விஜய் டிவி யினால் வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் vijay awards இந்த வருடம் எதிர்வரும் 16 ம் திகதி நடைபெற உள்ளது .வழமை போல ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் favourite awards வழங்கப்பட உள்ளது . இந்த பட்டியலில் உள்ள தெரிவுகளை பார்த்து நீங்கள் நகைக்க தேவை இல்லை .இங்கு தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தமிழ் சினிமாவின் அதிக ரசிகர் பட்டாளத்தை தம்மகத்தே கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களை பிணைந்தே உள்ளன .இதன் முக்கிய நோக்கம் சிறந்த படைப்புக்களை தெரிவு செய்யும் போது பிரபல நடிகர்கள் இடம்பெறாமையால் நிகழ்ச்சி வரவேற்பை பெறாது .எனவே யாரவது ஒரு பிரபல நடிகரை நிகழ்ச்சிக்கு வரவழைப்பதே இந்த FAVOURITE AWARDS வழங்கப்படுவதன் நோக்கம் .
சரி இம்முறை பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை பார்ப்போம் .
FAVOURITE HERO
அஜித் -மங்காத்தா
தனுஷ் - ஆடுகளம்
சூர்யா -ஏழாம் அறிவு
விஜய்- வேலாயுதம்
விக்ரம் -தெய்வ திருமகள்
2010 இல் வேட்டைக்காரன் படத்துக்காக விஜய் பெற்றார் ,2011 இல் ரஜினிகாந்த் எந்திரன் படத்துக்காக பெற்றார் .இந்த வருடம் அஜீத் ,விஜய் இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு அதிகம் .2010 இல் அசல் ,வேட்டைக்காரன் படங்களுக்காக இருவரும் மோதிய போதும் இரு படங்களை விட அயன் நல்ல படமாக இருந்தாலும் ரசிகர் ஆதரவு காரணமாக விஜய் வெற்றி பெற்றார் .2011 இல் தலைவர் படம் காரணமாக இவர்களால் ஜொலிக்க முடிய வில்லை .இந்த வருடம் மங்காத்தா படம் வேலாயுதம் ஏழாம் அறிவை விட அநேகரால் ரசிக்கப் பட்டது .எனினும் விஜயின் ரசிகர் பட்டாளத்தை உடைப்பாரா அஜித் .ஏனெனில் இது இணையத்தில் மட்டும் நடைபெறும் வாக்களிப்பு இல்லை.தமிழ்நாடு முழுவதும் சேகரிக்கப் படும் ஓட்டு .
favourite heroine
அசின் -காவலன்
அனுஷ்கா -தெய்வ திருமகள்
ஹன்சிகா -எங்கேயும் காதல்
டாப்சி -ஆடுகளம்
த்ரிஷா -மங்காத்தா
இந்த பிரிவில் விஜய் ரசிகர் அசினுக்கும் அஜித் ரசிகர் திரிசாவுக்கும் வாக்களிக்க ஏனையோரின் தெரிவு யாராக இருக்கிறதோ அதன் அடிப்படையில் அசின் ,த்ரிஷா இருவரில் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு உண்டு
favourite movie
மங்காத்தா
வேலாயுதம்
ஏழாம் அறிவு
சிறுத்தை
கோ
இங்கும் விஜய் .அஜித் ரசிகர் மோதல் பலமாக இருக்கும் 2010 இல் இருவரும் மோத அயன் வெற்றியை பறித்தது .அதற்கு காரணம் அந்த வருடம் அயன் அனைவருக்கும் பிடித்த படமாக இருந்தது .ஆனால் இம்முறை மங்காத்தா அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கிறது .எனவே விஜய் ரசிகர்களை விட மற்றயோரின் வாக்குகள் மங்காத்தா வுக்கு செல்லும் என்பதால் மங்காத்தா வின் வெற்றி வாய்ப்பு அதிகம் .அதையும் மீறி வேலாயுதம் வெற்றி பெற்றால் விஜய் ரசிகர்கள்=>ஏனையோர் என்ற முடிவுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை .ஏழாம் அறிவு அயனை போல் அனைவரையும் கவரவில்லை .அதைவிட கூட வந்த படங்கள் அசலோ வேட்டைகாரனோ இல்லை .சூர்யாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமும் இல்லை ,SO .......மற்றைய படங்கள் சும்மா ஐந்து படங்கள் போட வேண்டும் என்பதற்காக சேர்க்க பட்டவை
favourite director
A R .முருகதாஸ் -ஏழாம் அறிவு
K .V .ஆனந்த் -கோ
செல்வராகவன் - மயக்கம் என்ன
வெங்கட்பிரபு -மங்காத்தா
வெற்றிமாறன் -ஆடுகளம்
இதன் முடிவை இலகுவாக கூறி விடலாம் .ஏனெனில் ராஜா இந்த லிஸ்ட் இல் இல்லை .எனவே வெங்கட்பிரபு வின் வெற்றி உறுதி செய்யப் பட்டுள்ளது .மங்காத்தா படம் விஜய் ரசிகர்களையும் கவர முக்கிய காரணம் வெங்கட் பிரபு .
