Wednesday, April 25, 2012

தமிழ் சினிமாவின் ரீமேக் சூப்பர் ஸ்டார் யார் -2?

தமிழ் சினிமாவில் வந்த ரீமேக் படங்களை அலசுவதே இந்த பதிவின் நோக்கம் .இது ஒரு தொடர் பதிவு இதன் முதல் பாகத்தை படிக்க 

போக்கிரி .
2007 பொங்கலுக்கு வெளிவந்த போக்கிரி இன்று வரை மாஸ் படங்களுக்கு முன் உதாரணமான படங்களில் ஒன்றாக திகழ்கிறது .ரஜினிக்கு ஒரு பாட்சா போல அஜித்துக்கு ஒரு தீனா போல விக்ரமுக்கு ஒரு சாமி போல விஜய்க்கு போக்கிரி .பிரபுதேவா தனது முதல் தெலுங்கு படமான பௌர்ணமி தோல்விக்கு பின் விஜயால் இப்படத்தை இயக்க தேர்ந்தர்டுக்கப்பட்டார் .அசின்,பிரகாஸ்ராஜ் ,வடிவேலு ,நாசர் இணைந்து நடித்தனர் . போலீஸ் வேடத்தில் நடித்த முதல் படம் இதுவாகும் .போட்டிக்கு வெளியான ஆழ்வார்,தாமிரபரணி படங்களை தோற்கடித்துபிளாக் பஸ்ட்டர் ஆனது .200 வது நாள் விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டார் .விஜய் வெறியர்களுக்கு பிடித்த விஜய் படங்களில் முதல் இடத்தில் இன்றுவரை இதுதான் இருக்கிறது என்பது என் கருத்து .

போக்கிரி இதே பெயரில்2006 தெலுங்கில் வெளியான பூரி ஜெகநாத் இயக்கிய படத்தின் ரீமேக் ஆகும் .மகேஷ் பாபு நடித்த இப்படத்தில் இலியானா பிரகாஸ் ராஜ்,நாசர் இணைந்து நடித்தனர் .தெலுங்கில் பிளாக் பஸ்ட்டர் ஆகி பல விருதுகளையும் வென்றது .இரு படங்களுக்கும் மணி சர்மா இசை அமைத்திருந்தார் . போக்கிரியில் வரும் 'டோலு டோலு ' பாடல் தெலுங்கு பாடலின் தமிழ் பதிப்பு ஆகும் .http://www.youtube.com/watch?v=SQxeC8LMx24
தமிழில் மெஹா ஹிட் ஆகியதால் ஹிந்தியிலும் போக்கிரியை WANTED என்ற பெயரில் சல்மான் கானை வைத்து படமாக்கி அங்கேயும் பெரு வெற்றி பெற்றார் பிரபுதேவா . தோல்வியில் துவண்டு கொண்டிருந்த சல்மானை தூக்கி நிறுத்தி யதுடன் வசூலில் சாதனை புரிந்தது .இப்படம் 2010 இல் கன்னடத்திலும் (PORKI )ரீமேக் செய்யப்பட்டது .நான்கு மொழியிலும் பிரகாஷ் ராஜ் ஒரே பாத்திரத்தை செய்து இருந்தார் .

வில்லு .
அட இதுவும் ரீமேக் படமா என்று நீங்கள் கேட்கலாம் .இதை ரீமேக் பட்டியலில் சேர்க்க முடியாது .எனினும் கிட்ட தட்ட ரீமேக் தான் .1999 இல் வெளியான பாலிவுட் படமான SOLDIER படத்தின் தழுவல் தான் வில்லு ..வில்லு தோல்வி அடைந்தது .
சுறா மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் ஒன்றின் ரீமேக் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் படத்தின் ஆன்லைன் கதை மட்டுமே எடுக்கப் பட்டது .

