Friday, July 5, 2013

சிங்கம் -2 -ஒரு பய தப்ப முடியாது


சிங்கம் சூர்யாவின் படங்களிலேயே டாப் 5 படங்களில் ஒன்று ஹரியின் .விறுவிறுப்பான திரைக்கதையில் கர்ஜித்து வெற்றி நடை போட்டது .தன்னை வைத்து ஹிட் அடித்த இயக்குனர்களின் படங்களில் திரும்பவும் நடிப்பது சூர்யா பாலிசி .முருகதாஸ் கஜினி-ஏழாம் அறிவு கே.வி.ஆனந்த் அயன் மாற்றான் ஆனால் ஹரி மேற் கூறியவர்களை போல் அல்லாமல் சூர்யாவின் ஆஸ்தான இயக்குனர் வேல்,ஆறு,சிங்கம் என ஒரு படமும் தோல்வி அடைய வில்லை . இது போதும்சிங்கம் -2 மீதான எதிர்பார்ப்பு ஏவுகணை வேகத்தில் இருப்பதற்கு கண்டம் விட்டு கண்டம் பாய ஹரியால் ஏவப்பட்ட ஏவுகணை குறிக்கோளை அடைந்ததா இல்லையா எனும் ஆவல் காரணமாக வாழ்க்கையிலேயே முதல் தடவையாக vip ஷோ பார்க்க போயிருந்தேன் .

சிங்கம் -2 கதை என்று ஒன்றை உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை அதற்கான காரணத்தையும் சொல்லுவதாய் இல்லை .ஆன்லைன் என்னவெனில் நேரம் படத்தில் வருவது போல இரண்டு சப் வில்லன் ,ஒரு மெயின் வில்லன் சர்வதேச குற்றவாளிகளான இந்த வில்லன்களை இந்தியன் போலீஸ் எப்படி சாமர்த்தியமாக பிடிக்கிறார் என்பதுதான் .




ஹரி 

எனக்கு   படத்துக்கு போக முன்னரே பெரிய டௌவுட்டு அனுஷ்கா இருக்கும் போது ஹன்சிகா ஏன் படத்தில ? ,அது சரி போலீஸ் படம்தானே எதாவது வம்பில அனுஷ்கா சாக ஹன்சிகா ஹீரோயின் ஆவா என்று எந்த பாமர தமிழ்மகனும் ஊகிக்க கூடிய ட்விஸ்ட் வைக்க  திரைக்கதையில் எந்த ஓட்டைகளுமின்றி காட்சிகளை அமைத்து சாதனை படைக்கும்' ஹரி என்ன கேன பயலா ?
படத்தின் மிகப்பெரிய turning பாயிண்ட் ஆன ஹரி வைத்த ட்விஸ்ட் ஐ இங்கே சொன்னால் படத்தின் சுவாரசியம் குறைந்து விடும் என்பதால் தியேட்டரில் காண்க .

ஹரி படத்தின் வழமையான டாட்டா சுமோக்கள்,அரிவா,வெள்ளை வேஷ்டி சட்டை யை formality க்கு use பண்ணி இருந்தாலும்,இது இன்டர்நேஷனல் படம் என்பதால் ஏரோ பிளேன் கப்பல் ,போட் நவீன ரக கார் என அடி பின்னுகிறார் படம் ரெண்டே முக்கால் மணி நேர படமாக இருந்தாலும்,எந்த இடத்திலும் பார்வையாளர்களை தூங்க வைக்கமால் இருப்பதில் சூர்யாவுக்கு அடுத்த பங்கை படத்தின் செகண்ட் ஹீரோவான சிவப்பு நிற போலீஸ் ஜீப் செய்கிறது .









