Thursday, September 6, 2012

நீதானே என் பொன் வசந்தம் -ஒரு அலசல்

நீதானே  என் பொன்  வசந்தம்

தமிழ் சினிமாவில் 2012 ம் ஆண்டு 100 வது படமாக முகமூடி வெளிவந்து இருக்கிறது .ஏற்கனவே வெளிவந்திருக்க வேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் தாமதித்து கொண்டிருக்கின்றன .அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களை உள்ளடக்கிய வருடத்தின் நான்காம் பாதிதான் கோலிவுட் இல் வசந்த காலமாக இருக்க போகிறது .துப்பாக்கி ,விஸ்வரூபம் ,மாற்றான் ,தாண்டவம் ,கோச்சடையான்  என பட்டியல் நீள்கிறது .இவை இயக்குனரின் செல்வாக்கு இருந்தாலும்  பெரும்பாலும் ஹீரோ பேஸ் பில்ம்ஸ்  .ஆனால் டைரக்டர் பேஸ் பிலிம் ஆன  கெளதமின் படம் ஒன்று உச்ச எதிர்பார்ப்பில் இருக்கிறது .அண்மையில் வெளியிடப்பட்ட பாடல்கள் ,trailor ஆவலை உச்சப்படுத்தி இருக்கிறது .அந்த படத்தை பற்றிய ஒரு அலசல்தான் இந்த பதிவுகௌதம் 
  கௌதம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.மின்சார கனவு படத்தில் ராஜீவ் மேனனுக்கு  உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இளமையான காதல் கதையான படம் மிகப்பெரு வெற்றியை பெற்றது.தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார் கெளதம் .தன்னுடைய எல்லா படத்திலும் காதலை அழகாக இழையோடுவது இவரது தனி சிறப்பு .முக்கியமாக தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஆக்சன்  படங்களில் காதல் பொருட்படுத்தப் படுவதில்லை .பாடல் காட்சிகளுக்கு மட்டுமே ஹீரோயின் அனேகமாக பயன்படுத்தப் படுவார் .ஆனால் கௌதமின் ஆக்சன் படத்தில் ஹீரோயினுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கும் .அழகான காதலும் இருக்கும் .காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு அந்த ரகம் .ஆக்சன் படத்திலேயே அழகான காதல் என்றால் காதல் படத்தில் சொல்லவும் வேண்டுமா மின்னலே ,விண்ணைத்தாண்டி வருவாயா தமிழில் தவிர்க்க முடியாத காதல் படங்கள் .மணிரத்னத்தின் சாயல் தென்பட்டாலும் கெளதம் படம் என்றால் எப்போதும் மார்கெட் தான் .


ஏனைய  மொழிகளிலும் தனது படங்களை விஸ்தரித்த  கௌதமுக்கு தெலுங்கில் வரவேற்பு இருந்தாலும்(காக்க காக்க ரீமேக்,தெலுங்கு vtv  ) பாலிவுட் இன்னும் அவரை கண்டு கொள்ளவில்லை .மின்னலே ,விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டி ரீமேக் க்கும் தோல்வி .ஹிந்தியில்  vtv தோல்வி அடைந்த  பின்  பாலிவுட் ரசிகர்களுக்கு பின் நல்ல சினிமாவி ரசிக்க தெரியவில்லை என்று கொந்தளித்து இருந்தார் .(காக்க காக்க வை force  எனும் பெயரில் வேறு ஒரு இயக்குனர் ரீமேக் செய்திருந்தார் அதுவும் தோல்வி அடைந்து தனி கதை ).கௌதமின் வாழ்க்கையில் ஒரு கறுப்பு  புள்ளி நடுநிசி நாய்கள் என்பதை மறக்க முடியாது 


கௌதமுக்கு நல்ல கொம்பி நேசன் சூர்யா.இரண்டு படங்களும் ஹிட் .உலகநாயகனுடனும் இணைந்து விட்டார் .இயக்குனருக்கு இலகுவில்  அடிபணியாத சிம்புவையும் முழுமையாக கட்டுப்படுத்தி சிம்புவுக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் .அஜித்துடன் ஏனோ தெரிய வில்லை முறுக்கி கொண்டிருக்கிறார். அண்மையில் விஜயுடன் இணையவிருந்த படமும் தடைப்பட்டு விட்டது .