favourite song
என்னமோ ஏதோ -கோ
காதல் என் காதல் -மயக்கம் என்ன
கலசலா -ஒஸ்தி
ஒத்த சொல்லாலா -ஆடுகளம்
விளையாடு மங்காத்தா -மங்காத்தா
இங்கு முடிவை கூறுவது சற்று சிரமமானது .விஜய் இன் பட பாடல் எதுவும் இல்லாத நிலையில் மங்காத்தா பாடல் வெற்றி பெற சந்தர்ப்பம் இருந்தாலும் அதையும் தாண்டி என்னமோ எதோ பாடல் அஜித் ரசிகர்களை கவர்ந்து இருந்தால் அந்த பாடல் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது .ஏனெனில் அநேக விஜய் ரசிகரின் ஓட்டு மங்காத்தா பாடலுக்கு போகாது என்ற எடுகோள் தான் .
சரி இவன் ஏதோ தான்தான் முடிவை தீர்மானிக்கிற மாதிரி ஏதோ சொல்லுறான் என்று என்னை திட்டுவதை விட்டு விட்டு இந்த லிங்கில் சென்று உங்கள் ஓட்டுக்களை அளியுங்கள்
3 comments:
ஓட்டு போடமுடியவில்லை. ஏதோ எரர் மெசேஜ் ஒண்ணு வருது. பிறகு ட்ரை பண்றேன்.
நம் ஓட்டு இது தான் -
அஜித் - மங்காத்தா
அசின் - காவலன்
மங்காத்தா
வெங்கட்பிரபு -மங்காத்தா
என்னமோ ஏதோ - கோ
thanks for ur comment sir
//ஏனெனில் இது இணையத்தில் மட்டும் நடைபெறும் வாக்களிப்பு இல்லை.தமிழ்நாடு முழுவதும் சேகரிக்கப் படும் ஓட்டு .
வாங்க பாஸ் என்னமோ இணையத்தில் மட்டுமே அஜீத் ரசிகர்கள் இருக்கிறார்கள் தமிழகம்முழுவதும் விஜய் ரசிகர்கள்தான் அதிகம் என்பது போல எழுதியிருக்கிறீர்களே...
கொஞ்ச நாளைக்கு முன்னாடி இணையத்திலேயும் நாங்கதான் கிங்குனு சொல்லிக்கிட்டு இருந்தீங்க அடி மேல அடி வாங்கி இப்பதான் உண்மை உரைத்திருக்கு ,இணையத்துக்கு வெளியிலேயும் அஜீத்தான் மாஸ் என்பதை இன்னும் கொஞ்சகாலத்தில் உங்களுக்கு புரிந்து விடும்...
//ஏனெனில் ராஜா இந்த லிஸ்ட் இல் இல்லை
இருங்க கொஞ்சம் (ஆசன) வாயால சிரிச்சிட்டு வாரேன் . கிர்ர்ர்ர்ர்ர்கர்ர்ர்ர்..
இது போன்ற அவார்ட்ஸ் எல்லாம் உங்களையும் உங்களை போன்ற சினிமா விரும்பிகளையும் ஏமாற்றும் வேலை என்பதை உங்களுக்கு பக்குவம் வரும் பொது புரிந்து கொள்வீர்கள்...
Post a Comment