Friday, July 1, 2011

ஹாக் செய்யப்பட கூகுள் அக்கௌன்ட் ஐ மீட்பது/மீட்டது எப்படி?



இன்றைய தினம் taindly இல் செய்திகளை படிக்கும்போது அகப்பட்டதுதான் பலேபிரபு என்னும் வலைப்பதிவரின் இந்த ஆக்கம்.இப்போது பரவலாக ஹாக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலரின் அக்கௌன்ட் களும் ஹாக்கிங் செய்யபட்டு அதை எவ்வாறு மீட்பது என்று தெரியாமல் திண்டாடியுள்ளனர். பலருக்கும் பிரயோசனமாக இருக்கும் என்பதால் இதை என் தளத்திலும் பகிர்கிறேன் .அத்துடன் இவரின் தளத்தில் பயனுள்ள பல இணையம் சம்பந்தமான தகவல்களும்    உள்ளன.பார்த்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முதலாவதா நீங்க உங்க கம்ப்யூட்டர் ல வைரஸ் இருக்கான்னு ஸ்கேன் பண்ணுங்க. நல்ல ஆண்டி வைரஸ் மட்டும் பத்தாது அத அடிக்கடி அப்டேட் பண்ணனும். பெரும்பாலும் உங்கள் அக்கௌன்ட் இதனால் தான் ஹாக் செய்யப்படும். அப்படி ஹாக் பண்ணிட்ட வர பிரச்சினைகளை எப்படி சமாளித்து நமது அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது??.


முதலாவதா கூகுள் ஹோம் பேஜில்  இருந்து உங்கள் அக்கௌன்ட்க்கு sign in ஆகுங்க இப்போ அக்கௌன்ட் செட்டிங்க்ஸ்ல நீங்க இருக்கணும்.


இதுல "Personal Settings " ல "Change password recovery options" இந்த பக்கத்துக்கு போங்க. இப்போ recovery email address ல உள்ள email id இப்போ நீங்க உபயோகிக்கிற உங்களோட இரண்டாவது அக்கௌன்ட் ஐ அதில் கொடுத்துடுங்க.


எப்போதும் பயன்படுத்துகிற உங்கள் மொபைல் நம்பர் மூலமாகவும் நீங்கள் உங்கள் recovery option ஐ செட் செய்ய முடியும். ஆனா முக்கியமான ஒன்று அந்த எண்ணை நீங்கள் எப்போதும் மாத்தவே கூடாது.


அடுத்தது security question , நீங்கள் ரொம்ப நாள் முன்னாடி உங்கள் அக்கௌன்ட் உருவாக்கி இருந்தால் இந்த கேள்வி அதில் இருந்திருக்காது(எனக்கும் இல்லை.)அந்த option ஐ நீங்கள் இப்போது உருவாக்கி கொள்ளுங்கள். இதில் நீங்கள் உங்களது சொந்த கேள்வியை கேட்டும் பதில் செட் செய்து கொள்ளலாம். எப்போதும் இதை மறந்து விட கூடாது.


இப்போது முடிந்து விட்டதா என்றால், இல்லை. ஏன் என்றால், இதை எல்லாம் உங்கள் அக்கௌன்ட் ஐ ஹாக் செய்பவன் மாற்றி விட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் மாற்றி விட்டால் பின்னர் எப்படி அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது ?


இதற்கு ஒரு form fill up செய்து கூகுள்க்கு அனுப்ப வேண்டும். அதில் நீங்கள் கூறியது எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் அக்கௌன்ட் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்??


உங்கள் account க்குள் நீங்கள் நுழைய முடியவில்லை என்றால் உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.


1 . revovery ஈமெயில் அட்ரஸ் மூலம் உங்கள் அக்கௌன்ட் ஐ திரும்ப பெறலாம்.

2 . security question மூலம் பெறலாம்.

3 . account recovery form fill up செய்து பெறலாம்.


இதில் முதல் இரண்டு வாய்ப்புகளில் உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மூன்றாவது வழியை பயன்படுத்த வேண்டும். அந்த form கீழே உள்ளது.



இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நாம் சரியாக தரும் பட்சத்தில் நாம் நம் அக்கௌன்ட் ஐ திரும்ப பெற முடியும்(நான் இதன் மூலம் தான் பெற்றேன்).வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்தது இல்லையா. எனவே நான் கூறப் போகும் விவரங்களை நீங்கள் முதலில் தயார் செய்து பாதுகாத்துக் கொள்ளவும்.

அதற்கான லிங்க்:  account recovery form


• உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் ஆரம்பித்த தேதியை நீங்கள் உங்கள் ஜிமெயில் இன் முதல் மெயிலில் சென்று குறித்து கொள்ளுங்கள்.

• இந்த gmail id மூலம் நீங்கள் பயன்படுத்திய google product களை பயன்படுத்த ஆரம்பித்த தேதி.

