Sunday, August 28, 2011

ரஜினியை எதிர்க்கிறாரா அஜித் ?

           படையப்பா என்றதும் உடனே ஞாபகத்துக்கு வருவது நம்ம தலைவரின் பஞ்ச் தான் ''அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல'' இந்த வரிகள் தெரியாத ஒருவனுக்கு தமிழ் சினிமாவை பற்றியே தெரிந்திருக்க வாய்ப்பு இல்ல .படத்தின் கடைசி காட்சியில் கூட ரம்யா கிருஷ்ணன் தான் அடுத்த பிறவியில் வந்து பலி வாங்குவேன் என்று சொல்லி செத்த பின்பும் கூட ரஜினி சொல்லுவார் .இந்த பிறவி இல்ல எத்தனை பிறவி எடுத்தாலும்  'அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல'' ரஜினியின் திரை வரலாற்றிலேயே அவரின் கோடானு கோடி ரசிகர்கள் அந்த வசனத்தை வேத வாக்காக எடுத்து பலருக்கு அறிவுரை சொல்லுவர் .படம் வந்து எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அந்த வசனத்தின் மதிப்பு இன்னும் குறையவில்லை .

         சரி இது எல்லோருக்கும்  தெரிந்ததுதானே இதை ஏன் இப்போது சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது .விஷயம் இல்லாமலா ?.இப்போது வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றுள்ள மங்காத்தா ஆடியோ அல்பத்தை  நானும் கேட்டேன் .அருமையான பாடல்கள் .ஒரு பாடல் பல்லேலக்கா என்று ஆரம்பிக்கிறது .அட இது நம்ம தலைவர் பாட்டு தொடக்கம் அல்லவா அதை பயன்படுத்தி தலைவரை பெருமைப் படுத்தி உள்ளார்கள் என்று பெருமிதப் பட்டேன்.பாடல் வரிகளை தொடர்ந்து கேட்டேன்.
 ஆசைப்படு அளவேயில்ல ஆம்பிளைக்கு அதுதான் அழகு கோபப்படு குறையே இல்ல பொம்பளைக்கு அதுதான் பொறுப்பு .

 பாடல்     எழுதியவர்    கங்கை அமரன். இதிலே அஜித்துக்கு தொடர்பு இல்லை என்றாலும் அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு தெரியாமல்  இந்த  இடம்பெற வாய்ப்பு இல்லை.

 இதோ இன்னுமொரு சம்பவம் .    ரஜினி ரசிகர்களுக்கு இந்த வசனம் எப்படி முக்கியமானதோ நம்ம தளபதி ரசிகர்களுக்கு மிகவும் கவர்ந்த விஜயின் வசனம் என்றால் அது திருமலையில் இடம்பெற்ற வாழ்க்கை ஒரு வட்டமடா ஜெயிக்கிறவன் தோற்பான்  தோக்கிறவன்  ஜெயிப்பான்.என் போன்ற விஜய் ரசிகர்கள் விஜயின் தோல்விகளின் போது  எம்மை கலாய்க்கும் நண்பர்களுக்கு அளிக்கும் ஒரே பதில் இதுதான் .இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும் .இந்த வரலாற்று சிறப்பு மிக்க வசனத்தையும் ஒரு  பாட்டில் கலாய்த்து இருப்பார்கள் .வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா சத்தியமாய் இது எந்த படம் யார் நடித்த படம் என்று எனக்கு தெரியாது.(நம்பித்தான் ஆகனும்).


         திரையுலகில் இது ஒன்றும்  புதிது அல்ல .    நம்ம. தல தளபதி ஒரு காலத்தில் தமக்குள் மோதும் போது படத்தில் கதை இருக்குதோ இல்லையோ ஒவ்வொரு படத்திலும் மற்றவரை போட்டுத் தாக்கும் வகையில் சீன் இருக்க  வேண்டும். அதற்கு பல உதாரணங்கள் உண்டு .எனினும் அதன் உச்ச கட்டம் அட்டகாசம் படத்தில் ஒரு பாடலையே உனக்கென்ன உனக்கென்ன   என்று விஜயை கேட்கும்படி அமைத்தனர்.அதற்கு பதில் அளிக்கும் வண்ணமாக         சச்சின் படத்தில் மாரோ மாரோ பாடலையும் குண்டுமாங்கா பாடலை அஜித்தின் அட்டகாச   உருவத்தை கேலி செய்யும்  வகையிலும் விஜய் பயன்படுத்தினார்.ஆனால் அதன் பின் புரிந்துணர்வு ஏற்பட்டு  கசப்புகளை மறந்து  இப்போது சிறந்த நண்பர்களாக தலதளபதி உள்ளனர். 

