Monday, September 26, 2011

விஜயின் அடுத்த கில்லி+ போக்கிரி அதுதான் டோக்குடு

எந்திரனுக்கு அடுத்து அதிக இடங்களில் வெளியாகும் சிறப்பை பெற்றுள்ளது வேலாயுதம் . வேலாயுதம் வெளியீட்டு திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .எதிர்வரும் தீபாவளி அன்று வெளியாகிறது.மங்காத்தா வின் வெற்றியை அடுத்து வேலாயுதம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது .இப் படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் ஐங்கரன் நிறுவத்தினர் வேலாயுதத்தை பிரமாண்டமாக வெளியிடுகின்றனர் வெளிநாடுகளில் மட்டும் 350-400 பிரிண்ட் போடவுள்ளனர் .கேரளாவில் 120 ற்கு மேற்பட்ட திரை அரங்குகளிலும் கர்நாடகா-70,மும்பை-40,புனே -30 இடங்களிலும் திரையிடப் படுவது இப்போது உறுதி செய்யப் பட்டுள்ளது .இங்கிலாந்தில் ரஜினியின் எந்திரனுக்கு அடுத்த படியாக அதிக இடங்களில்(26) திரையிடப் படுகிறது .தசாவதாரம் 16 இடங்களில் திரையிட பட்டது அப்போ தமிழ் நாட்டில் சொல்லவே வேண்டாம் ..behindwoods செய்தி குறிப்பு .
சீனாவிலும் முதற் தடவையாக 5 இடங்களில் வேலாயுதம் வெளியிடப் படவுள்ளது .

 வெளி நாடுகளிலும் விஜய்னா மாஸ் 


டோக்குடு

மகேஸ்பாபு நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போடுகிறது டோக்குடு திரைப்படம் .இதுவரை இருந்த மகாதீரா வின் வசூலை தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது படத்தின் ஒபெநிங் .தந்தை மகன் பாசத்தை செண்டிமெண்டாக வெளிப்படுத்தும் அக்சன்  படமான  இதை தமிழில் ரீமேக் செய்வதற்கு பலத்த போட்டி எழுந்துள்ளது .தமிழில் மூன்று முன்னணி நாயகர்கள் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் .அந்த முன்னணி நாயகர்களில் முன்னணியில் நிற்பது யார் .தனது கில்லி,போக்கிரி பிளாக் பஸ்ட்டர் களை ஒக்கடு ,போக்கிரி என மகேஷ் பாபு விடம் பெற்ற நம்ம தளபதி இந்த டோக்குடுவை விட்டு வைப்பாரா?. ம்ம் பிரபுதேவா ,தரணி,ராஜா ரெடி ஆகுங்க.விஜயின்  அடுத்த  கில்லி+ போக்கிரி அதுதான்  டோக்குடு  .
.
மயக்கிய மயக்கம் என்ன
அண்மையில் வெளி வந்த மயக்கம் என்ன திரைப் பட பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன .''நான் சொன்னதும் மழை வந்திடுச்சு'' மயக்குகிறது என்னை .மயக்கம் என்ன படத்தில் பாடல் ஆசிரியராகவும் மாறி இருக்கிறார் தனுஷ் .மயக்கம் என்ன திரைப்படமும் தீபாவளி போட்டியில் இணைந்துள்ளது.
ஏழாம் அறிவு பாடல்கள் வெளி வந்து  அம்புட்டுதான் வந்து இருகின்றன .அப்ப வேலாயுதம் சாதனையை முறியடிச்சு இருக்கணுமே .ஹரிஸ் +முருகதாஸ்+சூர்யா கூட்டணி படங்களின் பாடல்கள் எல்லாமே சூப்பர் டுப்பர்  ஹிட் அல்லவா.பாடல்கள் எப்படி என்று உங்களுக்குத்தான் தெரியுமே .எதிர்பார்த்த அளவுக்கு இல்ல .ஹரிஸ் அடுத்து தளபதியுடன் முதல் படம் .உங்களை ரொம்பவே நம்பி இறுக்கம் ஏமாற்றி விடாதீங்க ப்ளீஸ் .

மருத முரான்
சமுக பதிவுகளை எழுதி வந்த  ஈழத்து புகழ் பெற்ற பதிவர் மருத முரான் அவர்கள்    அண்மைக் காலமாக  சினிமா சம்பந்தமாகவும் அதிகம் எழுதுகிறார் .எனக்கு பிடித்த பதிவர்களில் ஒருவரான அவர் எனக்கு  தெரிந்து(நான்கு மாதங்கள் ) நம்ம தளபதியை பற்றி நல்ல விதமாக ஒரு பதிவு எழுதி உள்ளார் .

விஜய் விஞ்சிய பொடிகார்ட்! சல்லுவின் அலட்டலும் அற்புதம்!!.


மன்னார் பயணம்  
மன்னாருக்கு பல்கலைகழக  அலுவலாக சென்றமையால் சில நாட்களாக பதிவுலகில் வலம் வர முடியவில்லை .ஒரு சில பதிவுகளையே படிக்க முடிந்தது .இன்று முதல் மீண்டும் உங்கள் வலை தளங்களுக்கு வருகிறேன். .

மன்னாரில் ரசித்தவை 

மன்னாருக்கு கல்வி அலுவலாய் சென்றதால் அனைத்து இடங்களையும் தரிசிக்க முடியவில்லை .கிடைத்த சந்தர்ப்பங்களில் நான் பார்வையிட்ட இடங்களில் என்னை கவர்ந்தவை .  


ஆசியாவிலேயே அதிக விட்டமுடைய மரங்களில் ஒன்றாக கருதப் படும் பெருக்கு மரம் (BIOBAB TREE) மன்னார் பள்ளிமுனையில் அமைந்துள்ளது .1500களில்  அராபிய கடலோடிகளால் நடப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது .

