Saturday, July 14, 2012

" பில்லா -2 ஏன் பார்க்க வேண்டும்

படம் பார்த்த அனுபவம் 
படத்திற்கு விமர்சனம் எழுத விரும்பவில்லை .ஆனால் இதுவரை திரையரங்கில் இப்படி ஒரு அனுபவத்தை பெற வில்லை .முதன் முறையாக சுவர் ஓரம் இருக்கும் படிகட்டில் இருந்து படம் பார்த்தேன் .திரை அரங்குக்கு உள்ளே இதுவரை எந்த படத்துக்கும் இப்படி சனத்தை பார்த்ததில்லை .தியேட்டரின் கொள்ளளவை விட அளவுக்கு அதிகமாக ஆட்களை அனுமதித்ததால் சுவர் ஓரம் நிரம்பி வழிந்ததுடன் பலர் நின்ற நிலையிலும் படம் பார்த்தார்கள் .வியர்வையினால் குளித்து விட்டோம் பல்கனி -300உம் odc 250 உம் வாங்கும் இவர்கள் ஓரளவுக்கு டிக்கெட் களை அளவாக கொடுத்து இருக்கலாம்.(சிவகாசி,வேட்டை காரன் படங்களுக்கு இதே திரை அரங்கில் முதல் காட்சி டிக்கட் கிடைக்காமல் திரும்பி இருக்கிறேன் ).#வழமையாக நடப்பதுதான் ஆனால் இது தியேட்டர் நிர்வாகிகளின் ஆசை இல்லை பசி-

நேற்று படம் பார்த்து விட்டு நான் facebook இல் பகிர்ந்தவை 
billa-2 படத்தில மொத்தம் 89 கொலை ஹீரோ மட்டும் 78 பண்ணிடுறார் # hats off Senthil Kumar sir உங்களால மட்டும் எப்புடி முடியுது
தல படத்தில உங்க நடிப்பும் நடையும் வழக்கம் போல சூப்பர் இந்த முறை உங்க வசனங்களும் சூப்பர் தல .''என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா''இந்த வசனத்தை நீங்க மூணாவது வாட்டி சொல்லும் போது (climax)எனக்கு ஏனோ வேட்டைக்காரன் கொலைமாக்ஸ் இல விஜய் பேசுற வசனங்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது தல


