Wednesday, October 26, 2011

வேலாயுதம் ( மரண மாஸ் )ஏன் பார்க்க வேண்டும்


படம் பார்த்தாச்சு விமர்சனம் எழுத விருப்பமில்லை. என்னதான் நடுநிலையாய் எழுதினாலும் விஜயை என்னில் இருந்து பிரிக்க முடியாது என்பதால் வேலாயுதம் அனுபவங்களை மட்டும் பகிர்கிறேன் .
வேலாயுதம் ஜெயம் ராஜாவின் கனவு படம் முதன் முதலில் தனது திரைக்கதையில் சொந்த படம் .ரொம்பவே பில்ட் அப் கொடுத்தார் போக்கிரி + கில்லி போல இருக்கும் என்று .விஜயின் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும் .விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் எல்லோரையும் திருப்திபடுத்தும் பக்கா  கமெர்சியல் படமாக இருக்கும் . நான் வில்லு படத்துக்கு பிரபுதேவா கொடுத்த தமிழ் வார இதழ் ஒன்றில் (ஆனந்த விகடனோ ,குமுதமோ ) கொடுத்த பேட்டியை  இன்னும் மறக்கவே இல்லை .அது பரவாயில்லை சுறாவுக்கு  ராஜ்குமார் கொடுத்த பேட்டி யப்பா சாமி .ஆகவே  நான் நம்ப இல்லை .அதைவிட தெலுங்கு ஆசாத் படம் வேறு பார்த்து விட்டேன் (படம் ரீமேக் என்று சொன்ன  உடனேயே ஆசாத்தை வேலாயுதம் என்ற பேரில் யாழ்ப்பாணம் முழுதும் உலவ விட்டனர் DVD யினர்  ).எதாவது அதிசயம் நடந்தால் தான் ஏழாம்  அறிவு வேறு போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்போடு வருகுது .என்னதான் முகப் புத்தகத்தில் பெருமை அடித்தாலும்
நான் நம்பி இருந்தது நண்பனைத்தான் சாதாரண . விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் இருந்த வழமையான பயம்தான் இன்று காலையில் படம் பார்க்க கிளம்பினேன் .எதுவித விமர்சனங்களும் என் காதுக்கு வராத நிலையில் (சில படம் பார்க்காமல் ஊளையிடும்  நரிகளை தவிர -நன்றி மைந்தன் சிவா ) என்னுடைய மனம் பட படத்தது.A/L பெறுபேறு  வருவதற்கு சில மணிகள் முன்பு இருந்த அதே நிலை .இனி முகப் பக்கத்துக்கு ரெண்டு கிழமை வர முடியுமா நண்பர்களுடன் கதைக்க முடியுமா என பல யோசனை .ஆனால் படம் தொடங்கிய போது இருந்த யோசனை அதற்கு பின்னர் காணமல் போய் விட்டது .படத்தின் ஆரம்பமே சொல்லியது இது வேற என்பதை .ராஜா நீங்க கில்லி ,போக்கிரி ன்னு சொன்னிங்க ஆனா சொன்ன படி தந்து விட்டிர்கள் .மிக்க நன்றி உங்களுக்கு .

சரி படத்துக்கு வருவோம் .விஜய் மீண்டும் தான் ஒரு மரண மாஸ் ஹீரோ என்பதை நிருபித்து இருக்கிறார் .இந்த கதைக்கு விஜயை தவிர வேறு யாருமே பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று ராஜா சொன்னது ரொம்ப சரி .விஜயின் அறிமுக காட்சி ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று .அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடும் போது எதோ சண்டைகாட்சி என்று எதிர்பார்க்க காமேடியிலேயே என்ட்ரி ஆகிறார் தளபதி .
படத்தின் கதை 
கண்டிப்பா கதை இருக்கு .ஆனா எல்லோருக்கும் தெரிந்த கதைதான் .அதுதான் ஆசாத் பட கதை .இங்கே வலைதளங்கள் முழுவதிலும் முதலே போட்டு விட்டார்களே .
படத்தை பற்றி எழுத வெளிக்கிட்டால் எல்லா விடயங்களையும் கக்கி விடுவேன் என்பதால் சில விடயங்கள் மட்டும் .சொல்லியே ஆக வேண்டும்
#மாயம் செய்தாயோ பாடல் படமாக்கப் பட்ட விதம்  சூப்பர் இவ்வளவு அழகா தளபதியை இதுவரை பார்க்கவே இல்லை (திரையில்  -டோகோமோ விளம்பரம் )
#விஜய் படம்னாலே கொமெடி பிய்ச்சலாய் இருக்கும் .இது ஒரு படி மேலே +சந்தானம் என்பதை சொல்லவா வேண்டும் .
#பாடல்கள் எதுவுமே போர் அடிக்க வில்லை .(இதை அடுத்து பார்த்த  ஏழாம் அறிவு பாடல் காட்சிகளின் போதுதான் உணர்ந்தேன் )
#கிளைமாக்ஸ் -பக்கா ஆசாத் பார்த்தவர்களுக்கு கூட
# வசனம் சூப்பர்
#மன்காத்தாவில் காவலன் பாட்டுக்கு இதிலே  என்ன பிரதிஉபகாரம் செய்து இருப்பார் விளையாடு மங்காத்தா பாடல் ஒரு டி கடையில் பின்னணியில் ஒலிக்கிறது .
# வசனம் சூப்பர் அவற்றில் சில
"கோபப்படுங்க. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ கோபப்பட்டீங்கன்னா
ஆட்சியே மாறுதுல்ல. அப்பப்ப கோபப்பட்டா அரசியலே மாறும்."
அடோய் மாசமா இருக்கிற தாய் வொமிட் எடுத்து பார்த்து இருக்கன்.உன் தங்கை சமையலை சாபிட்ட நாய் வாமிட் எடுத்ததை இப்பத்தாண்டா பார்க்கிறன்
என் தங்கை சமயலில புலிடா அதுக்கு நாங்க பலிடா     
 நான் உண்மைலயே திருடனா, இல்ல திருடன்னு நினைச்சு என்னைய நானே ஏமாத்திட்ருக்கேனா -
பதிவுலகம் இன்ன சொல்லுது   இன்னா 

