Wednesday, September 12, 2012

மசாலா கபே-சுவாரசிய தகவல்கள் -3

jab tak hai jaaan
கடந்த தீபாவளிக்கு வேலாயுதம் ஏழாம் அறிவு ரா ஒன் ஆகியவை வெளியாகியமை உங்களுக்கு நினைவிருக்கும் .அதேபோல் இந்த தீபாவளிக்கும் ஷாருக்கானின் படம் ஒன்று விஜயின் படத்தோடு  வெளிவருகிறது .முக்கோண காதல் கதையான படத்தில் கத்ரீனா  கைப் ,அனுஷ்கா ஷர்மா ஆகியோர் ஷாருக் ஜோடியாக நடிக்கின்றனர் .legend இயக்குனர் யாஷ் சோப்ரா 8 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தை இயக்குகிறார் .படத்தின் இசை ஒஸ்கார் நாயகன் A .R .ரஹ்மான் .கடந்த தீபாவளிக்கு வெளியான ரா ஒன் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இந்த படத்துக்கு கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது 


.
இந்த தீபாவளிக்கு அண்ணனுக்கு  பதில் தம்பி களம் இறங்குகிறார் .ஆம் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியனும் தீபாவளிக்கு வெளியாகிறது .ஒரே நாளில் இரு பெரிய படங்கள் வெளிவருவதை விநியோகஸ்தர்கள் விரும்புவதில்லை எனினும் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதை தவிர்க்க முடியாது .மாமா ரெடியா ? என்று பில்லா-2 வுடன் மோதியவர்கள் இம்முறை விஜயின் படத்துடன் மோதுகிறார்கள் .அடுத்தவனின் பயம் நமது பலம் என்பதை சகுனி வெளியீடில் பயன்படுத்தயது போன்று இங்கு பயன்படுத்த முடியாது  (தீபாவளிக்கு விஜய்  படம் தயாராகாத சந்தர்ப்பம் தவிர்ந்து) .பிக்கொஸ் ரஜினி படமே போட்டிக்கு வந்தாலும் பின்வாங்காத அனுபவம் கொண்டது விஜய் தரப்பு (அண்மைக்காலமாக நடுநிலையோடு எழுதுவதாய்  நினைக்கிறேன் ).



###############################

ருக்மணி தேவி 
இலங்கையில் ஒரே ஒரு சினிமா நடிகைக்கு சிலை வைத்து கெளரவம் வழங்கப்பட்டுள்ளது : இந்த சிலையை நிறுவி ..... திறந்து வைத்தவர் ....அப்போதைய பிரதமர் R பிரேமதாச ! சிலை நீர்கொழும்பு - கட்டான சந்திப்பில் நிறுவப்பட்டது [ அந்த இடத்தில் தான் அந்த நடிகை ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டார் ];சிங்கள சினிமாவின் ஆரம்ப காலத்தில் சொந்தக் குரலில் பாடி நடித்து .... லட்சக்கணக்கான ரசிகர் உள்ளங்களை கொள்ளை கொண்ட அந்த நடிகை ..... ருக்மணி தேவி ! இவர் ஒரு .......... தமிழ் பெண் !!!#by -sathyan S
#####################################################
யார் இவர்கள் ?

ஐஸ்வர்யா ராய் சகோதரனுடன் 
###########################################################
யுவன் 

தனது 16 வயதிலேயே அரவிந்தன் படம் மூலமாக இசை அமைக்க வந்தவர் .ஆரம்பம் சிறப்பாக அமையா விட்டாலும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் மக்களால் அறியப்பட்டார் .பின் தனக்கென ஒரு பாதையை அமைத்து பல வெற்றிகரமான பட அல்பங்களை வழங்கி இன்று தமிழ் சினி
மாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.25 வது வயதில் 7Gரெயின் போ காலணி படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் FILMFARE விருது வென்ற அவர் இளம் வயதில் அந்த விருதை வென்ற சாதனையை இன்னமும் தக்க வைத்து கொண்டு இருக்கிறார். தன்னுடைய பெயரில் சேர்ந்திருக்கும் ராஜா எனும் சொல்லுக்கு பெருமை சேர்த்த யுவன் நூறாவது படத்தை (பிரியாணி )விரைவில் தொடவுள்ளார் 








