Saturday, April 7, 2012

இந்த வருடத்தின் டாப் நடிகர் யார் ?

தமிழ் திரையுலகில் இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறையும் போல தெரிகிறது .தயாரிப்பாளர் சங்கங்களுக்கு இடையிலான மோதல் முக்கிய காரணம் .இதை நான் சொல்ல வந்தது ஏனெனில் இம்முறை புது வருசத்துக்கு பில்லா-2,மாற்றான் ,துப்பாக்கி என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் .ஒரே ஒரு படமாக ஒரு கல் ஒரு கண்ணாடி மட்டுமே வருகிறது .மே இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பில்லா -2 ஜூனுக்கு தள்ளி போகிறது .துப்பாக்கி தீபாவளி க்காவது வருமா தெரியவில்லை .தமிழ் சினிமா சம்பந்தமாக வெளிவரும் முன்னணி சஞ்சிகை யான http://www.behindwoods.com/ ஒவ்வொரு வருடமும் டாப் நடிகர் பட்டியல் வெளியிடுவது வழமை .முதல் இரண்டு இடங்களும் அனைவரும் எதிர்பார்ப்பது போல ரஜினி ,கமல் பெற்று வருகின்றனர் .மூன்றாவது இடத்தை சில வருடங்களாக சூர்யா நிரப்பி வந்தார் ..ஆனால் கடந்த வருடம் விஜயின் எழுச்சி மீண்டும் அவரை மூன்றாம் இடத்தில் அமர்த்த தலயும் வெற்றிக் கனியை பறித்து ஐந்திலிருந்து நான்குக்கு  முன்னேற சூர்யா ஐந்தாம் இடத்துக்கு தள்ளப் பட்டார் .விக்ரம் ,தனுஷ் ,சிம்பு ஆகியோர் முறையே 6,7,8 ம் இடங்களில் உள்ளனர்.  


.சூர்யாவின் வெற்றி போர்முலா வை இப்போது விஜய்,அஜித் யும் கடைப்பிடிப்பதால் இந்த வருட முடிவில் யார் முன்னிலை வகிக்க போகிறார்களோ தெரியவில்லை .ஏனெனில் துப்பாக்கி ,மாற்றான் ,பில்லா-2 மூன்றுமே எதிர்பார்க்கப் படும் படங்கள் .விஜய் ஏற்கனவே நண்பனுடன் முன்னிலையில் இருக்கிறார்.  
.
தல நடந்து பார்த்திருப்ப தல சிரித்து பார்த்திருப்ப தல நடித்து பார்த்திருப்ப ஏன் தல தொப்பைய கூட பார்த்திருப்ப ஆனா தல தூங்கி பாத்திருக்கியா பாத்திருக்கியா பாத்திருக்கியா....................

##################################################################


அண்மையில் பார்த்த ஹிந்தி படம் .ராப் நே பனாஜோடி .படத்தின் கதை என்னவெனில் தன்னுடையபேராசிரியரின் மகளான தானியாவின் திருமணத்துக்கு போயிருக்கும், சுரீந்தர் சகாய் (ஷாருக்), அங்கே தானியாவை (அனுஷ்கா சர்மா )பார்த்து வியந்து நிற்கிறார் அவருக்கு வர இருக்கும் மணமகன் ஓரு விபத்தில் இறந்து போக, பேராசிரியர்  தன் மகள் தானியாவை, ஷாருக்குக்கு கைபிடித்து கொடுத்து விட்டு, இறந்து விடுகிறார். பின்பு ஷாருக் தானியாவை மணந்து அம்ரிஸ்டர் திரும்புகிறார். தன்னை விருப்பமில்லாமல் திருமணம் செய்த மனைவியின் அன்பை பெற, மிகவும் யூத்புல்லான ஓரு இளைஞனாக மாறி, தானியா விரும்பிய சூப்பர் டான்ஸ் ஜோடி போட்டியில் அவருக்கு ஜோடியாய் சேரும் அளவிற்கு மாறிவிடுகிறார். ஓரு கட்டத்தில் தானியாவுக்கு ஒரே குழப்பம், தான் விரும்புவது ராஜ் யையா அல்லது சுரீந்தரையா..? என்று.கதை யதார்த்தத்துக்கு சற்றுமே ஒத்து வராதது .தன்னுடைய புருஷனை மீசை இல்லாமல் மனைவியால்அடையாளம் காண முடியாதா ?
எனினும் சாருக் ரசிக்கும் படி நடித்து இருக்கிறார் .சூரி ,ராஜ் என இரு பாத்திரங்களிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார் .ஒளிப்பதிவு மிகவும் அருமை .அம்ரிஸ்டர் நகரின் அழகாய் தத்ரூபமாக வெளிப் படுத்தி இருக்கிறார்கள் .ஆங்கில உப தலைப்புகளின் உதவியுடன் பார்த்த போதும் அலுக்கவில்லை .டான் ,ஓம் சாந்தி ஓம்,உயிரே (தமிழ்),டான் -2 இல் இல்லாத ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை பார்த்தேன் .அடுத்த ஷாருக் படம் பார்க்க ஆவல் .


