Saturday, July 30, 2011

சங்கா +முக்கிய VIP

ரசிகர்களின் மனங்கவர் வீரருக்கான விருது ( PEOPLE'S CHOICE AWARD-2011 ) ICC யினால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது .கடந்த வருடம் சச்சினுக்கு கிடைத்தது .இம்முறை இந்த விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.இந்திய கப்டன் டோனி ,தென் ஆபிரிக்காவின் ஆம்லா,மேற்கிந்திய தீவுகளின் கெயில்,இங்கிலாந்தின் திராட் மற்றும்  சிங்கத்தின்  குகையிலிருந்து நம்ம சங்கா ஆகியோரே அவர்கள் .    கிரிக்கெட் உலகின் கண்ணியவானாக திகழும் எமது நாட்டுக்கு  பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் குமார் சங்ககாராவுக்கு வாக்களித்து இந்த வருடத்துக்கான அபிமான வீரராக தேர்வு செய்ய வேண்டியது எமது தலையாய கடமையாகும் .  

 சங்ககாராவுக்கு வாக்களிக்க இங்கே க்ளிக் பண்ணுங்கள்.  
AUGUST-25 மட்டுமே வாக்களிக்க முடியும் உடனே உங்கள் வாக்கை அளியுங்கள் .


யாழ்ப்பாணத்தில்  சங்கா 


யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் TRIAL எனும் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடைப் பயணத்தில் சங்கா கலந்து கொண்டார் .யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரின் ரசிகர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர் .அவருடன் பல ரசிகர்கள் புகைப்படம் எடுத்து தமது நெடுநாள் ஆசையை பூர்த்தி  செய்தனர் .
கடந்த ரெண்டு மாதமாய் யாழில் நின்றும் யார் யாரோ எமக்கு தேவையே இல்லாதவர்கள் எல்லாம் முகாமிட்ட போதுயாழில்   நின்றும் சங்கா வரும் போது நிற்க முடியாமல் போனதில் வருத்தம்தான் .சரி காலம் வரும்தானே.


யார் அந்த VIP 
அப்புறம் இன்னொரு முக்கிய VIPயும் யாழ்ப்பாணம் வந்தவராம் .அவர் யாரு ?அவரால்தான் நான் வலைப்பதிவு என்றால் என்ன என்பதை அறிய முடிந்தது ..நாம A/L  படிக்கும் போது நம்ம தளபதி புராணம் பாடிக் கொண்டிருக்கும் கொடுமை தாங்காமல் நண்பன் ஒருவன் எந்நாளும் சொல்லுவான் உண்ட தளபதியை பற்றி ஒருவர் கிழி கிழிஎன கிழித்துக் கொண்டிருக்கிறார் .போய்ப் பாரு என்று .அப்ப ஒருநாள் இணையத்தில் தேடிய போதுதான் அவரை பற்றி அறிய முடிந்தது.அவர் சூரியனில் (FM) பணியாற்றுகிறார் என்பதும் கூட .(நாம சக்தியின் அடிமை அந்த காலம் தளபதியின் புகழ் பாடுவதோடு நிற்காமல் கில்லி வெற்றி விழாவுக்கு இலங்கை வந்த அவரை அழைத்து நேரடி ஒளிபரப்பியது சக்தி டிவி .இப்ப இலங்கையில் என்னென்ன அலைவரிசை இருக்கு எண்டே சத்தியமாய் தெரியாது எல்லாம் ''தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக'' செய்த மாயங்கள்தான் .).அப்போது எனக்கு இவர் யாரு நம்ம தளபதியை  பற்றி இப்பிடி எழுவதற்கு இவருக்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது  


ஆனால் வலைப்பதிவு என்றால் என்ன எப்படி எழுதுவது ஒன்றுமே தெரியாது அத்துடன் A/Lஇல்  பிஸியாக இருந்ததால் நேரமும் இருக்க வில்லை .A/L முடிந்த பின் வெட்டியான நாட்களில் இவரின் வலைதளத்தில் பயணித்த போதுதான் இவரின் திறமையை முழுமையாக அறிய முடிந்தது ..இவரின் திறமையை பார்த்து வியந்து விட்டேன் .இவர் மட்டுமல்ல பலரும் தளபதியை கலாய்ப்பதை பின்னர்தான் அறிந்து கொண்டேன் .அத்துடன் இவர் இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ஆதரவாளர் என்பதால்எனக்கு இவரை ரொம்ப பிடித்து விட்டது .இவரின் வலைப்பதிவுகளை படித்து இவரின் வலைப் பக்கத்தில் இருந்து ஏனைய வலைப் பதிவாளர்களை படித்து நானும் இப்படி ஒன்று ஆரம்பித்துள்ளேன்.இவங்கள் சும்மா பிரிச்சு மேய்கிறார்களே நாமெல்லாம் எதை எழுதி கிழிப்பது என்ற பயத்துடனேயே ஒவ்வொரு பதிவையும் எழுதுகிறேன் .எனினும் நீங்கள் தரும் வரவேற்பை என்னால் நம்பவே முடியவில்லை .என்னுடைய முந்தைய பதிவான தெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும். திரையிட்ட சகல இடங்களிலும் நான் சற்றுமே எதிர்பாராத வகையில்   மெஹா ஹிட் அடைய செய்த அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த நன்றிகள் 


