Sunday, April 15, 2012

OK OK -not OK


இந்த வருடம் ரொம்பவே எதிர்பார்த்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி .பாஸ் என்கிற பாஸ்கரன் படம்  ஒரு விடுமுறையில் தியேட்டருக்கு சென்ற போது முதல் காட்சி பார்த்தது . அந்த படம் பார்க்க வேண்டும் என்று எதிர் பார்த்து போக வில்லை .அந்த படம் பார்த்த பின் தான் ராஜேஷ் என்பவரை பற்றி அறிந்தேன் . அதன் பின்தான் சிவா மனசுல சக்தி தொலைக்காட்சியில் பார்த்திருந்தேன் . அவரின் வெற்றி போர்முலா வித்தியாசமானது .ஒரே விஷயத்தை வைத்து கொண்டு தொடர் வெற்றி கொடுப்பது இலகுவான காரியம் இல்லை .ஷங்கர் எவ்வளவு கோடிகளை கொட்டி  தொடர் வெற்றிக்காக மினக்கெடுகிறார் .பேரரசு வும் தொடக்கத்தில் வெற்றி போர்முலாவை கொண்டிருந்த போதும் தொடர்ந்து வெற்றி அளிக்கவில்லை .ராஜேஷ் ஒரே ஒருவரை மட்டும் நம்பி கதையே இல்லாமல் முழு நீள நகைசுவை படத்தை எடுத்து இருக்கிறார் .மூன்று படங்களிலுமே அந்த ஒருவர் சந்தானத்தின் பங்கு முக்கியமானது .ஒருகல் ஒரு கண்ணாடி முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று ரொம்பவே ஆவல் கொண்டு இருந்தேன் எனினும் சில பல காரணங்களால் அது முடியாமல் போய் விட்டது .முதல் காட்சி இல்லாவிட்டால் என்ன பிறகு பார்க்கலாம் தானே என்றால் நம்ம கொள்கை தடுக்கிறது .அதாங்க பார்த்தால் FIRST ஷோ பார்க்கணும் இல்லாட்டி இல்ல .எனினும் இந்த கொள்கையின் முக்கிய அம்சம் கதை தெரிந்தால் பிறகு பார்ப்பதில் சுவாரசியம் கெட்டு போகும் என்பது .எனினும் கதை என்ற ஒன்றே இதில் இல்லை என்பதால் கொள்கையை தளர்த்தலாமா என்று யோசிக்கிறேன் .என்னுடைய நண்பன் ஒருவனை LIGHTAA கேடடு   பார்த்தேன்.அவனோ என்னடா அறிக்கை எல்லாம் விட்டாய்என்று கலாய்க்க தொடங்கி விட்டான் .எனினும் எனக்கு மனதுக்குள் ஒரு புளுகம்  அட இவங்களும் நம்ம ப்ளாக் வாசிக்கிறாங்க என்று .
 ராஜேஷ் மனைவியுடன் 
   படம் பற்றி எனக்கு தெரிந்து ஒருவரும் குறை கூற வில்லை .நண்பனை கூட தூற்றிய நண்பர்கள் உண்டு .ஆனால் ஓகே ஓகே யை எல்லோரும் டபுள் ஓகே என்கிறார்கள் .எனக்கு மட்டும் not ஓகே ஆகி விட்டது .பவர் ஸ்ரார் இற்கு போட்டியாக ஒருவரை எதிர் பார்த்த நலன் விரும்பிகளுக்கு பலத்த அடியை கொடுத்து இருக்கிறார் உதய் .வாழ்த்துக்கள் உதய் வெற்றி பயணம் தொடர .ஆல் இன் ஆல் அழகு ராஜா .ராஜேஷின் அடுத்த படம் .பெயரே பட்டைய கிளப்புது எல்லே .

