Sunday, November 27, 2011

மயக்கம் என்ன -மயக்கியதா

மயக்கம் என்ன 
மயக்கம் என்ன வெளிவந்து  ஓடிக் கொண்டு இருக்கிறது படத்தை பற்றி வெவ்வேறு  விதமாக   கருத்துகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன  சில பதிவர்களின் பார்வையில்  மயக்கம் என்ன 
மயக்கம் என்ன - திரை விமர்சனம் -செங்கோவி 

எனினும் behindwoods  மயக்கம் என்ன படத்துக்கு 3.5/5 கொடுத்து இருக்கிறார்கள் .வேலாயுதம்,ஏழாம் அறிவு க்கு 3/5 தான் கொடுத்து இருந்தமை குறிப்பிடத் தக்கது . Behindwoods மயக்கம் என்ன review.
என்னுடைய நண்பன் கொழும்பில்   படம் பார்த்துவிட்டு எனக்கு அனுப்பிய   செய்தி 

"மயக்கம்  என்ன " ஒரு  கலைஞனின்  பயணம் . சாதிக்க  வேணும்னு   ஆசைபடுறவங்க  பார்க்க வேண்டிய   படம் .  பார்க்க வேண்டிய   படம் .பார்க்க வேண்டிய   படம் .

மயக்கம் என்ன -ஒருவன் நல்லா இருக்கு எண்டுறான் .இன்னொருத்தன் மொக்கை எண்டுறான் # இதுக்குத்தான் சொல்லுறது படம் பார்க்குறது எண்டு முடிவு எடுத்தால் first show பார்க்கணும் எண்டு
கண்டியில் (aerena) இப்போதும்  வேலாயுதம்,ஏழாம் அறிவு  ஓடிக் கொண்டு இருப்பதாலும்   கொழும்பு   செல்ல நேரம் இன்மையாலும் படம் பார்த்தால் விமர்சனம் எழுதுகிறேன் 
************************************************************************************************************
பிரபலங்களின் குடும்ப படங்கள் சில  
 
ரஜினி   பற்றி படித்த வியப்பான தகவல்கள் சில உங்களுக்கு பகிர்கிறேன்
'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏவி.எம். தயாரிப்பு!

ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone whereas my problem is stomach''

ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம்கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!

பாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!
திரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!

இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்!

இன்னும் ரஜினி பற்றிய தகவல்கள் அடுத்த பதிவிலும் .......

நான் இந்த தகவல்களை ஒரு தளத்தில்தான் பெற்றேன் எனினும் இதன் மூலம்   எது என்று தெரிய வில்லை ஆதலால் அந்த தளத்தின் லிங்க் கொடுக்க முடியவில்லை 


***********************************************************************************
நண்பன் official trailor 
இதை பார்க்கும் போது  3-idiots எந்த வித மாற்றமும் இல்லாமல்  re make செய்யப் பட்டுள்ளது ,காவலனில் தேவை இல்லாமல்  புகுத்தப் பட்ட விஜயிசம் இதிலே தவிர்க்கப் பட்டு  இருக்கும் என்ற எதிர்பார்ப்பே உருவாகிறது . நான் எதிர் பார்த்ததும் இதைத்தான்.
என் ப்ரெண்ட போல யாரு மச்சான் ..!
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான் ..!
நீ எங்க போல எங்க மச்சான் ..!
என என்னி என்னி ஏங்க வச்சான் ..!
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான் ..!
நம் கண்ணில் நீர பொங்க வச்சான் ..! ♥ ♥
**********************************************************************************
 உலகிலேயே அழகிய பல்கலை கழகங்களில் ஒன்றான கண்டியில் அமைந்திருக்கும் பேராதனை பல்கலை கழகத்தின்   அழகை ரசிக்க விருப்பமா   இங்கே  க்ளிக் செய்யுங்கள் 
beauty of pera
****************************************************************************
 தொடர் பதிவாக எழுத ஆரம்பித்த விஜய் ,சூர்யா வென்றது யார் ? .தொடர்ச்சி விரைவில் வெளிவரும்  என்பதை தெரிவித்து கொள்ளுகிறேன்   

Post Comment

Tuesday, November 8, 2011

வேலாயுதம் -ஏழாம் அறிவு -மங்காத்தா எது டாப் -ஒரு அலசல்

இந்த வருடத்தில் விஜய் ,அஜித்,சூர்யா,விக்ரம் படங்கள் வெளியாகி விட்டன .இவற்றில் எது அதிக வசூல் பெரும் என்பது சினி உலகம் சார்ந்த அனைவரினதும் எதிர் பார்ப்பு ஆகும் .அந்த வகையில் சினி உலகின் மையம் ஆக விளங்குகின்ற சென்னையில் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்கள் பெற்ற வசூலை அலசி ஆராய்வதே இந்த பதிவு .

வேலாயுதம்-ஏழாம் அறிவு 
இந்த தீபாவளிக்கு வேலாயுதம்,ஏழாம் அறிவு ஆகியன மோதின .சென்னை யில் ஏழாம் அறிவு 5நாள் முடிவில் இருந்த நிலை இது .
No. Days Completed5
No. Shows in Chennai over this weekend594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553

Total collections in Chennai: Rs. 2.20 Crore


வேலாயுதம் இருந்த நிலை இது .
No. Days Completed5

No. Shows in Chennai over this weekend492

Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore


ஏழாம் அறிவுக்கு ஏற்கனவே இருந்த உச்ச எதிர்பார்ப்பு (வேலாயுதத்தை விட ) காரணமாகவும் தயாரிப்பாளர் உதயநிதி அதிக திரையரங்குகளை பெற்ற காரணத்தாலும் முதல் வார இறுதி நாட்களில் ஏழாம் அறிவு 594காட்சிகளும்  வேலாயுதம் 492காட்சிகளும் காண்பிக்கப் பட்டன .5நாள் முடிவில் ஏழாம் அறிவு 2.20கோடியும் வேலாயுதம் 1..95கோடியும் வசூலித்தன.(விசேட காட்சிகள் சேர்க்கப் படவில்லை).ஏழாம் அறிவு முதல் இடத்தில் இருந்தது .எனினும் சராசரி திரையரங்குகளின் occupancy  விகிதம் இரண்டு படங்களுக்கும் சமமாக இருந்தது (90%).