 மன்னார் புனித லூசியா தேவாலயத்தின் அழகிய தோற்றம்


மாந்தை உப்பளத்தில் எடுக்கப் பட்டது





மன்னாரில் மனிசன்களை விட இவங்கதான் அதிகம் போல .


வாழ்த்துக்கள்  நண்பா 


யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த எனது நண்பன் இரோஷன் . என்னுடைய பாடசாலை காலத்தில் இருந்து இசையோடு ஒன்றியவர் .தீவிர இசை பிரியனான அவர் இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளார் . பாடல் மிகவும் அருமையாக ரசிக்கும்படி உள்ளது .இது அவர்களின் முதல் முயற்சி .தொடர்ந்தும் இதை விட சிறப்பாக பாடல்களை கொடுக்க வாழ்த்துகிறேன்.நீங்களும் ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் .
இசை -ஜீசஸ் யுவராஜ்-jesusyuvan@yahoo.com
குரல்,வரிகள் -இரோஷன் புவிராஜ்-pviroshan@yahoo.com







Post Comment

Tuesday, September 20, 2011

சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?

ரஜினி காந்தின் வாழ்க்கை படமாக எடுக்க விருப்பதாகவும் அதிலே ரஜினி வேடத்துக்கு சல்மான் கான் நடிக்க விருப்பதாகவும் வெளியான தகவல் திரையுலக வட்டாரத்தில் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கி இருக்கிறது .தலைவர் ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாக வெளியிடப்படுவதை தாங்கள் விரும்பவில்லை எனவும் தங்களிடம் எவ்வித அனுமதியும் பெறப் படவில்லை எனவும் ரஜினியின் மகள் சௌந்தர்யா அறிவித்துள்ளார் .சல்மான்  கான் ரஜினி வேடத்தில் நடிப்பது குறித்து கேட்ட போது அவரை நெருங்கு வதற்கே  தனக்கு இன்னும் 20 வருடங்கள் தேவை என கூறியுள்ளார் .ஆக பயப்படும் படி எதுவும் இல்லை என தலைவர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

சல்மான் 
சல்மான் கான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த போடிகாட் திரைப்படம் பல சாதனைகளை முறியடித்து மாபெரும் வெற்றி ஈட்டியுள்ளது . இது உயர்ந்த முதல் நாள் வசூலை இவரின் முதல் படமான தபாங் ஐ முறியடித்து பெற்றுள்ளது , அத்துடன் ஒரு வாரத்துக்கான வசூலை 3இடியட்ஸ்  ஐ முறியடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .(விபரங்களுக்கு -bodyguard wikipedia )



சல்மான் கான் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் இவரின் திரை வரலாற்றிலும் வெற்றி தோல்வி சகயம் .2008 இல்  தொடர்ந்து மூன்று தோல்வி படங்கள் கொடுத்த நிலையில் இவரின் சக நடிகர்களான அமீர்  கான்,ஷாருக் கான் ஆகியோர் கஜினி,ஓம் சாந்தி ஓம்  மூலம் வெற்றி களிப்பில் இருக்க இவருக்கு துணை புரிந்தது போக்கிரி .வான்டட் என்ற பெயரில் பிரபுதேவாவினால் தமிழில் இருந்து ரீமேக் செய்யப் பட்டது .ஆனால் மூலக் கதை தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி ஆகும் .மூன்று மொழிகளிலும் மெஹா ஹிட்  அடித்தது .
இப்போது மீண்டும் மூன்று மொழிகளில் வெற்றி பெற்ற படமாக போடி காட்  மாறியுள்ளது .இங்கு வித்தியாசம் என்னவென்றால் மூன்று மொழிகளிலும் ஒரே இயக்குனர் சித்திக் தான் .இப்படி ரீமேக் செய்யப்பட்ட எல்லா வெற்றி  படங்களும் வெளியிட்ட எல்லா மொழிகளிலும்வெற்றி பெறும் என்பது உண்மை அல்ல . குஷி திரைப்படம் தமிழில் பெரு வெற்றி பெற்றாலும் ஹிந்தியில் படு தோல்வி அடைந்தது .கிக்-தில்லாலங்கடி இன்னொரு உதாரணம் ஆகும் இப்படி நிறைய படங்களை சொல்லிக் கொண்டு போகலாம் .

தபாங் -ஒஸ்தி 

சரி சல்மான் கான் தமிழில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்து பெரு வெற்றி பெற்று உள்ளார் .இப்போ அவரின் வெற்றி படமொன்றை தமிழில் ரீமேக் செய்கிறார் young சூப்பர் ஸ்டார் .தபாங் சல்மானின் நடிப்பில் பல சாதனைகளை முறியடித்த படம் .அதை ஒஸ்தி என்ற பெயரில் தரணியை வைத்து  ரீமேக் செய்கிறார்.இப்போது தமிழ் சினிமாவில் வெற்றி தேவை என்போரில் முன்னணியில் இருப்பது (மங்காத்தா வெற்றி பெற்று விட்டது.(அப்ப வேலாயுதம் ?)  ). இவர்தான் .அத்தனைக்கும் இவர் தோல்வியில் துவண்டதால்  இந்த வெற்றியை எதிபார்க்க வில்லை .இவருக்கும் ஜீவாவுக்கும் ஆன பனி போரே காரணம் ,இந்த கதை வெல்லாது என இவரால் ஒதுக்க பட்ட கோ பெரு வெற்றி பெற அதே நேரத்தில்  வெளி வந்த வானம் அதன் முன்னால் கவிழ அத்துடன் இவருக்கு வர வேண்டிய கௌதமின் அடுத்த படமான நீதானே என் பொன்  வசந்தம் ஜீவாவை சென்றடைய இவரின் கடுப்பு இன்னும் அதிகமாகி விட்டது .அதனுச்ச கட்டம் தான்  தனது facebook இல் ஒஸ்தி படத்தில் தான் நன்றாக  நடித்து  இருப்பதாகவும் பலருக்கு இந்த படம் பதில் சொல்லும் எனவும்  இவர் போட்ட status . (சிம்பு நீங்க தல ரசிகராமே -ஓவர் confidence உடம்புக்கு ஆகாது )
சிம்புவை பொறுத்த வரை அவரின் மாஸ் நடிப்பு இன்றுவரை எடுபடவே இல்லை .விண்ணை தாண்டி வருவாயா,வானம் போன்ற படங்கள் சிம்பு மீது நல்ல பெயரை ஏற்படுத்தி யுள்ளது .இந்நிலையில் பக்கா மாஸ் படமான ஒஸ்தி சிம்புவுக்கு கை கொடுக்குமா? (இப்போதைய மாஸ் ஹீரோ தனுஷின் மாப்பிளை, ,வேங்கை பர்ர்த்த பிறகுமா ?) 

