Tuesday, June 12, 2012

பில்லா 2 -ஒரு அலசல்

பில்லா 2 இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்களில் ஒன்று .இரு மாதங்களாக இழுத்தடித்து எதிர்வரும் 22 ம் திகதி வெளிவர உள்ளது (அதுவும் இன்னும் நிச்சயம் இல்லை).பில்லா 2 இன் வெளியீட்டை எதிர்பார்த்து இரு வாரம் கழித்து தமது படத்தை வெளியிட காத்திருந்த சகுனி படக்குழுவினர் கடைசியில் எதிர்வரும் 22 படம் வெளிவரும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் .அப்போ தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து ரெடி .சரி இரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதை விநியோகஸ்தர்கள் விரும்பாவிடினும் சூழ்நிலைகள் இடம் கொடுத்தால் மட்டுமே போட்டியை தவிர்க்க முடியும் .இந்நிலையில் வெட்டியாய் இருக்கும் நான் அடுத்து என்ன பதிவு எழுதுவது என திணறிக் கொண்டிருந்த போது ஏன் இந்த இரண்டு படங்களையும் அலசி ஆராய விழைந்ததன் விளைவுதான் இது .

பில்லா -2


அஜித்குமாரின் 51 வது படம் பில்லா 2.அவரின் 50 இல் சிறந்த ஐந்தில் ஒன்று  பில்லா என்ற ஒரு காரணமே காணும் இந்த படத்தின் உச்ச கட்ட எதிர்பார்ப்புக்கு .அதைவிட 50 இல் சிறந்த இன்னொன்று தான் அவரின் 50 மங்காத்தா .கடந்த வருடத்தின் சிறந்த படமாக திகழ்கிறது (?).ஆகவே அதைவிட எதிர்பார்ப்பு எகிறுகிறது .பில்லாவின் முன் அத்தியாயமாய் உருவாகும் பில்லா 2 ஒரு சாதாரணமான இளைஞன் எவ்வாறு சர்வதேச டான் ஆக மாறினான் என்பதே மைய கதை .பில்லாவை இயக்கிய விஷ்ணுவர்த்தனே முதலில்இயக்குவதாய் இருந்து பின்னர் இயக்குனர் சக்ரி டோலேடி இடம் கைமாறியுள்ளது .இவர் தமிழில் ஏற்கனவே உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கியிருந்தாலும் அதிலே கமலின் பங்கு அதிகம் இருந்ததால் அவரின் திறமையை முழுமையாக அறிய முடியாது .தெலுங்கில் ஒரு படத்தை இயக்கியிருந்தாலும் தமிழில் தன்னை நிரூபிக்க இதுதான் சந்தர்ப்பம் .இவரில் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்கள் கூட ஒரு நிமிட டீசெர் பார்த்த பின் இவரில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் .டீசெர் பலத்த வரவேற்பை பெற்றமை அனைவரும் அறிந்ததே .

அஜித் மங்காத்தா வில் வயதான தோற்றத்தில் நடித்து இருந்தாலும் இது பில்லாவை விட இளமையாக இருக்க வேண்டும் என்பதால் கடுமையாக மினக்கெட்டு ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார் .எனினும் பில்லாவை விட இளமையான டேவிட் பில்லா வாக தன்னை காண்பிப்பது கஷ்டம் தான் .எனினும் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை .


பார்வதி ஓம குட்டன் ,ப்ருணா ,வித்யுத் ஜம்பால் ஆகியோர் அறிமுகமாகின்றனர் .ஜம்பால் துப்பாக்கி படத்தின் வில்லன் என்பது குறிப்பிடத் தக்கது .அத்துடன் பழைய டீம் பிரபு ,ரகுமான் .யுவன் அஜித் கூட்டணியில் 6 வது படம் .பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன .இந்த கூட்டணியின் பாடல்கள் என்றும் சோடை போனது இல்லை .பில்லா ,மங்காத்தா வுடன் ஒப்பிடும் போது பாடல்கள் சுமார் ரகம்தான் எனக்கு .பில்லா ,மங்காத்தா தீம் மியூசிக் இல் அடித்து தூள் கிளப்பியிருப்பார் யுவன் .பில்லாவின் சாயல் என்பதாலோ என்னவோ அந்த அளவுக்கு தீம் என்னை ஈர்க்கவில்லை .உனக்குள் மிருகம் வரிகள் என்னை கவர்ந்து உள்ளன .