சரி ஒரு வார நிறைவில் 
ஏழாம் அறிவு 
No. Weeks Completed1
No. Shows in Chennai over this weekend495
Average Theatre Occupancy over this weekend: 85%
Collection over this weekend in Chennai: Rs. 10,386,048
Total collections in Chennai: Rs. 4.56 Crore 

வேலாயுதம்

No. Weeks Completed1
No. Shows in Chennai over this weekend498
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,068,930
Total collections in Chennai: Rs. 4.36 Crore 

ஏழாம் அறிவு முதல் வார இறுதியில் 594ஆக இருந்த காட்சிகளின் எண்ணிக்கை அடுத்த வார இறுதியில்495ஆக குறைவடைந்தது (99 குறைவு  ) வேலாயுதம் 492 இலிருந்து 498 ஆக அதிகரித்தது .(6  கூட).ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் வேலாயுதத்தை விட 104 காட்சிகள் அதிகமாக காண்பிக்கப் பட்ட ஏழாம் அறிவு அடுத்த வார இறுதியில் சடுதியாக குறைவடைந்து வேலாயுதத்தைவிட 3 காட்சிகள் குறைவாக வீழ்ச்சி அடைந்தது .ஏழாம் அறிவு திரையரங்கு கிடைப்பனவு விகிதம 90 இலிருந்து 85 ஆக குறைவடைந்தது .ஆனால் வேலாயுதம் தொடர்ந்து 90 ஆகவே இருந்தது .வழமையாக நாட்கள் செல்ல செல்ல வார இறுதி காட்சிகளும் ,திரையரங்கு occupancy வீதங்களும் குறைவடைவதே வழமை .ஆனால் வேலாயுதத்துக்கு காட்சிகள் அதிகரித்தும் occupancy  மாறாமலும் இருப்பது அது திடமான நிலையில் உள்ளதை காட்டுகிறது .

.
ஆக ஏழாம் அறிவு 4 .56கோடியும் வேலாயுதம் 4 .36கோடியும் பெற்றுள்ள போதும் ஏழாம் அறிவு வீழ்ச்சி பாதையில் செல்ல வேலாயுதம் முதல் இடத்தை பிடித்துள்ளது .

வேலாயுதம்-மங்காத்தா மங்காத்தா எவ்வித போட்டியும் இல்லாமல் தனித்து வெளி வந்தது . வார இறுதியில் 615 காட்சிகள் காண்பிக்கப் பட்டன .வேலாயுதம் 498 மங்காத்தா  திரையரங்கு occupancy 80 % ஆக இருந்தது .ஒரு வாரத்தின் பின்னர் 4 .24 கோடி வசூல் செய்துள்ளது .அதிக காட்சிகள் (117 ).திரையிட்ட போதும் வேலாயுதம் பெற்ற வசூலை விட குறைவாகவே பெற்றுள்ளது .


சகல விபரங்களும் உண்மையான தகவல்கள் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற http://www.behindwoods.com.இனால் வெளியிடப் பட்டவை .


உலக அளவிலான வசூல் விபரங்களை  பல்வேறு இணையத் தளங்களும் வெளியிட்டுவருகின்ற போதும்அவை உறுதிப் படுத்தப் படவில்லை .


தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் .
**********************************************************************************
இது நம்ம ஏரியா 
Flower garlands from critics and websites for Velayudham:
SIFY:
Velayudham is No:1 in overseas market!

AYNGARAN:
East or West Vijay is always the best and so are his fans
...
BOLLYWOOD INDUSTRY TRACKER TARAN ADARSH:
Tamil film #Velayudham is rocking internationally. Opening weekend biz in UK and USA is excellent.

INDIAGLITZ:
Vijay is the undisputed 'King of Openings'

BEHINDWOODS:
Velayudham is finally emerging as the Diwali winner

NIKHIL MURUGAN, FILM TRACKER:
Ilayathalapathi,A single man doesn't speaks,but the whole world is speaking about his Success in Velayutham..

SRIDAR PILLAI INDUSTRY TRACKER:
Critics go ga-ga over Vijay's Velayudham.. The unanimous Diwali choice of
reputed critics in Hindu, TimesOfIndia, IndianExpress & DeccanChronicle is Velayudham..

THE HINDU:
One man entertainment troupe VIJAY in the lead, “Jayam” Raja has a clear WINNER this DIWALI

CNN IBN:
Velayutham collected 40c in 5days (movie budget is around 42c)

VIKADAN:
ஏழாம் அறிவை விட குறைந்த தியேட்டர்களில் வேலாயுதத்தை வெளியிட்டாலும் 40 கோடி வசூல்

DNA INDIA.COM:
Velayudhams victory over 7aam Arivu surprises all

GENELIA:
Hw much bigger does it get.. Yayyyy.. Vijay's 'Velayutham' makes Rs 40 crore worldwide

SALEM DISTRIBUTOR:
51 padangalin vasoolai vizhungiya tsunami intha Velayutham

SIMBU:
Velayutham, mass movie

FILM CRITIC MATHAN:
Velayutham, a declared hit.. Vijay, darling of masses

MANORAMA MAGAZINE:
Ilayathalapathy Vijay's Velayutham Record Breaking collections In Kerala

SPB CHARAN:
Saw VELAYUDHAM. Very good entertainer.

SIBI RAJ:
Watched vela firstday @LA .very nice :) thalaivar performance super especialy wen sarnya dies . Heard from a distributer in Salem tat it broke al t records in Salem :-)

REDIFF.COM:
Velayudham wins the Diwali race in Kerala

TIMES OF INDIA:
Vijay sure to make hat-trick Hits with Nanban for Pongal

PUTHIYA THALAIMURAI:
Velayutham declared as the massive hit of diwali

600024.COM:
On Deepavali day, Velayutham has definitely cleared the fence with a huge six.

METRO MATINEE.COM:
As a big break once; for Rajinikanth Basha, for Vijay its Velayudham !!

