Wednesday, August 31, 2011

மங்காத்தா -போக்கிரி 2

         தல அஜித் நடிக்கும்50 வது படம்  மிகுந்த எதிர்பார்ப்பு .மல்டி ஸ்டார் படம் என்பதாலும் இப்போது வீட்டில் வெட்டியாக இருப்பதாலும் முதன்முறையாக தலையின் படம் ஒன்றுக்கு முதல் காட்சி பார்க்க சென்றேன் .யாழ்ப்பாணத்தில் விஜய் படங்களுக்குத்தான் ஒபேனிங் செமையாக இருக்கும் .அஜித்துக்கு இருந்தாலும் அந்த அளவுக்கு இருக்காது (தலைவர் ரஜினி விதிவிலக்கு ).ஆனால் இன்றைய தினம் குவிந்த கூட்டத்தை பார்த்த போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு தெரிந்தது .பயங்கர  நெரிசல்.ஒருவாறு சமாளித்து டிக்கெட் எடுத்துக் கொண்டேன் .படம்  போடுவதற்கு நிமிடம் முன்பே ஹவுஸ் புல் ஆகிவிட்டது .(யாழ் மனோஹரா இலங்கையில் இப்போது உள்ள தியேட்டர்களில் மிகப் பெரியது .ஏறத்தாள 1000 பேரை கொள்ளும் ).    சரி படத்துக்கு வருவோம் .பட வெளியீடு இழுபறியில் நடந்தது அனைவரும் அறிந்ததே .சன் படத்தை வழங்கிய போதும் வழமையான ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அடக்கி வாசித்து உள்ளார்கள் .தல50  என்பது  தல இதுவரை நடித்த படங்களின் புகைப்பட தொகுப்பாக அட்டகாசமாக வடிவமைத்து இருந்தார்கள்.படத்தின் ஆரம்ப காட்சிகளை பார்க்க தல ரசிகர்கள் இடம் கொடுக்க வில்லை .கோடி ரூபாவை அடைவதற்காக ஐந்து பேர் போராடும் விதமே படத்தின் மைய கதை .படத்தின் கதையும் அதுவே .படத்தின் கதையை விட திரைக் கதையை நகர்த்தும் விதத்திலேயே இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது.வெங்கட்பிரபு அதை நன்கே செய்திருக்கிறார் .

 அஜித்
                படத்தில் சகல பாத்திரங்களுமே முக்கியமானவை.ஹீரோயிசம் இல்லை .அதுவும் 50வது படம் நெகடிவ் கேரக்டர் வேறு . தன்னை மட்டும் முன்னிலைப் படுத்தாத இந்த படத்தை தெரிவு செய்து நடித்த அஜித்தின் பரந்த மனதை முதலில் பாராட்டியே ஆக வேண்டும் .வினாய்க் மாதவன் 40 வயது கடந்த போலீஸ் வேலையில் இருந்து நீக்கப் பட்ட உத்தியோகத்தர் .இதுதான் தலையின் கதா பாத்திரம்.கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் .வயதுக்கேற்ற நடிப்பு.திட்டம் தீட்டும் போது ஆழ ஆராய்ந்து நிதானமாக முடிவெடுப்பது ,நகைசுவை காட்சியிலும் கோபக் காட்சியிலும் ,திரிசாவுடன் ஆன காதல் காட்சியிலும் அவர் காட்டும்  முக வெளிப்பாடு என்பன அவரின் நடிப்பின் முதிர்ச்சியை காட்டுகிறது .சண்டை காட்சிகளிலும் ,சாகச பைக் சேசிங் காட்சியிலும் அதிரடியில் பின்னி பெடல் இருக்கிறார் .அதை விட முக்கியமாய் நடன காட்சிகளில் மினக்கெட்டு இருக்கிறார். முன்னேற்றம் தெரிகிறதுமொத்தத்தில் தனது பங்கை தனக்கேயுரிய விதத்தில் கச்சிதமாக செய்துள்ளார் .சக போட்டியாளரும் ,நண்பனுமான விஜயின் பாடல் காட்சி ஒன்றை படத்தில் சேர்த்தமையானது அஜித்தின் பெருந்தன்மை யையும் தமிழ் சினிமாவின் ஆரோக்கிய நிலையை யும் காடுகிறது .
அர்ஜுன் 
   .        ஆக்சன் கிங் தான்தான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார்.படத்தில் தான் 2வது  ஹீரோ என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக் கொண்டு தனதுபங்கை திறம்பட செய்து அனைவரையும் கவர்ந்துள்ளார் அர்ஜுன்.இவரின் இளமை ரகசியம் தான் என்னவோ .அஜித்தை விட இளமையாக உள்ளார் .தனக்கு கை வந்த கலையான போலீஸ் அதிகாரி வேடத்தில் கொள்ளை கும்பலை தேடி வலை விரிக்கிறார் 
திரிஷா 
       மாமிக்கு படத்தில்.அதிக முக்கியமில்லை.அதிகரித்த பாத்திரங்களின் அளவால் த்ரிஷா என்னை ஈர்க்க வில்லை.அஜித்தின் காதலியாகவும் கிரிக்கெட் புக்கி ஜெயபிரகாசின் மகளாகவும் வருகிறார் த்ரிஷா. .வாடா பின்லேடா பாட்டில் அஜித்துடன் ரொமான்ஸ் செய்கிறார் .அழகாகவும்   இருக்கிறார். 
        . மற்றைய பாத்திரங்களில் அடுத்ததாக பிரேம்ஜி ஜொலிக்கிறார். .அண்ணனின் படம் தம்பிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது போல் தெரிகிறது.பிரேம் பாத்திரத்தில் நகைசுவையான பிரிலியன்ட் ஆக கொள்ளை கும்பலில் ஒருவனாக வருகிறார்.படத்தில் இன்னொரு கொள்ளையனாக வைபவும் அவருக்கு ஜோடியாக அஞ்சலியும் வருகிறார்.அர்ஜுனின் மனைவியாக அன்ரியா வருகிறார்.தியேட்டர் அதிபர், கிரிக்கட் புக்கியாக ஜெயபிரகாஸ் நடித்துள்ளார் .விளையாடு மங்காத்தா பாடலுக்கு லட்சுமிராய் பயன் படுத்தப் பட்டிருக்கிறார்
 வெங்கட்பிரபு 

