கடந்த 30 ம் திகதி மூன்று படங்கள் வெளியாகியுள்ளன .சரி மூன்றில் ஒன்றை பார்ப்போம் என்று தெரிவு செய்ய வேண்டி வலைத்தளம் ,த்விட்டேர் ,முக நூல் பக்கம் தாவி பார்த்தேன் .முடிவு முரண் -ஓகே ,வாகை சூட வா -பார்க்கலாம் ,வெடி -மொக்கை என வந்துள்ளது .என்னதான் இவர்கள் இணையங்களில் பிரச்சாரம் செய்தாலும் மூன்று படங்களிலும் வெடி வசூலை அள்ளும்(ஆரம்ப நாட்களில் ) என நினைக்கிறேன் .வந்ததில் கமெர்சியல் படம் என்றால் வெடிதான் .பிரபு தேவா உங்களால் ஏன் முடிய வில்லை .போக்கிரி கொடுத்த உங்களால் மீண்டும் ஏன் அதை போல வேண்டாம் கொஞ்சமாவது பார்க்க கூடிய படம் தர முடியாதா ?.வெடி புஸ்வானம் ஆகியது எனக்கும் சிறிய கவலையை கொடுத்துள்ளது .ஏன் தெரியுமா ?
விஷால்
விஜய் ரசிகனான இவர் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக புரட்சி தளபதி பட்டத்தை (இந்த பட்டத்தை ஏற்றுக் கொள்ளும் தளபதி ரசிகர்கள் எவனாவது இருக்கானா?)தனக்கு வைத்தது மட்டுமில்லாமல் அவரை போல் படங்கள் கொடுக்க ஆசை படுபவர் .மலைக்கோட்டை ,தோரணை ,சத்தியம் என்று முடியாமல் போக வெடியை திமிராக நம்பினார் .சரி காரணம் என்ன என்னும் சொல்லவே இல்லையே ? .அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் விஜயை வைத்து படம் எடுக்க ஆசை படுவதாகவும் விஜய் ரெடி என்றால் ஓகே என்றும் அறிக்கை விட்டுள்ளார் .
விஷால் ஆரம்பத்தில் உதவி இயக்குனராய் இருந்துதான் (வேதம் ) திரை பயணத்தை ஆரம்பித்து இன்று நடிகர் ஆனார் .அவர் படம் இயக்குவது விருப்பாக இருக்கலாம் இவ்வளவு நாளும் சந்தர்ப்பம் இல்லாமல் போய் இருக்கலாம் .
எனினும் எனக்கு உறுத்துவது விஜய்க்கு கதை ரெடி பண்ணி வைத்து இருக்கிறேன் என்று இப்போது சொல்வது .ஏன் என்றால் விஜயின் நிலைவரம் இப்போது எல்லோருக்கும் தான் தெரியுமே ஷங்கர் ,முருகதாஸ்,கௌதம் என படு பிஸி .இந்த சூழ் நிலையில் விஜய் இந்த அழைப்பை ஏற்பாரா என்பது சந்தேகம் தான் .விஜய் மீது உண்மையான அன்பு இருந்தால் பாபு சிவனையும் ,ராஜ்குமாரையும் நம்பி விஜய் படம் எடுத்த போது (நொந்த போது ) விஜயை அணுகி இருக்கலாம் .எவ்வளவோ எல்லாம் பண்ணுறவர் இதை பண்ணி இருக்க மாட்டாரா?(விஜய் நடிகர் பிரபு தேவா முதல் படத்துக்கு நம்பி வாய்ப்பு கொடுத்தவர் ..புதுமுக இயக்குனர்களுக்கு எப்போதும் வாய்ப்பு கொடுப்பவர் என்பதை யாரவது மறுக்கிறீர்களா ?).அப்போது எல்லாம் விட்டு விட்டு விஜய் இப்போதுதான் பெரிய இயக்குனர்களுடன் சேரும் போது அழைப்பு விடுப்பதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது .இவரின் இந்த அறிக்கை மூலம் நீண்ட நாட்களாக விஜய் படம் வராததால் (எங்களுக்கு 10 மாதம் நீண்ட காலம் தான் )சரி நம்ம அண்ணன் விஷால் வெடி படம் நடித்து இருக்கிறார் .அண்ணன் தளபதி ரசிகன் .பெரிய நடிகனாய் இருந்து கூட விஜயை வைத்து படம் எடுக்க போகிறார் .வெடி படத்தை கண்டிப்பாக சரவெடி ஆக்க வேண்டும் என்று தளபதி படையை கிளப்பி விட்டிருக்கிறார் போல எனக்கு தெரிகிறது .என்னை இவ்வாறு சிந்திக்க தூண்டியது .பிரபல பதிவர் ரஜினி ரசிகர் ஜீவதர்சன் அவர்கள் எழுதிய இந்த பதிவு தான் .
