Friday, July 5, 2013

சிங்கம் -2 -ஒரு பய தப்ப முடியாது


சிங்கம் சூர்யாவின் படங்களிலேயே டாப் 5 படங்களில் ஒன்று ஹரியின் .விறுவிறுப்பான திரைக்கதையில் கர்ஜித்து வெற்றி நடை போட்டது .தன்னை வைத்து ஹிட் அடித்த இயக்குனர்களின் படங்களில் திரும்பவும் நடிப்பது சூர்யா பாலிசி .முருகதாஸ் கஜினி-ஏழாம் அறிவு கே.வி.ஆனந்த் அயன் மாற்றான் ஆனால் ஹரி மேற் கூறியவர்களை போல் அல்லாமல் சூர்யாவின் ஆஸ்தான இயக்குனர் வேல்,ஆறு,சிங்கம் என ஒரு படமும் தோல்வி அடைய வில்லை . இது போதும்சிங்கம் -2 மீதான எதிர்பார்ப்பு ஏவுகணை வேகத்தில் இருப்பதற்கு கண்டம் விட்டு கண்டம் பாய ஹரியால் ஏவப்பட்ட ஏவுகணை குறிக்கோளை அடைந்ததா இல்லையா எனும் ஆவல் காரணமாக வாழ்க்கையிலேயே முதல் தடவையாக vip ஷோ பார்க்க போயிருந்தேன் .

சிங்கம் -2 கதை என்று ஒன்றை உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை அதற்கான காரணத்தையும் சொல்லுவதாய் இல்லை .ஆன்லைன் என்னவெனில் நேரம் படத்தில் வருவது போல இரண்டு சப் வில்லன் ,ஒரு மெயின் வில்லன் சர்வதேச குற்றவாளிகளான இந்த வில்லன்களை இந்தியன் போலீஸ் எப்படி சாமர்த்தியமாக பிடிக்கிறார் என்பதுதான் .
ஹரி 

எனக்கு   படத்துக்கு போக முன்னரே பெரிய டௌவுட்டு அனுஷ்கா இருக்கும் போது ஹன்சிகா ஏன் படத்தில ? ,அது சரி போலீஸ் படம்தானே எதாவது வம்பில அனுஷ்கா சாக ஹன்சிகா ஹீரோயின் ஆவா என்று எந்த பாமர தமிழ்மகனும் ஊகிக்க கூடிய ட்விஸ்ட் வைக்க  திரைக்கதையில் எந்த ஓட்டைகளுமின்றி காட்சிகளை அமைத்து சாதனை படைக்கும்' ஹரி என்ன கேன பயலா ?
படத்தின் மிகப்பெரிய turning பாயிண்ட் ஆன ஹரி வைத்த ட்விஸ்ட் ஐ இங்கே சொன்னால் படத்தின் சுவாரசியம் குறைந்து விடும் என்பதால் தியேட்டரில் காண்க .

ஹரி படத்தின் வழமையான டாட்டா சுமோக்கள்,அரிவா,வெள்ளை வேஷ்டி சட்டை யை formality க்கு use பண்ணி இருந்தாலும்,இது இன்டர்நேஷனல் படம் என்பதால் ஏரோ பிளேன் கப்பல் ,போட் நவீன ரக கார் என அடி பின்னுகிறார் படம் ரெண்டே முக்கால் மணி நேர படமாக இருந்தாலும்,எந்த இடத்திலும் பார்வையாளர்களை தூங்க வைக்கமால் இருப்பதில் சூர்யாவுக்கு அடுத்த பங்கை படத்தின் செகண்ட் ஹீரோவான சிவப்பு நிற போலீஸ் ஜீப் செய்கிறது .

