Showing posts with label mankaaththaa. Show all posts
Showing posts with label mankaaththaa. Show all posts

Thursday, June 7, 2012

VIJAY AWARDS 2012 -ஒரு அலசல்


விஜய் டிவி யினால் வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் vijay awards இந்த வருடம்  எதிர்வரும் 16 ம் திகதி  நடைபெற உள்ளது .வழமை போல ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் favourite awards வழங்கப்பட உள்ளது . இந்த பட்டியலில் உள்ள தெரிவுகளை பார்த்து நீங்கள் நகைக்க தேவை இல்லை .இங்கு தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தமிழ் சினிமாவின் அதிக ரசிகர் பட்டாளத்தை தம்மகத்தே கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களை பிணைந்தே உள்ளன .இதன் முக்கிய நோக்கம் சிறந்த படைப்புக்களை தெரிவு செய்யும் போது பிரபல நடிகர்கள் இடம்பெறாமையால் நிகழ்ச்சி வரவேற்பை பெறாது .எனவே யாரவது ஒரு பிரபல நடிகரை நிகழ்ச்சிக்கு வரவழைப்பதே இந்த FAVOURITE AWARDS வழங்கப்படுவதன் நோக்கம் .
சரி இம்முறை பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை பார்ப்போம் .

 FAVOURITE HERO 
அஜித்   -மங்காத்தா 
தனுஷ் -  ஆடுகளம் 
சூர்யா -ஏழாம் அறிவு 
விஜய்- வேலாயுதம் 
விக்ரம் -தெய்வ திருமகள் 
 
2010 இல் வேட்டைக்காரன் படத்துக்காக விஜய் பெற்றார் ,2011 இல்  ரஜினிகாந்த்  எந்திரன் படத்துக்காக பெற்றார் .இந்த வருடம் அஜீத் ,விஜய்   இருவரில்  ஒருவருக்கு  தான் வாய்ப்பு அதிகம் .2010 இல் அசல் ,வேட்டைக்காரன் படங்களுக்காக இருவரும் மோதிய போதும் இரு படங்களை விட அயன் நல்ல படமாக இருந்தாலும் ரசிகர்  ஆதரவு காரணமாக விஜய் வெற்றி பெற்றார் .2011 இல் தலைவர் படம் காரணமாக இவர்களால் ஜொலிக்க முடிய வில்லை .இந்த வருடம் மங்காத்தா படம் வேலாயுதம் ஏழாம் அறிவை விட அநேகரால் ரசிக்கப் பட்டது .எனினும் விஜயின் ரசிகர் பட்டாளத்தை  உடைப்பாரா அஜித் .ஏனெனில் இது இணையத்தில் மட்டும் நடைபெறும் வாக்களிப்பு இல்லை.தமிழ்நாடு முழுவதும் சேகரிக்கப் படும் ஓட்டு .

favourite heroine 
அசின் -காவலன் 
அனுஷ்கா -தெய்வ திருமகள் 
ஹன்சிகா  -எங்கேயும் காதல் 
டாப்சி -ஆடுகளம் 
த்ரிஷா -மங்காத்தா 
 இந்த  பிரிவில் விஜய் ரசிகர் அசினுக்கும் அஜித் ரசிகர் திரிசாவுக்கும் வாக்களிக்க ஏனையோரின்  தெரிவு யாராக இருக்கிறதோ அதன் அடிப்படையில் அசின் ,த்ரிஷா இருவரில் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு உண்டு 

favourite movie 


மங்காத்தா 
வேலாயுதம் 
ஏழாம் அறிவு 
சிறுத்தை 
கோ
இங்கும் விஜய் .அஜித் ரசிகர் மோதல் பலமாக இருக்கும் 2010 இல் இருவரும் மோத அயன் வெற்றியை பறித்தது .அதற்கு  காரணம் அந்த வருடம் அயன் அனைவருக்கும்  பிடித்த படமாக இருந்தது .ஆனால் இம்முறை மங்காத்தா அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கிறது .எனவே விஜய்  ரசிகர்களை விட மற்றயோரின் வாக்குகள் மங்காத்தா வுக்கு செல்லும் என்பதால் மங்காத்தா வின் வெற்றி வாய்ப்பு அதிகம் .அதையும் மீறி வேலாயுதம் வெற்றி பெற்றால் விஜய் ரசிகர்கள்=>ஏனையோர் என்ற முடிவுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை .ஏழாம் அறிவு அயனை போல் அனைவரையும் கவரவில்லை .அதைவிட கூட வந்த படங்கள் அசலோ வேட்டைகாரனோ இல்லை .சூர்யாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமும் இல்லை ,SO .......மற்றைய படங்கள் சும்மா ஐந்து படங்கள் போட வேண்டும்  என்பதற்காக  சேர்க்க பட்டவை 
 favourite director 