வேட்டை மன்னன் trailor வெளி வந்த போது முக புத்தகத்தில் நான் பகிர்ந்தது .

''அப்பவே சொன்னான் வானத்தை எப்பிடியாவது ஹிட் ஆக்குங்க என்று .கேட்டால்தானே .இனி நீங்கள் இதை எல்லாம் அனுபவிக்கத்தான் வேண்டும் .''

   மம்பட்டியான்-சிம்பு 
தியாகராஜன் நடிப்பில் அனைவரையும் கவர்ந்த மம்பட்டியான் மகன் பிரசாந்த் நடிப்பில் ரீமேக் செய்யப் படுவது அனைவரும் அறிந்ததே .விரைவில் வெளிவரவிருக்கும் படத்தில் சின்னதல ஒரு பாட்டு பாடி இருக்கிறார் .சூப்பர் .மிக அருமையாய் இருக்கிறது .பாட்டும் ரீமேக் தான்.(காட்டு வழி போற )..பாட்டிலும் சின்ன தல வருகிறார் .எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது .(அப்ப உங்களுக்கு ) .பாடல் வெளியீட்டு விழாவிலும் நேரில் பாட உள்ளாராம் .வாழ்த்துக்கள் சின்ன தல .

key 1- எல்லாம் சரி அப்ப தமிழில் இருந்து தமிழில் ரீமேக் எல்லாம் ஜெயிச்சிருக்கா #தல rocks

key-2 ரீமேக் பற்றி எல்லாம் சொல்லிட்ட .ரீமேக் மன்னனை பற்றி ஒன்றுமே சொல்லலையே #தளபதி rocks

கிரிக்கெட்  
 
சரி கிரிகெட் பதிவுக்கு(தோனியால் ஏன் முடியவில்லை) . நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி .இப்போது நடை பெற்று கொண்டிருக்கும் இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளின் போது இலங்கையின் சகலதுறை வீரரும் இலங்கை அணியில் அண்மைக்காலமாக என்னை கவர்ந்தவருமான அஞ்சேலோ மத்தியுஸ் தனது கன்னி டெஸ்ட் சதத்தை பெற்றுள்ளார் .அவருக்கு வாழ்த்துக்கள்





சரி பிடித்து இருக்கா .பிடித்திருந்தால் ஓட்டு போடலாமே .

Post Comment

Friday, September 16, 2011

தோனியால் ஏன் முடியவில்லை

.சங்கா -100

குமார் சங்ககார இன்று தனது 100 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார் . இப்பெருமையை பெரும் 5வது இலங்கை வீரர் இவர் ஆவார் .முரளிதரன் ,மஹேல,வாஸ் ,சனத் ஆகியோரே ஏனையோர் .இந்த போட்டியில் வெற்றி பெற்று சங்கா வை கௌரவி ப்பது இலங்கை அணியினரின் தலையாய கடமை ஆகும் .
இரட்டை விருது  
இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் சங்ககார 2011ம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் வீரராக ஐ.சி.சி யினால் தெரிவு செய்யப் பட்டு உள்ளார் .கருதப் பட்ட  ஆகஸ்ட் 11-2010  இருந்து ஆகஸ்ட் 04-2011 வரை 25 போட்டிகளில் பங்கு பற்றி 1049 ஓட்டங்களை 55.21 எனும் ஓட்டவிகிதத்தில் பெற்றார் .இவர் இந்த விருதை வாட்சன் ,கம்பீர் ,ஆம்லா ஆகியோரின் போட்டியின் மத்தியில் வென்றுள்ளார் .

அது மட்டுமன்றி முற்று முழுதாக ரசிகர்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் ஐ.சி.சி மக்கள் தேர்வு விருதையும் பெற்றுள்ளார் . ஆம்லா,த்ரோத்ட்,காயில்,மற்றும் டோனி ஆகியோரை விட அதிகப் படியான வாக்குகளை பெற்று இந்த விருதை பெற்றுள்ளார் .

தோனியால் ஏன் முடியவில்லை 

இது குறித்து நான் ஏற்கனவே போட்ட பதிவு   சங்கா +முக்கிய VIP.  என் முன்னே உள்ள முக்கிய சந்தேகம் ஏன் டோனி இந்த விருதை பெற முடியவில்லை  என்பதே  ஆகும் .இந்திய தேசம் கிரிக்கெட்டிலேயே ஊறியது .100 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட இந்தியர்களின் ஏகோபித்த அபிமானத்தை பெற்ற ஒரு வீரர் .இந்தியாவிலேயே பிரபலங்கள் வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பவர் .சனத்தொகையில் 2  கோடியையும் தாண்டாத இலங்கை யை(அதிலும் நம்ம தமிழரில் அரைவாசிப் பேர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்பது வேறு கதை ) சேர்ந்த சங்கா இந்த விருதை பெரும் போது தோனியால் முடியாமல் போனது ஏன் .எனக்கு பெரிய வியப்பாகவே உள்ளது .வேற்று நாடுகளில் கிரிக்கெட் அவ்வளவு பிரபலம் கிடையாது .மேலைத்தேய நாடுகளில் இங்கிலாந்து சார்பாக திராட் போட்டியிட்டதால் அவர்களின் ஓட்டு சங்கா வுக்கு  பெரிதளவில் வர வாய்ப்பு இல்லை

