வேலாயுதம்- trailor வெளியாகி படைய கிளப்பி கொண்டிருக்கிறது .இந்நிலையில் இந்த விமர்சனம் புது முயற்சியாக அமைகிறது .விஜயை பிடிக்காதவர்கள் கண்டிப்பாக பதிவை பார்க்கவும் .வேண்டாம் எண்டால் விடவா போகிறீர்கள்
எனது பார்வையில்
வழமையாக இளைய தளபதி விஜய் நடிக்கும் என்பதுதான் முதலில் வரும் இயக்குனர் பெயர் கடைசியாகத்தான் வரும்ஆனால் இங்கு தொடக்கத்திலேயே வருகிறது.இதன் மூலம் ராஜாவின் இயக்கத்தை முன்னிலை படுத்துவதன் மூலம் இது இயக்குனருக்குரிய படம் தான் என்பதை சொல்லியிருகிறார்களோ. .பொதுவாக விஜய் படங்களில் விஜயை அறிமுகப் படுத்தும் போது அவன் யாரு தெரியுமா என்றுதான் விளிப்பார்கள் .அனால் இங்கு அவர் யாரு தெரியுமா என்று விழிக்கிறார்கள் .அதுவும் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் அவ்வாறு விளிக்கிறார் .இது விஜய்க்கு வயது ஏறி விட்டது என்பதையா இல்லை அரசியல் நெடி பூசப் படுள்ளதை உரைக்கிறதா?
சொன்னா புரியாது வழமை போல நெற்றியில் விபூதி பூசி ஆரம்பிக்கிறது (சிவகாசி குங்குமம் ).பல விதமான நடனக் கலைஞர்களை பயன் படுத்தி எடுக்கப் பட்டது .அப்புறம் அறிமுகப் பாடலில் ஒரே உடையுடன் வருவது வழக்கம் .இங்கு வெவ்வேறு உடைகளுடன் வருகிறார் .
குரலில் வித்தியாசம் தெரிகிறது .அதுவும் கோபத்துடன் வசனம் பேசும் போது தடித்த குரலில் பேசுவதுமுகம் அக்கினியாய் உள்ளது நடிப்பில் முதிர்ச்சியை காட்டுகிறது .
பாடல் காட்சிகள் பகிர்ந்து அளிக்கப் பட்டுள்ளன . சிலாக்ஸ் ஹன்சிகாவுக்கும் ,மாயம் செய்தாயோ ஜெனிலியாவுக்கும் ரத்தத்தின் ரத்தமே சரண்யா மோகனுக்கும் வழக்கப் படுள்ளது .மொளச்சு மூணு இளையே விடல இருவருக்கும் வழங்கப் பட்டுள்ளது விரலு வெண்டக்கா ஜெனிலியாவுக்கும் காலு அவரைக்கா ஹன்சிகாவுக்கும் போல .பாடல் ஒழுங்கு எப்படி என்பதில் சந்தேகமாய் இருக்கு . சொன்னா புரியாது ,சிலக்ஸ்,மொளச்சு மூணு ,ரத்தத்தின் ரத்தமே ,மாயம் செய்தாயோ இந்த ஒழுங்கிலே தான் பாடல் உள்ளது படத்திலும் அப்பிடித்தான் இருக்கும் போல .நான் சிலாக்ஸ் கடைசி பாட்டாய் இருக்கும் என்று நினைத்தேன் .நடனம் புதிதாய் சொல்ல ஒன்றும் இல்லை கலக்கி இருக்கிறார் .மாயம் செய்தாயோவில் ஹேர் ஸ்டைல் அழகா உள்ளது .