A R .முருகதாஸ் -ஏழாம் அறிவு 
K .V .ஆனந்த் -கோ 
செல்வராகவன் -  மயக்கம் என்ன 
வெங்கட்பிரபு -மங்காத்தா 
வெற்றிமாறன் -ஆடுகளம் 
இதன் முடிவை  இலகுவாக கூறி விடலாம் .ஏனெனில் ராஜா இந்த லிஸ்ட் இல் இல்லை .எனவே வெங்கட்பிரபு வின் வெற்றி உறுதி செய்யப் பட்டுள்ளது .மங்காத்தா படம் விஜய் ரசிகர்களையும் கவர முக்கிய காரணம் வெங்கட் பிரபு .

favourite song 

என்னமோ ஏதோ -கோ 
காதல் என்  காதல் -மயக்கம் என்ன 
கலசலா -ஒஸ்தி 
ஒத்த சொல்லாலா -ஆடுகளம் 
விளையாடு மங்காத்தா -மங்காத்தா 
இங்கு முடிவை கூறுவது சற்று சிரமமானது .விஜய் இன் பட பாடல் எதுவும் இல்லாத நிலையில் மங்காத்தா பாடல் வெற்றி பெற சந்தர்ப்பம் இருந்தாலும் அதையும் தாண்டி என்னமோ எதோ பாடல் அஜித் ரசிகர்களை கவர்ந்து இருந்தால் அந்த பாடல் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது .ஏனெனில் அநேக விஜய் ரசிகரின் ஓட்டு மங்காத்தா பாடலுக்கு போகாது என்ற எடுகோள் தான் .
சரி இவன் ஏதோ தான்தான் முடிவை தீர்மானிக்கிற மாதிரி ஏதோ சொல்லுறான் என்று என்னை திட்டுவதை விட்டு விட்டு இந்த லிங்கில் சென்று உங்கள் ஓட்டுக்களை  அளியுங்கள் 



Post Comment

Friday, December 23, 2011

மங்காத்தா வசூல் 130 கோடி .உண்மையா -ஒரு அலசல்


 .
''தற்போது படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் ஒரு காட்சி கூட எந்த திரையரங்கிலும் இல்லையாம். இந்நிலையில் படத்தினை பற்றி மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் உலவுகிறது''. 


வீரகேசரி வெளியிட்ட செய்தி இது
 இன்று வேலாயுதம் படம் வெளிவந்து 60 நாள் .பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரம் தான் இது .அல்ல விடில் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்  (behindwoods)நிலைவரங்களை பார்த்தால் தெரியும் இப்போதும் படம் ஓடிக் கொண்டு இருப்பது .