எல்லாம் சரி தலைப்பை கண்டு பயந்து விட்டீர்களா? இல்லாவிட்டால் உள்ளே வருவீர்களா ? அதுதான் சும்மா .கண்டுக்காதீங்க   

  மங்காத்தா பிடித்த பாடல்வரிகள்
 தப்பு கூட தப்பாகாது சத்தம் போட்டு சொல்லப்பா,
   ஆசைப்படு அளவேயில்ல ஆம்பிளைக்கு அதுதான் அழகு கோபப்படு குறையே இல்ல பொம்பளைக்கு அதுதான் பொறுப்பு .-பல்லேலக்கா
  நல்லவர்கள் யாரோ தீயவர்கள்யாரோ கண்டு கொண்டு   கன்னி யாரும் காதல் செய்வதில்லையே -நண்பனே
    தோழா மீன் வாழ நீர் வேண்டும் நான் வாழ பீர் வேண்டும்.-ஓபன் தி பாட்டில்

   வேலாயுதம் பாடல்கள் எப்படி.........
         வேலாயுதம் பாடல்கள் இன்று வெளியாகி வானை கிழிக்கின்றன.நம்ம தளபதி எத்தனை  படம் வந்தாலும்  திருப்பாச்சியை விட மாட்டார் போல இருக்கே .இரண்டு பாடல்களில் திருப்பாச்சியை வெற்றிகரமாக புகுத்தி விட்டார் .வேட்டைக்காரன் போல காது கிழிய குத்தவில்லை விஜய்அன்டனி .     இன்றைய நிலைவரப்படி சிலாக்ஸ் சிலாக்ஸ் சிலா சிலா  சிலாக்ஸ்தான் பெஸ்ட் .ஆனால் மாறலாம் .ரத்தத்தின் ரத்தமே சிறந்த வகையில் பாசத்தை வெளிப்படுத்துகிறது .சொன்ன புரியாது தொடக்கம் கில்லிமுதல் பாடலை ஞாபகப் படுத்துகிறது 
        விஜய்  ரசிகர்களுக்கு 5 கோடியில் சில வரிகள்-
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள    அடங்காது நீங்கெல்லாம் என்  மேல வச்ச பாசம் பொண்ணா  பிறந்தாலும் இது  போல இருக்காது நா  உங்க மேல எல்லாம் வச்ச நேசம். ..
வேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு நிக்காது இந்த காலு கொட்டிடுச்சுடா தேளு ..........
தலையில்  ஆடும்  கரகம் இருக்கும்  தலையில கணம்தான் இருந்ததில்ல 
சண்டையில   MGR  சாட்டையில அய்யனாரு தில் இருந்தும் வம்பு சண்ட  போட்டதில்ல  
உங்க  வீட்டு  செல்ல புள்ள என்ன போல யாரும் இல்ல
   நல்ல செய்தி     
அப்புறம் மங்காத்தா வில்    மச்சி ஓபன் தி பாட்டில் பாடலுக்கு தளபதி  கெஸ்ட்    ரோலில் வருகிறார் என ஒரு தகவல் கசிந்திருக்கிறது .கேட்கவே புல்லரிக்குது .மங்காத்தா ட்ரைலர்    வெளியானவுடன்  பிரேம்ஜிக்கு போன் செய்து ஹா ஹா    மங்காத்தாடா என்று   சொல்லும் போதே நினைச்சன் இப்படி நடக்கலாம் என்று.பிறகென்ன இது உங்காத்தா எங்காத்தா இல்லடா மங்காத்தா டா .
breaking news

  வேலாயுதம்  பாடல்கள் வெளிவந்து  5 மணி நேரத்தில் சாதனை .எந்திரன்  ,மங்காத்தா அனைத்தையும் முறியடித்தது.மேலதிக விபரங்கள் பின்னர் ... 
chilax chilax chila chila  chilax
பிடித்திருந்தால் தமிழ் இன்லியிலும் ஓட்டு போடுங்கள் 

Post Comment

26 comments:

மைந்தன் சிவா said...

ரத்தத்தின் ரத்தமே இப்போ எனக்கு பிடித்தது,..மற்றைவைகளும் பிடித்திருக்கின்றன ~

Anonymous said...