மின்னலே ,vtv  வரிசையில் அடுத்த காதல் காவியம் தான்  நீதானே என் பொன் வசந்தம் .ஆரம்பத்தில் தனது படங்களுக்கு ஹாரிசை பயன்படுத்தியவர் அவருடனான உறவு விரிசலின் பின்A .R .ரஹ்மானை VTV யில் பயன்படுத்தி இருந்தார் .ரஹ்மானுடனும் எதோ பிரச்சினை எழவே  NEP இல் இசை ஞானி யுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து இருக்கிறார் .

இளையராஜா 

கௌதமின் படங்களில்  பாடல்களே கதை பேசும் .பாடல்களுக்கு விசுவல் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான் .அந்த வகையில் இசையுலகின் ராஜாதி ராஜாவான இளையராஜா அண்மைக்காலமாக இசையில் பெரிதாக சோபிக்கவில்லை என்ற விமர்சனங்களை சந்தித்து வந்தார் .கௌதமின் படத்துக்கு இசை என்பதால் ராஜா என்ன செய்ய போகிறார் என ஓட்டுமொத்த  திரை உலகமும் பாடல்களை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள் .வெகு விமரிசையாக  பாடல்களும் வெளியிட்டாச்சு எனக்கு இசை என்றாலே என்னவென்று தெரியாது .இசையின் நுணுக்கங்களோ, புலமையோ ,இசையை பற்றி அடிப்படை அறிவோ எதுவும் தெரியாது .ஆனால் இசையை ரசிக்க தெரியும்.அது நல்லாய் இருக்குஇது சரியில்ல  இதை குறைத்து இருக்கலாம்அப்பிடின்னு வாய்க்குள் நுழையாத இங்கிலீஷ் வோர்ட்ஸ் பயன்படுத்தி விமர்சனம் பண்ண தெரியாது .அடிப்படையில் இசையில் நானும் யாருக்கும் ரசிகன் கிடையாது .எனக்கு பிடித்த பாடல்களை விரும்பி கேட்பேன் .அந்த வகையில் இந்த NEP பாடல்களும் பிடித்திருக்கு .இந்த 8 பாடல்களிலும்  இளையராஜா பாடிய வானம் மெல்ல ரொம்ப பிடிச்சிருக்கு ,சாய்ந்து சாய்ந்து ,காற்றை கொஞ்சம் ,என்னோடு வா வா என்ற வரிசையில் இருக்கு மை பாவரைட்ஸ் .எனினும் விஜய் அஜித் படங்கள் வெளியாகும் போது  கிளம்பும் எதிர்மறை விமர்சனங்கள் போல ராஜாவை பிடிக்காத பலரால் இணையத் தளங்களில் போலி பிரச்சாரம் செய்யப் பட்டது .நல்ல புத்தகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை தானே சிறகு முளைத்து பறக்கும் என்று ஒரு எழுத்தாளர்  சொன்னது போல இந்த பாடல்களும்  பறக்க தொடங்கி விட்டன .கெளதம் படங்களிலே விசுவல்ஸ் தான் பாடல்களை இன்னும் எழுப்பும் .VTV நல்ல உதாரணம் பாடல் வெளிவந்த புதிதில் பாடல்கள் பலருக்கும் பிடிக்க வில்லை ரஹ்மான் சொதப்பி விட்டாரே என இசையே மொழியாய் வாழும் நண்பர்கள் கூற கேட்டுள்ளேன் .எனினும் படம் வெளிவந்த பின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தது வரலாறு .என்னை பொறுத்த வரை  கெளதம் படத்துக்கு நாங்கள் எதிர்பார்த்த இசையை வழங்கியிருக்கிறார் இசைஞானி .