''படம் வெளியான ஒரு வாரத்தில் மட்டுமே படம் கல்லா கட்டியதாம். பின்பு படத்தின் வசூல் நிலைமை சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லையாம். அத்துடன் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரையில் 40 கோடியினையே வசூலாக பெற்றிருக்கிறதாம். இனியும் இப்படத்தின் மூலம் வருமானம் ஈட்டமுயாது என்ற நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரும் மனக் கவலையில் இருக்கிறாராம். ''
இதில் இருந்தே தெரிகிறது எழுதியவரின் மனநிலை .90 கோடிகளை கடந்து வெற்றி பெற்றுள்ளதாக  படத்தை தயாரித்த  ரவிச்சந்திரனும் வெளிநாட்டு     உரிமை பெற்ற ஐங்கரன் நிறுவனமும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இப்படி நடுநிலை தவறாத பாரம்பரிய தமிழர் பத்திரிகையான வீரகேசரியின் நம்பகத்தன்மையில் சந்தேகம் வருகிறது .இந்த செய்தியை 1700  க்கு மேற்பட்டவர்கள் முக புத்தகத்தில் பகிர்ந்துள்ளனர் .பிழையான செய்தி என பலரும் சுட்டிக் காட்டிய பின்னும் இதை வீரகேசரி நீக்க வில்லை .
வீரகேசரியில் வெளியான செய்தி
ஒருவரின் வெற்றியில் இவ்வளவுக்கு பொறாமை படும் இவ்வாறானவர்களின் செய்தியை ஒரு பொறுப்பான பத்திரிக்கை வெளியிட்டிருப்பது பதிவர்கள் தங்கள் எண்ணத்தில் தோன்றிய தங்களின் கருத்துகளை வெளியிட அதை copy  அடித்து உண்மை செய்தி போல பிரசுரிக்கும் கீழ்த்தரமான இணையத்தளங்களுடன் வீரகேசரியையும் ஒப்பிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளியுள்ளது .வீரகேசரி குழுமத்துக்கு நான் தாழ்மையாக வேண்டுவது என்னவென்றால் செய்திகளை பிரசுரிக்கும் போது உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிடுவதோடு   இந்த பிழையான செய்தியை நீக்கி உங்கள் நன் மதிப்பை தக்க வைத்து கொள்ளுங்கள் .






ங்காத்தா வசூல் 130  கோடி 

தல நடிப்பில் வெளிவந்த மங்காத்தா படத்தின் வசூல் தொடர்பில் பல வதந்திகள்   வெளியான நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா வசூல் 130 கோடி என உத்தியோகபோர்வமாக அறிவித்துள்ளது .சினிமா விமர்சகர்கள் பலர் அண்ணளவாக 80 கோடி என கணித்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள கணக்கு அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று நினைப்பீர்களேயானால் அது உங்களின் பிழை .எந்திரன் உலக சாதனை புரிந்த படம்தான் எனினும் அதன் வசூலையும் மிகைப் படுத்தித்தான் வெளியிட்டு இருந்தார்கள் .இதன் உண்மை தன்மையை அண்ணன் ஜீவதர்சனிடம்(http://www.eppoodi.blogspot.com/ )தான் கேட்க வேணும் எனினும் நான் நேரடியாக  டிவியில் பார்த்த சிங்கம் இசை வெளியீட்டு விழாவில் அயன் திரைப்பட வசூலை வேட்டைக்காரன் முறியடித்ததாக அப்போதைய நிறைவேற்று அதிகாரி சக்சேனா அறிவித்ததை நீங்கள் நம்பினால்  மங்காத்தா வசூலையும் நம்பலாம் behindwoods செய்தி குறிப்பு 


 சிங்கம் இசை வெளியீட்டு விழா
 நண்பன்
நண்பன்  பாடல்கள் இன்று வெளியாகின .பாடல்கள் அனைத்துமே வரவேற்பு பெற்று வருகின்றன .ஏழாம் அறிவு பாடல்கள் copy என பலரும் விமர்சித்த நிலையில் நண்பன் பாடல்களை பலரும் எதிர் பார்த்து இருந்தனர் .எனினும் பாடல்கள் இசை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
.மதன் கார்க்கி இரண்டு பாடல்களை எழுதி உள்ளார் .காதல் என்பதை 16 மொழிகளில் வெளிப் படுத்தியுள்ளார்
அஸ்க்-Ask - Turkish
லஸ்கா-Laska - Šløvak
ஏமோ-Amøur - French/Španish
ஐ-Ai - Chinese
அஸ்த்-Ast - Icelandic
லைபே-Liebe - German
அஹாவா-Ahava - Hebrew
போலிங்கோ-Bølingø - Lingala
சிந்தா -Cinta - Malay
இஷ்க்-Ishq - Arabic
மைலே-Meile - Lithuanian
லவ் -Love - Ènglish
இஷ்ட-Ishtam - Telugu
பிரேம-Prema- Malayalam
பியாரோ -Pyaaro- Hindi
காதல்-Kaathal - Tamil 

 வெளியான பாடல்களில் அஸ்கு பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது .விஜய்க்கு பிடித்த பாடலும் இதுதான் .
மதன் கார்க்கியின் பாடல் வரிகள் அருமை
''ப்ளுடோவில் உனை நான் கூடேற்றுவேன்..
.விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன் .. 
முக்கோணங்கள் படித்தேன் உன் மூக்கின் மேலே ....
விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின்மேலே ..
மெல் இடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் .