காவலன்
2010 இல் வெளிவந்தது .தொடர் தோல்வி ,போராட்டங்களுக்கு பின் வெளிவந்து விஜய்க்கு மீட்சியை கொடுத்தது இந்த படம் .மீண்டும் சித்திக் .பிரண்ட்ஸ் போலவே மலையாளத்தில் தான் இயக்கிய போடி காட் படத்தை தமிழில் ரீமேக் செய்தார் .அசின் ,வடிவேலு ,ராஜ்கிரண் இணைந்து நடித்த வித்யாசாகர் இசையில்இப்படம் ஹிட் ஆகியது .அதைவிட சாதகமான விமர்சனங்களை படத்துக்கும் விஜய்க்கும் பெற்று கொடுத்தது .சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச பட விழாவில் கலந்து கொண்டமை படத்தின் சிறப்பம்சம் ஆகும் .
2010 இல் மலையாளத்தில் வெளிவந்த போடி காட் BODYGUARD  .திலீப்,நயன்தார நடித்த இப்படம் மலையாளத்தில் சுமாராகவே போனது.
ஹிந்தியிலும் இதை போடி காட் என்ற பெயரில் சல்மான் கான் கரீனா கபூரை  வைத்து ரீமேக் செய்து வெற்றி பெற்றார் சித்திக் .அதை விட தெலுங்கில் வெங்கடேஷ் த்ரிஷா நடிப்பிலும் கன்னடம் ,பெங்காலி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப் பட்டது .
வேலாயுதம் .
இதுவும் உத்தியோகபூர்வமான ரீமேக் அல்ல .2000 இல் தெலுங்கில் வெளியான ஆசாத் பட ரீமேக் என்று கூறப் பட்டாலும் இயக்குனர் ராஜா அதை மறுத்துள்ளார் .அந்த கதையை வைத்து தான் திரைக்கதை எழுதியதாக அறிவித்தார் .எனவே வேலாயுதம் ரீமேக் அல்ல .நான் ஆசாத் படத்தையும் பார்த்து விட்டேன் .எனக்கு என்னமோ ரீமேக் போலதான் தெரியுது.உங்களுக்கு?

நண்பன். 

நண்பன் இப்போது வந்ததால் எதுவும் பெரிதாக சொல்ல தேவை இல்லை .ஷங்கர் இயக்கத்தில் விஜய்,ஜீவா ,ஸ்ரீகாந்த்மற்றும் பலர் நடித்த இப்படம் பிளாக் பஸ்ட்டர் ஆகியுள்ளது .அனைவராலும் பாராட்டப்பட்டது . இது2010இல் ஹிந்தியில் வெளிவந்த 3IDIOTS  படத்தின் ரீமேக் ஆகும் .
3 IDIOTS  வெளியாகி பல சாதனைகளை முறியடித்து வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது .ராஜ்கிமார் ஹிரானி இயக்கிய இப்படம்2004 இல் வெளியா ன Five Point Someone – What not to do at IIT! by CHEATAN Bhagat என்ற நூலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது .அமீர் கான்,மாதவன் ,சர்மான் ஜோஷி முதலியோர் நடித்து இருந்தனர் .

சரி விஜய் நடித்த பெரும்பாலான ரீமேக் படங்களையும் அலசி விட்டோம் இன்னும் சில உண்டு. இதுவரை நடித்த படம் 53.அதிலே ரீமேக் 13(வேலாயுதம் சேர்த்து,வில்லு ,சுறா சேர்க்க வில்லை).இவற்றில் யூத்,வசீகரா ,ஆதி ஆகிய மூன்று படங்கள் மட்டும் தோல்வி அடைந்துள்ளன .எனவே ரீமேக் படங்கள் விஜய்க்கு பெருமளவில் உதவின என்று சொல்லலாம் .கில்லி,போக்கிரி,நண்பன் ஆகிய மூன்றும் விஜயின் காரியரில் சிறந்த படங்களில் முதன்மையான இடத்தை பெற்று விட்டன .சித்திக்  இரு படங்களை வெற்றிகரமாக ரீமேக் செய்து இருந்தார் .செல்வா பாரதியும் இரு படங்களை ரீமேக் செய்த போதும் ஒன்று மட்டுமே வென்றது . 
இதை விட விஜயை சினிமாவில் நிலை நிறுத்திய படம் ஒன்றும் ரீமேக் தான்  அது எது .?
ஓகே அப்போ விஜய்தான் ரீமேக் சூப்பர் ஸ்டார் என்ற முடிவுக்கு வரலாமா ?.அப்படி என்றால் மற்ற நடிகர்கள் எவரும் ரீமேக் படங்களில் நடிக்க வில்லையா ? .......................
தொடரும்.........

Post Comment

11 comments:

"ராஜா" said...

