Tuesday, September 20, 2011

சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?

ரஜினி காந்தின் வாழ்க்கை படமாக எடுக்க விருப்பதாகவும் அதிலே ரஜினி வேடத்துக்கு சல்மான் கான் நடிக்க விருப்பதாகவும் வெளியான தகவல் திரையுலக வட்டாரத்தில் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கி இருக்கிறது .தலைவர் ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாக வெளியிடப்படுவதை தாங்கள் விரும்பவில்லை எனவும் தங்களிடம் எவ்வித அனுமதியும் பெறப் படவில்லை எனவும் ரஜினியின் மகள் சௌந்தர்யா அறிவித்துள்ளார் .சல்மான்  கான் ரஜினி வேடத்தில் நடிப்பது குறித்து கேட்ட போது அவரை நெருங்கு வதற்கே  தனக்கு இன்னும் 20 வருடங்கள் தேவை என கூறியுள்ளார் .ஆக பயப்படும் படி எதுவும் இல்லை என தலைவர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

சல்மான் 
சல்மான் கான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த போடிகாட் திரைப்படம் பல சாதனைகளை முறியடித்து மாபெரும் வெற்றி ஈட்டியுள்ளது . இது உயர்ந்த முதல் நாள் வசூலை இவரின் முதல் படமான தபாங் ஐ முறியடித்து பெற்றுள்ளது , அத்துடன் ஒரு வாரத்துக்கான வசூலை 3இடியட்ஸ்  ஐ முறியடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .(விபரங்களுக்கு -bodyguard wikipedia )சல்மான் கான் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் இவரின் திரை வரலாற்றிலும் வெற்றி தோல்வி சகயம் .2008 இல்  தொடர்ந்து மூன்று தோல்வி படங்கள் கொடுத்த நிலையில் இவரின் சக நடிகர்களான அமீர்  கான்,ஷாருக் கான் ஆகியோர் கஜினி,ஓம் சாந்தி ஓம்  மூலம் வெற்றி களிப்பில் இருக்க இவருக்கு துணை புரிந்தது போக்கிரி .வான்டட் என்ற பெயரில் பிரபுதேவாவினால் தமிழில் இருந்து ரீமேக் செய்யப் பட்டது .ஆனால் மூலக் கதை தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி ஆகும் .மூன்று மொழிகளிலும் மெஹா ஹிட்  அடித்தது .
இப்போது மீண்டும் மூன்று மொழிகளில் வெற்றி பெற்ற படமாக போடி காட்  மாறியுள்ளது .இங்கு வித்தியாசம் என்னவென்றால் மூன்று மொழிகளிலும் ஒரே இயக்குனர் சித்திக் தான் .இப்படி ரீமேக் செய்யப்பட்ட எல்லா வெற்றி  படங்களும் வெளியிட்ட எல்லா மொழிகளிலும்வெற்றி பெறும் என்பது உண்மை அல்ல . குஷி திரைப்படம் தமிழில் பெரு வெற்றி பெற்றாலும் ஹிந்தியில் படு தோல்வி அடைந்தது .கிக்-தில்லாலங்கடி இன்னொரு உதாரணம் ஆகும் இப்படி நிறைய படங்களை சொல்லிக் கொண்டு போகலாம் .

