Friday, October 5, 2012

மாற்றான்-ஒரு அலசல் தமிழ் சினிமாவில்  இந்த வருடத்தின்  மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ள படங்களில் ஒன்று .எதிர்வரும் 12 ம்  திகதி வெளிவர உள்ளது .இந்த மாற்றான் பற்றிய ஒரு அலசலே இந்த பதிவு .

மாற்றான் 
சூர்யா ,காஜல் , ,Sachin Khedekar(தெய்வ திருமகள் படத்தில் அமலாபாலின் தந்தை யாக நடித்தவர் )மற்றும் பலர் நடிப்பில் வெளிவர இருக்கும் மாற்றான் படத்தை கே.வி .ஆனந்த் இயக்குகிறார் .ஒளிப்பதிவு s .சௌந்தர் ராஜன் ,இசை ஹரிஸ் ஜெயராஜ் .கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இப்படத்தை a g s என்டேர்டைமென்ட்  விநியோகிக்கிறது .தெலுங்கிலும் brothers  என்ற பெயரில் இதே நாளில் வெளியாகும் இப்படம் சூர்யாவின் இதுவரை வெளிவந்த படங்களின் மிகப்பெரும் வெளியீடாக அமையவுள்ளது .

கே.வி .ஆனந்த் 

 புகைப்பட ஊடகவியாலராக  (photo journalist ) தனது வாழ்வை ஆரம்பித்த கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமிடம் உதவியாளாராய்  இணைந்ததன் மூலம் சினி உலகில் அடி எடுத்து வைத்தார் .தேவர்மகன் ,அமரன் போன்ற சில படங்களுக்கு  ஒளிப்பதிவு உதவி யாளராய் பணி யாற்றிய பின் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படத்திலேயே(மலையாளம் ) சிறந்த ஒளி ப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கி தனது திறமையை நிரூபித்தார் .சிவாஜி,முதல்வன்,நேருக்குநேர் போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராய்  பணியாற்றிய இவர்  இயக்கிய முதல் படம் கனா கண்டேன் .பெரிய வெற்றியை பெற வில்லை ஆயினும் விமர்சகர்களின் பாராட்டை பெற்றது .அடுத்து இயக்கிய படங்கள் அயன் ,கோ .மூன்று படங்களிலேயே முன்னணி இயக்குனர் ஆகி விட்டார் .இதிலிருந்து இவரின் படங்களின் மவுசை அறியலாம் .

படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுப்பதுதான் இவரின் ஸ்பெஷல் .மசாலா படமான அயன் வெளியான 2009 ம்  ஆண்டின் அதிக வசூலை பெற்ற படமாக திகழ்கிறது .சன் பிக்சர்சின் சளைக்காத விளம்பரமும் ஒரு காரணம் என்றாலும் இவர்தான் பிரதான காரணம் .தமிழ் சினிமாவில் தடுமாறி வந்த ஜீவாவை தனக்கென ஒரு இடத்தில் அமர்த்திய பெருமையும் இவருக்கே .சூர்யாவுடன் மீண்டும் கை கோர்த்து இருக்கும் இவரின் மாற்றானுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுவது தவிக்க முடியாததே

மாற்றான் படத்தின் கதை ஒட்டிப்பிறந்த இரட்டையரின் கதை .ஒருவன் நல்லவன் மற்றவன் கெட்டவன் .தமிழ் சினிமாவுக்கு புதுமையான கதை என சொல்ல முடியாத நிலையை அண்மையில் வெளிவந்த சாருலதா ஏற்படுத்தி விட்டது .எனினும் இரணது படமும் வெவ்வேறு திசையில் பயணிப்பதால் அலட்டிக் கொள்ள தேவை இல்லை .trailor பிரமிப்பு ஊட்டியிருந்தது .எனினும் அண்மைக்  காலங்களில் படங்களின் trailor ,first லுக் வந்தவுடனேயே இது இன்ன படத்தின் காபி என இணையத்தில் கலாய்ப்பது வாடிக்கை ஆகி விட்டது .சில உண்மையாய் இருந்தாலும் பல பொய்யான தகவல்களே .அந்த வகையில் இது stuck on you எனும் ஹாலிவுட் படத்தின்  தழுவல் என ஒரு கூட்டம் .எதிர்பார்க்கிறது எனினும் படம் அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடி  ஆக்கும் என்பதே எனது கணிப்பு .


சூர்யா 

சூர்யாவுக்கு ,விஜய் அஜித் அளவுக்கு ரசிகர்கள் கிடையாது .எனினும் இயக்குனர் தெரிவில் அவர்கள் காட்டிய அசமந்தமும் சூரியாவின் மிக சிறந்த இயக்குனர் தெரிவும் சில ஆண்டுகள் மக்கள் மனதில் அவரை முன்னணியில் வைத்து இருந்தது .இப்போது விஜய் ,அஜித் உம்  இதே வழியை பின்பற்ற ஆரம்பித்து உள்ளதால் முன்னணியை தக்க வைக்க முடியாமல் போய் விட்டது .சூர்யா கொஞ்ச காலம் தொடர் ஹிட் கொடுத்து வந்த போது  மக்கள் அவரின் படங்களை ரசித்தனர் ,எனினும் வழமையாய் இருந்த ரசிகர்கூட்டத்தை பெரியளவில் அதிகரிக்க முடிய வில்லை .அப்படி அதிகரித்த  கூட்டத்தில் பெரும்பாலனவர்கள் அயன் படம் மூலம்தான் என்பதை அடித்து கூற முடியும் .சூர்யாவை வசூல் நாயகர்களில் ஒருவராக மாற்றிய படமும் அயன் தான் .
 .விஜய் ,அஜித் இன் அண்மைக்கால வெற்றிகளும் ஏழாம் அறிவின் சறுக்கலும் சூர்யாவை சற்று பின் தள்ளி விட்டன .ஏழாம்  அறிவு சூர்யாவின் படங்களிலேயே அதி கூடிய வசூலை பெற்றிருந்தாலும் எதிர் மறை விமர்சனங்களும் மக்களின் கருத்துக்களும் உதயநிதியின் அதீத பில்ட் அப்பும் சூர்யாவின் மீது கரும் புள்ளி ஒன்றை ஏற்படுத்தி விட்டன .அத்துடன் பொது  உலகில் அண்மைக்காலமாக சூர்யாவின் போக்கும் வெறுக்கத் தூண்டும் விதமாக உள்ளது .இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதிலடி மாற்றான் வெற்றி தான் .சூர்யா மிக சிறந்த பதிலடியை கொடுப்பார் என நம்புகிறேன் .

