Saturday, September 1, 2012

முகமூடி -சோடாமூடி யா
நான் ஒரு மசாலா ரசிகன் எனக்கு தமிழ் சினிமாவை விட்டால் ஒன்றும் தெரியாது இப்பதான் தெலுங்கு ,ஹிந்தி என்று படங்களை தேடி பார்க்கிறேன் .உலக சினிமா  என்றால் என்னவென்றே தெரியாது .அதே காரணத்தால் உலக சினிமா இயக்குனர் மிஷ்கினும்  அவ்வளவு பரிச்சயம்  இல்லை எனக்கு .சித்திரம் பேசுதடி ,அஞ்சாதே ,நந்தலாலா,யுத்தம் செய் வரிசையில்  5 வது படம் முகமூடி உலகப் படங்களை காபி அடிக்கிறார் என்ற பலத்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பவன்தான் முகமூடி . ஆங்கிலத்தில் வரும் சூப்பர் ஹீரோ படங்களையே நான் பார்ப்பதில்லை .அதைவிட ஏற்கனவே தலைவர் இந்த சூப்பர் ஹீரோ விலாட்டை முகமூடி போட்டு  வேலாயுதத்திலும் போடாமல் குருவியிலும் செய்த படியாலும் அதை விட இதிலே ஜீவா  புதுசா புடுங்குவதட்கு ஆணிகளே இல்லை என நான் கருதியதாலும்  ஒரு தடவ முடிவு எடுத்தா என் பேச்ச நானே கேக்க மாட்டன் என்பதாலும் முகமூடி பார்க்கும் எண்ணமோ பார்க்காமல் விமர்சனம் எழுதும் என்னமோ இருக்கவில்லை .பிறகு ஏன் இந்த  இப்பிடி மொக்கை போடுறாய் என்று உங்க மைன்ட்  வாய்ஸ் கேட்பது புரிகிறது.
 இலங்கையில் facebook  இல் அண்மைக்காலமாக அனைவரையும் கவர்ந்துபிரபலமாக இருக்கும் என்னுடைய தோழர் Iroshan Puviraj (Idiott Irosh).அவர்கள் முதல் தடவையாக எழுதிய விமர்சம் இது அவரது அனுமதியோடு இங்கு பதிகிறேன் .படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் முகமூடி சோடாமூடி யா 