            மங்காத்தா கண்டிப்பாக இயக்குனரின்  படம் படத்தின் ஹீரோ திரைக்கதை தான்.வெங்கட் பிரபு ஆட்டம் என்ற தலைப்பிலேயே தெரிகிறதுஆரம்பத்தில் சற்று மெதுவாக நகரும் திரைக்கதை கொள்ளையுடன் சூடு பிடிக்கிறது .தனது எல்லா படங்களிலும் கிரிக்கெட்டை புகுத்தும் வெங்கட் இதிலும் கிரிக்கெட்டை புகுத்தியுள்ளார் .எனினும் ஆழ உடுருவ இல்லை.
யுவன்  
       படத்தின் முக்கிய தூணாக இசை அமைந்துள்ளது .யுவனின் பின்னணி இசை.படத்தின் தீம் இசை அருமையாக இருக்கிறது ..பில்லா தீம் இசையை போல் இதுவும் பிரபலமாகும் விளையாடு மங்காத்தா,அம்பானி பரம்பரை பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன .சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் பாராட்டும் படி உள்ளது .படத்தை கலர்புல்லா காட்டியுள்ளார்
           குறைகள் 
  மங்காத்தா படத்தில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் நடித்திருப்பதால் யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று அறிவதற்கிடையில் தலை சுத்துகிறது .அவர்களை அறிமுகப் படுத்துவதிலேயே நேரம் இழுத்தடிக்க படுகிறது .வழமையான டீம் போர் அடிக்கிறது .பிரேம் செய்யும் லூட்டிகள் வழமை போலவே இருப்பதால் மொக்கையாகவே  உள்ளது .அஜித் ஓவர் குடிகாரனாக நடித்து இருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் பிழையான எண்ணக் கருவை விதிக்க வாய்ப்பு உள்ளது.பல இடங்களில் மன்னிக்க முடியாத லாஜிக் மீறல்கள் உள்ளன.போலீஸ் அதிகாரியான அஜித்தை ஜெயபிரகாஸ் நம்புவது ,500 கோடியை கடத்தும் விதம் மிகவும் சின்னப் புள்ள தனமாக உள்ளது.அஜித் கோடிக்கு ஆசைப் படுவதற்கு எந்த விதமான காரணமும் சொல்லப் படஇல்லை.படத்தின் முடிவை முதலே அனுமானிக்க கூடியதாக உள்ளது.
பிடித்த  வரிகள் 
நானும் எவ்வளவு நாளுக்குத்தான் நல்லவனாயே நடிக்கிறது .
 ஓவர் confident உடம்புக்கு ஆகாது .
சத்தியமாய் இனி தண்ணியே அடிக்க கூடாது .
     லைட் போட்டு வண்டி ஓட்டலாம் .ஆனா லைட் ஆ போட்டுகிட்டு வண்டி ஓட்ட கூடாது.
என்ன வந்ததில் இருந்து சீரியஸ் ஆயே இருக்கீங்க .காமெடி பண்ண நான் என்ன சந்தானமா?
மனுஷன்  கண்டு  பிடிச்சதிலேயே உருப்படியானது ரெண்டு .ஒன்னு சரக்கு இன்னொன்னு முறுக்கு  
எல்லாம் சரி என்ன அது தலைப்பு .அதுவா தியேட்டரில் போய் பாருங்க .
பிடித்து இருந்தால் தமிழ் இன்லியில் ஓட்டு போடுங்கள் 


















Post Comment

Sunday, August 28, 2011

ரஜினியை எதிர்க்கிறாரா அஜித் ?

           படையப்பா என்றதும் உடனே ஞாபகத்துக்கு வருவது நம்ம தலைவரின் பஞ்ச் தான் ''அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல'' இந்த வரிகள் தெரியாத ஒருவனுக்கு தமிழ் சினிமாவை பற்றியே தெரிந்திருக்க வாய்ப்பு இல்ல .படத்தின் கடைசி காட்சியில் கூட ரம்யா கிருஷ்ணன் தான் அடுத்த பிறவியில் வந்து பலி வாங்குவேன் என்று சொல்லி செத்த பின்பும் கூட ரஜினி சொல்லுவார் .இந்த பிறவி இல்ல எத்தனை பிறவி எடுத்தாலும்  'அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல'' ரஜினியின் திரை வரலாற்றிலேயே அவரின் கோடானு கோடி ரசிகர்கள் அந்த வசனத்தை வேத வாக்காக எடுத்து பலருக்கு அறிவுரை சொல்லுவர் .படம் வந்து எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அந்த வசனத்தின் மதிப்பு இன்னும் குறையவில்லை .

         சரி இது எல்லோருக்கும்  தெரிந்ததுதானே இதை ஏன் இப்போது சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது .விஷயம் இல்லாமலா ?.இப்போது வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றுள்ள மங்காத்தா ஆடியோ அல்பத்தை  நானும் கேட்டேன் .அருமையான பாடல்கள் .ஒரு பாடல் பல்லேலக்கா என்று ஆரம்பிக்கிறது .அட இது நம்ம தலைவர் பாட்டு தொடக்கம் அல்லவா அதை பயன்படுத்தி தலைவரை பெருமைப் படுத்தி உள்ளார்கள் என்று பெருமிதப் பட்டேன்.பாடல் வரிகளை தொடர்ந்து கேட்டேன்.
 ஆசைப்படு அளவேயில்ல ஆம்பிளைக்கு அதுதான் அழகு கோபப்படு குறையே இல்ல பொம்பளைக்கு அதுதான் பொறுப்பு .

 பாடல்     எழுதியவர்    கங்கை அமரன். இதிலே அஜித்துக்கு தொடர்பு இல்லை என்றாலும் அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு தெரியாமல்  இந்த  இடம்பெற வாய்ப்பு இல்லை.

 இதோ இன்னுமொரு சம்பவம் .    ரஜினி ரசிகர்களுக்கு இந்த வசனம் எப்படி முக்கியமானதோ நம்ம தளபதி ரசிகர்களுக்கு மிகவும் கவர்ந்த விஜயின் வசனம் என்றால் அது திருமலையில் இடம்பெற்ற வாழ்க்கை ஒரு வட்டமடா ஜெயிக்கிறவன் தோற்பான்  தோக்கிறவன்  ஜெயிப்பான்.என் போன்ற விஜய் ரசிகர்கள் விஜயின் தோல்விகளின் போது  எம்மை கலாய்க்கும் நண்பர்களுக்கு அளிக்கும் ஒரே பதில் இதுதான் .இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும் .இந்த வரலாற்று சிறப்பு மிக்க வசனத்தையும் ஒரு  பாட்டில் கலாய்த்து இருப்பார்கள் .வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா சத்தியமாய் இது எந்த படம் யார் நடித்த படம் என்று எனக்கு தெரியாது.(நம்பித்தான் ஆகனும்).


