Friday, December 23, 2011

மங்காத்தா வசூல் 130 கோடி .உண்மையா -ஒரு அலசல்


 .
''தற்போது படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் ஒரு காட்சி கூட எந்த திரையரங்கிலும் இல்லையாம். இந்நிலையில் படத்தினை பற்றி மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் உலவுகிறது''. 


வீரகேசரி வெளியிட்ட செய்தி இது
 இன்று வேலாயுதம் படம் வெளிவந்து 60 நாள் .பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரம் தான் இது .அல்ல விடில் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்  (behindwoods)நிலைவரங்களை பார்த்தால் தெரியும் இப்போதும் படம் ஓடிக் கொண்டு இருப்பது .

''படம் வெளியான ஒரு வாரத்தில் மட்டுமே படம் கல்லா கட்டியதாம். பின்பு படத்தின் வசூல் நிலைமை சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லையாம். அத்துடன் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரையில் 40 கோடியினையே வசூலாக பெற்றிருக்கிறதாம். இனியும் இப்படத்தின் மூலம் வருமானம் ஈட்டமுயாது என்ற நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரும் மனக் கவலையில் இருக்கிறாராம். ''
இதில் இருந்தே தெரிகிறது எழுதியவரின் மனநிலை .90 கோடிகளை கடந்து வெற்றி பெற்றுள்ளதாக  படத்தை தயாரித்த  ரவிச்சந்திரனும் வெளிநாட்டு     உரிமை பெற்ற ஐங்கரன் நிறுவனமும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இப்படி நடுநிலை தவறாத பாரம்பரிய தமிழர் பத்திரிகையான வீரகேசரியின் நம்பகத்தன்மையில் சந்தேகம் வருகிறது .இந்த செய்தியை 1700  க்கு மேற்பட்டவர்கள் முக புத்தகத்தில் பகிர்ந்துள்ளனர் .பிழையான செய்தி என பலரும் சுட்டிக் காட்டிய பின்னும் இதை வீரகேசரி நீக்க வில்லை .
வீரகேசரியில் வெளியான செய்தி
ஒருவரின் வெற்றியில் இவ்வளவுக்கு பொறாமை படும் இவ்வாறானவர்களின் செய்தியை ஒரு பொறுப்பான பத்திரிக்கை வெளியிட்டிருப்பது பதிவர்கள் தங்கள் எண்ணத்தில் தோன்றிய தங்களின் கருத்துகளை வெளியிட அதை copy  அடித்து உண்மை செய்தி போல பிரசுரிக்கும் கீழ்த்தரமான இணையத்தளங்களுடன் வீரகேசரியையும் ஒப்பிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளியுள்ளது .வீரகேசரி குழுமத்துக்கு நான் தாழ்மையாக வேண்டுவது என்னவென்றால் செய்திகளை பிரசுரிக்கும் போது உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிடுவதோடு   இந்த பிழையான செய்தியை நீக்கி உங்கள் நன் மதிப்பை தக்க வைத்து கொள்ளுங்கள் .






ங்காத்தா வசூல் 130  கோடி 

தல நடிப்பில் வெளிவந்த மங்காத்தா படத்தின் வசூல் தொடர்பில் பல வதந்திகள்   வெளியான நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா வசூல் 130 கோடி என உத்தியோகபோர்வமாக அறிவித்துள்ளது .சினிமா விமர்சகர்கள் பலர் அண்ணளவாக 80 கோடி என கணித்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள கணக்கு அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று நினைப்பீர்களேயானால் அது உங்களின் பிழை .எந்திரன் உலக சாதனை புரிந்த படம்தான் எனினும் அதன் வசூலையும் மிகைப் படுத்தித்தான் வெளியிட்டு இருந்தார்கள் .இதன் உண்மை தன்மையை அண்ணன் ஜீவதர்சனிடம்(http://www.eppoodi.blogspot.com/ )தான் கேட்க வேணும் எனினும் நான் நேரடியாக  டிவியில் பார்த்த சிங்கம் இசை வெளியீட்டு விழாவில் அயன் திரைப்பட வசூலை வேட்டைக்காரன் முறியடித்ததாக அப்போதைய நிறைவேற்று அதிகாரி சக்சேனா அறிவித்ததை நீங்கள் நம்பினால்  மங்காத்தா வசூலையும் நம்பலாம் behindwoods செய்தி குறிப்பு 


 சிங்கம் இசை வெளியீட்டு விழா
 நண்பன்
நண்பன்  பாடல்கள் இன்று வெளியாகின .பாடல்கள் அனைத்துமே வரவேற்பு பெற்று வருகின்றன .ஏழாம் அறிவு பாடல்கள் copy என பலரும் விமர்சித்த நிலையில் நண்பன் பாடல்களை பலரும் எதிர் பார்த்து இருந்தனர் .எனினும் பாடல்கள் இசை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
.மதன் கார்க்கி இரண்டு பாடல்களை எழுதி உள்ளார் .காதல் என்பதை 16 மொழிகளில் வெளிப் படுத்தியுள்ளார்
அஸ்க்-Ask - Turkish
லஸ்கா-Laska - Šløvak
ஏமோ-Amøur - French/Španish
ஐ-Ai - Chinese
அஸ்த்-Ast - Icelandic
லைபே-Liebe - German
அஹாவா-Ahava - Hebrew
போலிங்கோ-Bølingø - Lingala
சிந்தா -Cinta - Malay
இஷ்க்-Ishq - Arabic
மைலே-Meile - Lithuanian
லவ் -Love - Ènglish
இஷ்ட-Ishtam - Telugu
பிரேம-Prema- Malayalam
பியாரோ -Pyaaro- Hindi
காதல்-Kaathal - Tamil 

