Monday, September 26, 2011

விஜயின் அடுத்த கில்லி+ போக்கிரி அதுதான் டோக்குடு

எந்திரனுக்கு அடுத்து அதிக இடங்களில் வெளியாகும் சிறப்பை பெற்றுள்ளது வேலாயுதம் . வேலாயுதம் வெளியீட்டு திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .எதிர்வரும் தீபாவளி அன்று வெளியாகிறது.மங்காத்தா வின் வெற்றியை அடுத்து வேலாயுதம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது .இப் படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் ஐங்கரன் நிறுவத்தினர் வேலாயுதத்தை பிரமாண்டமாக வெளியிடுகின்றனர் வெளிநாடுகளில் மட்டும் 350-400 பிரிண்ட் போடவுள்ளனர் .கேரளாவில் 120 ற்கு மேற்பட்ட திரை அரங்குகளிலும் கர்நாடகா-70,மும்பை-40,புனே -30 இடங்களிலும் திரையிடப் படுவது இப்போது உறுதி செய்யப் பட்டுள்ளது .இங்கிலாந்தில் ரஜினியின் எந்திரனுக்கு அடுத்த படியாக அதிக இடங்களில்(26) திரையிடப் படுகிறது .தசாவதாரம் 16 இடங்களில் திரையிட பட்டது அப்போ தமிழ் நாட்டில் சொல்லவே வேண்டாம் ..behindwoods செய்தி குறிப்பு .
சீனாவிலும் முதற் தடவையாக 5 இடங்களில் வேலாயுதம் வெளியிடப் படவுள்ளது .

 வெளி நாடுகளிலும் விஜய்னா மாஸ் 


டோக்குடு

மகேஸ்பாபு நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போடுகிறது டோக்குடு திரைப்படம் .இதுவரை இருந்த மகாதீரா வின் வசூலை தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது படத்தின் ஒபெநிங் .தந்தை மகன் பாசத்தை செண்டிமெண்டாக வெளிப்படுத்தும் அக்சன்  படமான  இதை தமிழில் ரீமேக் செய்வதற்கு பலத்த போட்டி எழுந்துள்ளது .தமிழில் மூன்று முன்னணி நாயகர்கள் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் .அந்த முன்னணி நாயகர்களில் முன்னணியில் நிற்பது யார் .தனது கில்லி,போக்கிரி பிளாக் பஸ்ட்டர் களை ஒக்கடு ,போக்கிரி என மகேஷ் பாபு விடம் பெற்ற நம்ம தளபதி இந்த டோக்குடுவை விட்டு வைப்பாரா?. ம்ம் பிரபுதேவா ,தரணி,ராஜா ரெடி ஆகுங்க.விஜயின்  அடுத்த  கில்லி+ போக்கிரி அதுதான்  டோக்குடு  .
.
மயக்கிய மயக்கம் என்ன
அண்மையில் வெளி வந்த மயக்கம் என்ன திரைப் பட பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன .''நான் சொன்னதும் மழை வந்திடுச்சு'' மயக்குகிறது என்னை .மயக்கம் என்ன படத்தில் பாடல் ஆசிரியராகவும் மாறி இருக்கிறார் தனுஷ் .மயக்கம் என்ன திரைப்படமும் தீபாவளி போட்டியில் இணைந்துள்ளது.
ஏழாம் அறிவு பாடல்கள் வெளி வந்து  அம்புட்டுதான் வந்து இருகின்றன .அப்ப வேலாயுதம் சாதனையை முறியடிச்சு இருக்கணுமே .ஹரிஸ் +முருகதாஸ்+சூர்யா கூட்டணி படங்களின் பாடல்கள் எல்லாமே சூப்பர் டுப்பர்  ஹிட் அல்லவா.பாடல்கள் எப்படி என்று உங்களுக்குத்தான் தெரியுமே .எதிர்பார்த்த அளவுக்கு இல்ல .ஹரிஸ் அடுத்து தளபதியுடன் முதல் படம் .உங்களை ரொம்பவே நம்பி இறுக்கம் ஏமாற்றி விடாதீங்க ப்ளீஸ் .

