Saturday, June 2, 2012

மணிரத்னம் -the living legend


மணிரத்னம்(பிறப்பு ஜூன்-2-1956)

தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லாமல் உலக அளவில் பேசப்படும் இயக்குனர் இவர் ஆவார்.டைம்ஸ் இதழின் உலகின் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக இவரின் நாயகன் படம் தேர்வாகியமை இவர் உலகத் தரம் வாய்ந்தவர் என்பதற்கு சான்றாகும் .யாரிடமுமே உதவி இயக்குனராய் பணியாற்றாமலேயே தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி(கன்னடம்)படத்தை இயக்கினார் .இவரின் ரோஜா திரைப்படம் தேசிய விருதை வாங்கியது மட்டுமில்லாமல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மானை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது .அனேகமாக நடுத்தர மக்களை மையமாக கொண்டு கதை சொல்வதே இவரின் பாணி .இவரின் படங்களில் எனக்கு பிடித்த படம் என்றால் தளபதியைத்தான் சொல்வேன்.மஹா பாரத கதையை தழுவி படத்தை அருமையாக எடுத்திருப்பார் .ரோஜா ,மௌனராகம் ,நாயகன் ,அக்னி நட்சத்திரம் போன்றவையும் என்னை கவர்ந்த படங்கள் .அலைபாயுதே என்ற அருமையான காதல் கதையையும் வெற்றிகரமாக கொடுத்தவர் .இவரின் இன்னொரு சிறப்பு என்னவெனில் இவர் இயக்கிய படங்களுக்கு இருவர் மட்டுமே இசையமைத்துள்ளனர் .அதிலும் ரோஜாவுக்கு முதல் வரையான படங்களுக்கு இசைஞானி இளையராஜாவும் அதற்குப் பின் வந்த இன்றுவரையான படங்களுக்கு a.r.ரஹ்மானும் மட்டும்தான் இசை அமைத்துள்ளனர்.


மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்



என்னமோ தெரியவில்லை இவர் இயக்கிய ஆரம்ப காலப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றதுடன் இப்போதைய படங்களில் பெரும்பாலானவை தோல்விஅடைந்துள்ளன.இவரின் படங்கள் பாமர மக்களுக்கு புரிவதில்லை என்ற குறையும் காணப்படுகிறது .ஆய்த எழுத்து நல்ல உதாரணமாகும் .இவர் இப்போது தனது படத்தை பல மொழிகளில் எடுக்கும் உத்தியை கையாண்டு வருகிறார்.இவர் கடைசியாய் எடுத்த ஐந்து படங்களில் நான்கு தோல்வியை தழுவிய நிலையில்{குரு மட்டுமே வெற்றி ) பொன்னியின் செல்வன் எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுக்கவிருந்தார் .எனினும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு விட்டது .அடுத்த படம் கடல் கார்த்திக்கின் மகன் கெளதமை வைத்து கடல் சார்ந்த கதையை படமாக்கி வருகிறார்.மீண்டும் ரஹ்மான் கை கோர்க்கிறார்.வழக்கம் போல இந்த படத்துக்கும் இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்தாலும் இவரின் மவுசு கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.




#############################################################################
மணிரத்னம் பிறந்த நாளை ஒட்டி சினிமா விகடனில் வெளிவந்த மணிரத்னம் பற்றிய சுவையான விடயங்கள்25!

நவீன தமிழ் சினிமாவின் 'நான் கடவுள்'. ஒளியையும் மொழியையும் மாற்றி புதிய கதவைத் திறந்தவர். சில மணித் துளிகள் இங்கே...

உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக 'நாயகன்' டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டது. மிகப் பெரிய கௌரவத்தைக் கொண்டாட விழா எடுக்க நினைத்தபோது, அதைத் தடுத்தவர் மணிரத்னம்!

தீபாவளிக்கு முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள், உறவினர்கள் அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி சைவ விருந்து அளிப்பார். பாட்டும் ஆட்டமும் அவசியம் உண்டு!


கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால், கடிகாரத்தை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்து, நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார்!

மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள். மாப்ளே, மதுரைக்காரர். ஜூன் 2... பிறந்த தேதி!

தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் ரியாக் ஷன் காட்டவே மாட்டார். இரண்டையும் புறம்தள்ளிவிடுகிற இயல்புடையவர்!

