Wednesday, April 25, 2012

தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார் -2?

தமிழ் சினிமாவில் வந்த ரீமேக் படங்களை அலசுவதே இந்த பதிவின் நோக்கம் .இது ஒரு தொடர் பதிவு இதன் முதல் பாகத்தை படிக்க 

போக்கிரி .
2007 பொங்கலுக்கு வெளிவந்த போக்கிரி இன்று வரை மாஸ் படங்களுக்கு முன் உதாரணமான படங்களில் ஒன்றாக திகழ்கிறது .ரஜினிக்கு ஒரு பாட்சா போல அஜித்துக்கு ஒரு தீனா போல விக்ரமுக்கு ஒரு சாமி போல விஜய்க்கு போக்கிரி .பிரபுதேவா தனது முதல் தெலுங்கு படமான பௌர்ணமி தோல்விக்கு பின் விஜயால் இப்படத்தை இயக்க தேர்ந்தர்டுக்கப்பட்டார் .அசின்,பிரகாஸ்ராஜ் ,வடிவேலு ,நாசர் இணைந்து நடித்தனர் . போலீஸ் வேடத்தில் நடித்த முதல் படம் இதுவாகும் .போட்டிக்கு வெளியான ஆழ்வார்,தாமிரபரணி படங்களை தோற்கடித்துபிளாக் பஸ்ட்டர் ஆனது .200 வது நாள் விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டார் .விஜய் வெறியர்களுக்கு பிடித்த விஜய் படங்களில் முதல் இடத்தில் இன்றுவரை இதுதான் இருக்கிறது என்பது என் கருத்து .

போக்கிரி இதே பெயரில்2006 தெலுங்கில் வெளியான பூரி ஜெகநாத் இயக்கிய படத்தின் ரீமேக் ஆகும் .மகேஷ் பாபு நடித்த இப்படத்தில் இலியானா பிரகாஸ் ராஜ்,நாசர் இணைந்து நடித்தனர் .தெலுங்கில் பிளாக் பஸ்ட்டர் ஆகி பல விருதுகளையும் வென்றது .இரு படங்களுக்கும் மணி சர்மா இசை அமைத்திருந்தார் . போக்கிரியில் வரும் 'டோலு டோலு ' பாடல் தெலுங்கு பாடலின் தமிழ் பதிப்பு ஆகும் .http://www.youtube.com/watch?v=SQxeC8LMx24
தமிழில் மெஹா ஹிட் ஆகியதால் ஹிந்தியிலும் போக்கிரியை WANTED என்ற பெயரில் சல்மான் கானை வைத்து படமாக்கி அங்கேயும் பெரு வெற்றி பெற்றார் பிரபுதேவா . தோல்வியில் துவண்டு கொண்டிருந்த சல்மானை தூக்கி நிறுத்தி யதுடன் வசூலில் சாதனை புரிந்தது .இப்படம் 2010 இல் கன்னடத்திலும் (PORKI )ரீமேக் செய்யப்பட்டது .நான்கு மொழியிலும் பிரகாஷ் ராஜ் ஒரே பாத்திரத்தை செய்து இருந்தார் .

வில்லு .
அட இதுவும் ரீமேக் படமா என்று நீங்கள் கேட்கலாம் .இதை ரீமேக் பட்டியலில் சேர்க்க முடியாது .எனினும் கிட்ட தட்ட ரீமேக் தான் .1999 இல் வெளியான பாலிவுட் படமான SOLDIER படத்தின் தழுவல் தான் வில்லு ..வில்லு தோல்வி அடைந்தது .
சுறா மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் ஒன்றின் ரீமேக் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் படத்தின் ஆன்லைன் கதை மட்டுமே எடுக்கப் பட்டது .