நீண்ட நாட்களாக பெரிய படங்கள் எதுவும் வராததால் நம்மள காணல்லயேன்னு எங்க ஊர் தியேட்டர்காரன் கவலபடகூடாது என்ற நல்ல நோக்கத்துக்காக முகமூடி பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவுசெய்து இருந்தேன். இந்த வருடம் வந்த பெரிய நடிகர்களின் சகுனி,பில்லா-2 போன்ற படங்கள் தந்த முதல் நாள் SHOW தந்த அனுபவங்களாலும், “படத்துக்கு அவ்ளோ பெரிய எதிர்பார்ப்போடு போகாதீங்க ஒரு சாதாரண சூப்பர் ஹீரோ கதையை நம்ம ஊருக்கு ஏற்றமாரி எடுத்து இருக்கன்,BAT MAN,SUPER MAN,ராணி காமிக்ஸ் மாயாவி போன்ற சூப்பர் ஹீரோக்களின் இன்ஸ்பிரேசன் தான் முகமூடி என்ற மிஷ்கினின் தைரியமான ப்ரோமேஷனும் கொஞ்சம் எதிர்பார்ப்பை குறைச்சு ஒரு சாதாரண படத்துக்கு போற பீலிங்க எனக்குள்ளயே உருவாக்கிட்டு நெஞ்ச திடப்படுத்திட்டு படம் பார்க்க போனேன்.அந்த சின்ன எதிபார்ப்பையும் நிறைவேர்த்திச்சா என்றால் இல்லை என்று பச்சையாக சொல்லமாட்டேன்.
முகமூடி படம் மிஷ்கினோட இயக்கத்தில்,யூ ரீ.வி தாயரிப்பில் வெளியிடப்பட்டிருக்கு.
படத்தோட கதைன்னு பார்த்தா ஜீவா ஒரு குங்பூ மாஸ்டர்ட சிஷ்யன்.வழமை போல ஹீரோவ விட பர்சனாலிட்டி குறைஞ்ச 4 பசங்க தண்ணி அடிச்சுட்டு ஊட்ல தண்ட சோறுனு போர்வாங்கிட்டு
கோவிச்சுக்கிட்டு மொட்டமாடில இருக்கிற அவரோட தாத்தா ரூமில தங்குற ஒரு ஆளு.
அவருக்கு ஒரு ஆளு அதான் நம்ம ஹீரோயினு பூஜா ஹெக்டே. அவங்க அப்ப போலீஸ் அதிகாரி நாசர்.இடையிடையே சில கொள்ளைகள் நடக்க போலீஸ் அலேர்ட் ஆகி நாசர கேஸ காண்டில் பண்ண உடுறாய்ங்க.போலீஸ் அதிகாரி நாசரை திருட்டு கும்பலை சேர்ந்தவங்க சுட அந்த டைம் காதலிய இம்பிரஸ் பண்ண வந்த ஜீவா மாட்டிக்கிறார்.போலீஸ் ஜீவாவ துரத்த இடையில் தன் நண்பனையும் பறி கொடுக்கிறார்.கொலைப்பழியிலிருந்து தப்பிக்கவும் தன் காதலியிடம் தான் அவன்(கொலைகாரன்) இல்லை என்று நிருபிக்கவும்,தன் நண்பனைகொன்றவர்கள் யார் என்று கண்டிபிடித்து பழிவாங்கவும் முகமூடியை அணிகிறார் ஜீவா.அதுக்கப்புறம் என்ன நடந்தது என்பதை நீங்களே சொல்லிடுவீங்க நான் சொல்லி ஒரு பந்திய வேஸ்ட் பண்ணல.
ஹீரோ ஜீவா படம் முழுக்க தெரிகிறார்.தனது முழு உழைப்பை கொட்டி இருக்கிறார்.
சண்டைக்காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் சரி அழகாக தன் பங்கை செய்து இருக்கிறார்.
மேலதிகமாக பாய்கிறார்,பறக்கிறார்,ஓடுகிறார்.ஹீரோயின் பூஜா ஹெக்டே அழகாக தான் இருந்துச்சு ஆனா பொண்ணோட மூஞ்சி நினைவிலயே இல்ல ஏன்னா அது 2,3 சீன்கும்,ஒரு பாட்டுக்கும் வந்து போகுது.போலீஸ் அதிகாரியாக வரும் நாசர் வழமை போல கச்சிதமான தெரிவு.
குங்பூ மாஸ்டராக வரும் அந்த மனிதன் அனேக இடங்களில்அமைதியாகவும் நரேனுடன் மோதும் போது ஆக்ரோசமாகவும் தன்னை மாற்றி கைதட்டல் பெறுகிறார்.
மேலும் ஜீவாவின் நண்பர்கள் வழமை போல ஒருவர் உயிரைவிட மற்றவர்கள் காணாமல் போகின்றனர்.ஹீரோயிண்ட ”கதை சொல்லுங்க சித்தி”ன்னு கேட்கும் அந்த ரெண்டு பசங்களும் மனசில நிக்கிறாங்க.
மொட்டைமாடியில் இருக்கும் 2 தாத்தாகள், ஒரு கூன் முதுகு பையன் போன்றோர் எதற்காக அவ்ளோ பெரிய எந்திரன் ரஜினி ரோபோ தயாரிக்கிற போல ஒரு செட்ல இருக்கிறாங்க என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.அதன் பின் கிளைமாக்ஸில் அவர்கள் பண்ணும் கோவம் வாறபோல காமடிகளும் ரசிக்கவைக்கின்றன.படத்தில் காமடியன் இல்லை என்ற குறையை வில்லன் நரேன் கச்சிதமாக நிவர்த்தி செய்துள்ளார்.ஏதோ ஆணிய புடுங்குறபோலவே சுத்தியலும் கையுமா திருநங்கை போல சுத்துறதும் முறைச்சு பாக்கிறதும் கிளைமாக்ஸ்ல பயம்காட்டுறன்னு காமடி பண்றதுமா மனிதன் ஒரே ஜாலி தான்.இதுல மிஷ்கிண்ட வாயால ஹீரோக்கு நிகரான பாத்திரம்னு நரேன்னு ஒரு ப்ரொமோஷன் வேற!!!