கதை விவாதத்துக்கு எப்போதும் துணை சேர்க்கவே மாட்டார். எல்லாமே அவரது எண்ணங்களாகத்தான் இருக் கும். சந்தேகம் இருந்தால் மட்டும், ராக்கெட்டோ ஜாக் கெட்டோ சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொள்வார்!

முழு ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலில்தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே. பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்க்ரிப்ட் கம்ப்யூட்டர்மயமாகி விடும்!

படம் ரிலீஸான தினத்தன்று கொஞ்சம்கூட டென்ஷன் ஆக மாட்டார். தியேட்டர் நிலவரம் விசாரிக்க மாட்டார். நிதானமாக அன்றைக்கு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பார்!

நந்தனுக்குப் பரீட்சை என்றால் அன்று அலுவலகத்துக்கு விடுமுறை போடுவார். மகனுக்கு சொல்லிக்கொடுக்கத்தான் இந்த விடுமுறை!



நல்ல படமாகவும் இருக்க வேண்டும், அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும். அந்தவிதத்தில் '16 வயதினிலே' படத்தைத்தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்!

காரில் ஏறி உட்கார்ந்ததும் முதல் வேலையாக ஸீட் பெல்ட் போட்டுக்கொள்வார். எல்லோரையும் அவ்விதம் செய்யத் தூண்டுவார்!

படத்துக்கு பூஜை, கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்துத் தீபாராதனை காட்டுவது, பூசணிக்காய் உடைப்பது, ராகுகாலம், எமகண்டம் இப்படி எதையும் பார்க்க மாட்டார். தன் உழைப்பு ஒன்றையே நம்புவார்!

பாலாவின் 'பிதாமகன்', 'நான் கடவுள்' படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார். பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெஷல் மரியாதை!



தன்னிடம் இருந்து எந்த அசிஸ்டென்ட் வெளியே வாய்ப்பு தேடிப் போனாலும், அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து, வாய்ப்பு கிடைக்கும் வரை பயன்படுத்திக்கொள்ளச் சொல்வார்!

மனைவியை எப்போதும் 'ஹாசினி' என்றே அழைப்பார். சுஹாசினியும் இவரை சிம்பிளாக 'மணி'!

பெண் குழந்தை ரொம்பவும் பிடிக்கும். அநேகமாக அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினைப் பார்த்து 'எனக்குப் பெண் குழந்தை பிடிக்கும்' எனச் சொல்லும் ஸீன் இருக்கும்!



மணிரத்னம் முதல் ஐந்து படங்கள் முடியும் வரை கார் வாங்கவே இல்லை. 'தளபதி' படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார். அவரின் திருமணமும் அப்புறம்தான் நடந்தது!

மணிரத்னம் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது 'இருவர்'. பேச்சின் ஊடாக அதை அடிக்கடி குறிப்பிடுவார்!



நடிகர்களிடம் இப்படித்தான் நடிக்க வேண்டும் என நடித்துக் காட்ட மாட்டார். அவர்களை இயல்பாக நடிக்கவிட்டு, தேவையான கரெக்ஷன்களை மட்டுமே கொடுத்துப் படமாக்குவதையே விரும்புவார்!

மணிரத்னத்தின் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும். கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்குப் புரிபடும் இந்த உண்மை!
தேனிமை விரும்பி. அவரைத் தெரிந்துகொண்டவர்கள் அதை அனுசரித்து நடப்பார்கள்!

மணியின் மானசீக குரு, அகிரா குரோசோவா. அவரது படங்களைத் திரையிட்டுக் காண்பதை அதிகம் விரும்பும் மனசு!

கொடைக்கானலில் மணியின் கனவு இல்லம் கிட்டத்தட்டத் தயார். பெரிய தியேட்டரும் உள்ளே உண்டாம்!

மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர்களாக 'ரியல் இமேஜ்' ஜெயேந்திரா, பி.சி.ஸ்ரீராம்,சந்தோஷ்சிவன் மூவரைச் சொல்லலாம். மாதம் ஒரு தடவையாவது சந்தித்துச் சிரிப்பது வழக்கம்!

உடை தேர்வில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார். சிம்பிளாக பருத்தி ஆடைகள் போதும். எவ்வளவு கிராண்ட் ஃபங்ஷனாக இருந்தாலும் கவலையேபடாமல் எளிமையின் வடிவில் வருவார்.


Post Comment

2 comments:

கோவை நேரம் said...

நல்ல பகிர்வு..மணிரத்னம் பற்றிய தகவல் கள் புதிது...

kobiraj said...

thank you

Related Posts Plugin for WordPress, Blogger...