Wednesday, August 22, 2012

மசாலா கபே -சுவாரசிய தகவல்கள்

தமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் .மூன்றாம்பிறை,நாயகன்,இந்தியன் ஆகிய படங்களுக்காக பெற்று கொண்டார் ,நடிகர் திலகம் என போற்றப்படும் சிவாஜிகணேசன் தேவர்மகன் படத்துக்காக SPECIAL JURY AWARDபெற்று கொண்டார்.
#####################################################
தலீவா யூ  ஆர்  கிரேட்  
ஒரு நடிகன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் ? – விகடன் பேட்டியின் போது கவுண்டமணியிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.

இதற்கு கவுண்டமணி அளித்த பதில் என்ன தெரியுமா - "தன்னை பற்றின நிஜ ரூபத்தை பொத்தி பொத்தி மூடனும். பெட்டிகடையில பீடியை கூட கட்டு கட்டாஉள்ளேதான் வச்சுருப்பான்.அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளிய வச்சு கொட்டி பரத்தி வியாபாரம் பண்ணி பாருங்க.....பீடி விக்காது.

நானும் அப்படித்தான். விழாக்கள், பேட்டிகள்-ன்னு எதுக்கும் ஒத்துக்க மாட்டேன்.கலை நிகழ்ச்சி அப்படிங்கிற பேர்ல சிங்கப்பூர் துபாய் போறதில்ல. ரசிகர் மன்றங்களை எல்லாம்கூட கலைச்சுட்டேன். என் பிறந்தநாள் என்னைக்குன்னே மறந்து போச்சு. முக்கியமா டிவி.க்குபேட்டி கொடுக்கிறதில்லை. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு. அப்பத்தான் கிக் !!!!

###########################################################
அனிருத் 

கொலைவெறி பாடல் மூலம் தனுசை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றவர் அனிருத் . உறவினரான இவர் அண்மையில் அன்ரியா வுடனான முத்த காட்சி மூலம் பேசப்பட்டார் .தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தின் போது அனிருத் 


##############################################################
சந்தானம் 
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் தற்போது NO 1 ஆக இருப்பவர் சந்தானம் .இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றி படங்களில் நடித்தார்.தற்போது இவருக்கு 32 வயது .ராக்கம்மா எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார் .சந்தானம் தனது குழந்தையுடன் காணப்படும் அரிய புகைப்படம் இது 
###############################################################
SS Rajamouli-
வெற்றிப்பட இயக்குனர் . Vikramarkudu(original of சிறுத்தை ),மகாதீரா ,நான் ஈ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை உருவாக்கியவர் இவரின் முதல் படம் student no 1 தமிழில் அதே பேரில் ரீமேக் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.wiki யில் இவ
ரை பற்றி ''He is one of the most successful directors of Telugu Film Industry with 100% success rate''. இவ்வாறு குறிப்பிட பட்டுள்ளது இவர் தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும் ..


########################################################
விஜய் அன்டனி 
சுக்ரன் ,வேட்டைக்காரன் ,வேலாயுதம் என பட்டைய கிளப்பிய இசை அமைப்பாளர் விஜய் அன்டனி முதன் முதலாய் நடித்திருக்கும் 'நான் 'படம் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது .அவர் இசை அமைக்கும் 25 வது படம் இது என்பது குறிப்பிட தக்கது வாழ்த்துக்கள் விஜய் சார் # இந்த வருஷம் விஜய் வருஷம் போல
############################################################
RACE -
அண்மையில்தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது .அருமையான படத்தை இவ்வளவு நாளாய் மிஸ் பண்ணி விட்டேன் .10 நிமிடத்துக்கு ஒரு முறை ஊகிக்க முடியாத திருப்பங்களுடன் விறு விறுப்பான திரைக்கதை .நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி # விஷ்ணுவர்தனின் அடுத்த படம் இதன் ரீமேக் தான் என்று ஒரு கதை அடிபடுகிறது .அது உண்மையானால் அஜித் ஆர்யா கூட்டணியில் கண்டிப்பாக இந்த படம் பிய்த்து உதறும்
#############################################################
உலகின் தற்போதைய முதல்தர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான குமார் சங்க காராவின் குடும்பம் 

