Monday, September 26, 2011

விஜயின் அடுத்த கில்லி+ போக்கிரி அதுதான் டோக்குடு

எந்திரனுக்கு அடுத்து அதிக இடங்களில் வெளியாகும் சிறப்பை பெற்றுள்ளது வேலாயுதம் . வேலாயுதம் வெளியீட்டு திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .எதிர்வரும் தீபாவளி அன்று வெளியாகிறது.மங்காத்தா வின் வெற்றியை அடுத்து வேலாயுதம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது .இப் படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் ஐங்கரன் நிறுவத்தினர் வேலாயுதத்தை பிரமாண்டமாக வெளியிடுகின்றனர் வெளிநாடுகளில் மட்டும் 350-400 பிரிண்ட் போடவுள்ளனர் .கேரளாவில் 120 ற்கு மேற்பட்ட திரை அரங்குகளிலும் கர்நாடகா-70,மும்பை-40,புனே -30 இடங்களிலும் திரையிடப் படுவது இப்போது உறுதி செய்யப் பட்டுள்ளது .இங்கிலாந்தில் ரஜினியின் எந்திரனுக்கு அடுத்த படியாக அதிக இடங்களில்(26) திரையிடப் படுகிறது .தசாவதாரம் 16 இடங்களில் திரையிட பட்டது அப்போ தமிழ் நாட்டில் சொல்லவே வேண்டாம் ..behindwoods செய்தி குறிப்பு .
சீனாவிலும் முதற் தடவையாக 5 இடங்களில் வேலாயுதம் வெளியிடப் படவுள்ளது .

 வெளி நாடுகளிலும் விஜய்னா மாஸ் 


டோக்குடு

மகேஸ்பாபு நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போடுகிறது டோக்குடு திரைப்படம் .இதுவரை இருந்த மகாதீரா வின் வசூலை தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது படத்தின் ஒபெநிங் .தந்தை மகன் பாசத்தை செண்டிமெண்டாக வெளிப்படுத்தும் அக்சன்  படமான  இதை தமிழில் ரீமேக் செய்வதற்கு பலத்த போட்டி எழுந்துள்ளது .தமிழில் மூன்று முன்னணி நாயகர்கள் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் .அந்த முன்னணி நாயகர்களில் முன்னணியில் நிற்பது யார் .தனது கில்லி,போக்கிரி பிளாக் பஸ்ட்டர் களை ஒக்கடு ,போக்கிரி என மகேஷ் பாபு விடம் பெற்ற நம்ம தளபதி இந்த டோக்குடுவை விட்டு வைப்பாரா?. ம்ம் பிரபுதேவா ,தரணி,ராஜா ரெடி ஆகுங்க.விஜயின்  அடுத்த  கில்லி+ போக்கிரி அதுதான்  டோக்குடு  .
.
மயக்கிய மயக்கம் என்ன
அண்மையில் வெளி வந்த மயக்கம் என்ன திரைப் பட பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன .''நான் சொன்னதும் மழை வந்திடுச்சு'' மயக்குகிறது என்னை .மயக்கம் என்ன படத்தில் பாடல் ஆசிரியராகவும் மாறி இருக்கிறார் தனுஷ் .மயக்கம் என்ன திரைப்படமும் தீபாவளி போட்டியில் இணைந்துள்ளது.
ஏழாம் அறிவு பாடல்கள் வெளி வந்து  அம்புட்டுதான் வந்து இருகின்றன .அப்ப வேலாயுதம் சாதனையை முறியடிச்சு இருக்கணுமே .ஹரிஸ் +முருகதாஸ்+சூர்யா கூட்டணி படங்களின் பாடல்கள் எல்லாமே சூப்பர் டுப்பர்  ஹிட் அல்லவா.பாடல்கள் எப்படி என்று உங்களுக்குத்தான் தெரியுமே .எதிர்பார்த்த அளவுக்கு இல்ல .ஹரிஸ் அடுத்து தளபதியுடன் முதல் படம் .உங்களை ரொம்பவே நம்பி இறுக்கம் ஏமாற்றி விடாதீங்க ப்ளீஸ் .