தபாங் -ஒஸ்தி 

சரி சல்மான் கான் தமிழில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்து பெரு வெற்றி பெற்று உள்ளார் .இப்போ அவரின் வெற்றி படமொன்றை தமிழில் ரீமேக் செய்கிறார் young சூப்பர் ஸ்டார் .தபாங் சல்மானின் நடிப்பில் பல சாதனைகளை முறியடித்த படம் .அதை ஒஸ்தி என்ற பெயரில் தரணியை வைத்து  ரீமேக் செய்கிறார்.இப்போது தமிழ் சினிமாவில் வெற்றி தேவை என்போரில் முன்னணியில் இருப்பது (மங்காத்தா வெற்றி பெற்று விட்டது.(அப்ப வேலாயுதம் ?)  ). இவர்தான் .அத்தனைக்கும் இவர் தோல்வியில் துவண்டதால்  இந்த வெற்றியை எதிபார்க்க வில்லை .இவருக்கும் ஜீவாவுக்கும் ஆன பனி போரே காரணம் ,இந்த கதை வெல்லாது என இவரால் ஒதுக்க பட்ட கோ பெரு வெற்றி பெற அதே நேரத்தில்  வெளி வந்த வானம் அதன் முன்னால் கவிழ அத்துடன் இவருக்கு வர வேண்டிய கௌதமின் அடுத்த படமான நீதானே என் பொன்  வசந்தம் ஜீவாவை சென்றடைய இவரின் கடுப்பு இன்னும் அதிகமாகி விட்டது .அதனுச்ச கட்டம் தான்  தனது facebook இல் ஒஸ்தி படத்தில் தான் நன்றாக  நடித்து  இருப்பதாகவும் பலருக்கு இந்த படம் பதில் சொல்லும் எனவும்  இவர் போட்ட status . (சிம்பு நீங்க தல ரசிகராமே -ஓவர் confidence உடம்புக்கு ஆகாது )
சிம்புவை பொறுத்த வரை அவரின் மாஸ் நடிப்பு இன்றுவரை எடுபடவே இல்லை .விண்ணை தாண்டி வருவாயா,வானம் போன்ற படங்கள் சிம்பு மீது நல்ல பெயரை ஏற்படுத்தி யுள்ளது .இந்நிலையில் பக்கா மாஸ் படமான ஒஸ்தி சிம்புவுக்கு கை கொடுக்குமா? (இப்போதைய மாஸ் ஹீரோ தனுஷின் மாப்பிளை, ,வேங்கை பர்ர்த்த பிறகுமா ?) 

வேட்டை மன்னன் trailor வெளி வந்த போது முக புத்தகத்தில் நான் பகிர்ந்தது .

''அப்பவே சொன்னான் வானத்தை எப்பிடியாவது ஹிட் ஆக்குங்க என்று .கேட்டால்தானே .இனி நீங்கள் இதை எல்லாம் அனுபவிக்கத்தான் வேண்டும் .''

   மம்பட்டியான்-சிம்பு 
தியாகராஜன் நடிப்பில் அனைவரையும் கவர்ந்த மம்பட்டியான் மகன் பிரசாந்த் நடிப்பில் ரீமேக் செய்யப் படுவது அனைவரும் அறிந்ததே .விரைவில் வெளிவரவிருக்கும் படத்தில் சின்னதல ஒரு பாட்டு பாடி இருக்கிறார் .சூப்பர் .மிக அருமையாய் இருக்கிறது .பாட்டும் ரீமேக் தான்.(காட்டு வழி போற )..பாட்டிலும் சின்ன தல வருகிறார் .எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது .(அப்ப உங்களுக்கு ) .பாடல் வெளியீட்டு விழாவிலும் நேரில் பாட உள்ளாராம் .வாழ்த்துக்கள் சின்ன தல .

key 1- எல்லாம் சரி அப்ப தமிழில் இருந்து தமிழில் ரீமேக் எல்லாம் ஜெயிச்சிருக்கா #தல rocks

key-2 ரீமேக் பற்றி எல்லாம் சொல்லிட்ட .ரீமேக் மன்னனை பற்றி ஒன்றுமே சொல்லலையே #தளபதி rocks

கிரிக்கெட்  
 
சரி கிரிகெட் பதிவுக்கு(தோனியால் ஏன் முடியவில்லை) . நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி .இப்போது நடை பெற்று கொண்டிருக்கும் இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளின் போது இலங்கையின் சகலதுறை வீரரும் இலங்கை அணியில் அண்மைக்காலமாக என்னை கவர்ந்தவருமான அஞ்சேலோ மத்தியுஸ் தனது கன்னி டெஸ்ட் சதத்தை பெற்றுள்ளார் .அவருக்கு வாழ்த்துக்கள்

சரி பிடித்து இருக்கா .பிடித்திருந்தால் ஓட்டு போடலாமே .