###########################################################################
மணிரத்னம்
என்னை கவர்ந்த இயக்குனர்களில் முதன்மையானவர்மணிரத்னம்.அவரின் படங்களை தேடி பார்த்து வருகின்றேன் .முன்னரே பார்த்த படங்களானாலும் மீண்டும் ஒரு முறை மணி எவ்வாறு frame  களை எடுத்து இருக்கிறார் என அறிய திருப்பி பார்க்கிறேன் .மணி ரத்னத்தின் சமீபத்திய படங்கள் சொல்லில் கொள்ளும்படி வசூலில் ஜெயிக்கவில்லை .இவரின் அடுத்த படம் கடல் மீனவர்களின் வாழ்க்கையை தனக்கே உரிய பாணியில் புதுமுகங்களை வைத்து (கார்த்திக் மகன் கெளதம்)எடுத்து வருகிறார் .வழமை போக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள கடலை ஜெமினி தயாரிக்கிறது .கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்ஏற்கனவே கடல் சிறிதளவில் இழையோடி இருக்கும் .வழமை போல இசைப்புயல் இசை அமைக்கிறார் .
கடலுக்காக கடலில் discussion 

தளபதிக்கு நடிப்பு சொல்லி தருகிறார் 
######################################################################
நடிகர்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு பற்றி 1990-ல் குமுதத்தில் ஒரு கருத்து கணிப்பு வெளிவந்தது. அந்த படம் 
இவர்களின் இப்போதைய நிலையை வைத்து பார்க்கும் போது ரஜினியின் அபார வளர்ச்சி தெரிகிறது .விஜயகாந்தை விட கார்த்திக் ,சத்தியராஜ் முன்னிலை வகிப்பது ஆச்சரியப் பட வைக்கிறது . விஜயகாந்த் பின்னர் வந்த படங்கள்தான் அவரின் செல்வாக்கை உயர்த்தியிருக்க வேண்டும் .ராமராஜன் எனக்கு சினிமா தெரிந்த காலத்திலேயே காணமல் போய் விட்டார். பிரபு ,சத்தியராஜ் ஆகியோர் இன்றும் தமக்கு ஏற்ற கதா பாத்திரங்களில் பிஸி ஆக நடித்து  வருகிறார்கள் .கார்த்திக் திறமை இருந்தும் தன்னுடைய தீய பழக்கங்களால் விலகி உள்ளார் .ரஜினி ,கமல் தொடர்ந்து இப்போதும் அதே இடத்தை தக்க வைத்துள்ளது அவர்களின் திறமைக்கு கிடைத்த பரிசே ஆகும் (நடிகர் திலகம் பற்றி சொல்ல தேவை இல்லை).

Post Comment

5 comments:

சிட்டுக்குருவி said...

அருமையான பதிவு நண்பா...
நான் திரும்ப திரும்ப பார்த்த படம் என்றால் அது ரப்னே பனாடி ஜோடி படம்தான் ஷாருக் நடிப்பு பிரமாதம்

ஜோ/Joe said...

இந்த வருடத்தின் டாப் நடிகர் 48 வருடங்களுக்கு முன் கர்ணன் படத்தில் நடித்து இன்று வசூல் சாதனை புரியும் நடிகர் திலகம் தான்.

Kama said...

http://desiactressespics.blogspot.com/2012/04/nayanthara_4224.html

kobiraj said...

சிட்டுக்குருவி
thanks for ur visit & comment

kobiraj said...

ஜோ/Joe
''இந்த வருடத்தின் டாப் நடிகர் 48 வருடங்களுக்கு முன் கர்ணன் படத்தில் நடித்து இன்று வசூல் சாதனை புரியும் நடிகர் திலகம் தான்.''true

Related Posts Plugin for WordPress, Blogger...