.இந்திய அணியின் இங்கிலாந்துடனான படு தோல்வியை ஒரு காரணமாக ஏற்றுக் கொண்டாலும்  கடந்த ஆகஸ்ட் -25 வாக்களிப்பின் இறுதி திகதி ஆகும் .அப்போது இந்திய அணி அடி வாங்கினாலும் மரண அடியை வாங்கியிருக்கவில்லை  .(அடி ஒவ்வொன்றும் இடியாக விழுந்தது பிறகுதானே ).எல்லாவற்றையும் விட அவர் இந்தியாவுக்கு பெற்று தந்த உலக கிண்ணத்தை எந்தவொரு இந்தியனும் மறந்து இருக்க மாட்டான் .எனினும் விருது பெறாதது எப்படி என்று எனக்கு தெரியவில்லை .(சிறந்த எழுச்சி மிகு வீரருக்கான விருதை டோனி பெற்றுள்ளார் .).நான் கிரிக்கெட் ரசிகன் என்றாலும் கிரிக்கெட் தொடர்பாக எழுதும் முதல் பதிவு இதுதான் .வலையுலகில் கிரிக்கெட் பதிவுகளை எழுதும் பதிவர்களிடம் இதற்கான விடையை எதிர்பார்க்கிறேன்  .(லோஷன் அண்ணா. ,கிரிக்கெட் நண்பர்கள் K.s.s.ராஜ்   .   , கவியுலகம் மைந்தன் சிவா. ,பாலாவின் பக்கங்கள் பாலா இவ்வளவு பேருமே எனக்கு தெரிந்தவர்கள் )
கிரிக்கெட் தொடர்பாக விடயங்களை அலசி ஆராயும் பிரபல பதிவர் லோஷன் அண்ணா அவர்கள்  நான்  சங்கா வுக்கு ஓட்டு அளிக்கும்படி எழுதிய பதிவுக்கு இட்ட பின்னுட்டத்தை  அப்படியே தருகிறேன் .
 ''''''
சங்காவுக்கு நானும் வாக்களித்துவிட்டேன்..
ஆனால் இந்திய இணையத்தளப் பாவனையாளர்கள் அதிகம் என்கிற காரணத்தாலும், இந்திய அணியின் ஆதரவாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தோனி பக்கம் திரும்பும் என்பதாலும் தோனிக்கே கூடுதல் சாதகம் என நான் நம்புகிறேன்...

சங்காவின் கனவான் தன்மைக்கும், நல்ல மனதுக்கும் இந்த மக்கள் விருது அவருக்கே கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்...'''

வாழ்த்துக்கள் சங்கா .இலங்கை கிரிக்கெட் அணி ரசிகனாய் உங்களின் வெற்றி எமது அணிக்கு கிடைத்த வெற்றி ஆகும் .கிரிக்கெட் கண்ணியவான் என்று போற்றப்படும் உங்களின் சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள்  .உங்கள் வெற்றியில் நாமும் ஒரு அணிலாய் (ஹிஹி ஹி என்ன சிரிப்பு அங்க  ) இருந்ததை இட்டு பெருமைப்படுகிறேன்

டிராவிட் ஒருநாள் போட்டியில் ஓய்வு 




 உலகப் பெரும் சுவர் சீனாவில் அமைந்துள்ளது அனைவரும் அறிந்தது .அதை விட இந்தியர்கள் அனைவருக்கும் இந்திய பெரும் சுவரை நன்கு அறிவார்கள் .ஆம் அந்த பெரும் சுவர் இன்றுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறது . ஆம் ராகுல் டிராவிட் 15 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி அணியின் வெற்றிக்கு பெரிதும்  பங்கு ஆற்றியவர் .343 போட்டிகளில் 10820 ஓட்டங்களை 12 சதம் 82 அரைசதம் உள்ளடங்கலாக பெற்றுள்ளார்.இன்றைய அவரின் இறுதி போட்டியில் ஆவது இந்திய வெற்றி பெற்று அவரை வழியனுப்பும் என இந்திய ரசிகர் மட்டுமன்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே எதிர் பார்க்கிறார்கள்    ..டிராவிட் தொடர்பான  அனைத்து தகவல்களும் பார்க்க 
ஒரு நாளில் 5000 பக்க பார்வைகள் (page views )
 சரி  தலைப்புக்கு  வருவோம் . நான்  சற்றுமே  எதிர்  பாராத  வகையில்  நான் எழுதிய பதிவு ஒன்று ஒரு நாளில் மட்டும் 5954 பக்க பார்வைகளை பெற்றது .இன்லியில் பிரபலமாகவும் இல்லை .தமிழ் மணத்திலும் ஒன்றும் இல்லை .முழுக்க முழுக்க முக பக்கம் (facebook )தான் .690 பகிர்வுகள் .பகிர்வு செய்த அனைவருக்கும் நன்றிகள் .அந்த பகிர்வு பட்டனை எனது வலைத் தளத்தில் இணைக்க உதவிய  வந்தேமாதரம் சசி .அவர்களுக்கும் நன்றி



 
 