Post Comment

Saturday, July 14, 2012

" பில்லா -2 ஏன் பார்க்க வேண்டும்

படம் பார்த்த அனுபவம் 
படத்திற்கு விமர்சனம் எழுத விரும்பவில்லை .ஆனால் இதுவரை திரையரங்கில் இப்படி ஒரு அனுபவத்தை பெற வில்லை .முதன் முறையாக சுவர் ஓரம் இருக்கும் படிகட்டில் இருந்து படம் பார்த்தேன் .திரை அரங்குக்கு உள்ளே இதுவரை எந்த படத்துக்கும் இப்படி சனத்தை பார்த்ததில்லை .தியேட்டரின் கொள்ளளவை விட அளவுக்கு அதிகமாக ஆட்களை அனுமதித்ததால் சுவர் ஓரம் நிரம்பி வழிந்ததுடன் பலர் நின்ற நிலையிலும் படம் பார்த்தார்கள் .வியர்வையினால் குளித்து விட்டோம் பல்கனி -300உம் odc 250 உம் வாங்கும் இவர்கள் ஓரளவுக்கு டிக்கெட் களை அளவாக கொடுத்து இருக்கலாம்.(சிவகாசி,வேட்டை காரன் படங்களுக்கு இதே திரை அரங்கில் முதல் காட்சி டிக்கட் கிடைக்காமல் திரும்பி இருக்கிறேன் ).#வழமையாக நடப்பதுதான் ஆனால் இது தியேட்டர் நிர்வாகிகளின் ஆசை இல்லை பசி-





நேற்று படம் பார்த்து விட்டு நான் facebook இல் பகிர்ந்தவை 
billa-2 படத்தில மொத்தம் 89 கொலை ஹீரோ மட்டும் 78 பண்ணிடுறார் # hats off Senthil Kumar sir உங்களால மட்டும் எப்புடி முடியுது




தல படத்தில உங்க நடிப்பும் நடையும் வழக்கம் போல சூப்பர் இந்த முறை உங்க வசனங்களும் சூப்பர் தல .''என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா''இந்த வசனத்தை நீங்க மூணாவது வாட்டி சொல்லும் போது (climax)எனக்கு ஏனோ வேட்டைக்காரன் கொலைமாக்ஸ் இல விஜய் பேசுற வசனங்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது தல


தமிழ் சினிமா பிரபலங்களை பொறுத்த வரை சினிமா தவிர்த்து தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த முதல் மனிதர் அஜித் .எந்தவித பின்புலமும் இன்றி அவரின் வாழ்க்கை அவரே செதுக்கியதுதான் அப்படி நிறைய பேர் வந்து இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு பிடித்தது அவரின் கொள்கைகள் ,போராட்ட குணம் , அசாத்திய தைரியம் ,பல ஆப்றேசன்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு பல இன்னல்களுக்கிடையில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளமை இன்னும் பல காரணங்கள் ஆனால் அதற்காக பெரிய சினிமா பின்புலத்தை கொண்டவர்கள் எல்லோரும் பிரபலமாக முடியும் என்றால்சினிமாவில் பிரபலமானவர்கள் தொகை முடிவிலிக்கு சென்று இருக்கும் . தந்தை இயக்குனர் என்றால் ஒரு அனுகூலம்தான் ஆனால் அவர் ஒரு ஊக்கியாக மட்டுமே செயற்பட முடியும் ஊக்கி தாக்கத்தில் பங்கு கொள்ளது என chemistryil படித்த ஞாபகம்எனவே திறமை இல்லாமல் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது .விஜய் ,சூர்யா ,கார்த்தி ,ஜீவா போன்றவர்கள் அஜித் அளவுக்கு கஷ்டங்களை எதிர்நோக்க வில்லை ஆயினும் தனியே தகப்பனின் செல்வாக்கால் நிலைத்து இருக்க முடியாது என்பதைநீங்கள் ஒத்து (நேற்றும் திருமலை படம் பார்த்தேன் )கொண்டுதான் ஆக வேண்டும் .# கடுப்பு+ வெறுப்பு ஏற்றும் நண்பர்களுக்காக
நண்பனின் வரிகள் 
Iroshan Puviraj தகப்பனின் செல்வாக்கு என்பது 10% தான்..
மிச்ச 40% அதிஷ்டம் 50% உழைப்பு இருக்கணும்...
தகப்பனின் செல்வாக்குன்னா ஜித்தன் ரமேஷ்,பாரதிராஜாவின் மகன் மனோஜ்,பாக்யரஜ் மகன் சாந்தனு,ஏன் இப்ப கடுமையா உழைக்கும் அருண்விஜய் இன்னும் தகுந்த இடத்தை பெறவில்லை........
சினிமாவில் அதிஷ்டமும் உழைப்பும் இருக்கணும் இருந்தா தான் ஜெயிக்கலாம்...
அந்த வகைல விஜய்,சூரியா,கார்த்தி போன்றோர் உச்சத்தில் இருக்க காரணம் உழைப்பும் அதிஷ்டமுமே!!!!!!!!!



