Wednesday, December 7, 2011

2012- அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது?

அடுத்த ஆண்டு வெளியாகும் படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது என சினிமா விகடன் நடத்திய கருத்துக் கணிப்பில் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'நண்பன்', அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்திற்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ' நண்பன் ' திரைப்படம்  - 1,19, 668 வாக்குகளும், 'பில்லா-2'  திரைப்படம் 1,08,339 வாக்குகளும் பெற்றன. மற்ற படங்களுக்கு கம்மியான வாக்குகளே கிடைத்தன.
வழமை போல விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக் கொண்டுள்ளார்கள் .சில மாதங்களுக்கு முன்னர் சிறந்த யூத் நடிகர் யார் என்று இதே தளம் நடத்திய வாக்கெடுப்பிலும் கடும் போட்டியின் மத்தியில் அஜித் வென்றமை குறிப்பிடத்தக்கது .இது விஜயின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதை காட்டுகிறது .
எனினும் இந்த வாக்கெடுப்பு முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை என்பதற்கு மாற்றான்,கோச்சடையான்,விஸ்வரூபம்  என்பன சில நூறு வாக்குகள் மட்டுமே பெற்றதில் இருந்து அறியலாம் .
 சினிமா விகடன் கருத்துக் கணிப்பு .

நண்பன்
  விஜயின் காரியரில் பெஸ்ட் படமாக அமையலாம் என பலரும் எதிர்பார்க்கும் நண்பன் பொங்கலுக்கு வெளி வருகிறது .பாடல்கள் இம்மாதம் 15 ம் திகதி வெளியாக உள்ளன.3  IDIOTS   படத்தை பல தடவைகள் பார்த்து விட்டேன் .அமீர் கான் கலக்கி இருப்பார் .அதை விஜய் முறியடிப்பாரா என அறிய சில வாரங்கள் காத்துத்தான் ஆக வேண்டும் .காமெடியில் கண்டிப்பாக கலந்து கட்டி அடித்து விடுவார் .செண்டிமெண்ட் காட்சிகள் திறமையை நிருபிக்க   வேண்டும் .படத்தில் ஜீவாவை விட ஸ்ரீகாந்த் அதிக முக்கியம் பெறுவார் .ஆனால் இப்போது ஜீவாவுக்கு ஸ்ரீ காந்த் ஐ விட மார்க்கெட் அதிகம் .ஷங்கர்  மாற்றங்கள் செய்வாரா தெரியவில்லை .சத்திய ராஜ் எவ்வித சந்தேகமும் இல்லாமல் பேராசிரியர் வேடத்தை ஈடு செய்வார் .இலியானா,சத்யன்,LORANCE ,S,J.சூர்யா என நட்சத்திர பட்டாளமே உள்ளதுஒஸ்தி
  STR நடிக்கும் மாஸ் படமான ஒஸ்தி வெளியாகிறது .தரணி  நீண்ட இடைவெளியின் பின் தமிழில் இயக்கம் படம் இது .மாஸ் படங்களை தூள் ,தில்,கில்லி என மாஸ் படங்களின் பிரதம கர்த்தா ஆன தரணி குருவியில் சிறிது சறுக்கினார் .மீண்டும் தனது திறமையை காட்டுவாரா? .STR ஐ பொறுத்த வரை பல்வேறு துறைகளில் தனது திறமையை காட்டினாலும் மாஸ் ஹீரோவாக இன்னும் ஜொலிக்க   வில்லை என்றுதான் சொல்ல வேண்டும் .குத்து,காளை,சிலம்பாட்டம்   என பல படங்களில் முயன்றாலும் இன்னும் சரி வர வில்லை .இந்தியில் பெரு   வெற்றி பெற்ற டபான்க் படத்தின் ரீமேக் ஆன இது STR ற்கு மாஸ் அந்தஸ்தை பெற்று தரும் என்று நினைக்கிறேன் .டபான்க் படத்தின் கிளைமாக்ஸ் இல் சல்மானின் சட்டை கிழிந்து அவரின் சிக்ஸ் பக் வெளிப்படும் தமிழிலும் அந்த காட்சிக்காக STR மும்முரமாக உழைத்து உள்ளார் .உழைப்புக்கான பலன் சில தினங்களில் தெரியும்
.பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன ஒஸ்தி இசை வெளியீட்டு விழாவில் சிம்பு விஜய் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது .அஜித்தின் பரம ரசிகரான சிம்பு வின் படத்துக்கு விஜய்  சென்றமைக்கு முக்கிய காரணங்கள் விஜயின் இதுவரை வெளிவந்த படங்களின் பெஸ்ட் படமான கில்லி யை கொடுத்த தரணி தான் .அத்துடன் விஜய் இப்போது புதிய பாணியில் எல்லோரையும் அனுகுவதின் ஒரு அம்சமாகவும் இதை எடுக்கலாம் .சிலம்பாட்டம் படத்தில் ஒரு காட்சியில்'' மலேசியாவில் இருந்து வர்றீங்களே நீங்க குருவியா'' என சந்தானம் கேட்க இல்ல பில்லா என்று சிம்பு சொன்னதை விஜய் மன்னிக்கலாம் ஆனால் விஜய் ரசிகர்கள் மன்னிப்பார்களா என தெரிய வில்லை .ஒஸ்தி வெற்றி பெற வாழ்த்துக்கள் STR .  