என்ன பதிவு பிடித்து இருக்கா பிடித்து இருந்தால் ஓட்டு போடலாமே








Post Comment

Tuesday, September 13, 2011

கப்டன் சில அரிய தகவல்கள்


தமிழ்  நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கும் திரையுலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு  அரசியலில் கொடி கட்டிப் பறந்த  பலரும் திரைப்பட துறை சார்ந்தவர்கள் தான்.M.G.R,கலைஞர்,ஜெயலலிதா என அந்த  வரிசை நீளமானது .அதற்காக சினிமாவில் சிறந்து விளங்கியவர்கள் எல்லாம் அரசியலில் பிரகாசித்தார்கள் என்று சொல்ல முடியாது .இதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நல்ல உதாரணம் தேர்தலில் ஒருமுறை போட்டி இட்டும் தோல்வி அடைந்ததால் அந்த பக்கமே எட்டி பார்க்கவில்லை ..அந்த காலத்தில் மக்களிடையே படிப்பறிவு குறைவு திரைப்படங்களில் நல்லவராக ,அனைவருக்கும் உதவி செய்பவராக நடித்தால் அவர் உண்மையிலேயே அப்படியானவர் என்ற முடிவுக்கு வருவார்கள் அதுவே வெற்றிக்கு காரணம் என்று ஒரு சாரார் சொல்லுவதையும் கேட்டுள்ளேன் .ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை மக்களிடையே அறிவு பெருகி விட்டது .நன்கு சிந்தித்தே தலைவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள் .நடிகர்கள் பலரும் அரசியலில் காலடி எடுத்து வைக்க ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கிறார்கள் .சிலர் இந்தா வருகிறேன் அந்தா வருகிறேன் என பதினைந்து வருடங்களாகவும் ,இன்னும் சிலர் சரியான வாய்ப்பை எதிர் பார்ப்பு இருப்பதாகவும் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .

இவர்களுக்கு மத்தியில் எந்த ஒருவரின் உதவியும் இல்லாமல் தனிமரமாக நின்று கட்சி ஆரம்பித்து அதை வளர்த்து 7 வருடங்களுக்கு இடையில் தமிழ் நாட்டின் எதிர்  கட்சியாக வளர்ந்துள்ள விஜயகாந்த்  அவர்களை பற்றியதுதான் இந்த பதிவு .




விஜயகாந்த் எனும் பெயர் எனக்கு நினைவு தெரிந்த நாள்களில் (1995-1999)எனது சுற்றத்து ஆண்களால் அதிகமாக உச்சரிக்கப் படும் பெயர் ,அப்போது ஒரு வீட்டில் படம் போடுவதென்றால் குறைந்தது 50 பேராவது பார்ப்பார்கள் .அனேகமாக கல்யாணவீடு,சாமத்திய வீடு (பூப்புனித நீராட்டு விழா )நடைபெறும் போது இரவு  வேளையில் படம் போடுவார்கள்  .என்ன படம் போடுவது என்று பெரிய பிரச்சினையே எழும் .அப்போது ஆண்கள் அநேகரின் தெரிவாக இருப்பது விஜயகாந்த் படங்கள் தான் .அவரின் அதிரடி சண்டை காட்சிகளுக்கு அவர்கள் அடிமை .  தொடர்ந்து   ஓடும் நாலைந்து படங்களில் குறைந்தது ஒன்றாவது விஜயகாந்த் படம் இருக்கும் .
ஆனால் எனது பள்ளி காலத்தில் அவரின் வல்லரசு,வாஞ்சிநாதன்  ,நரசிம்மா,ரமணா  என தொடர் ஹிட் கொடுத்து என்னை கவர்ந்தார் .எனினும் கடந்த சில வருடங்களாக எனது நண்பர் வட்டத்தில் அதிகம் கேலி செய்யப் படுபவராக மாறினார் .எனது நண்பர்களில்  பலருக்கும் விஜயை பிடிக்காது .அப்பிடி பிடித்தவர்களுக்கும் விஜயகாந்தை பிடிக்காது .எனினும் எனக்கு அவரின் துணிச்சல் ,தைரியம் பிடித்து இருந்தது .அந்த வகையில் புரட்சிகலைஞர் ,கப்டன் ,கருப்பு M.G.R என அழைக்கப் படும் விஜயகாந்த் பற்றிய சில குறிப்புக்கள் தான் இவை .

விஜய காந்தின் நிஜப் பெயர் நாராயணன்   . (பிறப்பு -1952-08-25 ,மதுரை  )அது தாத்தாவின் பெயர் என்பதால் விஜயராஜ் அழகர்சாமி நாயுடு என வீட்டில் அழைக்கிறார்கள் சினிமாவுக்கு வந்த பின்னர் டைரக்டர் M.A.காஜா வைத்த பெயர் விஜயகாந்த் அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த் தான்.

ஐயப்பன் கோவிலுக்கு 18ஆண்டுகளுக்கு மேலாக சென்று வந்தவர் .நடுவே பக்தர்கள் இவரின் காலில் விழுந்து வணங்குவதை பழக்கமாக கொண்ட பின் இப்போது கோவிலுக்கு செல்வது இல்லை .



தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 இல் மதுரை சூரன் முதல் ஜனவரி 4படம் வரை 18படங்களும் 1985ஆம் ஆண்டில் மட்டும் அலை ஓசையில் ஆரம்பித்து நானே ராஜா நானே மந்திரி வரை 17படங்களிலும் ஹீரோவாக நடித்து இருக்கிறார் .இந்த சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது .அதே போல் வேறு எந்த நடிகரின் 100வது படமும் கேப்டன் பிரபாகரனை போல் செம  ஹிட் ஆனதில்லையாம் (கவனிக்க 50வது படம் இல்லை  )

விஜயகாந்த்  வில்லனாக நடித்த ஒரே ஒரு படம் இனிக்கும் இளமை .அதற்கு பிறகு எல்லாம் ஹீரோ தான் . 

பாரதிராஜா  தவிர்ந்து பெரிய டைரக்டர் களின் படங்களில் நடித்தது இல்லை விஜயகாந்த் .(ரமணா எடுத்த போது முருகதாஸ் பெரிய டைரக்டர் இல்லை _)
இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் 17படங்களிலும் ராமநாராயணன் இயக்கத்தில் 17 படங்களிலும் நடித்துள்ளார்.இவருடன் அதிக படங்களில் நடித்த நடிகை நளினி .