தமிழ் சினிமா பிரபலங்களை பொறுத்த வரை சினிமா தவிர்த்து தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த முதல் மனிதர் அஜித் .எந்தவித பின்புலமும் இன்றி அவரின் வாழ்க்கை அவரே செதுக்கியதுதான் அப்படி நிறைய பேர் வந்து இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு பிடித்தது அவரின் கொள்கைகள் ,போராட்ட குணம் , அசாத்திய தைரியம் ,பல ஆப்றேசன்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு பல இன்னல்களுக்கிடையில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளமை இன்னும் பல காரணங்கள் ஆனால் அதற்காக பெரிய சினிமா பின்புலத்தை கொண்டவர்கள் எல்லோரும் பிரபலமாக முடியும் என்றால்சினிமாவில் பிரபலமானவர்கள் தொகை முடிவிலிக்கு சென்று இருக்கும் . தந்தை இயக்குனர் என்றால் ஒரு அனுகூலம்தான் ஆனால் அவர் ஒரு ஊக்கியாக மட்டுமே செயற்பட முடியும் ஊக்கி தாக்கத்தில் பங்கு கொள்ளது என chemistryil படித்த ஞாபகம்எனவே திறமை இல்லாமல் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது .விஜய் ,சூர்யா ,கார்த்தி ,ஜீவா போன்றவர்கள் அஜித் அளவுக்கு கஷ்டங்களை எதிர்நோக்க வில்லை ஆயினும் தனியே தகப்பனின் செல்வாக்கால் நிலைத்து இருக்க முடியாது என்பதைநீங்கள் ஒத்து (நேற்றும் திருமலை படம் பார்த்தேன் )கொண்டுதான் ஆக வேண்டும் .# கடுப்பு+ வெறுப்பு ஏற்றும் நண்பர்களுக்காக
நண்பனின் வரிகள் 
Iroshan Puviraj தகப்பனின் செல்வாக்கு என்பது 10% தான்..
மிச்ச 40% அதிஷ்டம் 50% உழைப்பு இருக்கணும்...
தகப்பனின் செல்வாக்குன்னா ஜித்தன் ரமேஷ்,பாரதிராஜாவின் மகன் மனோஜ்,பாக்யரஜ் மகன் சாந்தனு,ஏன் இப்ப கடுமையா உழைக்கும் அருண்விஜய் இன்னும் தகுந்த இடத்தை பெறவில்லை........
சினிமாவில் அதிஷ்டமும் உழைப்பும் இருக்கணும் இருந்தா தான் ஜெயிக்கலாம்...
அந்த வகைல விஜய்,சூரியா,கார்த்தி போன்றோர் உச்சத்தில் இருக்க காரணம் உழைப்பும் அதிஷ்டமுமே!!!!!!!!!படத்தில் பிடித்த விடயங்களில் முக்கியமானது வசனங்கள் .அதிலே என்னை மிகவும் கவர்ந்த வசனங்கள் இவை .
மத்தவங்களோட பலவீனம் நம்ம பலம்.. மத்தவங்களோட பயம் நம்ம பலம்..
பார்ட்டியை முன்னே பின்னே பார்த்ததில்லையே நீ, எப்படி கண்டு பிடிப்பே?
நல்லவங்களை கண்டுபுடிக்கிறது  தான் கஷ்டம்
லேட்டா போனா பொறுப்பில்லைன்னு சொல்லிடுவாங்க,முன்னாலயே போனா வேற வேலை இல்லைபோலன்னு எளப்பமா நினைப்பாங்க.. அதனால சொன்ன டைம்க்கு ஷார்ப்பாபோகனும்.. அப்போதான் நம்ம மேல ஒரு நம்பிக்கை வரும்..
உக்காந்து வேலை வாங்குறவனுக்கும்  உயிரை கொடுத்து வேலை செய்யிறவனுக்கும் 
வித்தியாசம் இருக்கு !

 பிச்சைக்காரனா இருந்தாலும் சரி,கூலிக்காரனா இருந்தாலும் சரி , Business Man'ah
இருந்தாலும் சரி உழைப்பு தான் அவனை உயர்த்தும், உழைக்கனும்


facebook இல் என்னை கவர்ந்த ஒரு status 
ஈழத்தமிழருக்காக நடிகர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஒரு கூட்டத்தில "சினிமா Industryய தயவு செய்து சினிமா Industryயா இருக்க விடுங்க" என்று அஜித் கூறிய நாளிலிருந்து நான் அஜித்தை ஒரு தமிழின துரோகியாக தான் பார்க்கிறேன்....!!!! இப்போது பில்லா படத்தில் அவர் பேசி இருக்கும் ஒரு பஞ்ச் "போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்... போராடிக்கிட்டு இருக்கிறவன் தோத்திட்டா அவன் தீவிரவாதி... ஜெயிச்சிட்டா அவன் போராளி".... ஒவ்வொருவருக்கும் இது பல கோணத்தில் புரிந்தாலும் எனக்கு இது ஒரே கோணத்தில் தான் புரிகிறது...! சிறு வயதில் அடிக்கடி நம் காதுக்கு எட்டிய ஒன்று மட்டும் தான் ஜாபகம் வருகிறது " உதவி செய்யாட்டியும் பரவால... உவத்திரம் செய்யாம இருங்கடாபடத்தை பற்றி அதிகம் இணையத்தில் உலவும் விமர்சனம் இதுதான் யார் எழுதினாரோ தெரியவில்லை ஆனால் உண்மையை பிரதிபலித்து இருக்கிறார் 
படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!

Post Comment

3 comments:

Doha Talkies said...

நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
அந்த bottle க்கு நன்றி.
கிரேட் எஸ்கேப்.
விமர்சனம் அருமை
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html

pozhuthupoku said...
This comment has been removed by the author.
Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பதிவு


நன்றி,
ஜோசப்
--- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Related Posts Plugin for WordPress, Blogger...