படத்தின் பலம் 
படம் வெளிவர முன்னர் உள்ள எனது கணிப்பின் படிபடத்தின் பலம் என்று பார்த்தால்
இந்த படத்தை பொறுத்தவரை
1-தல
2-தல
3-தல
ஏனெனில் இந்த படம் முழுக்க அஜித்தையே நம்பி இருக்கிறது .பில்லாவின் வெற்றியில் விஷ்ணுவர்த்தனின் பங்கு இருந்தது .எனினும் அஜித் மீதான நம்பிக்கை காரணமாக அவரையே கழற்றி விட்டுள்ளது தயாரிப்பு தரப்பு .அஜித்தின் படம் வெற்றியோ தோல்வியோ ஒபெநிங் செமை என்பது அசலிலேயே தெரிந்து இருக்கும் .எனவே படத்தை எந்தளவுக்கு அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார்களோ அந்த அளவுக்கு ஒபெநிங் வசூல் அள்ளலாம் .

4-படத்துக்கான பெரும் எதிர்பார்ப்பு
பில்லாவின் அபார வெற்றி காரணமாக அஜித் ரசிகர் மட்டுமின்றி அனைவரும் இப்படத்தை எதிர்பார்த்து உள்ளனர் .எனவே மங்காத்தா வை விட இப்படத்துக்கு ஒபெநிங் அதிகமாக இருக்கும்
5-அண்மைக்காலமாக பெரிய (இதன் விளக்கம் உங்களுக்கு தெரியும் தானே )நடிகரின் படங்கள் எதுவுமே வெளியாக வில்லை .இந்த வருட தொடக்கத்தில் வெளியான நண்பன் தான் பெரிய படம் .எனவே அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் இப்படம் பார்க்க ஆவலுடன் உள்ளனர் .


படத்தின் பலவீனம் 
படத்தின் பலவீனம் என்று பார்த்தால் மேலே கூறப்பட்ட சில விடயங்களே பலவீனமாகவும் மாறும் .எப்படி எனில்
அதிக எதிர்பார்ப்பு
படத்தை பார்க்கும் ரசிகர்கள் பில்லா வுடன் தான் ஒப்பிடுவார்கள் படம் சற்று பிசகினாலும் என்னடா இது பில்லா அளவுக்கு இல்லை என்று அஜித் ரசிகர்களே புலம்புவார்கள் என்றால் மற்றவர்களை சொல்லவும் வேண்டுமா .இதையே சாக்காக கொண்டு பெரும் பிரளயமே நடத்துவார்கள் .ஏழாம் அறிவு அடி வாங்க முக்கிய காரணம் இதுதான் .அதைவிட கடைசி யாய் வெளிவந்த மங்காத்தா வின் வெற்றியோடும் ஒப்பிடுவார்கள் .
தல தொடர்ந்து ஒரே மாதிரி கரக்டர் இல்படங்களில் (பில்லா ,அசல் ,மங்காத்தா)
நடப்பதால் சாரி நடிப்பதால் கோட் சூட் கூலிங் கிளாஸ் என அவரின் ரசிகர்களுக்கே ஒருவித சலிப்பை உண்டு பண்ணலாம் .

சென்னை யில் வசூலில் எந்திரன் தவிர மற்ற படங்கள் பத்து கோடியை தாண்ட முடியாமல் இருக்க அண்மையில் வந்த ஓகே ஓகே 16 கோடியை தாண்டி இருக்கிறது .எனவே இனிவரும் படங்கள் அதை தாண்டுமா என்பதை பில்லா 2 இன் முடிவில் இருந்து அறியலாம் .
################################################################################


சகுனி அடுத்த பதிவில் 
ஆமா யாரு மாமா ?

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...