மருத முரான்
சமுக பதிவுகளை எழுதி வந்த  ஈழத்து புகழ் பெற்ற பதிவர் மருத முரான் அவர்கள்    அண்மைக் காலமாக  சினிமா சம்பந்தமாகவும் அதிகம் எழுதுகிறார் .எனக்கு பிடித்த பதிவர்களில் ஒருவரான அவர் எனக்கு  தெரிந்து(நான்கு மாதங்கள் ) நம்ம தளபதியை பற்றி நல்ல விதமாக ஒரு பதிவு எழுதி உள்ளார் .

விஜய் விஞ்சிய பொடிகார்ட்! சல்லுவின் அலட்டலும் அற்புதம்!!.


மன்னார் பயணம்  
மன்னாருக்கு பல்கலைகழக  அலுவலாக சென்றமையால் சில நாட்களாக பதிவுலகில் வலம் வர முடியவில்லை .ஒரு சில பதிவுகளையே படிக்க முடிந்தது .இன்று முதல் மீண்டும் உங்கள் வலை தளங்களுக்கு வருகிறேன். .

மன்னாரில் ரசித்தவை 

மன்னாருக்கு கல்வி அலுவலாய் சென்றதால் அனைத்து இடங்களையும் தரிசிக்க முடியவில்லை .கிடைத்த சந்தர்ப்பங்களில் நான் பார்வையிட்ட இடங்களில் என்னை கவர்ந்தவை .  


ஆசியாவிலேயே அதிக விட்டமுடைய மரங்களில் ஒன்றாக கருதப் படும் பெருக்கு மரம் (BIOBAB TREE) மன்னார் பள்ளிமுனையில் அமைந்துள்ளது .1500களில்  அராபிய கடலோடிகளால் நடப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது .

 மன்னார் புனித லூசியா தேவாலயத்தின் அழகிய தோற்றம்


மாந்தை உப்பளத்தில் எடுக்கப் பட்டது

மன்னாரில் மனிசன்களை விட இவங்கதான் அதிகம் போல .


வாழ்த்துக்கள்  நண்பா 


யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த எனது நண்பன் இரோஷன் . என்னுடைய பாடசாலை காலத்தில் இருந்து இசையோடு ஒன்றியவர் .தீவிர இசை பிரியனான அவர் இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளார் . பாடல் மிகவும் அருமையாக ரசிக்கும்படி உள்ளது .இது அவர்களின் முதல் முயற்சி .தொடர்ந்தும் இதை விட சிறப்பாக பாடல்களை கொடுக்க வாழ்த்துகிறேன்.நீங்களும் ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் .
இசை -ஜீசஸ் யுவராஜ்-jesusyuvan@yahoo.com
குரல்,வரிகள் -இரோஷன் புவிராஜ்-pviroshan@yahoo.comPost Comment

48 comments:

Anonymous said...

வேலாயுதம் பற்றி அதிக தகவல்கள் அறிந்து வைத்துள்ளீர்கள் ....விஜயின் ரசிகரல்லவா ..


இன்னா பெரிய மரம் அது ..நான் இன்னமும் நேரில் பார்க்கவில்லை..சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும் ..பகிர்வுக்கு நன்றி பாஸ் ...

Anonymous said...

ம்ம் பாடல் கேட்டுக்கொண்டுள்ளேன் நன்றாக உள்ளது .. வாழ்த்துக்கள் அவர்களுக்கு

மதுரன் said...

விஜய்ன்னா சும்மாவா.. தளபதி நிச்சயம் ஒரு கலக்கு கலக்குவார்..

மதுரன் said...

பாடல் அருமையாக உள்ளது. ஜீசஸ் யுவராஜ்ஜின் தொடர்பு விபரங்கள் தரமுடியுமா

எனது மின்னஞ்சல் mathuran2002@yahoo.com

K.s.s.Rajh said...

எது எப்படியோ விஜயின் படம் வந்தால் நல்ல ஒரு கமர்சியல் படத்தை பார்க்கலாம்..ரஜனிக்குப்பிறகு ஹீரோக்களின் காமடியை நான் அதிகம் ரசிப்பது விஜயினுடைய காமடியைத்தன்..

சில விஜய் படங்கள் ஒரேமாதிரியாக இருப்பதுதான் அவரது படங்கள் விமர்சிக்கப்படுகின்றன மற்றும் படி..விஜயின் படங்களில் சிறந்த கமர்சியல் படங்களாக இருக்கும்..வேலாயுதமும் ஒரு நல்ல கமர்சியல் படமாக இருக்கவேண்டும்..பார்ப்போம்.

