங்களின் கருத்துக்கு அமைய இறுதி பட்டியல் இணைக்கவுள்ளேன் .
என்னுடைய வேலை என்னவெனில் ஒவ்வொரு படமும் வெளிவரும் போது டாப் பட நிலைமை எவ்வாறு மாறு படுகிறது என ஆய்வு செய்து வருட முடிவில் ஒரு ஆய்வு பதிவு எழுவதே ஆகும் .(ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லையா ?)