Sunday, July 13, 2014

கவிஞர் வைரமுத்து-60

ச்சர்யம்... ஆனால் உண்மை. ஆண்டுகள் 60 தொடுகிறார் கவிஞர் வைரமுத்து. 60 வயதில் 45 ஆண்டுகளாகத் தமிழோடு வாழ்ந்துகொண்டிருப்பவர். கோவையில், ஜூலை 13-ல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது மணிவிழா.
60 காணும் வைரமுத்துவிடம் 60 கேள்விகள். அவசரத்திலும் அசராத பதில்கள்; அசாதாரணமான பதில்கள். இதோ...
1. ''இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார்த்த படம் எது?''
'''நாடோடி மன்னன்’. சினிமா என்ற பிம்பத்தை ஆறு வயதில் எனக்குள் கட்டி எழுப்பிய முதல் படம். இன்றும் ரசிக்கிறேன். 60-ல் இருந்து 6-க்குப் பயணப்படுகிறேன்!''
2. ''பிடித்த வாகனம்?''
''நான் ஓட்டிய முதல் வாகனம்தான் எனக்குப் பிடித்த வாகனம். சைக்கிள்!’'
3. ''தமிழ்நாட்டுப் பொதுவாழ்வில் நீங்கள் வியந்தது?''
''பெரியாரின் துணிச்சல்!''
4. ''கலைஞரின் பழைய படங்களில் ஒன்றை இப்போது ரீமேக் செய்ய வேண்டும் என்றால் உங்கள் தேர்வு எது?''
'''பராசக்தி’!''
5. ''கலைஞர் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது?''
'''என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தைச் சுத்தம் செய்கிறதே மீன், அதைப்போல...’!''
6. ''கண்ணதாசன், வாலி வரிகளில் பிடித்தவை?''
''நூற்றுக்கணக்கில் சொல்லலாம்...
'ஏழைகளின் ஆசையும்
கோவில்மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது?  - தர்மமே
மாறுபட்டால் எங்கு செல்வது?’ - இது கண்ணதாசன் வரிகள்.
'மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா? ’ - இது வாலி வரிகள். இன்னும் இப்படி எத்தனையோ!''
7. ''மெட்டுக்கு எழுதிய முதல் பாடல் எது... உங்களின் வரிகளுக்கு மெட்டு அமைக்கப்பட்ட முதல் பாடல் எது?''
''மெட்டுக்கு எழுதியது, 'இது ஒரு பொன்மாலைப் பொழுது...’; வரிகளுக்கு மெட்டு அமைக்கப்பட்டது, 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...’!''
8. ''முதன்முதலில் வாங்கிய சம்பளம்?''
''1976-ல் தமிழ்நாடு ஆட்சிமொழி ஆணையத்தில் முதல் மாதச் சம்பளமாக 652 ரூபாய் பெற்றேன். திரையுலகில் என் முதல் பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது...’க்காக பணக்கட்டு ஒன்றை எடுத்து நீட்டினார் பாரதிராஜா. அதில் இருந்து 50 ரூபாய் மட்டும் உருவிக்கொண்டேன்!''
9. ''சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகள் குறித்து?''
'''காதல் ஓவியம்’, 'மண்வாசனை’ இரண்டிலும் நடிக்க பாரதிராஜா அழைத்தார். புன்னகையோடு மறுத்துவிட்டேன். ஒருவேளை நடித்திருந்தால்... 'காதல் ஓவியம்’ வெற்றி பெற்றிருக்கலாம்; 'மண்வாசனை’ தோல்வி கண்டிருக்கலாம்!''
10. ''வைரமுத்து என்றவுடன் நினைவுக்கு வருவது உங்கள் வெள்ளை குர்தா. உங்களின் அடை யாளமாகிப்போன இந்த ஆடையை எப்போது முதல் அணியத் தொடங்கி னீர்கள்... அதற்கான காரணம் என்ன?''
''1987-ம் ஆண்டு முதல் அணியத் தொடங்கினேன். எல்லா வகை ஆடைகளையும் அணிந்து பார்த்த பிறகு, இதுதான் சரி என்று உடம்பு ஒப்புக்கொண்டது. உடம்பின் பேச்சைத் தான் உடை கேட்க வேண்டும்!''