புல்லில் பூத்த பனி நீ... -ஒரு
கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணனி.. -உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போல
பிள்ளை மெல்லும் சொல்லை போல...''
மதன் கார்க்கி எழுதிய இரண்டு  பாடல் வரிகள் அவரின் இணையதளத்தில் முழுமையாக பெற்று கொள்ளலாம்
மதன் கார்க்கியின் இணையத்தளம் 

ஏனைய பாடல்களும் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன .நண்பன் இசை வெளியானதில் இன்றைய தினம் திரைக்கு வரும் ராஜ பாட்டை யை மறந்து விட வேண்டாம் .படம் நல்ல மசாலா பொழுது போக்கு படம் என விமர்சனங்கள் வெளி வந்தவண்ணமுள்ளன  .அத்துடன் சாருக்கானின் டான் -2 வும் இன்று வெளியாகிறது .

நேரமின்மை காரணமாக வலையுலகில் ஒதுங்கி இருந்தாலும் முக புத்தகம் மூலமாக என்னை எழுத தூண்டும் அனைவருக்கும் நன்றிகள் .
 -உங்களில் ஒருவன் 







Post Comment

Sunday, September 4, 2011

அஜித் vs மங்காத்தா.

    மங்காத்தா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.பல இடங்களில் இருந்தும் பாராட்டு குவிகிறது .அஜித்தின் திருப்பு முனை படங்களான வாலி,தீனா,பில்லா ஆகியவற்றை பின் தள்ளி உள்ளதாம் .பல நடிகர்களுக்கும் முக்கிய படங்கள் (50,100) வெற்றிகரமாக அமைந்தது இல்லை .தல அந்த அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார் .வாழ்த்துக்கள் தல . 

நான்    வலைப்  பதிவுகள்  எழுத   ஆரம்பித்த   காலத்தில்  எழுதிய பதிவுதான் இது.பலரை சென்று அடையவில்லை . .இந்த வேளையில் இப்பதிவை  பதிவில் எந்தவித மாற்றமும் செய்யாமல்  மீள பதிவாக்குகிறேன் .

 

 

மங்காத்தா அஜித் நடிக்கும் 50 வது படம் .கடந்த மேதினத்தை குறி வைத்து எடுக்கப்பட்ட படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது .2007  இறுதியில் வெளிவந்து சக்கை போடு போட்ட பில்லா படத்துக்கு பின்னர் மங்காத்தா அதிக எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கிறது. சக நண்பரான விஜய் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகையில் இவரின் படங்கள் வருடத்துக்கு ஒன்று வெளியாவதே அபூர்வமாக  உள்ளது. கொலிவூட்டின்முன்னணி நடிகரான அஜித் இவ்வாறு தாமதிப்பது அவரின் ரசிகர்களை விரக்தி அடைய செய்கிறது.அதுவும் எத்தனை நாளுக்குத்தான் படங்களில் தல தல என்று கூவப் போகிறார்களோ தெரியவில்லை . தாமதித்தாலும் பரவாயில்லை என்று படம் பார்க்க போனால் படம் சப்பையாகவே உள்ளது .படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் துளி கவலை கூட இல்லாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்தும் விஜயைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அஜித் நடிப்பதாக இருந்து பின்பு கைவிட்ட படங்களில் நடித்தே ஒருவர் முன்னணி நடிகராகிய வரலாறு உண்டு .

எவ்வாறாயினும் யாருடைய தயவும் இன்றி சினிமாவில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய அஜித்தின் துணிச்சல் எந்த நடிகருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .சில படங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஜித்தின் படங்கள் வெற்றி பெறும் வீதமானது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது துரதிர்ஷ்டம் ஆகும்.


