Saturday, July 30, 2011

சங்கா +முக்கிய VIP

ரசிகர்களின் மனங்கவர் வீரருக்கான விருது ( PEOPLE'S CHOICE AWARD-2011 ) ICC யினால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது .கடந்த வருடம் சச்சினுக்கு கிடைத்தது .இம்முறை இந்த விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.இந்திய கப்டன் டோனி ,தென் ஆபிரிக்காவின் ஆம்லா,மேற்கிந்திய தீவுகளின் கெயில்,இங்கிலாந்தின் திராட் மற்றும்  சிங்கத்தின்  குகையிலிருந்து நம்ம சங்கா ஆகியோரே அவர்கள் .    கிரிக்கெட் உலகின் கண்ணியவானாக திகழும் எமது நாட்டுக்கு  பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் குமார் சங்ககாராவுக்கு வாக்களித்து இந்த வருடத்துக்கான அபிமான வீரராக தேர்வு செய்ய வேண்டியது எமது தலையாய கடமையாகும் .  

 சங்ககாராவுக்கு வாக்களிக்க இங்கே க்ளிக் பண்ணுங்கள்.  
AUGUST-25 மட்டுமே வாக்களிக்க முடியும் உடனே உங்கள் வாக்கை அளியுங்கள் .


யாழ்ப்பாணத்தில்  சங்கா 


யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் TRIAL எனும் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடைப் பயணத்தில் சங்கா கலந்து கொண்டார் .யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரின் ரசிகர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர் .அவருடன் பல ரசிகர்கள் புகைப்படம் எடுத்து தமது நெடுநாள் ஆசையை பூர்த்தி  செய்தனர் .
கடந்த ரெண்டு மாதமாய் யாழில் நின்றும் யார் யாரோ எமக்கு தேவையே இல்லாதவர்கள் எல்லாம் முகாமிட்ட போதுயாழில்   நின்றும் சங்கா வரும் போது நிற்க முடியாமல் போனதில் வருத்தம்தான் .சரி காலம் வரும்தானே.


யார் அந்த VIP 
அப்புறம் இன்னொரு முக்கிய VIPயும் யாழ்ப்பாணம் வந்தவராம் .அவர் யாரு ?அவரால்தான் நான் வலைப்பதிவு என்றால் என்ன என்பதை அறிய முடிந்தது ..நாம A/L  படிக்கும் போது நம்ம தளபதி புராணம் பாடிக் கொண்டிருக்கும் கொடுமை தாங்காமல் நண்பன் ஒருவன் எந்நாளும் சொல்லுவான் உண்ட தளபதியை பற்றி ஒருவர் கிழி கிழிஎன கிழித்துக் கொண்டிருக்கிறார் .போய்ப் பாரு என்று .அப்ப ஒருநாள் இணையத்தில் தேடிய போதுதான் அவரை பற்றி அறிய முடிந்தது.அவர் சூரியனில் (FM) பணியாற்றுகிறார் என்பதும் கூட .(நாம சக்தியின் அடிமை அந்த காலம் தளபதியின் புகழ் பாடுவதோடு நிற்காமல் கில்லி வெற்றி விழாவுக்கு இலங்கை வந்த அவரை அழைத்து நேரடி ஒளிபரப்பியது சக்தி டிவி .இப்ப இலங்கையில் என்னென்ன அலைவரிசை இருக்கு எண்டே சத்தியமாய் தெரியாது எல்லாம் ''தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக'' செய்த மாயங்கள்தான் .).அப்போது எனக்கு இவர் யாரு நம்ம தளபதியை  பற்றி இப்பிடி எழுவதற்கு இவருக்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது  


ஆனால் வலைப்பதிவு என்றால் என்ன எப்படி எழுதுவது ஒன்றுமே தெரியாது அத்துடன் A/Lஇல்  பிஸியாக இருந்ததால் நேரமும் இருக்க வில்லை .A/L முடிந்த பின் வெட்டியான நாட்களில் இவரின் வலைதளத்தில் பயணித்த போதுதான் இவரின் திறமையை முழுமையாக அறிய முடிந்தது ..இவரின் திறமையை பார்த்து வியந்து விட்டேன் .இவர் மட்டுமல்ல பலரும் தளபதியை கலாய்ப்பதை பின்னர்தான் அறிந்து கொண்டேன் .அத்துடன் இவர் இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ஆதரவாளர் என்பதால்எனக்கு இவரை ரொம்ப பிடித்து விட்டது .இவரின் வலைப்பதிவுகளை படித்து இவரின் வலைப் பக்கத்தில் இருந்து ஏனைய வலைப் பதிவாளர்களை படித்து நானும் இப்படி ஒன்று ஆரம்பித்துள்ளேன்.இவங்கள் சும்மா பிரிச்சு மேய்கிறார்களே நாமெல்லாம் எதை எழுதி கிழிப்பது என்ற பயத்துடனேயே ஒவ்வொரு பதிவையும் எழுதுகிறேன் .எனினும் நீங்கள் தரும் வரவேற்பை என்னால் நம்பவே முடியவில்லை .என்னுடைய முந்தைய பதிவான தெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும். திரையிட்ட சகல இடங்களிலும் நான் சற்றுமே எதிர்பாராத வகையில்   மெஹா ஹிட் அடைய செய்த அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த நன்றிகள் 


என்ன நான் ரொம்ப போர் அடித்து சாகடிக்கிறேனா புரியுது .சரி யார் அந்த VIP  நீங்கள் கேட்பது புரியுது .கேட்கா விட்டாலும் .இவர்தான் அவர் .ARV.லோஷன் அண்ணா அவர்கள் .






“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்” இது எப்பிடி இருக்கு .






உன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சிலர் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.