வேலாயுதம் - தூள் கிளப்பும் ஆக்சன் - கொஞ்சம் பழைய சாயலடிக்கும் சென்டிமெண்ட்! .-நிருபன் அண்ணா

வேலாயுதம்: The entertainer is back.வேலாயுதம்: The entertainer is back...-கார்க்கி 

 இட்லிவடை வேலாயுதம் - FIR.  

வேலாயுதம்-விஜய்-தி மாஸ்!!-

-மைந்தன் சிவா  

.
சரி  இது  மூன்று  மாதங்களுக்கு  முன்னர்  நான்  எழுதிய பதிவில்  குறிப்பிட்டது நீங்கள் முடிவு எடுங்க .........
படத்தின் பலம் 
***படத்தின் கதையை வைத்து இது மொக்கைதான் என பலர் நினைப்பதால் படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை.ஆததால் இதுவே பெரும் பலமாக உள்ளது.படம் ஓரளவு நல்லாய் இருந்தாலே வெற்றி பெறலாம்.
***தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் பெரும் பலமாக உள்ளது.காவலன் படத்தை வெளியிடுவதில் விஜய்கு ஏற்பட்ட நெருக்கடி யாவரும் அறிந்ததே.(DMK ஆட்சியில் தனது படங் கள் வேண்டுமென்றே தோல்வியடைய செய்யப் பட்டதாக விஜய் நினைக்கிறார்) 
***படத்தின் உரிமை ஜெயா டிவிக்கு கைமாறியுள்ளமையும் பலம்தான்.
***விஜய் ரசிகர்கள் -விஜய் நடித்த ப்ளாப் படங்களுக்கு கூட நல்ல ஒபினிங் கொடுப்பது இந்த ரத்தத்தின் ரத்தங்கள்தான்.(விஜய் நடித்த சில நல்ல படங்களை ப்ளாப் ஆக்கியதும் இவர்கள்தான்.)                                                        பலவீனம் என்று பார்க்கும் போது விமர்சனங்கள் அதிலும் படம் நல்லாய் இருந்தால் கூட குப்பை என்று விமர்சனம் எழுதும் சிலர் .அத்துடன் காய்க்கிற மரத்துக்குத்தான் கல் எறிவார்கள்.கல் எறிய காத்து நிற்கும் கூட்டமும் பலவீனம்தான்.
எது எவ்வாறாயினும் படம் நல்லாய் இருந்தால் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.2011 டாப் படம் எது ? 

இப்போது 

வேலாயுதம் -116 

மங்காத்தா - 86 

ஏழாம்   அறிவு -33       

இனி    ................


  


Post Comment

Thursday, October 13, 2011

ஷாருக்கான்-KING OF BOLLYWOOD

கிங் ஒப் போலி வூட் என்று அழைக்கப் படும் ஷாருக்கான் இந்திய அளவில் செல்வாக்கு மிக்க நபர்களில் முதன்மையானவர் .இவரின் தற்போதைய பரபரப்பு ரா ஒன் .தமிழில் வெளியாகவுள்ள இந்நிலையில் அவரை பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


 .தாஜ் மொதமேது கான்  லதீப் பாத்திமா தம்பதியினருக்கு மகனாக டெல்லியில் பிறந்தார்.(1965.11.02)