IBN LIVE:
Vijay's 'Velayutham' leads the race in south

REDIFF:
Among the three, it was Vijay who seemed to have won the Diwali race. it's paisa vasool.

HINDU:
No pretensions, no big talk, Velayudham simply enters and entertains!
You get what you know you would — action unplugged!

DECCAN CHRONICLE:
Vijay back with his trademark entertainer,
Velayudham a great watch for this festival season.

INDIAGLITZ:
A right choice for the festival mood.

TAMIL GALATTA.COM:
Ilayathalapathy Vijay has once again proved that he is the king of box office in Kollywood.

BEHINDWOODS:
Velayutham took a grand opening on Diwali day and being a mass commercial entertainer, fans and especially family audiences are eager to watch Vijay on the big screen.

SONY MUSIC:
'Velayudham is a super smash hit'

PLUZ MEDIA:
In spite of other big releases, Velayudham has taken a front seat WINNING THE DIWALI RACE

INDIAGLITZ:
'Velayudham producer Aascar films V Ravichandran is happy that his film has made a huge box office hit this Diwali'

TOP10CINEMA:
Theatre owners and exhibitors have demanded for additional prints for VELAYUTHAM. The repeat audiences are rushing into the theatres

ACTOR VAIBAV:
Velayudam rocked::)) good masala flick from thalapathi::))

PREMJI AMARAN:
VelaYudam super thalabathi rocked in it Super fights and action Full entertainment and mass and heroism I liked it

VENKAT PRABU:
Velayudham Thalapathy rocked!! Mass commercial flick from raja sir!!

SINGER KRISH:
Watching "Velu" for the again...

INDIAGLITZ:
Deepavali in front of cinema halls screening 'Velayudham'

ACTOR RAVI:
Velayudham rockin theatres all over the world. Amazing feedback. Can't ask 4 more. It's been a grt Diwali. Thnx to all ilayathalapathy fans

GENELIA:
My Diwali present- Velayudham turning out huge, thank u all, feels awesome whn audience reactions n critcs reviews r both gr8.. Happy me☺

SINGER KRISH:
Loved velayudham. . i loved vijay anna's intro! super mass. . anna's performance is something different.. loved it!!

SIFY:
Velayudham - (4 stars) ; verdict - Paisa Vasool
Ra.one - (2.5 stars)
7am Arivu - (2 stars) ; verdict - Average

UTV CHIEF:
Velayudham is a well made commercial entertainer. Loved the climax scenes & fight. Vijay-M.Raja rock as a team. Diwali treat for everyone.

SULEKHA.COM:
Velayutham a full length entertainer promises to take Vijay`s career to another level of stardom

SEVANTHI:
German November First Week 7 Am Arivu Show Cancel : Velaudham Will Show on Same Screen Number At Same டைம்

Post Comment

Sunday, November 6, 2011

விஜய் ,சூர்யா வென்றது யார் ?

அண்மைக்கால தமிழ் சினிமா சம்பந்தமான விடயங்களை என்னுடைய பார்வையில் அலசி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் .பதிவு நீண்டு கொண்டிருக்கிறது .எனவே தொடர் பதிவாய் அமையும் .
இதன் முந்தய பகுதியை படித்தால்தான் இங்கே தொடர முடியும் 
மங்காத்தா வா ? வேலாயுதமா? எது டாப்.


ஏழாம் அறிவு 


ஏழாம் அறிவு இந்த வருடத்தின் எதிபார்ப்புக்கு உள்ளான   படங்களில் முதல் இடத்தில் இருந்த படம் ( including behindwoods ) .அதன் படப் பிடிப்பும் இந்த வருட ஆகஸ்ட் மாதத்தை இலக்கு வைத்து தொடங்கப் பட்டு  சற்று தாமதமாகியது .தமிழ் சினி உலகில் பர பரப்பு தொற்றிக் கொண்டது வேலாயுதம் ,ஏழாம் அறிவும் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப் பட்டமைதான் .நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இது ஒரு போதும் சாத்தியப் படாது .கண்டிப்பாக ஒரு படம் பின்வாங்கும் இல்லை முன் வாங்கும் .ஆனால் கடைசி வரை இதை நிறுத்த பலரும் முயற்சித்த போதும் எதுவும் கை கூடாமல் மீண்டும் சினிமா ரசிகர்களுக்கு தித்திப்பை ஏற்படுத்தி விட்டன .
எவ்வாறு சாத்தியம் ஆயிற்று  

(இப்போது நான் சொல்பவை தீபாவளிக்கு முன்னான நிலை என்பதை அனைவரும் கருத்தில் கொள்க  .)

ஏழாம் அறிவு சூர்யா முருகதாஸ் ஹரிஸ் கூட்டணியில் பிரமாண்ட தயாரிப்பு (85  கோடி ).சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் (இந்த நால்வருள் ) கடைசி படங்கள் அனைத்தும் வெற்றி (ரத்த சரித்திரம் வேறு வகை வேறு மொழி )சகல வித்தத்திலும் நடிப்பு (வாரணம் ஆயிரம் ),துடிப்பு (அயன் ),மசாலா (ஆதவன் ),மாஸ் (சிங்கம் ) என சகல பரிமாணத்திலும் விண்ணை தாண்டிய வளர்ச்சி அதன் உச்ச கட்டம் மாற்றான் படத்தில் இவரின் சம்பளம் தெலுங்கு உரிமையையும் சேர்த்து 25  கோடி .மற்ற நடிகர்களை விட 10  கோடி  தாண்டினார் .தல தளபதியை எல்லாம் ஓரங்கட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார் .இந்த நிலையில் இருக்கும் போது


விஜய் ?