படத்தில் ஒரு இலங்கை வில்லனும் வருகிறார்.ஆம்,ஒரு சிங்கள வில்லனை அழைத்து சிங்கத்தை போட்டுத்தள்ளும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள் வில்லன் க்ரூப்.ஆனால் இறுதியில் தாங்களே அவனை போட்டுத்தள்ளி யிருந்தார்கள்.இந்த இடத்தில் ஹரியை பாராட் டியே தீர வேண்டும் முருகதாஸ் ஏழாம் அறிவு என்று ஒரு படத்தை எடுத்து விட்டு இதை பார்க்காதவன் தமிழனே இல்லை எனும் அளவுக்கு மீடியா முழுதும் விளம்பரம் செய்ய வேண்டி இருந்தது .ஆனால் ஹரியின் ஸ்வீட்  அண்ட் சிம்பிள்ஆன 3 நிமிட காட்சி மூலம் புலம் பெயர் இருக்கும் நாடுகளில் அமோக ஆதரவை பெறுகிறார் ஹரி .ஹன்சிகா தனது  காதலை சொல்லும் போது  சூர்யா மறுத்து இருக்கலாமே தான் வேறு ஒருவரை லவ் பண்ணுவதை     சொல்லி இருக்கலாமே ,ஹன்சிகாவை வைத்து இழுத்தடித்து இருக்கிறார்கள் என்று  பக்கத்தில் இருந்து படம் பார்த்த பன்னாடை சொல்லி இருந்தது .அந்த ஹன்சிகாவை பயன்படுத்திதான் சூர்யா வில்லன் கூட்டத்தை பிடிக்க போகிறார் என்ற ட்விஸ்ட் ஹரியால் மட்டுமே முடியுமான ஒன்று . 


சூர்யா 

ஹாரி தான் இப்படி என்றால்,இயக்குனரின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் குரல் கொடுத்திருக்கிறார் சூர்யா.சூர்யாவின் குரல் பிரமாதம்.தமிழ் சினிமா வரலாற்றிலேயே தியேட்டரில் படம் ஓடும் போது ஒரு பய தூங்க முடியாது என்ற மகத்தான சாதனையை சிங்கம் -2 படைத்து இருக்கிறது .எங்கேயாவது ஒரு பாடல் காட்சிக்கு தூங்குவோம் என முடிவெடுப்பவர் களையும் தனது இனிமையான குரல் வளத்தால் எழுப்பி விடுகிறார் சூர்யா .அதுவும் இனிமையான ஆங்கிலத்தில் வில்லனுடன் சூர்யா பேசும் காட்சிகளுக்கு உருகாதவர்கள் எவருமே இருக்க முடியாது
  



 என் பார்வையில் பிளஸ்  மைனஸ் 
சூர்யா போலீஸ் யூனி போம் க்கு  மாறும் காட்சி ,கல்யாண வீட்டில் இரவு வரும் வில்லன்களை  எதிர் கொள்ளும் காட்சி ,கிளைமாக்ஸ் இல் சிங்கம் முன்னால்  ஓட பின்னால்  இரண்டு ஜீப் உறுமி கொண்டு சிங்கத்தோடு ஓட வில்லன் பார்த்து மிரளும் காட்சி ,சந்தானத்தின் அநேக காட்சிகள்  அதிலும் எந்திரன் ஒபெநிங் ,விஸ்வரூபம் மாஸ் ,அனுஷ்காவுடன் சிங்கம் பாட்டு என  பல காட்சிகள் என்னை கவர்ந்து இருந்தன .
.விவேக் படத்தில் நடிக்காமலே விட்டு இருக்கலாம் ஏனெனில் அந்த கரெக்ட்டர் காமெடி பண்ற கரெட்டர் இல்ல .மெயின் ஆபிரிக்க வில்லன் மிரட்டி இருக்கிறார் ஆனாலும் ஹீரோவுக்கு போட்டியாக தானும் ஆங்கிலத்தில் கத்துவது சகிக்க முடிய வில்லை ,மேலதிகாரியாய் இருக்கும் விஜயகுமார் சூர்யா சொல்லுவதை எல்லாம் ஏன் எதுக்கு என்று யோசிக்காமல்  செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவரோ என்று தெரிகிறது .படம்  முழுவதும் சண்டை படம்   முடிந்து வரும் போது  மண்டைக்குள்ளே  டாட்டா சுமோ ஓடுவது போல் தோன்ற செய்வதில் வெற்றி பெற்று ஹரி   இருக்கிறார் ஹரி .மனோரமா வை  வேஸ்ட் பண்ணி   இருக்காங்க .

 dsp  பாடல்களில் படு சொதப்பல் அதுவும்  பாடல்கள்  தேவை   இல்லாமல்  விறு விறுப்பை  குறைக்கின்றது .பாடல் காட்சிகளில் சூர்யா விஜயை பின்பற்றி நடனம் ஆடுவது வரவேற்க தக்கது .அனுஷ்கா வுடனானா பாடல் காட்சிகளை கச்சிதமாக எடுத்த பட குழுவுக்கு வாழ்த்துக்கள் 
ஹன்சிகா அசிங்கமாக இருக்கிறார் பள்ளி சீருடையில் அனுஷ்கா சில இடங்களில் அழகாக தெரிகிறார் .அனுஷ்கா ஹன்சிகா இடையே நடக்கும் ஒரு உரையாடல் பார்க்க சகிக்க முடியாத வசனங்கள் மூலம் கேவலப் படுத்தி இருக்கிறார்கள் .



