Thursday, October 13, 2011

ஷாருக்கான்-KING OF BOLLYWOOD

கிங் ஒப் போலி வூட் என்று அழைக்கப் படும் ஷாருக்கான் இந்திய அளவில் செல்வாக்கு மிக்க நபர்களில் முதன்மையானவர் .இவரின் தற்போதைய பரபரப்பு ரா ஒன் .தமிழில் வெளியாகவுள்ள இந்நிலையில் அவரை பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


 .தாஜ் மொதமேது கான்  லதீப் பாத்திமா தம்பதியினருக்கு மகனாக டெல்லியில் பிறந்தார்.(1965.11.02)


.தனது அத்தியாயத்தை டிவி சீரியல் மூலமாக 1988 இல் ஆரம்பித்தார் .கௌரி ஷிபா என்ற மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .ஷாருக்      ஒரு முஸ்லிம் மனைவி ஒரு இந்து திருமணத்துக்கு  எதிர்ப்புக்கள் யிருந்த போதும் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடை பெற்றது .(25.10.1991).



அவருக்கு ஆர்யன் கான் (1997)என்னும் மகனும் சுகனா (2000)கான் என்னும் மகளும் இருக்கின்றனர் .
தனது  திரைப்பட அறிமுகத்தை தீவானா(deewaana ) என்னும் திரைப்   படத்தின் மூலம் ஆரம்பித்தார் (1992).இத் திரைப்படம் கமெர்சியல் ரீதியாக வெற்றி அடைந்தது .இதை தொடர்ந்து பல வகைப்பட்ட தரமான   வெற்றி திரைப்படங்களை இவர் அளித்து வருகிறார் .இதுவரை 14 முறை பிலிம் பாரே விருது வென்றுள்ளார் .டார் (daar -1993),         பாசிகர் (Baazigar -1993) ,   அஞ்சாம்  (Anjaam -1994),குச்   குச்  ஹோதா  ஹஅய்    (Kuch Kuch Hota Hai -1998 ) ,ஓம்  சாந்தி  ஓம்  (Om Shanti om -2007 ),சக்  தே  இந்திய  (Chak De India (2007) Devdas, Veer Zaara, Main hoon naஎன்பன குறிப்பிட்டு சொல்லக் கூடிய படங்கள் ஆகும் .Dilwale Dulhania Le Jayenge (1995) ,,அவருடைய மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்று .மும்பையில்12 வருடங்களாக ஓடியது .இதுவரை என்பதுக்கு  மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார் .


1990 களில் இருந்து இன்றுவரை பாலி வூட் டை ஆளுகின்ற நான்கு கான் களில் ஐவரும் ஒருவர் மற்றவர்கள் சல்மான் கான்,அமீர் கான்,சைப் அலி கான் 


டைம் சஞ்சிகையினால் 2004 இல் 40 வயதுக்கு குறைந்த ஆசியாவின்  ஹீரோ க்கள் இருபது பேரில் ஒருவராக தெரிவு செய்யப் பட்டார்.
அவருடைய முதற்  பெயரான ஷாருக் என்பதன் அர்த்தம் அரசனுடைய முகம்(king  of  face ) என்பது ஆகும் .

இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருக்கிறார் .அவரின் பெயர் Shehnaz Lalarukh. இவருடைய பெற்றோர் இவர் திரையுலகில் நுழைவதற்கு முன்னரே இறந்து விட்டனர் .தான் புகழ் மிக்க இந்த நிலைக்கு வருவேன் எபது அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதே என்று ஷாருக்  வருத்தப் படுவார்.

ஷாருக்கின் தாய் ,தந்தை,சகோதரி


இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற    Madam Tussaud's Museum இல் இவரி உருவ சிலை அமைய பெற்றுள்ளது .அமிதாப்,ஐஸ்வர்யா ,சல்மான் ,சச்சின்,ஹிருத்திக் ஆகியோரின் சிலையும் காணப் படுகிறது  .‘Dilwale Dulhaniya Le Jayenge’ படத்தில் அவரின் தோற்றம் போல சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது


இவர் விரும்பி அருந்துவது பெப்சி கோலா.
 சிறிய வயதில் ஷாருக்
மாயா  மேம்சாப் .(Maya Memsaab.) என்ற படத்தின் பின்னர் எந்த படத்திலும் உடன் நடிக்கும்  பெண் நடிகையுடன் உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறார்.