விஜய் பொருத்தமற்ற  கதை தேர்வு   ,புது இயக்குனர்கள் ,அதிக பில்ட் அப் என தன்னை தானே அழித்துக் கொண்டார் .ஆதி,குருவி,வில்லு ,வேட்டை காரன்(வசூலில் வெற்றி   ) ,சுறா என தோல்வியை கொடுத்தார் .இது சினிமா ரசிகர்களிடையே புதிய புரட்சியை ஏற்படுத்தியது .இந்த படங்களால் சலிப்படைந்த விஜய்க்கு எதிரான கூட்டம் ஒன்று புதிதாய் முளைத்தது .இவர்களின் அளவு விஜய் ரசிகர்களை விட  அதிகமாகும்  அளவுக்கு  முன்னேறியுள்ளது  .சினி உலகில் அதிக கேலிக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளானார் .அத்துடன் விஜயின் அரசியல் பிரவேசத்துக்கான அறை கூவலும் பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியது .விஜயின் எதிரியாய் திரும்பியவர்கள் அனைவரிலும் பெரும்பாலானவர்களின் தெரிவு சூர்யா ஆகவே இருந்தது .அஜித் நடிக்கும் படங்களின் அளவு ஒப்பீட்டு ரீதியில் குறைவாயும் அதிலும் பல தோல்வியாய் அமைந்தது .(அசல்,ஏகன்,ஆழ்வார் ) விக்ரமின்   நிலை இன்னும் மோசமாக இருந்தது .பீமா,கந்தசாமி,ராவணன் என நடித்த படங்களே சொற்பம் அதிலும் அனைத்துமே தோல்வி(?).ஆனால் சூர்யாவோ வாரணம் ஆயிரம்,அயன்,ஆதவன்,சிங்கம் என டாப் கியரில் சென்றார் .போட்டிக்கு யாரும் இல்லை .தனி சாம்ராஜ்ஜியம்   நடத்தினார் ரசிகர்கள்  ஆதரவு பெருகியது ..பெண்கள்  அவரின் சிக்ஸ் பக் க்கு மயங்கினார்கள் .கடின உழைப்பு ,சரியான கதை தேர்வு ,பெரிய இயக்குனர் ,சிறந்த இசை அமைப்பாளர் என எல்லாமே பெஸ்ட் ஆக இருந்தது .

எனவே ரஜினி கமலுக்கு பின் அஜித் விஜய் என்ற நாமமே ஓங்கி ஒலித்தது .எனினும் சூர்யா அவற்றை வெற்றிகரமாக உடைத்து முன்னணிக்கு வந்தார் .

விஜய் சூர்யாவுக்கு நிகர்மாறாக செய்து தோல்வியில் துவண்டு பட்டுணர்ந்து தனது பழைய பாணியில் காவலனை கொண்டு வந்தார் .இன்று வரை விஜயிடம் நான் எதிர்பாத்து இராத ஒன்று முக்கிய மைல் கல் படமான 50 வது படமான சுறாவை என்னென்று தேர்வு செய்தார் .எப்படி அந்த கதையை நம்பி படம் நடித்தார் என்பதுதான் .சரி அதை விடுவோம்  காவலன் நீண்ட நாட்களின் பின் வெற்றியை தந்தது .எனினும் படத்தை வெளியிடுவதற்காக பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல .கடைசியில் மானப் பிரச்சினையாய் போய் விட தனது சொந்த பணத்தில் செலவு செய்து சொன்ன படி பொங்கலுக்கு கொண்டு வந்தார் .அரசியல் எதிர்ப்புக்களின் மத்தியிலும் படம் வெற்றி பெற்றது .எனினும் கார்த்தி யின் சிறுத்தையுடன் போட்டி போட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது .அக்சன்  மசாலாவான   சிறுத்தையுடன் காதல் படமான காவலன் கஷ்டப் பட வேண்டி வந்தது .எனினும் விஜய் ரசிகர்களை பெரிதளவில் கவரா விட்டாலும் அவர்கள் சச்சின்,வசீகரா வில் செய்ததை போல படத்தை தவிர்க்க வில்லை .பொது மக்கள் மத்தியில் சரிந்திருந்த இமேஜ் ஓரளவு சரியானது .இணையங்கள் ,பத்திரிகைகளும் வரவேற்பு அளித்தன. 

மீண்டும் வேலாயுதம் 
காவலன்   வென்று விட்டது.அதற்கு பின் கதை ,இயக்குனர் தெரிவில் நிதானம் காட்டி மிகப் பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்..ஆனால் அதற்கு முன் ஒப்பந்தமான வேலாயுதம் .படம் தெலுங்கு ஆசாத் ரீமேக் என்றவுடன் படத்தின் கதை வெளியாகி விட்டது .படத்தின் கதையை அடுத்து மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான் .பழைய படங்களின் நிலைதான் இதற்கும் என விஜய் எதிரிகள் பிரச்சாரம் செய்தார்கள் .படத்தை விஜய் ரசிகர்கள்  தவிர ஒருவருமே எதிர்பார்க்க வில்லை .இங்கேதான் தொடங்குது விஷயம் .ஏழாம் அறிவு படப் பிடிப்பு முடிந்தது .படத்தை தீபாவளிக்கு வெளியிட்டால்   நல்ல காசு பார்க்கலாம் .வேலாயுதம் வருதே .(யார் முதலில் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்கள் தெரிந்தவர்கள் ஆதாரத்துடன் சொல்லலாம் )அது வந்தால் என்ன இரண்டு மூணு நாளுக்கு நல்ல ஒபெநிங் இருக்கும் பிறகு படுத்துடும் .நம்ம கதையும் பலம் எல்லாம் பலம் கண்டிப்பா இதை அடிக்க முடியாது .இதை விட்டால்  விஜயை விட சூர்யா தான் டாப் என காட்ட சந்தர்ப்பம் இல்லை பிறகு நண்பன் ,முருகதாஸ் படம் கௌதம் படம் என எதிர்ப்பார்ப்பு கூடி விடும் .இதுதான் சரியான சந்தர்ப்பம் என உதயநியுடன் சேர்ந்து சூர்யா திட்டம் இட்டார் .
சிலர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் சூர்யா விஜயின் பால்ய சிநேகிதன்  ஆச்சே சூர்யா விஜய்க்கு இப்படி செய்வாரா என்று கேட்பீர்கள் அவர்கள்  கண்டிப்பாக இந்த பதிவை படித்து விட்டு தொடருங்கள் .இந்தப் பதிவெலே சொல்லாத விடயம் ஒன்று  வேறு ஒரு   பதிவில் சொல்லி இருக்கிறேன் தேவை கருதி மீண்டும் சொல்கிறேன் .திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டமடா ஜெயிக்கிறவன் தோப்பான்  தோக்கிறவன் ஜெயிப்பான் என்று ஒரு பஞ்ச் பேசியிருப்பார் விஜய் .ஆதவன் படத்தில் ''டமக்கு டமக்கு'' பாடலில் வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா என்று ஒரு வரி வரும் .பாடலில் வரி வந்ததுக்கு சூர்யாவா காரணம் என்று கேட்பவர்களுடன் நான் வாதாட தயாரில்லை .சூர்யாவுக்கு தெரியாமல் இந்த வரி சேர்க்கப் பட்டு இருக்க முடியாது .

