Thursday, November 3, 2011

மங்காத்தா வா ? வேலாயுதமா? எது டாப்

அண்மைக்கால தமிழ் சினிமா சம்பந்தமான விடயங்களை என்னுடைய பார்வையில் அலசி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் .பதிவு நீண்டு கொண்டிருக்கிறது .எனவே தொடர் பதிவாய் அமையும் .

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி,கமல் ,விஜய் ,அஜித் ,விக்ரம் ஆகியோரே இப்போது மார்கெட் உள்ள முன்னணி நடிகர்கள் .இவர்களின் படங்கள் வெளி வந்தாலே தமிழ் சினிமா பரபரப்புக்கு உள்ளாகும் .அது  யார் இயக்கம் ,யார் இசை ,எந்த வகை படம் என்பதையும் தாண்டியது .இவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளி வந்தால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் .ஏனெனில் யார்  முன்னணியில் உள்ள நடிகர் என்பதை இதை வைத்து தான் ரசிகர்கள் கணிப்பார்கள் .சில வருடங்களுக்கு முன்னர் வருஷம் ,பொங்கல் ,தீபாவளி என்றால் நிச்சயம் இவர்களின் படங்கள் போட்டிக்கு வெளி வந்து ரசிகர்களை குஷிப் படுத்தும் .அதிலும் தீபாவளி ரசிகர்களுக்கு செம விருந்தாக இருந்தது .விஜயின் திருமலை ,அஜித்தின் ஆஞ்சநேயா ,விக்ரம் சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் என ஆங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளி வந்தன .

அதற்கு பின்னர் ஒவ்வொரு பண்டிகையிலும் யாராவது இருவர்  சில வேளைகளில் மூவர் என மோதிக் கொண்டனர்.எனினும் கால ஓட்டத்தில் தமிழ் சினிமாவின் பாதை மாற்றமடைந்தது  நவீன தொழிநுட்ப உலகில்  ஒரு படம் முன்னரை போல் 250,200,150,கடைசியில் 100 நாட்களை தாண்டுவதே மிகவும் கடினமாக இருக்கிறது .படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே இனைய தளத்தில் காணக் கூடியதாக உள்ளமை ,திருட்டு vcd  களின் ஆதிக்கம் என்பவற்றால் திரையரங்குகளில்    ஓடும் நாட்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தது .  எனவே தயாரிப்பாளர்கள் ,விநியோகஸ்தர்கள் புதிய உத்தியை கையாள தொடங்கியுள்ளனர் .அது என்னவெனில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்ட காசை எடுக்கும் நுட்பம் ஆகும் .இதிலே நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதிகளவில் இருக்கின்றன .இந்த பிரச்சினை காரணமாக் முன்னணி நடிகர்கள் இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியிட முடியாத நிலை தோன்றியது .திரையரங்குகளை பெறுவதில் சிக்கல். ஒரு படத்தினால் மற்ற படத்தின் வசூல் குறைவடையும் எனவே சீக்கிரம் பணத்தை எடுக்க முடியாது . இந்த பிரச்சினைகளால் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் நிகழ்வு தவிர்க்கப் பட்டு தடுக்கப் பட்டு வந்தது 



.2009 தீபாவளிக்கு ஆதவன் ,வேட்டைக்காரன் என்பன களமிறங்கிய போதும் படம் வெளியிட்ட உதயநிதி,கலாநிதி மாறன் ஆகியோருக்கு இடையேயான சமரச பேச்சின் பின்னர் வேட்டைக்காரன் தாமதித்து டிசம்பரில் வெளியானது .2010  இல் சுறாவையும்,சிங்கத்தையும் போட்டிக்கு களமிறக்கி யாருக்கு மவுசு அதிகம் என அறிய விரும்பியது சன் குழுமம் ஆனால் பாதிப்பு தனக்குத்தான் என்பதை அறிந்து பின் வாங்கியது.



 .  படங்களின் வெற்றிக்கு விநியோகச்தரின் விளம்பரம் முக்கியமான நிலை ஏற்படுத்தப் பட்டது .சன் டிவி நேரடியாக படங்களை விநியோகிக்க தொடங்கிய பின் இது மேலும் வலுவடைந்த்தது .உதயநிதி,தயாநிதி அழகிரி ஆகியோர் புது நிறுவனம் தொடக்கி போட்டிக்கு களமிறங்க ஆட்சியும் கைகொடுக்க இவர்களின் பிடிக்குள் தமிழ் சினியுலகம் வந்தது .எதிர்பார்ப்புக்கு உள்ளாகும் படங்களை இவர்கள் வாங்கி விடுவார்கள் .விற்க மறுக்கும் படங்களை ஓட விட மாட்டார்கள் .