ரா-ஒன்னில் ரஜினி நடிக்க வேண்டாமே
சிம்பு அஜித் துதி பாடுவதை தனது ஒவ்வொரு படங்களிலும் வழமையாய் கொண்டிருப்பது போல விஷாலும் செய்தால் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஒரே நாளில்
இதே தினத்தில் பல வருடங்களின் பின் இலங்கையில் தயாரிக்கப் பட்ட தமிழ் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகிறது .நான் இதுவரை எந்தவொரு இலங்கை தமிழ் படமும் பார்த்ததில்லை .எனவே இந்த படம் பார்க்க ஆவலாய் உள்ளேன் .ஏற்கனவே ஊடகவியாளர் களுக்கு இந்த படம்திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளியுள்ளது .தென் இந்திய படங்களுக்கு நிகராக எடுக்கப் பட்டுள்ளதாக அவர்களினால் பாராட்டப் பட்டுள்ளது .முற்றிலும் இலங்கை கலைஞர்களை கொண்டு எடுக்கப் பட்ட இந்த திரைப்படம் இலங்கையில் உங்கள் அபிமான திரை அரங்குகளில் வெளியாகியுள்ளது .
ஒரே நாளில் trailor
############################################################################
45 comments:
:-)
பிரபுதேவா மிகச்சிறந்த கலைஞர் தான். ஆனால், அவரிடம் காணப்படும் அளவுக்கு மீறிய அவசரமே அதிக தருணங்களில் அவரை தோற்கடித்துவிடுகிறது.
பதிவு நீட்
வெடியை பிரகாசமாக்க தளபதி வியூகமா?
நடக்கட்டும்!
//விஜய் நடிகர் பிரபு தேவா முதல் படத்துக்கு நம்பி வாய்ப்பு கொடுத்தவர்//
விஜய் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்குவது உண்மை. ஆனால், பிரபு தேவாவின் முதல் படம் சித்தார்த்-த்ரிஷா நடித்த நுவ்வொஸ்தானன்டே நேன்னோடன்டானா (நீ வரும் போது நான் மறைவேனா?) ஒரிஜினல் தெலுங்கு படம், பெஸ்ட் பிலிம் உள்பட பல விருதுகளை அள்ளிய படம். தமிழில் சம்திங் சம்திங் என ரீமேக் செய்யப்பட்டது. இரண்டாவது படம் பௌர்ணமி பிரபாஸ்-த்ரிஷா நடித்த படம். மூன்றாவது தான் போக்கிரி.
//நீண்ட நாட்களாக விஜய் படம் வராததால் (எங்களுக்கு 10 மாதம் நீண்ட காலம் தான் )//
கவலை வேண்டாம் சகோதரா, வேலாயுதம் வருது, நம்ம தலைவரும் தளபதியும் கூட்டணி, நம்ம ஒட்டு மொத்த ஆதரவும் வேலாயுதத்துக்குத்தான்... இந்த தீபாவெளி, சரவெடி...
எல்லா அலசல்களும் அருமை! கடைசியில் உள்ள ஃபோட்டோ உருக்கம்!
சி.பி.செந்தில்குமார்
நன்றிகள்
கோகுல்
'
வெடியை பிரகாசமாக்க தளபதி வியூகமா?
நடக்கட்டும்!''
நன்றிகள் வரவுக்கும் கருத்துக்கும்
Dr. Butti Paul
''மூன்றாவது தான் போக்கிரி.''
தவறை சுட்டிக் காட்டியமைக்கு ,கருத்துக்கு நன்றி .முதல் தமிழ் படம்தான் போக்கிரி என்று வர வேண்டும் .