.தனது அத்தியாயத்தை டிவி சீரியல் மூலமாக 1988 இல் ஆரம்பித்தார் .கௌரி ஷிபா என்ற மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .ஷாருக்      ஒரு முஸ்லிம் மனைவி ஒரு இந்து திருமணத்துக்கு  எதிர்ப்புக்கள் யிருந்த போதும் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடை பெற்றது .(25.10.1991).அவருக்கு ஆர்யன் கான் (1997)என்னும் மகனும் சுகனா (2000)கான் என்னும் மகளும் இருக்கின்றனர் .
தனது  திரைப்பட அறிமுகத்தை தீவானா(deewaana ) என்னும் திரைப்   படத்தின் மூலம் ஆரம்பித்தார் (1992).இத் திரைப்படம் கமெர்சியல் ரீதியாக வெற்றி அடைந்தது .இதை தொடர்ந்து பல வகைப்பட்ட தரமான   வெற்றி திரைப்படங்களை இவர் அளித்து வருகிறார் .இதுவரை 14 முறை பிலிம் பாரே விருது வென்றுள்ளார் .டார் (daar -1993),         பாசிகர் (Baazigar -1993) ,   அஞ்சாம்  (Anjaam -1994),குச்   குச்  ஹோதா  ஹஅய்    (Kuch Kuch Hota Hai -1998 ) ,ஓம்  சாந்தி  ஓம்  (Om Shanti om -2007 ),சக்  தே  இந்திய  (Chak De India (2007) Devdas, Veer Zaara, Main hoon naஎன்பன குறிப்பிட்டு சொல்லக் கூடிய படங்கள் ஆகும் .Dilwale Dulhania Le Jayenge (1995) ,,அவருடைய மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்று .மும்பையில்12 வருடங்களாக ஓடியது .இதுவரை என்பதுக்கு  மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார் .


1990 களில் இருந்து இன்றுவரை பாலி வூட் டை ஆளுகின்ற நான்கு கான் களில் ஐவரும் ஒருவர் மற்றவர்கள் சல்மான் கான்,அமீர் கான்,சைப் அலி கான் 


டைம் சஞ்சிகையினால் 2004 இல் 40 வயதுக்கு குறைந்த ஆசியாவின்  ஹீரோ க்கள் இருபது பேரில் ஒருவராக தெரிவு செய்யப் பட்டார்.
அவருடைய முதற்  பெயரான ஷாருக் என்பதன் அர்த்தம் அரசனுடைய முகம்(king  of  face ) என்பது ஆகும் .

இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருக்கிறார் .அவரின் பெயர் Shehnaz Lalarukh. இவருடைய பெற்றோர் இவர் திரையுலகில் நுழைவதற்கு முன்னரே இறந்து விட்டனர் .தான் புகழ் மிக்க இந்த நிலைக்கு வருவேன் எபது அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதே என்று ஷாருக்  வருத்தப் படுவார்.

ஷாருக்கின் தாய் ,தந்தை,சகோதரி


இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற    Madam Tussaud's Museum இல் இவரி உருவ சிலை அமைய பெற்றுள்ளது .அமிதாப்,ஐஸ்வர்யா ,சல்மான் ,சச்சின்,ஹிருத்திக் ஆகியோரின் சிலையும் காணப் படுகிறது  .‘Dilwale Dulhaniya Le Jayenge’ படத்தில் அவரின் தோற்றம் போல சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது


இவர் விரும்பி அருந்துவது பெப்சி கோலா.
 சிறிய வயதில் ஷாருக்
மாயா  மேம்சாப் .(Maya Memsaab.) என்ற படத்தின் பின்னர் எந்த படத்திலும் உடன் நடிக்கும்  பெண் நடிகையுடன் உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறார்.

இவரின் அறிமுகப் படமாய் இருக்க வேண்டியது  (Dil Aashna Hai )டில்  ஆஷ்ணா  ஹஅய் .ஆனால் அப்படம் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட தாமதத்தால் தீவானா அவரின் முதல் படமாக அமைந்து விட்டது .

மூன்று தயாரிப்பு நிறுவனங்களை வைத்து இருக்கிறார் டிரீம்ஸ் அன் லிமிடெட் (Dreamz Unlimited ),ரெட் சில்லீஸ் என்டேர்டைன்மென்ட்  (Red Chillies Entertainment ),
ரெட் சில்லீஸ் இடியோட் பாக்ஸ் (Red Chillies Idiot Box )என்பனவே அவை Red Chillies Idiot பாக்ஸ் தொலைகாட்சி தொடர்களை தயாரித்து வருகிறது .

மும்பையில் மன்னட்( Mannat) என்னும் மாளிகையில் வசிக்கிறார் .ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார்.
ஷாருக்கான் -தமிழ் 

 ஷாருக்   கான்  தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் .தமிழின் முன்னணி நடிகர்களான கமல்  ,அஜித் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் .கமலுடன் ஹேராம் படத்தில் இணைந்து நடித்துள்ளார் .தமிழ் ஹிந்தி இரு மொழிகளிலும் வெளியான இந்த படம் ஒஸ்கார் பரிந்துரைக்கப் பட்டது .அஜித் குமாருடன் இணைந்து அசோகா படத்தில் நடித்துள்ளார் .அது தமிழில் சாம்ராட் அசோகா என்ற பெயரில் வெளியானது .இது தவிர மணி ரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த தில்சே திரைப்படம் உயிரே என்ற பெயரில் தமிழில் வெளியானது .ரஹ்மானின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் தமிழர்களிடத்தில் இவரை புகழ் பெற செய்தது .