இந்த முடிவை கண்டு பட விநியோகஸ்தர்கள்      திரையரங்கு உரிமையாளர்கள் குழம்பினார்கள் .எந்த படத்தை திரையிடுவது .ஒருவரின் படத்தை வெளியிட்டால் மற்றவரை பகைக்க வேண்டி வருமே என்று .இயன்ற வரை ஒரு பட வெளியீட்டை மாற்றுவதற்கு இரு படக் குழுவினரிடமும் ஆலோசித்தார்கள் .வேலாயுதத்தை ஒரு கிழமை முதல் வெளியிடுமாறு ஏழாம் அறிவு தரப்பால் சொல்லப் பட்டது .இல்லை பிந்தி வெளியிடுமாறு . இதிலே   ஒரு மிகவும் சுவாரசியமான  சம்பவம் நடைபெற்றதாக நான் அறிந்தேன் எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு    தெரியாது .அது என்னவெனில் .....

தொடரும்......... 

#####
அடுத்த  பதிவில் அந்த சுவாரசியமான விடயங்களுடன் வேலாயுதமா மங்காத்தா வா இல்லை ஏழாம் அறிவா டாப் என்பதற்கான விடையும் தொடரும்  .

கருப்பு எழுத்தில் உள்ளவற்றை வாசிக்கும் பொது தீபாவளிக்கு முந்தய மனநிலை உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் . 

**இந்த தொடரில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பற்றி உங்கள்   கருத்துக்களை தெரிவியுங்கள் .FACEBOOK மூலமாகவும் தெரிவிக்கலாம் . 
##################################################################################
கவனிக்க 


இந்த பதிவில் ரஜினி பற்றி குறிப்பிட்டிருந்த விடயங்களில் பல விமர்சனத்துக்கு    உள்ளாகியதாலும்  நான் எதோ நினைத்து எழுத கடைசியில் அது வேறு அர்த்தத்தில் வந்து விட்டது .வாசகனாக   படித்துப் பார்க்கும் போது அந்த பிழை தெரிந்தது  நான் கருப்  பொருளாக கொண்ட விடயத்துக்கு நேற்று பதில் கிடைத்ததாலும் அவற்றை பதிவில் இருந்து நீக்கி விடுகிறேன் .அந்த  வரிகளால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் . உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி .

Post Comment

Thursday, November 3, 2011

மங்காத்தா வா ? வேலாயுதமா? எது டாப்

அண்மைக்கால தமிழ் சினிமா சம்பந்தமான விடயங்களை என்னுடைய பார்வையில் அலசி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் .பதிவு நீண்டு கொண்டிருக்கிறது .எனவே தொடர் பதிவாய் அமையும் .

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி,கமல் ,விஜய் ,அஜித் ,விக்ரம் ஆகியோரே இப்போது மார்கெட் உள்ள முன்னணி நடிகர்கள் .இவர்களின் படங்கள் வெளி வந்தாலே தமிழ் சினிமா பரபரப்புக்கு உள்ளாகும் .அது  யார் இயக்கம் ,யார் இசை ,எந்த வகை படம் என்பதையும் தாண்டியது .இவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளி வந்தால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் .ஏனெனில் யார்  முன்னணியில் உள்ள நடிகர் என்பதை இதை வைத்து தான் ரசிகர்கள் கணிப்பார்கள் .சில வருடங்களுக்கு முன்னர் வருஷம் ,பொங்கல் ,தீபாவளி என்றால் நிச்சயம் இவர்களின் படங்கள் போட்டிக்கு வெளி வந்து ரசிகர்களை குஷிப் படுத்தும் .அதிலும் தீபாவளி ரசிகர்களுக்கு செம விருந்தாக இருந்தது .விஜயின் திருமலை ,அஜித்தின் ஆஞ்சநேயா ,விக்ரம் சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் என ஆங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளி வந்தன .