காவலன்
2010 இல் வெளிவந்தது .தொடர் தோல்வி ,போராட்டங்களுக்கு பின் வெளிவந்து விஜய்க்கு மீட்சியை கொடுத்தது இந்த படம் .மீண்டும் சித்திக் .பிரண்ட்ஸ் போலவே மலையாளத்தில் தான் இயக்கிய போடி காட் படத்தை தமிழில் ரீமேக் செய்தார் .அசின் ,வடிவேலு ,ராஜ்கிரண் இணைந்து நடித்த வித்யாசாகர் இசையில்இப்படம் ஹிட் ஆகியது .அதைவிட சாதகமான விமர்சனங்களை படத்துக்கும் விஜய்க்கும் பெற்று கொடுத்தது .சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச பட விழாவில் கலந்து கொண்டமை படத்தின் சிறப்பம்சம் ஆகும் .
2010 இல் மலையாளத்தில் வெளிவந்த போடி காட் BODYGUARD  .திலீப்,நயன்தார நடித்த இப்படம் மலையாளத்தில் சுமாராகவே போனது.
ஹிந்தியிலும் இதை போடி காட் என்ற பெயரில் சல்மான் கான் கரீனா கபூரை  வைத்து ரீமேக் செய்து வெற்றி பெற்றார் சித்திக் .அதை விட தெலுங்கில் வெங்கடேஷ் த்ரிஷா நடிப்பிலும் கன்னடம் ,பெங்காலி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப் பட்டது .
வேலாயுதம் .
இதுவும் உத்தியோகபூர்வமான ரீமேக் அல்ல .2000 இல் தெலுங்கில் வெளியான ஆசாத் பட ரீமேக் என்று கூறப் பட்டாலும் இயக்குனர் ராஜா அதை மறுத்துள்ளார் .அந்த கதையை வைத்து தான் திரைக்கதை எழுதியதாக அறிவித்தார் .எனவே வேலாயுதம் ரீமேக் அல்ல .நான் ஆசாத் படத்தையும் பார்த்து விட்டேன் .எனக்கு என்னமோ ரீமேக் போலதான் தெரியுது.உங்களுக்கு?

நண்பன். 

நண்பன் இப்போது வந்ததால் எதுவும் பெரிதாக சொல்ல தேவை இல்லை .ஷங்கர் இயக்கத்தில் விஜய்,ஜீவா ,ஸ்ரீகாந்த்மற்றும் பலர் நடித்த இப்படம் பிளாக் பஸ்ட்டர் ஆகியுள்ளது .அனைவராலும் பாராட்டப்பட்டது . இது2010இல் ஹிந்தியில் வெளிவந்த 3IDIOTS  படத்தின் ரீமேக் ஆகும் .
3 IDIOTS  வெளியாகி பல சாதனைகளை முறியடித்து வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது .ராஜ்கிமார் ஹிரானி இயக்கிய இப்படம்2004 இல் வெளியா ன Five Point Someone – What not to do at IIT! by CHEATAN Bhagat என்ற நூலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது .அமீர் கான்,மாதவன் ,சர்மான் ஜோஷி முதலியோர் நடித்து இருந்தனர் .

சரி விஜய் நடித்த பெரும்பாலான ரீமேக் படங்களையும் அலசி விட்டோம் இன்னும் சில உண்டு. இதுவரை நடித்த படம் 53.அதிலே ரீமேக் 13(வேலாயுதம் சேர்த்து,வில்லு ,சுறா சேர்க்க வில்லை).இவற்றில் யூத்,வசீகரா ,ஆதி ஆகிய மூன்று படங்கள் மட்டும் தோல்வி அடைந்துள்ளன .எனவே ரீமேக் படங்கள் விஜய்க்கு பெருமளவில் உதவின என்று சொல்லலாம் .கில்லி,போக்கிரி,நண்பன் ஆகிய மூன்றும் விஜயின் காரியரில் சிறந்த படங்களில் முதன்மையான இடத்தை பெற்று விட்டன .சித்திக்  இரு படங்களை வெற்றிகரமாக ரீமேக் செய்து இருந்தார் .செல்வா பாரதியும் இரு படங்களை ரீமேக் செய்த போதும் ஒன்று மட்டுமே வென்றது . 
இதை விட விஜயை சினிமாவில் நிலை நிறுத்திய படம் ஒன்றும் ரீமேக் தான்  அது எது .?
ஓகே அப்போ விஜய்தான் ரீமேக் சூப்பர் ஸ்டார் என்ற முடிவுக்கு வரலாமா ?.அப்படி என்றால் மற்ற நடிகர்கள் எவரும் ரீமேக் படங்களில் நடிக்க வில்லையா ? .......................
தொடரும்.........