மருத முரான்
சமுக பதிவுகளை எழுதி வந்த  ஈழத்து புகழ் பெற்ற பதிவர் மருத முரான் அவர்கள்    அண்மைக் காலமாக  சினிமா சம்பந்தமாகவும் அதிகம் எழுதுகிறார் .எனக்கு பிடித்த பதிவர்களில் ஒருவரான அவர் எனக்கு  தெரிந்து(நான்கு மாதங்கள் ) நம்ம தளபதியை பற்றி நல்ல விதமாக ஒரு பதிவு எழுதி உள்ளார் .

விஜய் விஞ்சிய பொடிகார்ட்! சல்லுவின் அலட்டலும் அற்புதம்!!.


மன்னார் பயணம்  
மன்னாருக்கு பல்கலைகழக  அலுவலாக சென்றமையால் சில நாட்களாக பதிவுலகில் வலம் வர முடியவில்லை .ஒரு சில பதிவுகளையே படிக்க முடிந்தது .இன்று முதல் மீண்டும் உங்கள் வலை தளங்களுக்கு வருகிறேன். .

மன்னாரில் ரசித்தவை 

மன்னாருக்கு கல்வி அலுவலாய் சென்றதால் அனைத்து இடங்களையும் தரிசிக்க முடியவில்லை .கிடைத்த சந்தர்ப்பங்களில் நான் பார்வையிட்ட இடங்களில் என்னை கவர்ந்தவை .  


ஆசியாவிலேயே அதிக விட்டமுடைய மரங்களில் ஒன்றாக கருதப் படும் பெருக்கு மரம் (BIOBAB TREE) மன்னார் பள்ளிமுனையில் அமைந்துள்ளது .1500களில்  அராபிய கடலோடிகளால் நடப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது .

 மன்னார் புனித லூசியா தேவாலயத்தின் அழகிய தோற்றம்


மாந்தை உப்பளத்தில் எடுக்கப் பட்டது





மன்னாரில் மனிசன்களை விட இவங்கதான் அதிகம் போல .


வாழ்த்துக்கள்  நண்பா 


யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த எனது நண்பன் இரோஷன் . என்னுடைய பாடசாலை காலத்தில் இருந்து இசையோடு ஒன்றியவர் .தீவிர இசை பிரியனான அவர் இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளார் . பாடல் மிகவும் அருமையாக ரசிக்கும்படி உள்ளது .இது அவர்களின் முதல் முயற்சி .தொடர்ந்தும் இதை விட சிறப்பாக பாடல்களை கொடுக்க வாழ்த்துகிறேன்.நீங்களும் ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் .
இசை -ஜீசஸ் யுவராஜ்-jesusyuvan@yahoo.com
குரல்,வரிகள் -இரோஷன் புவிராஜ்-pviroshan@yahoo.com







Post Comment

Tuesday, September 20, 2011

சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?

ரஜினி காந்தின் வாழ்க்கை படமாக எடுக்க விருப்பதாகவும் அதிலே ரஜினி வேடத்துக்கு சல்மான் கான் நடிக்க விருப்பதாகவும் வெளியான தகவல் திரையுலக வட்டாரத்தில் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கி இருக்கிறது .தலைவர் ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாக வெளியிடப்படுவதை தாங்கள் விரும்பவில்லை எனவும் தங்களிடம் எவ்வித அனுமதியும் பெறப் படவில்லை எனவும் ரஜினியின் மகள் சௌந்தர்யா அறிவித்துள்ளார் .சல்மான்  கான் ரஜினி வேடத்தில் நடிப்பது குறித்து கேட்ட போது அவரை நெருங்கு வதற்கே  தனக்கு இன்னும் 20 வருடங்கள் தேவை என கூறியுள்ளார் .ஆக பயப்படும் படி எதுவும் இல்லை என தலைவர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