ஹரிஸ்

ஹரிஸ் சூர்யா கூடணியை பற்றி விபரமாக ஏற்கனவே சொல்லி விட்டேன் ..எனவே ஹரிசின் அண்மைய நிலையை பார்ப்போம் .பாட்டுக்கள் பெரும்பாலானவை காபி  என பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஹரிசின் பாடல்கள் மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன .இந்த வருடத்தின் டாப் ஆல்பம் ஆக இவரின் நண்பன் திகழ்கிறது .ஓகே ஓகே யும் சோடை போக இல்லை .ஆனால் மாற்றான் அந்த ரேஞ்சுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .சூர்யாவுடன் ஆன எல்லா படங்களின்  பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் கடைசி இரு படங்களில் ஓரளவு சொதப்பி இருக்கிறார் ஹரிஸ் .சில வேலை நிறைய படங்கள் பண்ணிவிட்ட சலிப்போ என்னவோ .பாடல் வெளியாகி ஓரளவு காலம்ஆகி விட்டதால் படம் வரும் போது பாடல்கள் ஹிட் அடிக்க சந்தர்ப்பங்களும் உள்ளனஏனெனில் எல்லாம் அயன் தந்த எதிர்பார்ப்பு .அயனின் டைட்டில் சாங் மியூசிக் ஐ யாரும் மறந்து இருக்க மாட்டிர்கள் .

காஜல் 

தெலுங்கில் மகாதீரா ,பிசினஸ் மன் போன்ற படங்கள் மூலம் முன்னணி இடத்தை பெற்று விட்டாலும் தமிழில் இதுதான் இவருக்கு பெரிய படம் .பழனி  ,மோதி விளையாடு ,நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு படம் மட்டும் தான் வெற்றி பெற்று இருந்தது .எனவே தமிழில் மாற்றான் இவரை முன்னணி நடிகையாக மாற்றும் என நம்புவோம் .தொடர்ந்து துப்பாக்கியிலும் கலக்க இருப்பதால் தற்போது .எழுந்துள்ள சமந்தா அலையை அடக்க சந்தர்ப்பங்கள் உள்ளன .


கே.வி ஆனந்த் சூப்பர் கில்லாடி தந்து படங்களிலேயே தணந்து முன்னைய படங்களை கலாய்த்து காட்சிகள் அமைத்து இருப்பார் .மாற்றானிலும் கோ படத்தை கலாய்த்து ஒரு காட்சி trailor  இல் வெளியாகி இருந்தது .மாற்றானில் இரு சூர்யாவில் அகிலன் அஜித் fan விமலன் விஜய் fan ஆம் .ஆமா ஒருவன் கெட்டவன் ஒருவன் நல்லவன் அப்போ யாரு நல்லவன் யாரு கெட்டவன்  சொல்லுங்க பார்ப்போம் .......ஹா ஹா

மாற்றான் வெற்றி பெற படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் 

Post Comment

7 comments:

Kiruththikan Yogaraja said...

நல்லா இருக்கு //அத்துடன் பொது உலகில் அண்மைக்காலமாக சூர்யாவின் போக்கும் வெறுக்கத் தூண்டும் விதமாக உள்ளது//ஏன் என்ன ஆச்சு?

என்னது சமந்தா அலையை அடக்க சந்தர்ப்பமா சமந்தா ரசிகர்மன்றம் சார்பாக கடுமையான கண்டனங்கள்..ஆவ்வ்வ்வ்

kobiraj said...

Kiruththikan Yogaraja
நன்றி .முன்னரை போல் அலல்லாது சூர்யா மேடைகளில் பேசும் விதம் திமிர் ,இறுமாப்பு கலந்து இருப்பதைத்தான் கூறினேன் .
நானும் சமந்தா ரசிகர் மன்ற மெம்பெர் தான்பா

Anonymous said...

விவேக் இந்த படத்துல இருக்காரா? இல்லன்னு சொன்னாகளே

priyan said...

நல்லவன் கேட்டவன் இல்லை திறமைசாலி டுபாக்கூர் ... ஆங்கில அகர வரிசையில் நடிகர்களின் பெயரை இந்த வரிசையோடு பொருத்தி கொள்ளுங்கள் மிக சரியாக இருக்கும்

kobiraj said...

மொக்கராசு மாமா
விக்கியில் இருப்பதாக போடப்பட்டு உள்ளது ற்றைலோர் இல் இல்லாத படியால் எனக்கும் சந்தேகமாய்தான் உள்ளது .

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

kobiraj said...

thanks firur comment

Related Posts Plugin for WordPress, Blogger...