//அஜித்துக்கு ஒரு தீனா போல விக்ரமுக்கு ஒரு சாமி போல விஜய்க்கு போக்கிரி

அஜீத்தையும் விக்ரமையும் யாரும் இவ்வளவு மோசமாக அசிங்கபடுத்த முடியாது...
//விஜய்,ஜீவா ,ஸ்ரீகாந்த்மற்றும் பலர் நடித்த இப்படம் பிளாக் பஸ்ட்டர் ஆகியுள்ளது .அனைவராலும் பாராட்டப்பட்டது

பிளாக் பஸ்டர் படமெல்லாம் மூனே மாசத்துல டிவியில போட்டுடுவாங்களா? இல்லை மூணு மாசத்துல டிவியில போட்டாத்தான் அது பிளாக் பஸ்டர் படமா? கொஞ்சம் விளக்கவும் ...

பாலா said...

//பிரபுதேவா தனது முதல் தெலுங்கு படமான பௌர்ணமி தோல்விக்கு பின் விஜயால் இப்படத்தை இயக்க தேர்ந்தர்டுக்கப்பட்டார்

என்னவோ விஜய்தான் பிரபுதேவாவுக்கு வாழ்க்கை கொடுத்தார் என்கிற மாதிரி சொல்லி இருக்கிறீர்களே? பிரபுதேவாவின் முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன தெலுங்கு படம் நுவோஸ்தண்டே நேனோடானா... இதைத்தான் தமிழில் சம்திங் சம்திங் என்று ரீமேக்கினார்கள்.

சுறா எம்‌ஜி‌ஆர் நடித்த மீனவநண்பன் என்ற படத்தின் அனபீசியல் ரீமேக். இதில் பெரிய காமெடி மீனவநண்பன் ஒரு பிளாப் படம்.

//ஷங்கர் இயக்கத்தில் விஜய்,ஜீவா ,ஸ்ரீகாந்த்மற்றும் பலர் நடித்த இப்படம் பிளாக் பஸ்ட்டர் ஆகியுள்ளது

கொஞ்சம் பொறுங்கள். துப்பாக்கி வெளிவந்ததும் அது நண்பனை தூக்கி சாப்பிட்டுவிடும். அதுவரை நண்பனையே பிளாக்பஸ்டர் என்று மெயிண்டேன் பண்ணுங்கள். நண்பன் வரும்வரை வேலாயுதத்தையும், வேலாயுதம் வரும் வரை காவலனையும் மெயிண்டேன் பண்ண மாதிரி. இதை எங்கே கொண்டு சேர்ப்பீர்கள் என்று ஓரளவு கணிக்க முடிந்தாலும், இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்

kobiraj said...

"ராஜா"
சரி அஜித்துக்கு ஒரு ஆழ்வார் போல விக்ரமுக்கு ஒரு ராஜபாட்டை போல என்று எழுதட்டா
''பிளாக் பஸ்டர் படமெல்லாம் மூனே மாசத்துல டிவியில போட்டுடுவாங்களா? இல்லை மூணு மாசத்துல டிவியில போட்டாத்தான் அது பிளாக் பஸ்டர் படமா? கொஞ்சம் விளக்கவும் ...''
http://eppoodi.blogspot.com/2012/04/blog-post_23.html
இந்த பதிவை படிக்கவும் விளங்காவிட்டால் மீண்டும் கேக்கவும் .

kobiraj said...

பாலா
''Prabhudeva was selected as director directing his first film in tamil after the flop of his telugu film Pournami.''-wikipidia pokiri பார்க்கவும்
''என்னவோ விஜய்தான் பிரபுதேவாவுக்கு வாழ்க்கை கொடுத்தார் என்கிற மாதிரி சொல்லி இருக்கிறீர்களே? ''நீங்கதான் அப்பிடி சொல்லுறீங்க நான் சொல்லல.
''சுறா எம்‌ஜி‌ஆர் நடித்த மீனவநண்பன் என்ற படத்தின் அனபீசியல் ரீமேக். இதில் பெரிய காமெடி மீனவநண்பன் ஒரு பிளாப் படம். ''ஆமா குருவி கூட அவதார் பட ரீமேக் தான்

''துப்பாக்கி வெளிவந்ததும் அது நண்பனை தூக்கி சாப்பிட்டுவிடும்.''இதெல்லாம் சொல்லி தெரிய வேண்டிய விஷயம் இல்ல .
தொடர்ந்து ஆவலுடன் படிப்பதற்கு நன்றி

பாலா said...

