தல அஜித் நடிக்கும்50 வது படம் மிகுந்த எதிர்பார்ப்பு .மல்டி ஸ்டார் படம் என்பதாலும் இப்போது வீட்டில் வெட்டியாக இருப்பதாலும் முதன்முறையாக தலையின் படம் ஒன்றுக்கு முதல் காட்சி பார்க்க சென்றேன் .யாழ்ப்பாணத்தில் விஜய் படங்களுக்குத்தான் ஒபேனிங் செமையாக இருக்கும் .அஜித்துக்கு இருந்தாலும் அந்த அளவுக்கு இருக்காது (தலைவர் ரஜினி விதிவிலக்கு ).ஆனால் இன்றைய தினம் குவிந்த கூட்டத்தை பார்த்த போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு தெரிந்தது .பயங்கர நெரிசல்.ஒருவாறு சமாளித்து டிக்கெட் எடுத்துக் கொண்டேன் .படம் போடுவதற்கு நிமிடம் முன்பே ஹவுஸ் புல் ஆகிவிட்டது .(யாழ் மனோஹரா இலங்கையில் இப்போது உள்ள தியேட்டர்களில் மிகப் பெரியது .ஏறத்தாள 1000 பேரை கொள்ளும் ). சரி படத்துக்கு வருவோம் .பட வெளியீடு இழுபறியில் நடந்தது அனைவரும் அறிந்ததே .சன் படத்தை வழங்கிய போதும் வழமையான ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அடக்கி வாசித்து உள்ளார்கள் .தல50 என்பது தல இதுவரை நடித்த படங்களின் புகைப்பட தொகுப்பாக அட்டகாசமாக வடிவமைத்து இருந்தார்கள்.படத்தின் ஆரம்ப காட்சிகளை பார்க்க தல ரசிகர்கள் இடம் கொடுக்க வில்லை .கோடி ரூபாவை அடைவதற்காக ஐந்து பேர் போராடும் விதமே படத்தின் மைய கதை .படத்தின் கதையும் அதுவே .படத்தின் கதையை விட திரைக் கதையை நகர்த்தும் விதத்திலேயே இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது.வெங்கட்பிரபு அதை நன்கே செய்திருக்கிறார் .
அஜித்
படத்தில் சகல பாத்திரங்களுமே முக்கியமானவை.ஹீரோயிசம் இல்லை .அதுவும் 50வது படம் நெகடிவ் கேரக்டர் வேறு . தன்னை மட்டும் முன்னிலைப் படுத்தாத இந்த படத்தை தெரிவு செய்து நடித்த அஜித்தின் பரந்த மனதை முதலில் பாராட்டியே ஆக வேண்டும் .வினாய்க் மாதவன் 40 வயது கடந்த போலீஸ் வேலையில் இருந்து நீக்கப் பட்ட உத்தியோகத்தர் .இதுதான் தலையின் கதா பாத்திரம்.கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் .வயதுக்கேற்ற நடிப்பு.திட்டம் தீட்டும் போது ஆழ ஆராய்ந்து நிதானமாக முடிவெடுப்பது ,நகைசுவை காட்சியிலும் கோபக் காட்சியிலும் ,திரிசாவுடன் ஆன காதல் காட்சியிலும் அவர் காட்டும் முக வெளிப்பாடு என்பன அவரின் நடிப்பின் முதிர்ச்சியை காட்டுகிறது .சண்டை காட்சிகளிலும் ,சாகச பைக் சேசிங் காட்சியிலும் அதிரடியில் பின்னி பெடல் இருக்கிறார் .அதை விட முக்கியமாய் நடன காட்சிகளில் மினக்கெட்டு இருக்கிறார். முன்னேற்றம் தெரிகிறதுமொத்தத்தில் தனது பங்கை தனக்கேயுரிய விதத்தில் கச்சிதமாக செய்துள்ளார் .சக போட்டியாளரும் ,நண்பனுமான விஜயின் பாடல் காட்சி ஒன்றை படத்தில் சேர்த்தமையானது அஜித்தின் பெருந்தன்மை யையும் தமிழ் சினிமாவின் ஆரோக்கிய நிலையை யும் காடுகிறது .
