Friday, October 5, 2012

மாற்றான்-ஒரு அலசல்



 தமிழ் சினிமாவில்  இந்த வருடத்தின்  மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ள படங்களில் ஒன்று .எதிர்வரும் 12 ம்  திகதி வெளிவர உள்ளது .இந்த மாற்றான் பற்றிய ஒரு அலசலே இந்த பதிவு .

மாற்றான் 
சூர்யா ,காஜல் , ,Sachin Khedekar(தெய்வ திருமகள் படத்தில் அமலாபாலின் தந்தை யாக நடித்தவர் )மற்றும் பலர் நடிப்பில் வெளிவர இருக்கும் மாற்றான் படத்தை கே.வி .ஆனந்த் இயக்குகிறார் .ஒளிப்பதிவு s .சௌந்தர் ராஜன் ,இசை ஹரிஸ் ஜெயராஜ் .கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இப்படத்தை a g s என்டேர்டைமென்ட்  விநியோகிக்கிறது .தெலுங்கிலும் brothers  என்ற பெயரில் இதே நாளில் வெளியாகும் இப்படம் சூர்யாவின் இதுவரை வெளிவந்த படங்களின் மிகப்பெரும் வெளியீடாக அமையவுள்ளது .

கே.வி .ஆனந்த் 

 புகைப்பட ஊடகவியாலராக  (photo journalist ) தனது வாழ்வை ஆரம்பித்த கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமிடம் உதவியாளாராய்  இணைந்ததன் மூலம் சினி உலகில் அடி எடுத்து வைத்தார் .தேவர்மகன் ,அமரன் போன்ற சில படங்களுக்கு  ஒளிப்பதிவு உதவி யாளராய் பணி யாற்றிய பின் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படத்திலேயே(மலையாளம் ) சிறந்த ஒளி ப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கி தனது திறமையை நிரூபித்தார் .சிவாஜி,முதல்வன்,நேருக்குநேர் போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராய்  பணியாற்றிய இவர்  இயக்கிய முதல் படம் கனா கண்டேன் .பெரிய வெற்றியை பெற வில்லை ஆயினும் விமர்சகர்களின் பாராட்டை பெற்றது .அடுத்து இயக்கிய படங்கள் அயன் ,கோ .மூன்று படங்களிலேயே முன்னணி இயக்குனர் ஆகி விட்டார் .இதிலிருந்து இவரின் படங்களின் மவுசை அறியலாம் .

படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுப்பதுதான் இவரின் ஸ்பெஷல் .மசாலா படமான அயன் வெளியான 2009 ம்  ஆண்டின் அதிக வசூலை பெற்ற படமாக திகழ்கிறது .சன் பிக்சர்சின் சளைக்காத விளம்பரமும் ஒரு காரணம் என்றாலும் இவர்தான் பிரதான காரணம் .தமிழ் சினிமாவில் தடுமாறி வந்த ஜீவாவை தனக்கென ஒரு இடத்தில் அமர்த்திய பெருமையும் இவருக்கே .சூர்யாவுடன் மீண்டும் கை கோர்த்து இருக்கும் இவரின் மாற்றானுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுவது தவிக்க முடியாததே

மாற்றான் படத்தின் கதை ஒட்டிப்பிறந்த இரட்டையரின் கதை .ஒருவன் நல்லவன் மற்றவன் கெட்டவன் .தமிழ் சினிமாவுக்கு புதுமையான கதை என சொல்ல முடியாத நிலையை அண்மையில் வெளிவந்த சாருலதா ஏற்படுத்தி விட்டது .எனினும் இரணது படமும் வெவ்வேறு திசையில் பயணிப்பதால் அலட்டிக் கொள்ள தேவை இல்லை .trailor பிரமிப்பு ஊட்டியிருந்தது .எனினும் அண்மைக்  காலங்களில் படங்களின் trailor ,first லுக் வந்தவுடனேயே இது இன்ன படத்தின் காபி என இணையத்தில் கலாய்ப்பது வாடிக்கை ஆகி விட்டது .சில உண்மையாய் இருந்தாலும் பல பொய்யான தகவல்களே .அந்த வகையில் இது stuck on you எனும் ஹாலிவுட் படத்தின்  தழுவல் என ஒரு கூட்டம் .எதிர்பார்க்கிறது எனினும் படம் அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடி  ஆக்கும் என்பதே எனது கணிப்பு .


சூர்யா 

சூர்யாவுக்கு ,விஜய் அஜித் அளவுக்கு ரசிகர்கள் கிடையாது .எனினும் இயக்குனர் தெரிவில் அவர்கள் காட்டிய அசமந்தமும் சூரியாவின் மிக சிறந்த இயக்குனர் தெரிவும் சில ஆண்டுகள் மக்கள் மனதில் அவரை முன்னணியில் வைத்து இருந்தது .இப்போது விஜய் ,அஜித் உம்  இதே வழியை பின்பற்ற ஆரம்பித்து உள்ளதால் முன்னணியை தக்க வைக்க முடியாமல் போய் விட்டது .சூர்யா கொஞ்ச காலம் தொடர் ஹிட் கொடுத்து வந்த போது  மக்கள் அவரின் படங்களை ரசித்தனர் ,எனினும் வழமையாய் இருந்த ரசிகர்கூட்டத்தை பெரியளவில் அதிகரிக்க முடிய வில்லை .அப்படி அதிகரித்த  கூட்டத்தில் பெரும்பாலனவர்கள் அயன் படம் மூலம்தான் என்பதை அடித்து கூற முடியும் .சூர்யாவை வசூல் நாயகர்களில் ஒருவராக மாற்றிய படமும் அயன் தான் .
 .விஜய் ,அஜித் இன் அண்மைக்கால வெற்றிகளும் ஏழாம் அறிவின் சறுக்கலும் சூர்யாவை சற்று பின் தள்ளி விட்டன .ஏழாம்  அறிவு சூர்யாவின் படங்களிலேயே அதி கூடிய வசூலை பெற்றிருந்தாலும் எதிர் மறை விமர்சனங்களும் மக்களின் கருத்துக்களும் உதயநிதியின் அதீத பில்ட் அப்பும் சூர்யாவின் மீது கரும் புள்ளி ஒன்றை ஏற்படுத்தி விட்டன .அத்துடன் பொது  உலகில் அண்மைக்காலமாக சூர்யாவின் போக்கும் வெறுக்கத் தூண்டும் விதமாக உள்ளது .இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதிலடி மாற்றான் வெற்றி தான் .சூர்யா மிக சிறந்த பதிலடியை கொடுப்பார் என நம்புகிறேன் .

ஹரிஸ்

ஹரிஸ் சூர்யா கூடணியை பற்றி விபரமாக ஏற்கனவே சொல்லி விட்டேன் ..எனவே ஹரிசின் அண்மைய நிலையை பார்ப்போம் .பாட்டுக்கள் பெரும்பாலானவை காபி  என பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஹரிசின் பாடல்கள் மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன .இந்த வருடத்தின் டாப் ஆல்பம் ஆக இவரின் நண்பன் திகழ்கிறது .ஓகே ஓகே யும் சோடை போக இல்லை .ஆனால் மாற்றான் அந்த ரேஞ்சுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .சூர்யாவுடன் ஆன எல்லா படங்களின்  பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் கடைசி இரு படங்களில் ஓரளவு சொதப்பி இருக்கிறார் ஹரிஸ் .சில வேலை நிறைய படங்கள் பண்ணிவிட்ட சலிப்போ என்னவோ .பாடல் வெளியாகி ஓரளவு காலம்ஆகி விட்டதால் படம் வரும் போது பாடல்கள் ஹிட் அடிக்க சந்தர்ப்பங்களும் உள்ளனஏனெனில் எல்லாம் அயன் தந்த எதிர்பார்ப்பு .அயனின் டைட்டில் சாங் மியூசிக் ஐ யாரும் மறந்து இருக்க மாட்டிர்கள் .