சல்மான் 
சல்மான் கான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த போடிகாட் திரைப்படம் பல சாதனைகளை முறியடித்து மாபெரும் வெற்றி ஈட்டியுள்ளது . இது உயர்ந்த முதல் நாள் வசூலை இவரின் முதல் படமான தபாங் ஐ முறியடித்து பெற்றுள்ளது , அத்துடன் ஒரு வாரத்துக்கான வசூலை 3இடியட்ஸ்  ஐ முறியடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .(விபரங்களுக்கு -bodyguard wikipedia )



சல்மான் கான் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் இவரின் திரை வரலாற்றிலும் வெற்றி தோல்வி சகயம் .2008 இல்  தொடர்ந்து மூன்று தோல்வி படங்கள் கொடுத்த நிலையில் இவரின் சக நடிகர்களான அமீர்  கான்,ஷாருக் கான் ஆகியோர் கஜினி,ஓம் சாந்தி ஓம்  மூலம் வெற்றி களிப்பில் இருக்க இவருக்கு துணை புரிந்தது போக்கிரி .வான்டட் என்ற பெயரில் பிரபுதேவாவினால் தமிழில் இருந்து ரீமேக் செய்யப் பட்டது .ஆனால் மூலக் கதை தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி ஆகும் .மூன்று மொழிகளிலும் மெஹா ஹிட்  அடித்தது .
இப்போது மீண்டும் மூன்று மொழிகளில் வெற்றி பெற்ற படமாக போடி காட்  மாறியுள்ளது .இங்கு வித்தியாசம் என்னவென்றால் மூன்று மொழிகளிலும் ஒரே இயக்குனர் சித்திக் தான் .இப்படி ரீமேக் செய்யப்பட்ட எல்லா வெற்றி  படங்களும் வெளியிட்ட எல்லா மொழிகளிலும்வெற்றி பெறும் என்பது உண்மை அல்ல . குஷி திரைப்படம் தமிழில் பெரு வெற்றி பெற்றாலும் ஹிந்தியில் படு தோல்வி அடைந்தது .கிக்-தில்லாலங்கடி இன்னொரு உதாரணம் ஆகும் இப்படி நிறைய படங்களை சொல்லிக் கொண்டு போகலாம் .

தபாங் -ஒஸ்தி 

சரி சல்மான் கான் தமிழில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்து பெரு வெற்றி பெற்று உள்ளார் .இப்போ அவரின் வெற்றி படமொன்றை தமிழில் ரீமேக் செய்கிறார் young சூப்பர் ஸ்டார் .தபாங் சல்மானின் நடிப்பில் பல சாதனைகளை முறியடித்த படம் .அதை ஒஸ்தி என்ற பெயரில் தரணியை வைத்து  ரீமேக் செய்கிறார்.இப்போது தமிழ் சினிமாவில் வெற்றி தேவை என்போரில் முன்னணியில் இருப்பது (மங்காத்தா வெற்றி பெற்று விட்டது.(அப்ப வேலாயுதம் ?)  ). இவர்தான் .அத்தனைக்கும் இவர் தோல்வியில் துவண்டதால்  இந்த வெற்றியை எதிபார்க்க வில்லை .இவருக்கும் ஜீவாவுக்கும் ஆன பனி போரே காரணம் ,இந்த கதை வெல்லாது என இவரால் ஒதுக்க பட்ட கோ பெரு வெற்றி பெற அதே நேரத்தில்  வெளி வந்த வானம் அதன் முன்னால் கவிழ அத்துடன் இவருக்கு வர வேண்டிய கௌதமின் அடுத்த படமான நீதானே என் பொன்  வசந்தம் ஜீவாவை சென்றடைய இவரின் கடுப்பு இன்னும் அதிகமாகி விட்டது .அதனுச்ச கட்டம் தான்  தனது facebook இல் ஒஸ்தி படத்தில் தான் நன்றாக  நடித்து  இருப்பதாகவும் பலருக்கு இந்த படம் பதில் சொல்லும் எனவும்  இவர் போட்ட status . (சிம்பு நீங்க தல ரசிகராமே -ஓவர் confidence உடம்புக்கு ஆகாது )
சிம்புவை பொறுத்த வரை அவரின் மாஸ் நடிப்பு இன்றுவரை எடுபடவே இல்லை .விண்ணை தாண்டி வருவாயா,வானம் போன்ற படங்கள் சிம்பு மீது நல்ல பெயரை ஏற்படுத்தி யுள்ளது .இந்நிலையில் பக்கா மாஸ் படமான ஒஸ்தி சிம்புவுக்கு கை கொடுக்குமா? (இப்போதைய மாஸ் ஹீரோ தனுஷின் மாப்பிளை, ,வேங்கை பர்ர்த்த பிறகுமா ?) 

