Wednesday, July 6, 2011

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார்- முடிவு

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் என ஆராய முற்பட்டபோது என்னை கவர்ந்த இயக்குனர்களை பட்டியல்படுத்தி தந்துள்ளேன். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் என்றதொடரின் இறுதிப் பதிவாக இது அமைகிறது .   ஏற்கனவே முக்கியமான இயக்குனர்களை பற்றி பார்த்துள்ளதால் இந்த பதிவில் உள்ள இயக்குனர்களை பற்றி சுருக்கமாக மட்டுமே பதிந்துள்ளேன்   
இதன்  முந்தைய பகுதிகளை படிக்க
                                              தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார்-3 
தமிழ் சினிமாவின் சிறாந்த இயக்குனர் யார்-2   

கௌதம் வாசுதேவ் மேனன் February 25, 1973
  கௌதம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.மின்சார கனவு படத்தில் ராஜீவ் மேனனுக்கு  உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இளமையான காதல் கதையான படம் மிகப்பெரு வெற்றியை பெற்றது. தமிழில் அடுத்ததாக சூர்யாவை வைத்து எடுத்த ஆக்சன் படமான காக்க காக்க கௌதமை அடுத்த நிலைக்கு உயர்த்தியது.
2004-கர்ஷனா  (தெலுங்கு   )
வேட்டையாடு விளையாடு படமும் சிறந்த வெற்றியை பெற்றது. வாரணம் ஆயிரம் பலரின் பாராட்டை பெற்றது. அத்துடன் தேசிய விருதை பெற்று இவருக்கு புகழை தேடி தந்தது . பச்சை கிளி முத்துசரம் தோல்வியை தழுவியது .2010 இல் வெளி வந்த விண்ணைத்தாண்டி வருவாயா மூலம் பலரின் உள்ளங்களை கவர்ந்தார். மிக சிறந்த காதல் காவியமாக அமைந்தது .கடைசியாக வெளிவந்த நடு நிசி நாய்கள் படுதோல்வியை சந்தித்தது .பலரின் விமர்சனத்துக்கும் உள்ளனர் .அந்த படத்தின் பாதிப்பு நீங்கள் போடும் ஓட்டுகளில் தெரிகிறது .VTV மூலம் சம்பாதித்த  புகழை அநியாயமாக இழந்து விட்டார் போலவே தெரிகிறது .இப்போது VTV  ஐ   ஹிந்தியில் எடுக்கிறார். தமிழில் மீண்டும் புதுப் பொலிவுடன் VTV-2  ஐ   மிக சிறப்பாக  படமாக்குவார் என எதிபார்க்கிறேன்




 அமீர் (02 Apr 1966)



தமிழ் திரையுலகில் இயக்குனரையும் நடிகரையும் அறியப்படும் அமீர் சிறந்த இயக்குனர்களில் ஒருவராவார்.இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக சேது படத்தில் பணியாற்றினார்.2002 இல் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். மௌனம் பேசியதே பெரிய வெற்றியை பெற வில்லையாயினும் பலரின் பாரட்டுக்களை பெற்றது .அடுத்து 2005 இல் வெளிவந்த ராம் அமீரை பற்றி பேச வைத்தது. ஒரு மன நோயாளியாக ஜீவாவை நடிக்க வைத்து மிக சிறப்பான வெற்றியை பதிவு செய்தார்.சைப்பிரஸ் திரைப்பட விழாவில் ராம் திரைப்படம் விருது பெற்றது .அமிரை முன்னணி இயக்குனராய் தமிழ் சினிமாவில் அங்கீகரித்த படம்தான் 2007 இல் வெளியாகி பட்டைய கிளப்பிய பருத்தி வீரன் . சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என மட்டுமே அறியப்பட்ட கார்த்தியை சிறந்த நடிகரை பட்டை தீட்டினார்.பருத்தி வீரன் சர்வதேச அளவில் புகளை தேடி தந்தது .படத்தில் நடித்த அனைவரையும் சொந்த குரலில் பேச வைத்தார் அமீர் . சிறந்த படம் ,சிறந்த இயக்குனர் ஆகிய தென்  இந்திய filmfare விருதை படம் பெற்றது. சரவதேச அளவில் ஆசிய மற்றும் அரபு நாடுகளின் திரைப்பட விழாவான  Osian's Cinefan Festival of Asian and Arab சினிமாவில் சிறந்த படத்துக்கான விருதையும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருதையும் பெற்றுக்கொண்டது. 

அண்மைக்காலமாக நடிப்புத்துறையிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவன் எனும் படத்தை இயக்கி வருகிறார் .மூன்று படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் முன்னணி இடத்தை பெற்றுள்ளமை அவரின் தனித்திறமையை காட்டுகிறது.
செல்வராகவன்  (1977-06-06) 



இவரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் .   கஸ்தூரிராஜாவின் மகனான இவர் தகப்பனின் படமான துள்ளுவதோ இளமை படத்துக்கு கதை எழுதினார்.தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை முதலில் இயக்கினார். படம் வித்தியாசமான காதல் கதையில் சிறப்பாக எடுக்கப் பட்டிருந்தது. படம் வெற்றி பெற்றதோடு செல்வாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.அடுத்து சொந்த அனுபவங்களை வைத்து பின்னிய ரெயின்போ காலனியும் இவரை இனங்காட்டியது அத்தோடு முன்னணி இடத்துக்குக்கு அழைத்து சென்றது . புதுப்பேட்டை சொல்லிக் கொள்ளும் படி அமையவில்லை. மிகுந்த எதிபார்ப்புடன் சோழர் கால வரலாற்றை மையப்படுத்தி ஆயிரத்தில் ஒருவன்  படத்தை எடுத்தார். எதிர் மறை விமர்சனங்கள் வெளியானாலும் பலரும் பாராட்டும்படி இருந்தது.ஒரு தெலுங்கு படத்தையும் எடுத்துள்ளார்.இப்போது இரண்டாம் உலகத்தை தம்பியுடன் உருவாக்குகிறார்.
 இவர்களை விட சசிகுமார்,வெங்கட்பிரபு, k.v ஆனந்த்     போன்றோரும் முன்னணி இடத்தை  அடைய தகுதியானவர்கள்  தான் .


 who is the best director of tamil cinimaஎன்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள். 


உங்கள் ஓட்டு முடிவுகளுடன் மீண்டும் ஒரு பதிவில் இந்த பதிவுகளின் தலைப்புக்கான பதிலுடன் சந்திக்கிறேன் .இத்துடன் இந்த தொடர் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். 





Post Comment

1 comment:

Niroo said...

எங்கள் வோட்டு செல்வராகவனுக்கே

Related Posts Plugin for WordPress, Blogger...