K.s.s.Rajh said...

உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள் எதிர்காலத்தில் சிறப்பாக வருவார்.

மைந்தன் சிவா said...

பதிவு கலக்குது!
விஜய் கலக்கிறார்..
இன்ட்லி என்னாச்சோ!

Anonymous said...

விஜய் ரசிகரல்லவா...ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது...கலக்குங்க..

ராகுல் said...

vijay is the next superstar...

உங்கள் பதிவு நல்லாயிருக்கு..... வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

விஜயும் கலக்குகிறார்... நீங்களும் பதிவில் கலக்குறீர்கள்...கலக்குங்க நண்பா

Powder Star - Dr. ஐடியாமணி said...

தீவிர விஜய் ரசிகன் போல! மன்னார் படங்கள் அருமை!

ஸ்ரீராம். said...

நிரூபன் தளத்தில் அறிமுகம் பார்த்து வந்தேன். சுவையான பதிவு. பாடிய நண்பருக்கு வாழ்த்துகள். நன்றாக இருந்தது.

kobiraj said...

கந்தசாமி.
''ம்ம் பாடல் கேட்டுக்கொண்டுள்ளேன் நன்றாக உள்ளது .. வாழ்த்துக்கள் அவர்களுக்கு''
நன்றிகள் .கட்டாயம் அவரை போய் சேரும்

kobiraj said...

மதுரன் .
''விஜய்ன்னா சும்மாவா.. தளபதி நிச்சயம் ஒரு கலக்கு கலக்குவார்..''
கலக்குறம் .ஜெயிக்கிறம்

kobiraj said...

''பாடல் அருமையாக உள்ளது. ஜீசஸ் யுவராஜ்ஜின் தொடர்பு விபரங்கள் தரமுடியுமா''
கண்டிப்பாக .உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் .அத்துடன் பதிவிலும் இடலாம் என எண்ணியுள்ளேன்

kobiraj said...

K.s.s.Rajh
''வேலாயுதமும் ஒரு நல்ல கமர்சியல் படமாக இருக்கவேண்டும்..பார்ப்போம்''.'
கண்டிப்பாக இருக்கும் .
''உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள் எதிர்காலத்தில் சிறப்பாக வருவார்.''
நன்றிகள் அவர் சார்பாக

kobiraj said...

மைந்தன் சிவா
'
'' பதிவு கலக்குது!
விஜய் கலக்கிறார்..
இன்ட்லி என்னாச்சோ''
நன்றிகள் .இன்ட்லி பிரச்சினை பண்ணுது

kobiraj said...

ரெவெரி

''விஜய் ரசிகரல்லவா...ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது...கலக்குங்க..''
நன்றிகள்

kobiraj said...

ராகுல்

''vijay is the next superstar...

உங்கள் பதிவு நல்லாயிருக்கு..... வாழ்த்துக்கள்''
நன்றிகள்

kobiraj said...

மாய உலகம்

''விஜயும் கலக்குகிறார்... நீங்களும் பதிவில் கலக்குறீர்கள்...கலக்குங்க நண்பா''
நன்றிகள்

kobiraj said...

Powder Star - Dr. ஐடியாமணி .

'' தீவிர விஜய் ரசிகன் போல! மன்னார் படங்கள் அருமை!''
நன்றிகள் .

kobiraj said...

ஸ்ரீராம்.
''நிரூபன் தளத்தில் அறிமுகம் பார்த்து வந்தேன். சுவையான பதிவு. பாடிய நண்பருக்கு வாழ்த்துகள். நன்றாக இருந்தது.''
நன்றிகள்

மருதமூரான். said...

ஆகா......! நன்றிங்க பிறோ.

நீங்கள் கூறுமளவுக்கு நான் காத்திரமான பதிவரா? நன்றிங்கோ.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

விஜய் படம் பற்றிய தகவல் சுவாரஸ்யம்,
மயக்கம் பற்றிய எச்சரிக்கைக்கு நன்றி.
மருதமூரான் பதிவு ஏலவே படித்துள்ளேன்.

மன்னார் படங்கள் சூப்பர்.

