தமிழ் நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கும் திரையுலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அரசியலில் கொடி கட்டிப் பறந்த பலரும் திரைப்பட துறை சார்ந்தவர்கள் தான்.M.G.R,கலைஞர்,ஜெயலலிதா என அந்த வரிசை நீளமானது .அதற்காக சினிமாவில் சிறந்து விளங்கியவர்கள் எல்லாம் அரசியலில் பிரகாசித்தார்கள் என்று சொல்ல முடியாது .இதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நல்ல உதாரணம் தேர்தலில் ஒருமுறை போட்டி இட்டும் தோல்வி அடைந்ததால் அந்த பக்கமே எட்டி பார்க்கவில்லை ..அந்த காலத்தில் மக்களிடையே படிப்பறிவு குறைவு திரைப்படங்களில் நல்லவராக ,அனைவருக்கும் உதவி செய்பவராக நடித்தால் அவர் உண்மையிலேயே அப்படியானவர் என்ற முடிவுக்கு வருவார்கள் அதுவே வெற்றிக்கு காரணம் என்று ஒரு சாரார் சொல்லுவதையும் கேட்டுள்ளேன் .ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை மக்களிடையே அறிவு பெருகி விட்டது .நன்கு சிந்தித்தே தலைவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள் .நடிகர்கள் பலரும் அரசியலில் காலடி எடுத்து வைக்க ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கிறார்கள் .சிலர் இந்தா வருகிறேன் அந்தா வருகிறேன் என பதினைந்து வருடங்களாகவும் ,இன்னும் சிலர் சரியான வாய்ப்பை எதிர் பார்ப்பு இருப்பதாகவும் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .
இவர்களுக்கு மத்தியில் எந்த ஒருவரின் உதவியும் இல்லாமல் தனிமரமாக நின்று கட்சி ஆரம்பித்து அதை வளர்த்து 7 வருடங்களுக்கு இடையில் தமிழ் நாட்டின் எதிர் கட்சியாக வளர்ந்துள்ள விஜயகாந்த் அவர்களை பற்றியதுதான் இந்த பதிவு .
விஜயகாந்த் எனும் பெயர் எனக்கு நினைவு தெரிந்த நாள்களில் (1995-1999)எனது சுற்றத்து ஆண்களால் அதிகமாக உச்சரிக்கப் படும் பெயர் ,அப்போது ஒரு வீட்டில் படம் போடுவதென்றால் குறைந்தது 50 பேராவது பார்ப்பார்கள் .அனேகமாக கல்யாணவீடு,சாமத்திய வீடு (பூப்புனித நீராட்டு விழா )நடைபெறும் போது இரவு வேளையில் படம் போடுவார்கள் .என்ன படம் போடுவது என்று பெரிய பிரச்சினையே எழும் .அப்போது ஆண்கள் அநேகரின் தெரிவாக இருப்பது விஜயகாந்த் படங்கள் தான் .அவரின் அதிரடி சண்டை காட்சிகளுக்கு அவர்கள் அடிமை . தொடர்ந்து ஓடும் நாலைந்து படங்களில் குறைந்தது ஒன்றாவது விஜயகாந்த் படம் இருக்கும் .
ஆனால் எனது பள்ளி காலத்தில் அவரின் வல்லரசு,வாஞ்சிநாதன் ,நரசிம்மா,ரமணா என தொடர் ஹிட் கொடுத்து என்னை கவர்ந்தார் .எனினும் கடந்த சில வருடங்களாக எனது நண்பர் வட்டத்தில் அதிகம் கேலி செய்யப் படுபவராக மாறினார் .எனது நண்பர்களில் பலருக்கும் விஜயை பிடிக்காது .அப்பிடி பிடித்தவர்களுக்கும் விஜயகாந்தை பிடிக்காது .எனினும் எனக்கு அவரின் துணிச்சல் ,தைரியம் பிடித்து இருந்தது .அந்த வகையில் புரட்சிகலைஞர் ,கப்டன் ,கருப்பு M.G.R என அழைக்கப் படும் விஜயகாந்த் பற்றிய சில குறிப்புக்கள் தான் இவை .