காஜல் 

தெலுங்கில் மகாதீரா ,பிசினஸ் மன் போன்ற படங்கள் மூலம் முன்னணி இடத்தை பெற்று விட்டாலும் தமிழில் இதுதான் இவருக்கு பெரிய படம் .பழனி  ,மோதி விளையாடு ,நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு படம் மட்டும் தான் வெற்றி பெற்று இருந்தது .எனவே தமிழில் மாற்றான் இவரை முன்னணி நடிகையாக மாற்றும் என நம்புவோம் .தொடர்ந்து துப்பாக்கியிலும் கலக்க இருப்பதால் தற்போது .எழுந்துள்ள சமந்தா அலையை அடக்க சந்தர்ப்பங்கள் உள்ளன .


கே.வி ஆனந்த் சூப்பர் கில்லாடி தந்து படங்களிலேயே தணந்து முன்னைய படங்களை கலாய்த்து காட்சிகள் அமைத்து இருப்பார் .மாற்றானிலும் கோ படத்தை கலாய்த்து ஒரு காட்சி trailor  இல் வெளியாகி இருந்தது .மாற்றானில் இரு சூர்யாவில் அகிலன் அஜித் fan விமலன் விஜய் fan ஆம் .



ஆமா ஒருவன் கெட்டவன் ஒருவன் நல்லவன் அப்போ யாரு நல்லவன் யாரு கெட்டவன்  சொல்லுங்க பார்ப்போம் .......ஹா ஹா

மாற்றான் வெற்றி பெற படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் 

Post Comment

Thursday, October 4, 2012

சிவாஜி -the legend







சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...



சத்ரபதி சிவாஜி வேடத்தில

் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!


மனைவியுடன் 

1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!

கவியரசு கண்ணதாசனுடன்  

வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!


தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!


ஜெமினி யுடன் 

தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!


சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
பாக்யராஜ் திருமணம் 

விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!

'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!


சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!






பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

- மானா பாஸ்கரன்
நன்றி -சினிமா விகடன் 



Post Comment

Friday, September 14, 2012

நான் விஜய் ரசிகனான கதை-2

இது ஒரு சுயசரிதை ஆகும் .இதன் முன்னைய பகுதியை படிக்க...
நான் விஜய் ரசிகனான கதை.

2000 ம் ஆண்டில் தென்மராட்சி பகுதியில் ஏற்பட்ட நாடு பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்து வட்டுக்கோட்டையில் சில வருடங்கள் இருக்க நேரிட்டது .இதனால் சில காலம் சினிமா பற்றிய நினைவே இல்லாமல் போயி விட்டது .எனினும் இந்த இடப் பெயர்வு என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அடித்தளத்தை இடுவதற்கு வழி  கோலியது .அதுதான் எனது யாழ் இந்து கல்லூரிக்கான பிரவேசம்


.கல்லூரியில் சேர்ந்த போது என்னுடன் ஏற்கவே படித்திருந்த நண்பர்கள் சிலர் எனது வகுப்பிலயே சேர்ந்தமை புது இடத்தில் நம்பிக்கையை கொடுத்தது .எனினும் பெரியதொரு நண்பர் குழாம்  ஏற்பட அதிக காலம் தேவை பட வில்லை .பாடசாலையில் சினிமாவை விட கிரிக்கெட் அதிக முக்கியத்துவம் பெற தொடங்கி  இருந்தது .இரு குழுக்களாக பிரிந்து விளையாடிய முதல் போட்டியில் நான் அடித்த சில பல சிக்ஸர்கள் என்னை அணியில் நிரந்தர இடம் பெற வைத்தது .அத்துடன் ஜெயசூரிய என்ற பெயரையும் தேடி தந்தது .(பாடசாலையில் அதற்கு பின் எந்த போட்டி  யிலாவது ஒரு சிக்சர் கூட அடித்ததாக ஞாபகம் இல்லை ).வகுப்பில் இலங்கை அணிக்கு சமனான ஆதரவாளர்கள் ஆஸி  அணிக்கும்  இருந்தமையால் அதுவே இரண்டு டீம்களை பிரிப்பதற்கு காரணியாக இருந்தது .பாண்டிங்,கைய்டேன் ,கில்கிரிஸ் ஆகியோர் அப்போது ஆசி அணியின் மூவேந்தராக இருந்தனர் .

ஆகவே எனது வகுப்பில் நன்றாக கிரிக்கெட் விளையாடும் இருவருக்கு அப்பட்டங்கள் சூட்டப் பட்டன .ஆனால் ஹய்டேன் கு பொருத்தமாக ஆள் இல்லை எனவே எங்க க்ரூபில் இருந்த கிரிக்கெட் ரசனையே இல்லாத ஒருத்தனை ஹய்டேனை போல இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக ஹய்டேன் ஆக்கி பிளேயர் ஆக்கியது வரலாறு .அப்புறம் நியூ சிலாந்து பிளெமிங் ,சவுத் ஆப்ரிக்கா கிப்ஸ் ஆகியோரும் வகுப்பில் இருக்கத்தான் செய்தனர் அவர்கள் சுய விருப்பின் பேரில் முறையே இலங்கை ,ஆஸி அணியில் சேர்ந்தனர் .ipl slpl எல்லாம் எங்களிடம் இருந்து விளைந்தவையே என்பதை இட்டு பெருமை படுகிறேன் .

2003 உலக கிண்ணம் இதன் உச்ச கட்டமாகும் .ஒவ்வொரு நாளும் பாடசாலையில் முதல் நாள் முடிவடைந்த மேட்ச் தான் விவாதமாய் இருக்கும்


.இலங்கை ஆஸி அரை இறுதி போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தது சங்கா  வும் ,வாசும் களத்தில் நிற்கும் போது மழை  வந்து குழப்பி இருந்தது .ஆனால் வகுப்பில் வெற்றி என்னவோ சிறிலங்காவுக்கு தான் .இந்த மழை மட்டும் வராமல் இருந்திருந்தால் சங்கா ,வாஸ் இருத்த போர்முக்கு (7 விக்கெட் போயிட்டுது 100 ரன்னுக்கு கிட்ட அடிக்கோணும் )ஈஸி  வின். சே அநியாயமா கப்பை மிஸ் பன்னிடமே என்று டாக் கை மாற்றி அவங்களை நிலை குலைய  வச்சாச்சு .அந்த கால பகுதியில் எனது இடது கை பந்து வீச்சு சிறப்பாக எடுபட 2003 வேர்ல்ட் கப் ஹீரோவான வாஸ் இன் நாமம் என்னோடு ஒட்டிக் கொண்டது .காலப் போக்கில் பெயர்கள் மறைந்து விட்டாலும்  இன்று வரை ஒருவனுக்கு பெயர் மாவன்  அதபத்து  தான் .