புது வருசத்துக்கு (இப்பவும் கொண்டாடுறாங்க தானே )ஒரே ஒரு படம் மட்டும் வெளியாகியதால் சினி உலகில் பெரிய பர பரப்பு ஒன்றும் இல்லை .தல தளபதி ரசிகர்கள் எதிர் பார்த்த இரு விடயங்கள் பில்லா டீசெர் மற்றும் துப்பாக்கி FIRST  லுக் .சொன்னபடி பில்லா TEASER  வெளி வந்து விட்டது .தல ரசிகர்களுக்கு விருந்துதான் .எவ்வளவு நாள்தான் தல ய கோட்டு சூட்டு கூலிங் கிளாஸ் ஓடு பார்ப்பது என்று ஒரு சலசலப்பு எழுவதையும் அவதானிக்க  முடிகிறது .விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் firstlook 20 ம் திகதிதான் வெளியாகும் என அறிவிக்கப் பட்டு இருக்கிறது .எனினும் மனம் தளராமல் ''தலைவர் படத்தை காசு கொடுத்தே ஒன்னுக்கு பல வாட்டி பார்ப்போம் இப்போ சும்மா வேற காட்டுறானுக பார்க்காமல் இருந்தா நல்லா இருக்குமான்னா ''ஜெயா டிவியில் வேலாயுதம் பார்த்தானுக .
மங்காத்தா-2 வா ,பில்லா -2 வா # confusion 
TITANIC
15 .04 .2012 உலக வரலாற்றில்   ஒரு முக்கியமான நாள் .உலகின் ஒரு கருப்பு சரித்திரம்   நடை பெற்று நூறு ஆண்டுகள் கழிகின்றன .உலகில் அழியா இடம் பெற்று விட்ட titanic கப்பல் மூழ்கிய துயர சம்பவத்தை இன்று உலகெங்கும் நினைவு கூறுகிறார்கள் .விபத்து நடந்த இடத்துக்கே சென்று கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது .இந்த விபத்தை மையமாக கொண்டு 1997  இல்  தயாரிக்கப் பட்ட titanic காதல் காவியம்  பற்றி தெரியாதவர்கள் விரல் விட்டு என்ன கூடியவர்களே .இந்த கப்பல் வரலாறு பற்றி மேலும் அறிய இவற்றை படியுங்கள் .


JHC YOUTH WING alumni fiesta-2012
இலங்கையில் புகழ் பூத்த கல்லூரிகளில்   ஒன்றான யாழ்ப்பாணம்   இந்து கல்லூரி  பழைய மாணவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப் பட்டு வெற்றிகரமாக செயற்படும் YOUTH  WING இன் வருடாந்த ஒன்று கூடல் அண்மையில் நடை பெற்றது .பழைய மாணவன் என்ற ரீதியில் நானும் பங்கு கொண்டேன் .வாழ்க்கையின் மிகவும் இனிமையான பருவமான கல்லூரி பருவத்து தோழர்கள் அனைவரையும் ஒன்றாக சந்திப்பது என்றால் சொல்லவும் வேண்டுமா .மிகவும் சிறப்பாக நடை பெற்ற இந்த நிகழ்ச்சி வாழ்க்கையின் இனிமையான தருணங்களில் ஒன்றாக இந்துவின் மைந்தர்கள் அனைவருக்கும் அமைந்து  இருக்கும்   என்பது திண்ணம் .எதிர்வரும் காலங்களிலும் இந்த வருடாந்த ஒன்று கூடல் திறம்பட நடைபெற வாழ்த்துக்கள் .
JHC YOUTH WING alumni fiesta-2012


Post Comment

4 comments:

கார்த்தி said...

சார் உங்களுக்கு படம் பிடிச்சுதா இல்லையா? இந்த பந்தி சரிய்யான குழப்பமா இருக்கே!!

/* ஆனால் ஓகே ஓகே யை எல்லோரும் டபுள் ஓகே என்கிறார்கள் .எனக்கு மட்டும் not ஓகே ஆகி விட்டது .பவர் ஸ்ரார் இற்கு போட்டியாக ஒருவரை எதிர் பார்த்த நலன் விரும்பிகளுக்கு பலத்த அடியை கொடுத்து இருக்கிறார் உதய் .வாழ்த்துக்கள் உதய் வெற்றி பயணம் தொடர .ஆல் இன் ஆல் அழகு ராஜா .ராஜேஷின் அடுத்த படம் .பெயரே பட்டைய கிளப்புது எல்லே */

kobiraj said...

படம் பார்க்க முடிய வில்லை என்ற ஆதங்கத்தைத்தான் not ok என்று குறிப்பிட்டு உள்ளேன் .குழப்பமாக உள்ளதா அப்படியானால் சரி செய்கிறேன்

கார்த்தி said...

OK OK ஆனா இந்த தலைப்பும் அந்த பந்தியும் படம்பாத்து சரியில்லை எண்டு சொல்றது போல இருக்கு..

Unknown said...

டைட்டானிக் கதை சூப்பர்.சுட்டி கொடுத்ததற்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...