Wednesday, October 26, 2011

வேலாயுதம் ( மரண மாஸ் )ஏன் பார்க்க வேண்டும்


படம் பார்த்தாச்சு விமர்சனம் எழுத விருப்பமில்லை. என்னதான் நடுநிலையாய் எழுதினாலும் விஜயை என்னில் இருந்து பிரிக்க முடியாது என்பதால் வேலாயுதம் அனுபவங்களை மட்டும் பகிர்கிறேன் .
வேலாயுதம் ஜெயம் ராஜாவின் கனவு படம் முதன் முதலில் தனது திரைக்கதையில் சொந்த படம் .ரொம்பவே பில்ட் அப் கொடுத்தார் போக்கிரி + கில்லி போல இருக்கும் என்று .விஜயின் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும் .விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் எல்லோரையும் திருப்திபடுத்தும் பக்கா  கமெர்சியல் படமாக இருக்கும் . நான் வில்லு படத்துக்கு பிரபுதேவா கொடுத்த தமிழ் வார இதழ் ஒன்றில் (ஆனந்த விகடனோ ,குமுதமோ ) கொடுத்த பேட்டியை  இன்னும் மறக்கவே இல்லை .அது பரவாயில்லை சுறாவுக்கு  ராஜ்குமார் கொடுத்த பேட்டி யப்பா சாமி .ஆகவே  நான் நம்ப இல்லை .அதைவிட தெலுங்கு ஆசாத் படம் வேறு பார்த்து விட்டேன் (படம் ரீமேக் என்று சொன்ன  உடனேயே ஆசாத்தை வேலாயுதம் என்ற பேரில் யாழ்ப்பாணம் முழுதும் உலவ விட்டனர் DVD யினர்  ).எதாவது அதிசயம் நடந்தால் தான் ஏழாம்  அறிவு வேறு போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்போடு வருகுது .என்னதான் முகப் புத்தகத்தில் பெருமை அடித்தாலும்
நான் நம்பி இருந்தது நண்பனைத்தான் சாதாரண . விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் இருந்த வழமையான பயம்தான் இன்று காலையில் படம் பார்க்க கிளம்பினேன் .எதுவித விமர்சனங்களும் என் காதுக்கு வராத நிலையில் (சில படம் பார்க்காமல் ஊளையிடும்  நரிகளை தவிர -நன்றி மைந்தன் சிவா ) என்னுடைய மனம் பட படத்தது.A/L பெறுபேறு  வருவதற்கு சில மணிகள் முன்பு இருந்த அதே நிலை .இனி முகப் பக்கத்துக்கு ரெண்டு கிழமை வர முடியுமா நண்பர்களுடன் கதைக்க முடியுமா என பல யோசனை .ஆனால் படம் தொடங்கிய போது இருந்த யோசனை அதற்கு பின்னர் காணமல் போய் விட்டது .படத்தின் ஆரம்பமே சொல்லியது இது வேற என்பதை .ராஜா நீங்க கில்லி ,போக்கிரி ன்னு சொன்னிங்க ஆனா சொன்ன படி தந்து விட்டிர்கள் .மிக்க நன்றி உங்களுக்கு .

சரி படத்துக்கு வருவோம் .விஜய் மீண்டும் தான் ஒரு மரண மாஸ் ஹீரோ என்பதை நிருபித்து இருக்கிறார் .இந்த கதைக்கு விஜயை தவிர வேறு யாருமே பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று ராஜா சொன்னது ரொம்ப சரி .விஜயின் அறிமுக காட்சி ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று .அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடும் போது எதோ சண்டைகாட்சி என்று எதிர்பார்க்க காமேடியிலேயே என்ட்ரி ஆகிறார் தளபதி .
படத்தின் கதை 
கண்டிப்பா கதை இருக்கு .ஆனா எல்லோருக்கும் தெரிந்த கதைதான் .அதுதான் ஆசாத் பட கதை .இங்கே வலைதளங்கள் முழுவதிலும் முதலே போட்டு விட்டார்களே .
படத்தை பற்றி எழுத வெளிக்கிட்டால் எல்லா விடயங்களையும் கக்கி விடுவேன் என்பதால் சில விடயங்கள் மட்டும் .சொல்லியே ஆக வேண்டும்
#மாயம் செய்தாயோ பாடல் படமாக்கப் பட்ட விதம்  சூப்பர் இவ்வளவு அழகா தளபதியை இதுவரை பார்க்கவே இல்லை (திரையில்  -டோகோமோ விளம்பரம் )
#விஜய் படம்னாலே கொமெடி பிய்ச்சலாய் இருக்கும் .இது ஒரு படி மேலே +சந்தானம் என்பதை சொல்லவா வேண்டும் .
#பாடல்கள் எதுவுமே போர் அடிக்க வில்லை .(இதை அடுத்து பார்த்த  ஏழாம் அறிவு பாடல் காட்சிகளின் போதுதான் உணர்ந்தேன் )
#கிளைமாக்ஸ் -பக்கா ஆசாத் பார்த்தவர்களுக்கு கூட
# வசனம் சூப்பர்
#மன்காத்தாவில் காவலன் பாட்டுக்கு இதிலே  என்ன பிரதிஉபகாரம் செய்து இருப்பார் விளையாடு மங்காத்தா பாடல் ஒரு டி கடையில் பின்னணியில் ஒலிக்கிறது .
# வசனம் சூப்பர் அவற்றில் சில
"கோபப்படுங்க. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ கோபப்பட்டீங்கன்னா
ஆட்சியே மாறுதுல்ல. அப்பப்ப கோபப்பட்டா அரசியலே மாறும்."
அடோய் மாசமா இருக்கிற தாய் வொமிட் எடுத்து பார்த்து இருக்கன்.உன் தங்கை சமையலை சாபிட்ட நாய் வாமிட் எடுத்ததை இப்பத்தாண்டா பார்க்கிறன்
என் தங்கை சமயலில புலிடா அதுக்கு நாங்க பலிடா     
 நான் உண்மைலயே திருடனா, இல்ல திருடன்னு நினைச்சு என்னைய நானே ஏமாத்திட்ருக்கேனா -
பதிவுலகம் இன்ன சொல்லுது   இன்னா 

வேலாயுதம் - தூள் கிளப்பும் ஆக்சன் - கொஞ்சம் பழைய சாயலடிக்கும் சென்டிமெண்ட்! .-நிருபன் அண்ணா

வேலாயுதம்: The entertainer is back.வேலாயுதம்: The entertainer is back...-கார்க்கி 

 இட்லிவடை வேலாயுதம் - FIR.  

