Thursday, August 25, 2011

வெற்றி ஆயுதம் வேலாயுதம்

 .கடந்த பதிவின் தொடர்ச்சியாக மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் இது வெளி வருகிறது.   மங்காத்தா பாடல்கள் வெளி வந்து பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது .31 ம் திகதி படம் வெளியிடப் பட உள்ளதாம். ஏழாம் அறிவு கதையை காணோம் சன் பிக்சர்ஸ் படத்தை வாங்கியுள்ளதாக சொல்லுகிறார்கள்.அது பரவாயில்லை நண்பனை வாங்க கடும் முயற்சி எடுக்கிறார்களாம்  .முன்னரே வர வேண்டிய பதிவு இது .திடீர் பரீட்சை காரணமாக தாமதித்து விட்டது ஆனால் இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன் .நாம எதிர் பார்த்த வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 28 மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக நடை பெற உள்ளது .இந்த நேரத்தில் இந்த பதிவு சரியாக அமையும் என்று நினைக்கிறேன் வேலாயுதம் படத்தின் இசை முன்னோட்ட பாடல் வெளி வந்து விட்டது . 
        எந்திரனுக்கு பிறகு மங்காத்தா பாடலுக்கே நல்ல வரவேற்பு என்று பேசப்படும் இந்நிலையில் வேலாயுதம் எப்படி அமைய போகிறதோ தெரியவில்லை.விஜய் இதுவரை ஹரிஸ் ஜெயராஜ் இசையில் எந்த படத்திலும் நடிக்கவில்லை (நண்பன் இனித்தானே )  .யுவன் இசையிலும் புதியகீதை தவிர வேறு படங்களில் நடிக்க வில்லை (அதிலும் முழுப் பங்களிப்பு இல்லை ).இசைப்புயலின் இசையிலும் ரெண்டு படங்களில்(உதயா,அழகிய தமிழ் மகன்) மட்டுமே நடித்துள்ளார்.ஆக மொத்தத்தில் முன்னணி இசை அமைப்பாளர்களை விஜய் பயன் படுத்தவில்லை.அப்படி இருந்தும் விஜய் படப் பாடல்கள் பெறும் வரவேற்பு ஊரறிந்த உண்மை.படம் ஓடுதோ இல்லையோ பாடல்கள் ஹிட் ஆகிவிடும் .விஜய் சிறந்த பாடகர் என்பதும் அவர் பாடல்களில் தானே தலை  இட்டு தனி கவனம் செலுத்துவதுமே இதற்கு காரணம் .எனினும் ஒப்பீட்டு ரீதியில் காவலன் பாடல்கள் ரீச் ஆகவில்லை என்பது எனது கருத்து .அந்த குறையை  போக்க வேண்டிய  பொறுப்பும் இப்பாடல்களுக்கு உண்டு .


விஜய் அன்டோனி

இரண்டாவது தடவையாக (சுக்கிரனில் விஜய் சிறப்பு தோற்றம் தானே )விஜய் படத்துக்கு இசை அமைத்து இருக்கிறார் .வேட்டைக்காரன் பாடல்கள் பட்டி     தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியதை யாரும் மறந்திருக்க மாட்டிர்கள். .வேட்டைக்காரன் பாடல் சின்ன தாமரை வருடத்தின் சிறந்த பாடலாக விஜய் விருதுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டது .(அயன், ஆதவன் அலையின் மத்தியில் )விஜய் அன்டோனி விஜய்க்கே ஏற்ற வகையில் ((புலி உறுமுது )இசை அமைத்துள்ளார் என பலரும் புகழ விஜயே விரும்பி இவரை இந்த படத்துக்கு இசை அமைக்க அழைத்தார் .விஜய் அன்டனி  ரஹ்மான் ,ஹரிஸ்,யுவன்  அளவுக்கு பெரிய இசை அமைப்பாளர் இல்லை என்ற போதும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் .இவரின் முதல் படமான சுக்கிரனிலேயே திறமையை வெளிப் படுத்தி இருந்தார் இவரின் நாக்க முக்க பாடல் இவரை வெளியுலகுக்கு வெள்ச்சம் போட்டு காட்டியது .2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காக பெற்றார்.பின்னர் ஆத்திசூடி பாடலும் பிரபல்யம் பெற்றது .எனினும் வேட்டைக்காரன் படமே அவரை அடையாளம் காட்டியது அந்த அங்கீகாரத்தை தொடர்ந்து தக்க வைப்பாரா சில நாட்கள் பொறுக்க வேண்டும் .

பாடல்கள்  

ரத்தத்தின் ரத்தமே  -அறிமுகப் பாடல் ஆக இருக்கலாம்.3கோடி செலவில் எடுக்கப் பட்டுள்ளது .முற்று முழுதாக ரசிகர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் .
 வேலா வேலா-ஏற்கனவே வெளியாகி விட்டது .அநேகமாக தீம் பாடலாக இருக்கலாம் .
 சிலாக்ஸ் சிலாக்ஸ்-வந்த ப்ரோமோ இசையில் என்னை கவர்ந்தது இதுதான் .குத்துத்தான் ஆனால் வித்தியாசமான குத்து .எங்கேயோ போக சந்தர்ப்பம் உள்ளது .
 மாயம் செய்ததோ -அற்புதமான மெலடி .கபிலனின் வரிகளில் சங்கீதா ராஜேஸ்வரன் பாடியிருக்கிறார் .நான் நினைக்கிறேன்.  கில்லியில் ரெட்டை வாழ் வெண்ணிலா பாடலுக்கு பிறகு இந்த பாடல்தான் விஜய் படத்தில் தனியே பெண் மட்டும் பாடும் பாடல் என்று.
   மொளச்சு மூணு இள  - படத்தின் சென்டிமென்ட்   பாடல் இதுதான்.கிராமத்தில் கதை நகரும் போது பாசத்தை வெளிப் படுத்தும் பாடலாக  இருக்கலாம்.
சொன்னா புரியாது -     இதன் வரிகள் இன்னும் வெளிவரவில்லை .இதுதான் ஆரம்ப பாடலாக இருக்குமோ என்ற ஐயமும் உள்ளது. 
ப்ரோமோ songs  கேட்க
  
. அந்த காலத்தில் கப்டன்,கமல்,ரஜினி,சத்தியராஜ் ஒன்றாக எடுத்த படம் இது.அருமையாக இருக்கிறது .இந்த காலத்தில் இப்படியான படங்களை எதிர்பார்க்க  முடியவில்லை .

Post Comment

14 comments:

மாய உலகம் said...

வேலாயுதம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

thamil manam 1

kobiraj said...

மிக்க நன்றி நண்பரே

மைந்தன் சிவா said...

தளபதிடா!!

Anonymous said...

கலக்குங்க...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

All the best to vijay

kobiraj said...

அனைவருக்கும் நன்றிகள்

M.R said...

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே .நன்றாக அலசியுல்லீர்கள் நன்றி பகிர்வுக்கு

M.R said...

தமிழ் மணம் நாலு

kobiraj said...

மிக்க நன்றி நண்பரே

Raancho said...

சொன்னா புரியாது - ithuthan opening song.
ரத்தத்தின் ரத்தமே - annan than thangaikkaaka padum padal
மொளச்சு மூணு இள - ithu oru duet paadalaa irukkumnnu ninaikkiran

kobiraj said...

பொறுத்திருந்து பார்ப்போம் நண்பரே

Raancho said...

as I said earlier, its come true now
bro.....

kobiraj said...

thank u brother .i'll correct it .

Related Posts Plugin for WordPress, Blogger...