படத்தில் ஒரு இலங்கை வில்லனும் வருகிறார்.ஆம்,ஒரு சிங்கள வில்லனை அழைத்து சிங்கத்தை போட்டுத்தள்ளும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள் வில்லன் க்ரூப்.ஆனால் இறுதியில் தாங்களே அவனை போட்டுத்தள்ளி யிருந்தார்கள்.இந்த இடத்தில் ஹரியை பாராட் டியே தீர வேண்டும் முருகதாஸ் ஏழாம் அறிவு என்று ஒரு படத்தை எடுத்து விட்டு இதை பார்க்காதவன் தமிழனே இல்லை எனும் அளவுக்கு மீடியா முழுதும் விளம்பரம் செய்ய வேண்டி இருந்தது .ஆனால் ஹரியின் ஸ்வீட்  அண்ட் சிம்பிள்ஆன 3 நிமிட காட்சி மூலம் புலம் பெயர் இருக்கும் நாடுகளில் அமோக ஆதரவை பெறுகிறார் ஹரி .ஹன்சிகா தனது  காதலை சொல்லும் போது  சூர்யா மறுத்து இருக்கலாமே தான் வேறு ஒருவரை லவ் பண்ணுவதை     சொல்லி இருக்கலாமே ,ஹன்சிகாவை வைத்து இழுத்தடித்து இருக்கிறார்கள் என்று  பக்கத்தில் இருந்து படம் பார்த்த பன்னாடை சொல்லி இருந்தது .அந்த ஹன்சிகாவை பயன்படுத்திதான் சூர்யா வில்லன் கூட்டத்தை பிடிக்க போகிறார் என்ற ட்விஸ்ட் ஹரியால் மட்டுமே முடியுமான ஒன்று . 


சூர்யா 

ஹாரி தான் இப்படி என்றால்,இயக்குனரின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் குரல் கொடுத்திருக்கிறார் சூர்யா.சூர்யாவின் குரல் பிரமாதம்.தமிழ் சினிமா வரலாற்றிலேயே தியேட்டரில் படம் ஓடும் போது ஒரு பய தூங்க முடியாது என்ற மகத்தான சாதனையை சிங்கம் -2 படைத்து இருக்கிறது .எங்கேயாவது ஒரு பாடல் காட்சிக்கு தூங்குவோம் என முடிவெடுப்பவர் களையும் தனது இனிமையான குரல் வளத்தால் எழுப்பி விடுகிறார் சூர்யா .அதுவும் இனிமையான ஆங்கிலத்தில் வில்லனுடன் சூர்யா பேசும் காட்சிகளுக்கு உருகாதவர்கள் எவருமே இருக்க முடியாது
   என் பார்வையில் பிளஸ்  மைனஸ் 
சூர்யா போலீஸ் யூனி போம் க்கு  மாறும் காட்சி ,கல்யாண வீட்டில் இரவு வரும் வில்லன்களை  எதிர் கொள்ளும் காட்சி ,கிளைமாக்ஸ் இல் சிங்கம் முன்னால்  ஓட பின்னால்  இரண்டு ஜீப் உறுமி கொண்டு சிங்கத்தோடு ஓட வில்லன் பார்த்து மிரளும் காட்சி ,சந்தானத்தின் அநேக காட்சிகள்  அதிலும் எந்திரன் ஒபெநிங் ,விஸ்வரூபம் மாஸ் ,அனுஷ்காவுடன் சிங்கம் பாட்டு என  பல காட்சிகள் என்னை கவர்ந்து இருந்தன .
.விவேக் படத்தில் நடிக்காமலே விட்டு இருக்கலாம் ஏனெனில் அந்த கரெக்ட்டர் காமெடி பண்ற கரெட்டர் இல்ல .மெயின் ஆபிரிக்க வில்லன் மிரட்டி இருக்கிறார் ஆனாலும் ஹீரோவுக்கு போட்டியாக தானும் ஆங்கிலத்தில் கத்துவது சகிக்க முடிய வில்லை ,மேலதிகாரியாய் இருக்கும் விஜயகுமார் சூர்யா சொல்லுவதை எல்லாம் ஏன் எதுக்கு என்று யோசிக்காமல்  செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவரோ என்று தெரிகிறது .படம்  முழுவதும் சண்டை படம்   முடிந்து வரும் போது  மண்டைக்குள்ளே  டாட்டா சுமோ ஓடுவது போல் தோன்ற செய்வதில் வெற்றி பெற்று ஹரி   இருக்கிறார் ஹரி .மனோரமா வை  வேஸ்ட் பண்ணி   இருக்காங்க .