Post Comment

Monday, April 23, 2012

தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார் ?

ரீமேக் என்றால் என்ன? .ஒரு மொழியில் ஏற்கனவே வெளி வந்த படத்தை உரிய அனுமதி பெற்று இன்னொரு மொழியில் (சில வேலை அதே மொழியில் )படமாக்குதல் .ரீமேக் படங்கள் உருவாவதன் நோக்கம் சொல்லி தெரிய வேண்டியதில்லை .ஏற்கனவே வென்ற படம் என்பதால் வெற்றி வாய்ப்பு ஐம்பது வீதத்துக்கு மேல் ஏலவே உறுதி செய்யப் படுகிறது .எனவே ரீமேக் படங்கள் சினி உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன .

தமிழ் சினிமாவில் வந்த ரீமேக் படங்களை அலசுவதே இந்த பதிவின் நோக்கம் .தமிழ் சினிமாவின் தற்போதைய கால கட்டத்தில் ரீமேக் என்றாலே நினைவுக்கு வருபவர் இருவர் .ஒன்று ராஜா .மற்றது அடுத்த சூப்பர் ஸ்டார் நாளைய சூப்பர் ஸ்டார் என்பவற்றுடன் ரீமேக் சூப்பர் ஸ்டார் எனவும் அழைக்கப் படும் விஜய் .இந்த பட்டத்துக்கு இவர் பொருத்தமானவரா ? என்பதை முதலில் ஆராய விழைகையில் கிடைக்கப் பெற்ற தகவலகள் இதோ ......விஜய்   நடித்த  சகல  ரீமேக் படங்களும் இவைதான்  

பிரியமானவளே 
எனக்கு தெரிந்து விஜய் முதன் முதலில் நடித்த ரீமேக் படம் பிரியமானவளே .2000 ம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்தது .ஆனால் அதற்கு முன்னரே ரீமேக் படங்களில் நடித்து இருக்கிறார் . சிம்ரன்,s.p.பாலசுப்ரமணியம்,விவேக் ஆகியோர் இணைந்து நடிக்க ராஜ்குமார் இசையில் செல்வபாரதி இயக்கி இருந்தார் .இது ஒரு வெற்றி படமாக அமைந்தது .இது 1996 இல் வெளி வந்த பவித்திர பந்தம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும் .வெங்கடேஷ் ,சௌந்தர்யா ஆகியோர் நடிக்க  Muthyala Subbaiah இயக்கியிருந்தார் .s.p .பாலசுப்ரமணியம் இதிலும் அதே வேடத்தில் நடித்து இருப்பார். .1999 இல் Hum Aapke Dil Mein Rehte ஹைன்   என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப் பட்டது.இங்கு அணில் கபூர் ,கஜோல் நடித்தனர். என்ன புதுமை என்றால் மூன்று படங்களிலும் ஹீரோவின் பெயர் விஜய்.
பிரண்ட்ஸ்.

2001 இல் வெளிவந்த இப்படம் சூர்யா,ரமேஷ்கண்ணா ,தேவயாணி,விஜயலக்ஸ்மி ஆகியோர் இணைந்து நடித்தனர் .சித்திக் இயக்கிய இப்படத்துக்கு இசை இளையராஜா .பொங்கலுக்கு வெளியான இப்படம் விஜயின் காரியரில் ஒரு சூப்பர் ஹிட் ஆக அமைந்தது .
இது 1999 இல் மலையாளத்தில் அதே பெயரில் வெளிவந்த சித்திக் இயக்கிய படத்தின் ரீமேக் ஆகும் .ஜெயராம்,முகேஷ்,மீனா ஆகியோரின் நடிப்பில் இளையராஜா இசை அமைத்து இருந்தார்.
பத்ரி .

2001 இல் வெளியான இப்படத்தில் பூமிகா,மோனல்,விவேக் ஆகியோர் இணைந்து நடித்தனர் . P. A. அருண் பிரசாத் இயக்கிய இப்படம் அவரால்1999 இல் தெலுங்கில் இயக்கப் பட்ட தம்முடு (தம்பி) படத்தின் ரீமேக் ஆகும் .தெலுங்கில் பெரு வெற்றி அடைந்த இப்படம் அதில் ஹீரோவாய் நடித்த பவன் கல்யானுக்குக்கு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி இருந்தது .இரு மொழிகளிலும் இசை ரமணா கோகுலா .எனினும் தமிழில் பெரியளவில்வெற்றியை பெற முடிய வில்லை .இப்படம் கன்னடத்திலும் பூரி ஜெகநாத் ஆல் யுவராஜா எனும் பெயரில் ரீமேக் செய்யப் பட்டது .