வேலாயுதம் முகமூடியுடன் வரும் காட்சிகளில் தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்கிறது சண்டை காட்சியில் ட்ரெயின் சண்டை படத்தின் முக்கிய அம்சமாக எந்திரனில் இடம் பெற்ற ட்ரெயின் சண்டைக்கு நிகராக இருக்கும் என ராஜா ஏற்கனவே கூறியிருக்கிறார். விஜய் எதிரிகள் மட்டுமன்றி விஜய் ரசிகர்கள் அனைவரிடமும் உள்ள சந்தேகம் குருவி ட்ரெயின் சண்டை குருவி போல் இருக்குமோ என்பது .ஆனால் நிச்சயமாக உண்மைத்தன்மை யை விட்டு கொஞ்சமும் விலக வில்லை என ராஜா உறுதி பட தெரிவித்துள்ளார் .
trailor இன் கிளைமாக்ஸ் பட்டைய கிளப்புகிறது. .வேலாயுதம் பஞ்ச் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன் நீ காட்டு காட்டுன்னு வேற சொல்லுற காட்டாம இருந்தா நல்ல இருக்குமாண்ணா (யாருக்கு ண்ணா சொல்லுறீங்க ) விரும்பியோ விரும்பாமலோ அனைவரும் அதை சமுக தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். .இந்த பஞ்ச் மட்டும் தானா இல்லை இன்னும் இருக்கா என்று எதிர் பார்ப்பை கிளப்புகிறது .
சந்தானத்தின் கொமெடி ஒண்டும் இடம்பெறுகிறது .விளங்கவில்லை .படம் பார்த்தால்தான் விளங்கும் போல .
தெலுங்கு ஆசாத் படத்தின் ரீமேக் தான் என்பதை ஒத்துக் கொண்ட ராஜா தமிழுக்கு ஏற்ற விதத்தில் மாற்றியதுடன் இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் அமைத்துள்ளதாக தெரவித்துள்ளார் .தெலுங்கு ஆசாத் வேலாயுதம் ஆரம்பிக்கப் பட்டவுடனேயே வேலாயுதம் என்ற பெயரில் யாழ்ப்பாணம் முழுதும் dvd வெளியாகி இருந்தது .நானும் அதை பார்த்திருந்தேன் .அந்த கதையை அப்படியே எடுத்தால் வெடி போல புஸ்வானம் ஆகும் என்று எனக்கே ஏன் சின்ன குழந்தைக்கே தெரியும் ராஜாவுக்கு தெரியாதா .
சென்டிமெண்டில் 10 மடங்கு திருப்பாச்சியும் ஆக்சனில் 10 மடங்கு போக்கிரி யாக அமையும் எனநம்பிக்கை தெரிவித்துள்ளார் ராஜா.
சென்டிமெண்டில் 10 மடங்கு திருப்பாச்சியும் ஆக்சனில் 10 மடங்கு போக்கிரி யாக அமையும் எனநம்பிக்கை தெரிவித்துள்ளார் ராஜா.
விஜயின் படங்களுக்கு என்றுமே வில்லன்களுக்கு முக்கிய இடம் உண்டு .இதிலே அது மிஸ்ஸிங் (trailor) வில்லனின் ஒரு வசனம் கூட ஏன் ஒரு வில்லனை கூட முறையாக காட்ட வில்லை .15 வில்லன் என்பதால் யாரை காட்டுவது என்று தெரியாமல் தானே காட்டியுள்ளார் வேலு வேலாயுதம் .
சொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகள்
#தீம் மியூசிக் என்னை பெரிதாய் கவரவில்லை மங்காத்தா தீம் மியூசிக் கேட்டு அதை விட பெரிதாய் எதிர்பார்த்தேன் .சிலவேளை காட்ட காட்டத்தான் பிடிக்குமோ .
#எவ்வளவு நாளுக்குத்தான் அவரு யாரு தெரியுமோ என்று பில்ட் அப் செய்வது .தமிழ் நாட்டுக்கே இல்லை உலகுக்கே தெரியும்தானே அவர் யாரு என்று . #அண்ணே என்று கத்துவது முதலே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு அதே முக பாகத்துடன்
# இப்ப தமிழ் நாடே உச்சரிக்கும் வேலாயுதம் என ஜெனிலியா கூறியதும் பின்னணியில் ஒலிக்கும் வேலாயுதம் வேலாயுதம் அப்படியே தெய்வ திருமகள் கதை சொல்ல போறேன் பாட்டில் ராஜா காக்கை ராஜா என்பதையே ஞாபகப் படுத்துது .