வேலாயுதம்-விஜய்-தி மாஸ்!!-

-மைந்தன் சிவா  

.
சரி  இது  மூன்று  மாதங்களுக்கு  முன்னர்  நான்  எழுதிய பதிவில்  குறிப்பிட்டது நீங்கள் முடிவு எடுங்க .........
படத்தின் பலம் 
***படத்தின் கதையை வைத்து இது மொக்கைதான் என பலர் நினைப்பதால் படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை.ஆததால் இதுவே பெரும் பலமாக உள்ளது.படம் ஓரளவு நல்லாய் இருந்தாலே வெற்றி பெறலாம்.
***தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் பெரும் பலமாக உள்ளது.காவலன் படத்தை வெளியிடுவதில் விஜய்கு ஏற்பட்ட நெருக்கடி யாவரும் அறிந்ததே.(DMK ஆட்சியில் தனது படங் கள் வேண்டுமென்றே தோல்வியடைய செய்யப் பட்டதாக விஜய் நினைக்கிறார்) 
***படத்தின் உரிமை ஜெயா டிவிக்கு கைமாறியுள்ளமையும் பலம்தான்.
***விஜய் ரசிகர்கள் -விஜய் நடித்த ப்ளாப் படங்களுக்கு கூட நல்ல ஒபினிங் கொடுப்பது இந்த ரத்தத்தின் ரத்தங்கள்தான்.(விஜய் நடித்த சில நல்ல படங்களை ப்ளாப் ஆக்கியதும் இவர்கள்தான்.)                                                        பலவீனம் என்று பார்க்கும் போது விமர்சனங்கள் அதிலும் படம் நல்லாய் இருந்தால் கூட குப்பை என்று விமர்சனம் எழுதும் சிலர் .அத்துடன் காய்க்கிற மரத்துக்குத்தான் கல் எறிவார்கள்.கல் எறிய காத்து நிற்கும் கூட்டமும் பலவீனம்தான்.
எது எவ்வாறாயினும் படம் நல்லாய் இருந்தால் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.2011 டாப் படம் எது ? 

இப்போது 

வேலாயுதம் -116 

மங்காத்தா - 86 

ஏழாம்   அறிவு -33       

இனி    ................


  


Post Comment

12 comments:

மைந்தன் சிவா said...

சூப்பர் தல!!நிச்சயமாக மாஸ் படம் தான்!!சூப்பர் சடிச்பக்சன்!

மதுரன் said...

சூப்பரப்பா..... விஜய்னா மாஸ்

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா ஆரம்பிச்சிட்டாயிங்களே....

Anonymous said...

என்ன ரசிகரை இன்னும் காணோமேன்னு நினைச்சேன்...

//சண்டைகாட்சி என்று எதிர்பார்க்க காமேடியிலேயே என்ட்ரி ஆகிறார் தளபதி//

விமர்சனம் நல்லாயிருக்கு...

ராகுல் said...

விஜய் rockzzzzzzzzzzzzz

நிரூபன் said...

வணக்கம் மச்சி,
உள்ளதை உள்ள படி சொல்லி விஜய் ரசிகனாக எழுதியிருக்கிறீங்க.
ரசித்தேன்,
கொஞ்சம் நடு நிலமை காட்டியிருக்க கூடாதா?

தனிமரம் said...

மாஸ் என்றாள் முகமுடியா?? அப்ப வேலாயுதம் உங்க பார்வையில் முகமுடி என்று சொல்லுறீங்க .
ஏதோ நல்லா கும்மியடிக்கலாம் இந்த வாரம் விசில் குஞ்சுகள் சத்தம் காதை நெளியவைக்கும் .
நீண்ட நாள் பதிவுகளைக் கானவில்லையே சகோ!

மாய உலகம் said...

ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து... கலக்கலான அலசல் பாஸ்

K.s.s.Rajh said...

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி....ஆனால் தீபாவளி ரேசில்...முந்துமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்...நானும் வேலாயுதம் பற்றி ஒரு விமர்சணம் போட்டு இருக்கேன்...

கார்த்தி said...

/* 2011 டாப் படம் எது ?
இப்போது
வேலாயுதம் -116 */
என்னதான் விஜய் ரசிகராக இருந்தாலும் இது ரொம்ப ரொம்ப ஓவர்.

மொத்தத்தில் வேலாயுதம் விஜய் ரசிகர்கள் இல்லாதவர்களுக்கு ”பரவாயில்லை- Average" ரகப்படம். விஜய் ரசிகர்களுக்கு நல்ல-Good படம்.
சுறா மாதிரி படங்களே Collectionல பரவாயில்லாம போன படியா இந்தப்படம் நிச்சயம் collectionல அள்ளும்.

kobiraj said...

உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள்

kobiraj said...

கொஞ்சம் பிஸி இயலுமானவரை தொடர்ந்து வலையுலகில் பயணிப்பேன்

Related Posts Plugin for WordPress, Blogger...