அப்புறம் இந்த பதிவு முடிவில் ஒரு கேள்வி .சரியாக விடை அளிப்பவர்களுக்கு சன் டிவியின் தங்க வேட்டை நிகழ்ச்சியில் (சன் பிக்சர்ஸ் படம் எதுவும் கைவசம் இல்லாததால் திரும்ப தொடங்க போறாங்களாம் )  தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது .விடையில் OPTIONS  எதுவும் இல்லாததால் சற்று சிரமப் படப் போகிறிர்கள் .சரி கேள்வி இதுதான் 
இந்த பதிவில் எத்தனை 'தளபதி' உள்ளது .


எவன்டா எவன்டா அடிக்கிறது விடுங்கடா .எதையுமே பிளான் பண்ணி பண்ணாட்டி இப்பிடித்தான் .





Post Comment

Monday, July 18, 2011

தெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும்

அண்மைக் காலங்களாக தியேட்டருக்கு சென்று படங்கள் பார்ப்பதை குறைத்திருந்தேன்.கடைசியாக பார்த்தது மாப்பிள்ளை என்று நினைக்கிறேன் .அந்த வலிக்கு பின் ஓரளவு நல்ல விமர்சனங்கள் வந்தால் மட்டுமே தியேட்டரில் சென்று பார்ப்பது என்று முடிவு எடுத்திருந்தேன் (வேலாயுதம் வரும் வரை ).அந்த வகையில் தெய்வதிருமகள் படத்துக்கு எந்தவொரு எதிர் விமர்சனமும் வராத   நிலையில் அனைவரும் பாராட்டி எழுதுகிறார்கள் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்த்துத்தான் விடுவோம் என்ற ஆவலிலும் நம்ம தளபதியின் பேரைக் கொண்ட ஒருத்தர் நல்லா படம் எடுக்கிறாராம் (தளபதிக்கு   நேஷனல் லெவெல்ல ரீமேக் என்றால் இவரு  ஹாலிவுட் லெவெல்ல ரீமேக் பண்றார் )என்பதற்காகவும் இன்று படம் பார்த்தேன்.நண்பர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு (சுறாவுக்கு பின் இப்பதான் அவங்களோடு கூட்டமா  போனேன் )யாழ்ப்பாணம் மனோகரா திரையரங்குக்கு சென்றேன் .வாசலை அடைந்த பின் இன்று என்ன போயா நாளோ என்ற எண்ணம் வந்தது (போயா என்றால் லீவு ).ஒரு வித ஆர்ப்பாட்டத்தையும் காணவில்லை. படம் வந்து மூணு நாள் கூட ஆகவில்லை ஒரு சனத்தையும் காணவில்லையே என்ற அங்கலாய்ப்புடன்  உள்ளே சென்றேன்.
டிக்கெட்  விலை சடுதியாக உயர்வு (பால்கனி -300௦௦,பின்வரிசை-200,பாக்ஸ்-350,4புது படம் ஒரு dvd  யில்-60 ),இன்று திங்கட்கிழமை போன்றன காரணமாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன் .படம் ஆரம்பித்தது.1000 பேரைக் கொள்ள கூடிய தியேட்டரில் நுற்றுக்கும் குறைவானவர்களே இருந்தனர்.எந்தவொரு சத்தமும் இல்லை .ஏதோ நான் தனியே மட்டும் இருந்து பார்ப்பது போன்ற உணர்வே இருந்தது 


டாக்டர் சியான் விக்ரம் நடிக்கும்(இதுக்கு கூட ஒரு சத்தமும் இல்லை) தெய்வ  திருமகள் என்று தொடங்கியது படம். படம் தொடங்கி முடிவதற்கு இடையில் எனக்கும் என் கண்களுக்கும் இடையில் ஒரு மிகப் பெரும் போராட்டமே நடைபெற்றது .இதுநிஜம் இல்லை சும்மா படம்தான் என்று மனதை திடப்படுத்திக் கொண்டாலும் கடைசி நிமிடங்களில் நான் தோற்று விட்டேன் .(தனது 50 வது  படத்தை தளபதி  எப்படியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்துக்  கொண்டு போனேன் இப்படி சொதப்பி விட்டாரே என்று கவலையின்  உச்சத்தில் இருந்த போது கூட கண்ணீர் வரவில்லை )படம் நான் எதிர் பார்த்த அளவை விட சிறப்பாக இருந்தது.
விக்ரம் நடிப்பில் பின்னி எடுத்து விட்டார் .என்னதான் காபி படம் என்றாலும் தேசிய விருதுக்கு நிச்சயம் தகுதி உண்டு .(இப்பதான் தேசிய விருது எந்த படத்துக்கு கொடுப்பது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டதே) .விக்ரமுக்கு கிடைக்குதோ இல்லையோ நம்ம நிலாக் குட்டிக்கு(சாரா )கண்டிப்பா கிடைக்கணும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன் .என்ன நடிப்புடா .இந்த மழலையிடம் இப்படி ஒரு திறமையா .படத்திலேயே என்னை மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்தது இந்த நிலாவாய் தான் இருக்க முடியும் .பிறந்தது முதல் தந்தையை கேட்கும் இடக்கு முடக்கான கேள்விகள் அருமை .ஒரே ஒரு ஊரிலே பாடலில் இடையிடையே கேட்கும் கேள்விகள் டைனோசரை வேட்டையாட சென்ற ராஜா புலியை வேட்டையாடியதும் விக்ரமை கலாய்ப்பது அருமை.
நிலா -அம்மா எங்கப்பா 
கிருஷ்ணா -சாமிகிட்ட  போய் இருக்கா 
நிலா -ஏன் அப்பா சாமிக்கு அம்மா இல்லையா
கிருஷ்ணா-இல்ல சாமி நல்லவங்கள தன் கூடவே வைச்சிருப்பாரு 
நிலா-அப்ப நாங்க கெட்டவங்களா 