அதற்கு பின்னர் ஒவ்வொரு பண்டிகையிலும் யாராவது இருவர்  சில வேளைகளில் மூவர் என மோதிக் கொண்டனர்.எனினும் கால ஓட்டத்தில் தமிழ் சினிமாவின் பாதை மாற்றமடைந்தது  நவீன தொழிநுட்ப உலகில்  ஒரு படம் முன்னரை போல் 250,200,150,கடைசியில் 100 நாட்களை தாண்டுவதே மிகவும் கடினமாக இருக்கிறது .படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே இனைய தளத்தில் காணக் கூடியதாக உள்ளமை ,திருட்டு vcd  களின் ஆதிக்கம் என்பவற்றால் திரையரங்குகளில்    ஓடும் நாட்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தது .  எனவே தயாரிப்பாளர்கள் ,விநியோகஸ்தர்கள் புதிய உத்தியை கையாள தொடங்கியுள்ளனர் .அது என்னவெனில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்ட காசை எடுக்கும் நுட்பம் ஆகும் .இதிலே நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதிகளவில் இருக்கின்றன .இந்த பிரச்சினை காரணமாக் முன்னணி நடிகர்கள் இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியிட முடியாத நிலை தோன்றியது .திரையரங்குகளை பெறுவதில் சிக்கல். ஒரு படத்தினால் மற்ற படத்தின் வசூல் குறைவடையும் எனவே சீக்கிரம் பணத்தை எடுக்க முடியாது . இந்த பிரச்சினைகளால் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் நிகழ்வு தவிர்க்கப் பட்டு தடுக்கப் பட்டு வந்தது .2009 தீபாவளிக்கு ஆதவன் ,வேட்டைக்காரன் என்பன களமிறங்கிய போதும் படம் வெளியிட்ட உதயநிதி,கலாநிதி மாறன் ஆகியோருக்கு இடையேயான சமரச பேச்சின் பின்னர் வேட்டைக்காரன் தாமதித்து டிசம்பரில் வெளியானது .2010  இல் சுறாவையும்,சிங்கத்தையும் போட்டிக்கு களமிறக்கி யாருக்கு மவுசு அதிகம் என அறிய விரும்பியது சன் குழுமம் ஆனால் பாதிப்பு தனக்குத்தான் என்பதை அறிந்து பின் வாங்கியது. .  படங்களின் வெற்றிக்கு விநியோகச்தரின் விளம்பரம் முக்கியமான நிலை ஏற்படுத்தப் பட்டது .சன் டிவி நேரடியாக படங்களை விநியோகிக்க தொடங்கிய பின் இது மேலும் வலுவடைந்த்தது .உதயநிதி,தயாநிதி அழகிரி ஆகியோர் புது நிறுவனம் தொடக்கி போட்டிக்கு களமிறங்க ஆட்சியும் கைகொடுக்க இவர்களின் பிடிக்குள் தமிழ் சினியுலகம் வந்தது .எதிர்பார்ப்புக்கு உள்ளாகும் படங்களை இவர்கள் வாங்கி விடுவார்கள் .விற்க மறுக்கும் படங்களை ஓட விட மாட்டார்கள் .


சித்திரம் பேசுதடி என்ற படம் வெளியான கதை உங்களுக்கு தெரிந்து இருக்கும் .படம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி ஒரு வாரத்தின் பின்னர்தான் வாய் வழி பேச்சின்(WORD OF MOUTH )  படி பேசப் பட்டு பின்னர் பிய்த்துக் கொண்டு ஓடியது .ஆனால் இப்போது அந்த நிலை வருவது கடினம் .படம்    நல்லாய் இருக்கு என்ற கதை பரவ முன்னரே தியேட்டரை விட்டு தூக்கி எறியப் பட வரலாறு உண்டு .தென் மேற்கு பருவட்காற்று ,ஆரண்ய காண்டம் என்பன சிறந்த உதாரணங்கள் ஆகும் .மைனாவும் ,அங்காடித்தெரு வும் ஓடும் போது இவை ஓடாமல் போனமைக்கு காரணம் சிறந்த விளம்பரம் இன்மையே ஆகும்.
 இதன் உச்ச கட்டமாக அமைந்தது விஜயின் காவலன் வெளியீடுதான் .காவலன் வெளியீட்டுக்கு நடந்த கதை அனைவரும் அறிந்ததே .சரி இப்போது ஆட்சி மாற்றம் நடந்த போதும் திரையுலகை அவர்கள் இழக்க வில்லை என்பதே உண்மை சிறிது காலம் அடங்கியிருந்த போதும் இப்போது மீண்டும் வீறு கொண்டு எழுந்து விட்டார்கள் 
.
இந்த வருடம் விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம் அனைவரும் மோதுகிறார்கள் 

சரி விசயத்துக்கு வருவோம் நான் மேலே சொன்னது போல முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்றாக வெளியாவது தடுக்கப் பட்டு வந்தது .எனினும் தெய்வதிருமகள்,மங்காத்தா,வேலாயுதம் ,ஏழாம் அறிவு என்பன ஒரே நேரத்தில்  முடிவடையும் தருவாயில் இருந்தன .ஒரே வருடத்தில் நான்கு பேரின் படங்களும் வெளி வருவதே சந்தர்ப்பம் இல்லாமல் இருந்த தருணத்தில் ஒரே காலப் பகுதியில் வெளியாக இருந்தமை பர பரப்பை ஏற்படுத்தியது . மங்காத்தா மே 01 உம ,வேலாயுதம் ஜூன் 22 ஐயும் குறிவைத்து எடுக்கப் பட்டவை .படப் பிடிப்பு தாமதமாக தெய்வ  திருமகள் முதலில் வெளியானது.

 பின் மங்காத்தா ,வேலாயுதம் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என்ற நிலை உருவானது .ஆனால் அண்மைக் காலமாக வலுப் பெற்று வரும் தல,தளபதி நட்பு காரணமாக அது தவிர்க்கப் பட்டு முதலே வெளியிட திட்டமிட்ட படம் என்பதால் மங்காத்தா வெளியானது .எனவே வேலாயுதம் தீபாவளிக்கு பிற் போடப் பட்டது .அதற்கு பின் நடந்தவைதான் சுவாரசியமான விடயங்கள் .


அடுத்த பதிவில் தொடரும் ....தலைப்புக்கான விடையும் 

##################################################################################
தல  தான்   தான் என அறியாத  தல 

Post Comment

Tuesday, November 1, 2011

காட்டு காட்டுன்னு காட்டுகிறது வேலாயுதம்நான் வலையுலகில் விஜய் பற்றிய அவதூறை குறைப்பதற்கு ஆகவே வலைப்பதிவு எழுத தொடங்கினேன் .ஆனால்  இப்போது வேலாயுதம் வெளியாகி அனைவரின்    கருத்துக்களையும் உடைத்து வெற்றி ஆயுதம் ஆகியிருக்கிறது.வேலாயுதம் பற்றி ஒரு சில நரிகள் ஊளையிட்டாலும் பொதுவாக நல்ல நடுநிலையான விமர்சனங்களே வெளிவந்தமை திருப்தி தருகிறது .இந்த தருணத்தில் யார் உண்மையிலேயே நடுநிலை விமர்சகர்கள் ,யார் உண்மையிலேயே விஜயில் பொறாமை கொண்டவர்கள் என்பதை அறியும் சந்தர்ப்பமாக் அமைந்து உள்ளது .வேலாயுதம் வெற்றி என்றால் இன்னமும் சிலர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் .அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லா விட்டாலும் சினிமா விகடனில் இன்று வெளிவந்த  ஒரு செய்தி உங்களுக்காக 
 
வெற்றி களிப்பில் 
 
விஜய் சார் நீங்க காட்டுவீங்கனு தெரியும் இப்பிடி காட்டுவீங்கனு விஜய் ரசிகனான நானே எதிர்பார்க்க வில்ல.
வேலாயுதம் வெற்றியில் நானும் ஒரு அணிலாய் இருந்த பெருமையுடன் வலையுலகை விட்டு விலகி இருப்போம் என முடிவு எடுத்தேன் .
 
