Friday, December 30, 2011

2011 -டாப் படங்கள் ஒரு பார்வை

இந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளிவந்த நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் என்னுடைய பார்வையில் ............................
எனக்கு பிடித்த படங்கள் 


மங்காத்தா

அஜித் குமாரின் 50 வது படம் .வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த இப்படம்  தயாநிதி அழகிரியால் தயாரிக்கப் பட்டு அரசியல் காரணங்களால் சன் பிக்சர்ஸ்  இனால் வெளியிடப் பட்டது .நீண்ட இடைவெளியின் பின் தல யை தலை நிமிர வைத்தது.யாருமே ஏற்பதற்கு தயங்கும் நெகடிவ் ரோலில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அஜித் .அர்ஜுன், திரிஷா,பிரேம்ஜி அஞ்சலி என நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்தில் எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது யுவனின் தீம் மியூசிக் தான் .பில்லா விலேயே கலக்கல் தீம் வழங்கியிருந்தார் .இது அதை விட பல படி மேலே இருந்தது .

படம்130 கோடி வசூல் என சன் பிக்சர்ஸ் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது அஜித்தின் காரியர் இல் மிக சிறந்த படங்களில் ஒன்று .இந்த ஆண்டு வெளியான படங்களில்  மிகவும் கவர்ந்த படம் .என்னுடைய பட விமர்சனம் மங்காத்தா -போக்கிரி 2.


எங்கேயும் எப்போதும் முருகதாஸ் தயாரிப்பில் அவரின் உதவி இயக்குனர் சரவணன்  இயக்கிய அருமையான படம்தான் எங்கேயும் எப்போதும் .தமிழ் சினிமாவில் புது விதமான கதை .ஒரு பேருந்து பயணத்தை வைத்துக் கொண்டு சமுகத்துக்கு விழிப்புணர்வு ஊட்டுகின்ற படம்.ஜெய் ,அஞ்சலி,என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார்கள் படத்தில் என்னை  மிகவும் கவர்ந்தது சென்னையிலே புதுப் பொண்ணு பாடல் காட்சி .

தெய்வ திருமகள் 

இயக்குனர் விஜய் i am sam  படத்தில் இருந்து சுட்ட கதை எனினும் தமிழுக்கு ஏற்ப மாற்றி  அமைத்து அதில் வெற்றியும் கண்டார் .copy  என்பது இல்லை என்றால் இந்த வருடத்தின் டாப் படமாக அனைவராலும் கொண்டாடப் பட்டிருக்கும்.விக்ரம் நடிப்பில் மிளிர்கிறார்  .எனினும் அவரை விட குழந்தை நட்சத்திரமாக அனைவரையும் கொள்ளை கொண்டார் சாரா .என்னுடைய பட விமர்சனம் தெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும்.

காவலன் 

இயக்குனர் சித்திக் மீண்டும் விஜய்க்கு  தேவையான நேரத்தில் கை கொடுத்து இருந்தார் .மலையாளத்தில் தான் இயக்கிய போடி காட் படத்தை தமிழுக்கு மட்டுமல்ல இந்தியிலும் படமாக்கி வெற்றி கண்டுள்ளார் .விஜய் படமாக அல்லாமல் சித்திக்கின் படத்தில் விஜய் என்னும் நடிகர் நடித்து இருந்தார் .படத்தின் பெரும் பலமாக இருந்தது யாருமே எதிர்பாராத     கிளைமாக்ஸ் தான். .படம் வெளியிடுவதில் பல இன்னல்களை சந்தித்து தனது அடுத்த வெற்றிக் கணக்கை தொடங்கியிருந்தார் விஜய் .படத்தில் மிகவும் கவர்ந்த இடம் அனைவரையும் போல  கிளைமாக்ஸ் ரயில் காட்சிதான் .

பல படங்களை பார்த்திருந்தாலும் தனிப்  பட்ட  இயக்குனர்,நடிகர்,நடிகை,இசை விருப்பங்களை கருதாமல் என் மனதுக்கு பிடித்த படங்கள் இவை தான் .


