Sunday, November 6, 2011

விஜய் ,சூர்யா வென்றது யார் ?

அண்மைக்கால தமிழ் சினிமா சம்பந்தமான விடயங்களை என்னுடைய பார்வையில் அலசி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் .பதிவு நீண்டு கொண்டிருக்கிறது .எனவே தொடர் பதிவாய் அமையும் .
இதன் முந்தய பகுதியை படித்தால்தான் இங்கே தொடர முடியும் 
மங்காத்தா வா ? வேலாயுதமா? எது டாப்.


ஏழாம் அறிவு 


ஏழாம் அறிவு இந்த வருடத்தின் எதிபார்ப்புக்கு உள்ளான   படங்களில் முதல் இடத்தில் இருந்த படம் ( including behindwoods ) .அதன் படப் பிடிப்பும் இந்த வருட ஆகஸ்ட் மாதத்தை இலக்கு வைத்து தொடங்கப் பட்டு  சற்று தாமதமாகியது .தமிழ் சினி உலகில் பர பரப்பு தொற்றிக் கொண்டது வேலாயுதம் ,ஏழாம் அறிவும் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப் பட்டமைதான் .நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இது ஒரு போதும் சாத்தியப் படாது .கண்டிப்பாக ஒரு படம் பின்வாங்கும் இல்லை முன் வாங்கும் .ஆனால் கடைசி வரை இதை நிறுத்த பலரும் முயற்சித்த போதும் எதுவும் கை கூடாமல் மீண்டும் சினிமா ரசிகர்களுக்கு தித்திப்பை ஏற்படுத்தி விட்டன .
எவ்வாறு சாத்தியம் ஆயிற்று  

(இப்போது நான் சொல்பவை தீபாவளிக்கு முன்னான நிலை என்பதை அனைவரும் கருத்தில் கொள்க  .)

ஏழாம் அறிவு சூர்யா முருகதாஸ் ஹரிஸ் கூட்டணியில் பிரமாண்ட தயாரிப்பு (85  கோடி ).சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் (இந்த நால்வருள் ) கடைசி படங்கள் அனைத்தும் வெற்றி (ரத்த சரித்திரம் வேறு வகை வேறு மொழி )சகல வித்தத்திலும் நடிப்பு (வாரணம் ஆயிரம் ),துடிப்பு (அயன் ),மசாலா (ஆதவன் ),மாஸ் (சிங்கம் ) என சகல பரிமாணத்திலும் விண்ணை தாண்டிய வளர்ச்சி அதன் உச்ச கட்டம் மாற்றான் படத்தில் இவரின் சம்பளம் தெலுங்கு உரிமையையும் சேர்த்து 25  கோடி .மற்ற நடிகர்களை விட 10  கோடி  தாண்டினார் .தல தளபதியை எல்லாம் ஓரங்கட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார் .இந்த நிலையில் இருக்கும் போது


விஜய் ?

விஜய் பொருத்தமற்ற  கதை தேர்வு   ,புது இயக்குனர்கள் ,அதிக பில்ட் அப் என தன்னை தானே அழித்துக் கொண்டார் .ஆதி,குருவி,வில்லு ,வேட்டை காரன்(வசூலில் வெற்றி   ) ,சுறா என தோல்வியை கொடுத்தார் .இது சினிமா ரசிகர்களிடையே புதிய புரட்சியை ஏற்படுத்தியது .இந்த படங்களால் சலிப்படைந்த விஜய்க்கு எதிரான கூட்டம் ஒன்று புதிதாய் முளைத்தது .இவர்களின் அளவு விஜய் ரசிகர்களை விட  அதிகமாகும்  அளவுக்கு  முன்னேறியுள்ளது  .சினி உலகில் அதிக கேலிக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளானார் .அத்துடன் விஜயின் அரசியல் பிரவேசத்துக்கான அறை கூவலும் பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியது .விஜயின் எதிரியாய் திரும்பியவர்கள் அனைவரிலும் பெரும்பாலானவர்களின் தெரிவு சூர்யா ஆகவே இருந்தது .அஜித் நடிக்கும் படங்களின் அளவு ஒப்பீட்டு ரீதியில் குறைவாயும் அதிலும் பல தோல்வியாய் அமைந்தது .(அசல்,ஏகன்,ஆழ்வார் ) விக்ரமின்   நிலை இன்னும் மோசமாக இருந்தது .பீமா,கந்தசாமி,ராவணன் என நடித்த படங்களே சொற்பம் அதிலும் அனைத்துமே தோல்வி(?).ஆனால் சூர்யாவோ வாரணம் ஆயிரம்,அயன்,ஆதவன்,சிங்கம் என டாப் கியரில் சென்றார் .போட்டிக்கு யாரும் இல்லை .தனி சாம்ராஜ்ஜியம்   நடத்தினார் ரசிகர்கள்  ஆதரவு பெருகியது ..பெண்கள்  அவரின் சிக்ஸ் பக் க்கு மயங்கினார்கள் .கடின உழைப்பு ,சரியான கதை தேர்வு ,பெரிய இயக்குனர் ,சிறந்த இசை அமைப்பாளர் என எல்லாமே பெஸ்ட் ஆக இருந்தது .