         திரையுலகில் இது ஒன்றும்  புதிது அல்ல .    நம்ம. தல தளபதி ஒரு காலத்தில் தமக்குள் மோதும் போது படத்தில் கதை இருக்குதோ இல்லையோ ஒவ்வொரு படத்திலும் மற்றவரை போட்டுத் தாக்கும் வகையில் சீன் இருக்க  வேண்டும். அதற்கு பல உதாரணங்கள் உண்டு .எனினும் அதன் உச்ச கட்டம் அட்டகாசம் படத்தில் ஒரு பாடலையே உனக்கென்ன உனக்கென்ன   என்று விஜயை கேட்கும்படி அமைத்தனர்.அதற்கு பதில் அளிக்கும் வண்ணமாக         சச்சின் படத்தில் மாரோ மாரோ பாடலையும் குண்டுமாங்கா பாடலை அஜித்தின் அட்டகாச   உருவத்தை கேலி செய்யும்  வகையிலும் விஜய் பயன்படுத்தினார்.ஆனால் அதன் பின் புரிந்துணர்வு ஏற்பட்டு  கசப்புகளை மறந்து  இப்போது சிறந்த நண்பர்களாக தலதளபதி உள்ளனர். 

எல்லாம் சரி தலைப்பை கண்டு பயந்து விட்டீர்களா? இல்லாவிட்டால் உள்ளே வருவீர்களா ? அதுதான் சும்மா .கண்டுக்காதீங்க   

  மங்காத்தா பிடித்த பாடல்வரிகள்
 தப்பு கூட தப்பாகாது சத்தம் போட்டு சொல்லப்பா,
   ஆசைப்படு அளவேயில்ல ஆம்பிளைக்கு அதுதான் அழகு கோபப்படு குறையே இல்ல பொம்பளைக்கு அதுதான் பொறுப்பு .-பல்லேலக்கா
  நல்லவர்கள் யாரோ தீயவர்கள்யாரோ கண்டு கொண்டு   கன்னி யாரும் காதல் செய்வதில்லையே -நண்பனே
    தோழா மீன் வாழ நீர் வேண்டும் நான் வாழ பீர் வேண்டும்.-ஓபன் தி பாட்டில்

   வேலாயுதம் பாடல்கள் எப்படி.........
         வேலாயுதம் பாடல்கள் இன்று வெளியாகி வானை கிழிக்கின்றன.நம்ம தளபதி எத்தனை  படம் வந்தாலும்  திருப்பாச்சியை விட மாட்டார் போல இருக்கே .இரண்டு பாடல்களில் திருப்பாச்சியை வெற்றிகரமாக புகுத்தி விட்டார் .வேட்டைக்காரன் போல காது கிழிய குத்தவில்லை விஜய்அன்டனி .     இன்றைய நிலைவரப்படி சிலாக்ஸ் சிலாக்ஸ் சிலா சிலா  சிலாக்ஸ்தான் பெஸ்ட் .ஆனால் மாறலாம் .ரத்தத்தின் ரத்தமே சிறந்த வகையில் பாசத்தை வெளிப்படுத்துகிறது .சொன்ன புரியாது தொடக்கம் கில்லிமுதல் பாடலை ஞாபகப் படுத்துகிறது 
        விஜய்  ரசிகர்களுக்கு 5 கோடியில் சில வரிகள்-
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள    அடங்காது நீங்கெல்லாம் என்  மேல வச்ச பாசம் பொண்ணா  பிறந்தாலும் இது  போல இருக்காது நா  உங்க மேல எல்லாம் வச்ச நேசம். ..
வேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு நிக்காது இந்த காலு கொட்டிடுச்சுடா தேளு ..........
தலையில்  ஆடும்  கரகம் இருக்கும்  தலையில கணம்தான் இருந்ததில்ல 
சண்டையில   MGR  சாட்டையில அய்யனாரு தில் இருந்தும் வம்பு சண்ட  போட்டதில்ல  
உங்க  வீட்டு  செல்ல புள்ள என்ன போல யாரும் இல்ல
   நல்ல செய்தி     
அப்புறம் மங்காத்தா வில்    மச்சி ஓபன் தி பாட்டில் பாடலுக்கு தளபதி  கெஸ்ட்    ரோலில் வருகிறார் என ஒரு தகவல் கசிந்திருக்கிறது .கேட்கவே புல்லரிக்குது .மங்காத்தா ட்ரைலர்    வெளியானவுடன்  பிரேம்ஜிக்கு போன் செய்து ஹா ஹா    மங்காத்தாடா என்று   சொல்லும் போதே நினைச்சன் இப்படி நடக்கலாம் என்று.பிறகென்ன இது உங்காத்தா எங்காத்தா இல்லடா மங்காத்தா டா .
breaking news

  வேலாயுதம்  பாடல்கள் வெளிவந்து  5 மணி நேரத்தில் சாதனை .எந்திரன்  ,மங்காத்தா அனைத்தையும் முறியடித்தது.மேலதிக விபரங்கள் பின்னர் ... 
chilax chilax chila chila  chilax
பிடித்திருந்தால் தமிழ் இன்லியிலும் ஓட்டு போடுங்கள் 

Post Comment

Saturday, August 27, 2011

சூர்யா விஜய்க்கு செய்தது சரியா ?