கொமேர்சியல் படங்களுக்கு ஹீரோ வுக்கு சமனான முக்கியத்துவம் வில்லனுக்கு கொடுப்பதிலேயே படம் interesting ஆகுகிறது .பாட்சா ,கில்லி  ஏன் சிங்கம்  கூட இதே போர்முலா தான் சிங்கத்தில் 'மயில் வாகனம் கோட்டடா 'என்று பிரகாஸ் ராஜ் கம்பீரமாய் கர்ஜிப்பது  எல்லாம் இங்கே மிஸ்ஸிங் .வில்லனின் body  language நல்லா இருந்தாலும் மற்றைய இரு வில்லன்களும் சுத்த போர் காமெடி பீஸ் போல இருக்கிறார்கள் .வில்லனை அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் அடைத்து விட்டு வில்லன் தப்பிப்பான் என்று தெரிஞ்சும் செல் திறப்பை கொண்டு செல்லும் காட்சி படு மொக்கை தனம் . சிங்கத்தின் கிளைமாக்ஸ் ஏ படு மொக்கை யா இருக்கும் .இது ஒரு படி மேலே .கடைசியில் கப்பல் காட்சி கலாய் படும்.ஆதவன் கிளைமாக்ஸ் மன்னிக்கப்படும் 

final டச் 
சூர்யா -சிறந்த நடிகர் புதுப்புது  தன்னை வருத்தி புதுப் புது கெ ட் அப் போட்டு மக்கள்  மனதை கவர்ந்தவர் விஜய் குருவி யாய் பறப்பதையும் சுறா வாய்  நீந்துவதையும் கண்டு பயந்த மக்களின் அனேகமாக பெண்களின் அபிமான நாயகனாக திகழ்ந்தவர் .இப்போது விஜய் தனது பாதையை மாற்றி இருக்கையில் சூர்யா அந்த இடத்தை கைப்பற்றி facebook  போராளிகளின் செல்லப் பிள்ளையாய் மாறி இருக்கிறார் .இனி இன்னும் confirm .


  பக் அப் காட்சியில் திரும்பவும் காட்டுறாங்க இந்த சீன் 


படத்தை  பற்றி சொல்லணும் னா போட்டிக்கு படங்கள் இல்லாததால் பாய்ந்து ஓடும் .மசாலா பட ரசிகனான எனக்கு படம் பிடிச்சு இருக்கு உங்களுக்கு ?

Post Comment

Friday, October 5, 2012

மாற்றான்-ஒரு அலசல்



 தமிழ் சினிமாவில்  இந்த வருடத்தின்  மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ள படங்களில் ஒன்று .எதிர்வரும் 12 ம்  திகதி வெளிவர உள்ளது .இந்த மாற்றான் பற்றிய ஒரு அலசலே இந்த பதிவு .

மாற்றான் 
சூர்யா ,காஜல் , ,Sachin Khedekar(தெய்வ திருமகள் படத்தில் அமலாபாலின் தந்தை யாக நடித்தவர் )மற்றும் பலர் நடிப்பில் வெளிவர இருக்கும் மாற்றான் படத்தை கே.வி .ஆனந்த் இயக்குகிறார் .ஒளிப்பதிவு s .சௌந்தர் ராஜன் ,இசை ஹரிஸ் ஜெயராஜ் .கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இப்படத்தை a g s என்டேர்டைமென்ட்  விநியோகிக்கிறது .தெலுங்கிலும் brothers  என்ற பெயரில் இதே நாளில் வெளியாகும் இப்படம் சூர்யாவின் இதுவரை வெளிவந்த படங்களின் மிகப்பெரும் வெளியீடாக அமையவுள்ளது .

