Monday, March 19, 2012

நான் விஜய் ரசிகனான கதை


    அண்மைக்   காலமாக  பாலிவுட் படங்களையும் பார்க்க தொடங்கி விட்டேன் . உயிரே ,ஓம் சாந்தி ஓம் ,டான் என மூன்று படங்களுக்கு உள்ளேயே  என்னை  மிகவும் கவர்ந்து விட்டார் சாருக் ..யாருடைய படங்களை முதலில் பார்க்கிறோமோ அவர்களுக்கு நாம் ரசிகன் ஆகி விடுகிறோம் என்று எங்கேயோ படித்த  ஞாபகம் .காதல் கோட்டை முதலில் பார்த்தவன் அஜித்துக்கும் காதலுக்கு மரியாதை (இல்லாவிடில் பூவே உனக்காக ) பார்த்தவன் விஜய்க்கும் ரசிகனாக மாறினார்களாம் .நானும் அவ்வாறா என யோசித்து பார்த்தேன் நான் விஜய் ரசிகனாக மாறியது எவ்வாறு என பழைய நினைவுகளை அசை போட்டு பார்த்தேன் .அவற்றின் சுவாரசியமான தொகுப்பு தான் இது .(இது ஒரு சுயசரிதை   )


.நான் முதன் முதலாய் பார்த்த படம் எது என்று யோசித்தேன் .ஒன்றும் நினைவுக்கு வரவில்லை .ஆனால் முதன் முதலில் கேட்ட பாட்டு 'ஒட்டகத்த கட்டிக்கோ' . என்னுடைய நாலு ,ஐந்து வயதுகளில் யாரோ முனு முனுக்கும்   போது கேட்ட ஞாபகம் .நான்     முதலில் பார்த்த   படம் சூரிய வம்சம் (முழுவதுமாய் ) என்று நினைக்கிறேன் .
. சின்ன வயதில் மின்சாரம் இல்லாத காலத்தில் எதாவது விசேடங்களுக்கு த்தான் படம் போடுவார்கள் .அப்படி   என்றால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் .விடிய விடிய நாலைந்து படம் ஓடும் .என்னுடைய துரதிர்ஷ்டம்      படம்  தொடங்கி  ஐந்து  நிமிடத்துக்கு உள்ளேயே நித்திரை ஆகி விடுவேன். .''அதாண்ட இதாண்ட அருணாச்சலம் நான்தாண்டா ''பாட்டோடு படுத்து விட்டு படம் என்றால் அவ்வளவு தான் இருக்கும் என்று முடிவு செய்த காலமும் உண்டு . பின் ஓரளவு நினைவு தெரிந்த நாட்களில் வீட்டிலேயே இரவு இரண்டு அல்லது மூன்று மணி நேர மின்சாரத்தில் (அவ்வளவு நேரம்தான் இருக்கும் அதுவும் ஒன்று விட்ட ஒரு    நாள்) படங்கள் பார்க்க தொடங்கினேன் .அதிலே தான் பூவே   உனக்காக   ,காதலுக்கு மரியாதை என விஜய் மீது ஈர்ப்பு வர தொடங்கி இருந்தது .எனினும் அநேகம் விஜயகாந்தின் அதிரடிகள் தான் ஓடும் .அப்பாவுக்கு விஜயை கண்ணில காட்ட கூடாது .அவன்ட படத்தில கதையும் இருக்காது .ஒண்டும் இருக்காது என எதிர்ப்பு கிளம்பும் .மாமாவும் விஜயகாந்தின் பட வீடியோ copy களோடு அதிரடியில் நனைய இணைந்து விடுவார். குறைந்த பட்சம் இருபத்தைந்து பேராவது ஒரு படம் பார்க்க இணைந்து இருப்பார்கள் .படங்களில்   எந்தவொரு பாடல் காட்சியும் பார்த்ததாய் ஞாபகம் இல்லை .(முடிவு பார்க்க முடியாமல் போயி விடுமே )  பல கப்டன் படங்கள் பார்த்து இருந்தாலும் உளவுத்துறை தான் என் ஞாபகத்தில் உள்ளது .