      .   1975  இல்     பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தார் .படத்தில் இவருக்கு விஜய்க்கு இணையான வேடம் வழங்கப் பட்டிருந்தது .விஜய் ஜோடியாக கௌசல்யாவும் சூர்யா ஜோடியாக சிம்ரனும் நடித்தனர் .விஜயின் பாடல்களை விட சூர்யா நடித்த பாடல்களே பிரபல்யம் பெற்றன .'மனம் விரும்புதே உன்னை ' அந்த கால பெண்களை கொள்ளையிட்ட பாடல் .விஜய் அப்போது பூவே உனக்காக ,லவ் டுடே கொடுத்த ஹிட் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார் .அந்த நேரத்தில் புதிதாக அறிமுகமாகும் ஒருவருக்கு தனக்கு சமனான வேடத்தை வழங்கியது மட்டுமில்லாமல் சிறந்த பாடல்களையும் விட்டு கொடுக்க காரணம் என்ன .எந்த ஒரு நடிகனாவது அப்படி செய்வாரா ?.விஜய் அப்படி செய்ய  காரணம் என்ன.?.சூர்யா விஜயின் நண்பன் என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது .(நேருக்கு நேர் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம் ).
        பின்னர் சூர்யா காதலே நிம்மதி,சந்திப்போமா,பெரியண்ணா,பூவெல்லாம் கேட்டுப் பார் ,உயிரிலே கலந்தது என ஐந்து படங்களில் நடித்தாலும் எதுவுமே சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை .பெரியண்ணா கப்டனுடன் இணைந்து நடித்ததால் ஓரளவுக்கு சூர்யாவை இனங்காட்டியது .(விஜயின் தந்தை S.Aசந்திரசேகர் எடுத்த படம் இந்த பட வாய்ப்புக்கும் விஜய்தான் காரணம்)
    .                     மீண்டும் சித்திக் இயக்கத்தில் விஜயுடன் இணைந்தார்  பிரண்ட்ஸ் படத்தில்.படத்தில் விஜய்,சூர்யா இருவரும் உயிர் நண்பர்கள். அவர்களின் நட்பை சுற்றியே திரைக்கதை நகரும் .வடிவேலுவின் நகைச்சுவையும் கை கொடுக்க படம் சூப்பர் ஹிட் ஆனது .பிரண்ட்ஸ் வரும் போதும் விஜய் குஷி,பிரியமானவளே என தொடர் வெற்றியில் இருந்தார் .காதலுக்கு மரியாதை ,துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பிளாக் பஸ்ட்டர் தந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராய் இருந்தார்.ஆனால் சூர்யா சினிமாவில் இனம் காணப் படாமல் தோல்வியில் துவண்டு இருந்தார்.எனினும் மீண்டும் தனக்கு சமனான வேடத்தை அளித்து அவருக்கும் பாடல் காட்சிகளை வழங்கினார்  விஜய். சூர்யா,விஜய்  சேர்ந்து வரும் பாடல் காட்சிகளை பார்த்தால் தெரியும் .ஒரு காட்சியில் விஜய் முன்னிலைப் படுத்தப் பட்டால் அடுத்த காட்சியிலேயே சூர்யா முன்னிலை படுத்தப்படுவார் .அப்போதைய காலகட்டத்தில் விஜய் அப்பிடி நடித்திருக்க தேவை இல்லை.சூர்யாவை இரண்டாவது ஹீரோ ஆக காட்டி இருக்கலாம் .ஆனால் விஜய் அப்பிடி செய்ய வில்லை .ஏன் ?.சூர்யா அவரின் நண்பன்.ஆக மொத்தத்தில் விஜய் சூர்யாவை அறிமுகப் படுத்தியது மட்டுமில்லாமல் முதல் வெற்றியையும் பெற்று கொடுத்தார் .
                பிரண்ட்ஸ்  இல் முதல் வெற்றியை பெற்ற சூர்யா கனவிலும் நினைத்திருக்க மாட்டார் .இனி தனக்கு ஏறுமுகம் தான் என்று .அடுத்து சூர்யா நடித்த நந்தா சூர்யாவின் கரியரையே புரட்டி போட்டது .சூர்யாவை  பாலா பட்டை தீட்டினார் .சூர்யா நடிப்பு நுணுக்கங்களை கற்று கொண்டார் .படங்களை தேர்ந்தெடுத்தார் .படத்திற்காக கடுமையாக உழைத்தார் .வெற்றிகளை குவிக்கிறார் .அதிர்ஷ்டமும் சூர்யாவுக்கு கை கொடுத்தது.நந்தா முதலில் அஜித் நடிப்பதாய் தான் இருந்தது .கஜினியும் மிரட்டல் எனும் பெயரில் அஜீத்துக்காக உருவான படம்தான் .     
      எது எப்படியோ சூர்யா  இன்று முன்னணி இடத்துக்கு வந்து விட்டார் .இன்றைய தேதியில் முன்னணி நடிகர் அவர்தான் .அவரின் அடுத்த படமான ஏழாம் அறிவுக்கு நிலவும் எதிர் பார்ப்பு ,அவரின் சமீப படங்களின்  தொடர் வெற்றிகள் என்பன அதற்கு சான்று .ஆனால் இப்போதைய விஷயம் என்னவென்றால் விஜய்,அஜித்,விக்ரமும் சூர்யாவின் வழியை பின்பற்ற தொடங்கி விட்டனர் .படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கி விட்டனர்.நண்பன் வந்த பின் மீண்டும் முன்னணி யார் என்று எழுத வேண்டி வரலாம் .அதை விடுவோம் நான் சொல்ல வேண்டிய விடயம் இந்த நண்பன்தான்.

 .                           .                 3 இடியட்ஸ்ஐ தமிழில் ஷங்கர் ரீமேக் செய்வார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் அனைவரிடமும் எழுந்த ஒரே கேள்வி அமீர்கான் பாத்திரத்தில் ஷங்கர் யாரை தெரிவு செய்வார் என்பதுதான் .ஷங்கர் தீர்க்கமாக விஜயை தெரிவு செய்தார் .விஜயின் நண்பர்களில் ஒருவராக சூர்யா நடித்திருக்கலாம் அது நட்பை சூர்யா வெளிக் காட்டுவதற்கு ஒரு  சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் .அதை இங்கு சொல்ல வரவில்லை .அப்போது சூர்யா வெற்றிக் கடலில் மிதந்து கொண்டிருந்தார் .விஜய் தோல்வியில் துவண்டு கொண்டிருந்தார்.விஜயை விட முன்னணியில் இருக்கும் போது அவரையும் விட முக்கியத்துவம் குறைந்த ரோலில் நடிப்பது சாத்தியம்   இல்லைதானே .  .ஆனால் அரசியல் காரணங்களுகாக விஜயை படத்தை விட்டு தூக்கியவுடன் அந்த இடத்துக்கு சூர்யாவை நடிக்க கேட்ட போது சூர்யா என்ன செய்தார்.இது தன்னுடைய நண்பனின் படம் அவனை நீக்கிய படத்தில் நான் நடிப்பது அவனை அவ மதிப்பது போன்றது என்பது சூர்யாவுக்கு தெரியாதா? எப்படி  ஒத்துக் கொள்ள     முடிந்தது இவரால் .பட வாய்ப்பு இன்றி தோல்வியில் துவண்டிருந்தாலும் பரவாயில்லை மன்னித்து விடலாம் .இந்த படத்தில்  நடித்துதான் தான் சூர்யா என்பதை நிருபிக்க வேண்டுமா?.அதற்குள் படத்தில் நடிப்பதற்கு நிபந்தனை வேறு.