யூத்.  


வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2002 இல் வெளியானது ஷகீன் கான் ,விவேக் இணைந்து நடித்தனர் .மணி சர்மா இசையில் வெளியான இந்த படம் சாதகமான விமர்சனங்களை பெற்ற போதும்தோல்வியை தழுவியது . 2000 ம் ஆண்டு ராம் பிரசாத் இயக்கத்தில் மணி சர்மா இசையில் வேணுதொட்டேம்புடி ,ஷாகீன் நடிப்பில் வெளியான வெற்றி படம் சிறு நவ்வுடோ படத்தின் ரீமேக் தான் யூத் .
வசீகரா .


2003 பொங்கலுக்கு வெளிவந்த படம் செல்வபாரதி இயக்கினார் .சினேகா வடிவேலு இணைந்து நடிக்க ராஜ்குமார் இசை அமைத்து இருந்தார் .விஜயின் நடிப்பு நன்றாக இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்காததால் தோல்வி அடைந்தது .இது 2001இல் வெளியான நுவ்வ  நாக்கு  நசாவ் தெலுங்கு வெற்றி படத்தின் ரீமேக் ஆகும் .விஜயபாஸ்கர் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்த இப்படம் கன்னடத்திலும் உபேந்திரா நடிப்பில் Gowramma எனும் பெயரில் ரீமேக் செய்யப் பட்டது .


கில்லி 
2004 புது வருடத்துக்கு வெளியான கில்லி விஜயின் அதுவரை வெளிவந்த சகல விஜய் படங்களில் வசூலையும் முறியடித்து பெரு வெற்றி பெற்றது .தரணியின் இயக்கத்தில் வித்தியாசாகரின் இசையில் வெளிவந்த இப்படம் அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றது .கமர்சியல் சினிமாவின் உச்ச படங்களில் ஒன்றாக இது மிளிர்கிறது..6 கோடி பட்ஜெட் இல் தயாரிக்கப் பட்ட இப்படம் 250 நாட்களுக்கு மேலாக ஓடி40 கோடிகளுக்கு மேல் வசூலித்தது .அதுவரை சாதனையாக இருந்த படையப்பா படத்தின் வசூலை முறியடித்தது .http://www.indiaglitz.com/channels/tamil/article/9966.html .இந்த படம் விஜய் ரசிகர் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரித்தது .குறிப்பாக இப்படத்தில் காமெடியிலும் புகுந்து கபடி ஆடி பல பெண்கள் சிறுவர்களால் ரசிக்க பட்டார் .அப்படி போடு பாடல் தமிழ் சினிமா பாடல்களில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றது என்னை பொறுத்த வரை விஜயின் சினிமா வரலாற்றில் இதை விஞ்சும் வகையில் இதுவரை ஒரு படமும் இல்லை.
.
இந்த கில்லி 2003 இல் தெலுங்கில் வெளிவந்த ஒக்கடு படத்தின் ரீமேக் ஆகும் .குணசேகர் இயக்கிய இப்படம் மகேஸ்பாபு பூமிகா சாவ்லா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி 30 கோடி வசூலித்து பிளாக் பஸ்ட்டர் ஆனது .பிரகாஷ்ராஜ் இரு படங்களிலும் நடித்து இருந்தார் .மணி ஷர்மா இசையில் இப்படம் மகேஷ் பாபுவுக்கு ஒரு மைல் கல் .இந்த படத்தை நான் இதுவரை பார்க்க வில்லை எனவே எது சிறந்தது என்று என்னால் கூற முடியாது . இப்படம் ஒரியா விலும்Mate Anidela Lakhye Phaguna.எனும் பெயரில் ரீமேக் செய்யப் பட்டது குறிப்பிட தக்கது 