படத்தில் பிடித்த விடயங்களில் முக்கியமானது வசனங்கள் .அதிலே என்னை மிகவும் கவர்ந்த வசனங்கள் இவை .
மத்தவங்களோட பலவீனம் நம்ம பலம்.. மத்தவங்களோட பயம் நம்ம பலம்..
பார்ட்டியை முன்னே பின்னே பார்த்ததில்லையே நீ, எப்படி கண்டு பிடிப்பே?
நல்லவங்களை கண்டுபுடிக்கிறது  தான் கஷ்டம்
லேட்டா போனா பொறுப்பில்லைன்னு சொல்லிடுவாங்க,முன்னாலயே போனா வேற வேலை இல்லைபோலன்னு எளப்பமா நினைப்பாங்க.. அதனால சொன்ன டைம்க்கு ஷார்ப்பாபோகனும்.. அப்போதான் நம்ம மேல ஒரு நம்பிக்கை வரும்..
உக்காந்து வேலை வாங்குறவனுக்கும்  உயிரை கொடுத்து வேலை செய்யிறவனுக்கும் 
வித்தியாசம் இருக்கு !

 பிச்சைக்காரனா இருந்தாலும் சரி,கூலிக்காரனா இருந்தாலும் சரி , Business Man'ah
இருந்தாலும் சரி உழைப்பு தான் அவனை உயர்த்தும், உழைக்கனும்


facebook இல் என்னை கவர்ந்த ஒரு status 
ஈழத்தமிழருக்காக நடிகர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஒரு கூட்டத்தில "சினிமா Industryய தயவு செய்து சினிமா Industryயா இருக்க விடுங்க" என்று அஜித் கூறிய நாளிலிருந்து நான் அஜித்தை ஒரு தமிழின துரோகியாக தான் பார்க்கிறேன்....!!!! இப்போது பில்லா படத்தில் அவர் பேசி இருக்கும் ஒரு பஞ்ச் "போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்... போராடிக்கிட்டு இருக்கிறவன் தோத்திட்டா அவன் தீவிரவாதி... ஜெயிச்சிட்டா அவன் போராளி".... ஒவ்வொருவருக்கும் இது பல கோணத்தில் புரிந்தாலும் எனக்கு இது ஒரே கோணத்தில் தான் புரிகிறது...! சிறு வயதில் அடிக்கடி நம் காதுக்கு எட்டிய ஒன்று மட்டும் தான் ஜாபகம் வருகிறது " உதவி செய்யாட்டியும் பரவால... உவத்திரம் செய்யாம இருங்கடா



படத்தை பற்றி அதிகம் இணையத்தில் உலவும் விமர்சனம் இதுதான் யார் எழுதினாரோ தெரியவில்லை ஆனால் உண்மையை பிரதிபலித்து இருக்கிறார் 
படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!