அர்ஜுன்
. ஆக்சன் கிங் தான்தான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார்.படத்தில் தான் 2வது ஹீரோ என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக் கொண்டு தனதுபங்கை திறம்பட செய்து அனைவரையும் கவர்ந்துள்ளார் அர்ஜுன்.இவரின் இளமை ரகசியம் தான் என்னவோ .அஜித்தை விட இளமையாக உள்ளார் .தனக்கு கை வந்த கலையான போலீஸ் அதிகாரி வேடத்தில் கொள்ளை கும்பலை தேடி வலை விரிக்கிறார்
திரிஷா
மாமிக்கு படத்தில்.அதிக முக்கியமில்லை.அதிகரித்த பாத்திரங்களின் அளவால் த்ரிஷா என்னை ஈர்க்க வில்லை.அஜித்தின் காதலியாகவும் கிரிக்கெட் புக்கி ஜெயபிரகாசின் மகளாகவும் வருகிறார் த்ரிஷா. .வாடா பின்லேடா பாட்டில் அஜித்துடன் ரொமான்ஸ் செய்கிறார் .அழகாகவும் இருக்கிறார்.
. மற்றைய பாத்திரங்களில் அடுத்ததாக பிரேம்ஜி ஜொலிக்கிறார். .அண்ணனின் படம் தம்பிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது போல் தெரிகிறது.பிரேம் பாத்திரத்தில் நகைசுவையான பிரிலியன்ட் ஆக கொள்ளை கும்பலில் ஒருவனாக வருகிறார்.படத்தில் இன்னொரு கொள்ளையனாக வைபவும் அவருக்கு ஜோடியாக அஞ்சலியும் வருகிறார்.அர்ஜுனின் மனைவியாக அன்ரியா வருகிறார்.தியேட்டர் அதிபர், கிரிக்கட் புக்கியாக ஜெயபிரகாஸ் நடித்துள்ளார் .விளையாடு மங்காத்தா பாடலுக்கு லட்சுமிராய் பயன் படுத்தப் பட்டிருக்கிறார்
வெங்கட்பிரபு
மங்காத்தா கண்டிப்பாக இயக்குனரின் படம் படத்தின் ஹீரோ திரைக்கதை தான்.வெங்கட் பிரபு ஆட்டம் என்ற தலைப்பிலேயே தெரிகிறதுஆரம்பத்தில் சற்று மெதுவாக நகரும் திரைக்கதை கொள்ளையுடன் சூடு பிடிக்கிறது .தனது எல்லா படங்களிலும் கிரிக்கெட்டை புகுத்தும் வெங்கட் இதிலும் கிரிக்கெட்டை புகுத்தியுள்ளார் .எனினும் ஆழ உடுருவ இல்லை.
யுவன்
படத்தின் முக்கிய தூணாக இசை அமைந்துள்ளது .யுவனின் பின்னணி இசை.படத்தின் தீம் இசை அருமையாக இருக்கிறது ..பில்லா தீம் இசையை போல் இதுவும் பிரபலமாகும் விளையாடு மங்காத்தா,அம்பானி பரம்பரை பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன .சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் பாராட்டும் படி உள்ளது .படத்தை கலர்புல்லா காட்டியுள்ளார்
குறைகள்
மங்காத்தா படத்தில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் நடித்திருப்பதால் யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று அறிவதற்கிடையில் தலை சுத்துகிறது .அவர்களை அறிமுகப் படுத்துவதிலேயே நேரம் இழுத்தடிக்க படுகிறது .வழமையான டீம் போர் அடிக்கிறது .பிரேம் செய்யும் லூட்டிகள் வழமை போலவே இருப்பதால் மொக்கையாகவே உள்ளது .அஜித் ஓவர் குடிகாரனாக நடித்து இருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் பிழையான எண்ணக் கருவை விதிக்க வாய்ப்பு உள்ளது.பல இடங்களில் மன்னிக்க முடியாத லாஜிக் மீறல்கள் உள்ளன.போலீஸ் அதிகாரியான அஜித்தை ஜெயபிரகாஸ் நம்புவது ,500 கோடியை கடத்தும் விதம் மிகவும் சின்னப் புள்ள தனமாக உள்ளது.அஜித் கோடிக்கு ஆசைப் படுவதற்கு எந்த விதமான காரணமும் சொல்லப் படஇல்லை.படத்தின் முடிவை முதலே அனுமானிக்க கூடியதாக உள்ளது.