Post Comment

37 comments:

Ramani said...

புள்ளிவிவரங்களோடு சினிமாச் செய்திகளைக்
கொடுத்து அசத்திவிட்டீர்கள்
சுவாரஸ்யமான தகவல்கள்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

மதுரன் said...

தகவல்கள் அருமை

K.s.s.Rajh said...

தகவல் அருமை..மத்யூஸ்க்கு வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

சினிமாலா கலக்கல்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

பிரசாந்துக்கு இந்த படமாவது கை கொடுக்கட்டும், ஜெய்சங்கர் வேஷத்துல நடிச்சிருக்குறது யாரு....??? கவுண்டமணி கேரக்டர் வடிவேலு செய்வாரோ...???

சி.பி.செந்தில்குமார் said...

சினிமா பத்தி எனக்கே தெரியாத தகவல்களை சொல்லியிருக்கீங்க

Jana said...

கேள்விப்படாத சினிமா தகவல்கள் (ஜனநாயக கடமைகளை நிறைவேற்றியாச்சு)

kobiraj said...

Ramani
''புள்ளிவிவரங்களோடு சினிமாச் செய்திகளைக்
கொடுத்து அசத்திவிட்டீர்கள்
சுவாரஸ்யமான தகவல்கள்
தொடர வாழ்த்துக்கள்''
நன்றிகள்

kobiraj said...

மதுரன்
நன்றிகள்

kobiraj said...

K.s.s.Rajh
நன்றிகள்

kobiraj said...

MANO நாஞ்சில் மனோ
நன்றிகள்
''பிரசாந்துக்கு இந்த படமாவது கை கொடுக்கட்டும், ஜெய்சங்கர் வேஷத்துல நடிச்சிருக்குறது யாரு....??? கவுண்டமணி கேரக்டர் வடிவேலு செய்வாரோ...???''
கை கொடுக்க வேண்டும் என நானும் வாழ்த்துகிறேன் .ஜெயஷங்கர் வேடத்தில் யாரு தெரியல சார் ராஜ்கிரண் ஆய் இருக்குமோ ? .வடிவேலு நீண்ட நாட்களின் பின்னர் பார்க்கப் போகிறோம் கவுண்டரை ஈடு செய்வாரா தெரியவில்லை

kobiraj said...

சி.பி.செந்தில்குமார்
''சினிமா பத்தி எனக்கே தெரியாத தகவல்களை சொல்லியிருக்கீங்க''
நன்றிகள் சார்

kobiraj said...

Jana
நன்றிகள்

நிரூபன் said...

சினிமாத் தகவல்களோடு, மத்தியூஸின் லேட்டஸ் செஞ்சரித் தகவலையும் கொடுத்து அசத்தியிருக்கிறீங்க.

அஞ்சா சிங்கம் said...

ஒரே சினிமா மயமா இருக்கு ...............
உங்கள் தளத்தில் பாலோயர் விட்ஜெட் வேலை செய்யவில்லை எப்படி தொடர்வது?

Anonymous said...

நான் இந்த பதிவுக்கு நேற்று கமெண்ட் போட்ட நினைவு ,,,எங்க காணோம் ..எங்கயாச்சும் மாறி போய்விட்டுதோ ...?

Anonymous said...

இந்த பதிவு நேற்று தானே பிரசுரிந்திருந்தது.. இன்று எண்டு காட்டுது ..அவ்வ்வ் மீண்டும் பிரசுரித்துள்ளீர்களா ?

kobiraj said...

ஆமாம் .மைந்தன் சிவா ஏற்கனவே போட்ட கிரிக்கெட் தகவலை நீக்கி நம்ம maththews பற்றிய செய்தியையும் போட்டேன் .அப்புறம் நேற்று வைத்த தலைப்பு சரியில்ல போல ஒரு சனமும் இல்ல .ஆனா இண்டைக்கு அள்ளுது .நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி .தவறுக்கு மன்னிக்கவும்

kobiraj said...

