ரீமேக் என்றால் என்ன? .ஒரு மொழியில் ஏற்கனவே வெளி வந்த படத்தை உரிய அனுமதி பெற்று இன்னொரு மொழியில் (சில வேலை அதே மொழியில் )படமாக்குதல் .ரீமேக் படங்கள் உருவாவதன் நோக்கம் சொல்லி தெரிய வேண்டியதில்லை .ஏற்கனவே வென்ற படம் என்பதால் வெற்றி வாய்ப்பு ஐம்பது வீதத்துக்கு மேல் ஏலவே உறுதி செய்யப் படுகிறது .எனவே ரீமேக் படங்கள் சினி உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன .
தமிழ் சினிமாவில் வந்த ரீமேக் படங்களை அலசுவதே இந்த பதிவின் நோக்கம் .தமிழ் சினிமாவின் தற்போதைய கால கட்டத்தில் ரீமேக் என்றாலே நினைவுக்கு வருபவர் இருவர் .ஒன்று ராஜா .மற்றது அடுத்த சூப்பர் ஸ்டார் நாளைய சூப்பர் ஸ்டார் என்பவற்றுடன் ரீமேக் சூப்பர் ஸ்டார் எனவும் அழைக்கப் படும் விஜய் .இந்த பட்டத்துக்கு இவர் பொருத்தமானவரா ? என்பதை முதலில் ஆராய விழைகையில் கிடைக்கப் பெற்ற தகவலகள் இதோ ......விஜய் நடித்த சகல ரீமேக் படங்களும் இவைதான்
பிரியமானவளே
எனக்கு தெரிந்து விஜய் முதன் முதலில் நடித்த ரீமேக் படம் பிரியமானவளே .2000 ம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்தது .ஆனால் அதற்கு முன்னரே ரீமேக் படங்களில் நடித்து இருக்கிறார் . சிம்ரன்,s.p.பாலசுப்ரமணியம்,விவேக் ஆகியோர் இணைந்து நடிக்க ராஜ்குமார் இசையில் செல்வபாரதி இயக்கி இருந்தார் .இது ஒரு வெற்றி படமாக அமைந்தது .இது 1996 இல் வெளி வந்த பவித்திர பந்தம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும் .வெங்கடேஷ் ,சௌந்தர்யா ஆகியோர் நடிக்க Muthyala Subbaiah இயக்கியிருந்தார் .s.p .பாலசுப்ரமணியம் இதிலும் அதே வேடத்தில் நடித்து இருப்பார். .1999 இல் Hum Aapke Dil Mein Rehte ஹைன் என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப் பட்டது.இங்கு அணில் கபூர் ,கஜோல் நடித்தனர். என்ன புதுமை என்றால் மூன்று படங்களிலும் ஹீரோவின் பெயர் விஜய்.
பிரண்ட்ஸ்.
2001 இல் வெளிவந்த இப்படம் சூர்யா,ரமேஷ்கண்ணா ,தேவயாணி,விஜயலக்ஸ்மி ஆகியோர் இணைந்து நடித்தனர் .சித்திக் இயக்கிய இப்படத்துக்கு இசை இளையராஜா .பொங்கலுக்கு வெளியான இப்படம் விஜயின் காரியரில் ஒரு சூப்பர் ஹிட் ஆக அமைந்தது .
இது 1999 இல் மலையாளத்தில் அதே பெயரில் வெளிவந்த சித்திக் இயக்கிய படத்தின் ரீமேக் ஆகும் .ஜெயராம்,முகேஷ்,மீனா ஆகியோரின் நடிப்பில் இளையராஜா இசை அமைத்து இருந்தார்.
பத்ரி .
2001 இல் வெளியான இப்படத்தில் பூமிகா,மோனல்,விவேக் ஆகியோர் இணைந்து நடித்தனர் . P. A. அருண் பிரசாத் இயக்கிய இப்படம் அவரால்1999 இல் தெலுங்கில் இயக்கப் பட்ட தம்முடு (தம்பி) படத்தின் ரீமேக் ஆகும் .தெலுங்கில் பெரு வெற்றி அடைந்த இப்படம் அதில் ஹீரோவாய் நடித்த பவன் கல்யானுக்குக்கு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி இருந்தது .இரு மொழிகளிலும் இசை ரமணா கோகுலா .எனினும் தமிழில் பெரியளவில்வெற்றியை பெற முடிய வில்லை .இப்படம் கன்னடத்திலும் பூரி ஜெகநாத் ஆல் யுவராஜா எனும் பெயரில் ரீமேக் செய்யப் பட்டது .