இதுவரை  நடித்த  மொத்த  படங்கள்  153.இவர்  இயக்கிய  ஒரே  ஒரு  படம்  விருத்தகிரி    

எல்லா தம்பி தங்கைகளுக்கும் திருமணம் செய்து  கடமையை முடித்த போது வயது ஆகி விட்டது .அதற்கு பின்தான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவை கைப்பிடித்தார். விஜய பிரபாகரன்,சண்முக பாண்டியன் என இரண்டு மகன்மார்.  


வீட்டில் செல்லமாக ரொக்கி,சீசெர் ,தேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார்.

செயின் ஸ்மோகர் ஆக இருந்த விஜயகாந்த் திருமணத்தின் பின் அந்த பழக்கத்தை அறவே விட்டு விட்டார்.அசைவப் பிரியரான அவர் இப்போது மீன் சாப்பிடுவதோடு  நிறுத்திக் கொள்கிறார் 

கமல்,ரஜினி போன்றவர்கள் விஜயகாந்தை விஜி எனவும் நெருங்கிய நண்பர்கள் பாஸ் எனவும் கட்சி வட்டாரத்தில் கப்டன் எனவும் அழைக்கிறார்கள்

.
நடிகர் ராஜேசின் தம்பியின் திருமணத்தின் போதுதான்M.G.R ஓடு கை குலுக்கி சந்தித்து பேசினார் .அதை யாருமே புகைப்படமாக எடுக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு  உண்டு 

திருநாவுக்கரசு ,ஜெயலலிதா கேட்டும் தராத M.G.R இன் பிரச்சார வானை விஜயகாந்துக்கு கொடுத்து இருக்கிறார் ஜானகி M.G.R. அத்தோடு M.G.R,ஜானகி M.G.R என பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்து இருக்கிறார் ஜானகி .  

என்ன பதிவு பிடித்து இருக்கிறதா பிடித்து இருந்தால் ஓட்டு போடலாமே .   

Post Comment

Wednesday, September 7, 2011

தளபதி படை தடைகளை உடை


இந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் .

தமிழ் சினிமாவை      தற்போதைய    ஆரோக்கிய    விடயமாக    நோக்கப்  படுவது  தல  தளபதி நட்புதான்    MGR -சிவாஜி , ரஜினி- கமல்        அடுத்து    விஜய் -அஜித்  .இதிலே    விஜய் ,அஜித் முன்னர் நேரடியாக மோதிக்  கொண்டாலும் அண்மைக்  காலமாக   புரிந்துணர்வுடன்  நட்புறவு கொண்டுள்ளனர் .அதன் முக்கிய அம்சமாக மங்காத்தா படத்தில் கூட விஜய் நடித்த பாடல் காட்சி இணைக்கப் பட்டிருந்தது .இது இனிவரும் படங்களிலும் தொடரும் .அஜித் விஜய் உறவு இப்படி  இருக்க அவர்களின் ரசிகர்கள் நிலை .

 .அவர்களும்  திருந்தி இருப்பார்கள் என்று   நினைத்தால்     அவர்களின் வக்கிர    புத்தியை காட்டிக் கொண்டு   இருக்கிறார்கள்.மங்காத்தா  வெற்றியை இருவரும் ஒன்றாக கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்தால் நடப்பதோ தலை கீழ்  .சில  நாட்களாக  வலையுலகில் முக நூலில் நடக்கும் யுத்தங்கள் என்னுள் தூங்கிக்  கொண்டிருந்த  விஜய் ரசிகனை தட்டி எழுப்பி விட்டது .
  .
 .மங்காத்தா தொடர் விடுமுறை நாட்களை குறி வைத்து வெளியிடப் பட்டது போட்டிக்கு வேறு படம் எதுவும் இல்லை .விடுமுறையை கழிக்க கண்டிப்பாக மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் .மங்காத்தா இல்ல எந்த ஆத்தா வந்திருந்தாலும் குறிப்பிட்ட வசூல் வரும்தான் .அதையே பெரிய வெற்றி ஆக்கி அடுத்த சூப்பர் ஸ்டார் அளவுக்கு அஜித் ரசிகர்கள் படும் பாட்டை நினைத்தால் கொடுமை தாங்க முடியலடா சாமி .அவங்களுக்கு பழைய சோறு கொடுத்தாலே புரியாணி மாதிரி சாப்பிடுவாங்க .அசலில் அதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள் .இதிலே கொஞ்சம் சுடு சோறு அவ்வளவுதான் . இந்த கிழமை தியேட்டர்கள் காலியாக தொடக்கி விட்டனவாம் .சரி அந்த கதை எதுக்கு  எமக்கு .
king of opening 
சரி தமிழ்சினிமாவின் மாஸ் யாருன்னா அது ரஜினி மட்டும்தான் .இன்றுவரை அதை நிருபித்துக் கொண்டு இருக்கிறார் .ரஜினியின் மாசுக்கு முன்னாள் இவர்கள் எல்லாம் தூசு தான் .  கில்லிக்கு பின்  விஜய் அந்த இடத்தை பிடித்து விட்டார்  .தொடர் வெற்றி  ரஜினிக்கு இணையான செல்வாக்கு என ரொக்கட் வேகத்தில் உயர்ந்தார் .king of opening மட்டுமல்ல king of kollywood ஆகி  விட்டார்அவரின் திடீர் வளர்ச்சியே அவருக்கு எமனாகியது . விஜயின்   வளர்ச்சி  ஓரளவு  படித்த இணையத்தை பயன்படுத்தும் பதிவர்களுக்கு       பிடிக்கவில்லை (ரஜனிக்கே பிடிக்காத போது இவர்களுக்கு பிடிக்காமல் போனதில் ஐயம் இல்லை) .சாதாரண நடிகனுக்கு  இவ்வளவு புகழா ?விஜயை வளர விட கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள் .விஜயை தாக்கி தாறு மாறாக எழுதினார்கள் .விஜயை எவ்வளவு மோசமாக தாக்க முடியுமோ அவ்வளவு தாக்கினார்கள் . .பிரபல பதிவர்கள்  பலரும்  தமது  இருப்பை தக்க வைத்துக் கொள்ள இடைக்கிடையே விஜயை  கேவலப்  படுத்தி  ஒரு பதிவு  போடுவதை இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர் .