           .    முடிவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.நான் சூர்யாவை குறை கூற வரவில்லை.சூர்யா,விஜய் நட்பு பற்றி நான்  நினைப்பதைத்தான் எழுதி உள்ளேன் .உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் . இது  நண்பன் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் வந்திருக்க வேண்டிய பதிவு .அப்போது நான் வலையுலகில் இல்லை என்பதால் இப்பொது எழுதியுள்ளேன் .
 பதிவு  பிடித்திருந்தால் ஓட்டு போடவும்







Post Comment

Thursday, August 25, 2011

வெற்றி ஆயுதம் வேலாயுதம்

 .கடந்த பதிவின் தொடர்ச்சியாக மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் இது வெளி வருகிறது.   மங்காத்தா பாடல்கள் வெளி வந்து பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது .31 ம் திகதி படம் வெளியிடப் பட உள்ளதாம். ஏழாம் அறிவு கதையை காணோம் சன் பிக்சர்ஸ் படத்தை வாங்கியுள்ளதாக சொல்லுகிறார்கள்.அது பரவாயில்லை நண்பனை வாங்க கடும் முயற்சி எடுக்கிறார்களாம்  .முன்னரே வர வேண்டிய பதிவு இது .திடீர் பரீட்சை காரணமாக தாமதித்து விட்டது ஆனால் இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன் .நாம எதிர் பார்த்த வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 28 மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக நடை பெற உள்ளது .இந்த நேரத்தில் இந்த பதிவு சரியாக அமையும் என்று நினைக்கிறேன் வேலாயுதம் படத்தின் இசை முன்னோட்ட பாடல் வெளி வந்து விட்டது . 
        எந்திரனுக்கு பிறகு மங்காத்தா பாடலுக்கே நல்ல வரவேற்பு என்று பேசப்படும் இந்நிலையில் வேலாயுதம் எப்படி அமைய போகிறதோ தெரியவில்லை.விஜய் இதுவரை ஹரிஸ் ஜெயராஜ் இசையில் எந்த படத்திலும் நடிக்கவில்லை (நண்பன் இனித்தானே )  .யுவன் இசையிலும் புதியகீதை தவிர வேறு படங்களில் நடிக்க வில்லை (அதிலும் முழுப் பங்களிப்பு இல்லை ).இசைப்புயலின் இசையிலும் ரெண்டு படங்களில்(உதயா,அழகிய தமிழ் மகன்) மட்டுமே நடித்துள்ளார்.ஆக மொத்தத்தில் முன்னணி இசை அமைப்பாளர்களை விஜய் பயன் படுத்தவில்லை.அப்படி இருந்தும் விஜய் படப் பாடல்கள் பெறும் வரவேற்பு ஊரறிந்த உண்மை.படம் ஓடுதோ இல்லையோ பாடல்கள் ஹிட் ஆகிவிடும் .விஜய் சிறந்த பாடகர் என்பதும் அவர் பாடல்களில் தானே தலை  இட்டு தனி கவனம் செலுத்துவதுமே இதற்கு காரணம் .எனினும் ஒப்பீட்டு ரீதியில் காவலன் பாடல்கள் ரீச் ஆகவில்லை என்பது எனது கருத்து .அந்த குறையை  போக்க வேண்டிய  பொறுப்பும் இப்பாடல்களுக்கு உண்டு .


விஜய் அன்டோனி

இரண்டாவது தடவையாக (சுக்கிரனில் விஜய் சிறப்பு தோற்றம் தானே )விஜய் படத்துக்கு இசை அமைத்து இருக்கிறார் .வேட்டைக்காரன் பாடல்கள் பட்டி     தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியதை யாரும் மறந்திருக்க மாட்டிர்கள். .வேட்டைக்காரன் பாடல் சின்ன தாமரை வருடத்தின் சிறந்த பாடலாக விஜய் விருதுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டது .(அயன், ஆதவன் அலையின் மத்தியில் )விஜய் அன்டோனி விஜய்க்கே ஏற்ற வகையில் ((புலி உறுமுது )இசை அமைத்துள்ளார் என பலரும் புகழ விஜயே விரும்பி இவரை இந்த படத்துக்கு இசை அமைக்க அழைத்தார் .விஜய் அன்டனி  ரஹ்மான் ,ஹரிஸ்,யுவன்  அளவுக்கு பெரிய இசை அமைப்பாளர் இல்லை என்ற போதும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் .இவரின் முதல் படமான சுக்கிரனிலேயே திறமையை வெளிப் படுத்தி இருந்தார் இவரின் நாக்க முக்க பாடல் இவரை வெளியுலகுக்கு வெள்ச்சம் போட்டு காட்டியது .2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காக பெற்றார்.பின்னர் ஆத்திசூடி பாடலும் பிரபல்யம் பெற்றது .எனினும் வேட்டைக்காரன் படமே அவரை அடையாளம் காட்டியது அந்த அங்கீகாரத்தை தொடர்ந்து தக்க வைப்பாரா சில நாட்கள் பொறுக்க வேண்டும் .

பாடல்கள்  

ரத்தத்தின் ரத்தமே  -அறிமுகப் பாடல் ஆக இருக்கலாம்.3கோடி செலவில் எடுக்கப் பட்டுள்ளது .முற்று முழுதாக ரசிகர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் .
 வேலா வேலா-ஏற்கனவே வெளியாகி விட்டது .அநேகமாக தீம் பாடலாக இருக்கலாம் .
 சிலாக்ஸ் சிலாக்ஸ்-வந்த ப்ரோமோ இசையில் என்னை கவர்ந்தது இதுதான் .குத்துத்தான் ஆனால் வித்தியாசமான குத்து .எங்கேயோ போக சந்தர்ப்பம் உள்ளது .
 மாயம் செய்ததோ -அற்புதமான மெலடி .கபிலனின் வரிகளில் சங்கீதா ராஜேஸ்வரன் பாடியிருக்கிறார் .நான் நினைக்கிறேன்.  கில்லியில் ரெட்டை வாழ் வெண்ணிலா பாடலுக்கு பிறகு இந்த பாடல்தான் விஜய் படத்தில் தனியே பெண் மட்டும் பாடும் பாடல் என்று.
   மொளச்சு மூணு இள  - படத்தின் சென்டிமென்ட்   பாடல் இதுதான்.கிராமத்தில் கதை நகரும் போது பாசத்தை வெளிப் படுத்தும் பாடலாக  இருக்கலாம்.
சொன்னா புரியாது -     இதன் வரிகள் இன்னும் வெளிவரவில்லை .இதுதான் ஆரம்ப பாடலாக இருக்குமோ என்ற ஐயமும் உள்ளது. 
ப்ரோமோ songs  கேட்க
  
. அந்த காலத்தில் கப்டன்,கமல்,ரஜினி,சத்தியராஜ் ஒன்றாக எடுத்த படம் இது.அருமையாக இருக்கிறது .இந்த காலத்தில் இப்படியான படங்களை எதிர்பார்க்க  முடியவில்லை .