யூத்.
வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2002 இல் வெளியானது ஷகீன் கான் ,விவேக் இணைந்து நடித்தனர் .மணி சர்மா இசையில் வெளியான இந்த படம் சாதகமான விமர்சனங்களை பெற்ற போதும்தோல்வியை தழுவியது . 2000 ம் ஆண்டு ராம் பிரசாத் இயக்கத்தில் மணி சர்மா இசையில் வேணுதொட்டேம்புடி ,ஷாகீன் நடிப்பில் வெளியான வெற்றி படம் சிறு நவ்வுடோ படத்தின் ரீமேக் தான் யூத் .
வசீகரா .
2003 பொங்கலுக்கு வெளிவந்த படம் செல்வபாரதி இயக்கினார் .சினேகா வடிவேலு இணைந்து நடிக்க ராஜ்குமார் இசை அமைத்து இருந்தார் .விஜயின் நடிப்பு நன்றாக இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்காததால் தோல்வி அடைந்தது .இது 2001இல் வெளியான நுவ்வ நாக்கு நசாவ் தெலுங்கு வெற்றி படத்தின் ரீமேக் ஆகும் .விஜயபாஸ்கர் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்த இப்படம் கன்னடத்திலும் உபேந்திரா நடிப்பில் Gowramma எனும் பெயரில் ரீமேக் செய்யப் பட்டது .
கில்லி
2004 புது வருடத்துக்கு வெளியான கில்லி விஜயின் அதுவரை வெளிவந்த சகல விஜய் படங்களில் வசூலையும் முறியடித்து பெரு வெற்றி பெற்றது .தரணியின் இயக்கத்தில் வித்தியாசாகரின் இசையில் வெளிவந்த இப்படம் அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றது .கமர்சியல் சினிமாவின் உச்ச படங்களில் ஒன்றாக இது மிளிர்கிறது..6 கோடி பட்ஜெட் இல் தயாரிக்கப் பட்ட இப்படம் 250 நாட்களுக்கு மேலாக ஓடி40 கோடிகளுக்கு மேல் வசூலித்தது .அதுவரை சாதனையாக இருந்த படையப்பா படத்தின் வசூலை முறியடித்தது .http://www.indiaglitz.com/channels/tamil/article/9966.html .இந்த படம் விஜய் ரசிகர் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரித்தது .குறிப்பாக இப்படத்தில் காமெடியிலும் புகுந்து கபடி ஆடி பல பெண்கள் சிறுவர்களால் ரசிக்க பட்டார் .அப்படி போடு பாடல் தமிழ் சினிமா பாடல்களில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றது . என்னை பொறுத்த வரை விஜயின் சினிமா வரலாற்றில் இதை விஞ்சும் வகையில் இதுவரை ஒரு படமும் இல்லை.

இந்த கில்லி 2003 இல் தெலுங்கில் வெளிவந்த ஒக்கடு படத்தின் ரீமேக் ஆகும் .குணசேகர் இயக்கிய இப்படம் மகேஸ்பாபு பூமிகா சாவ்லா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி 30 கோடி வசூலித்து பிளாக் பஸ்ட்டர் ஆனது .பிரகாஷ்ராஜ் இரு படங்களிலும் நடித்து இருந்தார் .மணி ஷர்மா இசையில் இப்படம் மகேஷ் பாபுவுக்கு ஒரு மைல் கல் .இந்த படத்தை நான் இதுவரை பார்க்க வில்லை எனவே எது சிறந்தது என்று என்னால் கூற முடியாது . இப்படம் ஒரியா விலும்Mate Anidela Lakhye Phaguna.எனும் பெயரில் ரீமேக் செய்யப் பட்டது குறிப்பிட தக்கது
ஆதி,
ரமணா இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சோபா சந்திரசேகர் தயாரிப்பில் 2006 பொங்கலுக்கு ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷாமுக்கிய வேடத்தில் நடிக்க விவேக், பிரகாஷ்ராஜ் சாய் குமார் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு வித்யாசாகர்இசையமைத்துள்ளார். பழிவாங்கும் கதையை கொண்ட இப் படம் சுமாரான வசூலை பெற்றாலும் தோல்வி படமாகவே அமைந்து விட்டது .இதனுடன் போட்டிக்கு வெளியான பரமசிவன் வெற்றி பெற வில்லை ஆயினும் ஆதியை விட சுமாரான வசூலை பெற்றது .