இவரின் அறிமுகப் படமாய் இருக்க வேண்டியது  (Dil Aashna Hai )டில்  ஆஷ்ணா  ஹஅய் .ஆனால் அப்படம் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட தாமதத்தால் தீவானா அவரின் முதல் படமாக அமைந்து விட்டது .

மூன்று தயாரிப்பு நிறுவனங்களை வைத்து இருக்கிறார் டிரீம்ஸ் அன் லிமிடெட் (Dreamz Unlimited ),ரெட் சில்லீஸ் என்டேர்டைன்மென்ட்  (Red Chillies Entertainment ),
ரெட் சில்லீஸ் இடியோட் பாக்ஸ் (Red Chillies Idiot Box )என்பனவே அவை Red Chillies Idiot பாக்ஸ் தொலைகாட்சி தொடர்களை தயாரித்து வருகிறது .

மும்பையில் மன்னட்( Mannat) என்னும் மாளிகையில் வசிக்கிறார் .



ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார்.
ஷாருக்கான் -தமிழ் 

 ஷாருக்   கான்  தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் .தமிழின் முன்னணி நடிகர்களான கமல்  ,அஜித் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் .கமலுடன் ஹேராம் படத்தில் இணைந்து நடித்துள்ளார் .தமிழ் ஹிந்தி இரு மொழிகளிலும் வெளியான இந்த படம் ஒஸ்கார் பரிந்துரைக்கப் பட்டது .அஜித் குமாருடன் இணைந்து அசோகா படத்தில் நடித்துள்ளார் .அது தமிழில் சாம்ராட் அசோகா என்ற பெயரில் வெளியானது .இது தவிர மணி ரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த தில்சே திரைப்படம் உயிரே என்ற பெயரில் தமிழில் வெளியானது .ரஹ்மானின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் தமிழர்களிடத்தில் இவரை புகழ் பெற செய்தது .

இப்போதைய பரபரப்பு   ரா ஒன் 

ஷாருக் கான் நடிக்கும் அடுத்த திரைப்படம் ரா ஒன் .எந்திரன் வெளியான போது இரு படங்களும் ஒரே கதையை கொண்டவை என்ற சந்தேகம் எழுந்த போதும் இந்திரனை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஐயே தனது படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து ரா ஒன் படத்துக்கான எதிர்பார்ப்பை உச்சப் படுத்தி உள்ளார் .தமிழிலும் மொழி மாற்றப் பட்டு எதிர்வரும் தீபாவளிக்கு வருகிறது ரா ஒன் .மிகவும் எதிர் பார்க்கப் படும் ரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வி ஆகும் .எந்திரன் பாலி வூட் இல் ஓடியதை போல ரா ஒன் தமிழில் ஓடுவது இயலாத காரியம் .ஆனால் இப்போது ரஜினி தோன்றுகிறார் என்றவுடன் நிலைமை தலை கீழாக மாறி விட்டது .மரணத்தின் வாயில் வரை சென்று மீண்ட தலைவரை திரையில் பார்க்க அனைத்து மக்களுமே தவம் கிடக்கிறார்கள் .இந்நிலையில் தீபாவளிக்கு ரா ஒன் தமிழில் வெளியாகும் திரை அரங்குகளின் எண்ணிக்கையிலேயே தெரிகிறது எதிர் பார்ப்பு .

என்னதான் இருந்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் க்கு இருக்கும் பெருந்தன்மை வேறு யாருக்கும் இருக்காது .தனது படத்தை போலவே படம் எடுத்து தனது படத்தின் சாதனையை முறியடிக்க தானே காரணமாய் இருக்கப் போகும்  எங்களின் தலைவருக்கு யார் நிகர் இவ்வுலகில் ?




















Post Comment

31 comments:

கோகுல் said...

வெளியாகும் தமிழ்ப்படங்களில் ஏதாவது ஒன்று படுத்துக்கொண்டால் ரா-ஒன் இன்னும் பட்டைய கிளப்பும்!

aotspr said...

ரா-ஒன் வெற்றி பெறும்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

K.s.s.Rajh said...