என்னதான் விஜய் மீது ஒரு ஈர்ப்பு இருந்தாலும் தலைவர் தான் சூப்பர் ஹீரோ .பாட்சா படம் மனப் பாடம் ஆகி இருந்தது .(பாட்சா அருணாச்சலத்துக்கு முன்னரே  வந்தது .படம் வெளியானவுடன் இங்கு பார்ப்பது இல்லை) .
பாட்சா பஞ்ச் வசனங்கள் தான் வீட்டிலும் பள்ளியிலும் ஓங்கி ஒலிக்கும் .அப்படியான  வசனங்களை பஞ்ச் என அழைப்பார்கள் என்பது இப்போதுதான் தெரியும் .


என்னுடைய ஏழு,எட்டு வயதுகளில் இலங்கை உலக கிண்ணம் வென்ற பின் கிரிக்கெட் எங்களிடமும் பரவ ஆரம்பித்து இருந்தது 
.கிரிக்கெட் வீரர்களும் கதா நாயகர் ஆகியிருந்தார்கள் முக்கியமாக சனத் ஜெயசூரியா எங்கள் எல்லோரிடமும் குடி கொண்டு இருந்தார் .எங்களுடைய (என் நண்பர் வட்டம் )  எண்ணப் படி விஜயகாந்த் தான் நல்லாய் அடிபடுவார் .அர்ஜுன் அவருக்கு போட்டி .விஜய்க்கு அடிபட தெரியாது .காதலுக்கு மரியாதையில் வாங்கு வாங்கு னு வாங்குவாரே .அப்போ எங்களுக்குள் பெரிய விவாதம் நடக்கும் யார் நல்லாய் அடிபடுவார் என்று பல கட்சி பிரிந்து எங்களுக்குள்ளும் அடிபாடு நடக்கும் .இது எல்லாவற்றுக்கும் மேலாய் எனக்கும் என் மச்சானுக்கும் (என் வயதுதான் )விவாதம் வேறு மாதிரி போய் விட்டது .விஜய காந்தையும் ஜெயசுரியாவையும் அடிபட விட்டால் யார் வெல்வார்கள் என்ற தலைப்பில் நானும் அவனும் அடிபட தொடங்கி விட்டோம் .(சனத் துடுப்பு    மட்டையால் சரவெடியாய் அடிப்பதால் மச்சான் அவரையும் இந்த லிஸ்ட் இல் இணைத்து விட்டான் .இப்போதும் குழுவாக ஒருவரை ஒருவர் கலாய்க்கும் போது மச்சானை கலாய்க்க பாயிண்ட் ஏதும் கிடைக்க வில்லை என்றால் நான் கையில் எடுப்பது இந்த மாட்டரை தான் ).


சரி விசயத்துக்கு இன்னும் வரலையே .இவ்வாறான காலத்தில் (விஜய் மீது சின்ன ஈர்ப்பு .அயலவர்களுக்கு தெரியும் ) ஒரு நாள் பிரியமுடன் படம் போடப் பட்டது .நான் வழமை போல் இடையிலேயே தூங்கி விட்டேன் விடிய  எழுந்தால் பேரிடி போல ஒரு செய்தி எனக்கு  .விஜய் செத்து   விட்டார் என  என்ற வடிவில் வந்தது . பிரியமுடன் படம் முடிய விஜய் செத்து விட்டார் என அயல் வீட்டு காரர் சொன்ன செய்தியை நம்பி சில நாட்களாக சோகமாக திரிந்த வரலாறு உண்டு .


(நான் இன்னமும் பிரியமுடன் பார்க்கவில்லை)
 ஆனால் என்னை விஜய் ரசிகனாக மாற்றிய சம்பவம் இது அல்ல ...........................................................
இன்னமும் நான் பாட்சா தான் .என்னடைய பாட்சா நடை க்குத்தான் ஊருக்குள்ளே மதிப்பு ...      
அப்போது இதிலே குறிப்பிடாத கதா நாயகர்களை எனக்கு தெரியாது .  ...........

Post Comment

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Related Posts Plugin for WordPress, Blogger...