வெளியாகி இரண்டு நாட்களில் 45000 பார்வைகள் 1800 விருப்பங்கள் 177 விருப்பமின்மைகள் (05-10-2011 4.50 P.M) பெற்று YOUTUBE ஐயே CONFUSE ஆக்கி ஒன்ஸ் மோர் கேட்கும் வேலாயுதம் வெற்றி ஆயுதம்தான் . விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் அதிகமோ அந்த அளவுக்கு எதிரிகளும் அதிகம் என்று சொல்பவர்கள் (விருப்பமின்மையும் 1800 வந்திருக்கணுமே) என்ன சொல்ல போகிறீர்கள் .
********************************************************************************
வேலாயுதம் பற்றி இதுவரை குறைந்தது 5 பதிவாவது எழுதி இருப்பேன் .இன்னும் எழுதுவேன் .பதிவு உலக விஜய் ரசிகர்களே நீங்கள் முந்துங்கள் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் படத்தின் வெற்றிக்கு துணை புரியும் .
சும்மா
மங்காத்தா படத்தில் விஜய் வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் நன்றிக் கடனாக trailor இலேயே தளபதி தலையை கௌரவித்துள்ளார் .எங்கே என்று கேட்கீறீர்களா
''இன்னைக்கு தமிழ் நாடே தலையில தூக்கி வைத்து கொண்டாடி கொண்டிருக்கிற வேலாயுதம்''
முக்கிய வேண்டுகோள் -இதை விஜய் ரசிகர்களை விட எதிரிகளே அதிகம் பார்ப்பார்கள் என்பது எனக்கு தெரியும் .பதிவிலே நான் வேறு எந்த நடிகர்களையும் தரம் தாழ்த்தவில்லை .உங்கள் கருத்துக்களை நாகரீகமாக தெரிவியுங்கள்.
42 comments:
nce post...flm gona rock...and dance amazing!!Stunnin!
very nice ....... velayutham rockzzzzzz
குறையையும் சொன்னதுக்கு ...வாழ்த்துக்கள்...
சூப்பர் போஸ் அது தான் தளபதி
ஆக்சன் காட்சிகளை பார்த்தால் தான் கொஞ்சம் பீதி.வில்லு குருவி படங்களை நினைவூட்டுகிறது.
நாட்டாம தீர்ப்ப மாதி சொல்லிடாத போன்ற ற்றைலரில் இருக்கும் காமெடிகள் படத்திலும் இருந்தால் சற்று தொய்வை ஏற்படுத்தும்.
பாடல்கள் வழக்கம் போல் போகப்போக பிக்அப் ஆகிவிடும்!
ரசிகர்களுக்கு நல்ல தீனியாக அமையும்.மற்றவர்களுக்கு?பொறுத்திருந்து பார்ப்போம்.
trailor ருக்கே இம்மாம் பெரிய விமர்சனமா ?
வேலா வேலா வேலா வேலா வேலாயுதம், தளபதிக்கு இது ரொம்ப முக்கியமான படம், ஜெயிப்பாருன்னு தோணுது.
done well
மைந்தன் சிவா
''nce post...flm gona rock...and dance amazing!!Stunnin!'
THANKS
ராகுல்
''very nice ....... velayutham rockzzzzzz''
THANKS
ரெவெரி
'குறையையும் சொன்னதுக்கு ...வாழ்த்துக்கள்..''
நன்றிகள் .
naan
'சூப்பர் போஸ் அது தான் தளபதி''
THANKS
கோகுல்
நன்றிகள்
நிகழ்வுகள்
'' trailor ருக்கே இம்மாம் பெரிய விமர்சனமா ?''
சும்மாதான்
Dr. Butti Paul said...