யுவன் இதுவரை அஜித்துடன் 5 படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் தீனா ,பில்லா ,ஏகன் ,மங்காத்தா ,பில்லா-2 . இவற்றில் தீனா ,பில்லா ,மங்காத்தா அஜித்தின் டாப் படங்கள். விஷ்ணு வர்த்தனின் பெயரிடப்படாத அடுத்த படத்துக்கும் இவர்தான் இசை .. புதிய கீதை படத்தில் பின்னணி இசை கார்த்திக் ராஜா வழங்க பாடல்களை யுவன் கம்போஸ் பண்ணியிருந்தார் விஜயுடன் இதுவரை ஒரு படத்தில் கூட முழுமையாக இணைந்து பணியாற்ற வில்லை


.
விஜய் - பரத்வாஜ்; அஜித் - ஹாரிஸ்; சூர்யா - வித்யாசாகர்; விக்ரம் - யுவன் (இறுதியாக வெளிவந்த ராஜபாட்டைக்கு முன்புவரை) ஒன்றாக வேலை செய்யல; இந்த நான்கு இசையமைப்பாளரும், நடிகர்களும் சமகாலங்களில் நீண்ட நாட்கள் உச்சத்தில் இருந்தவர்கள்!!-

#########################################


உலக நாயகன் கமலஹாசன் போட்டுள்ள வேஷங்கள்  ஒரே பார்வையில் 

twitter
தமிழ் ஹீரோக்களிலேயே ஆட்டோ ஓட்டிக்கிட்டே காலேஜ் இல படித்த ஒரே தலைவன் நம்ம தளபதி #வேட்டைக்காரன் பாறைகள்..!
 மாநகர பேருந்து வர்றப்ப 'கூட்டமா இருக்கு வேற பஸ்ல போலாம்னா அவன் பேமிலி மேன்' 'கூட்டமே இல்ல வேற பஸ்ல போலாம்னா அவன் பேச்சுலர்'
 ஹீரோவைச் சரியாகக் குறிபார்த்துச் சுடும் வில்லன் கிடைக்காமல் தமிழ்சினிமா பலகாலமாய் அல்லாடுகிறது !
பல்ப் - எடிசன் ரேடியே - மார்க்கோனி போன் - க்ராஹாம் பெல் க்ராவிடி - நியூட்டன் எக்ஸாம் - ???? அவன் தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!

 twitter இல் என்னை தொடர 
https://twitter.com/RKobiraj


Post Comment

5 comments:

Mahes.chella said...

Semmaya irukuthu bro...

அரவிந்த் குமார்.பா said...

மாஸ்டர்,
உங்களுக்கு நடு நிலையா எழுத வருதா..

ஆச்சரியக் குறி..

- வாழ்த்துக்கள்..

kobiraj said...

@Mahes.chella '
thank u

Anonymous said...

//விஜய் - பரத்வாஜ்; அஜித் - ஹாரிஸ்; சூர்யா - வித்யாசாகர்; விக்ரம் - யுவன் (இறுதியாக வெளிவந்த ராஜபாட்டைக்கு முன்புவரை) ஒன்றாக வேலை செய்யல; இந்த நான்கு இசையமைப்பாளரும், நடிகர்களும் சமகாலங்களில் நீண்ட நாட்கள் உச்சத்தில் இருந்தவர்கள்!//


அடடே...இதுல ஒன்னுமே இல்லன்னாலும் , புதுசா இருக்கே...


அப்புறம், இந்த கார்த்தி ஏற்கனவே விஜய் கூட மோதிருக்காரே,,, ஆனா அப்ப சன் பிக்சர்ஸ் , ஆட்சியாளர்கள்ன்னு பல பேர் விஜய் கூட ஒன்னா மோதுனாங்க.. இப்பத்தான் உண்மையான பைட்ட பார்க்கலாம்னு சொல்றீங்க!!

kobiraj said...

மொக்கராசு மாமா
கருத்துக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...