மிகவும் பிடித்த வரிகள் இவை .
விக்ரமின் திறமை ஏலவே நாம் அறிந்ததே .சற்றும் குறைவில்லாமல் தந்திருக்கிறார் .குழந்தை பிறந்த சந்தோசத்தில் மிதக்கும் போது மனைவி இறந்த செய்தியை கேட்டவுடன் அவரது முக பாவனை நடிப்பின் உச்சம்.இறுதியில் பேசும் சைகை மொழியும் அருமை.அனுஷ்கா அமலாபால் சந்தானம் நாசர் ஒருவரும் குறை சொல்வத்கு இல்லை.அனுஷ்கா அருந்ததிக்கு பின்னர் இதில்தான் நடித்திருக்கிறார்.அதுவும் இடைவேளைக்கு பினர் சூப்பர் .அமலாபால் சொல்வதற்கு ஒன்றுமில்லை .இந்த படத்தில் சந்தானத்திடம் எதிர் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை .எனினும் தன்னால் முடிந்ததை செய்துள்ளார். கிருஷ்ணாவின் முதலாளி விக்டரும் என்னை கவர்ந்தார். என்னவோ தெரியவில்லை பாஸ்கரை எனக்கு பிடிக்கவில்லை  சந்தானம் ''கோட்டுக்கு கேசு வரும்னு பார்த்தா லூசு வந்திருக்கு ''என்று சொல்லும் காட்சியில் எனக்கு கடும் கோபம்தான் வந்தது .''ஒரு இடத்தில ஒரு சம்பவம் நடக்கிறதுக்கு சம்பந்தப்பட்ட இருவரில ஒருத்தருக்கு விஷயம் தெரிந்தா பத்தாதா '' இந்த இடத்தில் மட்டும்தான் அரங்கிலிருந்த மௌனம் லைந்து கலகலப்பு ஏற்பட்டது.  5 வயது மனநிலையுள்ள ஒருவருக்கு  எப்படி குழந்தை பிறந்தது என்பதை மறைமுகமாக உணர்த்துவதற்காக இந்த வசனம் சேர்க்கப் பட்டிருந்தாலும் விக்ரமையும் பாஸ்கரின் மனைவியையும் தொடர்பு படுத்தி இந்த வசனம் பேசப்பட்டது எனக்கு பிடிக்க வில்லை .சந்திரமுகியில் ரஜினி வடிவேலுவின் மனைவிலூட்டிகள்  தான் நினைவுக்கு வந்தது.


 இயக்குனர் விஜய் நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள்  சார் (I AM SAM ஐ சொல்லவில்லை.).மிக அற்புதம் .படம் பார்க்க செல்லும் போது நித்திரை ,கொட்டாவி பிரச்சினைகளை எண்ணியபடிதான் சென்றேன் .நீங்கள் அதற்கு வேலை வைக்க வில்லை அனுஷ்காவுடன் விக்ரமின் பாடல் மட்டுமே சிறிய சலிப்பை தந்தது .நல்ல மனநிலை படைத்த மனிதர்கள் பார்த்துக் கொண்டு போக மன வளர்ச்சி குன்றிய கிருஷ்ணா தண்ணீர் பைபை  பூட்டுவதும் வீதி ஒழுங்கை பேணுவதும் மக்களுக்கு ஒரு சாட்டைஅடி .பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் .'ஒரே ஒரு ஊரிலே ' கவர்ந்தது.பின்னணி இசை பாராட்டக் கூடியது . நீரவ் ஷா ஒளிப்பதிவு சொல்வதற்கு ஒன்றும் இல்லை (சொல்லவும் தெரியாது ).
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் .                       தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தில் வித்தியாசமான படங்கள் வந்த வண்ணமுள்ளன.நீங்கள் கொடுக்கும் வரவேற்பில் தான் அவற்றின் வெற்றி தங்கியுள்ளது .தெய்வதிருமகளின் யாழ் நிலைமையை முதல் பந்தியில் சொல்லியுள்ளேன் .தயவு செய்து தியேட்டருக்கு சென்று படம் பார்த்து இவ்வாறான முயற்சிகளுக்கு ஊக்கமளியுங்கள் .
அப்புறம் இது என்னுடைய முதல் விமர்சனம் இது (படுபாவி விமர்சனமா இது ) தயவு செய்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் .                                                  விஜய் வீழ்ச்சியும் எழுச்சியும்   க்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றிகள் 

Post Comment

Tuesday, July 12, 2011

விஜய் வீழ்ச்சியும் எழுச்சியும்

கடந்த தசாப்தத்தின் ஆரம்ப பகுதியில் தோல்விகளால்  துவண்டு கொண்டிருந்த விஜய் நடுப்பகுதியில் தமிழ்  சினிமாவின்  உயர்  நிலையை தொட்டார். திருமலை மிகவும் திருப்புமுனையாக இருந்தது.மாஸ் ஹீரோவாக விஜயை இனங்காட்டியது திருமலை.


தொடர்ந்து கில்லி,மதுர ,திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி என வெற்றி மேல் வெற்றிகளை குவித்தார்.வருடத்துக்கு  மூன்று படம் கொடுத்தார்.ரசிகர்களை அள்ளி குவித்தார்.இடையிடையே வந்த சில தோல்வி படங்களும்  இந்த மாபெரும் வெற்றிகளின் முன்னால் காணாமல் போயின .  ஏனைய நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு  உருமாற்றி சிரமம் எடுத்து நடிக்க இவரோ இலகுவாக உச்சத்தை தொட்டார் .சூர்யா மிகவும் கடினப்பட்டு முதுகை கூனி நடித்த பேரழகன் கில்லிக்கு முன்னாள் நிற்க முடியவில்லை. விக்ரம் தேசிய விருதை வாங்கிய பிதாமகன் கூட திருமலையை நெருங்க வில்லை.ஆரம்ப காலத்திலிருந்தே போட்டியாளராக இருந்த அஜித்தை மிகவும் பின் தள்ளினார்.மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால் தலைவர் ரஜினுக்கு அடுத்த இடத்தை தொட்டார்.இவ்வாறான விஜயின் வளர்ச்சியை  பலரும் மூக்கின் மேல் விரலை விட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.