இப்போதைய பரபரப்பு   ரா ஒன் 

ஷாருக் கான் நடிக்கும் அடுத்த திரைப்படம் ரா ஒன் .எந்திரன் வெளியான போது இரு படங்களும் ஒரே கதையை கொண்டவை என்ற சந்தேகம் எழுந்த போதும் இந்திரனை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஐயே தனது படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து ரா ஒன் படத்துக்கான எதிர்பார்ப்பை உச்சப் படுத்தி உள்ளார் .தமிழிலும் மொழி மாற்றப் பட்டு எதிர்வரும் தீபாவளிக்கு வருகிறது ரா ஒன் .மிகவும் எதிர் பார்க்கப் படும் ரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வி ஆகும் .எந்திரன் பாலி வூட் இல் ஓடியதை போல ரா ஒன் தமிழில் ஓடுவது இயலாத காரியம் .ஆனால் இப்போது ரஜினி தோன்றுகிறார் என்றவுடன் நிலைமை தலை கீழாக மாறி விட்டது .மரணத்தின் வாயில் வரை சென்று மீண்ட தலைவரை திரையில் பார்க்க அனைத்து மக்களுமே தவம் கிடக்கிறார்கள் .இந்நிலையில் தீபாவளிக்கு ரா ஒன் தமிழில் வெளியாகும் திரை அரங்குகளின் எண்ணிக்கையிலேயே தெரிகிறது எதிர் பார்ப்பு .

என்னதான் இருந்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் க்கு இருக்கும் பெருந்தன்மை வேறு யாருக்கும் இருக்காது .தனது படத்தை போலவே படம் எடுத்து தனது படத்தின் சாதனையை முறியடிக்க தானே காரணமாய் இருக்கப் போகும்  எங்களின் தலைவருக்கு யார் நிகர் இவ்வுலகில் ?
Post Comment

Sunday, October 9, 2011

2011-டாப் படம் எது?

இந்த வருடம் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் ரஜினி,கமல் ஆகியோரின் படங்கள் எதுவும் வெளி வராமலேயே கழியப் போகிறது .கடந்த பத்து வருடங்களில் இந்த இருவரின் யாரவது ஒருவரின் படமாவது வந்திருக்கும் இந்த வருடம் தான் அதிசயமாக இருவரின் படங்கள் எதுவுமே இல்லாமல் கழியப் போகிறது .ரஜினி,கமல் ரசிகர்களை பொறுத்த வரை கவலையான விடயம் தான் .ரஜினி ரா ஒன்னில் தலை காட்டினாலும் அது அவரின் படம் இல்லை .


ஆனால் இவர்களுக்கு அடுத்த முக்கிய நடிகர்கள் அனைவரினதும் படங்கள்   வெளியாகி, வெளியாகவுள்ளன .அபூர்வமாக நீண்ட இடைவேளையின் பின் அஜித்,விஜய்,விக்ரம்,சூர்யா இவர்களை விட சிம்பு,தனுஷ் என அனைவரினதும் படங்கள் 2011 இல் வெளியாகின்றன .

இவர்களின் படங்களுக்கிடையில் பலத்த  போட்டி  நிலவுகின்றது .இவற்றில் டாப் படமாக அமையப் போவது எது ?. சிலரின் படங்கள் வெளியாகி விட்டன.வெற்றியும் பெற்று விட்டன . சிலரின் படங்கள் வெளியாக உள்ளன
..
இங்கு முக்கியமாக நீங்கள் தெரிவு செய்ய வேண்டியது  இந்த வருடத்தில் அதிக வசூலை பெற்ற ,பெறப் போகும் படங்களை அல்ல .உங்களை கவர்ந்த இந்த வருட டாப் படமாக உங்களால் கருதக் கூடிய படமாக இருக்க வேண்டும் .

.எனது தளத்தில் ஒரு வாக்கு நிரலை இணைக்கிறேன் .இந்த வாக்கு நிரலில் நீங்கள் வாக்கு அளிப்பதற்கான  இறுதி திகதி டிசம்பர் 31 .ஏனெனில் இப்போது நீங்கள் தெரிவு செய்யும் படத்தை விட சிறந்த படம் இனிமேல் வரலாம் .அப்போ டிசம்பர் 31 க்கு பின்னர் இந்த கேள்வியை கேட்கலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது .

அதை அநேக இணைய தளங்களும் தொலைக்காட்சி ,வானொலி ஊடகங்களும் செய்யப் போகின்றன .என்னுடைய நோக்கம் என்னவெனில் இனிவரும் நாட்களில்  எந்த படம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிவதே ஆகும் .என்னுடைய அடுத்த பதிவுகளில் அவ்வப் போது பட நிலைவரங்களை குறிப்பிடுவேன் .
உதாரணத்துக்கு இது ஒரு முக்கிய தருணம் இந்த வருடத்தின்  டாப் படமாய் அமைய கூடிய சில படங்கள் இன்னும் சில வாரங்களில் வரவுள்ளன .எனவே அவை வரும் போது ஏலவே உள்ள படங்களின் நிலையை அறிவதோடு படம் வெளி வந்த பின் அந்த படம் டாப் இடத்தை  நெருங்கியதா இல்லை ஏற்கனவே  உள்ள படம் அந்த இடத்தை தக்க வைத்துக்  கொண்டதா என்பதை  அறிவதே ஆகும் .இங்கு முக்கிய விடயம் இப்போது நீங்கள் உங்கள் டாப் படம் எது என்பதற்கு வாக்கு அளிக்கலாம் .இனிவரும்   நாட்களில் நீங்கள் தெரிந்த படத்தை விட டாப் படம் ஏதாவது வெளிவந்தால் அதை தேர்வு செய்யலாம் அல்லது நீங்கள் இதுதான் டாப் படம் என்று கணிக்கும் இன்னமும் வெளி வராத ஒரு படம் வெளி வந்த பின் உங்கள் கணிப்பை  பொய்யாக்கினால் நீங்கள் வேறு படத்தை தெரிவு செய்யலாம் .