2 மச்..

Anonymous said...

நல்ல பதிவு....

மதுரை சரவணன் said...

super..vaalththukkal

மாய உலகம் said...

தல... எங்கிருந்து தான் செய்திகளை திரட்டுறீங்க்ளோ... பிண்ணி பெடலேடுக்கீறீங்க போங்க... நல்ல அலசல்... தீவிர விஜய் ரசிகரோ.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Riyas said...

மங்காத்தாடா...

தமிழ்மனம் 3

Anonymous said...

ஒப்பீடுலாம் அபாரமா இருக்கே...
சச்சின் படத்தின் குண்டு மாங்கா பாடலை மீண்டும் பார்க்கவேண்டும்! :)

நிரூபன் said...

மங்காத்தா...வேலாயுதம் ஒப்பீட்டு அலசல் அருமை பாஸ்.

kobiraj said...

எல்லாம் பிடிக்கும் சிவா அண்ணா.வெற்றி ஆயுதம்தான் .வருகைக்கு நன்றி

kobiraj said...

உண்மையத்தானே சொன்னேன் ரேவேரி சார்

kobiraj said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மதுரை சரவணன் சார்

kobiraj said...

ரொம்ப புகழாதீங்க மாய உலகம் சார் கருத்துக்கு நன்றி

kobiraj said...

வருகைக்கும் வாக்குக்கும் நன்றி ரியாஸ் சார்

kobiraj said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷீ-நிசி

kobiraj said...

வருகைக்கும் கருத்தும் நன்றி நிருபன் அண்ணா

Anonymous said...

2 மச்..நான் சிவாவை சொன்னேன் நண்பரே...

kobiraj said...

சரி சரி உங்களுக்கு பி௯டிக்கவில்லையா பரவாயில்லை கேட்க கேட்க பிடிக்கும்

மொக்காத்தா said...

படம் படு மொக்கை.

சமிபத்தில் வந்த நிறைய படங்கள் பாதிப்பு இருக்கிறது. atm திருடன் ,torque, ocean11,

kobiraj said...

அண்ணே என்ன மொக்கையா நான் நாளைக்குத்தான் பார்க்கப் போறன்.பார்த்திட்டு சொல்றன்

karurkirukkan said...

appa,evlo matter, evlo potti,gud writting

N.H.பிரசாத் said...

//வேலாயுதம் பாடல்கள் வெளிவந்து 5 மணி நேரத்தில் சாதனை .எந்திரன் ,மங்காத்தா அனைத்தையும் முறியடித்தது//

அதெப்படி யாருமே கேள்விப்படாத, நடக்காத விஷயங்களை பற்றியெல்லாம் எழுதுறிங்களே?

N.H.பிரசாத் said...

//வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா சத்தியமாய். இது எந்த படம் யார் நடித்த படம் என்று எனக்கு தெரியாது//

இந்த பாடல் வரி சூர்யா நடித்த 'ஆதவன்' படத்தின் அறிமுகப் பாடலில் வரும்.

N.H.பிரசாத் said...

கோபிராஜ், பதிவுலகத்துல முக்கால்வாசிப் பேரு 'தல ரசிகர்கள்' தான். அதனால தளபதி பெயரை யூஸ் பண்ணாம இருந்தா நல்லது.

kobiraj said...

நீங்க என் பதிவை தவிர வேறு எதுவும் படிப்பதில்லையா உலகத்தில் என்ன நடக்குது எண்டு தெரியாதா

kobiraj said...

பிரசாத் நீங்கதான் அப்பிடி சொல்றீங்க .நியவுலகில் யாருக்கு ரசிகர் கூட எண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .அது சரி நான் ஏன் தளபதி பெயரை use பண்ண கூடாது .நான் என்ன நீங்க மட்டும் படிக்கவா பதிவு எழுதுறன் .அப்புறம் ரொம்ப நல்ல காமெடி பண்றீன்கள் .எங்கயாவது சான்ஸ் கேட்டு பார்க்கலாமே

kobiraj said...

உங்களுக்கு கொஞ்சமும் பகுத்தறிவு இல்லையா .அந்த பாட்டு ஆதவனில் எண்டு தெரியாமல்தான் நான் பதிவு போட்டதாய் நினைத்து நீங்கள் அதை வேறு போட்டு இருக்கிறீர்கள் .

Related Posts Plugin for WordPress, Blogger...