தமிழ் சினிமாவில் இப்போதைய கால கட்டத்தில் படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் இயக்குனரின் பங்கு ஒரு படி உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.எந்த பெரிய நடிகராய் இருந்தாலும் படம் வெற்றி பெற படத்தில் சரக்கு இருக்க வேண்டும் .நடிகரை நம்பி படம் ஓடிய காலம் மலையேறி விட்டது. சிறிது காலத்தின் முன் நடிகர்,இயக்குனர் வாங்கும் சம்பளத்துக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. ஆனால் இப்போதைய இயக்குனர் வாங்கும் சம்பளமே அவர்களின் பெறுமதி உயர்ந்து விட்டதை காட்டி நிற்கிறது
அந்தவகையில் தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி என் மனதில் விழைந்த போது அவர்களை பற்றி அலசிப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த ஆக்கம்.
மணிரத்னம் (பிறப்பு ஜூன்-௦2-1956)

மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்
- 1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
- 1984 - உணரு (மலையாளம்)
- 1985 - இதய கோவில்
- 1985 - பகல் நிலவு
- 1986 - மௌன ராகம்
- 1987 - நாயகன்
- 1988 - அக்னி நட்சத்திரம்
- 1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)
- 1990 - அஞ்சலி
- 1991 - தளபதி
- 1992 - ரோஜா
- 1993 - திருடா திருடா
- 1995 - பம்பாய்
- 1997 - இருவர்
- 1998 - தில் சே (ஹிந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
- 2000 - அலைபாயுதே
- 2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
- 2004 - யுவா (ஹிந்தி)
- 2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் ஹிந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.
- 2007 - குரு (ஹிந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
- 2010 - ராவணன்(ஹிந்தி)- ராவண் என்ற பெயரில் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது
என்னமோ தெரியவில்லை இவர் இயக்கிய ஆரம்ப காலப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றதுடன் இப்போதைய படங்களில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளன.இவரின் படங்கள் பாமர மக்களுக்கு புரிவதில்லை என்ற குறையும் காணப்படுகிறது .ஆய்த எழுத்து நல்ல உதாரணமாகும் .இவர் இப்போது தனது படத்தை பல மொழிகளில் எடுக்கும் உத்தியை கையாண்டு வருகிறார்.இவர் கடைசியாய் எடுத்த ஐந்து படங்களில் நான்கு தோல்வியை தழுவிய நிலையில்{குரு மட்டுமே வெற்றி ) பொன்னியின் செல்வன் எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுக்கவிருந்தார் .எனினும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு விட்டது .அடுத்த படம் எது என உறுதியாக தெரியாத நிலையில் அவரின் அடுத்த பட அறிவுப்புக்காக ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்தாலும் இவரின் மவுசு கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
இந்த பதிவில் மணிரத்னத்தை பற்றி மட்டும் சொல்லியதால் சிறந்த இயக்குனர் மணி சார்தான் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள் தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குனர்கள் பலர் இருப்பதால் அனைவரையும் ஒரே பதிவில் கொண்டு வர முடியவில்லை .எனவே அடுத்தடுத்த பதிவுகளில் ஏனைய இயக்குனர்பற்றி எழுதுகிறேன் .
who is the best director of tamil cinema என்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள்
முக்கிய குறிப்பு
நான் பொழுதுபோக்கிற்காக மட்டும் எழுதும் சாதாரண சினிமா ரசிகன் .எனது பதிவில் பிழைகள் இருக்கலாம். தயவு செய்து குறைகளை ஏற்று பிழைகளை சுட்டிக்காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் .
நீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை# facebook .
..
நீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை# facebook .
..
8 comments:
No 1 Copy and Paste Director is Manirathnam
you think who is the best tamil director manasaali?
bala. now i sugget thiagarajan kumararaja.
bala ok. but not sure. பாலாவின் சிஷ்யர்களே கலக்குகிறார்களே.
what u think about thiagarajan kumararaja?
மற்ற நாட்டினரையும் தமிழ் சினிமா பக்கம் ஈர்க்கப்பட வைத்த பெரும் பங்கு...மணிரத்னம் சாரையும் சேரும்
நீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை...
super
நன்றி மாய உலகம் sir.
Post a Comment