''
கவலை வேண்டாம் சகோதரா, வேலாயுதம் வருது, நம்ம தலைவரும் தளபதியும் கூட்டணி, நம்ம ஒட்டு மொத்த ஆதரவும் வேலாயுதத்துக்குத்தான்... இந்த தீபாவெளி, சரவெடி...''
கலக்குரம் ஜெயிக்கிறோம் .'இப்பிடி பலிக்கு பலி வாங்கிற ஹீரோவை நான் பார்த்ததிலை '
Powder Star - Dr. ஐடியாமணி
''எல்லா அலசல்களும் அருமை! கடைசியில் உள்ள ஃபோட்டோ உருக்கம்!''
நன்றிகள் வரவுக்கும் கருத்துக்கும்
நல்லதொரு அலசல் அருமை
அந்த கடைசி படம் மனதை பதைபதைக்க வச்சிடுச்சி....!!!!
அட்டா ஒரே பதிவில் எத்தனை தகவல்கள்.. அப்போ வெடி புஸ்ஸாகிட்டா,,
அலசல் அருமை நண்பா,,
ஒரு பதிவு.. பல தகவல்கள்...
பிரமாதம் தல ......
பதிவர்களின் பதிவுகளை படிக்கும் போதே வெடி புஸ்வானம் என்பது தெரிந்துவிட்டது..ஆனாலும் சமீரா ரெட்டிக்காக ஒருக்கா பாப்பம்..ஹி.ஹி.ஹி.ஹி
நல்ல தகவல்களை தொகுத்து தந்து இருக்கீங்க பாராட்டுக்கள் பாஸ்
M.R ''
நல்லதொரு அலசல் அருமை''நன்றிகள்
MANO நாஞ்சில் மனோ
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
Riyas
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
துஷ்யந்தன்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
K.s.s.Rajh
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
விஜய் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்குவது உண்மை. ஆனால், பிரபு தேவாவின் முதல் படம் சித்தார்த்-த்ரிஷா நடித்த நுவ்வொஸ்தானன்டே நேன்னோடன்டானா (நீ வரும் போது நான் மறைவேனா?) ஒரிஜினல் தெலுங்கு படம், பெஸ்ட் பிலிம் உள்பட பல விருதுகளை அள்ளிய படம். தமிழில் சம்திங் சம்திங் என ரீமேக் செய்யப்பட்டது. இரண்டாவது படம் பௌர்ணமி பிரபாஸ்-த்ரிஷா நடித்த படம். மூன்றாவது தான் போக்கிரி.
//நீண்ட நாட்களாக விஜய் படம் வராததால் (எங்களுக்கு 10 மாதம் நீண்ட காலம் தான் )// இதுதான் சரியான தகவல் மேலும் தல போல் இவர் புதியவர்கள் பலரை அறிமுகம் செய்யவில்லை எப்போதும் தன் வெற்றுப்பிரச்சாரத்திற்கு இசைவானஜால்ரா அடிப்போரைத்தான் பயன் படுத்துகின்றார் இப்போது இதுதான் அவரின் அடுக்கடுக்கான தோல்விக்கு காரணம் பாஸ்!
புதிய பதிவுகள் போடும் போது மெயில் போடுங்கள் சார் தனிமரம் ஓடிவரும் கும்மியடிக்க!
////அப்போது எல்லாம் விட்டு விட்டு விஜய் இப்போதுதான் பெரிய இயக்குனர்களுடன் சேரும் போது அழைப்பு விடுப்பதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது /// சினிமா எண்டாலே அங்கே வியாபாரத்துக்கு தானே முதல் இடம் ))
இறுதிப்படம் ..உலகிலே கொடிய வறுமை என்று தான் ஒழியும் ((
அருமையான பதிவு பாஸ்.. 10 மாதத்துக்காக கவலைப்படாதிங்க.. அதுக்கேற்ற வெற்றி தயாரா இருக்குது
நேசன் அண்ணா.. அஜித் எந்த புதுமுகத்திற்கு வாய்ப்பு கொடுத்தார் என்றூ சொல்வீர்களா
@மதுரா என்னால் நீண்ட பட்டியல் போடமுடியும் போதிய நேரம் இன்மை என்றாலும் நீவருவாய் என ராஜகுமாரான்,தொடரும் ரமேஸ் கண்ணா(நகைச்சுவை நடிகர்)கவிகாளிதாஸ் உன்னைக்கொடு என்னைத்தருவேன்,முகவரி துரை,சரவணன் சுப்பையா சிட்டிசன் தீனா முருகதாஸ், என ப்பட்டியல் நீளும் இந்தப்படம் எல்லாம் தேடிப்பாருங்கோ இன்னும் தேவை எனில் தனிமரத்தை நாடுங்கோ ? விசில் அடிக்க வைக்காதீங்கோ!