நான் தேர்வு செய்த படங்கள் 
கோ- கே.வி.ஆனந்த்-ஜீவா
 மங்காத்தா-அஜித்-அர்ஜுன் -வெங்கட்பிரபு
வேலாயுதம் -விஜய்-ராஜா
ஏழாம்  அறிவு-A.R. முருகதாஸ்-சூர்யா
மயக்கம் என்ன-செல்வராகவன் -தனுஷ்     
ஒஸ்தி-சிம்பு    -தரணி        
ராஜபாட்டை-விக்ரம்  -சுசீந்திரன்
இவற்றை விட தெய்வதிருமகள் இதுவரை  வெளி வந்த படங்களில் என்னுடைய டாப் படம் ஆனால் அதை இணைக்க வில்லை .காபி படம் என்பதால் அதை இணைக்க என் மனம் இடம் தரவில்லை .காவலன்,சிறுத்தை ,வானம் ,காஞ்சனா, ஆடுகளம் என்பனவும் முக்கியமானவை .
 நான்  தேர்வு செய்த படங்களில் இனிவரும் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து உள்ளேன் .இதுவரை வந்த படங்களில் கோ, மங்காத்தா என்பதில் எது டாப் என என்னால் அனுமானிக்க முடியாமையால் இரண்டையும் இணைத்து உள்ளேன் .இனி வரும் படங்களில்  அவற்றின் எதிர் பார்ப்புக்கமைய என்னால் அனுமானிக்க  கூடியவற்றை  இணைத்து உள்ளேன் .

  உங்களின் கருத்துக்கள்  வரவேற்கப்  படுகின்றன  இன்னும்   இரண்டு   அல்லது   மூன்று   நாட்கள்   உங்களின்  கருத்துக்காக   விடப்   படுகின்றன உங்களின் கருத்துக்கு   அமைய இறுதி பட்டியல்   இணைக்கவுள்ளேன் .  

என்னுடைய வேலை என்னவெனில் ஒவ்வொரு படமும் வெளிவரும் போது டாப் பட நிலைமை எவ்வாறு மாறு     படுகிறது என ஆய்வு செய்து  வருட முடிவில் ஒரு ஆய்வு பதிவு எழுவதே ஆகும் .(ஏண்டா    உனக்கு   வேற  வேலையே  இல்லையா  ?)Post Comment

Wednesday, October 5, 2011

வேலாயுதம்- trailor விமர்சனம்

வேலாயுதம்- trailor   வெளியாகி படைய கிளப்பி கொண்டிருக்கிறது .இந்நிலையில் இந்த விமர்சனம் புது முயற்சியாக அமைகிறது .விஜயை பிடிக்காதவர்கள் கண்டிப்பாக பதிவை பார்க்கவும் .வேண்டாம்   எண்டால் விடவா போகிறீர்கள் 


எனது பார்வையில் 
  வழமையாக  இளைய தளபதி விஜய் நடிக்கும்   என்பதுதான் முதலில் வரும் இயக்குனர் பெயர் கடைசியாகத்தான் வரும்ஆனால் இங்கு தொடக்கத்திலேயே வருகிறது.இதன் மூலம் ராஜாவின் இயக்கத்தை முன்னிலை படுத்துவதன் மூலம் இது இயக்குனருக்குரிய படம் தான் என்பதை சொல்லியிருகிறார்களோ.   .பொதுவாக விஜய் படங்களில் விஜயை அறிமுகப் படுத்தும் போது அவன் யாரு தெரியுமா என்றுதான் விளிப்பார்கள் .அனால் இங்கு அவர் யாரு தெரியுமா என்று விழிக்கிறார்கள் .அதுவும் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் அவ்வாறு விளிக்கிறார் .இது விஜய்க்கு வயது ஏறி விட்டது என்பதையா இல்லை அரசியல் நெடி பூசப் படுள்ளதை உரைக்கிறதா? 
சொன்னா புரியாது  வழமை போல நெற்றியில் விபூதி பூசி ஆரம்பிக்கிறது (சிவகாசி குங்குமம் ).பல விதமான நடனக் கலைஞர்களை  பயன் படுத்தி எடுக்கப் பட்டது .அப்புறம் அறிமுகப் பாடலில் ஒரே உடையுடன் வருவது வழக்கம் .இங்கு வெவ்வேறு உடைகளுடன் வருகிறார் .
குரலில் வித்தியாசம் தெரிகிறது .அதுவும் கோபத்துடன்  வசனம் பேசும் போது தடித்த குரலில் பேசுவதுமுகம் அக்கினியாய் உள்ளது  நடிப்பில் முதிர்ச்சியை காட்டுகிறது .
பாடல் காட்சிகள் பகிர்ந்து  அளிக்கப் பட்டுள்ளன . சிலாக்ஸ் ஹன்சிகாவுக்கும் ,மாயம் செய்தாயோ ஜெனிலியாவுக்கும் ரத்தத்தின் ரத்தமே சரண்யா மோகனுக்கும் வழக்கப் படுள்ளது .மொளச்சு மூணு இளையே விடல இருவருக்கும் வழங்கப் பட்டுள்ளது விரலு வெண்டக்கா ஜெனிலியாவுக்கும் காலு அவரைக்கா ஹன்சிகாவுக்கும் போல .பாடல் ஒழுங்கு  எப்படி   என்பதில் சந்தேகமாய் இருக்கு . சொன்னா புரியாது ,சிலக்ஸ்,மொளச்சு மூணு ,ரத்தத்தின்  ரத்தமே ,மாயம் செய்தாயோ இந்த ஒழுங்கிலே தான் பாடல் உள்ளது படத்திலும் அப்பிடித்தான் இருக்கும் போல .நான் சிலாக்ஸ் கடைசி பாட்டாய்  இருக்கும் என்று நினைத்தேன் .நடனம் புதிதாய் சொல்ல ஒன்றும் இல்லை கலக்கி  இருக்கிறார் .மாயம் செய்தாயோவில் ஹேர் ஸ்டைல் அழகா உள்ளது .