பிடித்த வரிகள்
நானும் எவ்வளவு நாளுக்குத்தான் நல்லவனாயே நடிக்கிறது .
ஓவர் confident உடம்புக்கு ஆகாது .
சத்தியமாய் இனி தண்ணியே அடிக்க கூடாது .
லைட் போட்டு வண்டி ஓட்டலாம் .ஆனா லைட் ஆ போட்டுகிட்டு வண்டி ஓட்ட கூடாது.
என்ன வந்ததில் இருந்து சீரியஸ் ஆயே இருக்கீங்க .காமெடி பண்ண நான் என்ன சந்தானமா?
மனுஷன் கண்டு பிடிச்சதிலேயே உருப்படியானது ரெண்டு .ஒன்னு சரக்கு இன்னொன்னு முறுக்கு
பிடித்து இருந்தால் தமிழ் இன்லியில் ஓட்டு போடுங்கள்
38 comments:
Ajith Always Rocks. Thala Pola Varuma?
//மங்காத்தா -போக்கிரி 2//
தலைப்பே சரியில்லையே. போயும், போயும் விஜய் படத்தோட தல படத்தை கம்பேர் பண்றிங்களே?
//விஜய் படங்களுக்குத்தான் ஒபேனிங் செமையாக இருக்கும் .அஜித்துக்கு இருந்தாலும் அந்த அளவுக்கு இருக்காது//
ஹா ஹா ஹா. இந்த வருஷத்திலேயே நான் கேட்ட முதல் ஜோக் இது தான் சார். அப்பறம் எதுக்கு சார் அஜித்தை 'ஓபனிங் கிங்' அப்படின்னு சொல்றாங்க? இதிலிருந்தே நீங்க முதல்,முதலாக தல படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்த்திருக்கிறீர்கள் என்று தெளிவாகவே தெரிகிறது.
ஹிஹி பரவாலயே!!
ஆமா யார் ஒருத்தர் மேல வந்து காமெடி பண்ணிட்டு போறார்?
சண்டை ஆரம்பிச்சாச்சு போல...
ஆரம்பிச்சுட்டாங்களா..ரைட்டு.
ஆரம்பிச்சுட்டாங்களா..ரைட்டு.
மங்காத்தாவுக்கும், போக்கிரிக்கும் எந்த சம்பத்தமும் இல்லையே(ஹிரோ போலீஸ் என்பதை தவிர) அப்புறம் எதுக்கு பாஸ் இந்த தலைப்பு?
மங்காத்தாவுக்கும், போக்கிரிக்கும் எந்த சம்பத்தமும் இல்லையே(ஹிரோ போலீஸ் என்பதை தவிர) அப்புறம் எதுக்கு பாஸ் இந்த தலைப்பு?
தல நண்பனாக பார்த்ததாலே தான் அப்பிடி ஒரு தலைப்பு .பிரசாத்
அப்புறம் யாரு சொன்ன தலையை கிங் ஒப் ஒபெநிங் எண்டு .உங்க மொக்க காமெடியை எல்லாம் வாசிக்க சிரிப்பு தாங்க முடியவில்லை.நான் அஜித் படத்துக்கு முதல் ஷோ போவதில்லை எண்டுதான் சொன்னான் .௨வது ஷோ தான் போறனான் .ஏன் தெரியுமா முதல் ஷோ முடிந்ததும் கூட்டம் காலியாகிடும்.அசல்,ஏகன் அப்பிடித்தான் .
சிவா அண்ணா விடுங்கண்ணா .பாவம் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு ஓவரா புலம்பிட்டாறு
ரேவேரி ,சென்கோவி சார் வருகைக்கு நன்றி .நீங்க சும்மா விட மாட்டேங்க போல கிடக்கே
*anishj* ''மங்காத்தாவுக்கும், போக்கிரிக்கும் எந்த சம்பத்தமும் இல்லையே(ஹிரோ போலீஸ் என்பதை தவிர) அப்புறம் எதுக்கு பாஸ் இந்த தலைப்பு?''தேயட்டரில் போய் பாருங்க .பார்த்தும் தெரியலையா .இன்னொரு வாட்டி போய் பாருங்க
வணக்கம் பாஸ்...
இருங்க படிச்சிட்டு வாரேன்.
எல்லாவற்றிலும் ஓட்டுப் போட்டாச்சு...
அவ்....