'' வேலா வேலா வேலா வேலா வேலாயுதம், தளபதிக்கு இது ரொம்ப முக்கியமான படம், ஜெயிப்பாருன்னு தோணுத''
ஜெயிக்கணும்
கவி அழகன் said...
done well
THANKS
வணக்கம் மச்சி இங்க நிறைய கும்மி அடிக்க நீங்களே மேட்டரை எடுத்து குடுத்து இருக்கீங்க..ஆனால் எனக்கு கும்ம விருப்பம் இல்லை ஏன்னா சரன்யா,ஹனிகா,இரண்டு பேரும் நடிப்பதால் எப்படி கும்முவது...ஹி.ஹி.ஹி.ஹி
விஜய் ஒரு நல்ல மாஸ் ஹீரோ அதில் எந்த சந்தேகமும் இல்லை..ஆனால் அவர்து ரசிகர்களில் சிலர்(கவனிக்க சிலர்) செய்யும் ஓவர் பந்தாதான் விஜயை பலர் விமர்சிக்க காரணம்......
உங்கள் ட்ரெயிலர் விமர்சணமே சுப்பரா இருக்கு மச்சி நிச்சயம் வேலாயுதம் விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்
நானும் வேலாயுதத்தை எதிர்பாத்து காத்து இருக்கேன்
ஆனால் நான் விஜய் ரசிகன் இல்லை விஜய்க்கு மட்டும் இல்லை எந்த நடிகர்களுக்கும் ரசிகன் இல்லை.ஆனால் நடிகைகளுக்கு ரசிகன்..ஹி.ஹி.ஹி.ஹி
நல்ல ஒரு கமர்சியல் படத்தை பார்க்கலாம் என்பதால் வெயிட்டிங்.
அழகிய திரைப்பட விமர்சனம் வாழ்த்துக்கள் .மிக்க
நன்றி சகோ பகிர்வுக்கு .......
இதுவரை எந்த விஜய் படங்களிலும் பார்க்காத தரமான ஒளிப்பதிவு!
டிரைலர் அட்டகாசமா இருக்கு!
வாழ்த்துக்கள்! ரசிப்போம்! :-)
அருமையான அலசல்... வேலாயுதம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
படத்தின் முன்னோட்டத்திற்கே இப்படி ஒரு பதிவு என்றாள் படம் வெளியாகினால் விஜய் விசிரியாக நீங்க இன்னும் பல பதிவுகள் போடுவீங்கள் என்பது திண்ணம் தொடருங்கள் நண்பரே அசத்தலான பதிவுகளை!
K.s.s.Rajh said...
''
உங்கள் ட்ரெயிலர் விமர்சணமே சுப்பரா இருக்கு மச்சி நிச்சயம் வேலாயுதம் விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்''
நன்றி பாஸ்
K.s.s.Rajh said...
''நானும் வேலாயுதத்தை எதிர்பாத்து காத்து இருக்கேன்
ஆனால் நான் விஜய் ரசிகன் இல்லை விஜய்க்கு மட்டும் இல்லை எந்த நடிகர்களுக்கும் ரசிகன் இல்லை.ஆனால் நடிகைகளுக்கு ரசிகன்..ஹி.ஹி.ஹி.ஹி''
உங்க பாலிசி நல்ல பாலிசி பாஸ்
அம்பாளடியாள் said...
''அழகிய திரைப்பட விமர்சனம் வாழ்த்துக்கள் .மிக்க
நன்றி சகோ பகிர்வுக்கு .......''
நன்றிகள்
ஜீ... said...
''இதுவரை எந்த விஜய் படங்களிலும் பார்க்காத தரமான ஒளிப்பதிவு!
டிரைலர் அட்டகாசமா இருக்கு!
வாழ்த்துக்கள்! ரசிப்போம்! :-)''
நன்றிகள் .நீங்களே சொல்லி விட்டிர்கள் பிறகென்ன
மாய உலகம் said...
'' அருமையான அலசல்... வேலாயுதம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.''
நன்றிகள்
தனிமரம் said...
''படத்தின் முன்னோட்டத்திற்கே இப்படி ஒரு பதிவு என்றாள் படம் வெளியாகினால் விஜய் விசிரியாக நீங்க இன்னும் பல பதிவுகள் போடுவீங்கள் என்பது திண்ணம் தொடருங்கள் நண்பரே அசத்தலான பதிவுகளை!''