வேட்டை மன்னன் trailor வெளி வந்த போது முக புத்தகத்தில் நான் பகிர்ந்தது .

''அப்பவே சொன்னான் வானத்தை எப்பிடியாவது ஹிட் ஆக்குங்க என்று .கேட்டால்தானே .இனி நீங்கள் இதை எல்லாம் அனுபவிக்கத்தான் வேண்டும் .''

   மம்பட்டியான்-சிம்பு 
தியாகராஜன் நடிப்பில் அனைவரையும் கவர்ந்த மம்பட்டியான் மகன் பிரசாந்த் நடிப்பில் ரீமேக் செய்யப் படுவது அனைவரும் அறிந்ததே .விரைவில் வெளிவரவிருக்கும் படத்தில் சின்னதல ஒரு பாட்டு பாடி இருக்கிறார் .சூப்பர் .மிக அருமையாய் இருக்கிறது .பாட்டும் ரீமேக் தான்.(காட்டு வழி போற )..பாட்டிலும் சின்ன தல வருகிறார் .எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது .(அப்ப உங்களுக்கு ) .பாடல் வெளியீட்டு விழாவிலும் நேரில் பாட உள்ளாராம் .வாழ்த்துக்கள் சின்ன தல .

key 1- எல்லாம் சரி அப்ப தமிழில் இருந்து தமிழில் ரீமேக் எல்லாம் ஜெயிச்சிருக்கா #தல rocks

key-2 ரீமேக் பற்றி எல்லாம் சொல்லிட்ட .ரீமேக் மன்னனை பற்றி ஒன்றுமே சொல்லலையே #தளபதி rocks

கிரிக்கெட்  
 
சரி கிரிகெட் பதிவுக்கு(தோனியால் ஏன் முடியவில்லை) . நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி .இப்போது நடை பெற்று கொண்டிருக்கும் இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளின் போது இலங்கையின் சகலதுறை வீரரும் இலங்கை அணியில் அண்மைக்காலமாக என்னை கவர்ந்தவருமான அஞ்சேலோ மத்தியுஸ் தனது கன்னி டெஸ்ட் சதத்தை பெற்றுள்ளார் .அவருக்கு வாழ்த்துக்கள்





சரி பிடித்து இருக்கா .பிடித்திருந்தால் ஓட்டு போடலாமே .