2002 ம் ஆண்டு மீண்டும் சொந்த இடத்துக்கு வந்திருந்த  போதும் கரெண்ட்  இல்லாமல் இருந்தது .ஏனெனில் ஏனைய இடங்களுக்கு கரெண்டை சில மணித்தியாலங்கள் என்றாலும் காட்டினார்கள் ரேடியோ வில்  யாழ் fm தவிர ஒரு ஒண்டும் வேலை செய்யாது .எனவே பெரிய அண்டனா தயாரித்து அதன் மூலம் சக்தி fm  கேட்டு தகவல்கள் அறிந்து கொண்டேன் .சக்தி fm சுபுகுட்டி பாவோரிட் நிகழ்ச்சியாக இருந்தது . இப்போது பல அலைவரிசைகள் வந்தாலும் நான் என்றுமே சக்தி fm ரசிகன் தான் (முன்னரே சொன்ன லாஜிக் தான் )

படம் வரும் முன்னே ஒரு படத்தின் பாடல் கேட்டது என்றால் திருமலை படம் மூலம் தான் .ஒரு மணித்தியாலத்திலே ஒரு முறை தான் அந்த பட பாட்டு போடுவார்கள் அந்த பாட்டை கேட்பதற்காகவே நாள்  முழுக்க ரேடியோ வேலை செய்யும் .
இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே தினத்தில் ஒரு படம் வெளியாவதை அறிந்த முதல் படமும் திருமலைதான் .அப்போதுதான்  படத்தின் வெற்றி தோல்வி போன்ற விடயங்களை  அறிந்து கொண்டேன் .2003 தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் திருமலை பிதாமகன்,ஆஞ்சநேயா  படங்களை வெற்றி கொண்டது.யாழில் ஒருதியேட்டரில்  படம் ஓடுவதாக அறிந்த போதும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் தைரியம் இருந்திருக்க வில்லை அந்த தீபாவளிக்கு விஜய் ,அஜித்,விக்ரம் ,சூர்யா ஆகிய முன்னணி  நடிகர்கள் அனைவரின் படமும் வெளி வந்திருந்தது .அதிலே விஜய்க்கு கிடைத்த வெற்றி ஆனது முதன் முதலில் விஜய்க்கு ரசிகன் என்ற நிலைக்கு என்னை இட்டு சென்றது .

எனவே நான்  முதல் முதலாக விஜய் ரசிகனாக என்னைசமூகத்துக்கு  காட்டி கொண்டேன் ..பாடசாலை யிலும் சினிமா விவாதம் சூடு பிடிக்க தொடங்கியது .பெரியளவில் விஜய்க்கு எதிர்ப்பு இருக்க வில்லை .ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பலைகள் மாசுக்கு முன் தூசாக இருந்தது .கொலரில்  இருந்து சிகரெட் எடுத்து புகைக்கும் ஸ்டைல் இளைஞர் களிடத்தில் வரவேற்பு பெற்றது .அப்போது இனைய வசதிகள் இல்லாத நிலையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் தான் யாழ் மக்களை அலங்கரித்து இருந்தன .இந்திய சேனல்கள்  ஆங்காங்கே இருந்தாலும் சக்தி  டிவி அநேக வீடுகளை அலங்கரித்தது .அனைத்து தொலைக்காட்சி ,ரேடியோ அலைவரிசைகளும் விஜய் புகழ் பாட தொடங்கின .

விஜயை ஒரு சாதுவான நாயகனாக பார்த்த எனக்கு மீசை இல்லாமல் புது கெட்  அப்பில்
பாட்சாவில் ரஜினி ஸ்டைல் ஐ பார்க்கும் போது இருந்த அதே பிரமிப்பு இதிலே விஜயை பார்க்கும் போது  எழுந்திருந்தது.

தொடரும்.......

Post Comment

Wednesday, September 12, 2012

மசாலா கபே-சுவாரசிய தகவல்கள் -3

jab tak hai jaaan
கடந்த தீபாவளிக்கு வேலாயுதம் ஏழாம் அறிவு ரா ஒன் ஆகியவை வெளியாகியமை உங்களுக்கு நினைவிருக்கும் .அதேபோல் இந்த தீபாவளிக்கும் ஷாருக்கானின் படம் ஒன்று விஜயின் படத்தோடு  வெளிவருகிறது .முக்கோண காதல் கதையான படத்தில் கத்ரீனா  கைப் ,அனுஷ்கா ஷர்மா ஆகியோர் ஷாருக் ஜோடியாக நடிக்கின்றனர் .legend இயக்குனர் யாஷ் சோப்ரா 8 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தை இயக்குகிறார் .படத்தின் இசை ஒஸ்கார் நாயகன் A .R .ரஹ்மான் .கடந்த தீபாவளிக்கு வெளியான ரா ஒன் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இந்த படத்துக்கு கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது 


.
இந்த தீபாவளிக்கு அண்ணனுக்கு  பதில் தம்பி களம் இறங்குகிறார் .ஆம் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியனும் தீபாவளிக்கு வெளியாகிறது .ஒரே நாளில் இரு பெரிய படங்கள் வெளிவருவதை விநியோகஸ்தர்கள் விரும்புவதில்லை எனினும் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதை தவிர்க்க முடியாது .மாமா ரெடியா ? என்று பில்லா-2 வுடன் மோதியவர்கள் இம்முறை விஜயின் படத்துடன் மோதுகிறார்கள் .அடுத்தவனின் பயம் நமது பலம் என்பதை சகுனி வெளியீடில் பயன்படுத்தயது போன்று இங்கு பயன்படுத்த முடியாது  (தீபாவளிக்கு விஜய்  படம் தயாராகாத சந்தர்ப்பம் தவிர்ந்து) .பிக்கொஸ் ரஜினி படமே போட்டிக்கு வந்தாலும் பின்வாங்காத அனுபவம் கொண்டது விஜய் தரப்பு (அண்மைக்காலமாக நடுநிலையோடு எழுதுவதாய்  நினைக்கிறேன் ).



###############################

ருக்மணி தேவி 
இலங்கையில் ஒரே ஒரு சினிமா நடிகைக்கு சிலை வைத்து கெளரவம் வழங்கப்பட்டுள்ளது : இந்த சிலையை நிறுவி ..... திறந்து வைத்தவர் ....அப்போதைய பிரதமர் R பிரேமதாச ! சிலை நீர்கொழும்பு - கட்டான சந்திப்பில் நிறுவப்பட்டது [ அந்த இடத்தில் தான் அந்த நடிகை ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டார் ];சிங்கள சினிமாவின் ஆரம்ப காலத்தில் சொந்தக் குரலில் பாடி நடித்து .... லட்சக்கணக்கான ரசிகர் உள்ளங்களை கொள்ளை கொண்ட அந்த நடிகை ..... ருக்மணி தேவி ! இவர் ஒரு .......... தமிழ் பெண் !!!#by -sathyan S
#####################################################
யார் இவர்கள் ?

ஐஸ்வர்யா ராய் சகோதரனுடன் 
###########################################################
யுவன் 

தனது 16 வயதிலேயே அரவிந்தன் படம் மூலமாக இசை அமைக்க வந்தவர் .ஆரம்பம் சிறப்பாக அமையா விட்டாலும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் மக்களால் அறியப்பட்டார் .பின் தனக்கென ஒரு பாதையை அமைத்து பல வெற்றிகரமான பட அல்பங்களை வழங்கி இன்று தமிழ் சினி
மாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.25 வது வயதில் 7Gரெயின் போ காலணி படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் FILMFARE விருது வென்ற அவர் இளம் வயதில் அந்த விருதை வென்ற சாதனையை இன்னமும் தக்க வைத்து கொண்டு இருக்கிறார். தன்னுடைய பெயரில் சேர்ந்திருக்கும் ராஜா எனும் சொல்லுக்கு பெருமை சேர்த்த யுவன் நூறாவது படத்தை (பிரியாணி )விரைவில் தொடவுள்ளார் 








யுவன் இதுவரை அஜித்துடன் 5 படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் தீனா ,பில்லா ,ஏகன் ,மங்காத்தா ,பில்லா-2 . இவற்றில் தீனா ,பில்லா ,மங்காத்தா அஜித்தின் டாப் படங்கள். விஷ்ணு வர்த்தனின் பெயரிடப்படாத அடுத்த படத்துக்கும் இவர்தான் இசை .. புதிய கீதை படத்தில் பின்னணி இசை கார்த்திக் ராஜா வழங்க பாடல்களை யுவன் கம்போஸ் பண்ணியிருந்தார் விஜயுடன் இதுவரை ஒரு படத்தில் கூட முழுமையாக இணைந்து பணியாற்ற வில்லை


