Friday, March 30, 2012

3-விமர்சனம் -WHY THIS KOLAVERI

நான் ஒன்றும் தனுஷ் ரசிகன் அல்ல .ஆனால் தனுஷின் சில படங்கள் பிடிக்கும் .மாப்பிள்ளை மட்டும் தியேட்டர்   இல் பார்த்து இருக்கிறேன் . தியேட்டர் க்கு போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது கடைசியாய் நண்பன் பார்த்தது .அதற்கு பின் பெரிய படங்கள் எதுவும் வரவில்லை .50  மில்லியன் தாண்டிய உலகப் புகழ் பெற்ற பாடல் வேறு படத்தில் இருக்கிறது .சரி பார்த்து விடுவோம் என்று முடிவு எடுத்து   விட்டேன் .பார்க்கிறது னு முடிவு எடுத்துட்டா முதல் காட்சி பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கொள்கை .பின்பு எப்படியோ கதை   தெரிந்து விடும் .படம் பார்க்க போக முன்னரே சில அனுமானங்கள் இருந்தன .படத்தின் கிளைமாக்ஸ் இல் தனுஷ் இறந்து விடுவார் என்றும் எனினும் படத்தை பார்த்த ரஜினி கிளைமாக்ஸ் மாற்றும்படி கூற சந்தோசமாக மாற்றப் பட்டது என்றும் செய்திகளில் படித்து இருந்தேன் .காதல் கதை ,செல்வா ராகவனின் முன்னாள் உதவி இயக்குனர் இயக்கம் படம் எனவே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது .அதை பூர்த்தி செய்ததா 3?


படம் ஆரம்பமே சோக மயமாக ஆரம்பமாகிறது .எனினும் சோகத்தை நீடிக்க விரும்பாமல் பிளாஷ் பாக் இளமை ததும்பும் பிளஸ்2 பையன் தனுஷ் உடன் ஆரம்பமாகிறது .பார்த்த உடனேயே சுருதியை காதலிக்கும் தனுஷ் அதிலே வெற்றி அடைகிறார் .இரு வீட்டார் எதிர்ப்புடன் திருமணம் செய்யும் இவர்கள் சந்தோசமாக வாழ்க்கையை தொடக்குகிறார்கள் .இவர்களின் வாழ்க்கையில் நடந்த பிரச்சினை என்ன ?. என்பதே படத்தின் கதை .

தனுஷ்

ஆடுகளம் படத்துக்கு தேசிய விருது கொடுத்த போது  இவனுக்கு ஏன் கொடுத்தாங்கள் என்று நினைத்த  போதும் மயக்கம் என்ன வில் அவரின் திறமை பார்த்தேன் .எனினும் இந்த படத்தின் மூலம் தான் தகுதியானவர் தான் என்று நிரூபித்து இருக்கிறார் .கல்லூரி மாணவனாக தோன்றும் போது அப்படியே பாத்திரத்துடன் பொருந்துகிறார் .கல்லூரி மாணவனாக வயதான நடிகர்கள் நடிக்கும் போது சகிக்க முடியாமல் இருக்கும் .இவர் ஜொலிக்கிறார் .இளமை ததும்பும் காதல் காட்சிகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன .சுருதியை காதலிக்கும் காட்சிகள் எமது பள்ளி பருவத்தை ஞாபகப் படுத்தும் வகையில் ரசனையாக இருக்கிறது .இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடிப்பில் பிரித்து மேய்கிறார் .நண்பன் சுந்தரத்துடனான காட்சிகளில் உணர்ச்சி பூர்வமாக நடித்து உள்ளார் .



ஏழாம்அறிவில் என்னை பெரிதும் கவராத சுருதி ஹாசன் இதிலே கவர்கிறார் .ஒரு படத்திலேயே நடிப்பின் முதிர்ச்சி தெரிகிறது .பள்ளி மாணவி முதல் மனைவி வரை சிறப்பான நடிப்பை வெளிப் படுத்துகிறார் .பெரிய அழகு இல்லா விட்டாலும் படத்திலேயே சொல்லுகிறார்கள் ''அவகிட்ட ஒன்னும் இல்லடா '' அழகாகத்தான் இருக்கிறார் .படத்தின் முன் பாதியில் காதல் காட்சிகளில் கச்சிதமாக நடித்தாலும்  பின் பாதியில் அழுது அழுது  வெறுப்பு ஏற்றுகிறார் .ஒரு காட்சியில் அழும் போது ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது .

பிரபு  தனுஷின் தந்தையாக   நடிப்பு சொல்லி கொடுக்க தேவை இல்லை .கல்யான் ஜெவேலேர்ஸ் விளம்பரத்துக்கு போய் விட்டு  ஷூட்டிங் போவார் போல ,கோட் சூட்  உடனேயே படம் முழுவதும் .பிரபுவின் மனைவியாக பானுப்பிரியா  . ஸ்ருதியின் அம்மாவாக ரோகினி  . ஸ்ருதியின் தங்கையும் கவனிக்க வைக்கிறார் .தனுஷ் சுருதி க்கு பின் அதிக முக்கியத்துவம் சுந்தரம் அவர்களுக்கு .இரண்டாம் பாதி முழுவதும் இவருக்கு முக்கியம் பெறுகிறது .மயக்கம் என்ன வில் செய்ததை விட சிறப்பான நடிப்பு .வருங்கால தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வரக் கூடிய( ?) சிவ  கார்த்திகேயன் தன பங்கை சிறப்பாக செய்துள்ளார் .சந்தானமே கவுண்டரை கொபி அடிக்கிறார் .இவர் சந்தானத்தை கொபி அடிக்கிறார்.எனினும் இவரின் வசனங்கள் சிரிக்கும் படி இருக்கின்றன .இடை வேளை யோடு  இவரை அனுப்புகிறார்கள் . அப்போது எனக்கு விளங்க வில்லை நானும் எழும்பலாம் என்று .

