தமிழ் சினிமாவில் வந்த ரீமேக் படங்களை அலசுவதே இந்த பதிவின் நோக்கம் .இது ஒரு தொடர் பதிவு இதன் முதல் பாகத்தை படிக்க
2007 பொங்கலுக்கு வெளிவந்த போக்கிரி இன்று வரை மாஸ் படங்களுக்கு முன் உதாரணமான படங்களில் ஒன்றாக திகழ்கிறது .ரஜினிக்கு ஒரு பாட்சா போல அஜித்துக்கு ஒரு தீனா போல விக்ரமுக்கு ஒரு சாமி போல விஜய்க்கு போக்கிரி .பிரபுதேவா தனது முதல் தெலுங்கு படமான பௌர்ணமி தோல்விக்கு பின் விஜயால் இப்படத்தை இயக்க தேர்ந்தர்டுக்கப்பட்டார் .அசின்,பிரகாஸ்ராஜ் ,வடிவேலு ,நாசர் இணைந்து நடித்தனர் . போலீஸ் வேடத்தில் நடித்த முதல் படம் இதுவாகும் .போட்டிக்கு வெளியான ஆழ்வார்,தாமிரபரணி படங்களை தோற்கடித்துபிளாக் பஸ்ட்டர் ஆனது .200 வது நாள் விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டார் .விஜய் வெறியர்களுக்கு பிடித்த விஜய் படங்களில் முதல் இடத்தில் இன்றுவரை இதுதான் இருக்கிறது என்பது என் கருத்து .
போக்கிரி இதே பெயரில்2006 தெலுங்கில் வெளியான பூரி ஜெகநாத் இயக்கிய படத்தின் ரீமேக் ஆகும் .மகேஷ் பாபு நடித்த இப்படத்தில் இலியானா பிரகாஸ் ராஜ்,நாசர் இணைந்து நடித்தனர் .தெலுங்கில் பிளாக் பஸ்ட்டர் ஆகி பல விருதுகளையும் வென்றது .இரு படங்களுக்கும் மணி சர்மா இசை அமைத்திருந்தார் . போக்கிரியில் வரும் 'டோலு டோலு ' பாடல் தெலுங்கு பாடலின் தமிழ் பதிப்பு ஆகும் .http://www.youtube.com/watch?v=SQxeC8LMx24
தமிழில் மெஹா ஹிட் ஆகியதால் ஹிந்தியிலும் போக்கிரியை WANTED என்ற பெயரில் சல்மான் கானை வைத்து படமாக்கி அங்கேயும் பெரு வெற்றி பெற்றார் பிரபுதேவா . தோல்வியில் துவண்டு கொண்டிருந்த சல்மானை தூக்கி நிறுத்தி யதுடன் வசூலில் சாதனை புரிந்தது .இப்படம் 2010 இல் கன்னடத்திலும் (PORKI )ரீமேக் செய்யப்பட்டது .நான்கு மொழியிலும் பிரகாஷ் ராஜ் ஒரே பாத்திரத்தை செய்து இருந்தார் .
வில்லு .
அட இதுவும் ரீமேக் படமா என்று நீங்கள் கேட்கலாம் .இதை ரீமேக் பட்டியலில் சேர்க்க முடியாது .எனினும் கிட்ட தட்ட ரீமேக் தான் .1999 இல் வெளியான பாலிவுட் படமான SOLDIER படத்தின் தழுவல் தான் வில்லு ..வில்லு தோல்வி அடைந்தது .
சுறா மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் ஒன்றின் ரீமேக் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் படத்தின் ஆன்லைன் கதை மட்டுமே எடுக்கப் பட்டது .
காவலன்
2010 இல் வெளிவந்தது .தொடர் தோல்வி ,போராட்டங்களுக்கு பின் வெளிவந்து விஜய்க்கு மீட்சியை கொடுத்தது இந்த படம் .மீண்டும் சித்திக் .பிரண்ட்ஸ் போலவே மலையாளத்தில் தான் இயக்கிய போடி காட் படத்தை தமிழில் ரீமேக் செய்தார் .அசின் ,வடிவேலு ,ராஜ்கிரண் இணைந்து நடித்த வித்யாசாகர் இசையில்இப்படம் ஹிட் ஆகியது .அதைவிட சாதகமான விமர்சனங்களை படத்துக்கும் விஜய்க்கும் பெற்று கொடுத்தது .சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச பட விழாவில் கலந்து கொண்டமை படத்தின் சிறப்பம்சம் ஆகும் .