.
விஜய் - பரத்வாஜ்; அஜித் - ஹாரிஸ்; சூர்யா - வித்யாசாகர்; விக்ரம் - யுவன் (இறுதியாக வெளிவந்த ராஜபாட்டைக்கு முன்புவரை) ஒன்றாக வேலை செய்யல; இந்த நான்கு இசையமைப்பாளரும், நடிகர்களும் சமகாலங்களில் நீண்ட நாட்கள் உச்சத்தில் இருந்தவர்கள்!!-

#########################################


உலக நாயகன் கமலஹாசன் போட்டுள்ள வேஷங்கள்  ஒரே பார்வையில் 

twitter
தமிழ் ஹீரோக்களிலேயே ஆட்டோ ஓட்டிக்கிட்டே காலேஜ் இல படித்த ஒரே தலைவன் நம்ம தளபதி #வேட்டைக்காரன் பாறைகள்..!
 மாநகர பேருந்து வர்றப்ப 'கூட்டமா இருக்கு வேற பஸ்ல போலாம்னா அவன் பேமிலி மேன்' 'கூட்டமே இல்ல வேற பஸ்ல போலாம்னா அவன் பேச்சுலர்'
 ஹீரோவைச் சரியாகக் குறிபார்த்துச் சுடும் வில்லன் கிடைக்காமல் தமிழ்சினிமா பலகாலமாய் அல்லாடுகிறது !
பல்ப் - எடிசன் ரேடியே - மார்க்கோனி போன் - க்ராஹாம் பெல் க்ராவிடி - நியூட்டன் எக்ஸாம் - ???? அவன் தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!

 twitter இல் என்னை தொடர 
https://twitter.com/RKobiraj


Post Comment

Thursday, September 6, 2012

நீதானே என் பொன் வசந்தம் -ஒரு அலசல்

நீதானே  என் பொன்  வசந்தம்

தமிழ் சினிமாவில் 2012 ம் ஆண்டு 100 வது படமாக முகமூடி வெளிவந்து இருக்கிறது .ஏற்கனவே வெளிவந்திருக்க வேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் தாமதித்து கொண்டிருக்கின்றன .அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களை உள்ளடக்கிய வருடத்தின் நான்காம் பாதிதான் கோலிவுட் இல் வசந்த காலமாக இருக்க போகிறது .துப்பாக்கி ,விஸ்வரூபம் ,மாற்றான் ,தாண்டவம் ,கோச்சடையான்  என பட்டியல் நீள்கிறது .இவை இயக்குனரின் செல்வாக்கு இருந்தாலும்  பெரும்பாலும் ஹீரோ பேஸ் பில்ம்ஸ்  .ஆனால் டைரக்டர் பேஸ் பிலிம் ஆன  கெளதமின் படம் ஒன்று உச்ச எதிர்பார்ப்பில் இருக்கிறது .அண்மையில் வெளியிடப்பட்ட பாடல்கள் ,trailor ஆவலை உச்சப்படுத்தி இருக்கிறது .அந்த படத்தை பற்றிய ஒரு அலசல்தான் இந்த பதிவு



கௌதம் 
  கௌதம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.மின்சார கனவு படத்தில் ராஜீவ் மேனனுக்கு  உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இளமையான காதல் கதையான படம் மிகப்பெரு வெற்றியை பெற்றது.தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார் கெளதம் .தன்னுடைய எல்லா படத்திலும் காதலை அழகாக இழையோடுவது இவரது தனி சிறப்பு .முக்கியமாக தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஆக்சன்  படங்களில் காதல் பொருட்படுத்தப் படுவதில்லை .பாடல் காட்சிகளுக்கு மட்டுமே ஹீரோயின் அனேகமாக பயன்படுத்தப் படுவார் .ஆனால் கௌதமின் ஆக்சன் படத்தில் ஹீரோயினுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கும் .அழகான காதலும் இருக்கும் .காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு அந்த ரகம் .ஆக்சன் படத்திலேயே அழகான காதல் என்றால் காதல் படத்தில் சொல்லவும் வேண்டுமா மின்னலே ,விண்ணைத்தாண்டி வருவாயா தமிழில் தவிர்க்க முடியாத காதல் படங்கள் .மணிரத்னத்தின் சாயல் தென்பட்டாலும் கெளதம் படம் என்றால் எப்போதும் மார்கெட் தான் .


ஏனைய  மொழிகளிலும் தனது படங்களை விஸ்தரித்த  கௌதமுக்கு தெலுங்கில் வரவேற்பு இருந்தாலும்(காக்க காக்க ரீமேக்,தெலுங்கு vtv  ) பாலிவுட் இன்னும் அவரை கண்டு கொள்ளவில்லை .மின்னலே ,விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டி ரீமேக் க்கும் தோல்வி .ஹிந்தியில்  vtv தோல்வி அடைந்த  பின்  பாலிவுட் ரசிகர்களுக்கு பின் நல்ல சினிமாவி ரசிக்க தெரியவில்லை என்று கொந்தளித்து இருந்தார் .(காக்க காக்க வை force  எனும் பெயரில் வேறு ஒரு இயக்குனர் ரீமேக் செய்திருந்தார் அதுவும் தோல்வி அடைந்து தனி கதை ).கௌதமின் வாழ்க்கையில் ஒரு கறுப்பு  புள்ளி நடுநிசி நாய்கள் என்பதை மறக்க முடியாது 


கௌதமுக்கு நல்ல கொம்பி நேசன் சூர்யா.இரண்டு படங்களும் ஹிட் .உலகநாயகனுடனும் இணைந்து விட்டார் .இயக்குனருக்கு இலகுவில்  அடிபணியாத சிம்புவையும் முழுமையாக கட்டுப்படுத்தி சிம்புவுக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் .அஜித்துடன் ஏனோ தெரிய வில்லை முறுக்கி கொண்டிருக்கிறார். அண்மையில் விஜயுடன் இணையவிருந்த படமும் தடைப்பட்டு விட்டது .

மின்னலே ,vtv  வரிசையில் அடுத்த காதல் காவியம் தான்  நீதானே என் பொன் வசந்தம் .ஆரம்பத்தில் தனது படங்களுக்கு ஹாரிசை பயன்படுத்தியவர் அவருடனான உறவு விரிசலின் பின்A .R .ரஹ்மானை VTV யில் பயன்படுத்தி இருந்தார் .ரஹ்மானுடனும் எதோ பிரச்சினை எழவே  NEP இல் இசை ஞானி யுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து இருக்கிறார் .

இளையராஜா 

கௌதமின் படங்களில்  பாடல்களே கதை பேசும் .பாடல்களுக்கு விசுவல் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான் .அந்த வகையில் இசையுலகின் ராஜாதி ராஜாவான இளையராஜா அண்மைக்காலமாக இசையில் பெரிதாக சோபிக்கவில்லை என்ற விமர்சனங்களை சந்தித்து வந்தார் .கௌதமின் படத்துக்கு இசை என்பதால் ராஜா என்ன செய்ய போகிறார் என ஓட்டுமொத்த  திரை உலகமும் பாடல்களை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள் .வெகு விமரிசையாக  பாடல்களும் வெளியிட்டாச்சு 



எனக்கு இசை என்றாலே என்னவென்று தெரியாது .இசையின் நுணுக்கங்களோ, புலமையோ ,இசையை பற்றி அடிப்படை அறிவோ எதுவும் தெரியாது .ஆனால் இசையை ரசிக்க தெரியும்.அது நல்லாய் இருக்குஇது சரியில்ல  இதை குறைத்து இருக்கலாம்அப்பிடின்னு வாய்க்குள் நுழையாத இங்கிலீஷ் வோர்ட்ஸ் பயன்படுத்தி விமர்சனம் பண்ண தெரியாது .அடிப்படையில் இசையில் நானும் யாருக்கும் ரசிகன் கிடையாது .எனக்கு பிடித்த பாடல்களை விரும்பி கேட்பேன் .அந்த வகையில் இந்த NEP பாடல்களும் பிடித்திருக்கு .இந்த 8 பாடல்களிலும்  இளையராஜா பாடிய வானம் மெல்ல ரொம்ப பிடிச்சிருக்கு ,சாய்ந்து சாய்ந்து ,காற்றை கொஞ்சம் ,என்னோடு வா வா என்ற வரிசையில் இருக்கு மை பாவரைட்ஸ் .