விஜயின் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தது அழகிய தமிழ் மகன்.படம் ஓரளவு நல்லாய் இருந்தும் விஜயை வில்லனாக பார்க்க விரும்பாத அவரின் ரசிகர்களே தோல்வியடைய வைத்தனர்.தொடர்ந்து குருவி.விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே (இன்னும் வேலாயுதம் வர வில்லை .என்ன முறைப்பு.சரி நண்பன்வரவில்லை )எனக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்த கில்லி பட கூட்டணியுடன் வந்த குருவி தியேட்டரை விட்டு பறக்க விஜயே முக்கிய காரணமானார்.சூப்பர் ஸ்டார் கூட செய்ய பயப்படும் சாகசங்களை குருவியில் நிகழ்த்தினார்.பறந்து பறந்து சாகசம் செய்ததால்தான் பெயரை குருவி என்று வைத்தனரோ திரும்பவும் சொல்லுறன் குருவி 150வது  நாள் கொண்டாடியது .(மச்சி நீ கேளேன் )..குருவியுடன் விஜயை கேவலப்படுத்தும் கைங்கரியங்கள் இணையத்தில் ஆரம்பமாகின.அடுத்த வில்லும் நொந்து போனது.


அரசியலுக்கு  வர ஆசைப்படும் விஜய் அரசியலிலேயே ஒரு கூட்டணி நிலைக்காத போது படங்களில் எப்படி நிலைக்கும் என்று நம்பினாரோ .அடுத்த வேட்டைக்காரன் மிகுந்த  எதிர்பார்ப்புடன் வெளியாகியது.அந்த காலத்தில் காதலில் விழுந்தேனை கூட வசூலில் எழ வைத்த சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிட்டமையே எதிர் பார்ப்புக்கு காரணம்.எதிபார்ப்பு வீண் போகவில்லை .படம் விஜய் ரசிகர்களை முழுதும் திருப்தி படுத்தியது. பாடல்கள் படி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பின .புலி உறுமுவதை  பார்த்த போது சிங்கம் ஒன்று புறப்பட்டு வந்தமாதிரியே  இருந்தது.அயன் வசூலை முறியடித்து விட்டதாக சன் பிக்சர்ஸ் கூட அறிவித்த பின்னரும் ,2009ம் ஆண்டின் favourite hero ஆக vijay அவார்ட்ஸ் கிடைத்த பின்னும் படம் தோல்வி என்று சொல்பவர்களுடன் வாதிட முடியாது.


விஜயின் 50வது படம் சுறா மலையாள படம் ஒன்றின் ரீமேக் என்றார்கள் .அதுவும் மோகன்லால் நடித்த படம். என்னடா எப்படி மோகன்லால் படத்தில் தளபதி எங்கேயோ உதைக்குதே என்று நினைத்த போது படம் மீண்டும் சன் வெளியீட்டில் படுதோல்வியை சந்தித்தது. தளபதியின் உயிர் ரசிகனான நானே தளபதி மீது கோபபட்டது இந்த படத்துக்குத்தான் .மற்றைய படங்களை நண்பர்களுடன் பார்த்து விட்டு படம் முடிவில் நண்பர்களின்  எல்லா கேள்வி கணைகளையும் தனி ஆளாய் சமாளித்த என்னால் சுறா முடிவில் ஒன்றும் செய்யமுடியாமல் போய் விட்டது.சுறாவுடன் பிரச்சினைகள் உச்சமடைந்தன. சன் பிக்சர்ஸ் உடன் மோத தயாரானார். அரசியல் கட்சி ஆரம்பிக்க எத்தனித்ததால் தி.மு.க.வின் எதிர்ப்பை சம்பாத்தித்தார்.சுறா விஜயை மிகவும் யோசிக்க செய்து விட்டது. வலையுலகில் விஜயை பின்னி பெடல் எடுக்காதவர்கள்   இல்லை  என்று சொல்லலாம் .விஜயை பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட விஜயை கிழித்து எழுதினால் தான் தங்கள் பதிவையும் வாசிப்பார்கள் என கருதி எந்தளவு முடியுமோ அந்தளவு வதைத்தார்கள்.


வழமையாக தோல்விகளை பற்றி கண்டுக்காமல் அடுத்த பட வேலைகளை பார்ப்பவர் விஜய். அவர் நிதானித்து நின்ற இடம்தான் .சுறா .மற்ற நடிகர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை உணர்ந்தார்.தான் நடித்த படங்களின் இயக்குனர்களை நினைத்தார். ATM பரதன்,வில்லு பிரபுதேவா, சுறா ராஜ்குமார் வேட்டைக்காரன் பாபுசிவன் இப்போதுதான் விஷயம் விளங்கியது தளபதிக்கு .நண்பன் சூர்யா டாப் கியரில் போவதற்கு அவர் இயக்குனர் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்தார்(முன்னரே யோசித்தால் சுறா வந்திருக்குமா ).  அதை உணர முன்னர சித்திக்குடன் காவலனில் இணைந்தமை வேறு விடயம்.தனது பிடியை தளர்த்தினார் சித்திக்கின் எண்ணப்படி படம் எடுக்க அனுமதித்தார்.காவலன் மீண்டும் தளபதியை திரும்ப வைத்தது. திரையுலகில் எந்த ஒருவருமே சந்திக்காத கடும் நெருக்கடியின் மத்தியில் காவலன் வெளி வந்து வெற்றி பெற்றது. விஜய் ரசிகன் என என்னை பெருமைப்பட வைத்தது