எனவே ரஜினி கமலுக்கு பின் அஜித் விஜய் என்ற நாமமே ஓங்கி ஒலித்தது .எனினும் சூர்யா அவற்றை வெற்றிகரமாக உடைத்து முன்னணிக்கு வந்தார் .

விஜய் சூர்யாவுக்கு நிகர்மாறாக செய்து தோல்வியில் துவண்டு பட்டுணர்ந்து தனது பழைய பாணியில் காவலனை கொண்டு வந்தார் .இன்று வரை விஜயிடம் நான் எதிர்பாத்து இராத ஒன்று முக்கிய மைல் கல் படமான 50 வது படமான சுறாவை என்னென்று தேர்வு செய்தார் .எப்படி அந்த கதையை நம்பி படம் நடித்தார் என்பதுதான் .சரி அதை விடுவோம்  காவலன் நீண்ட நாட்களின் பின் வெற்றியை தந்தது .எனினும் படத்தை வெளியிடுவதற்காக பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல .கடைசியில் மானப் பிரச்சினையாய் போய் விட தனது சொந்த பணத்தில் செலவு செய்து சொன்ன படி பொங்கலுக்கு கொண்டு வந்தார் .அரசியல் எதிர்ப்புக்களின் மத்தியிலும் படம் வெற்றி பெற்றது .எனினும் கார்த்தி யின் சிறுத்தையுடன் போட்டி போட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது .அக்சன்  மசாலாவான   சிறுத்தையுடன் காதல் படமான காவலன் கஷ்டப் பட வேண்டி வந்தது .எனினும் விஜய் ரசிகர்களை பெரிதளவில் கவரா விட்டாலும் அவர்கள் சச்சின்,வசீகரா வில் செய்ததை போல படத்தை தவிர்க்க வில்லை .பொது மக்கள் மத்தியில் சரிந்திருந்த இமேஜ் ஓரளவு சரியானது .இணையங்கள் ,பத்திரிகைகளும் வரவேற்பு அளித்தன. 

மீண்டும் வேலாயுதம் 
காவலன்   வென்று விட்டது.அதற்கு பின் கதை ,இயக்குனர் தெரிவில் நிதானம் காட்டி மிகப் பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்..ஆனால் அதற்கு முன் ஒப்பந்தமான வேலாயுதம் .படம் தெலுங்கு ஆசாத் ரீமேக் என்றவுடன் படத்தின் கதை வெளியாகி விட்டது .படத்தின் கதையை அடுத்து மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான் .பழைய படங்களின் நிலைதான் இதற்கும் என விஜய் எதிரிகள் பிரச்சாரம் செய்தார்கள் .படத்தை விஜய் ரசிகர்கள்  தவிர ஒருவருமே எதிர்பார்க்க வில்லை .



இங்கேதான் தொடங்குது விஷயம் .ஏழாம் அறிவு படப் பிடிப்பு முடிந்தது .படத்தை தீபாவளிக்கு வெளியிட்டால்   நல்ல காசு பார்க்கலாம் .வேலாயுதம் வருதே .(யார் முதலில் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்கள் தெரிந்தவர்கள் ஆதாரத்துடன் சொல்லலாம் )அது வந்தால் என்ன இரண்டு மூணு நாளுக்கு நல்ல ஒபெநிங் இருக்கும் பிறகு படுத்துடும் .நம்ம கதையும் பலம் எல்லாம் பலம் கண்டிப்பா இதை அடிக்க முடியாது .இதை விட்டால்  விஜயை விட சூர்யா தான் டாப் என காட்ட சந்தர்ப்பம் இல்லை பிறகு நண்பன் ,முருகதாஸ் படம் கௌதம் படம் என எதிர்ப்பார்ப்பு கூடி விடும் .இதுதான் சரியான சந்தர்ப்பம் என உதயநியுடன் சேர்ந்து சூர்யா திட்டம் இட்டார் .
சிலர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் சூர்யா விஜயின் பால்ய சிநேகிதன்  ஆச்சே சூர்யா விஜய்க்கு இப்படி செய்வாரா என்று கேட்பீர்கள் அவர்கள்  கண்டிப்பாக இந்த பதிவை படித்து விட்டு தொடருங்கள் .



இந்தப் பதிவெலே சொல்லாத விடயம் ஒன்று  வேறு ஒரு   பதிவில் சொல்லி இருக்கிறேன் தேவை கருதி மீண்டும் சொல்கிறேன் .திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டமடா ஜெயிக்கிறவன் தோப்பான்  தோக்கிறவன் ஜெயிப்பான் என்று ஒரு பஞ்ச் பேசியிருப்பார் விஜய் .ஆதவன் படத்தில் ''டமக்கு டமக்கு'' பாடலில் வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா என்று ஒரு வரி வரும் .பாடலில் வரி வந்ததுக்கு சூர்யாவா காரணம் என்று கேட்பவர்களுடன் நான் வாதாட தயாரில்லை .சூர்யாவுக்கு தெரியாமல் இந்த வரி சேர்க்கப் பட்டு இருக்க முடியாது .