எனினும் விஜய் அஜித் படங்கள் வெளியாகும் போது  கிளம்பும் எதிர்மறை விமர்சனங்கள் போல ராஜாவை பிடிக்காத பலரால் இணையத் தளங்களில் போலி பிரச்சாரம் செய்யப் பட்டது .நல்ல புத்தகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை தானே சிறகு முளைத்து பறக்கும் என்று ஒரு எழுத்தாளர்  சொன்னது போல இந்த பாடல்களும்  பறக்க தொடங்கி விட்டன .கெளதம் படங்களிலே விசுவல்ஸ் தான் பாடல்களை இன்னும் எழுப்பும் .VTV நல்ல உதாரணம் பாடல் வெளிவந்த புதிதில் பாடல்கள் பலருக்கும் பிடிக்க வில்லை ரஹ்மான் சொதப்பி விட்டாரே என இசையே மொழியாய் வாழும் நண்பர்கள் கூற கேட்டுள்ளேன் .எனினும் படம் வெளிவந்த பின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தது வரலாறு .என்னை பொறுத்த வரை  கெளதம் படத்துக்கு நாங்கள் எதிர்பார்த்த இசையை வழங்கியிருக்கிறார் இசைஞானி .

ஜீவா 

இளைய தலைமுறை முன்னணி நாயகர்களில் ஒருவர் .விஜய்,அஜித் போட்டியில் சூர்யா எப்படி இருக்கிறாரோ அதே போல் சிம்பு ,தனுஷ் போட்டியில் ஜீவாவை  குறிப்பிடலாம் .எந்த பாத்திரத்துக்கும் பொருந்த கூடியவர் என சக நண்பர் ஜெயம் ரவியாலேயே புகழப்பட்ட ஜீவா ராம் ,கற்றது தமிழ் ,ஈ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் .எனினும் ஜீவாவுக்கு  பிரேக் கொடுத்த படம் என்றால் அது கோ தான் .அதன் பின் அவரின் மார்கெட் ஏறி விட்டது . கோ தந்த மகத்தான வெற்றி நண்பன் பிளாக் பஸ்ட்டர் என்பன இடையில் வெளி வந்த ரௌத்திரம், வந்தான் வென்றான் தோல்விகளை மறைத்து  விட்டது  .எனினும் முகமூடி ரிசல்ட் உம் பாதகமாக அமைய கூடிய வாய்ப்பு இருக்கிறது .எது எவ்வாறாயினும் nep கெளதம் படம் என்பதால் இயக்குனரின் எண்ணத்தை  அப்படியே பிரதிபலிப்பார் ஜீவா .

சமந்தா  



NEP  trailor வெளியாகி 45 மணி நேரத்துள் அரை மில்லியன் வியுஸ் தாண்டி முன்னைய பில்லா-2 இன் சாதனையை முறியடித்து இருக்கிறது .நான் இதை பதிவு செய்யும்  போது 1.3மில்லியன்  தாண்டி விட்டது இதற்கு காரணம் கெளதம் ,ராஜா,ஜீவா ஆகியோரை தாண்டி இப்போது இளைஞர்களை ஆக்கிரமித்திருக்கும் கனவு கன்னி சமந்தா தான் .நடிகர்களை போல் நடிகைகள்  தமிழ் சினிமாவில் நீடித்து இருக்க முடியாது .அந்த வகையில் இப்போது சமந்தா புராணம் தான் பாடுகிறார்கள் இளைஞர்கள் .கௌதமின் ஆஸ்தான கதாநாயகியான சமந்தா (vtv நந்தினி ,தெலுங்கு ஜெஸ்சி ,ஹிந்தியிலும் ஜெஸ்சி  )இதிலும் கொள்ளை அடிப்பார் என்பது திண்ணம் .

சந்தானம் 
இவர்களை விட அண்மைக்காலமாக தமிழ் சினிமாவின் டிராவிட் ஆக மாறியுள்ள சந்தானம் இருப்பது பலம் .ஆனால்  கெளதம் விளையாடுவதால் டிராவிட் இன் பொறுப்பு பெருமளவில் குறைக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன் .

நீதானே  என் பொன்  வசந்தம் மகத்தான வெற்றி பெற படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் 

Post Comment

Monday, September 3, 2012

தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார்? -3

தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார் என்பது ஒரு தொடர் பதிவு ஆகும்.இதன் முன்னைய பதிவுகளை படிக்க ....
தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார் ?.
தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார் -2?.

நினைத்தேன் வந்தாய்  

இயக்குனர் செல்வபாரதி இதுவரை எட்டு படங்களை இயக்கி உள்ளார் .அவற்றில் மூன்று படங்கள் விஜய்க்கு .அந்த மூன்றுமே ரீமேக் படங்கள் தான் .இரண்டு படங்களை ஏற்கனவே பார்த்து விட்டோம் .1998 ஏப்ரல் வெளியீடாக நினைத்தேன் வந்தாய்     அல்லு அரவிந்த் தயாரிப்பில் ரம்பா ,தேவயானி ,மணிவண்ணன் மற்றும் பலர் நடிப்பில் தேவாவின் இசையில் வெளிவந்தது .பாடல்கள் அனைத்தும் பெரியளவில் ஹிட் ஆகின .படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது .
இது 1996 இல் வெளிவந்த பெல்லி சந்தடி (pelli sandadi) தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும் .K. Raghavendra Rao இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தீப்தி ,ரவளி நட்டிப்பில் கீரவாணி இசை அமைத்து இருந்தார் .

காதலுக்கு மரியாதை 
விஜயின் ஆல் டைம் பாவோரைட் படங்களில் ஒன்று .விஜய் நடித்த காதல் படம் என்பதை விட தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் படத்துக்கு உதாரணமாக எந்த காலத்திலும் சொல்லக்  கூடிய காவியம் .சங்கிலி முருகன் தயாரிப்பில் பாசில் இந்த படத்தை இயக்கியிருந்தார் .ஷாலினி ,சிவகுமார்,மணிவண்ணன்,ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு இசைஞானி இசை அமைத்து இருந்தார் .பாடல்கள் அனைத்தும் மெஹா ஹிட் ஆகின .