11.''பிடித்த திருக்குறள் எது... ஏன்?''
'''ஊழையும் உப்பக்கம் காண்பர்   உலைவின்றித்
  தாழாது உஞற்று பவர்’
- தன்னம்பிக்கையின் உச்சம்!''
12.''உங்கள் வர்ணனையில் உங்களுக்குப் பிடித்த வரிகள்?''
'' 'சோழன் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்.
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்’!''
13. ''ரஜினி, கமல் தந்த மறக்க முடியாத பரிசு?''
''ரஜினி - தங்கச் சங்கிலி.
கமல் - எரிமலைக் குழம்பில் செய்த பேனா!''
14. ''உங்கள் அடையாளங்களுள் உங்கள் குரலும்  ஒன்று. குரலைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு முறைகள் ஏதேனும் கையாள்கிறீர்களா?''
''அப்படி ஒன்றும் இல்லை. குளிரூட்டப்பட்ட எதையும் பருகுவதும் இல்லை; உண்பதும் இல்லை!''
15. ''புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்போது என்ன எழுதித் தருவீர்கள்?''
''சிறகிருந்தால் போதும்
சிறியதுதான் வானம்!''
16.''பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் இயக்கியதில் பிடித்த படங்கள்?''
''பாலசந்தரின், 'அபூர்வ ராகங்கள்’, 'தண்ணீர் தண்ணீர்’. பாரதிராஜாவின் 'முதல் மரியாதை’, 'கிழக்குச் சீமையிலே’. மணிரத்னத்தின் 'நாயகன்’, 'இருவர்’.''
17. ''பிடித்த அயல்நாட்டுத் திரைப்படங்கள்?''
'''பென்ஹர்’, 'அவதார்’!''
18. ''பிடித்த அயல்நாடு?''
''சுவிட்சர்லாந்து.''
19. ''உங்களுக்குப் பிடித்த வரலாற்று நாயகன்?''
''ராஜராஜ சோழன்!''
20. ''ஜெயலலிதாவைச் சந்தித்தது உண்டா?''
''இரு முறை சந்தித்தது உண்டு. ஒன்று திருமண மேடையில்; மற்றொன்று திரைப்பட மேடையில்!''
21. ''எழுதுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்ட பாடலும், மிகக் குறைந்த நேரம் எடுத்துக்கொண்ட பாடலும் எது?''
''இரவு 2 மணிக்கு எழுதத் தொடங்கி அதிகாலை 5 மணிக்கு முடித்த பாடல், 'சங்கீத ஜாதி முல்லை...’;
'எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ...’ - நான் 10 நிமிடங்களில் எழுதியது!''
22. ''பிடித்த உணவு?''
''பசி வந்து உண்ணும் உணவு!''
23. ''மீண்டும் மீண்டும் திருத்தி எழுதிய பாடல்?''
'' 'வீரபாண்டிக் கோட்டையிலே...’!''
24. ''ரஜினியின் பன்ச் டயலாக்கில் உங்களுக்குப் பிடித்தது?''
''என் வழி... தனி வழி!''
25. ''உங்கள் கவிதைகள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?''
''ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், நார்வேஜியன்!''
26. ''தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரியுமா?''
''தெரியாது.''
27. ''பிடித்த வெளிநாட்டுப் பெண்மணிகள்?''
''மரியா ஷரபோவா, ஏஞ்சலீனா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ், செரீனா வில்லியம்ஸ்!''
28. ''மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகம்?''
Broken Wings (முறிந்த சிறகுகள்), கலீல் ஜிப்ரான் எழுதிய குறுங்காவியம்!''
29. '' 'கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ? குஷ்பு...’ என்றும், 'எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது...’ என்றும் இரண்டு பாடல்கள் குஷ்புவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதுகுறித்து குஷ்பு உங்களிடம் எதுவும் பேசியிருக்கிறாரா?''