பாஸ்,
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,
வெடி புஸ்வானம் என்றாலும்ம், இளைய தளபதியுடன் விஷால் இணைந்து பட்டயக் கிளப்புவார் என்று நினைக்கிறேன்.
உள்ளூர்க் கலைஞர்களின் படம் வெகு விரைவில் பார்க்கவுள்ளேன்.
எம்மவரின் படைப்புக்கள் வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது என்பதனை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது,.
இறுதிப் படம் கண்களில் நீர் வரச் செய்து வறுமையில்லா உலகம் வேண்டும் எனும் உண்மையினை உரைத்து நிற்கிறது.
இந்த வருடத்தின் டாப் படம் பற்றி எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
http://blogger-templates.blogspot.com/2005/01/remove-navbar.html
மச்சி, உங்கள் ப்ளாக்கின் மேற் பகுதியில் உள்ள நவிக்கேசன் பாரை நீக்கி விடவும், இல்லையேல் யாராச்சும் கூகிளிடம் கம்ப்ளைண்ட் பண்ணி வலையினை நீக்குவதற்காகன சந்தர்ப்பம் உண்டு.
ஒரு பதிவில் இவ்வளவு விடயங்கள?.
ஈழத்தவரின் கைவண்ணத்தில் உருவான படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறது.
அலசல் அசத்தல்
ஒரு நல்ல கோடம்பாக்கம் ரவுண்ட்ஸ் அப்... நண்பரே...
தனிமரம்
'''இதுதான் சரியான தகவல் மேலும் தல போல் இவர் புதியவர்கள் பலரை அறிமுகம் செய்யவில்லை ''
ஆனைக்கும் அடி சறுக்கும் போல
கந்தசாமி.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
மதுரன்
'''
அருமையான பதிவு பாஸ்.. 10 மாதத்துக்காக கவலைப்படாதிங்க.. அதுக்கேற்ற வெற்றி தயாரா இருக்குது''
இண்டைக்கு trailor வருதாமே
தனிமரம்
''புதிய பதிவுகள் போடும் போது மெயில் போடுங்கள் சார் தனிமரம் ஓடிவரும் கும்மியடிக்க''
கண்டிப்பாக
சென்னை பித்தன் .
நன்று!''
thanks
நிரூபன்
நன்றிகள்
அம்பலத்தார்
நன்றிகள்
மாய உலகம்
'அலசல் அசத்தல்''
நன்றிகள்
ரெவெரி
நன்றிகள்
நல்ல பதிவு சகா, கல்வி அறிவு ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை வாகை சூடவா படம் சொல்லியிருக்கு. உன்மையில் அனைவரும் பார்க்கவேண்டிய படம். . . commercial படங்களுக்கு மத்தியில் வாகை சூடவா, உண்மையில் வாகை சூடியிருக்கின்றது. . .
வெடி பட தோல்விக்கு முக்கிய காரணம் விஜய்தான்.அதற்கான காரணங்கள்:-
1)வேலாயுதம் பட டிரெய்லர் வெடி படத்தின் இடைவெளியில் காண்பித்தது.(இந்த விஷயம் தெரிந்ந்தே பலர் வெடி படத்தை புறக்கணிப்புப் செய்திருப்பார்)
2)பிரபுதேவா இந்த படத்தை இயக்கியது.(இப்படி ஒரு கொடுமையான இயக்குனரை தமிழுக்கு அறிமுகபடுத்தியது விஜய் தானுங்க.)
3)விஜய்யை நான் இயக்க விரும்புகிறேன் என்று ஒரு 'வெடி'யை விஷால் போட்டது.
இறுதியாக...ஒரு 10 மாதம் மக்கள் நிம்மதியா இருந்த விஜய்க்கு புடிக்காதா???
Post a Comment