ஆதி,
ரமணா இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சோபா சந்திரசேகர் தயாரிப்பில் 2006 பொங்கலுக்கு ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷாமுக்கிய வேடத்தில் நடிக்க விவேக்பிரகாஷ்ராஜ் சாய் குமார் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு வித்யாசாகர்இசையமைத்துள்ளார். பழிவாங்கும் கதையை கொண்ட இப் படம் சுமாரான வசூலை பெற்றாலும் தோல்வி படமாகவே அமைந்து விட்டது .இதனுடன் போட்டிக்கு வெளியான பரமசிவன் வெற்றி பெற வில்லை ஆயினும் ஆதியை விட சுமாரான வசூலை பெற்றது .

ஆதி தெலுங்கில் பெரு வெற்றி பெற்ற அதனொக்கடே  படத்தின் ரீமேக் ஆகும் .2005 இல் சுரேந்தர் ரெட்டியால் இயக்கப் பட்ட இந்த படம்  கல்யான் ராம்,சிந்து துலானி ஆகியோர்  நடிப்பில் வெளிவந்தது இசை மணிசர்மா .


இதன் ஹிந்தி பதிப்பு இன்டர்நேஷனல் டான் .
#########################################################################
இந்த ரீமேக் படங்கள் பற்றிய பதிவு தொடரும் .விஜய் மட்டும் தான் ரீமேக் படங்களில் நடிக்கிறாரா ஏனையவர்கள் எவ்வாறு என்று ஆராய்ந்த போது அதிர்ச்சி ஏற்பட்டது .தமிழ் சினிமாவின் ரீமேக் படங்கள் பெரும்பாலும் ஆராயப் படும் அடுத்து வரும் பதிவுகளில் .......

Post Comment

Sunday, April 15, 2012

OK OK -not OK


இந்த வருடம் ரொம்பவே எதிர்பார்த்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி .பாஸ் என்கிற பாஸ்கரன் படம்  ஒரு விடுமுறையில் தியேட்டருக்கு சென்ற போது முதல் காட்சி பார்த்தது . அந்த படம் பார்க்க வேண்டும் என்று எதிர் பார்த்து போக வில்லை .அந்த படம் பார்த்த பின் தான் ராஜேஷ் என்பவரை பற்றி அறிந்தேன் . அதன் பின்தான் சிவா மனசுல சக்தி தொலைக்காட்சியில் பார்த்திருந்தேன் . அவரின் வெற்றி போர்முலா வித்தியாசமானது .ஒரே விஷயத்தை வைத்து கொண்டு தொடர் வெற்றி கொடுப்பது இலகுவான காரியம் இல்லை .ஷங்கர் எவ்வளவு கோடிகளை கொட்டி  தொடர் வெற்றிக்காக மினக்கெடுகிறார் .பேரரசு வும் தொடக்கத்தில் வெற்றி போர்முலாவை கொண்டிருந்த போதும் தொடர்ந்து வெற்றி அளிக்கவில்லை .ராஜேஷ் ஒரே ஒருவரை மட்டும் நம்பி கதையே இல்லாமல் முழு நீள நகைசுவை படத்தை எடுத்து இருக்கிறார் .மூன்று படங்களிலுமே அந்த ஒருவர் சந்தானத்தின் பங்கு முக்கியமானது .ஒருகல் ஒரு கண்ணாடி முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று ரொம்பவே ஆவல் கொண்டு இருந்தேன் எனினும் சில பல காரணங்களால் அது முடியாமல் போய் விட்டது .முதல் காட்சி இல்லாவிட்டால் என்ன பிறகு பார்க்கலாம் தானே என்றால் நம்ம கொள்கை தடுக்கிறது .அதாங்க பார்த்தால் FIRST ஷோ பார்க்கணும் இல்லாட்டி இல்ல .எனினும் இந்த கொள்கையின் முக்கிய அம்சம் கதை தெரிந்தால் பிறகு பார்ப்பதில் சுவாரசியம் கெட்டு போகும் என்பது .எனினும் கதை என்ற ஒன்றே இதில் இல்லை என்பதால் கொள்கையை தளர்த்தலாமா என்று யோசிக்கிறேன் .என்னுடைய நண்பன் ஒருவனை LIGHTAA கேடடு   பார்த்தேன்.அவனோ என்னடா அறிக்கை எல்லாம் விட்டாய்என்று கலாய்க்க தொடங்கி விட்டான் .எனினும் எனக்கு மனதுக்குள் ஒரு புளுகம்  அட இவங்களும் நம்ம ப்ளாக் வாசிக்கிறாங்க என்று .
 ராஜேஷ் மனைவியுடன் 
   படம் பற்றி எனக்கு தெரிந்து ஒருவரும் குறை கூற வில்லை .நண்பனை கூட தூற்றிய நண்பர்கள் உண்டு .ஆனால் ஓகே ஓகே யை எல்லோரும் டபுள் ஓகே என்கிறார்கள் .எனக்கு மட்டும் not ஓகே ஆகி விட்டது .பவர் ஸ்ரார் இற்கு போட்டியாக ஒருவரை எதிர் பார்த்த நலன் விரும்பிகளுக்கு பலத்த அடியை கொடுத்து இருக்கிறார் உதய் .வாழ்த்துக்கள் உதய் வெற்றி பயணம் தொடர .ஆல் இன் ஆல் அழகு ராஜா .ராஜேஷின் அடுத்த படம் .பெயரே பட்டைய கிளப்புது எல்லே .