உடையும் உள்ளம் உனது.........


ரசித்தேன் பாஸ்...

Dr. Butti Paul said...

ரசிகர்களை தளபதி கைவிடமளிருந்தால் நல்லது. தலைவரும் இருப்பதால் நிச்சயம் வேலாயுதம் களை கட்டும். மன்னார் பற்றிய படங்கள் அருமை, அந்த மரம் பற்றிய தகவல்களும் அருமை. மன்னார் ஒரு ஊருன்னு புரிஞ்சுக்க முடியுது, அதுபற்றி ஒரு சிறிய குறிப்பு போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

மங்காத்தாடா said...

அனானி தொல்ல மறுபடியும் ஆரம்பிசுடுச்சு டோய்

http://spoofking.blogspot.com

கார்த்தி said...

சார் போன கிழமை என்னால் உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை. கடந்த கிழமை பூராகவும் விளையாட்டு வேறு வேலைகளில் சென்று விட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர்களின் தளங்களிற்கு வருகிறேன்.

மயக்கம் என்னவிவ் அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. வேலாயுதம் பெரிதாக ஹிட் ஆகும் என நான் எதிர்பாக்கவி்லை!

சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில!!
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல!! - தனுஷ்

அன்பு said...

மும்பையில் 40, பூனேயில் 30...????
என்னங்க காமெடியா இருக்கு...!!!

வைரை சதிஷ் said...

மாப்ள சூப்பர் மாப்ள

kobiraj said...

மருதமூரான்.
''ஆகா......! நன்றிங்க பிறோ.

நீங்கள் கூறுமளவுக்கு நான் காத்திரமான பதிவரா? நன்றிங்கோ.''
இல்லாமலா பின்னே .

kobiraj said...

நிரூபன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அண்ணா

kobiraj said...

Dr. Butti Paul

''ரசிகர்களை தளபதி கைவிடமளிருந்தால் நல்லது. தலைவரும் இருப்பதால் நிச்சயம் வேலாயுதம் களை கட்டும். மன்னார் பற்றிய படங்கள் அருமை, அந்த மரம் பற்றிய தகவல்களும் அருமை. மன்னார் ஒரு ஊருன்னு புரிஞ்சுக்க முடியுது, அதுபற்றி ஒரு சிறிய குறிப்பு போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.''
நான் மன்னாரை பற்றி அனநிவரும் அறிந்திருப்பார்கள் என்று நினைத்து விட்டேன் .இலங்கையின் ஒரு வட மாகாண மாவட்டம் தான் மன்னார்

kobiraj said...

கார்த்தி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

kobiraj said...

அன்பு

''மும்பையில் 40, பூனேயில் 30...????
என்னங்க காமெடியா இருக்கு...!!''
அப்பிடியா சொல்லவே இல்ல

kobiraj said...

வைரை சதிஷ்

'' மாப்ள சூப்பர் மாப்ள''
நன்றி மாப்ள

♔ம.தி.சுதா♔ said...

////வெளி நாடுகளிலும் விஜய்னா மாஸ் ////

சென்ற ஞாயிறு மீண்டும் ஒரு தடவை காவலன் பார்த்தேன். அலுக்கலப்பா... வேலாயுதம் அதை ஈடுகட்டுமா என எதிர்பார்ப்புள்ளது.

உப்பளப் படம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

துரைராஜ் said...

arumai nanpare...!!!

துரைராஜ் said...

arumai nanpare...!!!

விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றி....TM 8

kobiraj said...

♔ம.தி.சுதா♔
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

kobiraj said...

@துரைராஜ்
நன்றிகள்

kobiraj said...

விக்கியுலகம்
நன்றிகள்

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு நன்றி சகோ வாழ்த்துக்கள்.
ஓட்டெல்லாம் போட்டாச்சு .

M.R said...

அழகான கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பா

kobiraj said...

அம்பாளடியாள்
நன்றி

kobiraj said...

M.R
நன்றி

M.Shanmugan said...

மயக்கம் என்ன ஒரு பாடல் அண்ணனும் தம்பியும் சேர்ந்து கொல்றாங்க.

துஷ்யந்தன் said...

தளபதி பட்டையை கிளப்ப வாழ்த்துக்கள் நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...