 எதிர் பாராத வெற்றிகள்

 கோ

 இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட் படங்களில் ஒன்று .kv ஆனந்த் இன் அயன் பிடித்திருந்தாலும் இதை பெரியளவில் எதிர்பார்க்கவில்லை .எனினும் போட்டிக்கு நல்ல   படங்களும் இல்லாத நிலையில் சக்கை ஓட்டம் ஓடியது கோ .ஜீவாவுக்கு பிரேக் கொடுத்த படம் .பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அயன் அளவுக்கு என்னை கவர  வில்லை

காஞ்சனா

ராகவா லோரன்ஸ் கலைஞர் டிவியில் மாத கணக்கில் விளம்பரம் செய்த போது  காஞ்சனா ஆட்டத்தை பார்க்க கடுப்புத்தான் வந்தது .ஏற்கனவே வந்த முனி பெரியளவில் வெற்றி பெறாத நிலையில் காஞ்சனாவை நான் மட்டுமல்ல பலரும் காமெடியாகத்தான் பார்த்தார்கள் .எனினும் காஞ்சனா பெண்களின் அமோக ஆதரவு காரணமாக மிகப் பெரு வெற்றியை பெற்றது .sify  பிளாக் பஸ்ட்டர் ஆக அறிவிக்கும் அளவுக்கு வெற்றி .கோவை சரளாவின் நடிப்பு என்னை கவர்ந்திருந்தது .சரத்குமாரின் வேஷமும் பிடித்திருந்தது .படம் பிடிக்க வில்லை. 

வேலாயுதம்

வழமையான காரம் குறையாத  விஜய் மசாலா . .மசாலா படங்களின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த விஜய்  மசாலா சரியான விதத்தில் கலக்கப் படாததால் தொடர்ந்து ஏமாற்றங்களை  வழங்கி வந்த நிலையில் இந்த படம் பெரியளவில் எதிர் பார்ப்புக்களை உருவாக்க வில்லை .மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் ஏழாம் அறிவு அதி உச்ச விளம்பரங்களுடன் போட்டிக்கு வர இந்தப் படம் எதுவித விளம்பரங்களும் இன்றி வெளிவந்தது .நிச்சயமாக சாதாரண மனிதன் இரண்டில் எதை பார்க்கலாம் என சிந்த்தித்தால் ஏழாம் அறிவை தேர்ந்தெடுத்தான் .
வேலாயுதம் பரவாயில்லை நல்லாய் இருக்கு என்ற கதை மௌத் டாக் மூலமாக பரவ ஏழாம் அறிவு ஏமாற்றவும் அடுத்த வாரமே தியேட்டர்கள் அதிகப் படுத்தும் அளவுக்கு நிலையை பிடித்தது .    
ஆக மொத்தத்தில் வேலாயுதம் எதிர்பாராத வெற்றியை பெற்று விஜயை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது .

எதிர்பார்த்து ஏமாற்றிய படங்கள் 


ஏழாம் அறிவு 


இந்த வருடம் வெளியான படங்களில் அதிக எதிர் பார்ப்புடன் வெளியான படம் இதுதான் .தமிழனின் வீரத்தை உலகுக்கு பறை   சாற்றிய போதும் கொடுத்த ஓவர் பில்ட் அப் அளவுக்கு படம் இல்லாதாதால் ஏமாற்றி விட்டது .எனினும் குறிப்பிட தக்க வசூலை வாரிக் கொண்டது .


ஒஸ்தி 
மாஸ் படங்களில் பல முறை முயன்றும் தோற்ற சிம்பு இம்முறை மாஸ் டைரக்டர் தரணி ,சூப்பர் ஹிட் பட ரீமேக் என புது வியூகத்தில் இறங்க எதிர் பார்ப்பை உருவாக்கி இருந்தது .இந்த படம் பார்த்த போதுதான் சுறா பார்க்கும் போது விஜய் ரசிகர் அல்லாதவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை   உணர்ந்து கொண்டேன்


ராஜபாட்டை 
மாஸ் படங்களை தமிழுக்கு அறிமுகப் படுத்திய விக்ரம் நீண்ட காலத்துக்கு பின் களமிறங்க எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது .வழமையா எந்த படம் பார்த்தாலும் அந்த படத்தின் பாதிப்பு குறைந்தது அரை மணிநேரமாவது இருக்கும் . ஒரு படம் பார்த்த பீலிங் இல்லாமலே தியேட்டரை விட்டு வெளியில் வந்த முதல் படம் இதுதான் .

ஏனையவை 
ஆடுகளம்,சிறுத்தை ,அவன் இவன் பேசப் பட்ட படங்கள் என்னை எந்த விதத்திலும் கவரவில்லை .மயக்கம் என்ன கண்டிப்பாக என்னை மயக்கிய படம் .மனதை பாதித்த படம் .பலராலும் பாராட்டப் பட்ட ஆரண்ய காண்டம் ,குள்ள நரி கூட்டம் ,மௌன குரு நான் இன்னும் பார்க்கவில்லை

ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு பீலிங் .அந்த வகையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து இருக்கும் .இது முற்று முழுதாக என் பார்வைதான் .மீண்டும் சந்திப்போம் .
-உங்களில்   ஒருவன்     

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...