என்ன நான் ரொம்ப போர் அடித்து சாகடிக்கிறேனா புரியுது .சரி யார் அந்த VIP  நீங்கள் கேட்பது புரியுது .கேட்கா விட்டாலும் .இவர்தான் அவர் .ARV.லோஷன் அண்ணா அவர்கள் .


“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்” இது எப்பிடி இருக்கு .


உன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சிலர் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.


அப்புறம் இந்த பதிவு முடிவில் ஒரு கேள்வி .சரியாக விடை அளிப்பவர்களுக்கு சன் டிவியின் தங்க வேட்டை நிகழ்ச்சியில் (சன் பிக்சர்ஸ் படம் எதுவும் கைவசம் இல்லாததால் திரும்ப தொடங்க போறாங்களாம் )  தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது .விடையில் OPTIONS  எதுவும் இல்லாததால் சற்று சிரமப் படப் போகிறிர்கள் .சரி கேள்வி இதுதான் 
இந்த பதிவில் எத்தனை 'தளபதி' உள்ளது .


எவன்டா எவன்டா அடிக்கிறது விடுங்கடா .எதையுமே பிளான் பண்ணி பண்ணாட்டி இப்பிடித்தான் .

Post Comment

9 comments:

மைந்தன் சிவா said...

ம்ம் சங்காக்கு கிடைத்தால் நல்லது!!

kobiraj said...

கட்டாயம் கிடைக்கும் சிவா.

LOSHAN said...

சங்காவுக்கு நானும் வாக்களித்துவிட்டேன்..
ஆனால் இந்திய இணையத்தளப் பாவனையாளர்கள் அதிகம் என்கிற காரணத்தாலும், இந்திய அணியின் ஆதரவாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தோனி பக்கம் திரும்பும் என்பதாலும் தோனிக்கே கூடுதல் சாதகம் என நான் நம்புகிறேன்...

சங்காவின் கனவான் தன்மைக்கும், நல்ல மனதுக்கும் இந்த மக்கள் விருது அவருக்கே கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்...

அவ்வ்வ்வ்.. நன்றி :)

விஜயின் ரசிகர்கள் பலர் என் நண்பராக இருக்கின்றார்கள் என்று தெரியும்.. அந்த கலாய்ப்பு விடயத்தில் என்னை வெறுத்தாலும் தொடரும் நட்புக்கு நன்றிகள்.. :)

LOSHAN said...

ஆனால் நான் வலைப்பதிவுகள் இட ஆரம்பித்த காலம் வெற்றியில் இணைந்த பின்னர் தான் சகோ.. :)

kobiraj said...

என்னுடைய வலைத்தளத்துக்கு வருகை தந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.நான் நினைக்கிறேன் கில்லி வந்த போது நீங்கள் சூரியனில் பணியாற்றி இருப்பீர்கள் என்று நான் a/l படித்தது 2007-09 காலப்பகுதி அப்போது நீங்கள் வெற்றிதான் .தவறுக்கு வருந்துகிறேன்

kobiraj said...

உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன அண்ணா .உங்கள் தளத்திற்கு நான் அடிமை .உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா .உங்கள் வேலை பளுவுக்கு மத்தியில் என் பதிவுக்கு கருத்துரை வழங்கியமைக்கு மீண்டும் நன்றிகள்

கார்த்தி said...
This comment has been removed by the author.
கார்த்தி said...

Trail முயற்சி நல்லதொரு சமூக செயற்திட்டம். உங்கள் தளத்திலுள்ள radio gadget பலருக்கு அசௌகரிமாக இருக்கலாம்!

kobiraj said...

கருத்துக்கு நன்றிகள்.உங்கள் பொட்டலம் அருமை.ஆரம்பத்தில் அவாவில் இட்டது .ஆலோசனைக்கு நன்றி உடனேயே radio gadget நீக்கி விடுகிறேன்

Related Posts Plugin for WordPress, Blogger...