.இனி சரவெடி 
.கடந்த  தசாப்தத்தின் இறுதியில் வீழ்ச்சியை  சந்தித்த விஜய் தற்போது   டோப்கியர்  இல்ல புல்லட் வேகத்தில் பயணிக்கிறார் . இப்போது மிக அருமையாக நிதானமாக யோசித்து படங்களை தேர்வு செய்கிறார்.ஜெயம்  ராஜாவின் வேலாயுதம்     கில்லி போல் சொல்லி அடிக்கும்  வகையில் விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே பிரமாண்டமாய்  தயாரிக்கப்படுகிறது.அடுத்து நண்பன் சொல்லவே வேண்டாம் பிரமாண்டத்துடன் முதல் தடவையாக இணைகிறார்.இசையுலகில் முன்னணியில் திகழும்  ஹரிஸ் ஜெயராஜ் உடனும் முதற்தடவையாக   இணைகிறார் .படம் வெற்றி உறுதியாகியநிலையில்அடுத்த இன்ப அதிர்ச்சி a.r .முருகதாஸ் இயக்கத்தில் மாலை நேரத்து மயக்கம் 65 கோடி செலவில் நடிக்க உள்ளார்.அக்கினி புயலுடனும் பகலவனாய் பொங்க உள்ளார்.ஆக மொத்தத்தில் மீண்டும் உச்சத்தை தொட உள்ளார் எங்கள் இளைய தளபதி.
  முக்கிய குறிப்பு - நடு பந்திகள் விஜயை  பிடிக்காத   என்  நண்பர்களும்   பார்க்க   வேண்டும்   என்பதற்காக மட்டுமே  

Post Comment

Wednesday, July 6, 2011

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார்- முடிவு

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் என ஆராய முற்பட்டபோது என்னை கவர்ந்த இயக்குனர்களை பட்டியல்படுத்தி தந்துள்ளேன். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் என்றதொடரின் இறுதிப் பதிவாக இது அமைகிறது .   ஏற்கனவே முக்கியமான இயக்குனர்களை பற்றி பார்த்துள்ளதால் இந்த பதிவில் உள்ள இயக்குனர்களை பற்றி சுருக்கமாக மட்டுமே பதிந்துள்ளேன்   
இதன்  முந்தைய பகுதிகளை படிக்க
                                              தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார்-3 
தமிழ் சினிமாவின் சிறாந்த இயக்குனர் யார்-2   

கௌதம் வாசுதேவ் மேனன் February 25, 1973
  கௌதம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.மின்சார கனவு படத்தில் ராஜீவ் மேனனுக்கு  உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இளமையான காதல் கதையான படம் மிகப்பெரு வெற்றியை பெற்றது. தமிழில் அடுத்ததாக சூர்யாவை வைத்து எடுத்த ஆக்சன் படமான காக்க காக்க கௌதமை அடுத்த நிலைக்கு உயர்த்தியது.
2004-கர்ஷனா  (தெலுங்கு   )
வேட்டையாடு விளையாடு படமும் சிறந்த வெற்றியை பெற்றது. வாரணம் ஆயிரம் பலரின் பாராட்டை பெற்றது. அத்துடன் தேசிய விருதை பெற்று இவருக்கு புகழை தேடி தந்தது . பச்சை கிளி முத்துசரம் தோல்வியை தழுவியது .2010 இல் வெளி வந்த விண்ணைத்தாண்டி வருவாயா மூலம் பலரின் உள்ளங்களை கவர்ந்தார். மிக சிறந்த காதல் காவியமாக அமைந்தது .கடைசியாக வெளிவந்த நடு நிசி நாய்கள் படுதோல்வியை சந்தித்தது .பலரின் விமர்சனத்துக்கும் உள்ளனர் .அந்த படத்தின் பாதிப்பு நீங்கள் போடும் ஓட்டுகளில் தெரிகிறது .VTV மூலம் சம்பாதித்த  புகழை அநியாயமாக இழந்து விட்டார் போலவே தெரிகிறது .இப்போது VTV  ஐ   ஹிந்தியில் எடுக்கிறார். தமிழில் மீண்டும் புதுப் பொலிவுடன் VTV-2  ஐ   மிக சிறப்பாக  படமாக்குவார் என எதிபார்க்கிறேன்




 அமீர் (02 Apr 1966)



தமிழ் திரையுலகில் இயக்குனரையும் நடிகரையும் அறியப்படும் அமீர் சிறந்த இயக்குனர்களில் ஒருவராவார்.இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக சேது படத்தில் பணியாற்றினார்.2002 இல் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். மௌனம் பேசியதே பெரிய வெற்றியை பெற வில்லையாயினும் பலரின் பாரட்டுக்களை பெற்றது .அடுத்து 2005 இல் வெளிவந்த ராம் அமீரை பற்றி பேச வைத்தது. ஒரு மன நோயாளியாக ஜீவாவை நடிக்க வைத்து மிக சிறப்பான வெற்றியை பதிவு செய்தார்.சைப்பிரஸ் திரைப்பட விழாவில் ராம் திரைப்படம் விருது பெற்றது .அமிரை முன்னணி இயக்குனராய் தமிழ் சினிமாவில் அங்கீகரித்த படம்தான் 2007 இல் வெளியாகி பட்டைய கிளப்பிய பருத்தி வீரன் . சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என மட்டுமே அறியப்பட்ட கார்த்தியை சிறந்த நடிகரை பட்டை தீட்டினார்.பருத்தி வீரன் சர்வதேச அளவில் புகளை தேடி தந்தது .படத்தில் நடித்த அனைவரையும் சொந்த குரலில் பேச வைத்தார் அமீர் . சிறந்த படம் ,சிறந்த இயக்குனர் ஆகிய தென்  இந்திய filmfare விருதை படம் பெற்றது. சரவதேச அளவில் ஆசிய மற்றும் அரபு நாடுகளின் திரைப்பட விழாவான  Osian's Cinefan Festival of Asian and Arab சினிமாவில் சிறந்த படத்துக்கான விருதையும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருதையும் பெற்றுக்கொண்டது. 