வணக்கம் மச்சி திரைப்படங்கள் பற்றிய உங்கள் பார்வை மிகவும் ஆழமானது.
உங்கள் ஆர்வம் சிறப்பானது இப்படியே நீங்கள் பயணித்தால் எதிர்காலத்தில் மிகச்சிறந்த சினிமா விமர்சகராக வருவீர்கள் அதற்கு வாழ்த்துக்கள்

ஆனாலும் உங்கள் சினிமா பதிவுகளில் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும் ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தாலும் விமர்சணம் என்று வரும் போது நீங்கள் அவரது ரசிகன் என்பதை தவிர்த்து ஒரு பொதுவான விமர்சணம் எழுதவேண்டும் அப்போதுதான் பொதுவான விமர்சகராக இருக்கமுடியும் உதாரணத்துக்கு இளைய தளபதியை பற்றி நீங்கள் பெரும்மாலும் நடுநிலைத்தன்மையுடன் விமர்சிப்பது இல்லை.நீங்கள் அவரது தீவிர ரசிகனாக இருப்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்

ஆனால் உங்கள் சினிமாப்பதிவுகளை படிப்பவர்கள் மனதில் இவர் இந்த நடிகரின் ரசிகன் என்றபடியால் அவரை தூக்கிவைத்துதான் எழுதுவார் என்ற எண்ணம் வந்துவிட்டால் உங்கள் பதிவின் காந்திரத்தன்மை குறைந்துவிடும் பொதுவாக திரைப்பட பதிவுகள் எழுதும் போது இதை கவனத்தில் எடுப்பது மிகவும் முக்கியம்

இது என் கருத்து மட்டுமே மற்றபடி உங்கள் சினிமா சம்மந்தமான பதிவுகள் அனைத்தும் சூப்பர்.

K.s.s.Rajh said...

ஷாருக்கான் பற்றி அழகானதகவல்கலை தொகுத்து தந்து இருக்கீங்க எனக்கு ஷாருக்கனை மிகவும் பிடிக்கும் அவரது படங்கள் ஓவ்வொன்றும் எதோ ஒரு விதத்தில் சிறப்பானவை..ரா ஓன் ரஜனி நடித்திருப்பதால் மேலும் சிறப்பு பெரும் என்பது உண்மை...ஆவலுடன் காத்திருக்கின்றேன் ரா ஓன் பார்ப்பதற்கு.

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் ஹீரோ.....!!!

Unknown said...

நல்ல பதிவு ஷாருக் பற்றிய தகவல்கள் அருமை

எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும் என்றே வேண்டிக்கொள்வோம்

Unknown said...

மாப்ள பல விஷயங்களை அழகாக தொகுத்து இருக்கீங்க நன்றி...கடைசி லைன் நச்!

சக்தி கல்வி மையம் said...

என்னதான் இருந்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் க்கு இருக்கும் பெருந்தன்மை வேறு யாருக்கும் இருக்காது .தனது படத்தை போலவே படம் எடுத்து தனது படத்தின் சாதனையை முறியடிக்க தானே காரணமாய் இருக்கப் போகும் எங்களின் தலைவருக்கு யார் நிகர் இவ்வுலகில் /// உண்மை நண்பா, நம்ம தலைவர் தலைவர் தான்..

kobiraj said...

கோகுல்
''வெளியாகும் தமிழ்ப்படங்களில் ஏதாவது ஒன்று படுத்துக்கொண்டால் ரா-ஒன் இன்னும் பட்டைய கிளப்பும்!''
படுக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்

kobiraj said...

Kannan said...

ரா-ஒன் வெற்றி பெறும்
கருத்துக்கு நன்றி

kobiraj said...

K.s.s.Rajh said...

''வணக்கம் மச்சி திரைப்படங்கள் பற்றிய உங்கள் பார்வை மிகவும் ஆழமானது.
உங்கள் ஆர்வம் சிறப்பானது இப்படியே நீங்கள் பயணித்தால் எதிர்காலத்தில் மிகச்சிறந்த சினிமா விமர்சகராக வருவீர்கள் அதற்கு வாழ்த்துக்கள்''
நன்றிகள் நீங்கள் தரும் ஊக்கம் தான் தொடர்ந்து உறுதுணையாக இருக்கிறது

kobiraj said...