 வெளியான பாடல்களில் அஸ்கு பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது .விஜய்க்கு பிடித்த பாடலும் இதுதான் .
மதன் கார்க்கியின் பாடல் வரிகள் அருமை
''ப்ளுடோவில் உனை நான் கூடேற்றுவேன்..
.விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன் .. 
முக்கோணங்கள் படித்தேன் உன் மூக்கின் மேலே ....
விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின்மேலே ..
மெல் இடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் .

புல்லில் பூத்த பனி நீ... -ஒரு
கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணனி.. -உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போல
பிள்ளை மெல்லும் சொல்லை போல...''
மதன் கார்க்கி எழுதிய இரண்டு  பாடல் வரிகள் அவரின் இணையதளத்தில் முழுமையாக பெற்று கொள்ளலாம்
மதன் கார்க்கியின் இணையத்தளம் 

ஏனைய பாடல்களும் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன .நண்பன் இசை வெளியானதில் இன்றைய தினம் திரைக்கு வரும் ராஜ பாட்டை யை மறந்து விட வேண்டாம் .படம் நல்ல மசாலா பொழுது போக்கு படம் என விமர்சனங்கள் வெளி வந்தவண்ணமுள்ளன  .அத்துடன் சாருக்கானின் டான் -2 வும் இன்று வெளியாகிறது .

நேரமின்மை காரணமாக வலையுலகில் ஒதுங்கி இருந்தாலும் முக புத்தகம் மூலமாக என்னை எழுத தூண்டும் அனைவருக்கும் நன்றிகள் .
 -உங்களில் ஒருவன் 







Post Comment

4 comments:

Unknown said...

:)

அ.ஜீவதர்ஷன் said...

எந்திரன் வசூலை குறைத்து அறிவித்ததாகத்தான் சண் மீது ரஜினி சார்பு இணைய தளங்கள் குற்றம் சுமத்தின..... உண்மை எனக்கும் தெரியாது, பொதுவாக 350 கோடி என்று இந்திய ஆங்கில சானல்களில் சொல்லப்படுகிறது!! மற்றப்படி எந்திரன் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சரியான வசூலை ஒருபோதும் கணிக்க இயலாது.

வேலாயுதம் நஷ்டத்தைக் கொடுக்காமல் ஓடியிருந்தாலும் நிச்சயமாக அது ஒரு கிளீன் ஹிட் படமல்ல, விஜய்க்கு இந்த ஆண்டு ஓரளவு நல்ல ஆண்டுதான்; இரண்டு திரைப்படங்களும் போட்டிக்கு வந்த திரைப்படங்களை ஜெயிக்க முடியவில்லை என்றாலும் இரண்டும் யாரையும் நஷ்டப் படுத்தவில்லை. அதே நேரம் இரண்டாலும் லாபமும் பெரிதாக இல்லை என்பதும் உண்மை.

மங்காத்தா அனைத்து தரப்பாலும் (ஊடகங்கள்) வெற்றியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திரைப்படம்; வேலாயுதம், ஏழாம் அறிவு தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் தவிர ஏனைய ஊடகங்களால் வசூலில் மிக்ஸ் ரிப்போட் கொடுக்கப்பட்ட திரைப்படங்கள், சம்பந்தப்படட்டவர்களும் அவர்கள் ரசிகர்லும் வெற்றி என கொண்டாடினால் அது உண்மை என்றாகிவிடாது.

விஜய் அஜித் போட்டியில் மாறிமாறி ஜெயிப்பது வழமை, அதற்காக அஜித்தின் மிகப்பெரும் வெற்றியை விஜயின் ordinary வசூல் திரைப்படத்துடன் ஒப்பிடுவது உங்கள் ரசிகத்தன்மையே!

(இது எனது பார்வையில் நான் சொன்ன கருத்துக்கள், இதில் உங்களுக்கு உடன்பாடு, நம்பகத்தன்மை இல்லாவிட்டால் அதில் எனக்கு வருத்தமில்லை) அப்புறம் வீரகேசரி - அந்த சினிமா செய்திகளை நான் என்றும் நம்பியதில்லை.....

ad said...

அயன் ரெக்கார்ட்டை வேட்டைக்காரன் முறியடித்தது என்று தனக்கு இப்பதானாம் தெரியுமாம்?
என்ன பண்ணலாம்?

ad said...

வீரகேசரி செய்தி அப்படியே COPY-PASTE.
அதை எழுதியது ஒரு பதிவராய் இருக்கவேண்டும்.நானும் பார்த்திருந்தேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...