வேலாயுதம் முகமூடியுடன் வரும் காட்சிகளில் தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்கிறது   சண்டை காட்சியில் ட்ரெயின் சண்டை படத்தின் முக்கிய அம்சமாக   எந்திரனில் இடம் பெற்ற ட்ரெயின் சண்டைக்கு நிகராக இருக்கும் என ராஜா ஏற்கனவே கூறியிருக்கிறார். விஜய் எதிரிகள் மட்டுமன்றி விஜய் ரசிகர்கள் அனைவரிடமும் உள்ள சந்தேகம் குருவி ட்ரெயின் சண்டை குருவி போல்  இருக்குமோ என்பது .ஆனால் நிச்சயமாக உண்மைத்தன்மை யை விட்டு கொஞ்சமும் விலக வில்லை என ராஜா உறுதி பட தெரிவித்துள்ளார் .
trailor இன்  கிளைமாக்ஸ் பட்டைய கிளப்புகிறது.


 .வேலாயுதம் பஞ்ச் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன் நீ  காட்டு காட்டுன்னு வேற சொல்லுற காட்டாம இருந்தா நல்ல இருக்குமாண்ணா (யாருக்கு ண்ணா சொல்லுறீங்க )   விரும்பியோ விரும்பாமலோ அனைவரும் அதை சமுக தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். .இந்த  பஞ்ச் மட்டும் தானா இல்லை இன்னும் இருக்கா என்று எதிர் பார்ப்பை கிளப்புகிறது .
சந்தானத்தின் கொமெடி ஒண்டும்  இடம்பெறுகிறது .விளங்கவில்லை .படம் பார்த்தால்தான் விளங்கும் போல .
தெலுங்கு ஆசாத் படத்தின் ரீமேக் தான் என்பதை  ஒத்துக் கொண்ட ராஜா தமிழுக்கு ஏற்ற  விதத்தில் மாற்றியதுடன் இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் அமைத்துள்ளதாக தெரவித்துள்ளார் .தெலுங்கு ஆசாத் வேலாயுதம் ஆரம்பிக்கப் பட்டவுடனேயே வேலாயுதம் என்ற பெயரில் யாழ்ப்பாணம் முழுதும் dvd வெளியாகி இருந்தது .நானும் அதை பார்த்திருந்தேன் .அந்த கதையை அப்படியே எடுத்தால் வெடி போல  புஸ்வானம் ஆகும் என்று எனக்கே ஏன் சின்ன குழந்தைக்கே தெரியும் ராஜாவுக்கு தெரியாதா . 

சென்டிமெண்டில் 10  மடங்கு திருப்பாச்சியும் ஆக்சனில் 10 மடங்கு போக்கிரி யாக அமையும் எனநம்பிக்கை தெரிவித்துள்ளார் ராஜா.

விஜயின் படங்களுக்கு என்றுமே  வில்லன்களுக்கு முக்கிய இடம்  உண்டு .இதிலே அது மிஸ்ஸிங் (trailor) வில்லனின் ஒரு வசனம் கூட ஏன் ஒரு வில்லனை கூட முறையாக காட்ட வில்லை .15 வில்லன் என்பதால் யாரை காட்டுவது என்று தெரியாமல் தானே காட்டியுள்ளார் வேலு வேலாயுதம் .

சொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகள்  

#தீம் மியூசிக் என்னை பெரிதாய் கவரவில்லை மங்காத்தா தீம் மியூசிக் கேட்டு அதை விட பெரிதாய் எதிர்பார்த்தேன் .சிலவேளை காட்ட   காட்டத்தான் பிடிக்குமோ .
#எவ்வளவு நாளுக்குத்தான் அவரு யாரு தெரியுமோ என்று பில்ட் அப் செய்வது .தமிழ் நாட்டுக்கே இல்லை உலகுக்கே தெரியும்தானே அவர் யாரு என்று .  #அண்ணே என்று கத்துவது முதலே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு அதே முக பாகத்துடன் 
# இப்ப தமிழ் நாடே உச்சரிக்கும் வேலாயுதம் என ஜெனிலியா கூறியதும் பின்னணியில் ஒலிக்கும் வேலாயுதம் வேலாயுதம் அப்படியே தெய்வ திருமகள் கதை சொல்ல போறேன் பாட்டில் ராஜா காக்கை ராஜா என்பதையே ஞாபகப் படுத்துது .