Post Comment

Friday, September 16, 2011

தோனியால் ஏன் முடியவில்லை

.சங்கா -100

குமார் சங்ககார இன்று தனது 100 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார் . இப்பெருமையை பெரும் 5வது இலங்கை வீரர் இவர் ஆவார் .முரளிதரன் ,மஹேல,வாஸ் ,சனத் ஆகியோரே ஏனையோர் .இந்த போட்டியில் வெற்றி பெற்று சங்கா வை கௌரவி ப்பது இலங்கை அணியினரின் தலையாய கடமை ஆகும் .
இரட்டை விருது  
இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் சங்ககார 2011ம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் வீரராக ஐ.சி.சி யினால் தெரிவு செய்யப் பட்டு உள்ளார் .கருதப் பட்ட  ஆகஸ்ட் 11-2010  இருந்து ஆகஸ்ட் 04-2011 வரை 25 போட்டிகளில் பங்கு பற்றி 1049 ஓட்டங்களை 55.21 எனும் ஓட்டவிகிதத்தில் பெற்றார் .இவர் இந்த விருதை வாட்சன் ,கம்பீர் ,ஆம்லா ஆகியோரின் போட்டியின் மத்தியில் வென்றுள்ளார் .

அது மட்டுமன்றி முற்று முழுதாக ரசிகர்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் ஐ.சி.சி மக்கள் தேர்வு விருதையும் பெற்றுள்ளார் . ஆம்லா,த்ரோத்ட்,காயில்,மற்றும் டோனி ஆகியோரை விட அதிகப் படியான வாக்குகளை பெற்று இந்த விருதை பெற்றுள்ளார் .

தோனியால் ஏன் முடியவில்லை 

இது குறித்து நான் ஏற்கனவே போட்ட பதிவு   சங்கா +முக்கிய VIP.  என் முன்னே உள்ள முக்கிய சந்தேகம் ஏன் டோனி இந்த விருதை பெற முடியவில்லை  என்பதே  ஆகும் .இந்திய தேசம் கிரிக்கெட்டிலேயே ஊறியது .100 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட இந்தியர்களின் ஏகோபித்த அபிமானத்தை பெற்ற ஒரு வீரர் .இந்தியாவிலேயே பிரபலங்கள் வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பவர் .சனத்தொகையில் 2  கோடியையும் தாண்டாத இலங்கை யை(அதிலும் நம்ம தமிழரில் அரைவாசிப் பேர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்பது வேறு கதை ) சேர்ந்த சங்கா இந்த விருதை பெரும் போது தோனியால் முடியாமல் போனது ஏன் .எனக்கு பெரிய வியப்பாகவே உள்ளது .வேற்று நாடுகளில் கிரிக்கெட் அவ்வளவு பிரபலம் கிடையாது .மேலைத்தேய நாடுகளில் இங்கிலாந்து சார்பாக திராட் போட்டியிட்டதால் அவர்களின் ஓட்டு சங்கா வுக்கு  பெரிதளவில் வர வாய்ப்பு இல்லை

.இந்திய அணியின் இங்கிலாந்துடனான படு தோல்வியை ஒரு காரணமாக ஏற்றுக் கொண்டாலும்  கடந்த ஆகஸ்ட் -25 வாக்களிப்பின் இறுதி திகதி ஆகும் .அப்போது இந்திய அணி அடி வாங்கினாலும் மரண அடியை வாங்கியிருக்கவில்லை  .(அடி ஒவ்வொன்றும் இடியாக விழுந்தது பிறகுதானே ).எல்லாவற்றையும் விட அவர் இந்தியாவுக்கு பெற்று தந்த உலக கிண்ணத்தை எந்தவொரு இந்தியனும் மறந்து இருக்க மாட்டான் .எனினும் விருது பெறாதது எப்படி என்று எனக்கு தெரியவில்லை .(சிறந்த எழுச்சி மிகு வீரருக்கான விருதை டோனி பெற்றுள்ளார் .).நான் கிரிக்கெட் ரசிகன் என்றாலும் கிரிக்கெட் தொடர்பாக எழுதும் முதல் பதிவு இதுதான் .வலையுலகில் கிரிக்கெட் பதிவுகளை எழுதும் பதிவர்களிடம் இதற்கான விடையை எதிர்பார்க்கிறேன்  .(லோஷன் அண்ணா. ,கிரிக்கெட் நண்பர்கள் K.s.s.ராஜ்   .   , கவியுலகம் மைந்தன் சிவா. ,பாலாவின் பக்கங்கள் பாலா இவ்வளவு பேருமே எனக்கு தெரிந்தவர்கள் )
கிரிக்கெட் தொடர்பாக விடயங்களை அலசி ஆராயும் பிரபல பதிவர் லோஷன் அண்ணா அவர்கள்  நான்  சங்கா வுக்கு ஓட்டு அளிக்கும்படி எழுதிய பதிவுக்கு இட்ட பின்னுட்டத்தை  அப்படியே தருகிறேன் .
 ''''''
சங்காவுக்கு நானும் வாக்களித்துவிட்டேன்..
ஆனால் இந்திய இணையத்தளப் பாவனையாளர்கள் அதிகம் என்கிற காரணத்தாலும், இந்திய அணியின் ஆதரவாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தோனி பக்கம் திரும்பும் என்பதாலும் தோனிக்கே கூடுதல் சாதகம் என நான் நம்புகிறேன்...