உண்மையான காரணம் ஐந்து மாத நீண்ட விடுமுறை முடிந்து கம்பஸ் தொடங்கவுள்ளமைதான் .எனினும் கடந்த ஞாயிற்றுகிழமை  நூலகத்தில் இவ்வார பத்திரிகைகளை வாசித்து கொண்டிருந்த போது தற்செயலாக ஒரு பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்   
 
 சாருக்கான் பற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவு இது ..நான் எழுதிய இந்த பதிவை இலங்கையின் முன்னணி தமிழ் பத்திரிகையான வீரகேசரி குழுமத்திலிருந்து வெளியாகும் தினசரி பத்திரிகையான மெட்ரோ நியூஸ் (metro news-27.10.2011-வியாழக்கிழமை) பத்திரிகையில் பிரசுரித்து இருக்கிறார்கள் .நான் எழுதிய ஆக்கம் பத்திரிகையில்  வெளியானது மகிழ்ச்சிதான் .எனினும் அதில் எங்கிருந்து எடுக்கப் பட்டது .எழுதியது யார் போன்ற எவ்வித தகவல்களும் வெளியிடப் படவில்லை .இதையிட்டு சந்தோசப் படுவதா இல்லை கவலைப்   படுவதா என எனக்கு தெரிய வில்லை .அதிலும் எனக்கு சிரிப்பை வரவழைத்த விடயம் நான் முதலில் பதிவிடும் போது  எந்திரன்   என்பது ஒரு இடத்தில் இந்திரன் என தவறுதலாக பிரசுரமாகி விட்டது .அவர்களுடைய பத்திரிக்கையிலும் அப்படியே பிழையாக பிரசுரமாகியமைதான் .

நான் ஏதோ பொழுது போக்குக்காக எனது விடுமுறை கழிப்பதற்காக ஆரம்பித்து ஏதோ எனக்கு தெரிந்தவற்றை என்னால் முடிந்தவற்றை எழுதினேன் .ஆனால்  என்னுடைய பதிவையும் மதித்து அதை பத்திரிகையில் பிரசுரித்தமை மகிழ்ச்சி அளிக்கிறது .

எனவே  இதை ஒரு அங்கீகாரமாக கருதி இனி நேரம் கிடைக்கும் போது பயனுள்ள சுவாரசியமான பதிவுகளை எழுத ஆசை படுகிறேன் .நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் .

சக பதிவர்களுக்கு 
நேரமின்மை காரணமாக  நான் பதிவு போடும் சமயங்களில் சம காலத்தில் இடப்படும் பதிவுகளுக்கு நிச்சயம் எனது பின்னுட்டமும்   வாக்குகளும் இருக்கும் ..தவிர்ந்த நேரங்களில் எனக்கு நேரம் கிடைக்கும் போது உங்கள் தளங்களை நாடி வருவேன்  என்பதை அறிய தருகிறேன் .

50000 hits 
அத்துடன்  எனது வலைத்தளம் 50000 HITS தாண்டி விட்டது .இந்த ஹிட்ஸ் க்கு முழு காரணம் விஜய் தான் என்பதை பெருமையாக சொல்கிறேன்.இதை பெற்று       தந்த சகல வாசகர்களுக்கும் எனது நன்றிகள் 

.
 
.என்னை அறியாமலே பலரிடம் சென்ற பதிவு மீண்டும் இதை பார்க்காதவர்களுக்காக அதே இந்திரன் எழுத்து பிழையுடன் .......

ரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா?

 
கிங் ஒப் போலி வூட் என்று அழைக்கப் படும் ஷாருக்கான் இந்திய அளவில் செல்வாக்கு மிக்க நபர்களில் முதன்மையானவர் .இவரின் தற்போதைய பரபரப்பு ரா ஒன் .தமிழில் வெளியாகவுள்ள இந்நிலையில் அவரை பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


 .தாஜ் மொதமேது கான்  லதீப் பாத்திமா தம்பதியினருக்கு மகனாக டெல்லியில் பிறந்தார்.(1965.11.02)


.தனது அத்தியாயத்தை டிவி சீரியல் மூலமாக 1988 இல் ஆரம்பித்தார் .கௌரி ஷிபா என்ற மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .ஷாருக்      ஒரு முஸ்லிம் மனைவி ஒரு இந்து திருமணத்துக்கு  எதிர்ப்புக்கள் யிருந்த போதும் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடை பெற்றது .(25.10.1991).அவருக்கு ஆர்யன் கான் (1997)என்னும் மகனும் சுகனா (2000)கான் என்னும் மகளும் இருக்கின்றனர் .
தனது  திரைப்பட அறிமுகத்தை தீவானா(deewaana ) என்னும் திரைப்   படத்தின் மூலம் ஆரம்பித்தார் (1992).இத் திரைப்படம் கமெர்சியல் ரீதியாக வெற்றி அடைந்தது .இதை தொடர்ந்து பல வகைப்பட்ட தரமான   வெற்றி திரைப்படங்களை இவர் அளித்து வருகிறார் .இதுவரை 14 முறை பிலிம் பாரே விருது வென்றுள்ளார் .டார் (daar -1993),         பாசிகர் (Baazigar -1993) ,   அஞ்சாம்  (Anjaam -1994),குச்   குச்  ஹோதா  ஹஅய்    (Kuch Kuch Hota Hai -1998 ) ,ஓம்  சாந்தி  ஓம்  (Om Shanti om -2007 ),சக்  தே  இந்திய  (Chak De India (2007) Devdas, Veer Zaara, Main hoon naஎன்பன குறிப்பிட்டு சொல்லக் கூடிய படங்கள் ஆகும் .Dilwale Dulhania Le Jayenge (1995) ,,அவருடைய மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்று .மும்பையில்12 வருடங்களாக ஓடியது .இதுவரை என்பதுக்கு  மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார் .