Post Comment

Friday, June 29, 2012

எந்திரனின் வசூலை முறியடித்த சகுனி

ஒரு படத்துக்கான ஒபெநிங் என்பது சில விசயங்களில் தங்கியுள்ளது .முக்கியமாக படத்துக்கான எதிர்பார்ப்பு .எதிர்பார்ப்பு எனும் போது முதலில் கவனிப்பது யார் படத்தை இயக்குவது .ஆ அந்த இயக்குனரா அப்படி என்றால் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதுவார்கள் .படத்தின் மைய கதை படம் வருவதற்கு முன்னரே ஓரளவு சொல்லி விடுவார்கள் அதுவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் .படத்தின் trailor இன்னொரு முக்கிய காரணி .-2-2.45 மணி நேர படத்தின் சாரம்சத்தை 2 நிமிடத்தில் காட்டுவார்கள் .நிச்சயமாக படத்தின் maximam நல்ல சீன் களைத் தொகுப்பதால் பெரும்பாலும் அனைத்து படங்களின் trailor உம நன்றாக இருப்பது போல தோன்றும் .அதுவும் ரசிகர்களை கவரும் திட்டம் தான் .இவற்றை விட இசை,பாடல்கள்,காமெடி ,ஹீரோயின் என்பனவும் ஒபெநிங் ஐ தீர்மானிக்கின்றன .இவற்றை எல்லாம் தாண்டிய முக்கிய காரணி யார் ஹீரோ .படத்தை பற்றி எந்தவித அலட்டலும் இல்லாமல் இது இவரின் படமா கட்டாயம் first ஷோ போக வேண்டும் என்று முடிவு எடுப்பார்கள் ரசிகர்கள் .சில வருடங்களுக்கு முன்னர் இது மட்டுமே ஒபெநிங் ஐ தீர்மானிக்கின்ற காரணியாக இருந்தது .ஆனால் இப்போது ரசிகர்கள் புத்தி கொஞ்சம் அதிகரித்ததால் இதற்கான மவுசு கொஞ்சம் குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் .எனினும் ஒரு படத்தின் ஒபெநிங் ஐ வைத்து அந்த பட ஹீரோவைகிங் ஒப் ஒபெநிங் என்று அழைக்கும் கலாச்சாரம் இன்னும் மாறவில்லை .
ரஜினிரசிகர்கள் கிங் ஒப் ஒபெநிங் ரஜினி என்பார்கள் கமல் ,விஜய்,அஜித் ரசிகர்களும் இவ்வாறே .கொஞ்ச காலத்துக்கு முன்னாடிதான் இணைந்தாரு சூர்யா .இப்ப இவரையும் ஒரு கூட்டம் கிங் ஒப் ஒபெநிங் என்று அழைக்குது .உண்மையில் யார் தான் கிங் ஒப் ஒபெநிங் இதை பற்றி ஆராய வரவில்லை ஒபெநிங் பற்றி சகல விடயங்களையும் அலசி அண்ணன் ஜீவதர்சன் ஒரு பதிவு எழுதி உள்ளார் விரும்பினால் அதை படியுங்கள் .
ஓப்பினிங்(Opening) .


சகுனி சாதனை 
வசூல் நிலைவரங்களை வெளிவிடும் ஊடகங்களில் உள்ளத்தில் நம்பகத் தன்மை வாய்ந்தது behindwoods .5 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு வாரமும் சென்னை boxoffice collection விபரத்தை வெளியிட்டு வருகிறார்கள் .அவர்களின் புள்ளிவிபரப் படி தான் அண்மையில் தமிழ் சினி உலகில் புது புரட்சி நடந்துள்ளது .எந்திரனின் ஒபெநிங் வசூலை சகுனி முறியடித்துள்ளது .


''
சிவாஜி வரும்வரை சந்திரமுகியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வரும்வரை சிவாஜியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியும் எந்திரனின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் நெருங்கவில்லை, ''


சில மாதங்களுக்கு முன்னர் ஜீவா அண்ணாஅலசி எழுதிய பதிவில் இடம்பெற்ற வரிகள் இவை .எனவே தமிழ் சினிமாவின் மிகப் பெரும் தலை களால் இரண்டு வருடங்களாக முறியடிக்கப் படாமல் இருந்த சாதனையை நம்ம new south indian box office king முறியடித்து இருக்கிறார் என்கின்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் .


எந்திரன் ,சகுனி 3 நாள் வசூலை பார்த்தால் 246 காட்சிகள் குறைவாக ஓடி இருக்கு .அதைவிட எந்திரன் 99% அரங்கு நிரம்பிய காட்சிகள் .ஆனால் சகுநியோ 90% அரங்கு நிரம்பிய காட்சி .எப்படி சாத்தியம் என்று பார்த்தால் 2 வருட வித்தியாசம் என்பது மட்டும் தான் காரணம் .டிக்கெட் விலை அதிகரிப்பு .இங்கு என்னுடைய வியப்பு என்னவெனில் சகுனி வரும்வரை மற்றைய படங்களால் எவ்வாறு எவ்வாறு முறியடிக்காமல் போனது .சரி அண்மைய காலங்களில் வெளிவந்த பெரிய படங்களை பார்ப்போம் .