நன்றிகள்
வெற்றிக்கு வாழ்த்துக்கள், ஆனா பலத்த போட்டி இருக்கு, 7 ஆம் அறிவு!!
உங்கள் எண்ணம் போல் நடக்கட்டும்!
இனிய இரவு வணக்கம் பாஸ்,
ட்ரெயிலர் விமர்சனம் சூப்பரா இருக்கு.
எதிர்பார்ப்பினைக் கூட்டுகிறது வேலாயுதம்.
இன்னும் ரெண்டு வாரம் பொறுத்திருப்போமே.
ட்ரைலர்க்கு இம்புட்டு நீள பதிவா? உங்கள் ஆர்வம சூப்பர் பாஸ்...
//சென்டிமெண்டில் 10 மடங்கு திருப்பாச்சியும் ஆக்சனில் 10 மடங்கு போக்கிரி யாக அமையும் எனநம்பிக்கை தெரிவித்துள்ளார் ராஜா.
இது வாழ்த்தா இல்லை சாபமா?
என்னமோ சொல்றீங்க... மொதல்ல படம் வரட்டும். இதுல சிக்ஸ் பேக் எல்லாம் ட்ரை பண்ணிருக்காரு போலிருக்கு. எனக்கென்னமொ லேசா கந்தசாமி வாடை வருது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அப்புறம் ஒரு விஷயம். படம் வெளி வந்தவுடன் உங்களிடம் இருந்து நேர்மையான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். சும்மா மாங்காத்தா தனியா வந்தது, வேலாயுதம், 7ஆம் அறிவோட வந்தது, அது சன் பிக்சர்ஸ் விளம்பரத்தால் தப்பிச்சது, இது அப்படி விளம்பரம் இல்லாமேலேயே சுமாரா ஓடுதுன்னு சப்பை கட்டு கட்டக்கூடாது.
சி.பி.செந்தில்குமார் said...
வெற்றிக்கு வாழ்த்துக்கள், ஆனா பலத்த போட்டி இருக்கு, 7 ஆம் அறிவு!!''
போட்டி இருந்தாதான் வெற்றி பெற முடியும்
சென்னை பித்தன் said...
''உங்கள் எண்ணம் போல் நடக்கட்டும்!''
நன்றி
நிரூபன் said...
இனிய இரவு வணக்கம் பாஸ்,
ட்ரெயிலர் விமர்சனம் சூப்பரா இருக்கு.
எதிர்பார்ப்பினைக் கூட்டுகிறது வேலாயுதம்.
இன்னும் ரெண்டு வாரம் பொறுத்திருப்போமே.''
பார்ப்போம் பாஸ்
தமிழ்வாசி - Prakash said...
ட்ரைலர்க்கு இம்புட்டு நீள பதிவா? உங்கள் ஆர்வம சூப்பர் பாஸ்...''
நன்றி பாஸ்
"ராஜா" said...
//சென்டிமெண்டில் 10 மடங்கு திருப்பாச்சியும் ஆக்சனில் 10 மடங்கு போக்கிரி யாக அமையும் எனநம்பிக்கை தெரிவித்துள்ளார் ராஜா.
இது வாழ்த்தா இல்லை சாபமா?''
ரெண்டு கிழமையில் தெரியும்
பாலா said...
என்னமோ சொல்றீங்க... மொதல்ல படம் வரட்டும். இதுல சிக்ஸ் பேக் எல்லாம் ட்ரை பண்ணிருக்காரு போலிருக்கு. எனக்கென்னமொ லேசா கந்தசாமி வாடை வருது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அப்புறம் ஒரு விஷயம். படம் வெளி வந்தவுடன் உங்களிடம் இருந்து நேர்மையான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். சும்மா மாங்காத்தா தனியா வந்தது, வேலாயுதம், 7ஆம் அறிவோட வந்தது, அது சன் பிக்சர்ஸ் விளம்பரத்தால் தப்பிச்சது, இது அப்படி விளம்பரம் இல்லாமேலேயே சுமாரா ஓடுதுன்னு சப்பை கட்டு கட்டக்கூடாது.''
சரி பாஸ்
Post a Comment