அண்மைக்காலமாக நடிப்புத்துறையிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவன் எனும் படத்தை இயக்கி வருகிறார் .மூன்று படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் முன்னணி இடத்தை பெற்றுள்ளமை அவரின் தனித்திறமையை காட்டுகிறது.
செல்வராகவன்  (1977-06-06) 



இவரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் .   கஸ்தூரிராஜாவின் மகனான இவர் தகப்பனின் படமான துள்ளுவதோ இளமை படத்துக்கு கதை எழுதினார்.தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை முதலில் இயக்கினார். படம் வித்தியாசமான காதல் கதையில் சிறப்பாக எடுக்கப் பட்டிருந்தது. படம் வெற்றி பெற்றதோடு செல்வாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.அடுத்து சொந்த அனுபவங்களை வைத்து பின்னிய ரெயின்போ காலனியும் இவரை இனங்காட்டியது அத்தோடு முன்னணி இடத்துக்குக்கு அழைத்து சென்றது . புதுப்பேட்டை சொல்லிக் கொள்ளும் படி அமையவில்லை. மிகுந்த எதிபார்ப்புடன் சோழர் கால வரலாற்றை மையப்படுத்தி ஆயிரத்தில் ஒருவன்  படத்தை எடுத்தார். எதிர் மறை விமர்சனங்கள் வெளியானாலும் பலரும் பாராட்டும்படி இருந்தது.ஒரு தெலுங்கு படத்தையும் எடுத்துள்ளார்.இப்போது இரண்டாம் உலகத்தை தம்பியுடன் உருவாக்குகிறார்.
 இவர்களை விட சசிகுமார்,வெங்கட்பிரபு, k.v ஆனந்த்     போன்றோரும் முன்னணி இடத்தை  அடைய தகுதியானவர்கள்  தான் .


 who is the best director of tamil cinimaஎன்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள். 


உங்கள் ஓட்டு முடிவுகளுடன் மீண்டும் ஒரு பதிவில் இந்த பதிவுகளின் தலைப்புக்கான பதிலுடன் சந்திக்கிறேன் .இத்துடன் இந்த தொடர் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். 





Post Comment

Monday, July 4, 2011

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் -3

இதன்  முந்தைய பகுதிகளை படிக்க 

தமிழ் சினிமாவின் சிறாந்த இயக்குனர் யார்-2
பாலா (11.07.1966)

பாலா ஐந்து படங்கள் .அள்ளிக்  குவித்த விருதுகள் ஏராளம்.விருதுப் பட இயக்குனர் என்றே அனைவரும் அழைக்கிறார்கள் .பாலாவின் பட்டறைக்குள் பட்டை தீட்ட்டப் படுவதற்காய் காத்து நிற்கும் நடிகர்கள் தாராளம் .கொமர்சியல் இல்லையெனில் படம் எடுக்க முடியாது என்ற எழுதப்படாத விதியை உடைத்து புது வழி அமைத்தவர் .பார்ப்பதற்கு சுள்ளான் போல் இருக்கிறார்.தனது படங்களால் சுளுக்கு எடுக்கிறார் .


பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராய் இருந்து அறிமுகமாகிய பாலாவின் முதல் படம் சேது .படத்தை எடுத்து நூற்றுக்கணக்கான  விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டியும் யாருமே படத்தை வெளியிட முன்வரவில்லை .படத்தின் சோகமான முடிவே அதற்கு காரணம் .மிகவும் கஷ்டப்பட்டு   எந்தவித விளம்பரமுமின்றி படத்தை வெளியிட்டார் .படத்தை பார்த்தவர்களின் நல்ல விமர்சனங்களின்  மூலம்(word of mouth) படம்  வெற்றிகரமாக  ஓடத்  தொடங்கியது  . படத்தை    பார்த்து  பலரும்  பாராட்டினார்கள்     .இறுதியில்  படம் மிகப்  பெரு வெற்றியை    பெற்றது .தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 12 வருடங்களுக்கு மேலாகியும்  அறியப்படாமல் இருந்த விக்ரம் எனும் நடிகனை தமிழ் சினியுலகமே தன பக்கம் திரும்பி பார்க்கும் படி செய்தார் பாலா.தனது முதல் படத்துக்கே தேசிய விருதை வாங்கிக் காட்டினார் பாலா. 

தனது அடுத்த படமான நந்தாவில் ஏனோ தானோ என சினிமாவில் சுழன்று கொண்டிருந்த சூர்யாவை பட்டை தீட்டி புது நடிகராக அனுப்பினார் .நந்தா திரைப்படம் சூர்யாவின் சினிமா பாதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது .நந்தாவின் பின்னரே சூர்யா தனக்கென ஒரு பாதை அமைத்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் .அடுத்த படமான பிதாமகன் அதில் நடித்த விக்ரமுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது .நான்காவது படம்மான நான்கடவுள் அவருக்கான திறமையை  வெளிப்படுத்தும் விதமாக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது .
இயக்கிய சகல படங்கள் மூலமும் விருதுகளை அள்ளிக் குவித்த பாலாவை போல் இன்னொரு இயக்க்னரை பெறுவது கடினம் .பாலாவை தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கருதுகின்றார்கள் .
பாலாவின் தனி சிறப்பு யாதெனில் யாருமே தொடாத சமூகத்தின் இருண்ட பக்கங்களை யதார்த்தபூர்வமாக படமாக்குவார்.பிதாமகனில் கஞ்சா கடத்தலையும், நான் கடவுளில் ஊனமுற்றவர்களின் வாழ்க்கையின் மறு பக்கத்தை தத்ருபமாக காட்டியிருப்பார் .