1990 களில் இருந்து இன்றுவரை பாலி வூட் டை ஆளுகின்ற நான்கு கான் களில் ஐவரும் ஒருவர் மற்றவர்கள் சல்மான் கான்,அமீர் கான்,சைப் அலி கான் 


டைம் சஞ்சிகையினால் 2004 இல் 40 வயதுக்கு குறைந்த ஆசியாவின்  ஹீரோ க்கள் இருபது பேரில் ஒருவராக தெரிவு செய்யப் பட்டார்.
அவருடைய முதற்  பெயரான ஷாருக் என்பதன் அர்த்தம் அரசனுடைய முகம்(king  of  face ) என்பது ஆகும் .

இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருக்கிறார் .அவரின் பெயர் Shehnaz Lalarukh. இவருடைய பெற்றோர் இவர் திரையுலகில் நுழைவதற்கு முன்னரே இறந்து விட்டனர் .தான் புகழ் மிக்க இந்த நிலைக்கு வருவேன் எபது அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதே என்று ஷாருக்  வருத்தப் படுவார்.

ஷாருக்கின் தாய் ,தந்தை,சகோதரி


இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற    Madam Tussaud's Museum இல் இவரி உருவ சிலை அமைய பெற்றுள்ளது .அமிதாப்,ஐஸ்வர்யா ,சல்மான் ,சச்சின்,ஹிருத்திக் ஆகியோரின் சிலையும் காணப் படுகிறது  .‘Dilwale Dulhaniya Le Jayenge’ படத்தில் அவரின் தோற்றம் போல சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது


இவர் விரும்பி அருந்துவது பெப்சி கோலா.
 சிறிய வயதில் ஷாருக்
மாயா  மேம்சாப் .(Maya Memsaab.) என்ற படத்தின் பின்னர் எந்த படத்திலும் உடன் நடிக்கும்  பெண் நடிகையுடன் உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறார்.

இவரின் அறிமுகப் படமாய் இருக்க வேண்டியது  (Dil Aashna Hai )டில்  ஆஷ்ணா  ஹஅய் .ஆனால் அப்படம் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட தாமதத்தால் தீவானா அவரின் முதல் படமாக அமைந்து விட்டது .

மூன்று தயாரிப்பு நிறுவனங்களை வைத்து இருக்கிறார் டிரீம்ஸ் அன் லிமிடெட் (Dreamz Unlimited ),ரெட் சில்லீஸ் என்டேர்டைன்மென்ட்  (Red Chillies Entertainment ),
ரெட் சில்லீஸ் இடியோட் பாக்ஸ் (Red Chillies Idiot Box )என்பனவே அவை Red Chillies Idiot பாக்ஸ் தொலைகாட்சி தொடர்களை தயாரித்து வருகிறது .

மும்பையில் மன்னட்( Mannat) என்னும் மாளிகையில் வசிக்கிறார் .ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார்.
ஷாருக்கான் -தமிழ் 

 ஷாருக்   கான்  தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் .தமிழின் முன்னணி நடிகர்களான கமல்  ,அஜித் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் .கமலுடன் ஹேராம் படத்தில் இணைந்து நடித்துள்ளார் .தமிழ் ஹிந்தி இரு மொழிகளிலும் வெளியான இந்த படம் ஒஸ்கார் பரிந்துரைக்கப் பட்டது .அஜித் குமாருடன் இணைந்து அசோகா படத்தில் நடித்துள்ளார் .அது தமிழில் சாம்ராட் அசோகா என்ற பெயரில் வெளியானது .இது தவிர மணி ரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த தில்சே திரைப்படம் உயிரே என்ற பெயரில் தமிழில் வெளியானது .ரஹ்மானின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் தமிழர்களிடத்தில் இவரை புகழ் பெற செய்தது .

இப்போதைய பரபரப்பு   ரா ஒன் 
 
ஷாருக் கான் நடிக்கும் அடுத்த திரைப்படம் ரா ஒன் .எந்திரன் வெளியான போது இரு படங்களும் ஒரே கதையை கொண்டவை என்ற சந்தேகம் எழுந்த போதும் இந்திரனை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஐயே தனது படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து ரா ஒன் படத்துக்கான எதிர்பார்ப்பை உச்சப் படுத்தி உள்ளார் .தமிழிலும் மொழி மாற்றப் பட்டு எதிர்வரும் தீபாவளிக்கு வருகிறது ரா ஒன் .மிகவும் எதிர் பார்க்கப் படும் ரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வி ஆகும் .எந்திரன் பாலி வூட் இல் ஓடியதை போல ரா ஒன் தமிழில் ஓடுவது இயலாத காரியம் .ஆனால் இப்போது ரஜினி தோன்றுகிறார் என்றவுடன் நிலைமை தலை கீழாக மாறி விட்டது .மரணத்தின் வாயில் வரை சென்று மீண்ட தலைவரை திரையில் பார்க்க அனைத்து மக்களுமே தவம் கிடக்கிறார்கள் .இந்நிலையில் தீபாவளிக்கு ரா ஒன் தமிழில் வெளியாகும் திரை அரங்குகளின் எண்ணிக்கையிலேயே தெரிகிறது எதிர் பார்ப்பு .

என்னதான் இருந்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் க்கு இருக்கும் பெருந்தன்மை வேறு யாருக்கும் இருக்காது .தனது படத்தை போலவே படம் எடுத்து தனது படத்தின் சாதனையை முறியடிக்க தானே காரணமாய் இருக்கப் போகும்  எங்களின் தலைவருக்கு யார் நிகர் இவ்வுலகில் ?

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...