முகமூடி படத்தில் மிகப்பெரிய ப்ளஸ்களில்ஒன்று சண்டைக்காட்சிகள்.
குங்பூ,புரூஸ் லீ என்ற வார்த்தைகள் படம் முழுக்க ஒலிப்பதால் அவற்றின் பெயரை கெடுக்காமல் உழைத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள் சண்டைப்பயிற்சியாளர்.மற்றயது கே இன் பின்னணி இசை. பிற்பாதியில் அனேக காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பின்னணி இசை அவற்றை தூக்கி கொடுத்து தூங்கியவர்களை எழுப்பி விடுகிறது
. ”புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”ன்னு ஆரம்பத்தில போட்டுட்டு படம் தொடங்கி 5 நிமிசத்தில மிஷ்கினின் குரலில் வரும் அந்த குடிகார பாடல் காமடியான கொடுமை.ஏற்கனவே பிரபலமான கார்க்கியின் வரிகளிலான “வாய மூடி சும்மா இருடா” பாடல் அருமை. காட்சி அமைத்த விதம் படு மொக்கைதனம்.
“மாயாவி மாயாவி”பாடல் படத்தில் இல்லாதது ஏமாற்றம்.
ஒளிப்பதிவு சத்யா.வழமை போல மிஷ்கினின் படத்தில் வருவது போல கமராவ தூக்கி அசைச்சு இருக்கார்.குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. படத்தொகுப்பு சண்டைக்காட்சிகளை விறுவிறுப்பாக காட்டியிருக்கிறது.இருப்பினும் பிற்பாதியில் சில கத்தரிகளை போட்டு இருந்து இருக்கலாம்.மொத்தத்தில் தொழிநுட்ப ரீதியில குறைகள் அவ்வளவாக இல்லை.
முற்பாதியில் ரசிக்ககூடியதாக அனேக காட்சிகள்,சிறந்த தொழிநுட்பம் இருப்பினும் இடைவேளைக்கு சிறிது நேரம் கழித்து வரும் மிக மொக்கையான காட்சி அமைப்பும் திரைக்கதையும் முகமூடியின் முகதிரையை கிளிக்கின்றன.மிஷ்கினின் வழமையா கமரா கோணங்கள்,குனிந்து கொண்டு பேசும் கேரக்டர்கள் ,லூசு போல நடந்து வந்து கன்னத்தில் அடிக்கும் ஹீரோ இவையெல்லாம் இயக்குனர் டச் என்று மிஷ்கின் நினைத்து ரசிகர்களின் கடுப்பை மேலும் மேலும் வாங்கி கொள்கிறார்..மேலும் அவ்ளோ கஷ்ரப்பட்டு உருவாக்கின புல்லட் ப்ரூஃப் முகமூடியிலும் பார்க்க மனசில நிக்கிறது ஜீவா ஆரம்பத்தில் அணியும் அந்த சூப்பர் ஹீரோ ட்ரெஸ் தான்.முகமூடி என்ற அந்த சூப்பர் ஹீரோவின்
சாகசங்களை கிளைமாக்ஸில் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே.இப்படிப்பட்ட சில
குறைகள்,லாஜிக் ஓட்டைகளால் படம் முடிந்து வரும் போது மொக்கை படம் பார்த்துவிட்டோமே என எண்ணத்தோன்றியது.
மொத்தத்தில் முகமூடி-மிஷ்கின் படமும் அல்ல, சூப்பர் ஹீரோ படமும் அல்ல ,படு மொக்கை படமும் அல்ல எப்டீன்னு நீங்களே தியேட்டர்ல பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
 Iroshan Puviraj (Idiott Irosh).

அப்புறம் தலைப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லீங்கண்ணா .நம்ம மிசுகினே ஒருபேட்டியில் சொல்லியிருக்கா  

Post Comment

3 comments:

அன்பை தேடி,,அன்பு said...

padathai vida unga vimarsanam super

T.Thenmathuran said...

இரோஸன்... வாழ்த்துக்கள்... விமர்சனம் நல்லாத்தான் இருக்கு...ஆனாலும் உத நம்பி அந்தப் படத்தப் பார்க்கேலாது.... ஏன்னா சேவல் படம் நல்லாயிருக்குடான்னு போன் பண்ணி தியேட்டருக்குக் கூப்பிட்டத அவளவு சீக்கிரமா மறந்துடமாட்டேன்...

kobiraj said...

T.Thenmathuran
தேன் நல்ல அனுபவம் போல

Related Posts Plugin for WordPress, Blogger...