• இதுவரை கவனிக்க தவறினாலும் இனி குறித்து கொள்ளவும்

• உங்கள் வலைப்பூ முகவரி

• உங்கள் orkut profile முகவரி

• கடைசியாக வைத்திருந்த password .

• நீங்கள் அடிக்கடி(frequent ) தொடர்பு கொள்ளும் mail id க்கள்

• உங்கள் நான்கு label களின் name .


இந்த பதிவை நீங்கள் copy செய்து கொள்ளவும் இது உங்களுக்கு பின்னாளில் பயன்படலாம்.அந்த பக்கத்திற்கு சென்று பாருங்கள் ஏதேனும் புரியவில்லை என்றால் கேட்கவும்.

தொடர்பு  கொள்ள  

மெயில் id: krishnaprabu2710@gmail.com
phone: +91 9566887721

டிஸ்கி:
Contact information and problem details பாகத்தில் நீங்கள் கொடுக்க வேண்டியது உங்கள் புது ஜிமெயில் id. 

product information மற்றும் அதன் பின்னர் வரும் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் ஹாக் செய்யப்பட id விவரங்களை  கொடுக்க வேண்டும்.  இதை மறந்து விடாதீர்கள்.

என்ன தகவல்கள் பிரயோசனமாக இருந்ததா?.இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன் .

இவரின் வலைப்பூ முகவரி :http://baleprabu.blogspot.com

Post Comment

Tuesday, June 28, 2011

அஜித் vs மங்காத்தா

ங்காத்தா அஜித் நடிக்கும் 50 வது படம் .கடந்த மேதினத்தை குறி வைத்து எடுக்கப்பட்ட படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது .2007  இறுதியில் வெளிவந்து சக்கை போடு போட்ட பில்லா படத்துக்கு பின்னர் மங்காத்தா அதிக எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கிறது. சக நண்பரான விஜய் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகையில் இவரின் படங்கள் வருடத்துக்கு ஒன்று வெளியாவதே அபூர்வமாக  உள்ளது. கொலிவூட்டின்முன்னணி நடிகரான அஜித் இவ்வாறு தாமதிப்பது அவரின் ரசிகர்களை விரக்தி அடைய செய்கிறது.அதுவும் எத்தனை நாளுக்குத்தான் படங்களில் தல தல என்று கூவப் போகிறார்களோ தெரியவில்லை . தாமதித்தாலும் பரவாயில்லை என்று படம் பார்க்க போனால் படம் சப்பையாகவே உள்ளது .படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் துளி கவலை கூட இல்லாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்தும் விஜயைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அஜித் நடிப்பதாக இருந்து பின்பு கைவிட்ட படங்களில் நடித்தே ஒருவர் முன்னணி நடிகராகிய வரலாறு உண்டு .எது எவ்வாறாயினும் யாருடைய தயவும் இன்றி சினிமாவில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய அஜித்தின் துணிச்சல் எந்த நடிகருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .சில படங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஜித்தின் படங்கள் வெற்றி பெறும் வீதமானது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது துரதிர்ஷ்டம் ஆகும்.


மங்காத்தா 

விஜயின் படமான சுறாவும்அஜித்தின் படமான மங்காத்தாவும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் நடந்தாலும் விஜயின் சுறா வெளிவந்து (அது மொக்கையாகியது வேறு கதை) அடுத்தடுத்த படங்களும் வெளியாகி விட்டன .மங்காத்தா தாமதமாக வந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ளது .கிளௌட் நைன்மூவிஸ் சார்பில் துறை  தயாநிதி அழகிரி  தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருக்கிறார். இவர்களுடன் அர்ஜுன் ,பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருகிறது. யுவனின் இசையில் விளையாடு மங்காத்தா பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது 
.படத்தின் கதை சஸ்பென்ட் ஆக வைக்கப்பட்டிருந்தாலும் மேட்ச் பிக்சிங் (match fixing) தொடர்பானது என தகவல் வெளியாகியிருக்கிறது.  இதில் முக்கிய அம்சம் என்னவெனில் அஜித் இதில் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.  வில்லன் என்றால் முதலில் வில்லனாக நடித்து விட்டு க்ளைமாக்சில் நல்லவனாக காட்டும் வேடமும் (போக்கிரி) இல்லையாம்.எனினும் நெகடிவ் ரோல் இல் அஜித் நடிக்கிறார் என்பதுதான் இப்போது உறுதி ஆகியிருக்கிறது .( போலீஸ் ஆக நடிக்க அர்ஜுன் இருக்காரே). இப்படம் இந்தியில் இம்ரான் நடித்த ஜன்நெட் என்ற படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் வெங்கட் பிரபு அதை  மறுத்துள்ளார் .
இப்போதைய தகவல்களின்படி எதிர்வரும் ஆகஸ்ட் 12 படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது .வேலாயுதம் ஏழாம் அறிவு என்பனவும் இதே காலப்பகுதியில் வெளியாக உள்ளன. எனினும் ஒரே நாளில் வெளிவர சந்தர்ப்பம் இல்லை. .மங்காத்தா வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் தல .