புது வருசத்துக்கு (இப்பவும் கொண்டாடுறாங்க தானே )ஒரே ஒரு படம் மட்டும் வெளியாகியதால் சினி உலகில் பெரிய பர பரப்பு ஒன்றும் இல்லை .தல தளபதி ரசிகர்கள் எதிர் பார்த்த இரு விடயங்கள் பில்லா டீசெர் மற்றும் துப்பாக்கி FIRST  லுக் .சொன்னபடி பில்லா TEASER  வெளி வந்து விட்டது .தல ரசிகர்களுக்கு விருந்துதான் .எவ்வளவு நாள்தான் தல ய கோட்டு சூட்டு கூலிங் கிளாஸ் ஓடு பார்ப்பது என்று ஒரு சலசலப்பு எழுவதையும் அவதானிக்க  முடிகிறது .விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் firstlook 20 ம் திகதிதான் வெளியாகும் என அறிவிக்கப் பட்டு இருக்கிறது .எனினும் மனம் தளராமல் ''தலைவர் படத்தை காசு கொடுத்தே ஒன்னுக்கு பல வாட்டி பார்ப்போம் இப்போ சும்மா வேற காட்டுறானுக பார்க்காமல் இருந்தா நல்லா இருக்குமான்னா ''ஜெயா டிவியில் வேலாயுதம் பார்த்தானுக .
மங்காத்தா-2 வா ,பில்லா -2 வா # confusion 
TITANIC
15 .04 .2012 உலக வரலாற்றில்   ஒரு முக்கியமான நாள் .உலகின் ஒரு கருப்பு சரித்திரம்   நடை பெற்று நூறு ஆண்டுகள் கழிகின்றன .உலகில் அழியா இடம் பெற்று விட்ட titanic கப்பல் மூழ்கிய துயர சம்பவத்தை இன்று உலகெங்கும் நினைவு கூறுகிறார்கள் .விபத்து நடந்த இடத்துக்கே சென்று கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது .இந்த விபத்தை மையமாக கொண்டு 1997  இல்  தயாரிக்கப் பட்ட titanic காதல் காவியம்  பற்றி தெரியாதவர்கள் விரல் விட்டு என்ன கூடியவர்களே .இந்த கப்பல் வரலாறு பற்றி மேலும் அறிய இவற்றை படியுங்கள் .


JHC YOUTH WING alumni fiesta-2012
இலங்கையில் புகழ் பூத்த கல்லூரிகளில்   ஒன்றான யாழ்ப்பாணம்   இந்து கல்லூரி  பழைய மாணவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப் பட்டு வெற்றிகரமாக செயற்படும் YOUTH  WING இன் வருடாந்த ஒன்று கூடல் அண்மையில் நடை பெற்றது .பழைய மாணவன் என்ற ரீதியில் நானும் பங்கு கொண்டேன் .வாழ்க்கையின் மிகவும் இனிமையான பருவமான கல்லூரி பருவத்து தோழர்கள் அனைவரையும் ஒன்றாக சந்திப்பது என்றால் சொல்லவும் வேண்டுமா .மிகவும் சிறப்பாக நடை பெற்ற இந்த நிகழ்ச்சி வாழ்க்கையின் இனிமையான தருணங்களில் ஒன்றாக இந்துவின் மைந்தர்கள் அனைவருக்கும் அமைந்து  இருக்கும்   என்பது திண்ணம் .எதிர்வரும் காலங்களிலும் இந்த வருடாந்த ஒன்று கூடல் திறம்பட நடைபெற வாழ்த்துக்கள் .
JHC YOUTH WING alumni fiesta-2012