பூவே உனக்காக பிளாக் பஸ்ட்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட விஜய் இந்த பிளாக் பஸ்ட்டர் படத்துக்கு பின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்த முடிந்தது .அத்துடன் அந்த வருடத்துக்கான தமிழ் நாட்டின் சிறந்த நடிகருக்கான பிலிம் fare விருதையும் வென்றார் .இந்த படத்திதை தயாரித்த சங்கிலி முருகனுக்காக அண்மையில் தனது 50 வது படத்தை தயாரிக்க சந்தர்ப்பம் வழங்கியிருந்தார் விஜய் .அது கருவாடானது வேறு கதை .இந்த படத்தின் வெற்றிக்கு பின் இதே கூட்டணி மீண்டும் 2000 ஆம் ஆண்டு கண்ணுக்குள் நிலவு படத்தில் இணைந்தனர் .விஜயின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டாலும் கொமேர்சிய்ல் தோல்வி அடைந்தது .
காதலுக்கு மரியாதை படத்தின் ஒரிஜினல்பாசில் இயக்கிய படம்தான் .அதே ஆண்டு மலையாளத்தில் அணிதிபிரவு எனும் பெயரில் வெளிவந்தது  குஞ்சகோ போபன் கேரோவாக நடித்து இருந்தார் .இங்கேயும் ஹீரோயின்  ஷாலினி தான் . ஔஸெப்பசந் இசை அமைத்த இந்த படம் மலையாள சினி வரலாற்றில் மிகப் பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக திகழ்கிறது .

இளைய தளபதி விஜய் நடித்த் முதல் ரீமேக் படம் காதலுக்கு மரியாதை .அவரின் காரியரில் ஒரு முக்கியமான படமாக இருந்து அவருக்கு ஒரு அந்தஸ்தை தேடி தந்தது .

சரி விஜய் நடித்த ரீமேக் படங்கள் அனைத்தையும் பார்த்து விட்டோம் .மொத்தம் 13 படங்கள் .அவற்றில் 10 வெற்றி .காதலுக்கு மரியாதை ,கில்லி ,போக்கிரி,வேலாயுதம் ,நண்பன் பிளாக் பஸ்ட்டர் படங்கள் 
பத்ரி .பிரண்ட்ஸ் ,காவலன் ,காதலுக்கு மரியாதை ஆகிய படங்களின்  ஒரிஜினல் அந்தந்த இயக்குனரின் படங்களே .

ரீமேக் சூப்பர் ஸ்டார் 

சரி தலைப்புக்கு வருவோம் தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் விஜய் என்ற முடிவுக்கு வர வேண்டுமெனில் அவர் நடித்த ரீமேக் அல்லாத படங்களை பற்றியும் சிறிது ஆராய வேண்டும் .பூவே உனக்காக விஜயின் முதல் பிளாக் பஸ்ட்டர் விஜயை தமிழ் சினிமாவுக்கு இனங்காட்டிய படம் அது ரீமேக் இல்லை .துள்ளாத மனமும் துள்ளும் ,குஷி திருமலை திருப்பாச்சி சிவகாசி ஆகிய பிளாக்  பஸ்ட்டர் களும் ரீமேக் இல்லை .ஆகவே ரீமேக் படங்கள் மட்டுமே விஜய்க்கு கை கொடுத்தன என்று சொல்ல முடியாது.விஜயின் 53 படங்களில் 13 ரீமேக் அவற்றில் 10 ஹிட் .ஆக மற்றைய 40 படங்களில் வெற்றி சதவீதம் குறைவுதான் .விஜயின் காரியரில் ரீமேக் படங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன .அவர் தமிழ் சினிமாவில் முதன்மையான நடிகர்களில் ஒருவராக தொடர்வதற்கு இவை பெரிதும் துணை புரிந்துள்ளன .நான் முதலே சொன்னபடி ரீமேக் படங்களின் வெற்றி வாய்ப்பு 50 வீதம் ஏற்கனவே உறுதிப் படுத்தப்பட்ட போதும் படத்தை வெற்றி பெற செய்வதற்கு 50 வீதம் உழைக்க வேண்டும் அந்த உழைப்பை விஜய் செவ்வனே செய்து .இருக்கிறார் அதுதான் அவர் அதிகளவில் ரீமேக் படங்களை தெரிவு செய்ய உந்து சக்தியாக  இருக்கிறது .

அண்மையில் ..
விஜயின் கடைசி 10 படங்களில் 4 ரீமேக் படங்கள் .அவற்றில் 3 பிளாக் பஸ்ட்டர் ஆகியுள்ளன .ஏனைய 6 படங்களில் சிறப்பு  தோற்றத்தில் நடித்த பந்தயத்தை விட்டால் குருவி ஆவெரேஜ் (அதிலும் சில காட்சிகள் ராஜ்மௌலி யின் சத்ரபதி படத்தில் உருவப்பட்டவை ) வேட்டைக்காரன் தவிர  ஏனைய  3 படங்களும்  படுதோல்வி. கடைசி  3 படங்களும்  ரீமேக் மூன்றும் வெற்றி .

இந்த புள்ளிவிபரமே போதும் விஜய் ரீமேக் படங்களை தெரிவு செய்வது ஏன் என்பதை விளக்க ..

சரி விஜயின் அத்தியாயம் இதோடு முடிகிறது .தனிய இவரை பற்றி ஆராய்ந்து விட்டு இவருக்கே பட்டத்தை கொடுப்பது அழகல்ல 
அடுத்த அத்தியாயத்தில் .ரீமேக் படங்களில் அதிகளவில் நடித்த இன்னொரு நடிகருடன் ...................

Post Comment

Saturday, September 1, 2012

முகமூடி -சோடாமூடி யா




நான் ஒரு மசாலா ரசிகன் எனக்கு தமிழ் சினிமாவை விட்டால் ஒன்றும் தெரியாது இப்பதான் தெலுங்கு ,ஹிந்தி என்று படங்களை தேடி பார்க்கிறேன் .உலக சினிமா  என்றால் என்னவென்றே தெரியாது .அதே காரணத்தால் உலக சினிமா இயக்குனர் மிஷ்கினும்  அவ்வளவு பரிச்சயம்  இல்லை எனக்கு .சித்திரம் பேசுதடி ,அஞ்சாதே ,நந்தலாலா,யுத்தம் செய் வரிசையில்  5 வது படம் முகமூடி உலகப் படங்களை காபி அடிக்கிறார் என்ற பலத்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பவன்தான் முகமூடி . ஆங்கிலத்தில் வரும் சூப்பர் ஹீரோ படங்களையே நான் பார்ப்பதில்லை .அதைவிட ஏற்கனவே தலைவர் இந்த சூப்பர் ஹீரோ விலாட்டை முகமூடி போட்டு  வேலாயுதத்திலும் போடாமல் குருவியிலும் செய்த படியாலும் அதை விட இதிலே ஜீவா  புதுசா புடுங்குவதட்கு ஆணிகளே இல்லை என நான் கருதியதாலும்  ஒரு தடவ முடிவு எடுத்தா என் பேச்ச நானே கேக்க மாட்டன் என்பதாலும் முகமூடி பார்க்கும் எண்ணமோ பார்க்காமல் விமர்சனம் எழுதும் என்னமோ இருக்கவில்லை .பிறகு ஏன் இந்த  இப்பிடி மொக்கை போடுறாய் என்று உங்க மைன்ட்  வாய்ஸ் கேட்பது புரிகிறது.
 இலங்கையில் facebook  இல் அண்மைக்காலமாக அனைவரையும் கவர்ந்துபிரபலமாக இருக்கும் என்னுடைய தோழர் Iroshan Puviraj (Idiott Irosh).அவர்கள் முதல் தடவையாக எழுதிய விமர்சம் இது அவரது அனுமதியோடு இங்கு பதிகிறேன் .படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் முகமூடி சோடாமூடி யா 