''ஐஸ்வர்யா ராய் தவிர எந்தப் பாடல் குறித்தும், எந்த நடிகையும் என்னோடு பேசியது இல்லை!’
30. ''உங்கள் பாடல்களை அதிகம் பாடிய பாடகர், பாடகி யார்?''
''எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா.''
31. ''விவசாய அனுபவம் உண்டா?''
''பரம்பரைப் பிழைப்பே அதுதானே!''
32. ''வெண்மை தவிர உங்களுக்குப் பிடித்த நிறம்?''
''பச்சை.''
33. ''மறக்க முடியாத வாசகம்?''
''குடலில் ஒரு அவுன்ஸ் மலமும், மூளையில் ஒரு அவுன்ஸ் அவமானமும் மிச்சம் இல்லாத மனிதன் எவனும் இல்லை!''
34. ''பிடித்தது?''
''மேற்குத் தொடர்ச்சி மலைகள்!''
35. ''பிடிக்காதது?''
''ஒட்டடை, சிகரெட் வாசனை!''
36. ''எந்த நாட்டு மழை பிடிக்கும்?''
''மலேசிய மழை. காரணம், அதிசுத்தமானது!''
37. ''மறக்க முடியாத விபத்து?''
''என் தம்பிக்கு நேர்ந்தது!''
38. '' உங்கள் அப்பாவுடன் பேசிய கடைசி வார்த்தைகள்?''
'' 'தைரியமா இருங்க; நாங்க இருக்கோம்’!''
39. ''விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உங்கள் பாடல் வரிகளை, கவிதைகளை ரசித்ததாக யாரும் சொல்லிக் கேட்டது உண்டா?''
''ஆமாம். 'உங்களைப் பார்த்தால் பிய்த்துத் தின்றுவிடுவார்; அவ்வளவு பிரியம்’ என்று அவரைப் பார்த்தவர்கள் வந்து சொன்னார்கள்!''
40. ''உங்களை வியக்கவைத்த ஆங்கில வாசகம்?''
'' 'A quick brown fox jumps over the lazy dog’.’ ஆங்கிலத்தின் 26 எழுத்துகளும் இந்த ஒரே வாக்கியத்தில் அடக்கம்!''
41. ''நீங்கள் எழுதியதில் அதிகம் விற்பனையான புத்தகங்கள்?''
'''வைகறை மேகங்கள்’ இதுவரை 33 பதிப்புகள்; 'மூன்றாம் உலகப்போர்’ ஒரே ஆண்டில் 11 பதிப்புகள்!''
42. ''அப்துல் கலாமிடம் வியப்பது?''
''அரசியல் சாராத தேச மேம்பாடு!''
43. ''ஆறு தேசிய விருதுகள் எந்தெந்தப் பாடல்களுக்கு?''
'''பூங்காத்து திரும்புமா...’- முதல் மரியாதை, 'சின்னச் சின்ன ஆசை...’- ரோஜா, 'போறாளே பொன்னுத்தாயி...’ - கருத்தம்மா, 'முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்...’ - சங்கமம், 'ஒரு தெய்வம் தந்த பூவே...’ - கன்னத்தில் முத்தமிட்டால், 'கள்ளிக்காட்டில் பொறந்த தாயே...’- தென்மேற்குப் பருவக்காற்று!''
44. ''தமிழில் நீங்கள் பரிந்துரைக்கும் புதிய கவிதை நூல்கள்?''
'''எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது’ - தேவதச்சன், 'பூனை எழுதிய அறை’ - கல்யாண்ஜி, 'மாமத யானை’ - குட்டிரேவதி, 'தவளைக்கல் சிறுமி’ - கார்த்திக் நேத்தா, 'எனது மதுக்குடுவை’ - மாலதி மைத்ரி, 'அரைக்கணத்தின் புத்தகம்’ - சமயவேல், 'ஈ தனது பெயரை மறந்துபோனது’ - றஷ்மி.''
45. ''யாரை மறக்க முடியவில்லை?''
''சிவாஜியை. அவரை எரித்த தளத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில்தான் நான் குடியிருக் கிறேன். பழைய படங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர் நினைவு வந்து வாட்டுகிறது!''
46. ''உங்கள் பேனா அதிகம் எழுதிய வார்த்தை?''
''பல்லவி!''