Post Comment

Saturday, April 7, 2012

இந்த வருடத்தின் டாப் நடிகர் யார் ?

தமிழ் திரையுலகில் இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறையும் போல தெரிகிறது .தயாரிப்பாளர் சங்கங்களுக்கு இடையிலான மோதல் முக்கிய காரணம் .இதை நான் சொல்ல வந்தது ஏனெனில் இம்முறை புது வருசத்துக்கு பில்லா-2,மாற்றான் ,துப்பாக்கி என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் .ஒரே ஒரு படமாக ஒரு கல் ஒரு கண்ணாடி மட்டுமே வருகிறது .மே இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பில்லா -2 ஜூனுக்கு தள்ளி போகிறது .துப்பாக்கி தீபாவளி க்காவது வருமா தெரியவில்லை .தமிழ் சினிமா சம்பந்தமாக வெளிவரும் முன்னணி சஞ்சிகை யான http://www.behindwoods.com/ ஒவ்வொரு வருடமும் டாப் நடிகர் பட்டியல் வெளியிடுவது வழமை .முதல் இரண்டு இடங்களும் அனைவரும் எதிர்பார்ப்பது போல ரஜினி ,கமல் பெற்று வருகின்றனர் .மூன்றாவது இடத்தை சில வருடங்களாக சூர்யா நிரப்பி வந்தார் ..ஆனால் கடந்த வருடம் விஜயின் எழுச்சி மீண்டும் அவரை மூன்றாம் இடத்தில் அமர்த்த தலயும் வெற்றிக் கனியை பறித்து ஐந்திலிருந்து நான்குக்கு  முன்னேற சூர்யா ஐந்தாம் இடத்துக்கு தள்ளப் பட்டார் .விக்ரம் ,தனுஷ் ,சிம்பு ஆகியோர் முறையே 6,7,8 ம் இடங்களில் உள்ளனர்.  


.சூர்யாவின் வெற்றி போர்முலா வை இப்போது விஜய்,அஜித் யும் கடைப்பிடிப்பதால் இந்த வருட முடிவில் யார் முன்னிலை வகிக்க போகிறார்களோ தெரியவில்லை .ஏனெனில் துப்பாக்கி ,மாற்றான் ,பில்லா-2 மூன்றுமே எதிர்பார்க்கப் படும் படங்கள் .விஜய் ஏற்கனவே நண்பனுடன் முன்னிலையில் இருக்கிறார்.  
.
தல நடந்து பார்த்திருப்ப தல சிரித்து பார்த்திருப்ப தல நடித்து பார்த்திருப்ப ஏன் தல தொப்பைய கூட பார்த்திருப்ப ஆனா தல தூங்கி பாத்திருக்கியா பாத்திருக்கியா பாத்திருக்கியா....................