மங்காத்தா 

விஜயின் படமான சுறாவும்அஜித்தின் படமான மங்காத்தாவும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் நடந்தாலும் விஜயின் சுறா வெளிவந்து (அது மொக்கையாகியது வேறு கதை) அடுத்தடுத்த படங்களும் வெளியாகி விட்டன .மங்காத்தா தாமதமாக வந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ளது .கிளௌட் நைன்மூவிஸ் சார்பில் துறை  தயாநிதி அழகிரி  தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருக்கிறார். இவர்களுடன் அர்ஜுன் ,பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருகிறது. யுவனின் இசையில் விளையாடு மங்காத்தா பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது 




.படத்தின் கதை சஸ்பென்ட் ஆக வைக்கப்பட்டிருந்தாலும் மேட்ச் பிக்சிங் (match fixing) தொடர்பானது என தகவல் வெளியாகியிருக்கிறது.  இதில் முக்கிய அம்சம் என்னவெனில் அஜித் இதில் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.  வில்லன் என்றால் முதலில் வில்லனாக நடித்து விட்டு க்ளைமாக்சில் நல்லவனாக காட்டும் வேடமும் (போக்கிரி) இல்லையாம்.எனினும் நெகடிவ் ரோல் இல் அஜித் நடிக்கிறார் என்பதுதான் இப்போது உறுதி ஆகியிருக்கிறது .( போலீஸ் ஆக நடிக்க அர்ஜுன் இருக்காரே). இப்படம் இந்தியில் இம்ரான் நடித்த ஜன்நெட் என்ற படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் வெங்கட் பிரபு அதை  மறுத்துள்ளார் .
இப்போதைய தகவல்களின்படி எதிர்வரும் ஆகஸ்ட் 12 படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது .வேலாயுதம் ஏழாம் அறிவு என்பனவும் இதே காலப்பகுதியில் வெளியாக உள்ளன. எனினும் ஒரே நாளில் வெளிவர சந்தர்ப்பம் இல்லை. .மங்காத்தா வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் தல .

இது இரு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது என்பதை மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் .


நானும் விஜய் ரசிகன்தான் இவ்வாறான சிலரின் நடவடிக்கையால் எல்லா ரசிகர்களும் வெட்கி தலை குனிய வேண்டியுள்ளது

 பில்லா -2

மங்காத்தா மகத்தான வசூலை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது .இவ் வேளையில் அடுத்த படமான பில்லா-2 இல் அஜித் ஈழ அகதியாக நடிக்க உள்ளாராம் .சில காட்சிகளில் யாழ்ப்பாண தமிழும் கதைக்க உள்ளாராம்.ஏற்கனவே தெனாலியில் கமல் கதைத்து மனம் நோக வைத்தது போல இல்லாமல் நல்லபடி செய்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே .

facebook இல் அண்மையில் ரசித்தது .
மங்காத்தா டயலாக் :
வைபவ் :என்ன  வந்ததுல இருந்து காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?
அஜித் : காமெடி பண்ண நா என்ன "சந்தானம் "ஆ !
சந்தானம் : என்ன கலாசிடாராம ......

மங்காத்தா   விமர்சனம் 

Post Comment

Wednesday, August 31, 2011

மங்காத்தா -போக்கிரி 2

         தல அஜித் நடிக்கும்50 வது படம்  மிகுந்த எதிர்பார்ப்பு .மல்டி ஸ்டார் படம் என்பதாலும் இப்போது வீட்டில் வெட்டியாக இருப்பதாலும் முதன்முறையாக தலையின் படம் ஒன்றுக்கு முதல் காட்சி பார்க்க சென்றேன் .யாழ்ப்பாணத்தில் விஜய் படங்களுக்குத்தான் ஒபேனிங் செமையாக இருக்கும் .அஜித்துக்கு இருந்தாலும் அந்த அளவுக்கு இருக்காது (தலைவர் ரஜினி விதிவிலக்கு ).ஆனால் இன்றைய தினம் குவிந்த கூட்டத்தை பார்த்த போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு தெரிந்தது .பயங்கர  நெரிசல்.ஒருவாறு சமாளித்து டிக்கெட் எடுத்துக் கொண்டேன் .படம்  போடுவதற்கு நிமிடம் முன்பே ஹவுஸ் புல் ஆகிவிட்டது .(யாழ் மனோஹரா இலங்கையில் இப்போது உள்ள தியேட்டர்களில் மிகப் பெரியது .ஏறத்தாள 1000 பேரை கொள்ளும் ).    சரி படத்துக்கு வருவோம் .பட வெளியீடு இழுபறியில் நடந்தது அனைவரும் அறிந்ததே .சன் படத்தை வழங்கிய போதும் வழமையான ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அடக்கி வாசித்து உள்ளார்கள் .தல50  என்பது  தல இதுவரை நடித்த படங்களின் புகைப்பட தொகுப்பாக அட்டகாசமாக வடிவமைத்து இருந்தார்கள்.படத்தின் ஆரம்ப காட்சிகளை பார்க்க தல ரசிகர்கள் இடம் கொடுக்க வில்லை .கோடி ரூபாவை அடைவதற்காக ஐந்து பேர் போராடும் விதமே படத்தின் மைய கதை .படத்தின் கதையும் அதுவே .படத்தின் கதையை விட திரைக் கதையை நகர்த்தும் விதத்திலேயே இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது.வெங்கட்பிரபு அதை நன்கே செய்திருக்கிறார் .