ஆதி தெலுங்கில் பெரு வெற்றி பெற்ற அதனொக்கடே படத்தின் ரீமேக் ஆகும் .2005 இல் சுரேந்தர் ரெட்டியால் இயக்கப் பட்ட இந்த படம் கல்யான் ராம்,சிந்து துலானி ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது இசை மணிசர்மா .
இதன் ஹிந்தி பதிப்பு இன்டர்நேஷனல் டான் .
#########################################################################
இந்த ரீமேக் படங்கள் பற்றிய பதிவு தொடரும் .விஜய் மட்டும் தான் ரீமேக் படங்களில் நடிக்கிறாரா ஏனையவர்கள் எவ்வாறு என்று ஆராய்ந்த போது அதிர்ச்சி ஏற்பட்டது .தமிழ் சினிமாவின் ரீமேக் படங்கள் பெரும்பாலும் ஆராயப் படும் அடுத்து வரும் பதிவுகளில் .......
10 comments:
அட ... வெறும் தெலுங்கு படமா இருக்கே. அடுத்த துப்பாக்கிய சரி ஹாலிவுட்ல இருந்து சுடுவாரா?
wait and see
//அடுத்த சூப்பர் ஸ்டார் நாளைய சூப்பர் ஸ்டார் என்பவற்றுடன் ரீமேக் சூப்பர் ஸ்டார் எனவும் அழைக்கப் படும் விஜய்
இப்படி எல்லாம் யாருங்க அழைக்கிறாங்க?
அப்புறம் உங்க லிஸ்டில் கொஞ்ச படங்களை விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், ஷாஜகான், போக்கிரி, வில்லு, காவலன், வேலாயுதம், நண்பன்.
யாரு பட்டம் கொடுத்தாங்களோ அவங்கதான் . இது தொடர் பதிவு தொடரும் .இவையும் இடம்பெறும்
//யாரு பட்டம் கொடுத்தாங்களோ அவங்கதான் .
அந்த பத்து பேர் கொண்ட குழுதான ... ஏன் கொஞ்ச நாளா பத்து பேர்ல அத்தனை பெரும் சைலன்ட் ஆகிட்டாங்க? , (நீங்கதான் அப்பப்ப நாங்களும் இருக்கோம்னு கூவிட்டு போறீங்க ... )
என்ன பிரச்சினை உங்களுக்கு நான் சொன்னது விஜய் டிவி யை .சம்பந்தம் இல்லாமல் எதொயோ உளறுகிறீர்கள் .யாரவது நல்ல மருத்துவரை அணுகவும்
//என்ன பிரச்சினை உங்களுக்கு நான் சொன்னது விஜய் டிவி யை .சம்பந்தம் இல்லாமல் எதொயோ உளறுகிறீர்கள் .யாரவது நல்ல மருத்துவரை அணுகவும்
அவனுங்க சொன்னதை பெரியதாக எடுத்துக்கொண்டு நேரம் செலவு செய்து எழுதியுள்ளீர்களா? விஜய் டிவி தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகனின் பிரதிநிதி என்று நம்பும் நீங்கள்தான் பாஸ் நல்ல மனநிலை மருத்துவரை அணுக வேண்டும்....
சொல்வதை தெளிவாக சொல்லிவிட்டால் யாருக்குமே குழப்பம் வராது. தேவை இல்லாம ராஜா மேலே ஏன் கடுப்பாகுறீங்க?
இப்போ சொல்லுங்க, ரீமேக் ராஜான்னும் விஜய்டிவிதான் சொல்லிச்சா? உங்க வரிகளின் படி அப்படித்தானே அர்த்தம் வருகிறது?
ராஜா"
விஜய் டிவி இல்ல நீங்கதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகனின் பிரதிநிதி.ஆளவிடுங்க சாமி விஷயம் தெரியாம கதைச்சு புட்டன்
//விஜய் டிவி இல்ல நீங்கதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகனின் பிரதிநிதி.
நான் அப்படி சொல்லவில்லையே ,
//ஆளவிடுங்க சாமி விஷயம் தெரியாம கதைச்சு புட்டன்
இப்படியெல்லாம் சொன்னா விட்டுடிவோமா? கண்டிப்பாக மீண்டும் வருவோம்ல...
Post a Comment