படத்தின் பாடல்கள் ஏற்கனவே பிரபல்யம் பெற்றவை அதிலும் 'why  திஸ் கொலைவெறி  ' அனைவரும் அறிந்ததே .பாடல்கள் அனைத்தும் கதையோடு  ஒன்றித்தே வருகின்றன கொலைவெறியை தவிர்த்து .கொலைவெறி பாடல் உலக புகழ் அடைந்ததால் எப்படி படமாக்குவார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது .ஆனால் அது தவிடு பொடி.இசை முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்று கொடுத்த (தான் அவ்வளவில் பெற முடியவில்லை ) அனிருத்  .பின் பாதியில் ஒரே இசையையே தொடர்ந்து ஒலிக்க விடுகிறார் .அவரும் வேறு என்ன செய்வது .ஒளிப்பதிவு வேல்ராஜ் தனுஷ் பொல்லாதவன் ,ஆடுகளம்  அடுத்து இதிலேயும் செய்து இருக்கிறார் .சிறப்பாக இருக்கிறது .எடிட்டிங் பரவாயில்லை கதையை குழப்ப வில்லை .தானே தயாரிப்பதால் செலவுகளை குறைத்து இருக்கிறார் தனுஷ் .ஒரு பாடல் கூட வெளி நாட்டில் படமாக்கப்பட வில்லை .


ஐஸ்வர்யா  முதல் படம் .செல்வராகவனின் உதவி இயக்குனர் என்பது அப்படியே  பளிச்சிடுகிறது .முதல் பாதி HATS OFF ஐஸ்வர்யா .அருமை .அறிமுக படத்திலேயே சிறப்பாக உள்ளது இந்த அளவுக்கு எதிர் பார்க்க வில்லை .காதல் காட்சிகளில் இவ்வளவு நெருக்கம் காட்ட கணவனை அனுமதித்த புதுமை பெண் (தலைவரின் மகள் ஆயிற்றே ).

சரி எல்லாம் சொல்லியாயிச்சு படம் எப்புடி .மேலே சொன்னதை வைத்தே அனுமானிக்க முடியும் .இடை வேளைக்கு பின் படம் நல்லாய் இருக்கு என்று யாராவது சொன்னால் அவர்களை ஒருமுறை பார்க்க ஆசைபடுகிறேன். தனுஷ்  சுருதி  திருமணம்  தமிழ்  கலாசாரத்தை  மீறும்படி அமைக்கப் பட்டிருப்பது பலத்த எதிர்ப்பு அலைகளை உருவாக்கும் என்று நினைக்கிறேன்  .விருதுகளுக்கு பரிந்துரை செய்பவர்கள் மட்டுமா படம் பார்ப்பது சராசரி மனிசர்  படம் பார்க்கிற இல்லையா ?செல்வாவின் உதவி இயக்குனர் தான் அதற்காக இப்படியா ? .அந்தாளின் படங்களே சில வேலை ஓவர் REACTION ஆக  இருக்கும் .இது ? .WHY திஸ் கொலைவெறி பாடலுக்கு  பின் WHY திஸ் கொலைவெறி ஐஸ்? ரஜினி  பார்த்து  விட்டு  ஒண்ணுமே  சொல்லலையா ? நாமளும் தனுஷை எவ்வளவு நாள்தான் இப்படியே பார்க்கிறது .மயக்கம் என்ன வந்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை .திருப்பி அதை ஞாபகப் படுத்தினால் .புதுசு புதுசா நோய்களை காட்டி பயம் காட்டுறாங்க .பின் பாதி படு சொதப்பல் .கணவனுக்கு வந்த  நோயை  மனைவி கண்டு பிடிக்க முடியாமல் இருப்பது படு சொதப்பல் .எந்த பிரச்சினைக்கும் தற்கொலை  சிறந்த தீர்வு அல்ல என்று இயக்குனர் சொல்லும் மெசேஜ்  ஓகே .படம் முடிவில் அந்த நோக்கத்தில் இருப்பவர்களை நிச்சயம் காப்பாற்றும் .எல்லாம்  சரி  படத்துக்கு 3  என்று பெயர் வர காரணம் என்ன சொல்லவே இல்ல  :
3 -விருது படம் .நிச்சயமாக பொழுது போக்கு படம் அல்ல .தேறுவது மிக கடினம் .

முன் பாதி -ஓகே
பின்பாதி -மொக்கை
 


Post Comment

5 comments:

ஆர்வா said...

கொலைவெறி பாடலுக்காக பார்க்கலாம் என்று இருக்கிறேன்...
நட்புடன்
கவிதை காதலன்

Jayadev Das said...

\\பிரபுவின் மனைவியாக ரோகினி . ஸ்ருதியின் அம்மாவாக பானுப்ரியா . \\

what boss you changed pairs...!! It seems Rohini was Shruthi's mother... Ha..ha...ha...

kobiraj said...

thanks for ur correction

Unknown said...

3 மொக்கையா போச்ச


ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

சிந்திக்க உண்மைகள். said...

அவசியம் கேட்க வேண்டியது.


இந்து கடவுள்கள், இராமர் பாலம் பற்றி சீமானின் பேச்சை //////// இங்கு//////// சொடுக்கி கேட்கவும்
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...