 அஜித்
                படத்தில் சகல பாத்திரங்களுமே முக்கியமானவை.ஹீரோயிசம் இல்லை .அதுவும் 50வது படம் நெகடிவ் கேரக்டர் வேறு . தன்னை மட்டும் முன்னிலைப் படுத்தாத இந்த படத்தை தெரிவு செய்து நடித்த அஜித்தின் பரந்த மனதை முதலில் பாராட்டியே ஆக வேண்டும் .வினாய்க் மாதவன் 40 வயது கடந்த போலீஸ் வேலையில் இருந்து நீக்கப் பட்ட உத்தியோகத்தர் .இதுதான் தலையின் கதா பாத்திரம்.கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் .வயதுக்கேற்ற நடிப்பு.திட்டம் தீட்டும் போது ஆழ ஆராய்ந்து நிதானமாக முடிவெடுப்பது ,நகைசுவை காட்சியிலும் கோபக் காட்சியிலும் ,திரிசாவுடன் ஆன காதல் காட்சியிலும் அவர் காட்டும்  முக வெளிப்பாடு என்பன அவரின் நடிப்பின் முதிர்ச்சியை காட்டுகிறது .சண்டை காட்சிகளிலும் ,சாகச பைக் சேசிங் காட்சியிலும் அதிரடியில் பின்னி பெடல் இருக்கிறார் .அதை விட முக்கியமாய் நடன காட்சிகளில் மினக்கெட்டு இருக்கிறார். முன்னேற்றம் தெரிகிறதுமொத்தத்தில் தனது பங்கை தனக்கேயுரிய விதத்தில் கச்சிதமாக செய்துள்ளார் .சக போட்டியாளரும் ,நண்பனுமான விஜயின் பாடல் காட்சி ஒன்றை படத்தில் சேர்த்தமையானது அஜித்தின் பெருந்தன்மை யையும் தமிழ் சினிமாவின் ஆரோக்கிய நிலையை யும் காடுகிறது .
அர்ஜுன் 
   .        ஆக்சன் கிங் தான்தான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார்.படத்தில் தான் 2வது  ஹீரோ என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக் கொண்டு தனதுபங்கை திறம்பட செய்து அனைவரையும் கவர்ந்துள்ளார் அர்ஜுன்.இவரின் இளமை ரகசியம் தான் என்னவோ .அஜித்தை விட இளமையாக உள்ளார் .தனக்கு கை வந்த கலையான போலீஸ் அதிகாரி வேடத்தில் கொள்ளை கும்பலை தேடி வலை விரிக்கிறார் 
திரிஷா 
       மாமிக்கு படத்தில்.அதிக முக்கியமில்லை.அதிகரித்த பாத்திரங்களின் அளவால் த்ரிஷா என்னை ஈர்க்க வில்லை.அஜித்தின் காதலியாகவும் கிரிக்கெட் புக்கி ஜெயபிரகாசின் மகளாகவும் வருகிறார் த்ரிஷா. .வாடா பின்லேடா பாட்டில் அஜித்துடன் ரொமான்ஸ் செய்கிறார் .அழகாகவும்   இருக்கிறார். 
        . மற்றைய பாத்திரங்களில் அடுத்ததாக பிரேம்ஜி ஜொலிக்கிறார். .அண்ணனின் படம் தம்பிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது போல் தெரிகிறது.பிரேம் பாத்திரத்தில் நகைசுவையான பிரிலியன்ட் ஆக கொள்ளை கும்பலில் ஒருவனாக வருகிறார்.படத்தில் இன்னொரு கொள்ளையனாக வைபவும் அவருக்கு ஜோடியாக அஞ்சலியும் வருகிறார்.அர்ஜுனின் மனைவியாக அன்ரியா வருகிறார்.தியேட்டர் அதிபர், கிரிக்கட் புக்கியாக ஜெயபிரகாஸ் நடித்துள்ளார் .விளையாடு மங்காத்தா பாடலுக்கு லட்சுமிராய் பயன் படுத்தப் பட்டிருக்கிறார்
 வெங்கட்பிரபு 