கந்தசாமி
நேற்றைய பதிவை அளித்து விட்டேன் உங்கள் கமெண்ட் அதிலேதான் வந்தது தவறுக்கு .மன்னிக்கவும்

kobiraj said...

அஞ்சா சிங்கம்
இப்போது பாருங்கள் .எனக்கு தெரிகிறது .அப்புறம் வருகைக்கு நன்றி

M.R said...

அழகான பட விமர்சனம்

வோட்டு போட்டாச்சி நண்பரே

kobiraj said...

M.R நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

கலக்கல் சினிமா தகவல்கள் மாப்ள!

Anonymous said...

என்னமோ போங்க!! ஆனா ஜீவாவுக்கும் சிம்புகும் ஆன சண்டைல, ரௌத்திரம் வந்தான் வென்றான் போன்ற படங்களால சிம்பு கொஞ்சம் அமைதி ஆக்கி இருப்பாருன்னு நெனைக்கிறேன்!!

Anonymous said...

அப்ப வானம் ஹிட்டு படமில்லையா? னா எதோ ஹிட்டுன்னு நெனச்சேன்,, வழமைபோல அந்த படமும் சந்தானம் காமெடிக்காக பார்த்தோம், ஆனா நல்ல இருந்துச்சு!!

Anonymous said...

ஆமாங்க ஒங்க நாட்டின் ஆஞ்சலோ மத்திவ்ஸ் சிறந்த வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர்!! வாழ்த்துக்கள்!!
அவருக்கு கேப்டன் பதவி கொடுப்பாங்களா?

மருதமூரான். said...

ம்ம்ம்.

பதிவுலகில் சீக்கிரமாக வளர்ந்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்!

KANA VARO said...

சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?//

இதையே தான் நானும் கேக்குறான்.

உங்களை தொடர்ந்து போலோ பண்ணுறன்.

வைரை சதிஷ் said...

செய்திகள் சூப்பர்

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

kobiraj said...

விக்கியுலகம்
''
கலக்கல் சினிமா தகவல்கள் மாப்ள!''
நன்றிகள்

kobiraj said...

மொக்க ராசு மாமா

''என்னமோ போங்க!! ஆனா ஜீவாவுக்கும் சிம்புகும் ஆன சண்டைல, ரௌத்திரம் வந்தான் வென்றான் போன்ற படங்களால சிம்பு கொஞ்சம் அமைதி ஆக்கி இருப்பாருன்னு நெனைக்கிறேன்!!''

அந்த படங்கள் எப்புடி போகும் என்று ஜீவாவுக்கே முதலே தெரிந்திருக்கும்.இனி அவருக்கு பொன் வசந்தமும் ,நண்பனும்தான்

kobiraj said...

''ஆமாங்க ஒங்க நாட்டின் ஆஞ்சலோ மத்திவ்ஸ் சிறந்த வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர்!! வாழ்த்துக்கள்!!
அவருக்கு கேப்டன் பதவி கொடுப்பாங்களா?''

அவருக்கு இபூஹு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான்

kobiraj said...

மருதமூரான்.

'' ம்ம்ம்.

பதிவுலகில் சீக்கிரமாக வளர்ந்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்!''
நன்றிகள்

kobiraj said...

KANA VARO
நன்றிகள்

kobiraj said...

வைரை சதிஷ்
நன்றிகள்

"ராஜா" said...

//இப்போது மீண்டும் மூன்று மொழிகளில் வெற்றி பெற்ற படமாக போடி காட் மாறியுள்ளது

ஜரூகண்டி .. ஜரூகண்டி .. ஜரூகண்டி ...

சுறா படத்தை சல்மான் ரீமேக் செய்யாமல் இருக்க வேண்டும் ...

Anonymous said...

சி.பி.செந்தில்குமார் said...
சினிமா பத்தி எனக்கே தெரியாத தகவல்களை சொல்லியிருக்கீங்க...

-:)

Related Posts Plugin for WordPress, Blogger...