கே.வி .ஆனந்த் 

 புகைப்பட ஊடகவியாலராக  (photo journalist ) தனது வாழ்வை ஆரம்பித்த கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமிடம் உதவியாளாராய்  இணைந்ததன் மூலம் சினி உலகில் அடி எடுத்து வைத்தார் .தேவர்மகன் ,அமரன் போன்ற சில படங்களுக்கு  ஒளிப்பதிவு உதவி யாளராய் பணி யாற்றிய பின் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படத்திலேயே(மலையாளம் ) சிறந்த ஒளி ப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கி தனது திறமையை நிரூபித்தார் .சிவாஜி,முதல்வன்,நேருக்குநேர் போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராய்  பணியாற்றிய இவர்  இயக்கிய முதல் படம் கனா கண்டேன் .பெரிய வெற்றியை பெற வில்லை ஆயினும் விமர்சகர்களின் பாராட்டை பெற்றது .அடுத்து இயக்கிய படங்கள் அயன் ,கோ .மூன்று படங்களிலேயே முன்னணி இயக்குனர் ஆகி விட்டார் .இதிலிருந்து இவரின் படங்களின் மவுசை அறியலாம் .

படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுப்பதுதான் இவரின் ஸ்பெஷல் .மசாலா படமான அயன் வெளியான 2009 ம்  ஆண்டின் அதிக வசூலை பெற்ற படமாக திகழ்கிறது .சன் பிக்சர்சின் சளைக்காத விளம்பரமும் ஒரு காரணம் என்றாலும் இவர்தான் பிரதான காரணம் .தமிழ் சினிமாவில் தடுமாறி வந்த ஜீவாவை தனக்கென ஒரு இடத்தில் அமர்த்திய பெருமையும் இவருக்கே .சூர்யாவுடன் மீண்டும் கை கோர்த்து இருக்கும் இவரின் மாற்றானுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுவது தவிக்க முடியாததே

மாற்றான் படத்தின் கதை ஒட்டிப்பிறந்த இரட்டையரின் கதை .ஒருவன் நல்லவன் மற்றவன் கெட்டவன் .தமிழ் சினிமாவுக்கு புதுமையான கதை என சொல்ல முடியாத நிலையை அண்மையில் வெளிவந்த சாருலதா ஏற்படுத்தி விட்டது .எனினும் இரணது படமும் வெவ்வேறு திசையில் பயணிப்பதால் அலட்டிக் கொள்ள தேவை இல்லை .trailor பிரமிப்பு ஊட்டியிருந்தது .எனினும் அண்மைக்  காலங்களில் படங்களின் trailor ,first லுக் வந்தவுடனேயே இது இன்ன படத்தின் காபி என இணையத்தில் கலாய்ப்பது வாடிக்கை ஆகி விட்டது .சில உண்மையாய் இருந்தாலும் பல பொய்யான தகவல்களே .அந்த வகையில் இது stuck on you எனும் ஹாலிவுட் படத்தின்  தழுவல் என ஒரு கூட்டம் .எதிர்பார்க்கிறது எனினும் படம் அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடி  ஆக்கும் என்பதே எனது கணிப்பு .


சூர்யா 

சூர்யாவுக்கு ,விஜய் அஜித் அளவுக்கு ரசிகர்கள் கிடையாது .எனினும் இயக்குனர் தெரிவில் அவர்கள் காட்டிய அசமந்தமும் சூரியாவின் மிக சிறந்த இயக்குனர் தெரிவும் சில ஆண்டுகள் மக்கள் மனதில் அவரை முன்னணியில் வைத்து இருந்தது .இப்போது விஜய் ,அஜித் உம்  இதே வழியை பின்பற்ற ஆரம்பித்து உள்ளதால் முன்னணியை தக்க வைக்க முடியாமல் போய் விட்டது .சூர்யா கொஞ்ச காலம் தொடர் ஹிட் கொடுத்து வந்த போது  மக்கள் அவரின் படங்களை ரசித்தனர் ,எனினும் வழமையாய் இருந்த ரசிகர்கூட்டத்தை பெரியளவில் அதிகரிக்க முடிய வில்லை .அப்படி அதிகரித்த  கூட்டத்தில் பெரும்பாலனவர்கள் அயன் படம் மூலம்தான் என்பதை அடித்து கூற முடியும் .சூர்யாவை வசூல் நாயகர்களில் ஒருவராக மாற்றிய படமும் அயன் தான் .
 .விஜய் ,அஜித் இன் அண்மைக்கால வெற்றிகளும் ஏழாம் அறிவின் சறுக்கலும் சூர்யாவை சற்று பின் தள்ளி விட்டன .ஏழாம்  அறிவு சூர்யாவின் படங்களிலேயே அதி கூடிய வசூலை பெற்றிருந்தாலும் எதிர் மறை விமர்சனங்களும் மக்களின் கருத்துக்களும் உதயநிதியின் அதீத பில்ட் அப்பும் சூர்யாவின் மீது கரும் புள்ளி ஒன்றை ஏற்படுத்தி விட்டன .அத்துடன் பொது  உலகில் அண்மைக்காலமாக சூர்யாவின் போக்கும் வெறுக்கத் தூண்டும் விதமாக உள்ளது .இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதிலடி மாற்றான் வெற்றி தான் .சூர்யா மிக சிறந்த பதிலடியை கொடுப்பார் என நம்புகிறேன் .