            மங்காத்தா கண்டிப்பாக இயக்குனரின்  படம் படத்தின் ஹீரோ திரைக்கதை தான்.வெங்கட் பிரபு ஆட்டம் என்ற தலைப்பிலேயே தெரிகிறதுஆரம்பத்தில் சற்று மெதுவாக நகரும் திரைக்கதை கொள்ளையுடன் சூடு பிடிக்கிறது .தனது எல்லா படங்களிலும் கிரிக்கெட்டை புகுத்தும் வெங்கட் இதிலும் கிரிக்கெட்டை புகுத்தியுள்ளார் .எனினும் ஆழ உடுருவ இல்லை.
யுவன்  
       படத்தின் முக்கிய தூணாக இசை அமைந்துள்ளது .யுவனின் பின்னணி இசை.படத்தின் தீம் இசை அருமையாக இருக்கிறது ..பில்லா தீம் இசையை போல் இதுவும் பிரபலமாகும் விளையாடு மங்காத்தா,அம்பானி பரம்பரை பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன .சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் பாராட்டும் படி உள்ளது .படத்தை கலர்புல்லா காட்டியுள்ளார்
           குறைகள் 
  மங்காத்தா படத்தில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் நடித்திருப்பதால் யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று அறிவதற்கிடையில் தலை சுத்துகிறது .அவர்களை அறிமுகப் படுத்துவதிலேயே நேரம் இழுத்தடிக்க படுகிறது .வழமையான டீம் போர் அடிக்கிறது .பிரேம் செய்யும் லூட்டிகள் வழமை போலவே இருப்பதால் மொக்கையாகவே  உள்ளது .அஜித் ஓவர் குடிகாரனாக நடித்து இருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் பிழையான எண்ணக் கருவை விதிக்க வாய்ப்பு உள்ளது.பல இடங்களில் மன்னிக்க முடியாத லாஜிக் மீறல்கள் உள்ளன.போலீஸ் அதிகாரியான அஜித்தை ஜெயபிரகாஸ் நம்புவது ,500 கோடியை கடத்தும் விதம் மிகவும் சின்னப் புள்ள தனமாக உள்ளது.அஜித் கோடிக்கு ஆசைப் படுவதற்கு எந்த விதமான காரணமும் சொல்லப் படஇல்லை.படத்தின் முடிவை முதலே அனுமானிக்க கூடியதாக உள்ளது.
பிடித்த  வரிகள் 
நானும் எவ்வளவு நாளுக்குத்தான் நல்லவனாயே நடிக்கிறது .
 ஓவர் confident உடம்புக்கு ஆகாது .
சத்தியமாய் இனி தண்ணியே அடிக்க கூடாது .
     லைட் போட்டு வண்டி ஓட்டலாம் .ஆனா லைட் ஆ போட்டுகிட்டு வண்டி ஓட்ட கூடாது.
என்ன வந்ததில் இருந்து சீரியஸ் ஆயே இருக்கீங்க .காமெடி பண்ண நான் என்ன சந்தானமா?
மனுஷன்  கண்டு  பிடிச்சதிலேயே உருப்படியானது ரெண்டு .ஒன்னு சரக்கு இன்னொன்னு முறுக்கு  
எல்லாம் சரி என்ன அது தலைப்பு .அதுவா தியேட்டரில் போய் பாருங்க .
பிடித்து இருந்தால் தமிழ் இன்லியில் ஓட்டு போடுங்கள் 


















Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...