நீண்ட நாட்களாக பெரிய படங்கள் எதுவும் வராததால் நம்மள காணல்லயேன்னு எங்க ஊர் தியேட்டர்காரன் கவலபடகூடாது என்ற நல்ல நோக்கத்துக்காக முகமூடி பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவுசெய்து இருந்தேன். இந்த வருடம் வந்த பெரிய நடிகர்களின் சகுனி,பில்லா-2 போன்ற படங்கள் தந்த முதல் நாள் SHOW தந்த அனுபவங்களாலும், “படத்துக்கு அவ்ளோ பெரிய எதிர்பார்ப்போடு போகாதீங்க ஒரு சாதாரண சூப்பர் ஹீரோ கதையை நம்ம ஊருக்கு ஏற்றமாரி எடுத்து இருக்கன்,BAT MAN,SUPER MAN,ராணி காமிக்ஸ் மாயாவி போன்ற சூப்பர் ஹீரோக்களின் இன்ஸ்பிரேசன் தான் முகமூடி என்ற மிஷ்கினின் தைரியமான ப்ரோமேஷனும் கொஞ்சம் எதிர்பார்ப்பை குறைச்சு ஒரு சாதாரண படத்துக்கு போற பீலிங்க எனக்குள்ளயே உருவாக்கிட்டு நெஞ்ச திடப்படுத்திட்டு படம் பார்க்க போனேன்.அந்த சின்ன எதிபார்ப்பையும் நிறைவேர்த்திச்சா என்றால் இல்லை என்று பச்சையாக சொல்லமாட்டேன்.
முகமூடி படம் மிஷ்கினோட இயக்கத்தில்,யூ ரீ.வி தாயரிப்பில் வெளியிடப்பட்டிருக்கு.
படத்தோட கதைன்னு பார்த்தா ஜீவா ஒரு குங்பூ மாஸ்டர்ட சிஷ்யன்.வழமை போல ஹீரோவ விட பர்சனாலிட்டி குறைஞ்ச 4 பசங்க தண்ணி அடிச்சுட்டு ஊட்ல தண்ட சோறுனு போர்வாங்கிட்டு
கோவிச்சுக்கிட்டு மொட்டமாடில இருக்கிற அவரோட தாத்தா ரூமில தங்குற ஒரு ஆளு.
அவருக்கு ஒரு ஆளு அதான் நம்ம ஹீரோயினு பூஜா ஹெக்டே. அவங்க அப்ப போலீஸ் அதிகாரி நாசர்.இடையிடையே சில கொள்ளைகள் நடக்க போலீஸ் அலேர்ட் ஆகி நாசர கேஸ காண்டில் பண்ண உடுறாய்ங்க.போலீஸ் அதிகாரி நாசரை திருட்டு கும்பலை சேர்ந்தவங்க சுட அந்த டைம் காதலிய இம்பிரஸ் பண்ண வந்த ஜீவா மாட்டிக்கிறார்.போலீஸ் ஜீவாவ துரத்த இடையில் தன் நண்பனையும் பறி கொடுக்கிறார்.கொலைப்பழியிலிருந்து தப்பிக்கவும் தன் காதலியிடம் தான் அவன்(கொலைகாரன்) இல்லை என்று நிருபிக்கவும்,தன் நண்பனைகொன்றவர்கள் யார் என்று கண்டிபிடித்து பழிவாங்கவும் முகமூடியை அணிகிறார் ஜீவா.அதுக்கப்புறம் என்ன நடந்தது என்பதை நீங்களே சொல்லிடுவீங்க நான் சொல்லி ஒரு பந்திய வேஸ்ட் பண்ணல.
ஹீரோ ஜீவா படம் முழுக்க தெரிகிறார்.தனது முழு உழைப்பை கொட்டி இருக்கிறார்.
சண்டைக்காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் சரி அழகாக தன் பங்கை செய்து இருக்கிறார்.
மேலதிகமாக பாய்கிறார்,பறக்கிறார்,ஓடுகிறார்.ஹீரோயின் பூஜா ஹெக்டே அழகாக தான் இருந்துச்சு ஆனா பொண்ணோட மூஞ்சி நினைவிலயே இல்ல ஏன்னா அது 2,3 சீன்கும்,ஒரு பாட்டுக்கும் வந்து போகுது.போலீஸ் அதிகாரியாக வரும் நாசர் வழமை போல கச்சிதமான தெரிவு.
குங்பூ மாஸ்டராக வரும் அந்த மனிதன் அனேக இடங்களில்அமைதியாகவும் நரேனுடன் மோதும் போது ஆக்ரோசமாகவும் தன்னை மாற்றி கைதட்டல் பெறுகிறார்.
மேலும் ஜீவாவின் நண்பர்கள் வழமை போல ஒருவர் உயிரைவிட மற்றவர்கள் காணாமல் போகின்றனர்.ஹீரோயிண்ட ”கதை சொல்லுங்க சித்தி”ன்னு கேட்கும் அந்த ரெண்டு பசங்களும் மனசில நிக்கிறாங்க.
மொட்டைமாடியில் இருக்கும் 2 தாத்தாகள், ஒரு கூன் முதுகு பையன் போன்றோர் எதற்காக அவ்ளோ பெரிய எந்திரன் ரஜினி ரோபோ தயாரிக்கிற போல ஒரு செட்ல இருக்கிறாங்க என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.அதன் பின் கிளைமாக்ஸில் அவர்கள் பண்ணும் கோவம் வாறபோல காமடிகளும் ரசிக்கவைக்கின்றன.படத்தில் காமடியன் இல்லை என்ற குறையை வில்லன் நரேன் கச்சிதமாக நிவர்த்தி செய்துள்ளார்.ஏதோ ஆணிய புடுங்குறபோலவே சுத்தியலும் கையுமா திருநங்கை போல சுத்துறதும் முறைச்சு பாக்கிறதும் கிளைமாக்ஸ்ல பயம்காட்டுறன்னு காமடி பண்றதுமா மனிதன் ஒரே ஜாலி தான்.இதுல மிஷ்கிண்ட வாயால ஹீரோக்கு நிகரான பாத்திரம்னு நரேன்னு ஒரு ப்ரொமோஷன் வேற!!!

முகமூடி படத்தில் மிகப்பெரிய ப்ளஸ்களில்ஒன்று சண்டைக்காட்சிகள்.
குங்பூ,புரூஸ் லீ என்ற வார்த்தைகள் படம் முழுக்க ஒலிப்பதால் அவற்றின் பெயரை கெடுக்காமல் உழைத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள் சண்டைப்பயிற்சியாளர்.மற்றயது கே இன் பின்னணி இசை. பிற்பாதியில் அனேக காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பின்னணி இசை அவற்றை தூக்கி கொடுத்து தூங்கியவர்களை எழுப்பி விடுகிறது
. ”புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”ன்னு ஆரம்பத்தில போட்டுட்டு படம் தொடங்கி 5 நிமிசத்தில மிஷ்கினின் குரலில் வரும் அந்த குடிகார பாடல் காமடியான கொடுமை.ஏற்கனவே பிரபலமான கார்க்கியின் வரிகளிலான “வாய மூடி சும்மா இருடா” பாடல் அருமை. காட்சி அமைத்த விதம் படு மொக்கைதனம்.
“மாயாவி மாயாவி”பாடல் படத்தில் இல்லாதது ஏமாற்றம்.
ஒளிப்பதிவு சத்யா.வழமை போல மிஷ்கினின் படத்தில் வருவது போல கமராவ தூக்கி அசைச்சு இருக்கார்.குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. படத்தொகுப்பு சண்டைக்காட்சிகளை விறுவிறுப்பாக காட்டியிருக்கிறது.இருப்பினும் பிற்பாதியில் சில கத்தரிகளை போட்டு இருந்து இருக்கலாம்.மொத்தத்தில் தொழிநுட்ப ரீதியில குறைகள் அவ்வளவாக இல்லை.
முற்பாதியில் ரசிக்ககூடியதாக அனேக காட்சிகள்,சிறந்த தொழிநுட்பம் இருப்பினும் இடைவேளைக்கு சிறிது நேரம் கழித்து வரும் மிக மொக்கையான காட்சி அமைப்பும் திரைக்கதையும் முகமூடியின் முகதிரையை கிளிக்கின்றன.மிஷ்கினின் வழமையா கமரா கோணங்கள்,குனிந்து கொண்டு பேசும் கேரக்டர்கள் ,லூசு போல நடந்து வந்து கன்னத்தில் அடிக்கும் ஹீரோ இவையெல்லாம் இயக்குனர் டச் என்று மிஷ்கின் நினைத்து ரசிகர்களின் கடுப்பை மேலும் மேலும் வாங்கி கொள்கிறார்..மேலும் அவ்ளோ கஷ்ரப்பட்டு உருவாக்கின புல்லட் ப்ரூஃப் முகமூடியிலும் பார்க்க மனசில நிக்கிறது ஜீவா ஆரம்பத்தில் அணியும் அந்த சூப்பர் ஹீரோ ட்ரெஸ் தான்.முகமூடி என்ற அந்த சூப்பர் ஹீரோவின்
சாகசங்களை கிளைமாக்ஸில் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே.இப்படிப்பட்ட சில
குறைகள்,லாஜிக் ஓட்டைகளால் படம் முடிந்து வரும் போது மொக்கை படம் பார்த்துவிட்டோமே என எண்ணத்தோன்றியது.
மொத்தத்தில் முகமூடி-மிஷ்கின் படமும் அல்ல, சூப்பர் ஹீரோ படமும் அல்ல ,படு மொக்கை படமும் அல்ல எப்டீன்னு நீங்களே தியேட்டர்ல பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
 Iroshan Puviraj (Idiott Irosh).