வேலாயுதத்தை விஜய் ரசிகர் தவிர மற்றவர்கள் யாருமே வெற்றி பெரும் என நினைக்காததுதான் வேலாயுதத்தின் வெற்றிக்கு முதல் காரணமாக அமையப் போகுது .சுறா ரேஞ்சு எதிர்பார்ப்பவர்கள் வேட்டைக்காரன் ரேஞ்சு படம் இருந்தாலே நல்ல படம் எண்டு சொல்லுவார்கள் அப்ப கில்லி+ போக்கிரி ரேஞ்சு இருந்தா? .கேக்கவா வேனும் .
வெளியாகி இரண்டு நாட்களில்     45000  பார்வைகள் 1800 விருப்பங்கள் 177 விருப்பமின்மைகள் (05-10-2011 4.50 P.M) பெற்று YOUTUBE  ஐயே  CONFUSE  ஆக்கி ஒன்ஸ் மோர் கேட்கும்  வேலாயுதம் வெற்றி ஆயுதம்தான் . விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் அதிகமோ அந்த அளவுக்கு எதிரிகளும் அதிகம் என்று சொல்பவர்கள் (விருப்பமின்மையும் 1800 வந்திருக்கணுமே)  என்ன சொல்ல போகிறீர்கள் .
********************************************************************************
வேலாயுதம் பற்றி இதுவரை குறைந்தது 5  பதிவாவது எழுதி இருப்பேன் .இன்னும் எழுதுவேன் .பதிவு உலக விஜய் ரசிகர்களே நீங்கள் முந்துங்கள் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் படத்தின் வெற்றிக்கு துணை புரியும் .  

சும்மா 
மங்காத்தா படத்தில் விஜய் வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்  நன்றிக் கடனாக trailor  இலேயே தளபதி தலையை கௌரவித்துள்ளார் .எங்கே என்று கேட்கீறீர்களா 
''இன்னைக்கு தமிழ் நாடே தலையில தூக்கி வைத்து கொண்டாடி  கொண்டிருக்கிற வேலாயுதம்''  
 
முக்கிய வேண்டுகோள் -இதை விஜய் ரசிகர்களை விட எதிரிகளே அதிகம் பார்ப்பார்கள் என்பது எனக்கு தெரியும் .பதிவிலே நான் வேறு எந்த நடிகர்களையும் தரம் தாழ்த்தவில்லை .உங்கள் கருத்துக்களை நாகரீகமாக தெரிவியுங்கள்.


Post Comment

Saturday, October 1, 2011

வெடி புஸ்வானம் - கவலையில் பதிவர்


கடந்த 30 ம் திகதி மூன்று படங்கள் வெளியாகியுள்ளன .சரி மூன்றில் ஒன்றை பார்ப்போம் என்று தெரிவு செய்ய வேண்டி வலைத்தளம் ,த்விட்டேர் ,முக நூல் பக்கம் தாவி பார்த்தேன் .முடிவு முரண் -ஓகே ,வாகை  சூட வா -பார்க்கலாம் ,வெடி -மொக்கை என வந்துள்ளது .என்னதான் இவர்கள் இணையங்களில் பிரச்சாரம் செய்தாலும் மூன்று படங்களிலும் வெடி வசூலை அள்ளும்(ஆரம்ப நாட்களில் ) என நினைக்கிறேன் .வந்ததில் கமெர்சியல் படம் என்றால் வெடிதான் .பிரபு தேவா உங்களால் ஏன் முடிய வில்லை .போக்கிரி கொடுத்த உங்களால் மீண்டும் ஏன் அதை போல வேண்டாம் கொஞ்சமாவது பார்க்க கூடிய படம் தர முடியாதா ?.வெடி புஸ்வானம் ஆகியது எனக்கும் சிறிய கவலையை கொடுத்துள்ளது .ஏன் தெரியுமா ?
விஷால்


விஜய் ரசிகனான இவர் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக புரட்சி தளபதி பட்டத்தை (இந்த பட்டத்தை ஏற்றுக் கொள்ளும் தளபதி ரசிகர்கள் எவனாவது   இருக்கானா?)தனக்கு வைத்தது மட்டுமில்லாமல் அவரை போல் படங்கள் கொடுக்க ஆசை படுபவர் .மலைக்கோட்டை ,தோரணை ,சத்தியம் என்று முடியாமல் போக வெடியை திமிராக நம்பினார் .சரி காரணம் என்ன என்னும் சொல்லவே இல்லையே ? .அண்மையில் கொடுத்த பேட்டி  ஒன்றில் விஜயை வைத்து படம் எடுக்க ஆசை படுவதாகவும் விஜய் ரெடி என்றால் ஓகே என்றும் அறிக்கை விட்டுள்ளார் .
விஷால் ஆரம்பத்தில் உதவி இயக்குனராய் இருந்துதான் (வேதம் ) திரை பயணத்தை ஆரம்பித்து இன்று நடிகர் ஆனார் .அவர் படம் இயக்குவது விருப்பாக இருக்கலாம் இவ்வளவு நாளும் சந்தர்ப்பம் இல்லாமல் போய் இருக்கலாம் .