Post Comment

Saturday, June 25, 2011

வேலாயுதம் ஒரு சிறப்பு பார்வை

காவலன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படம்.என்னதான் காவலன் வெற்றிதான் என்றாலும் பல்வேறு காரணங்களால் மெகா ஹிட்ஆகவில்லை.தொடர் தோல்வியின் பின் காவலன் வெற்றி பெற்றது ,தேர்தல் முடிவுகள் என்பன விஜய்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதுஅந்த மலர்ச்சியுடன் மீண்டும் ஒரு மெஹா ஹிட் கொடுப்பதற்காக விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் படம்தான் வேலாயுதம்.தெலுங்கு படமான ஆஸாத் படத்தின் ரீமேக் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும் ஜெயம் ராஜா முதல் தடவையாக சொந்தக்கதையில் எடுப்பதாக சொல்லியுள்ளார்.படத்தின் ஒரு வரிக்கதை என்னவெனில் தந்தைக்காக (குருவி),தாய்க்காக(சிவகாசி),அண்ணனுக்காக(பத்ரி), தம்பிக்காக(பகவதி), தங்கைகாக(திருப்பாச்சி),நண்பனுக்காக(ப்ரண்ட்ஸ்), போராடிய விஜய் இதில் மக்களுக்காக போராடுகிறார்.(சுறாவிலும் அதைத்தானே செய்தார் #அப்படியா). .சுறா,வேட்டைகாரன்,குருவி வரிசையில் இது அமையும் என்பது பலரது எதிபார்ப்பு(வேட்டைக்காரன் அயன் வசூலை முறியடித்ததாக சன் பிக்சர்ஸ் சொல்லியது.குருவி 150வது நாள் வெற்றி விழா நடை பெற்றது).ஆனால் சிறப்பான திரைக்கதை நகர்த்தும் விதம் ,வலிமையான செண்டிமெண்ட்ஆக்ஷ்ன் ,காமெடிஎன பக்கா கொமெர்சியலாக கொடுத்தால் கில்லி,போக்கிரி வரிசையில் இணையவும் வாய்ப்புள்ளது.                                                                                                                    இசையை பொறுத்தவரை வேட்டைக்காரன் பட்டயைக் கிளப்பியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்ஜெனிலியா,ஹன்சிகா என இரு நாயகிகள். சச்சினில் ஜெனிலியா ஏற்கனவே நடித்தவர்.ஹன்சிகா நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகியன தோல்வி அடைந்த நிலையில் இதை நம்பியுள்ளார்.விஜய் ஆண்டனியின் இசையில் எதிர்வரும் ஜுலை 5 பாடல்கள் வெளிவர இருக்கின்றன.மெலோடி, குத்துப்பாட்டு என்று ‌விஜய் ஆண்டனியின் இசையில் மொத்தம் 7 பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி செலவில் படமாக்கியுள்ளனர்..சந்தானம் காமெடிக்கு உள்ளார்.எனினும் இதில் அவரிடம் அவரின் சமீபத்தைய படங்களைப் போல  நிறைய எதிர்பார்க்க முடியாது .








.படத்தின் பலம் 
***படத்தின் கதையை வைத்து இது மொக்கைதான் என பலர் நினைப்பதால் படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை.ஆததால் இதுவே பெரும் பலமாக உள்ளது.படம் ஓரளவு நல்லாய் இருந்தாலே வெற்றி பெறலாம்.
***தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் பெரும் பலமாக உள்ளது.காவலன் படத்தை வெளியிடுவதில் விஜய்கு ஏற்பட்ட நெருக்கடி யாவரும் அறிந்ததே.(DMK ஆட்சியில் தனது படங் கள் வேண்டுமென்றே தோல்வியடைய செய்யப் பட்டதாக விஜய் நினைக்கிறார்) 
***படத்தின் உரிமை ஜெயா டிவிக்கு கைமாறியுள்ளமையும் பலம்தான்.
***விஜய் ரசிகர்கள் -விஜய் நடித்த ப்ளாப் படங்களுக்கு கூட நல்ல ஒபினிங் கொடுப்பது இந்த ரத்தத்தின் ரத்தங்கள்தான்.(விஜய் நடித்த சில நல்ல படங்களை ப்ளாப் ஆக்கியதும் இவர்கள்தான்.)                                                        பலவீனம் என்று பார்க்கும் போது விமர்சனங்கள் அதிலும் படம் நல்லாய் இருந்தால் கூட குப்பை என்று விமர்சனம் எழுதும் சிலர் .அத்துடன் காய்க்கிற மரத்துக்குத்தான் கல் எறிவார்கள்.கல் எறிய காத்து நிற்கும் கூட்டமும் பலவீனம்தான்.
எது எவ்வாறாயினும் படம் நல்லாய் இருந்தால் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...