47. ''பேரன் பேத்தியிடம் ரசிப்பது?''
''பேரனின் குறும்பு; பேத்தியின் அன்பு!''
48. ''நேற்று எழுதியதில் நாளை ஹிட் ஆகும் என்று நீங்கள் நினைக்கும் பாடல்?''
'''நண்பேன்டா’ என்ற படத்தில் நயன்தாராவைப் பார்த்து உதயநிதி பாடும் பாடல் ஒன்று:
'ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா?
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா?
நாலைந்து பேர்கள் பின்னால்  அலைந்தாரா?
நான்தான் உன் ஜோடி என்று பயந்தாரா?’ ''
49. ''அடிக்கடி முணுமுணுக்கும் எம்.ஜி.ஆர் பாடல்?''
'' 'மயக்கும் மாலைப் பொழுதே  நீ போ போ...’!''
50. ''சிவாஜி பாடல்?''
'' 'தூங்காத கண்ணென்று ஒன்று...’!''
51. ''திரையுலகுக்கு வெளியே உங்களின் நெருங்கிய நண்பர் யார்?''
''வசந்த பவன் ரவி!''
52. ''மற்ற பாடலாசிரியர்களோடு ஒப்பிடும்போது, சம்பளம் வாங்கியதில் சாதனை ஏதும் உண்டா?''
''வருமான வரி சரியாகக் கட்டுவதால், மனம் திறக்கிறேன். சில பாடல்களுக்கு இந்திப் பாடலாசிரியர்களைவிட அதிகம் பெற்றது உண்டு!''
53. ''நீங்கள் நாத்திகராக இருப்பதனால், ஏதேனும் சங்கடத்தைச் சந்தித்தது உண்டா?''
''சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். கடவுளே மன்னித்தாலும், மனிதர்கள் மன்னிக்க மாட்டார்கள்போல என்று தோன்றுகிறது!''
54. ''நீங்கள் ரசித்துக்கேட்ட அனுபவ மொழி?''
''முஸ்லிம் பெரியவர் ஒருவர் சொன்னது: 'நீ ராஜாவோ... பிச்சைக்காரனோ... உண்டது, உடுத்தது, கொண்டது, கொடுத்தது... இந்த நாலும்தான் மிச்சம்’!''
55. ''ஒரு குறுங்கதை சொல்ல முடியுமா?''
''பார்வையற்ற பெண்ணைக் காதலித்தான் ஒருவன். 'பார்வை கொடுத்தால் உன்னையே மணப்பேன்’ என்றாள் அவள். அவனும் பார்வை கொடுத்தான். கண்திறந்து பார்த்தவள் தன் காதலன் கண் இல்லாதவன் என்பதை கண்டு, 'நான் உன்னை மணக்க மாட்டேன்’ என்று மறுத்துவிட்டாள். காதலன் கண்ணீரோடு முணுமுணுத்தான், 'என்னை நிராகரித்தவளே... என் கண்ணை நிராகரிக்க முடியாதல்லவா?’ ''
56. ''உடல் நலத்தில் எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?''
''பற்கள், குடல், பாதங்கள்!''
57 ''நீண்ட நாட்களாகக் கடைப்பிடிக்கும் பழக்கம்?''
''ஒரு நாளில் ஒருவருக்காவது உதவி செய்வது!''
58. ''இனிவரும் தலைமுறையில் தமிழ் இருக்குமா?''
''தமிழ்நாட்டு எல்லைக்குள் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி இறுதிவரை தமிழை ஒரு பாடமாகப் படித்தாக வேண்டும் என்பது கட்டாயமானால், தமிழாசிரியர்கள் தங்கள் மொழித்திறத்தை மேம்படுத்திக்கொண்டால், தமிழ் வளர்ப்பதில் தங்களுக்கும் பொறுப்பு உண்டு என்று ஊடகங்கள் உறுதிகொண்டால், தமிழ் - வயிற்று மொழி அல்ல; வாழ்க்கை மொழி என தமிழர்கள் நம்பினால்... தமிழ் என்றும் இருக்கும்!''
59. ''மனிதனின் உண்மை முகம் எது?''
''எந்தத் துறையில் ஒருவன் பொருள் ஈட்டினானோ அல்லது புகழ் ஈட்டினானோ, அந்தத் துறையைக் கழித்துவிட்டு மிச்சப்படுவது எதுவோ அது!''
60. ''இந்த 60 என்ன சொல்கிறது?''
''சமூகம் உன்னை நினைக்க வேண்டும் என்று செயல்படாதே; சமூகத்தை நினைத்து நீ செயல்படு!''
நன்றி -விகடன் 