##################################################################


அண்மையில் பார்த்த ஹிந்தி படம் .ராப் நே பனாஜோடி .படத்தின் கதை என்னவெனில் தன்னுடையபேராசிரியரின் மகளான தானியாவின் திருமணத்துக்கு போயிருக்கும், சுரீந்தர் சகாய் (ஷாருக்), அங்கே தானியாவை (அனுஷ்கா சர்மா )பார்த்து வியந்து நிற்கிறார் அவருக்கு வர இருக்கும் மணமகன் ஓரு விபத்தில் இறந்து போக, பேராசிரியர்  தன் மகள் தானியாவை, ஷாருக்குக்கு கைபிடித்து கொடுத்து விட்டு, இறந்து விடுகிறார். பின்பு ஷாருக் தானியாவை மணந்து அம்ரிஸ்டர் திரும்புகிறார். தன்னை விருப்பமில்லாமல் திருமணம் செய்த மனைவியின் அன்பை பெற, மிகவும் யூத்புல்லான ஓரு இளைஞனாக மாறி, தானியா விரும்பிய சூப்பர் டான்ஸ் ஜோடி போட்டியில் அவருக்கு ஜோடியாய் சேரும் அளவிற்கு மாறிவிடுகிறார். ஓரு கட்டத்தில் தானியாவுக்கு ஒரே குழப்பம், தான் விரும்புவது ராஜ் யையா அல்லது சுரீந்தரையா..? என்று.கதை யதார்த்தத்துக்கு சற்றுமே ஒத்து வராதது .தன்னுடைய புருஷனை மீசை இல்லாமல் மனைவியால்அடையாளம் காண முடியாதா ?
எனினும் சாருக் ரசிக்கும் படி நடித்து இருக்கிறார் .சூரி ,ராஜ் என இரு பாத்திரங்களிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார் .ஒளிப்பதிவு மிகவும் அருமை .அம்ரிஸ்டர் நகரின் அழகாய் தத்ரூபமாக வெளிப் படுத்தி இருக்கிறார்கள் .ஆங்கில உப தலைப்புகளின் உதவியுடன் பார்த்த போதும் அலுக்கவில்லை .டான் ,ஓம் சாந்தி ஓம்,உயிரே (தமிழ்),டான் -2 இல் இல்லாத ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை பார்த்தேன் .அடுத்த ஷாருக் படம் பார்க்க ஆவல் .


###########################################################################
மணிரத்னம்
என்னை கவர்ந்த இயக்குனர்களில் முதன்மையானவர்மணிரத்னம்.அவரின் படங்களை தேடி பார்த்து வருகின்றேன் .முன்னரே பார்த்த படங்களானாலும் மீண்டும் ஒரு முறை மணி எவ்வாறு frame  களை எடுத்து இருக்கிறார் என அறிய திருப்பி பார்க்கிறேன் .மணி ரத்னத்தின் சமீபத்திய படங்கள் சொல்லில் கொள்ளும்படி வசூலில் ஜெயிக்கவில்லை .இவரின் அடுத்த படம் கடல் மீனவர்களின் வாழ்க்கையை தனக்கே உரிய பாணியில் புதுமுகங்களை வைத்து (கார்த்திக் மகன் கெளதம்)எடுத்து வருகிறார் .வழமை போக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள கடலை ஜெமினி தயாரிக்கிறது .கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்ஏற்கனவே கடல் சிறிதளவில் இழையோடி இருக்கும் .வழமை போல இசைப்புயல் இசை அமைக்கிறார் .
கடலுக்காக கடலில் discussion 

தளபதிக்கு நடிப்பு சொல்லி தருகிறார் 




######################################################################
நடிகர்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு பற்றி 1990-ல் குமுதத்தில் ஒரு கருத்து கணிப்பு வெளிவந்தது. அந்த படம் 
இவர்களின் இப்போதைய நிலையை வைத்து பார்க்கும் போது ரஜினியின் அபார வளர்ச்சி தெரிகிறது .விஜயகாந்தை விட கார்த்திக் ,சத்தியராஜ் முன்னிலை வகிப்பது ஆச்சரியப் பட வைக்கிறது . விஜயகாந்த் பின்னர் வந்த படங்கள்தான் அவரின் செல்வாக்கை உயர்த்தியிருக்க வேண்டும் .ராமராஜன் எனக்கு சினிமா தெரிந்த காலத்திலேயே காணமல் போய் விட்டார். பிரபு ,சத்தியராஜ் ஆகியோர் இன்றும் தமக்கு ஏற்ற கதா பாத்திரங்களில் பிஸி ஆக நடித்து  வருகிறார்கள் .கார்த்திக் திறமை இருந்தும் தன்னுடைய தீய பழக்கங்களால் விலகி உள்ளார் .ரஜினி ,கமல் தொடர்ந்து இப்போதும் அதே இடத்தை தக்க வைத்துள்ளது அவர்களின் திறமைக்கு கிடைத்த பரிசே ஆகும் (நடிகர் திலகம் பற்றி சொல்ல தேவை இல்லை).





Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...