சகுனி

No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 648
Average Theatre Occupancy over this weekend : 90 %
Collection over this weekend in Chennai: Rs. 22,719,252

Verdict: Good Opening

okok
ஏப்ரல் 13-15
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 522 
Average Theatre Occupancy over this weekend : 90 %
Collection over this weekend in Chennai: Rs. 1,73,32,944 


3
No. Days Completed : 3
No. Shows in Chennai over this weekend : 549 
Average Theatre Occupancy over this weekend : 90 % 

Collection over this weekend in Chennai: Rs. 13,137,309 -

நண்பன் 
No. Days Completed: 4
No. Shows in Chennai over this weekend576
Average Theatre Occupancy over this weekend: 95%
Collection over this weekend in Chennai: Rs. 13,768,806

ராஜபாட்டை -0.96c -3 நாட்கள்


ஒஸ்தி 
No. Days Completed4
No. Shows in Chennai over this weekend612
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 1,33,22,304
Verdict: Good Opening


வேலாயுதம் 
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend492
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore

ஏழாம் அறிவு -
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553
Total collections in Chennai: Rs. 2.20 Crore2.20c  -5 நாட்கள்


மங்காத்தா
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend774
Average Theatre Occupancy over this weekend: 95%
Collection over this weekend in Chennai: Rs. 1,79,35,278



இவற்றில் மங்காத்தா அதிகப்படியாக 774 காட்சிகள்  காண்பிக்கப்பட்டு 95% அரங்கு நிறைந்த காட்சிகளோடு 1.8 கோடியை 5 நாட்களில் பெற சகுனியோ 126 காட்சிகள் குறைவாக காண்பிக்கப் பட்டும் 3 நாட்களில் 2.2 கோடியை அள்ளிஇருக்கிறது .இரு படங்களும் அண்ணளவாக ஒரு வருட இடைவெளியில் வந்தவை என்பதை தவிர இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேறு காரணம் தெரிய வில்லை .
இங்கு பொதுவாக தெரிவது என்னவெனில் அதிக ஒபெநிங் பெற வேண்டும் என்றால் அதிக தியேட்டர் கிடைக்க வேண்டும் அதற்கு சோலோ வாக படம் ரிலீஸ் பண்ண வேண்டும் .அது தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கையிலேயே தங்கி இருக்கிறது 
ஏழாம் அறிவு ,வேலாயுதம் ஒரே நேரத்தில் வெளிவந்தமையால் காட்சிகள் 600 ஐ தாண்ட முடியவில்லை எனவே எந்திரன் வசூல் உடைப்பது கடினமாகி விட்டது .நண்பனும் வேட்டை படத்துடன் வந்ததால் 576 காட்சிகளே திரையிட முடிந்ததால் இயல வில்லை .ஆனால் மங்காத்தா ,ஒஸ்தி ,3,okok  தனித்து சோலோ வாக வெளிவந்தவை .இவற்றில் மங்காத்தா தவிர ஏனையவை சகுனியை விட குறைவான அளவில் வெளியிடப் பட்டவை .
ஆக மங்காத்தா படத்துக்கு சந்தர்ப்பம் இருந்தும் தவறியுள்ளது .ஆனால் மங்காத்தா வுடன் ஒப்பிடும் போது சகுனி அதிக ஒபெநிங் ஐ பெற்றமைக்கான காரணம் டிக்கெட் விலை அதிகரிப்பாக மட்டுமே இருக்க முடியும் .