Post Comment

Friday, December 6, 2013

நெல்சன் மண்டேலா-ஒரு தொகுப்புகுடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப்
படிக்கத் தெரியாதவர் - ஆயினும் மகனைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைத்தார். 1938ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால் மண்டேலா; முதலில் "கெல்ட் டவுன்’’ கல்லூரியிலும் -
பிறகு "போர்ட்ஹேர்’’ கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். அப்போதுதான் அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத் தொடங்கியது. அங்கே வெளிப்பட்ட இன வேற்றுமைக் கொடுமையை எதிர்த்து இளைஞர் மண்டேலா தலைமையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படவே; கல்லூரி நிர்வாகம் மண்டேலாவை வெளியேற்றியது. ஆம் - மண்டேலாவுக்கு அவர் நடத்திய உரிமைப் போரில் கிடைத்த முதல் தண்டனை அது! மன்னிப்பு கேட்டுக் கொண்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டது. அதை மானப் பிரச்சினை என்று கூறி மறுத்து விட்டார்
மண்டேலா. அப்போது மண்டேலா, "எங்களுக்கு சுதந்திர உரிமை இல்லையென்றால், நான் அடைபட்டுள்ள சிறைச்சாலையே திருப்தி அளிக்கக் கூடியது’’ என்று கூறிவிட்டார். அவர் நடத்திய போராட்டங்களின்
தொடர்ச்சியாக நீண்ட கால சிறை வாழ்க்கையைத்தான் அவர் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. சிறைக் கொடுமைகளைப் பற்றி, "சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை. சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை
எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்" என்று விவரித்திருக்கிறார்.

அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.

1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது.

1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.

மண்டேலாவின் இந்தத் தியாக வாழ்க்கை தென்னாப்பிரிக்க நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இந்தப் பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டு புத்துலகம் காணத் துடிக்கின்ற ஏறுநடை இளைஞர்களுக்கெல்லாம் இதய கீதமாகும்.

Conclusion of his three-hour defence speech at his 1964 trial for sabotage and treason:
ANC member Nelson Mandela pictured in 1952
"I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve.
"But if needs be, it is an ideal for which I am prepared to die."
அமெரிக்க பத்திரிகைகளின் தலைப்பு செய்தி 

On his time imprisoned on Robben Island (from Nelson Mandela's autobiography, The Long Walk to Freedom, 1994):1994 இல் நெல்சன் மண்டேலோ வை ஜனாதிபதியாக்க வாக்களிப்பதற்காக  திரண்ட மக்கள் கூட்டம் .

தென் ஆப்ரிக்காவின் தந்தையாக அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளாக சிறைவாசத்தை விட்டு வெளியில் வந்த தருணம் அந்நாட்டு கருப்பின மக்களிடையே மிக உணர்ச்சி மிக்கதாக இருந்தது. அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக தென் ஆப்ரிக்க பென்ஸ் தொழிலாளர்கள் மண்டேலாவுக்கு கார் ஒன்றை பரிசளிக்க விரும்பினர்.   

மடிபா என்ற நெல்சன் மண்டேலாவின் செல்லப் பெயரில் இந்த காரை மடிபா மெர்க் என்று அழைத்தனர்.டயானா வுடன் மண்டேலா 
கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ரோ வுடன் 


line break
On reconciliation (on acceptance of the 1993 Nobel Peace Prize, shared with then President FW de Klerk):

At the opening of the 2010 World Cup

1918 Born in the Eastern Capeline break 1943 Joined African National Congress
1956 Charged with high treason, but charges dropped after a four-year trial
1962 Arrested, convicted of incitement and leaving country without a passport, sentenced to five years in prison
1964 Charged with sabotage, sentenced to life
1990 Freed from prison
1993 Wins Nobel Peace Prize
1994 Elected first black president
1999 Steps down as leader
2001 Diagnosed with prostate cancer
2004 Retires from public life
2005 Announces his son has died of an HIV/Aids-related illness(இவை பல்வேறு இணைய செய்திகளில் இருந்து தொகுக்கப் பட்டவை )

Post Comment

Thursday, December 5, 2013

படிப்பதற்கு நூறு புத்தகங்கள் -for good reading....

 7ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் பா.ராகவன் தொகுத்த இந்த சிறிய பட்டியல் 

ஒவ்வொருவரும் இப்புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும் என்கிற ஒரு குட்டி அறிமுகத்தோடு இப்பட்டியல் மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார் பாரா. இது டாப்டென் பட்டியலாக இல்லாமல் முன்னும்பின்னுமாக முக்கிய நூல்களை தொகுத்திருக்கிறார்.
உங்களுக்கும் பயன்படும் என்பதால் இங்கு பதிகிறேன் .
1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.

2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.

4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.

9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10. அரசூர்வம்சம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.

16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.

21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.

30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.

36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.

37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்

39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.

40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.

45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்

49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57. திலகரின் கீதைப் பேருரைகள்

58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.

60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.

67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.

71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.

77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.

78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.

86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.

88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.

90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்

91. Made in Japan – அகியோ மொரிடா

92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.

95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.

97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...