பாலா யதார்த்தமாக படம் எடுத்தாலும் வன்முறையை அதிகளவில் திணிப்பதை விமர்சிக்கிறார்கள்.ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு அதிக காலம் பிடிப்பதால் அதிக படங்களை தர முடியவில்லை .பாலாவின் படங்கள் தரத்தில் உயர்ந்து இருந்தாலும் வசூலில் எப்படி என்று பார்த்தால் சேது ,நந்தா நல்ல வசூலைபெற்று தந்தது .பிதாமகன் சமகாலத்தில் வெளியான கொமர்சியல் மசாலாவான திருமலைக்கு முன்னால் அடி பணிய வேண்டி வந்தது .நான் கடவுள் சொல்லிக் கொள்ளும்படி வசூலை  பெற முடியவில்லை .இந்த முடிவு பாலாவை சற்று யோசிக்க செய்தது .அதன் விளைவே அவன் இவன் தன்னுடைய யதார்த்தத்தை பேணிக் கொண்டும் நகைச்சுவை கலந்து தன்னுடைய வழமையான பாணியிலிருந்து சற்று விலகி எடுத்துள்ளார் .அவன் இவனுக்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் இப்போது வெற்றிகரமாக ஓடுகிறது .
எது எவ்வாறாயினும் பாலா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து விட்டார் என்பதே உண்மை. 
அடுத்த பதிவில் யார் சிந்தியுங்கள் ?


 who is the best director of tamil cinimaஎன்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள். 


உன்னிடம் இன்னொருவனைப் பற்றி குறை கூறும் ஒருவன், உன்னைப் பற்றியும் இன்னொருவனிடம் குறை கூறுவான். பகுத்தறிந்து பழகிக் கொள்.-fb

Post Comment

Sunday, July 3, 2011

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் -2

  இதன் முதற்  பகுதியை படிக்க தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ?-1

ஷங்கர் (1963.08.13)

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.பிரமாண்டம் என்ற சொல்லின் வரைவிலக்கணமாக திகழ்பவர் .இப்போது புகழின் உச்சியில் இருக்கிறார் .
S.A.சந்திர சேகரிடம்  உதவி இயக்குனராய் பனி புரிந்த இவர் 1993  இல் ஜென்டில்மேன் என்ற படத்துடன்  இயக்கினராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் உயர் தொழினுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் இவரே .படத்துக்கு  படம் வித்தியாசமான நுட்பங்களை செய்து வருகிறார்.படங்களை அதிக செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுப்பது இவரின் தனி சிறப்பு .
இவர்  இயக்கிய  படங்கள்   
1993- ஜென்ட்லேமன்
1994- காதலன்
1996-இந்தியன் 
1998-ஜீன்ஸ்
1999-முதல்வன்
2001-நாயக் (ஹிந்தி)
2003-பாய்ஸ்
2005-அந்நியன் 
2007-சிவாஜி
2010-எந்திரன்
2011-நண்பன் (படப் பிடிப்பில்)
ஷங்கரின் பெரும்பாலான படங்கள் பெரு வெற்றியை பெற்றுள்ளன .இவரின் படங்களில் சமூக மாற்ற கருத்துக்கள் அதிகளவில் இடம் பெற்றிருக்கும் .இந்தியன் ,முதல்வன் என்பன என்னை கவர்ந்த படங்களாகும் .
.இவரின் பாய்ஸ், ஜீன்ஸ் படங்கள் தோல்வி அடைந்தன. 
ஷங்கரின் மதிப்பு வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது .
இவரின் கடைசிப் படமான எந்திரன் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா அளவில் அதிக செலவில் எடுக்கப் பட்டு இந்திய அளவிலேயே அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது.தமிழ்சினிமாவின் இயக்குனர் இமயமான K.பாலச்சந்தர் எந்திரனை இந்தியாவின் அவதார் எனவும் ஷங்கரை இந்தியாவின் கமரூன் என வர்ணித்ததில் இருந்து ஷங்கரின் திறமையை அறியலாம். எந்திரன் படத்தின் மூலம் உலக அளவில் பாரட்டுக்களை அள்ளிகுவித்துள்ளர். 
தற்போது முதற் தடவையாக ரீமேக் படம் ஒன்றை (நண்பன் )எடுத்து வருகிறார் .நண்பன் மிக குறைந்த நாட்களில் படப்பிடிக்கப் பட்டு எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. பின்னர் எந்திரன் -2  எடுக்கலாம்  என செய்தி  அடிபடுகிறது .
A.R.முருகதாஸ்  
தமிழில் இதுவரை மூன்று படங்களே இயக்கியிருந்தாலும் முன்னணி இடத்தை பிடித்து விட்டார் முருகதாஸ் .அஜீத்குமாருக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் தீனா. முதல் படத்தையே அசத்தலாக கொடுத்திருந்தார் முருகதாஸ் .தல என்று அஜித்தை அழைக்கும் வழக்கம் இந்த படத்தாலேயே ஏற்பட்டது .அடுத்து கப்டனை வைத்து ரமணா என்ற படத்தை கொடுத்தார் .புரட்சிகரமான கருத்துக்களை விறுவிறுப்பாக சொல்லியிருந்தார் .படம் பெரு வெற்றி பெற்றது .அடுத்து சூர்யாவை வைத்து வித்தியாசமான கதையுடன் (short time memory) கஜினி படத்தை எடுத்தார்     .கஜினி  திரைப்படம்   மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார் .memento (2000) என்ற  ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் கஜினி என்றாலும் அதை சிறந்த முறையில் படமாக்கி வெற்றி பெற செய்தார் .பின் ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தை எடுத்தார். அமீர்  கான் நடிக்க ஹிந்தியில் தனது கஜினியை ரீமேக் செய்தார் கஜினி அதுவரை வெளியாகிய ஹிந்தி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது (பின்னர் வந்த படங்கள் அந்த சாதனையை முறியடித்து விட்டன) .இந்த வெற்றியின் பின் இந்திய அளவில் பேசப்படும்  முன்னணி இயக்குனர் ஆனார் .