Post Comment

Wednesday, August 3, 2011

மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த வருடம் ரஜினி,கமல் படங்கள் எதுவும் வெளியாகாது என்பது உறுதியான நிலையில் விஜய் அஜித் விக்ரம் சூர்யா படங்கள் முக்கிய எதிர்பார்ப்புக்குள்ளகின .இப்போது தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம்  அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல.படம் வெளியாகும் என ஆரம்பத்தில் அறிவிக்கப் பட்ட திகதி ஒழுங்குதான் .மங்காத்தா அஜித்தின் பிறந்த நாளான மே 1 உம வேலாயுதம் ஜூன்22  உம ஏழாம் அறிவு பின்னும் என அறிவிக்கப் பட்டிருந்தன .

ஆனால் அங்கும் இங்குமாய் இழுபட்டு ஆகஸ்ட் வந்த  நிலையிலும் இன்னும் வெளியிடும் திகதி அறிவிக்கப் படாமல் உள்ளன .படங்களில் வெற்றி யாருக்கு கிட்டும் என்பதை அலச வேண்டும் என நானும் எண்ணி இருந்தேன் . ஆனால் படங்கள் இப்போதைக்கு வர மறுப்பதாலும் இந்த மாதம் மூன்று படங்களின் பாடல்களும் வெளிவர இருப்பதாலும் எந்த பட பாடல்கள் பட்டையை கிளப்பும் என அலசுவதே இந்த பதிவு .விக்ரமின் தெய்வ திருமகள். ஏலவே வெளி வந்து எல்லா உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளது .
மங்காத்தா  -யுவன் 



யுவன் ஷங்கர் ராஜா வின் இசையில் ஒரு பாடல் விளையாடு மங்காத்தா ஏற்கனவே வெளியாகி சக்கை போடு போடுகிறது .யுவனின் இசையில் தீனா,பில்லா ,ஏகன் என மூன்று படங்களில் தல நடித்துள்ளார் .இதில் பில்லா,தீனா என்பன அஜித்தின் டாப் ஐந்து படங்களுக்குள் உள்ளடக்கம் .ஐந்து என்ன மூன்று என்றே சொல்லலாம்.தீனா, பில்லாவின் வெற்றிக்கு இசை மிக முக்கிய பங்கு வகித்ததை சொல்லித்த்தான்  தெரிய வேண்டும் என்பது இல்லை .அதிலும் பில்லாவின் தீம் இசை ஆகட்டும் பின்னணி இசை ஆகட்டும் எல்லாம் உயர்தரம் .ஏகன் திரைக் கதையில் சொதப்பி படு தோல்வி அடைந்ததால் இசையை யாரும் கண்டுக்கவே இல்லை.

அனால் இது உங்காத்தா எங்காத்தா இல்ல மங்காத்தா தல யின் 50 வது படம் நடிப்பதே ரெண்டு வருசத்துக்கு ஒன்று அதிலும் 50வது படம் வேற சும்மா பிரிச்சு மேய வேண்டாமா இசையில். அதனால்தான் வட்டியும் முதலுமாய் ஏழு பாடல்களை கம்போஸ் பண்ணியிருக்கிறார் .அதிலே விளையாடு மங்காத்தாவின் ரீமிக்ஸ் வடிவிலும் ஒன்று உள்ளடக்கம் .சிவாஜி படத்தின் பல்லேலக்கா பாடலின் முதல் வரிகளை மட்டும் பயன்படுத்தி வித்தியாசமான இசையில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார் யுவன் .கடந்த ஆண்டு VTV தந்த  இசைப் புயலின் அலையையும்  எதிர் கொண்டு  பையா பாடல்கள் மிகப் ரு வெற்றி பெற்றன.அடடா மழைடா கடந்த வருடத்தின் சிறந்த பாடலாக தமிழ் நாட்டின் ஒஸ்கார் விருதான  விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கப்பட்டது .அதையும் விஞ்சும் வகையில்  மங்காத்தா அமையும் என்பது அஜித் ரசிகர்களின் எதிர் பார்ப்பு .பொறுத்திருந்து பார்ப்போம் .இசை வெளியீடு ஆகஸ்ட் 10 என்பது கூடுதல்  தகவல் .

ஏழாம் அறிவு -ஹரிஸ் 


ஏழாம் அறிவு சொல்லவே தேவை இல்லை . நிஜவுலகில் வேறு மாதிரி இருந்தாலும் வலையுலகில் நிச்சயம் சொல்லுவேன் இம்  மூன்று படங்களில் அதிகம் எதிர் பார்க்கப் படும் படம் இதுதான் .இந்திய அளவில் முன்னணி வகிக்கும் முருகதாஸ் கோலிவுட் இல்  இப்போது முன்னணி( யாம் )வகிக்கும் சூர்யா .இசையில் முன்னணி வகிக்கும் ஹரிஸ் (A.R எங்கப்பா வருசத்துக்கு ஒன்னு தருவதே சந்தேகமாய் இருக்கு ).இணைவது காரணமல்ல .படத்தின் முக்கிய எதிர் பார்ப்பே கதை தான் .கதை கி.மு.கதை என்கிறாங்க ,தசாவதாரம் மாதிரி பல வேஷம் என்கிறாங்க, ஏழாவது அறிவு என்கிறாங்க சும்மா கிளப்புறாங்கையா பீதியை .சரி நாம விசயத்துக்கு வருவோம் .
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா இருக்காரே சூர்யா அவரு இந்த முன்னணிக்கு வந்ததுக்கு யாரு யாரு காரணம் .அனைத்து விரல்களும் கட்டாயம் நீட்டப் பட வேண்டிய கட்டாய  நபர் நம்ம ஹீரோ ஹரிஸ் .பின்ன என்னப்பா 2003 இல் காக்க காக்க தொடங்கி 2005 -கஜினி 2008 -வாரணம் ஆயிரம் எல்லாவற்றுக்கும்மேலாய் 2009இல் அயன் ,ஆதவன் என ரெட்டை பிரசவம் .இதில  எந்த படம் ஐயா  தோற்று இருக்கு (ஆதவன் -NO COMMENTS ) .இந்த படங்கள் அனைத்துமே இசைக்கு ஏதாவது ஒரு விருதை பெற்றுக் கொடுக்க தவறவில்லை .
.