 .ஏன் . அனைவரும் விஜயை கேவலப் படுத்துகிறார்கள் .சக நடிகர்கள் அஜித்  , சூர்யா ,விக்ரம்  கண்டுப்பதே  இல்லை.ஏன் அவர்கள் மக்கள் மத்தியில் விஜய் அளவுக்கு பிரபலம் கிடையாது. .இணையத்தில் தமிழ் சினிமா பக்கம் வரும் ஒருவர் அதிகம் தேடிய நடிகர் விஜய் என்பதை கூகுளே வெளிப்படையாக அறிவித்தது . விஜய் சொல்லியது போல என்னை எதிர்க்கவும் என்னுடைய முகமே தேவைப் படுகிறது என்பது இந்த விடயத்திலும் உண்மைதான் .
 விஜய்க்கும் அஜித்துக்கும் என்ன வித்தியாசம்?

மங்காத்தா படத்தை, தற்போது தமிழ்நாட்டில் உள்ள மூன்று பெரும் நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடுகின்றன.
பத்தாததற்கு ராதிகா நிறுவனமும் சேர்ந்துகொண்டது.
சன் டிவி காரர்கள் ஒன்னே ரூபா வசூலிக்கிற  படத்தையே மகாஹிட்ன்னு பீத்திக்குவாங்க.
இந்தப்படம் 'ஒம்பது' ரூபாவாவது வசூலிக்கும். ஏன்னா அஜித் இருக்காரில்லையா?.. அப்படின்னா இந்தப்படத்தை blockbuster என்று தம்பட்டம் அடிச்சுக்குவார்கள். இவ்வளவு பெரிய நிறுவனங்கள், இவ்வளவு பெரிய விளம்பரம், 2 வருடம் கழிச்சு வரும் அஜித் படம். (அசல் க்கு பிறகு விஜய்க்கு இரண்டு படம் வந்துவிட்டது) இது எல்லாத்தையும் தாண்டி படம் பப்படம் ஆச்சின்னா, அப்புறம் அது தல கிடையாது..

மாஸ் ஹீரோன்னா , விளம்பரம் இல்லாம, பெரிய நிறுவனம் இல்லாம, ஆறு மாசத்துக்கு ஒரு படம் வந்தாலும், opening கிராண்டா இருக்கணும்.. அவர்தான் மாஸ்.. அது எப்படி என்று கேட்கிறீர்களா?
இப்படி....

 

காவலன் ரிலீஸ் ஆகும்போது, எவ்வளவு அரசியல் நெருக்கடி, இப்போது மங்காத்தாவை வெளியிடும்

அனைத்து  நிறுவனங்களும் காவலன்க்கு எதிராக இருந்தன.. பெரிய நிறுவன    தயாரிப்பு இல்லை, படம் வெளியே வருமா.. வராதா என்றே தெரியாத சூழ்நிலை.. காவலனுக்கு ஆறு மாதங்களுக்கு முன் வந்த சுறா, விஜய்
ரசிகர்களுக்கே பிடிக்கல, இருந்தும்.. காவலன் ஹிட்..

இதுதான் விஜய்க்கும், அஜித்க்கும் உள்ள வித்தியாசம்.. விஜய்க்கு பெரிய நிறுவனங்கள் தேவையில்ல, பெரிய விளம்பரம் தேவையில்லை, பெரிய மியூசிக் டைரக்டர் தேவையில்லை..பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும்..(அசல், ஏகன் படங்களின் பாடல்கள்
யாருக்காவது ஞாபகம் இருக்கா?, வில்லு, சுறா பிளாப் ஆனாலும் பாடல்கள் இன்று வரை hit .. படத்துக்கு மிகப்பெரிய opening   இருக்கும்.. அஜித் படங்கள் ஆறு மாசத்துக்கு ஒன்று வரட்டும் .. (ரெண்டு  வருசத்துக்கு   ஒன்னு  வந்தே  சிலதுதான்  தேறுது )அப்போது தெரியும்..
நன்றி -விஜய் சார்பு சமுக தளங்கள் 
 இப்போது வலையுலகில் சூடாக    அனைவராலும்    படிக்கப்படுவது    உங்களை சந்தோசப்      படுத்த    அண்ணன்    கார்க்கி    யின்  மங்காத்தா, கவுண்டமணி மற்றும் ஒரு தல ரசிகன்.
மற்றும்   தலயின் தறுதலை - மங்காத்தா !.
நண்பன் ஒருவன் முக நூலில் பகிர்ந்ததை அப்படியே இங்கு பகிர்கிறேன். 
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் நீங்க யாரவது தீர்த்து வையுங்க .தலைவன் னு ஆம்பளைய சொல்லுவாங்க தலைவி ன்னு பொம்பளைய சொல்லுவாங்க இந்த தல தல ன்னு சொல்லுறாங்களே அப்பிடின்னா என்ன ?
தளபதி படை தடைகளை உடை 
தளபதி படை இப்பவே ரெடி ஆகுங்க .தீபாவளி சரவெடி 
ஒருத்தனை மட்டும் கொன்னா ஆயுதம் .எதிரிகள் அனைவரையுமே கொன்னா வேலாயுதம் .
 பாடல்களில் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம் .படத்தை மாபெரும் வெற்றியாக்கி எதிரிகள் அனைவரையும் கொல்ல ரெடி ஆகுங்க.