ஜீவா 

இளைய தலைமுறை முன்னணி நாயகர்களில் ஒருவர் .விஜய்,அஜித் போட்டியில் சூர்யா எப்படி இருக்கிறாரோ அதே போல் சிம்பு ,தனுஷ் போட்டியில் ஜீவாவை  குறிப்பிடலாம் .எந்த பாத்திரத்துக்கும் பொருந்த கூடியவர் என சக நண்பர் ஜெயம் ரவியாலேயே புகழப்பட்ட ஜீவா ராம் ,கற்றது தமிழ் ,ஈ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் .எனினும் ஜீவாவுக்கு  பிரேக் கொடுத்த படம் என்றால் அது கோ தான் .அதன் பின் அவரின் மார்கெட் ஏறி விட்டது . கோ தந்த மகத்தான வெற்றி நண்பன் பிளாக் பஸ்ட்டர் என்பன இடையில் வெளி வந்த ரௌத்திரம், வந்தான் வென்றான் தோல்விகளை மறைத்து  விட்டது  .எனினும் முகமூடி ரிசல்ட் உம் பாதகமாக அமைய கூடிய வாய்ப்பு இருக்கிறது .எது எவ்வாறாயினும் nep கெளதம் படம் என்பதால் இயக்குனரின் எண்ணத்தை  அப்படியே பிரதிபலிப்பார் ஜீவா .

சமந்தா  NEP  trailor வெளியாகி 45 மணி நேரத்துள் அரை மில்லியன் வியுஸ் தாண்டி முன்னைய பில்லா-2 இன் சாதனையை முறியடித்து இருக்கிறது .நான் இதை பதிவு செய்யும்  போது 1.3மில்லியன்  தாண்டி விட்டது இதற்கு காரணம் கெளதம் ,ராஜா,ஜீவா ஆகியோரை தாண்டி இப்போது இளைஞர்களை ஆக்கிரமித்திருக்கும் கனவு கன்னி சமந்தா தான் .நடிகர்களை போல் நடிகைகள்  தமிழ் சினிமாவில் நீடித்து இருக்க முடியாது .அந்த வகையில் இப்போது சமந்தா புராணம் தான் பாடுகிறார்கள் இளைஞர்கள் .கௌதமின் ஆஸ்தான கதாநாயகியான சமந்தா (vtv நந்தினி ,தெலுங்கு ஜெஸ்சி ,ஹிந்தியிலும் ஜெஸ்சி  )இதிலும் கொள்ளை அடிப்பார் என்பது திண்ணம் .

சந்தானம் 
இவர்களை விட அண்மைக்காலமாக தமிழ் சினிமாவின் டிராவிட் ஆக மாறியுள்ள சந்தானம் இருப்பது பலம் .ஆனால்  கெளதம் விளையாடுவதால் டிராவிட் இன் பொறுப்பு பெருமளவில் குறைக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன் .

நீதானே  என் பொன்  வசந்தம் மகத்தான வெற்றி பெற படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் 

Post Comment

6 comments:

scenecreator said...

நான் இந்த படத்தில் எதிர்பார்த்தது பாடல்கள் மட்டும்தான் .காரணம் ராஜா.மற்றபடி படம் வி டி வி போல் இழுவையாய் மிகவும் போர் அடிக்கும் படமாக இருக்கும்.அதில் சந்தேகம் இல்லை.நல்ல அலசல்.எனக்கும் பாடல்கள் திருப்தி.என் ப்ளாகில் நீதானே பொன்வசந்தம் பாடல்கள் எப்படி? http://scenecreator.blogspot.in/2012/09/blog-post.html

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

tamilan said...

fantastic article...u analyzed everything...music, director, and current situation in tamil cenima

kobiraj said...

கருத்துக்கு நன்றிகள் @amilan thank u

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் நல்ல படைப்புகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com

kobiraj said...

thank u

Related Posts Plugin for WordPress, Blogger...