விஜய காந்தின் நிஜப் பெயர் நாராயணன் . (பிறப்பு -1952-08-25 ,மதுரை )அது தாத்தாவின் பெயர் என்பதால் விஜயராஜ் அழகர்சாமி நாயுடு என வீட்டில் அழைக்கிறார்கள் சினிமாவுக்கு வந்த பின்னர் டைரக்டர் M.A.காஜா வைத்த பெயர் விஜயகாந்த் அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த் தான்.
ஐயப்பன் கோவிலுக்கு 18ஆண்டுகளுக்கு மேலாக சென்று வந்தவர் .நடுவே பக்தர்கள் இவரின் காலில் விழுந்து வணங்குவதை பழக்கமாக கொண்ட பின் இப்போது கோவிலுக்கு செல்வது இல்லை .
தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 இல் மதுரை சூரன் முதல் ஜனவரி 4படம் வரை 18படங்களும் 1985ஆம் ஆண்டில் மட்டும் அலை ஓசையில் ஆரம்பித்து நானே ராஜா நானே மந்திரி வரை 17படங்களிலும் ஹீரோவாக நடித்து இருக்கிறார் .இந்த சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது .அதே போல் வேறு எந்த நடிகரின் 100வது படமும் கேப்டன் பிரபாகரனை போல் செம ஹிட் ஆனதில்லையாம் (கவனிக்க 50வது படம் இல்லை )
விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே ஒரு படம் இனிக்கும் இளமை .அதற்கு பிறகு எல்லாம் ஹீரோ தான் .
பாரதிராஜா தவிர்ந்து பெரிய டைரக்டர் களின் படங்களில் நடித்தது இல்லை விஜயகாந்த் .(ரமணா எடுத்த போது முருகதாஸ் பெரிய டைரக்டர் இல்லை _)
இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் 17படங்களிலும் ராமநாராயணன் இயக்கத்தில் 17 படங்களிலும் நடித்துள்ளார்.இவருடன் அதிக படங்களில் நடித்த நடிகை நளினி .
இதுவரை நடித்த மொத்த படங்கள் 153.இவர் இயக்கிய ஒரே ஒரு படம் விருத்தகிரி
எல்லா தம்பி தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது வயது ஆகி விட்டது .அதற்கு பின்தான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவை கைப்பிடித்தார். விஜய பிரபாகரன்,சண்முக பாண்டியன் என இரண்டு மகன்மார்.
வீட்டில் செல்லமாக ரொக்கி,சீசெர் ,தேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார்.
செயின் ஸ்மோகர் ஆக இருந்த விஜயகாந்த் திருமணத்தின் பின் அந்த பழக்கத்தை அறவே விட்டு விட்டார்.அசைவப் பிரியரான அவர் இப்போது மீன் சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்
கமல்,ரஜினி போன்றவர்கள் விஜயகாந்தை விஜி எனவும் நெருங்கிய நண்பர்கள் பாஸ் எனவும் கட்சி வட்டாரத்தில் கப்டன் எனவும் அழைக்கிறார்கள்
.
நடிகர் ராஜேசின் தம்பியின் திருமணத்தின் போதுதான்M.G.R ஓடு கை குலுக்கி சந்தித்து பேசினார் .அதை யாருமே புகைப்படமாக எடுக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு உண்டு
திருநாவுக்கரசு ,ஜெயலலிதா கேட்டும் தராத M.G.R இன் பிரச்சார வானை விஜயகாந்துக்கு கொடுத்து இருக்கிறார் ஜானகி M.G.R. அத்தோடு M.G.R,ஜானகி M.G.R என பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்து இருக்கிறார் ஜானகி .
என்ன பதிவு பிடித்து இருக்கிறதா பிடித்து இருந்தால் ஓட்டு போடலாமே .