கொலைவெறி  
 தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் இதுவரை பல்வேறு சாதனைகளை கடந்து உள்ளது.

புதிய சாதனையாக YOUTUBE இணையதளம் RECENTLY MORE POPULAR என்கிற பிரிவில் WHY THIS KOLAVERI வீடியோ பதிவிற்கு தங்க மெடல் கொடுத்து கெளரவித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமா பாடலொன்று YOUTUBE இணையத்தின் மூலம் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. உலகத்தின் பல பகுதிகளில் இப்பாடல் பிரபலமாகி விட்டது. YOUTUBE இணையத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 1.8 கோடியை தாண்டியுள்ளது.150000 ற்கு மேற்பட்ட likes  கிடைத்துள்ளது .இது தமிழ் சினியுலகத்துக்கு   கிடைத்த பெருமை ஆகும் .
 
துப்பாக்கி  
எப்புடி இருக்கு 
 #################################################################################
என்னுடைய பதிவு ஒன்று பல தளங்களில் உலா வருவதாக நண்பர்கள் முலம் அறிந்தேன் .அதிலே கிடைக்கப் பெற்ற ஒன்றுதான் இது .சில மாதங்களுக்கு முன்னர் நான் எழுதிய பதிவு இது
சூர்யா விஜய்க்கு செய்தது சரியா ? .

அதை உருவி எடுத்து பிரசுரித்த new yarl.com இனது பதிவு இது .
new  yarl .com copy  
.விளங்குகிறதா இணையத்தளங்கள் செய்யும் வேலை ......சில மாதங்களுக்கு முன்னர் எனது ப்ளாக் கில் நான் எழுதியதை சுட்டு .......#சீ சீ இவர்கள் இன்னும் மயக்கம் என்ன திரைப்படம் பார்க்கவில்லையா 
 

Post Comment

4 comments:

துஷ்யந்தன் said...

சினிமா தொகுப்பு கலக்கல்.... பாஸ் இணைய வாக்கெடுப்பில் அதிகம் அஜித்தான் வெற்றி பெறுவார்... இந்த முறை விஜயா??? ஹா ஹா.... நான் நண்பனைத்தான் அதிகம் எதிர் பார்க்கிறேன்.... சங்கர்&விஜய் என்றால் சும்மாவா???? :)

நிரூபன் said...

வணக்கம் சகோ,
இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்தால் விடை தெரிந்து விடும்,
நண்பன் எதிர்பார்ப்பினைக் கூட்டுகிறது.

காப்பி பேஸ்ட் தளங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. என்னுடைய பதிவுக்ளையும் சுடுகிறார்கள் பாஸ்

health said...

நண்பன் படத்த எதிர்பாக்ற ஒரே காரணம் ஷங்கர் மட்டும் தான். விஜய் காக யவனும் எதிர்பாக்கள.

நாய் சேகர் said...

http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html

Related Posts Plugin for WordPress, Blogger...