தற்போது ஏழாம் அறிவு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் மீதான எதிர் பார்ப்பு எகிறியுள்ளது .வரலாற்று கதையை உயர் தொழினுட்பங்களை கொண்டு இயக்குகிறார் .   இந்த படமும் வெற்றி பெற்றால் எங்கேயோ போய்விடுவார் .இது முடிய விஜயை வைத்து படம் எடுக்கவிருப்பதாக அறிய வருகிறது. 

அடுத்த  பதிவில்  கௌதம், பாலா ஆகிய இயக்குனர்களை  பற்றி  பார்க்கலாம்

.who is the best director of tamil cinima என்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள். 

Post Comment

Saturday, July 2, 2011

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ?

தமிழ் சினிமாவில் இப்போதைய கால கட்டத்தில் படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் இயக்குனரின் பங்கு ஒரு படி உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.எந்த பெரிய நடிகராய் இருந்தாலும் படம் வெற்றி பெற படத்தில் சரக்கு இருக்க வேண்டும் .நடிகரை நம்பி படம் ஓடிய காலம் மலையேறி விட்டது. சிறிது காலத்தின் முன் நடிகர்,இயக்குனர் வாங்கும் சம்பளத்துக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. ஆனால் இப்போதைய இயக்குனர் வாங்கும் சம்பளமே அவர்களின் பெறுமதி உயர்ந்து விட்டதை காட்டி நிற்கிறது 
அந்தவகையில் தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி என் மனதில் விழைந்த போது அவர்களை பற்றி அலசிப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த ஆக்கம்.

மணிரத்னம் (பிறப்பு ஜூன்-௦2-1956)
தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லாமல் உலக அளவில் பேசப்படும் இயக்குனர் இவர் ஆவார்.டைம்ஸ் இதழின் உலகின் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக இவரின் நாயகன் படம் தேர்வாகியமை இவர் உலகத் தரம் வாய்ந்தவர் என்பதற்கு சான்றாகும் .யாரிடமுமே உதவி இயக்குனராய் பணியாற்றாமலேயே தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி(கன்னடம்)படத்தை இயக்கினார் .இவரின் ரோஜா திரைப்படம் தேசிய விருதை வாங்கியது மட்டுமில்லாமல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மானை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது .அனேகமாக நடுத்தர மக்களை மையமாக கொண்டு கதை சொல்வதே இவரின் பாணி .இவரின் படங்களில்  எனக்கு பிடித்த படம் என்றால் தளபதி யைத்தான் சொல்வேன்.மஹா பாரத     கதையை தழுவி படத்தை அருமையாக எடுத்திருப்பார் .ரோஜா ,மௌனராகம் ,நாயகன் ,அக்னி நட்சத்திரம் போன்றவையும் என்னை கவர்ந்த படங்கள் .அலைபாயுதே  என்ற அருமையான  காதல்  கதையையும்  வெற்றிகரமாக  கொடுத்தவர்  .இவரின் இன்னொரு சிறப்பு என்னவெனில் இவர் இயக்கிய படங்களுக்கு இருவர் மட்டுமே இசையமைத்துள்ளனர்  .அதிலும் ரோஜாவுக்கு  முதல்  வரையான படங்களுக்கு இசைஞானி இளையராஜாவும் அதற்குப் பின் வந்த இன்றுவரையான படங்களுக்கு a.r.ரஹ்மானும் மட்டும்தான் இசை அமைத்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்


என்னமோ தெரியவில்லை இவர் இயக்கிய ஆரம்ப காலப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றதுடன் இப்போதைய படங்களில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளன.இவரின் படங்கள் பாமர மக்களுக்கு புரிவதில்லை என்ற குறையும் காணப்படுகிறது .ஆய்த எழுத்து நல்ல உதாரணமாகும் .இவர் இப்போது தனது படத்தை பல மொழிகளில் எடுக்கும் உத்தியை கையாண்டு வருகிறார்.இவர் கடைசியாய்  எடுத்த ஐந்து படங்களில் நான்கு தோல்வியை தழுவிய நிலையில்{குரு மட்டுமே வெற்றி ) பொன்னியின் செல்வன் எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுக்கவிருந்தார் .எனினும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு விட்டது .அடுத்த படம் எது என உறுதியாக தெரியாத நிலையில் அவரின் அடுத்த பட அறிவுப்புக்காக ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்தாலும் இவரின் மவுசு கொஞ்சமும் குறைந்ததாக    தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.  

இந்த பதிவில் மணிரத்னத்தை பற்றி மட்டும் சொல்லியதால் சிறந்த இயக்குனர் மணி சார்தான் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள் தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குனர்கள் பலர் இருப்பதால் அனைவரையும் ஒரே பதிவில் கொண்டு வர முடியவில்லை .எனவே அடுத்தடுத்த பதிவுகளில்    ஏனைய இயக்குனர்பற்றி எழுதுகிறேன் .
who is the best director of tamil cinema என்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள் 

  முக்கிய குறிப்பு   
நான் பொழுதுபோக்கிற்காக மட்டும் எழுதும் சாதாரண சினிமா ரசிகன் .எனது பதிவில் பிழைகள் இருக்கலாம். தயவு செய்து குறைகளை ஏற்று பிழைகளை சுட்டிக்காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் .

நீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை# facebook .
..

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...