இந்த முடிவை கண்டு பட விநியோகஸ்தர்கள்      திரையரங்கு உரிமையாளர்கள் குழம்பினார்கள் .எந்த படத்தை திரையிடுவது .ஒருவரின் படத்தை வெளியிட்டால் மற்றவரை பகைக்க வேண்டி வருமே என்று .இயன்ற வரை ஒரு பட வெளியீட்டை மாற்றுவதற்கு இரு படக் குழுவினரிடமும் ஆலோசித்தார்கள் .வேலாயுதத்தை ஒரு கிழமை முதல் வெளியிடுமாறு ஏழாம் அறிவு தரப்பால் சொல்லப் பட்டது .இல்லை பிந்தி வெளியிடுமாறு . இதிலே   ஒரு மிகவும் சுவாரசியமான  சம்பவம் நடைபெற்றதாக நான் அறிந்தேன் எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு    தெரியாது .அது என்னவெனில் .....

தொடரும்......... 

#####
அடுத்த  பதிவில் அந்த சுவாரசியமான விடயங்களுடன் வேலாயுதமா மங்காத்தா வா இல்லை ஏழாம் அறிவா டாப் என்பதற்கான விடையும் தொடரும்  .

கருப்பு எழுத்தில் உள்ளவற்றை வாசிக்கும் பொது தீபாவளிக்கு முந்தய மனநிலை உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் . 

**இந்த தொடரில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பற்றி உங்கள்   கருத்துக்களை தெரிவியுங்கள் .FACEBOOK மூலமாகவும் தெரிவிக்கலாம் . 
##################################################################################
கவனிக்க 


இந்த பதிவில் ரஜினி பற்றி குறிப்பிட்டிருந்த விடயங்களில் பல விமர்சனத்துக்கு    உள்ளாகியதாலும்  நான் எதோ நினைத்து எழுத கடைசியில் அது வேறு அர்த்தத்தில் வந்து விட்டது .வாசகனாக   படித்துப் பார்க்கும் போது அந்த பிழை தெரிந்தது  நான் கருப்  பொருளாக கொண்ட விடயத்துக்கு நேற்று பதில் கிடைத்ததாலும் அவற்றை பதிவில் இருந்து நீக்கி விடுகிறேன் .அந்த  வரிகளால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் . உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி .

Post Comment

10 comments:

கோகுல் said...

இவ்வளவு இருக்கா?

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சகோ
தொடர் நல்ல விறு விறுப்பாகப் போகின்றது.

சூர்யா விஜய் போட்டி பற்றி நீங்கள் இங்கே குறிப்பிடுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை சகோ.

எப்பூடி.. said...

எனக்கு உங்கள் மீது மன உளைச்சலோ வருத்தமோ இல்லை, உங்கள் எண்ணத்தின் பதிவு அது, அதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றியது, அதைத்தான் குறிப்பிட்டேன், மற்றப்படி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள்.

கெட்டவன் said...

super boss

பாலா said...

நன்றி நண்பரே. உங்களின் வெளிப்படையான மனநிலையை வரவேற்கிறேன். விஜய் அவர்களைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து எழுதலாம். ஆனால் மற்றவர்களோடு ஒப்பிடும்போது அதற்கான விளக்கங்களை கொடுப்பது அவசியமாகிறது. எனவேதான் அத்தனை கருத்துக்களை வழங்க வேண்டி வந்தது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Keddavan said...

Katrpanai kathaikalai unmay enru kuruvathai neruthavum...neenga serukathaikal eluthalam..

MANO நாஞ்சில் மனோ said...

நான் யாருக்கும் ரசிகன் இல்லை எனவே வேடிக்கை மட்டும் பார்க்கிறேன் ஹி ஹி...

K.s.s.Rajh said...

/////
பாலா said...
நன்றி நண்பரே. உங்களின் வெளிப்படையான மனநிலையை வரவேற்கிறேன். விஜய் அவர்களைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து எழுதலாம். ஆனால் மற்றவர்களோடு ஒப்பிடும்போது அதற்கான விளக்கங்களை கொடுப்பது அவசியமாகிறது. எனவேதான் அத்தனை கருத்துக்களை வழங்க வேண்டி வந்தது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்////

இதுதான் பாஸ் என் கருத்தும் மற்றும் படி உங்கள் பதிவை சாடவேண்டும் என்பது எண்ணம் இல்லை...உங்கள் திறந்தமனநிலையை நானும் வரவேற்கின்றேன்.

வாசகனாக என்றும் உங்கள் பதிவுகளை தொடர்வேன் வாழ்த்துக்கள் நண்பா

kobiraj said...

அனைவருக்கும் நன்றி .உங்கள் புரிந்துணர்வுக்கு .அப்புறம் இனி பிழைகள் விடுவதை இயலுமானவரை குறைத்து கொள்கிறேன் ,.உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்

Bharathiraja said...

u r going to say velayudam is best am i rite

Related Posts Plugin for WordPress, Blogger...