Monday, July 4, 2011

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் -3

இதன்  முந்தைய பகுதிகளை படிக்க 

தமிழ் சினிமாவின் சிறாந்த இயக்குனர் யார்-2
பாலா (11.07.1966)

பாலா ஐந்து படங்கள் .அள்ளிக்  குவித்த விருதுகள் ஏராளம்.விருதுப் பட இயக்குனர் என்றே அனைவரும் அழைக்கிறார்கள் .பாலாவின் பட்டறைக்குள் பட்டை தீட்ட்டப் படுவதற்காய் காத்து நிற்கும் நடிகர்கள் தாராளம் .கொமர்சியல் இல்லையெனில் படம் எடுக்க முடியாது என்ற எழுதப்படாத விதியை உடைத்து புது வழி அமைத்தவர் .பார்ப்பதற்கு சுள்ளான் போல் இருக்கிறார்.தனது படங்களால் சுளுக்கு எடுக்கிறார் .


பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராய் இருந்து அறிமுகமாகிய பாலாவின் முதல் படம் சேது .படத்தை எடுத்து நூற்றுக்கணக்கான  விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டியும் யாருமே படத்தை வெளியிட முன்வரவில்லை .படத்தின் சோகமான முடிவே அதற்கு காரணம் .மிகவும் கஷ்டப்பட்டு   எந்தவித விளம்பரமுமின்றி படத்தை வெளியிட்டார் .படத்தை பார்த்தவர்களின் நல்ல விமர்சனங்களின்  மூலம்(word of mouth) படம்  வெற்றிகரமாக  ஓடத்  தொடங்கியது  . படத்தை    பார்த்து  பலரும்  பாராட்டினார்கள்     .இறுதியில்  படம் மிகப்  பெரு வெற்றியை    பெற்றது .தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 12 வருடங்களுக்கு மேலாகியும்  அறியப்படாமல் இருந்த விக்ரம் எனும் நடிகனை தமிழ் சினியுலகமே தன பக்கம் திரும்பி பார்க்கும் படி செய்தார் பாலா.தனது முதல் படத்துக்கே தேசிய விருதை வாங்கிக் காட்டினார் பாலா. 

தனது அடுத்த படமான நந்தாவில் ஏனோ தானோ என சினிமாவில் சுழன்று கொண்டிருந்த சூர்யாவை பட்டை தீட்டி புது நடிகராக அனுப்பினார் .நந்தா திரைப்படம் சூர்யாவின் சினிமா பாதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது .நந்தாவின் பின்னரே சூர்யா தனக்கென ஒரு பாதை அமைத்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் .அடுத்த படமான பிதாமகன் அதில் நடித்த விக்ரமுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது .நான்காவது படம்மான நான்கடவுள் அவருக்கான திறமையை  வெளிப்படுத்தும் விதமாக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது .
இயக்கிய சகல படங்கள் மூலமும் விருதுகளை அள்ளிக் குவித்த பாலாவை போல் இன்னொரு இயக்க்னரை பெறுவது கடினம் .பாலாவை தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கருதுகின்றார்கள் .
பாலாவின் தனி சிறப்பு யாதெனில் யாருமே தொடாத சமூகத்தின் இருண்ட பக்கங்களை யதார்த்தபூர்வமாக படமாக்குவார்.பிதாமகனில் கஞ்சா கடத்தலையும், நான் கடவுளில் ஊனமுற்றவர்களின் வாழ்க்கையின் மறு பக்கத்தை தத்ருபமாக காட்டியிருப்பார் .


பாலா யதார்த்தமாக படம் எடுத்தாலும் வன்முறையை அதிகளவில் திணிப்பதை விமர்சிக்கிறார்கள்.ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு அதிக காலம் பிடிப்பதால் அதிக படங்களை தர முடியவில்லை .பாலாவின் படங்கள் தரத்தில் உயர்ந்து இருந்தாலும் வசூலில் எப்படி என்று பார்த்தால் சேது ,நந்தா நல்ல வசூலைபெற்று தந்தது .பிதாமகன் சமகாலத்தில் வெளியான கொமர்சியல் மசாலாவான திருமலைக்கு முன்னால் அடி பணிய வேண்டி வந்தது .நான் கடவுள் சொல்லிக் கொள்ளும்படி வசூலை  பெற முடியவில்லை .இந்த முடிவு பாலாவை சற்று யோசிக்க செய்தது .அதன் விளைவே அவன் இவன் தன்னுடைய யதார்த்தத்தை பேணிக் கொண்டும் நகைச்சுவை கலந்து தன்னுடைய வழமையான பாணியிலிருந்து சற்று விலகி எடுத்துள்ளார் .அவன் இவனுக்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் இப்போது வெற்றிகரமாக ஓடுகிறது .
எது எவ்வாறாயினும் பாலா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து விட்டார் என்பதே உண்மை. 
அடுத்த பதிவில் யார் சிந்தியுங்கள் ?


 who is the best director of tamil cinimaஎன்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள். 


உன்னிடம் இன்னொருவனைப் பற்றி குறை கூறும் ஒருவன், உன்னைப் பற்றியும் இன்னொருவனிடம் குறை கூறுவான். பகுத்தறிந்து பழகிக் கொள்.-fb

Post Comment

7 comments:

kanavugalkalam said...

SELVARAGAVAN.....

AMEER.....

kobiraj said...

கௌதமை கணக்கில் எடுக்கலையா?

Thusa said...

supperada

மாய உலகம் said...

அவர் படத்திலயே மிகப்பெரிய மைல்கல் நான் கடவுள்
பாலா தமிழ் சினிமாவின் பொக்கிசம் என்பது உண்மையே..... நண்பரே!
மேலும் அந்த வரிசையில்...
style-ஆக கூறும் விதத்தில் கௌதம் வாசுதேவ் மேனன்...
தனி பாதையில்... செல்வராகவன்.....ம்ம்ம்
M.Rajeshnedveera

மாய உலகம் said...

உன்னிடம் இன்னொருவனைப் பற்றி குறை கூறும் ஒருவன், உன்னைப் பற்றியும் இன்னொருவனிடம் குறை கூறுவான்.
உண்மையே...அனைவரும் உணர வேண்டிய ஒன்று...

kobiraj said...

நன்றிகள் (மாய உலகம்)M.Rajeshnedveera சார்.

kobiraj said...

நன்றி நண்பா துஸா

Related Posts Plugin for WordPress, Blogger...