 dsp  பாடல்களில் படு சொதப்பல் அதுவும்  பாடல்கள்  தேவை   இல்லாமல்  விறு விறுப்பை  குறைக்கின்றது .பாடல் காட்சிகளில் சூர்யா விஜயை பின்பற்றி நடனம் ஆடுவது வரவேற்க தக்கது .அனுஷ்கா வுடனானா பாடல் காட்சிகளை கச்சிதமாக எடுத்த பட குழுவுக்கு வாழ்த்துக்கள் 
ஹன்சிகா அசிங்கமாக இருக்கிறார் பள்ளி சீருடையில் அனுஷ்கா சில இடங்களில் அழகாக தெரிகிறார் .அனுஷ்கா ஹன்சிகா இடையே நடக்கும் ஒரு உரையாடல் பார்க்க சகிக்க முடியாத வசனங்கள் மூலம் கேவலப் படுத்தி இருக்கிறார்கள் .கொமேர்சியல் படங்களுக்கு ஹீரோ வுக்கு சமனான முக்கியத்துவம் வில்லனுக்கு கொடுப்பதிலேயே படம் interesting ஆகுகிறது .பாட்சா ,கில்லி  ஏன் சிங்கம்  கூட இதே போர்முலா தான் சிங்கத்தில் 'மயில் வாகனம் கோட்டடா 'என்று பிரகாஸ் ராஜ் கம்பீரமாய் கர்ஜிப்பது  எல்லாம் இங்கே மிஸ்ஸிங் .வில்லனின் body  language நல்லா இருந்தாலும் மற்றைய இரு வில்லன்களும் சுத்த போர் காமெடி பீஸ் போல இருக்கிறார்கள் .வில்லனை அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் அடைத்து விட்டு வில்லன் தப்பிப்பான் என்று தெரிஞ்சும் செல் திறப்பை கொண்டு செல்லும் காட்சி படு மொக்கை தனம் . சிங்கத்தின் கிளைமாக்ஸ் ஏ படு மொக்கை யா இருக்கும் .இது ஒரு படி மேலே .கடைசியில் கப்பல் காட்சி கலாய் படும்.ஆதவன் கிளைமாக்ஸ் மன்னிக்கப்படும் 

final டச் 
சூர்யா -சிறந்த நடிகர் புதுப்புது  தன்னை வருத்தி புதுப் புது கெ ட் அப் போட்டு மக்கள்  மனதை கவர்ந்தவர் விஜய் குருவி யாய் பறப்பதையும் சுறா வாய்  நீந்துவதையும் கண்டு பயந்த மக்களின் அனேகமாக பெண்களின் அபிமான நாயகனாக திகழ்ந்தவர் .இப்போது விஜய் தனது பாதையை மாற்றி இருக்கையில் சூர்யா அந்த இடத்தை கைப்பற்றி facebook  போராளிகளின் செல்லப் பிள்ளையாய் மாறி இருக்கிறார் .இனி இன்னும் confirm .


  பக் அப் காட்சியில் திரும்பவும் காட்டுறாங்க இந்த சீன் 


படத்தை  பற்றி சொல்லணும் னா போட்டிக்கு படங்கள் இல்லாததால் பாய்ந்து ஓடும் .மசாலா பட ரசிகனான எனக்கு படம் பிடிச்சு இருக்கு உங்களுக்கு ?

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...