ஹரிஸ்

ஹரிஸ் சூர்யா கூடணியை பற்றி விபரமாக ஏற்கனவே சொல்லி விட்டேன் ..எனவே ஹரிசின் அண்மைய நிலையை பார்ப்போம் .பாட்டுக்கள் பெரும்பாலானவை காபி  என பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஹரிசின் பாடல்கள் மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன .இந்த வருடத்தின் டாப் ஆல்பம் ஆக இவரின் நண்பன் திகழ்கிறது .ஓகே ஓகே யும் சோடை போக இல்லை .ஆனால் மாற்றான் அந்த ரேஞ்சுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .சூர்யாவுடன் ஆன எல்லா படங்களின்  பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் கடைசி இரு படங்களில் ஓரளவு சொதப்பி இருக்கிறார் ஹரிஸ் .சில வேலை நிறைய படங்கள் பண்ணிவிட்ட சலிப்போ என்னவோ .பாடல் வெளியாகி ஓரளவு காலம்ஆகி விட்டதால் படம் வரும் போது பாடல்கள் ஹிட் அடிக்க சந்தர்ப்பங்களும் உள்ளனஏனெனில் எல்லாம் அயன் தந்த எதிர்பார்ப்பு .அயனின் டைட்டில் சாங் மியூசிக் ஐ யாரும் மறந்து இருக்க மாட்டிர்கள் .

காஜல் 

தெலுங்கில் மகாதீரா ,பிசினஸ் மன் போன்ற படங்கள் மூலம் முன்னணி இடத்தை பெற்று விட்டாலும் தமிழில் இதுதான் இவருக்கு பெரிய படம் .பழனி  ,மோதி விளையாடு ,நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு படம் மட்டும் தான் வெற்றி பெற்று இருந்தது .எனவே தமிழில் மாற்றான் இவரை முன்னணி நடிகையாக மாற்றும் என நம்புவோம் .தொடர்ந்து துப்பாக்கியிலும் கலக்க இருப்பதால் தற்போது .எழுந்துள்ள சமந்தா அலையை அடக்க சந்தர்ப்பங்கள் உள்ளன .


கே.வி ஆனந்த் சூப்பர் கில்லாடி தந்து படங்களிலேயே தணந்து முன்னைய படங்களை கலாய்த்து காட்சிகள் அமைத்து இருப்பார் .மாற்றானிலும் கோ படத்தை கலாய்த்து ஒரு காட்சி trailor  இல் வெளியாகி இருந்தது .மாற்றானில் இரு சூர்யாவில் அகிலன் அஜித் fan விமலன் விஜய் fan ஆம் .



ஆமா ஒருவன் கெட்டவன் ஒருவன் நல்லவன் அப்போ யாரு நல்லவன் யாரு கெட்டவன்  சொல்லுங்க பார்ப்போம் .......ஹா ஹா

மாற்றான் வெற்றி பெற படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் 

Post Comment

Thursday, October 4, 2012

சிவாஜி -the legend







சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...



சத்ரபதி சிவாஜி வேடத்தில

் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!


மனைவியுடன் 

1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!

கவியரசு கண்ணதாசனுடன்  

வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!


தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!


ஜெமினி யுடன் 

தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!


சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
பாக்யராஜ் திருமணம் 

விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!

'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!


சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!






பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

- மானா பாஸ்கரன்
நன்றி -சினிமா விகடன் 



Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...