Wednesday, August 22, 2012

மசாலா கபே -சுவாரசிய தகவல்கள்

தமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் .மூன்றாம்பிறை,நாயகன்,இந்தியன் ஆகிய படங்களுக்காக பெற்று கொண்டார் ,நடிகர் திலகம் என போற்றப்படும் சிவாஜிகணேசன் தேவர்மகன் படத்துக்காக SPECIAL JURY AWARDபெற்று கொண்டார்.
#####################################################
தலீவா யூ  ஆர்  கிரேட்  
ஒரு நடிகன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் ? – விகடன் பேட்டியின் போது கவுண்டமணியிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.

இதற்கு கவுண்டமணி அளித்த பதில் என்ன தெரியுமா - "தன்னை பற்றின நிஜ ரூபத்தை பொத்தி பொத்தி மூடனும். பெட்டிகடையில பீடியை கூட கட்டு கட்டாஉள்ளேதான் வச்சுருப்பான்.அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளிய வச்சு கொட்டி பரத்தி வியாபாரம் பண்ணி பாருங்க.....பீடி விக்காது.

நானும் அப்படித்தான். விழாக்கள், பேட்டிகள்-ன்னு எதுக்கும் ஒத்துக்க மாட்டேன்.கலை நிகழ்ச்சி அப்படிங்கிற பேர்ல சிங்கப்பூர் துபாய் போறதில்ல. ரசிகர் மன்றங்களை எல்லாம்கூட கலைச்சுட்டேன். என் பிறந்தநாள் என்னைக்குன்னே மறந்து போச்சு. முக்கியமா டிவி.க்குபேட்டி கொடுக்கிறதில்லை. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு. அப்பத்தான் கிக் !!!!

###########################################################
அனிருத் 

கொலைவெறி பாடல் மூலம் தனுசை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றவர் அனிருத் . உறவினரான இவர் அண்மையில் அன்ரியா வுடனான முத்த காட்சி மூலம் பேசப்பட்டார் .தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தின் போது அனிருத் 


##############################################################
சந்தானம் 
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் தற்போது NO 1 ஆக இருப்பவர் சந்தானம் .இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றி படங்களில் நடித்தார்.தற்போது இவருக்கு 32 வயது .ராக்கம்மா எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார் .சந்தானம் தனது குழந்தையுடன் காணப்படும் அரிய புகைப்படம் இது 
###############################################################
SS Rajamouli-
வெற்றிப்பட இயக்குனர் . Vikramarkudu(original of சிறுத்தை ),மகாதீரா ,நான் ஈ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை உருவாக்கியவர் இவரின் முதல் படம் student no 1 தமிழில் அதே பேரில் ரீமேக் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.wiki யில் இவ
ரை பற்றி ''He is one of the most successful directors of Telugu Film Industry with 100% success rate''. இவ்வாறு குறிப்பிட பட்டுள்ளது இவர் தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும் ..


########################################################
விஜய் அன்டனி 
சுக்ரன் ,வேட்டைக்காரன் ,வேலாயுதம் என பட்டைய கிளப்பிய இசை அமைப்பாளர் விஜய் அன்டனி முதன் முதலாய் நடித்திருக்கும் 'நான் 'படம் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது .அவர் இசை அமைக்கும் 25 வது படம் இது என்பது குறிப்பிட தக்கது வாழ்த்துக்கள் விஜய் சார் # இந்த வருஷம் விஜய் வருஷம் போல
############################################################
RACE -
அண்மையில்தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது .அருமையான படத்தை இவ்வளவு நாளாய் மிஸ் பண்ணி விட்டேன் .10 நிமிடத்துக்கு ஒரு முறை ஊகிக்க முடியாத திருப்பங்களுடன் விறு விறுப்பான திரைக்கதை .நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி # விஷ்ணுவர்தனின் அடுத்த படம் இதன் ரீமேக் தான் என்று ஒரு கதை அடிபடுகிறது .அது உண்மையானால் அஜித் ஆர்யா கூட்டணியில் கண்டிப்பாக இந்த படம் பிய்த்து உதறும்
#############################################################
உலகின் தற்போதைய முதல்தர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான குமார் சங்க காராவின் குடும்பம் 

Post Comment

5 comments:

மைந்தன் சிவா said...

ம்ம் தகவல்களின் தொகுப்பு..!
மசாலா கபே என்றவுடன் என்னடா பட விமர்சனமான்னு பார்த்தேன் :)

மைந்தன் சிவா said...

நீங்களே உங்களுக்கு தமிழ்மண ஒட்டு போட்டுக்கலைனா எப்பிடி? :P

kobiraj said...

@ மைந்தன் சிவா
இப்போ ப்ளாக் இல ஆர்வமே இல்ல சும்மா பொழுது போக்குக்கும் எனது திருப்திக்கும் மட்டுமே பதிவு போடுறன் .

Easy (EZ) Editorial Calendar said...

படங்கள் அனைத்தும் அருமை


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

கோவை நேரம் said...

சினிமா தொகுப்புகள் அருமை..

Related Posts Plugin for WordPress, Blogger...