2010 இல் மலையாளத்தில் வெளிவந்த போடி காட் BODYGUARD .திலீப்,நயன்தார நடித்த இப்படம் மலையாளத்தில் சுமாராகவே போனது.
ஹிந்தியிலும் இதை போடி காட் என்ற பெயரில் சல்மான் கான் கரீனா கபூரை வைத்து ரீமேக் செய்து வெற்றி பெற்றார் சித்திக் .அதை விட தெலுங்கில் வெங்கடேஷ் த்ரிஷா நடிப்பிலும் கன்னடம் ,பெங்காலி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப் பட்டது .
வேலாயுதம் .
இதுவும் உத்தியோகபூர்வமான ரீமேக் அல்ல .2000 இல் தெலுங்கில் வெளியான ஆசாத் பட ரீமேக் என்று கூறப் பட்டாலும் இயக்குனர் ராஜா அதை மறுத்துள்ளார் .அந்த கதையை வைத்து தான் திரைக்கதை எழுதியதாக அறிவித்தார் .எனவே வேலாயுதம் ரீமேக் அல்ல .நான் ஆசாத் படத்தையும் பார்த்து விட்டேன் .எனக்கு என்னமோ ரீமேக் போலதான் தெரியுது.உங்களுக்கு?
நண்பன்.
நண்பன் இப்போது வந்ததால் எதுவும் பெரிதாக சொல்ல தேவை இல்லை .ஷங்கர் இயக்கத்தில் விஜய்,ஜீவா ,ஸ்ரீகாந்த்மற்றும் பலர் நடித்த இப்படம் பிளாக் பஸ்ட்டர் ஆகியுள்ளது .அனைவராலும் பாராட்டப்பட்டது . இது2010இல் ஹிந்தியில் வெளிவந்த 3IDIOTS படத்தின் ரீமேக் ஆகும் .
3 IDIOTS வெளியாகி பல சாதனைகளை முறியடித்து வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது .ராஜ்கிமார் ஹிரானி இயக்கிய இப்படம்2004 இல் வெளியா ன Five Point Someone – What not to do at IIT! by CHEATAN Bhagat என்ற நூலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது .அமீர் கான்,மாதவன் ,சர்மான் ஜோஷி முதலியோர் நடித்து இருந்தனர் .
சரி விஜய் நடித்த பெரும்பாலான ரீமேக் படங்களையும் அலசி விட்டோம் இன்னும் சில உண்டு. இதுவரை நடித்த படம் 53.அதிலே ரீமேக் 13(வேலாயுதம் சேர்த்து,வில்லு ,சுறா சேர்க்க வில்லை).இவற்றில் யூத்,வசீகரா ,ஆதி ஆகிய மூன்று படங்கள் மட்டும் தோல்வி அடைந்துள்ளன .எனவே ரீமேக் படங்கள் விஜய்க்கு பெருமளவில் உதவின என்று சொல்லலாம் .கில்லி,போக்கிரி,நண்பன் ஆகிய மூன்றும் விஜயின் காரியரில் சிறந்த படங்களில் முதன்மையான இடத்தை பெற்று விட்டன .சித்திக் இரு படங்களை வெற்றிகரமாக ரீமேக் செய்து இருந்தார் .செல்வா பாரதியும் இரு படங்களை ரீமேக் செய்த போதும் ஒன்று மட்டுமே வென்றது .
இதை விட விஜயை சினிமாவில் நிலை நிறுத்திய படம் ஒன்றும் ரீமேக் தான் அது எது .?
இதை விட விஜயை சினிமாவில் நிலை நிறுத்திய படம் ஒன்றும் ரீமேக் தான் அது எது .?
ஓகே அப்போ விஜய்தான் ரீமேக் சூப்பர் ஸ்டார் என்ற முடிவுக்கு வரலாமா ?.அப்படி என்றால் மற்ற நடிகர்கள் எவரும் ரீமேக் படங்களில் நடிக்க வில்லையா ? .......................
தொடரும்.........