சிறந்த இசையமைப்பாளருக்கான தென்னிந்திய பிலிம் பாயர் ,சர்வதேச தமிழ் திரைவிருது காக்க காக்க தொடங்கி ஒவ்வொரு இந்த படங்களின் மூலம் விருதுகளை குவித்தார் .அதிலும் அயன்,ஆதவன் என தன்னுடைய படங்களே போட்டி போடும் அளவுக்கு புகுந்து விளையாடியிருக்கிறார் மனுஷன் .அத்தோடு விட்டாரா கோ,எங்கேயும் காதல் என இந்த வருசமும் பின்னி எடுத்து விட்டார் இதை விட அடுத்து இவருக்கு பெரிய மைல் கல் கூட(?) ரெடி ஆகிட்டு இருக்கு . எண்டாலும் எனக்கு ஒரு சந்தேகம் எனக்கென்னமோ சூர்யா படத்துக்கு இசை அமைத்ததால் தான்  ஹரிஸ் பாடல் ஹிட் ஆகியது போல் தோணுது .உங்களுக்கு ?. சோனி நிறுவனம் வேலாயுதம் பாடல்களை இந்த மாதமே வெளியிட வேண்டி இருப்பதால் ஏழாம் அறிவு பாடல் வெளியீடு தள்ளி போகலாம் எண்டும் கதைக்கினம்.? 
அப்புறம் இடம் போதாமையால் வேலாயுதம் பாடல் அலசல் அடுத்த பதிவில் விரைவில்
 காக்க காக்க 


 ONLY FOR  தளபதி ரசிகன் 


என்னடா தளபதியை பற்றி ஒன்னையும் காணலை எண்டு யோசிக்கிறீர்களா .
பதிவை திருப்பி வாசித்து விட்டு இதை படிங்க .
அஜித் பிறந்த நாள் மே 1 எண்டு போட்டிருக்கு ஜூன் 22 போடலை ஏன் -உலகுக்கே தெரியுமே .
அஜித்-யுவன் ரெண்டு படம் வென்று விட்டால் எல்லாம் வென்று விடுமா -ஏகன்...
விஜய் அவார்ட்ஸ் ஐ ஒஸ்காருக்கு  ஒப்பிட்டிருக்கேனே ஏன் என்று யோசித்தீர்களா அவங்கட பெயரே நம்மை  இம்பிரஸ் பண்ணுது .
அப்புறம் தளபதி க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தது யாரு 
வேட்டைக்  காரனுக்கு 2009 இல் படம் மெஹா  ஹிட் ஆகலைனா கூட (சூப்பர் ஹிட் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் .)கூட தளபதி இல்லாட்டில் விழா களை கட்டாது எண்டு தெரிந்த படியால் தானே அபிமான நடிகர் விருது கொடுத்தாங்க. 
2010 இல கூட படம் எனக்கே பிடிக்கல தவிர வேற படமும் வரல .தலைவருக்கு கூட நிலைமை சரியில்ல இந்த நேரம் நாம விருது வாங்க கூடாது ஆகவே இந்த முறை அந்த விருதை நண்பன் சூர்யாவுக்கு கொடுங்க என்று தளபதி வற்புறுத்தி சொன்ன படியால் தானே விருது கிடைக்கல.
நிஜவுலகில் வேறு மாதிரி இருந்தாலும் -தெரியும்தானே நிஜவுலகில் யாருக்கு ரசிகர் கூட என்று 
 .பேரழகனில என்ன மாதிரி குனிந்து வளைந்தாலும் நம்ம கில்லி முன்னாடி நிக்க முடிந்ததா .எத்தனை வேஷம் போட்டாலும் நிஜ முகத்தோடு மக்களுக்காய் போராடும் (வேலாயுதம் படத்தில்) தளபதி யை அசைக்கவே முடியாது .

அப்புறம் இப்போதைய லேட்டஸ்ட் மொக்கை என்ன தெரியுமா (நம்ம பதிவை விடுங்க ) சினிமா விகடன் கருத்து கணிப்பு முடிவு வெளி வந்திருக்காம் .எனக்கொரு பழமொழி ஞாபகம் வர வேணும் .பட் ஆனா வரலையே யாருக்காவது வந்தா சொல்லுங்களேன் ப்ளீஸ் .

அடுத்த பதிவை மிஸ் பண்ணி விடாதீங்க வெற்றி ஆயுதம்  வேலாயுதம் பாடல்கள் 

அணிலுக்கே அணிலாக உங்களில் ஒருவன் . 
தயவு செய்து உங்களுக்கு பிடித்து இருந்தால் ஓட்டு போடுங்கள் .

Post Comment

Monday, August 1, 2011

யாரப்பா தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் -முடிவு இதோ


முடிவை பார்க்க முன் ஒரு நிமிடம் 
எனது வலைப்பயணத்தின்  ஆரம்பத்தில் என்ன எழுவது என்று தெரியாமல் (இப்பவும் தெரியாதுதான் ) எனது தளத்தில் பகிர்ந்து கொண்ட எனக்கு மிகவும் பிடித்த அதிக likesஐ பெற்று தந்த statusகளை இங்கே பகிர்ந்தேன் .எனினும் அது பலரை சென்றடைய வேண்டும் என்பதற்காக மீண்டும் திருத்தி புதிய பதிவாக பகிர்கிறேன் .இதில் சில மட்டுமே என்னால் சுயமாக எழுதப் பட்டவை .மற்றவை எங்கிருந்து பெறப்பட்டன என்று எனக்கே  தெரியாது. ஏனெனில்  அவை  எனது நண்பர்களில் இருந்து பெற்றது .அவர்களும் எங்கேயோ இருந்துதான் பெற்று இருப்பார்கள் .இதை பகிர்வதன் நோக்கம் இதில் பிடித்தவற்றை நீங்களும் உங்கள் சமூக தளங்களில் பகிர வேண்டும் என்பதற்காகவே .

பகல் முழுதும் தன்னை விரட்டும் ஒளியையும் இரவில் தன்னுள் அணைத்து இளைப்பாற்றுகிறது இருள்

உலகத்திலேயே சுயநலமற்றது எது என்று யோசித்தேன். தாய்மையைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.