நண்பரே நீங்கள் எழுதி இருப்பது
//பிரபுதேவா தனது முதல் தெலுங்கு படமான பௌர்ணமி தோல்விக்கு பின்

ஆனால் விக்கியில் கூறி இருப்பது,
//தனது முந்தைய தெலுங்கு படமான பௌர்ணமியின் தோல்விக்கு பிறகு, முதல் தமிழ் படமான......


இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள். இதை சுட்டிக்காட்டாவே அப்படி கூறினேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

அப்புறம் குருவி அவதார் படத்தின் ரீமேக் என்று சொல்லும் அளவுக்கு நான் இரக்கமற்றவன் அல்ல. சொல்லப்போனால் அவதாரே பிரபு கவுண்டமணி நடித்த வியட்நாம் காலனி என்ற படத்தின் காப்பி போலத்தான் இருக்கும். அதை ஒரு தகவளாகத்தான் சொன்னேன். ஆனால் சுறா எம்‌ஜி‌ஆர் படம் மாதிரி வர வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்டது. மீனவ நண்பன் பட கதை கிடைத்தால் படித்து பார்க்கவும். கூடவே வியட்நாம்காலனி படக்கதையும்.

"ராஜா" said...

//சரி அஜித்துக்கு ஒரு ஆழ்வார் போல விக்ரமுக்கு ஒரு ராஜபாட்டை போல என்று எழுதட்டா

அப்படி தனி தனியாக சொல்வதற்க்கு பதிலாக தமிழ் பதங்களுக்கு ஒரு சுறா போல என்று மொத்தமாக சொல்லலாமே ...

//http://eppoodi.blogspot.com/2012/04/blog-post_23.html
இந்த பதிவை படிக்கவும் விளங்காவிட்டால் மீண்டும் கேக்கவும் .

இப்பவும் கேட்கிறேன் பிளாக் பாஸ்டர் என்றாள் என்னவென்று அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் குறிபிட்டிருக்கும் பதிவில் கூட நண்பன் வெற்றி படம் என்றுகூட சொல்லபடவில்லையே...

நான் கூட லத்திகா மிக பெரிய வெற்றி படம் என்று ஒரு பதிவு போடுவேன் உடனே லத்திகா வெற்றி படம் என்று ஆகிவிடுமா?

kobiraj said...

"ராஜா"
The film went on to collect the highest ever numbers generated by a Vijay-starrer and was deemed a blockbuster-wikipidia nanpan see it

vino147 said...

hiyo hiyo..... boos nanban film t.v la podurathuku than 7core koduthu film vangi irukanga, 7koodi kuduthu film vanginavan film-a podama irupana ???? negala iruntha enna seivenga ???

"ராஜா" said...

//The film went on to collect the highest ever numbers generated by a Vijay-starrer and was deemed a blockbuster-wikipidia nanpan see it

விக்கிபேடியாவில் நான் லத்திகா படம் 200 நாள் ஓடி 100 கோடி வசூல் செய்தது என்று எடிட் செய்துவிட்டு வந்தால் அது உண்மையாகிவிடுமா? விகிபீடியா என்றாள் என்னவென்று முதலில் புரிந்துகொள்ளவும்...

//hiyo hiyo..... boos nanban film t.v la podurathuku than 7core koduthu film vangi irukanga, 7koodi kuduthu film vanginavan film-a podama irupana ???? negala iruntha enna seivenga ???

எழு கோடி போட்டு வாங்குனவன் தீபாவளிக்கு ஒளிபரப்புனா நிறைய லாபம் கிடைக்குமா மே ஒண்ணில் ஒளிபரப்புனால் நிறைய லாபம் கிடைக்குமா? இதை தீபாவளிக்கு ஒளிபரப்பியிருக்கலாமே, தீபாவளிக்கு ஒளிபரப்புவதற்க்கு கூட லாயக்கு இல்லாத படம் என்பதால்தான் அவர்கள் முன்கூட்டியே ஒளிபரப்புகிறார்கள் , தீபாவளி ஆண்ட்ரூ வேறு ஏதேனும் நல்ல ஓடிய படம் போதும் பிளான் இருக்கிறது போலும் ...

Madurai pandi said...

Vijay-kku miga perum vetriyai kodutha Kadhalukku mariayadhai padamum oru malayala padathoda remake !!! enna padam endru ninaivil illai!!!

Madurai pandi said...

follow up

Related Posts Plugin for WordPress, Blogger...