சங்காவின் கனவான் தன்மைக்கும், நல்ல மனதுக்கும் இந்த மக்கள் விருது அவருக்கே கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்...'''

வாழ்த்துக்கள் சங்கா .இலங்கை கிரிக்கெட் அணி ரசிகனாய் உங்களின் வெற்றி எமது அணிக்கு கிடைத்த வெற்றி ஆகும் .கிரிக்கெட் கண்ணியவான் என்று போற்றப்படும் உங்களின் சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள்  .உங்கள் வெற்றியில் நாமும் ஒரு அணிலாய் (ஹிஹி ஹி என்ன சிரிப்பு அங்க  ) இருந்ததை இட்டு பெருமைப்படுகிறேன்

டிராவிட் ஒருநாள் போட்டியில் ஓய்வு 




 உலகப் பெரும் சுவர் சீனாவில் அமைந்துள்ளது அனைவரும் அறிந்தது .அதை விட இந்தியர்கள் அனைவருக்கும் இந்திய பெரும் சுவரை நன்கு அறிவார்கள் .ஆம் அந்த பெரும் சுவர் இன்றுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறது . ஆம் ராகுல் டிராவிட் 15 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி அணியின் வெற்றிக்கு பெரிதும்  பங்கு ஆற்றியவர் .343 போட்டிகளில் 10820 ஓட்டங்களை 12 சதம் 82 அரைசதம் உள்ளடங்கலாக பெற்றுள்ளார்.இன்றைய அவரின் இறுதி போட்டியில் ஆவது இந்திய வெற்றி பெற்று அவரை வழியனுப்பும் என இந்திய ரசிகர் மட்டுமன்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே எதிர் பார்க்கிறார்கள்    ..டிராவிட் தொடர்பான  அனைத்து தகவல்களும் பார்க்க 
ஒரு நாளில் 5000 பக்க பார்வைகள் (page views )
 சரி  தலைப்புக்கு  வருவோம் . நான்  சற்றுமே  எதிர்  பாராத  வகையில்  நான் எழுதிய பதிவு ஒன்று ஒரு நாளில் மட்டும் 5954 பக்க பார்வைகளை பெற்றது .இன்லியில் பிரபலமாகவும் இல்லை .தமிழ் மணத்திலும் ஒன்றும் இல்லை .முழுக்க முழுக்க முக பக்கம் (facebook )தான் .690 பகிர்வுகள் .பகிர்வு செய்த அனைவருக்கும் நன்றிகள் .அந்த பகிர்வு பட்டனை எனது வலைத் தளத்தில் இணைக்க உதவிய  வந்தேமாதரம் சசி .அவர்களுக்கும் நன்றி



 
 
என்ன பதிவு பிடித்து இருக்கா பிடித்து இருந்தால் ஓட்டு போடலாமே








Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...