சித்திரம் பேசுதடி என்ற படம் வெளியான கதை உங்களுக்கு தெரிந்து இருக்கும் .படம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி ஒரு வாரத்தின் பின்னர்தான் வாய் வழி பேச்சின்(WORD OF MOUTH )  படி பேசப் பட்டு பின்னர் பிய்த்துக் கொண்டு ஓடியது .ஆனால் இப்போது அந்த நிலை வருவது கடினம் .படம்    நல்லாய் இருக்கு என்ற கதை பரவ முன்னரே தியேட்டரை விட்டு தூக்கி எறியப் பட வரலாறு உண்டு .தென் மேற்கு பருவட்காற்று ,ஆரண்ய காண்டம் என்பன சிறந்த உதாரணங்கள் ஆகும் .மைனாவும் ,அங்காடித்தெரு வும் ஓடும் போது இவை ஓடாமல் போனமைக்கு காரணம் சிறந்த விளம்பரம் இன்மையே ஆகும்.
 இதன் உச்ச கட்டமாக அமைந்தது விஜயின் காவலன் வெளியீடுதான் .காவலன் வெளியீட்டுக்கு நடந்த கதை அனைவரும் அறிந்ததே .



சரி இப்போது ஆட்சி மாற்றம் நடந்த போதும் திரையுலகை அவர்கள் இழக்க வில்லை என்பதே உண்மை சிறிது காலம் அடங்கியிருந்த போதும் இப்போது மீண்டும் வீறு கொண்டு எழுந்து விட்டார்கள் 
.
இந்த வருடம் விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம் அனைவரும் மோதுகிறார்கள் 

சரி விசயத்துக்கு வருவோம் நான் மேலே சொன்னது போல முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்றாக வெளியாவது தடுக்கப் பட்டு வந்தது .எனினும் தெய்வதிருமகள்,மங்காத்தா,வேலாயுதம் ,ஏழாம் அறிவு என்பன ஒரே நேரத்தில்  முடிவடையும் தருவாயில் இருந்தன .ஒரே வருடத்தில் நான்கு பேரின் படங்களும் வெளி வருவதே சந்தர்ப்பம் இல்லாமல் இருந்த தருணத்தில் ஒரே காலப் பகுதியில் வெளியாக இருந்தமை பர பரப்பை ஏற்படுத்தியது . மங்காத்தா மே 01 உம ,வேலாயுதம் ஜூன் 22 ஐயும் குறிவைத்து எடுக்கப் பட்டவை .படப் பிடிப்பு தாமதமாக தெய்வ  திருமகள் முதலில் வெளியானது.

 பின் மங்காத்தா ,வேலாயுதம் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என்ற நிலை உருவானது .ஆனால் அண்மைக் காலமாக வலுப் பெற்று வரும் தல,தளபதி நட்பு காரணமாக அது தவிர்க்கப் பட்டு முதலே வெளியிட திட்டமிட்ட படம் என்பதால் மங்காத்தா வெளியானது .எனவே வேலாயுதம் தீபாவளிக்கு பிற் போடப் பட்டது .அதற்கு பின் நடந்தவைதான் சுவாரசியமான விடயங்கள் .


அடுத்த பதிவில் தொடரும் ....தலைப்புக்கான விடையும் 

##################################################################################
தல  தான்   தான் என அறியாத  தல 

Post Comment

7 comments:

MANO நாஞ்சில் மனோ said...

தல என்னைக்கும் தல'தான் இல்லையா...!!!

K.s.s.Rajh said...

சிறப்பான தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்........

Anonymous said...

தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...-:)

ரைட்டர் நட்சத்திரா said...

interesting ...

kobiraj said...

MANO நாஞ்சில் மனோ said...

'தல என்னைக்கும் தல'தான் இல்லையா...!!!''
SURE

N.H. Narasimma Prasad said...

தல போல வருமா?

நிரூபன் said...

வணக்கம் மச்சி,

நடு நிலையான பார்வையோடு இந்தப் பகுதி அமைந்திருக்கிறது.

அடுத்த பாகத்தில் மீட் பண்றேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...