எனினும் எனக்கு உறுத்துவது  விஜய்க்கு கதை ரெடி பண்ணி வைத்து இருக்கிறேன் என்று இப்போது  சொல்வது .ஏன் என்றால் விஜயின் நிலைவரம் இப்போது எல்லோருக்கும் தான் தெரியுமே ஷங்கர் ,முருகதாஸ்,கௌதம் என படு பிஸி .இந்த சூழ் நிலையில் விஜய் இந்த அழைப்பை ஏற்பாரா  என்பது சந்தேகம் தான் .விஜய் மீது உண்மையான அன்பு இருந்தால் பாபு சிவனையும் ,ராஜ்குமாரையும் நம்பி    விஜய் படம் எடுத்த போது (நொந்த போது ) விஜயை அணுகி இருக்கலாம் .எவ்வளவோ எல்லாம் பண்ணுறவர் இதை பண்ணி இருக்க மாட்டாரா?(விஜய் நடிகர்  பிரபு தேவா முதல் படத்துக்கு நம்பி வாய்ப்பு கொடுத்தவர் ..புதுமுக இயக்குனர்களுக்கு எப்போதும் வாய்ப்பு கொடுப்பவர் என்பதை யாரவது மறுக்கிறீர்களா ?).அப்போது எல்லாம் விட்டு விட்டு விஜய் இப்போதுதான் பெரிய இயக்குனர்களுடன் சேரும் போது அழைப்பு விடுப்பதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க  வேண்டி இருக்கிறது .இவரின் இந்த அறிக்கை மூலம் நீண்ட நாட்களாக விஜய் படம் வராததால் (எங்களுக்கு 10  மாதம் நீண்ட காலம் தான் )சரி நம்ம அண்ணன் விஷால் வெடி படம் நடித்து இருக்கிறார் .அண்ணன் தளபதி ரசிகன் .பெரிய நடிகனாய் இருந்து கூட விஜயை வைத்து படம் எடுக்க போகிறார் .வெடி படத்தை கண்டிப்பாக சரவெடி ஆக்க வேண்டும் என்று தளபதி படையை கிளப்பி விட்டிருக்கிறார் போல எனக்கு தெரிகிறது .என்னை இவ்வாறு சிந்திக்க தூண்டியது .பிரபல பதிவர் ரஜினி ரசிகர் ஜீவதர்சன் அவர்கள் எழுதிய இந்த பதிவு தான் .
ரா-ஒன்னில் ரஜினி நடிக்க வேண்டாமே 

சிம்பு அஜித் துதி பாடுவதை தனது ஒவ்வொரு படங்களிலும் வழமையாய் கொண்டிருப்பது போல விஷாலும் செய்தால் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஒரே நாளில் 
 இதே தினத்தில் பல வருடங்களின் பின் இலங்கையில் தயாரிக்கப் பட்ட தமிழ் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகிறது .நான் இதுவரை எந்தவொரு இலங்கை தமிழ் படமும் பார்த்ததில்லை .எனவே இந்த படம் பார்க்க ஆவலாய் உள்ளேன் .ஏற்கனவே ஊடகவியாளர் களுக்கு இந்த படம்திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளியுள்ளது .தென் இந்திய படங்களுக்கு நிகராக எடுக்கப் பட்டுள்ளதாக அவர்களினால் பாராட்டப் பட்டுள்ளது .முற்றிலும் இலங்கை கலைஞர்களை கொண்டு எடுக்கப் பட்ட இந்த திரைப்படம் இலங்கையில் உங்கள் அபிமான திரை அரங்குகளில் வெளியாகியுள்ளது .
ஒரே நாளில் trailor 
 ############################################################################

மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்   
என்னும் தலைப்பில் மூன்று படங்களின் பாடல்களையும் ஒப்பிட்டு ஒரு அலசல் ஏலவே பதிவு இட்டு இருந்தேன் .அதன் முடிவு என்ன .உங்களிடமே விட்டு விடுகிறேன் கருத்துரையில் தெரிவியுங்கள் .

 

இந்த வருடத்தின் டாப் எந்த படம்

 

விரைவில் இந்த வருடத்தின் டாப் எந்த படம் என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளி வரவுள்ளது . இந்த நேரத்தில் கடந்த வருடம் மட்டு மல்லாமல் இன்று வரை தமிழ் சினிமாவின் டாப் திரைப்படம் வெளியாகி இன்றுடன் (01 10.2011) ஒரு வருடம் பூர்த்தி ஆகியுள்ளது .கடந்த வருடம் இதே நாளை நினைவு கூர்ந்து  பாருங்கள் .


சிந்திக்க ஒரு நிமிடம் என்ன பதிவு பிடித்து இருக்கா? பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டு போடலாமே .Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...