ஆனாலும் உங்கள் சினிமா பதிவுகளில் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும் ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தாலும் விமர்சணம் என்று வரும் போது நீங்கள் அவரது ரசிகன் என்பதை தவிர்த்து ஒரு பொதுவான விமர்சணம் எழுதவேண்டும் அப்போதுதான் பொதுவான விமர்சகராக இருக்கமுடியும் உதாரணத்துக்கு இளைய தளபதியை பற்றி நீங்கள் பெரும்மாலும் நடுநிலைத்தன்மையுடன் விமர்சிப்பது இல்லை.நீங்கள் அவரது தீவிர ரசிகனாக இருப்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்

''ஆனால் உங்கள் சினிமாப்பதிவுகளை படிப்பவர்கள் மனதில் இவர் இந்த நடிகரின் ரசிகன் என்றபடியால் அவரை தூக்கிவைத்துதான் எழுதுவார் என்ற எண்ணம் வந்துவிட்டால் உங்கள் பதிவின் காந்திரத்தன்மை குறைந்துவிடும் பொதுவாக திரைப்பட பதிவுகள் எழுதும் போது இதை கவனத்தில் எடுப்பது மிகவும் முக்கியம்''
உண்மைதான் பாஸ் முயற்சி செய்கிறேன்

kobiraj said...

K.s.s.Rajh said...

ஷாருக்கான் பற்றி அழகானதகவல்கலை தொகுத்து தந்து இருக்கீங்க எனக்கு ஷாருக்கனை மிகவும் பிடிக்கும் அவரது படங்கள் ஓவ்வொன்றும் எதோ ஒரு விதத்தில் சிறப்பானவை..ரா ஓன் ரஜனி நடித்திருப்பதால் மேலும் சிறப்பு பெரும் என்பது உண்மை...ஆவலுடன் காத்திருக்கின்றேன் ரா ஓன் பார்ப்பதற்கு.''
நன்றிகள்

kobiraj said...

MANO நாஞ்சில் மனோ

சூப்பர் ஹீரோ.....!!!''


கருத்துக்கு நன்றிகள்

kobiraj said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நல்ல பதிவு ஷாருக் பற்றிய தகவல்கள் அருமை

எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும் என்றே வேண்டிக்கொள்வோம்''
கருத்துக்கு நன்றிகள்

kobiraj said...

விக்கியுலகம் said...

மாப்ள பல விஷயங்களை அழகாக தொகுத்து இருக்கீங்க நன்றி...கடைசி லைன் நச்!''
கருத்துக்கு நன்றிகள்

kobiraj said...

!* வேடந்தாங்கல் - கருன் *!
கருத்துக்கு நன்றிகள்

Anonymous said...

நல்லதொரு உணர்வுள்ள அலசல் நண்பரே ...
வெற்றிக்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

verri perum

மாய உலகம் said...

சாருக்கானைப்பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் நண்பா... ரஜினியின் பெருந்தன்மையே அவரை இவ்வளவு உயரத்திற்கு இன்னும் வைத்திருக்கிறது.. பட்டைய கிளப்பும் அலசலுக்கு.... வாழ்த்துக்கள் நண்பா

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரா-ஒன் பட்டையை கிளப்பிரும் போல...

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

நான் விவாத மேடையில் ரணகளமாகியதால் பதிவிற்கு உடனே வர முடியலை.

மன்னிக்கவும்

சாருக்கானின் வாழ்க்கை வரலாற்றோடு ரா பற்றிய தகவலையும் சொல்லும் அசத்தலான பதிவு!

kobiraj said...

ரெவெரி said...

'நல்லதொரு உணர்வுள்ள அலசல் நண்பரே ...
வெற்றிக்கு வாழ்த்துக்கள்...''
நன்றிகள்

kobiraj said...

வைரை சதிஷ்
கருத்துக்கு நன்றிகள்

kobiraj said...

மாய உலகம்
கருத்துக்கு நன்றிகள்

kobiraj said...

நிரூபன்
கருத்துக்கு நன்றிகள்

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

அம்பலத்தார் said...

எது எப்படியோ மும்பை படத்துறைக்கும் உச்சங்களைத் தொட ரஜனி எனும் பணம்பண்ணும் இயந்திரத்தின் துணை தேவைப்படுகிறது

C.P. செந்தில்குமார் said...

ரா - ஒன் ராக்ஸ்...

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

Tamil raja said...

nice info:
Dilwale box office collection,
Dilwale Box office,
Dilwale Total world wide collection,

Related Posts Plugin for WordPress, Blogger...