3,okok  ஆகியவை 15 நாள் இடைவெளியில் வந்தவை .27 காட்சிகள் குறைவு என்ற போதும் 42 லட்சங்களை okok  அதிகம் பெற்றமைக்கான காரணத்தை (occupancy same  90%) யாரவது சினிமா வல்லுனர்களிடம் எதிர்பார்க்கிறேன் .ஏனெனில் 15 நாட்களில் டிக்கெட் கட்டணம் இவ்வளவு வித்தியாசப்படுமா ?
ஆனால் okok  பெற்ற வசூலுடன் ஒப்பிடும் பொது சகுனியின் வசூல் ஏற்றுக் கொள்ளக் கூடியதே .
இந்த முடிவுகளில் இருந்து நாம் உய்த்தறிவது என்னவெனில்அடுத்து வெளிவர இருக்கும் பெரிய படமான பில்லா-2 சோலோ ஆக ரிலீஸ் ஆவதால் கண்டிப்பாக 650 ஐ விட அதிக காட்சிகள் காண்பிக்கப்படும் .occupancy உம 90% ஐ விட குறைய வாய்ப்பில்லை என்பதால் கண்டிப்பாக சகுனியை விட கூடுதல் ஒபெநிங் வசூல் வர வேண்டும் .

நம்பகத்தன்மையில் சந்தேகம் 
behindwoods  பல வருடங்களாக அனைத்து சினிமா ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ள பட்ட விபரங்களை தந்து வந்தது .ஆனால் அண்மைக் காலத்தில் சந்தேகங்கள் வலுப் பெற்று வருகின்றன .சென்னையை பொறுத்த வரை எந்திரன் அதிகப் படியாக 17 கோடிகள் வசூலித்தது .தசாவதாரம்,ஏழாம் அறிவு என்பன 9 கோடி தாண்டிய படங்கள் .மங்காத்தா ,வேலாயுதம் 8 கோடி தாண்டியவை . இப்படி இருக்கும் போது அண்மையில் வெளிவந்த ஓகே ஓகே 16 கோடிகளை சென்னையில் வசூல் செய்தது என்பது யாராலுமே ஏற்றுக் கொள்ள முடியாத கணக்கு .படம் வெற்றிதான் அதில் மறுப்பு இல்லை .ஆனால் 16 கோடி என்றால் படம் சென்னையில் மட்டும் விண்ணை தாண்டி ஓடியதா ஏனெனில் சென்னையின் வசூலை வைத்து முழு வசூலையும் கணிக்க முடியாது எனினும் ஓரளவுக்கு படத்தின் வசூல் நிலைவரங்களை ஊகிக்கலாம் .சென்னையில் எந்திரனின்வசூலை நெருங்கிய okok மொத்த வசூல் சாதாரண வெற்றி படத்தின்வசூலே .
மேலே உள்ள விபரங்களில் ஏழாம்அறிவு ,வேலாயுதம் படங்களின் விபரங்களில் மட்டும் வித்தியாசமாக Total collections in Chennai  என்று புதிய கணக்கு காட்டி .இருக்கிறார்கள் அதுவும் விளங்க வில்லை .


எல்லாவற்றுக்கும் மேலாக  வெளியான சகுனி வசூலில் குளறுபடி நடந்து இருக்கிறது .வசூல் இருபது லட்சத்தால் கூடி இருக்கிறது .
.

Rajinikanth starrer Endhiran has made it to the all time highest grossers list of India. Endhiran has taken the second spot in the list with a massive Rs 200 crores at the box office. Aamir Khan’s 3 Idiots leads the list with Rs 202 crores.
அண்மையில் வெளியான செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக 350 கோடி கடந்த வசூல் என அறிவிக்கப் பட்டு அனைவராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட எந்திரனின் வசூல் 200 கோடி என புதிதாக கதை விடுகிறது .3 idiots 202 கோடி வசூலுடன் இந்தியாவின் முதல் இடத்தில் உள்ளதாக அந்த செய்தி கூறுகிறது .எது உண்மை எது பொய் என அறிய முடியாமல் ரசிகர்களை குழப்புகிறார்கள் .

எது எப்படியோ இதை விட நடுநிலையாக boxoffice விபரங்களை தர ஒருவரும் இல்லாத நிலையில் தொடர்ந்து இவர்களின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதை விட வேறு வழியில்லை

முக்கிய குறிப்பு
மேலே தரப்பட்டவை அனைத்தும்சென்னைவசூல் மட்டுமேஒபெநிங் வசூலுக்கும் படத்தின் வெற்றிக்கோ மொத்த வசூலுக்கோ எந்தவித  சம்பந்தமும்இல்லை .

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...