அருவியில் விழும் நீரை வலிக்காமல் தாங்கிக் கொள்கிறது ஏற்கனவே விழுந்து அடிபட்ட நீர் !!!

அதிகம் அன்பு வைப்பவர்களை காலம் பிரித்து விடும்.பாவம் அதற்கு தெரியாது பிரிவு அன்பை அதிகமாக்கும் என்று..


வீட்டின் பெயரோ அன்னை இல்லம் னால்
அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்...#என்ன வாழ்க்கடா இது #

வெறுமையாய் உணரும் தருணங்களை விட வெட்டியாய் உளறும் தருணமே மேல்

உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி
கவலைபடாதே!
நீ அவர்களுக்கு இரண்டு அடிக்கு முன்னால்
இருக்கிறாய் என்று பெருமைபடு!

மிக சிறிய கவிதை ஒன்று கேட்டார்கள் நான் அம்மா என்றேன், கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சிறியதாக சொல்லி இருப்பேன் நீ என்று


நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும் 
ஓரே மட்டமாய் இருக்கும் -




பெண்ணின் தவறுகளை நேர்மையாக விமர்சிக்கும் ஆணையும், பெண்ணின் திறமைகளை நேர்மையாக பாராட்டும் பெண்ணையும் காண்பது அரிது#அனுபவம் இல்லை

நீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ..

 எனது தொடர் பதிவான தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ?. என்பதை நான்கு பதிவுகளில் இட்டிருந்தேன். அதே காலப் பகுதியில் ஒரு வாக்களிப்பு நிரலையும் இணைத்து இருந்தேன்.அதிலே பலரும் ஆர்வத்தோடு வாக்களித்து இருந்தீர்கள் .அங்கே வாக்களிப்பதற்கான கால எல்லை முடிவடைந்து விட்டது. எனவே அதன் முடிவுகளை உங்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லைதான் எனினும் சொல்கிறேனே .

மணிரத்தினம் - 37 (20%)
ஷங்கர் - 65 (35%)
பாலா - 49 (26%)
முருகதாஸ்- 24 (13%)
 கௌதம்வாசுதேவ் மேனன் - 7 (3%)
மொத்த வாக்குகள் -182 

சரி முடிவுகளை அறிவித்து விட்டேன். சரி சிறிய வியாக்கியானம் அலுப்பு இல்லை என்றால் தொடர்ந்து படியுங்கள்.பதிவுலகுக்கு அறிமுகமாகி சில நாட்களுக்குள் ஆரம்பித்த முயற்சிதான் இது .வெறும் 182  பேரின் வாக்குளை மட்டும் கொண்டு முடிவு எடுக்க முடியாது என்பது பாமரனிலிருந்து படித்தவன் வரை தெரியும். எண்டை பதிவுகளையெல்லாம் எவனையா மினக்கெட்டு இருந்து பார்க்கப் போகிறான் என்று எழுதும் என்னை பொறுத்த வரை இந்த வாக்குகளில் ஒவ்வொரு வாக்கும் இலட்சம் வாக்குகளுக்கு சமம்.சரி இந்த வாக்களிப்பு நிரலை என்னுடைய வலை தளத்துக்கு வந்தவர்களில் 6000பேராவது பார்த்திருப்பார்கள்.அவர்களுக்காகத்தான் 
சரி தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராய் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தெரிவாகி இருக்கிறார்.அதற்கான சகல தகுதிகளும் உண்டு .அப்புறம் இங்கே வாக்களிப்பவர்களின் மனநிலை அனேகமாக இயக்குனர்களின் இப்போதைய நிலையையே பிரதி பலிக்கும் .அந்த வகையில் எந்திரன் இமாலய வெற்றி ஷங்கருக்கு மிகப்   பெரிய சாதகம் .மணிரத்னத்தின் பின்னடைவுக்கு ராவணன் பாதிப்பு காரணமாக இருக்கலாம் .பாலாவின் நிலையை என்னால் சொல்ல முடிய வில்லை .அவன் இவனை வலைத் தளங்கள் கடிந்து கொண்டாலும் வசூலில் சோடை போக வில்லை.மக்கள் மனதில் நல்ல பெயரை வாங்கி உள்ளது.என்னை பொறுத்தவரை பாலா நான் எதிர் பார்த்ததிலும் முன்னணியில் உள்ளார்.முருகதாஸ் முன்னேற இடமுண்டு.நான் எதிர்பாராத முடிவு கௌதமுக்குத்தான்  மிகக் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார் .இவரை  விடுத்து வேறு இயக்குனரை சேர்த்து இருக்கலாமோ என்று யோசிக்க வைக்கும் படி இருக்கிறது .நான் நினைக்கிறேன் நடுநிசி நாய்கள் வந்திருக்க விட்டால் இவர் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்  .இவர்களை விட செல்வராகான் அமீர், KV.ஆனந்த் ,விஜய் ,சசிகுமார் ,மிஸ்கின் , K.S . ரவிக்குமார் போன்றவர்களை இணைத்திருந்தால் அதிக வாக்குகளை பெற்றிருப்பார்களோ தெரிய வில்லை. .நான் தெரிவு செய்த இந்த ஐந்து  பேரும் BEHINDWOODS  சிறந்த இயக்குனர் இருபது பேரில் முதல் ஐந்து பேரும்தான்.எனினும் இங்கு முடிவுகள் வேறு விதமாக உள்ளன ..ஏனெனில் நான் கேட்டது தற்போதைய சிறந்த இயக்குனர் என்பதாய் இருக்கலாம் .

தளபதி ரசிகனின் பார்வையில் முடிவுகள் 
ஷங்கர் -தளபதியின் அடுத்த படத்தை எடுப்பது யாரு அவர்தான் சிறந்த இயக்குனரு .
மணிரத்னம்- பொன்னியின் செல்வனை எடுத்திருந்தால் முதலாவதாய் வந்திருக்கலாமே .வட போச்சே 
முருகதாஸ் -கஜினி கதையை   ஏன் முதலில் அஜித்திடம் கூறினார் .அவருக்கு நம்ம மவுசு தெரியாதா சரி சரி மனுஷன் இப்பதான் உணர்ந்து இருக்குறார். இனி உன்னோட ராசி நல்ல ராசி . 
கௌதம் -MISSION ஐ ஆரம்பிக்க முன்னமே முடிவை சொன்னா எப்பிடி.
பாலா-அடடா யாருப்பா பாலா தமிழ் சினிமா எடுக்கிறானா நான் கேள்விப் படவே இல்லையே .

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...