ஹா....தியேட்டரிற்குப் போயிடுறேன் சாமியோவ்..
தலைப்பில் இப்படி ஒரு சஸ்பென்ஸா..
விமர்சனம் சூப்பரா எழுதியிருக்கிறீங்க.
விமர்சனம் நீட்
தளபதியும் தலயும் ஒற்றுமயதான் இருகாங்க ஆனா ரசிகர்கள் ஏன் இன்னும் இப்படியே இருக்கீங்க திருந்துங்கபா உங்க தலைவர்களை பாத்து
Nice review. Missed to read earlier. I had published all "Vimarsanam" compilation. Did not include your review :((
பரவாயில்லை நண்பரே நன்றிகள் மோகன் குமார்
நிருபன் அண்ணா நன்றிகள் .
cp சார் நம்ம ப்ளாக் பக்கம் வந்தது பெருமையாய் இருக்கு சார் .நன்றிகள்
ராகேட் ராஜா சார் நானா சண்டைக்கு போனேன் .யாரோ வந்தார் ஏதோ சொன்னார் நன் என்ன செய்ய
good review
அஜித் ரசிகன் இல்லாத எனக்கே ரொம்ப பிடித்திருந்தது.
//''தேயட்டரில் போய் பாருங்க .பார்த்தும் தெரியலையா .இன்னொரு வாட்டி போய் பாருங்க //
எத்தனை வாட்டி பார்த்தாலும் போக்கிரிக்கும், மங்காத்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... முடிஞ்சா நீங்க ஒருவாட்டி “புரியுற” மாதிரி பாருங்க பாஸ்...
''எத்தனை வாட்டி பார்த்தாலும் போக்கிரிக்கும், மங்காத்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... முடிஞ்சா நீங்க ஒருவாட்டி “புரியுற” மாதிரி பாருங்க பாஸ்...'' அப்போ போக்கிரி இன்னொரு வாட்டி பாருங்க பாஸ்
ஆனா படம் ஊத்திகிச்சே மக்கா ஹி ஹி...
//அப்போ போக்கிரி இன்னொரு வாட்டி பாருங்க பாஸ்//
நான் எது எத்தனை வாட்டி வேணும்னாலும் பாக்குறேன்...! நீங்க எது பார்த்தாலும் அது ”உங்களுக்கு கொஞ்சம் புரியுற மாதிரி” பாருங்க.. அது இதுபோல சம்மந்தமில்லாத தலைப்பு போடுவதை தவிர்க்க உதவும்...!
சரி இதை 1800 பேருக்கு மேல பார்த்திருக்காங்க யாரும் கேக்கலையே சம்பந்தம் இல்லாத தலைப்பு எண்டு . .உங்களுக்கு வேணும் எண்டால் என்னை தனியா கேளுங்கள் சொல்லுகிறேன்
என்ன மனோ சொல்றீங்க படம் ஊத்திகிச்சா
கார்த்தி வரவுக்கு நன்றி
//சரி இதை 1800 பேருக்கு மேல பார்த்திருக்காங்க யாரும் கேக்கலையே சம்பந்தம் இல்லாத தலைப்பு எண்டு . .உங்களுக்கு வேணும் எண்டால் என்னை தனியா கேளுங்கள் சொல்லுகிறேன்//
யாருமே கேக்கலைங்குறதுக்க்காக சபந்தமில்லாத தலைப்பு, சம்பந்தம் இருக்குற தலைப்பு ஆகிவிடாது பாஸ்...!
அது என்ன தனியா கேக்குறது.? இப்போ கூட தனியாதானே கேக்குறேன். நாலு பேரை சேர்த்து வைத்துக்கொண்டா கேக்குறேன் !
சரி அடுத்த பதிவை பாருங்கள் .உங்களுக்கு அதில் விடை இருக்கும்
பாஸ் உங்களோட காமெடிகள்(மங்காத்தாவை மொக்க போக்கிறியோடு ஒப்பிட்டது , ஒபெநிங் என்றால் என்னவென்றே தெரியாத மொக்கை தளபதியை emperor of opening உடன் ஒப்பிட்டது )எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ... இங்க வந்தா நல்லா டைம் பாஸ் ஆகும் போல , அடுத்து எப்பவாது விஜய் அவர்களை வைத்து காமெடி செய்யும் போது தகவல் தரவும் ... வருகிறேன்
Post a Comment