அப்புறம் தலைப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லீங்கண்ணா .நம்ம மிசுகினே ஒருபேட்டியில் சொல்லியிருக்கா  

Post Comment

Wednesday, August 29, 2012

மசாலா கபே -சுவாரசிய தகவல்கள் -2

பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!
மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம
் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!
மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!
சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!
கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.


taare zamen par 

நான் இதுவரை (படத்தை விளங்கி பார்க்க தொடங்கிய பின் ) பல படங்களில் கண் கலங்கி எமோசன் ஆகிய போதும் படம் பார்த்து கண்ணீர் விட்ட படங்கள் தெய்வ திருமகள் ,குசேலன் ஆகியவைதான் .ஆனால் இன்று ஆங்கில சப் டைட்டில் உதவியுடன் பார்த்த ஒரு ஹிந்தி படம் இந்த ல
ிஸ்டில் இணைந்து விட்டது .பேஸிக்கா நான் ஒரு மசாலா பட ரசிகன் என்பதால் எவ்வளவோ பேர் சொல்லியும் சந்தர்ப்பம் இருந்தும் இவ்வளவு நாட்களாய் மிஸ் பண்ணிட்டன் . உணர்வுகளை புரிந்து கொள்ள மொழி தேவை இல்லை என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம் .புலமை பரிசில் பரீட்சைக்கு பிள்ளைகளை 2 ம் ஆண்டில் இருந்தே தயார் படுத்தும் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் # ஐ நோ இட்ஸ் டூ லேட் , though ஹட்ஸ் ஆப் அமீர் சார்

##################################################

அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு வைப்பேன்!!! -> ப்ளூட்டோவில் உனை நான் கூடேற்ருவேன்!!!!# அப்பனை விஞ்சும் மகன்

சிறு வயதில் மதன் கார்க்கி .......

''உன்போல சிலர் இன்று உருவாகலாம், உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா?" அசல் படத்தில் வைரமுத்துவால் எழுதப்பட்ட வரிகள் சிவாஜியை புகழ்வதற்காக எழுதப்பட்ட வரிகள் என்று தெரியும் ஆனால் மறைமுகமாக கமலை ஏன் தாக்குகிறார் என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது .ஏனெனில் வைரமுத்து தான் கமலின் உற்ற தோழன் ஆயிற்றே .# காரணம் இயக்குனர் சரண் தான் .அப்படி என்ன பிரச்சினை சரணுக்கும் கமலுக்கும் உங்களுக்கு தெரியுமா ?


###################################################
உங்களுக்குத் தெரியுமா...?

உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேசியா ஆகும். இந்தோனேசிய நாடானது 1998 ம் ஆண்டில் இந்துசமயத்தின் கடவுளான விநாயகப்பெருமானின் உருவப்படத்தினை தனது நாணயத் தாளில் அச்சிட்டு பெருமைப்படுத்தியது.

விநாயகப்பெருமானின் உருவப்படம் அச்சிடப்பட்டது 20,000 ருபியா நாணயத்தாளிலாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


அமிதாப் பச்சன் 
ஹிந்தியில் விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள்... முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்!


அமிதாப் பச்சன் அவர்களின் தாயாரும் .....இந்திரா காந்தி அவர்களும் மிக நெருங்கிய தோழிகள் ! எவ்வளவு நெருக்கம் என்றால் .....30 வருடங்கள் முன்பு ஒரு படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடிக்கும்போது ...அமிதாப்பின் வயிற்ரை ஒரு இரும்பு மேசை கிழித்து .
..ஈரல் சேதமாகி ..உயிர் ஆபத்தான நிலையில் அவர் பெங்களூரில் இருப்பதை அறிந்த பிரதமர் இந்திரா காந்தி ...தனது அமெரிக்க பயணத்தை இடை நிறுத்தி ..பெங்களுர் பறந்து வந்தார் ! அது மட்டுமன்றி ..... ராஜீவ் அவர்களின் மணமகளாக சோனியா ....இத்தாலியில் இருந்து வந்தபோது ....அமிதாப் பச்சன் வீடு தான் மண மகள் வீடு !
.(thanks  to sathyan.s  sir ) 

RAJA IS BACK 
 அதிகம் எதிர்பார்க்கப்படும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது .''காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன் பூப்பறித்து கோர்க்க சொன்னேன் ஓடி வந்து உன்னை சந்திக்க''சுற்றும் பூமி நிற்க சொன்னேன் உன்னை தேடி பார்க்க சொன்னேன் என்னை பற்றி கேட்க சொன்னேன் எம் காதல் நலமா என்று''
பாடலுக்கான லிங்க் .

twitter  பொன்மொழிகள் 

 பிடித்தவர்களிடம் பிடிக்காததுபோல "நடிப்பது " சுலபமல்ல! பிடிக்காதவர்களிடம் பிடித்ததுபோல "நடப்பது" கடினம் அல்ல!

@ChittiTweeT_s: வீழ்வதற்கு என்றுமே அஞ்சியதில்லை நான் #மழை”

சுட்டது ! ஆண்களை கல் நெஞ்சக்காரர் என்கின்றனர் பெண்கள் - ஆம் கல்லில் எழுதிய எதுவும் எளிதில் அழிவதில்லை !


  சில சமயம் ஓரிஜினலை விட பிரதி நன்றாக இருக்கும்.# குழந்தை

வாழ்க்கையில் எதுவுமே புரியாமல் இருக்கும் போது, ஒரு இழவு வீட்டுக்கு சென்று வாருங்கள், வாழ்க்கையே தெளிவாக புரியும்# catched in twitter

: ஆண்ணின் பக்கத்து சீட்டில் பெண் உட்காருவது உரிமை என்றும்பெண்ணின் பக்கத்துசீட்டில் உட்காரும் ஆண்எருமை என்பது எத்தகைய சமூகம்?

நீ வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்பவர்கள் நீ வெற்றி பெற்றதும் விடா முயற்சி என்பார்கள் 

தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால்,அதுதான் உண்மையான தோல்வி 

: மற்றவர்களின் தவறுகளுக்கு ஜட்ஜ் ; தமது தவறுகளுக்கு லாயர் #மனிதன்

twitter  என்னை இல் தொடர இங்கே அழுத்துங்கள் ..




Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...