Post Comment

Sunday, September 4, 2011

அஜித் vs மங்காத்தா.

    மங்காத்தா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.பல இடங்களில் இருந்தும் பாராட்டு குவிகிறது .அஜித்தின் திருப்பு முனை படங்களான வாலி,தீனா,பில்லா ஆகியவற்றை பின் தள்ளி உள்ளதாம் .பல நடிகர்களுக்கும் முக்கிய படங்கள் (50,100) வெற்றிகரமாக அமைந்தது இல்லை .தல அந்த அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார் .வாழ்த்துக்கள் தல . 

நான்    வலைப்  பதிவுகள்  எழுத   ஆரம்பித்த   காலத்தில்  எழுதிய பதிவுதான் இது.பலரை சென்று அடையவில்லை . .இந்த வேளையில் இப்பதிவை  பதிவில் எந்தவித மாற்றமும் செய்யாமல்  மீள பதிவாக்குகிறேன் .

 

 

மங்காத்தா அஜித் நடிக்கும் 50 வது படம் .கடந்த மேதினத்தை குறி வைத்து எடுக்கப்பட்ட படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது .2007  இறுதியில் வெளிவந்து சக்கை போடு போட்ட பில்லா படத்துக்கு பின்னர் மங்காத்தா அதிக எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கிறது. சக நண்பரான விஜய் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகையில் இவரின் படங்கள் வருடத்துக்கு ஒன்று வெளியாவதே அபூர்வமாக  உள்ளது. கொலிவூட்டின்முன்னணி நடிகரான அஜித் இவ்வாறு தாமதிப்பது அவரின் ரசிகர்களை விரக்தி அடைய செய்கிறது.அதுவும் எத்தனை நாளுக்குத்தான் படங்களில் தல தல என்று கூவப் போகிறார்களோ தெரியவில்லை . தாமதித்தாலும் பரவாயில்லை என்று படம் பார்க்க போனால் படம் சப்பையாகவே உள்ளது .படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் துளி கவலை கூட இல்லாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்தும் விஜயைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அஜித் நடிப்பதாக இருந்து பின்பு கைவிட்ட படங்களில் நடித்தே ஒருவர் முன்னணி நடிகராகிய வரலாறு உண்டு .

எவ்வாறாயினும் யாருடைய தயவும் இன்றி சினிமாவில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய அஜித்தின் துணிச்சல் எந்த நடிகருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .சில படங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஜித்தின் படங்கள் வெற்றி பெறும் வீதமானது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது துரதிர்ஷ்டம் ஆகும்.


மங்காத்தா 

விஜயின் படமான சுறாவும்அஜித்தின் படமான மங்காத்தாவும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் நடந்தாலும் விஜயின் சுறா வெளிவந்து (அது மொக்கையாகியது வேறு கதை) அடுத்தடுத்த படங்களும் வெளியாகி விட்டன .மங்காத்தா தாமதமாக வந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ளது .கிளௌட் நைன்மூவிஸ் சார்பில் துறை  தயாநிதி அழகிரி  தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருக்கிறார். இவர்களுடன் அர்ஜுன் ,பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருகிறது. யுவனின் இசையில் விளையாடு மங்காத்தா பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது 




.படத்தின் கதை சஸ்பென்ட் ஆக வைக்கப்பட்டிருந்தாலும் மேட்ச் பிக்சிங் (match fixing) தொடர்பானது என தகவல் வெளியாகியிருக்கிறது.  இதில் முக்கிய அம்சம் என்னவெனில் அஜித் இதில் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.  வில்லன் என்றால் முதலில் வில்லனாக நடித்து விட்டு க்ளைமாக்சில் நல்லவனாக காட்டும் வேடமும் (போக்கிரி) இல்லையாம்.எனினும் நெகடிவ் ரோல் இல் அஜித் நடிக்கிறார் என்பதுதான் இப்போது உறுதி ஆகியிருக்கிறது .( போலீஸ் ஆக நடிக்க அர்ஜுன் இருக்காரே). இப்படம் இந்தியில் இம்ரான் நடித்த ஜன்நெட் என்ற படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் வெங்கட் பிரபு அதை  மறுத்துள்ளார் .
இப்போதைய தகவல்களின்படி எதிர்வரும் ஆகஸ்ட் 12 படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது .வேலாயுதம் ஏழாம் அறிவு என்பனவும் இதே காலப்பகுதியில் வெளியாக உள்ளன. எனினும் ஒரே நாளில் வெளிவர சந்தர்ப்பம் இல்லை. .மங்காத்தா வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் தல .

இது இரு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது என்பதை மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் .


நானும் விஜய் ரசிகன்தான் இவ்வாறான சிலரின் நடவடிக்கையால் எல்லா ரசிகர்களும் வெட்கி தலை குனிய வேண்டியுள்ளது

 பில்லா -2

மங்காத்தா மகத்தான வசூலை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது .இவ் வேளையில் அடுத்த படமான பில்லா-2 இல் அஜித் ஈழ அகதியாக நடிக்க உள்ளாராம் .சில காட்சிகளில் யாழ்ப்பாண தமிழும் கதைக்க உள்ளாராம்.ஏற்கனவே தெனாலியில் கமல் கதைத்து மனம் நோக வைத்தது போல இல்லாமல் நல்லபடி செய்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே .

facebook இல் அண்மையில் ரசித்தது .
மங்காத்தா டயலாக் :
வைபவ் :என்ன  வந்ததுல இருந்து காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?
அஜித் : காமெடி பண்ண நா என்ன "சந்தானம் "ஆ !
சந்தானம் : என்ன கலாசிடாராம ......

மங்காத்தா   விமர்சனம் 

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...